சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Canadian unions move to suppress strikes and impose concessions

கனேடிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை நசுக்கவும், சலுகைகளைச் சுமத்தவும் முயல்கின்றன

By Keith Jones 
18 June 2011


Use this version to print | Send feedback

கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்குத் தலைவணங்கும் வகையில் தொழிற்சங்கங்களும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு கொடுக்கும் புதிய ஜனநாயகக் கட்சியும் (NDP) 50,000 தொழிலாளர்களுக்கு மேல் தொடர்பு கொண்டிருந்த சலுகைகளுக்கு எதிரான இரு தேசிய வேலைநிறுத்தங்களைக் கைவிட்டுள்ளன.

நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமான ஏயர் கனடாவிலும், கூட்டாட்சி அரசாங்கத்திற்குச் சொந்தமான கனடா போஸ்ட்டிலும் தொழில்வழங்குனர்கள் தூண்டிவிட்டுள்ள பூசல்கள் கனேடிய பெருவணிகத்தினால் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை அகற்றுவதற்கும் பொதுத்துறைப் சேவைகளை அகற்றுவதற்கும் தாங்கள் கொண்டுள்ள உந்துதலுக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டன.

ஏற்கனவே கனேடிய கார்த் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் (CAW) 3,800 ஏயர் கனடாவின் வாடிக்கையாளர் சேவை முகவர்களையும் அழைப்பு மையத் தொழிலாளர்களையும் இரு அடுக்கு நலன்கள் முறை மற்றும் ஓய்வூதியங்களில் வெட்டுக்களையும் ஒப்புக் கொண்டு வேலைக்குத் திரும்புமாறு வலியுறுத்திவிட்டது.

இதற்கிடையில் கனேடிய அஞ்சல் துறைத் தொழிலாளர்களின் சங்கம் (CUPC) விரைவில் அது 48,000 நகர்ப்புறத் தபால் எடுத்துச் செல்லுவோர், அஞ்சல் பிரிப்போர், அஞ்சல் வாகன சாரதிகள், அஞ்சல் எழுத்தர்கள் ஆகியோர் எடுக்கும் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்தி முன்னோடியில்லாத வகையில் கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் ஏற்கப்படும் என்பதை ஐயத்திற்கு இடமின்றித் தெளிவாக்கியுள்ளது.

CUPW எப்படிச் சரணடைய உள்ளது என்பதுதான் முடிவெடுக்கப்பட வேண்டும். அஞ்சல் தொழிலாளர்கள், கன்சர்வேட்டின் நிலைப்பாடான மீண்டும் வேலைக்குத் திரும்புக என்று கூறுவதைத் தாழ்ந்த முறையில் ஏற்று அரசாங்கம் நியமித்த நடுவர் சலுகைகளை ஏற்க அனுமதிப்பது அதைத்தான் CAW இப்பொழுது செய்துள்ளதுஅல்லது பாராளுமன்றம் தவிர்க்க முடியாமல் ஏற்க உள்ள வேலைநிறுத்த முறியடிப்புச் சட்டத்தை போலிக்காரணமாக பயன்படுத்தி தொழிலாளர்களை விற்றுவிடும் ஒப்பந்தத்திற்கு உடன்படுவது இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும்.

அஞ்சல்துறைத் தொழிலாளர்கள் இந்தக் காட்டிக் கொடுப்பை எதிர்க்க வேண்டும் மற்றும் எதிர்க்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அவர்கள் மீண்டும் தங்கள் சலுகைகளுக்கு எதிரான போராட்டங்களை முற்றிலும் தீவிரமான அடிப்படையில் மறுபடியும் தொடக்க வேண்டும்தாங்கள் ஒரு அரசியல் போராட்டத்தை எதிர்கொள்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்டீபன் ஹார்ப்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கம் சமீபத்தில்தான் ஏயர் கனடா மற்றும் கனடா போஸ்ட் தொழிலாளர்களுக்கு எதிராகத் தலையிட்ட நிலையில், அது நீண்டகாலமாக அவற்றின் நிர்வாகங்களுடன் சலுகைக் கோரிக்கைகள் பற்றிச் சதியாலோசனையைச் செய்துள்ளது.

2009ம் ஆண்டு கன்சர்வேடிவ் அரசாங்கம் ஏயர் கனடாவை தொழிற்சங்கங்கள் முக்கிய ஒப்பந்த சலுகைகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மறுகட்டமைப்பு முறையைமீட்டது.” அப்பொழுது அரசாங்க நிறுவனம் விரைந்து செயல்பட்டு அதன் ஓய்வூதிய நிதியப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்த அரசாங்கத்தின் கோரிக்கை நேரடியாக விமான நிலையத்தில் தற்போதைய தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை குறைக்கும் உந்துதலுக்கு வகை செய்துள்ளது.

கனடா போஸ்ட்டை பொறுத்தவரை கூட்டாட்சி அரசாங்கம்தான் முதலாளியாகவும் நிர்வாகியாகவும் உள்ளது. முன்பு இருந்த லிபரல்களைப் பின்பற்றி கன்சர்வேடிவ்கள் கனடா போஸ்ட்டில் ஒரு பெருநிறுவன மாதிரியைச் சுமத்தியுள்ளனர். அது இதை ஒரு பொதுத்துறை சேவை என்பதில் இருந்து இலாபம் அடையவேண்டும் என்ற நிறுவனமாக மாற்றி, தனியார்மயமாக்குதலையும் இலக்காகக் கொண்டுள்ளது.

தொழிலாளர்கள் சலுகைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை கன்சர்வேடிவ் அரசாங்கம் இவ்வகையில் ஆக்கிரோஷமாக குற்றம் எனக் காட்டத் தலையிட்டுள்ளதற்கு காரணம் அது பெருகிய மக்கள் எதிர்ப்பை எதிர்பார்ப்பதால்தான். பாராளுமன்றப் பெரும்பான்மையை அடைந்த ஆறு வாரங்களுக்குள் அது ஒரு தெளிவான செய்தியை பெருவணிகச் செயற்பட்டியலை சுமத்த அரச அடக்குமுறைச் சக்தி பயன்படுத்தப்படும் என்பதைதெரிவிக்க முற்பட்டுள்ளது.

CAW இன் காட்டிக் கொடுப்பு

செவ்வாய், புதன் எனக் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஹார்ப்பர் அரசாங்கம், ஏயர் கனடா மற்றும் அஞ்சல்துறைத் தொழிலாளர்களின் அனைத்து வேலைத் தொடர்புடைய நடவடிக்கைகளை குற்றம் சார்ந்தவை எனச் செய்யும் வழிவகையை ஏற்று, அரசாங்கம் நியமிக்கும் நடுவர்கள் வேலை விதிகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் செயல்படுத்துகிறது.

ஏயர் கனடாத் தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தும் உரிமையை அரசாங்கம் அவர்கள் வெளிநடப்பு செய்த அன்றே தடுத்து நிறுத்த முயன்று, வேலைநிறுத்தம் பொருளாதார மீட்சியை ஆபத்திற்கு உட்படுத்துகிறது எனக் கூறியது. நாட்டின் மிகப் பெரிய தொழில்துறைச் சங்கமான CAW அரசாங்கத்தின் சட்டபூர்வ முறையில் ஏயர் கனடா வேலைநிறுத்தம் சட்டவிரோதம் எனக் கூறும் 48 மணி நேரக் கட்டாய முன்னறிவிப்பிற்கு விடையிறுக்கும் வகையில் ஏயர்லைனுடன்பேச்சுவார்த்தைகளுக்குட்பட்டஉடன்பாட்டைக் காணும் உறுதியை அறிவித்தது.

சலுகை பறிப்புக்கள் நிறைந்த ஒப்பந்தம் ஒன்றை அது நேற்று ஒப்புக் கொண்டது. இதன் முழு விவரங்கள் வெளியாகும்போது உள்ள நிலையைவிட இன்னும் மோசமானதைத்தான் இது வெளிப்படுத்தும். ஏயர் கனடா தொழிலாளர்களுக்கு நான்கு ஆண்டுகளாக இருக்கும் உடன்பாட்டின் மீது வாக்களிப்பது ஒருபுறம் இருக்க, வேலைக்குத் திரும்பும் கட்டாயத்திற்கு உட்படுமுன், அதன் விதிகளைப் படிக்கும் வாய்ப்புக் கூட கொடுக்கப்படவில்லை.

கடந்த தசாப்தத்தில் உறுப்பினர்களின் உண்மை ஊதியம் 10% சரிந்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்ட தொழிற்சங்கம் முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பண வீக்கத்திற்கு ஈடாக உள்ள ஆண்டு ஊதியத்தில் 2% உயர்வு, இறுதி ஆண்டில் 3% உயர்வு என்பதைக் கொடுத்துள்ள இந்த உடன்பாட்டை ஒரு வெற்றி என்று முரசு கொட்டுகிறது.

பூசலிலுள்ள முக்கிய பிரச்சினையான ஓய்வூதியங்களை பொறுத்தவரை CAW  பல சலுகைகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதுஇச்சலுகைகள்குறைவானவைஎன்று திணிக்கப்பட்டவை என்றாலும்கூட. 2013ல் இருந்து ஓய்வூதிய நலன்கள் புதிதாக ஓய்வு பெறுவோருக்குக் குறைக்கப்படும், புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு தற்பொழுதைய உறுதியான ஓய்வூதிய நலன் முறை வழங்கப்படாது என்பதற்கு உடன்பட்டுள்ளது. ஒரு நடுவர் புதிதாதக வேலையில் சேர்ந்துள்ளவர்களின் ஓய்வூதியங்கள் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும், நிதி திரட்டப்படவேண்டும் என்பதைப் பற்றி நிர்ணயிப்பார்.

கடைசியாக, ஆனால் முக்கியத்துவம் குறைந்த தன்மையில் இல்லாமல், CAW உடன்பாடு மற்ற ஏயர் கனடாத் தொழிலாளர்கள், இப்பொழுது இதேபோன்ற சலுகைகளை எதிர்நோக்கியுள்ளனர்இயந்திரத்தில் வேலை செய்பவர்கள், பொதிகளைக் கையாள்பவர்கள், பயண உதவியாளர்கள், விமானிகள் எனஆகிய 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு பிற்போக்குத்தன அடையாளத்தைத்தான் அளிக்கிறது.

 

CAW உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டுள்ளதை அரசாங்கம் பாராட்டியிருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. உண்மையில் தொழிலாளர்துறை மந்திரி லீசா ரைட் அடுத்த 48 மணி நேரத்தில் தொழிற்சங்கமும் ஏயர் கனடாவும் வேலைக்கு திரும்புவதற்கு ஒரு உடன்பாடு காணாவிட்டால் அரசாங்கம் சுமத்தயிருந்த சூத்திரத்தைத்தான் இது பின்பற்றியுள்ளது என்று சரியாகக் கூறியுள்ளார்.

ஏயர் கனடா நிர்வாகமும் தொழிற்சங்கமும் பெரும் உடன்பாட்டிற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன என்பதை அறிவித்து, குறுகிய காலத்திற்குள் அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதை அறிந்துள்ள நிலையில்இது ஓய்வூதியப் பிரச்சினை என்பதும் அறிந்ததேஇரண்டும் தன்னார்வத்துடன் தாங்கள் விரும்பும் ஒரு நடுவரின் தீர்ப்பிற்கு இதை அனுப்பலாம்என்ற கடந்த செவ்வாயன்று ரைட் கூறினார்.

அஞ்சல் துறைத் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்தல் திட்டமிடப்படுகிறது 

இதே போக்கைத்தான் துல்லியமாக கனேடிய அஞ்சல்துறைத் தொழிலாளர்கள் சங்கமும் (CUPW) இப்பொழுது பின்பற்றுகிறது. கனேடிய அஞ்சல் துறைக்கு சலுகைக் கோரிக்கைகளைச் சற்று குறைக்க வேண்டும், தொழிற்சங்கத்தை உண்மையான பங்காளியாக ஏற்க வேண்டும் என்று இது வாதிடுகிறது. அந்த இலக்கைக் கருத்திற் கொண்டு, உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரிகள் கனேடிய அஞ்சல்துறைத் தலைவர் தீபக் சோப்ராவை வியாழன் அன்று சந்தித்தனர்.

ஆனால் CUPW தலைமைக்கு நிர்வாகத்தின் தூண்டுகோல் நடவடிக்கைகள், சலுகைக் கோரிக்கைகள் பற்றி அனைத்து ஊழியர்களும் சீற்றம் அடைந்துள்ளனர் என்பது நன்கு தெரியும். இதில் ஒரு இரு அடுக்கு ஊதிய மற்றும் நலன்கள் முறை உள்ளது. அதைத்தவிர ஒரு புதிய குறுகிய கால இயலாமை நிலைக்கான திட்டம், வேலைக் குறைப்பு  மற்றும் ஆபத்து நிறைந்த புதிய அஞ்சல் பிரிப்பு முறை ஆகியவை அடங்கியுள்ளன.

இறுதியில் CUPW அதிகார வர்க்கம் தன் நலன்களைச் சிறந்த முறையில் காப்பதற்கு கனடா போஸ்ட்டின் கோரிக்கைகளுக்கு நேரடிப் பொறுப்பு எடுக்காமல் இருப்பதுதான் என்ற முடிவிற்கு வரக்கூடும்.

CUPW ஒதுங்கியுள்ள ஒரு முக்கிய விவகாரம் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை தொடக்குதல் என்பதாகும். ஏற்கனவே CUPW தலைவர் டெனிஸ் லெமெலின் செய்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இவை அஞ்சல் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கை மற்றும் சலுகை எதிர்ப்பு போராட்டத்திற்கு இரங்கற்பா போல்தான் உள்ளன. இந்த அறிவிப்புக்கள் தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தம் பற்றிபெருமிதம்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, CUPW கனடா போஸ்ட்டுடன் ஒப்பந்தம் காணமுடியாவிட்டாலும் நல்ல போராட்டத்தைத் தொடரும் என்று கூறுகிறது.

தொடக்கத்தில் இருந்தே CUPW ஹார்ப்பர் அரசாங்கத்துடன் ஒரு மோதலைத் தவிர்க்கும் உறுதியைக் கொண்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட 24 மணி நேர சுழற்சி முறை வெளிநடப்பு என்னும் உபயோகமற்ற மூலோபாயத்தை அது பயன்படுத்தியதை நியாயப்படுத்தும் நோக்கத்தைத்தான் இது கொண்டிருக்கிறது.

அஞ்சல் தொழிலாளர்களின் தொழிற்துறை வலிமையை திரட்ட மறுக்கும் இந்நிலைப்பாடு கனடா போஸ்ட் மற்றும் ஹார்ப்பர் அரசாங்கத்திற்கு ஊக்கம் கொடுத்துள்ளது என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். இந்த தவிர்க்க முடியாத மோதல் நெருங்கும்போது CUPW  சரண்டையத் தயாராகிவருகிறது.

கனேடிய லேபர் காங்கிரஸ் (CLC) மற்றும் NDP ஐப் பொறுத்தவரை, கன்சர்வேடிவ்கள் தொழிலாளர்கள் போராட்டத்தைக் குற்றத்தன்மை ஆக்கும் வரை அதற்கு ஆதரவாக பெயரளவு ஆதரவு அறிக்கைகளைக்கூட வெளியிடவில்லை. மேலும் அவர்கள் ஹார்ப்பர் அரசாங்கம் அப்படிப்பட்டதொரு நடவடிக்கையை எடுப்பதற்கு எதிர்ப்பின்றி விட்டுக்கொடுத்தனர். வேறுவிதமாகக் கூறினால், CLC மற்றும் NDP தலைவர்கள் அஞ்சல்துறைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் எதிர்கொள்ளக்கூடிய நிலைமை பற்றி இருட்டடிப்புத்தான் செய்திருந்தனர். இதையொட்டி தொழிலாளர்கள் போதுமான தயாரிப்பு இல்லாமலும் அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக ஆக்கவும் உத்தரவாதம் செய்யப்பட்டது.

இப்பொழுது CLC, மற்றும் NDP ஆகியவை CUPW உடன் சேர்ந்து பல அணிவகுப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு முற்படுகின்றன. தொழிலாளர்கள் உரிமைகள் மீது அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதுதான் நடவடிக்கைகளின் நோக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மையான நோக்கம் அஞ்சல் தொழிலாளர்களிடையே உள்ள சீற்றத்தைக் குறைத்து, அவர்களை வேலைக்குத் திரும்புமாறு வலியுறுத்துவதுதான். அப்பொழுதுதான் தொழிற்சங்கத்தின் மேலாதிக்கம் தக்க வைக்கப்பட முடியும்.

1978ம் ஆண்டு CUPU வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற சட்டத்தை மீறியபோது, CLC, NDP ஆகியவை அஞ்சல்துறைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக  நடவடிக்கையை எடுக்க மறுத்துவிட்டன. அப்பொழுதோ லிபரல் பிரதம மந்திரி ட்ருடோ ஏராளமானவர்கள் பணிநீக்கப்படுவர் என்று அச்சுறுத்தியிருந்தார். மேலும் CUPW தலைவரைக் கைது செய்து RCMP   நாடு முழுவதுமுள்ள தொழிற்சங்க அலுவலகங்களைச் சோதனை செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

இடைப்பட்ட மூன்று தசாப்தங்களில் தொழிற்சங்கங்களும் NDP யும் பெரிய அளவில் வலதுபுறம் பாய்ந்துவிட்டன. தங்கள் பெருவணிகத்துடன் இன்னும் கூடுதலான முறையில் பிணைத்துக் கொண்டுள்ளன. தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தின் இரண்டாவது கைபோல் விதிகளைச் செயல்படுத்துகையில், சலுகைகளைச் சுமத்தி வேலைநிறுத்தங்களை நசுக்குகையில், NDP ஒருகாலத்தில் முதலாளித்துவம் சீர்திருத்தப்படமுடியும் என்பதற்கு நிரூபணமாக இருந்த சமூகநலத் திட்டங்களை அகற்றுவதற்கு உதவியுள்ளது.

CAW, CUPW, CLC, NDP ஆகியவை ஏயர் கனடா மற்றும் அஞ்சல்துறைத் தொழிலாளர்களின் போராட்டங்களை நிறுத்தும் கூட்டு முயற்சிகளை எதிர்ப்பதற்கு தொழிலாளர்கள் இந்த அமைப்புக்கள் இடதிற்கு திரும்புமாறு அல்லது சீர்திருத்தப்படுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட முடியாது என்பதைக் கண்டிப்பாக அறியவேண்டும். தொழிற்சங்கக் கருவிகளையும் சமூக ஜனநாயக அரசியல்வாதிகளையும் எதிர்ப்பதின் மூலமும் அதற்கு வெளியே அனைத்துத் தொழிலாளர்களும் அடங்கிய குழுக்களை அபிவிருத்தி செய்து அதை ஒழுங்கமைப்பதன் மூலமும்தான் ஹார்ப்பர் அரசாங்கத்தின் வேலைநிறுத்தங்களை முறியடிக்கும் சட்டங்கள் மீறப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும். அதுதான் தொழிலாள வர்க்கத்திற்கு  முன்னணியில் அஞ்சல்துறைப் போராட்டங்களை இருத்தி, அனைத்து வேலைக் குறைப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள், தொழிலாளர் உரிமை, பொது சேவையைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்கான தொழில்துறை, அரசியல் எதிர்ப்புமுறைக்கு உதவும்.

பெருநிறுவனச் செய்தி ஊடகம் அஞ்சல் துறைத் தொழிலாளர்களைஅதிக சம்பளம்வாங்குபவர்கள் என்று  குறைகூறியிருப்பது பொதுத்துறை ஊழியர்களுக்கு இவர்களை முன்மாதிரியாக வைக்க வேண்டும் என்னும் பெருவணிக விருப்பத்தைத்தான் ஒத்திருக்கிறது. பொதுத்துறைத் தொழிலாளர்களின் ஊதியங்கள்  மிகக் குறைந்த அளவில் இருக்க வேண்டும் என்பதைத்தான் பெருவணிகம் விரும்புகிறது. நலன்களும் அவ்வாறே குறைக்கப்பட வேண்டும் என விரும்புகிறது. ஆனால் பொதுத்துறை ஊழியர்களை மிரட்டுதல் பெருமளவிற்கு அவர்கள் அளிக்கும் முக்கிய பணிகளை அகற்றுவதற்கு உதவும் என்பதும் அவர்களுடைய மிக முக்கியமான கணக்கீடு ஆகும்.

பலவகைப்பட்ட பிற்போக்குத்தன உந்துதல்கள் அஞ்சல்துறைத் தொழிலாளர்களுக்கு எதிராக ஹார்ப்பர் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு இருப்பது தொழிலாள வர்க்கம் அதன் போராட்டத்தில் கொண்டிருக்கும் பெரிய பணயத்தையும் அவர்கள் ஏற்க வேண்டிய மூலோபாயம் சுட்டிக் காட்டப்படுவதையும்  அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அஞ்சல்துறை மற்றும் கார்த்துறைத் தொழிலாளர்கள் கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழில்துறை மற்றும் அரசியல் அணிதிரள்வின் முன்னணியில் இருத்திக்கொள்ள வேண்டும். இது வேலைகள் குறைப்புக்கள், ஓய்வூதியக் குறைப்புக்கள், தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் பொது சேவைகளின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டும். அத்தகைய அணிதிரள்வுதான் ஒரு சுயாதீன தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கம் வெளிப்படுவதற்குத் தளமாக இருக்கும். அந்த இயக்கம் ஒரு சில வங்கியாளர்கள், பெருநிறுவன முதலாளிகளை மட்டும் செல்வக் கொழிப்பிற்கு உட்படுத்தும் பொருளாதார வாழ்வு என்று இல்லாமல் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய  ஒரு தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்பட உறுதிகொள்ளும்.