சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The Socialist Party adopts an anti-working class program in France

பிரான்ஸில் சோசலிஸ்ட் கட்சி ஒரு தொழிலாள வர்க்க விரோத வேலைத்திட்டத்தை ஏற்கிறது

By Anthony Torres
21 June 2011

Use this version to print | Send feedback

இரண்டு மாதங்கள் நடந்த விவாதங்களுக்கு பின் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி (PS), 2012 ஜனாதிபதித் தேர்தல்களில் அனைத்து PS வேட்பாளர்களுக்கும் ஒரு பொது அரங்காக செயல்படும் ஒரு திட்டத்தை ஒருமனதாக ஏற்றது. 2012ல் நிக்கோலா சார்க்கோசியிடம் இருந்து அதிகாரத்தை எடுத்துக் கொள்ள தான் தயார் என்பதை PS குறித்துள்ளதுடன், அதே நேரத்தில் சார்க்கோசி கடைப்பிடித்த கொள்கைகளின் அடிப்படைகளை தொடரும் என்றும் குறிப்புக் காட்டியுள்ளது.

 

Nouvel Observateur  ல் “2012ல் PS திட்டம்: “PS முதன்மை செயலாளர் மார்ட்டின் ஆப்ரியின் பெரும் காட்சிஎன்ற தலைப்பில் சில்வைன் கரேஜ் மே 29 அன்று எழுதியுள்ள கட்டுரையில் ஆசிரியர் கூறுவதாவது :  நாங்கள் பிரான்ஸில் 1981 மற்றும் 1997ல் சீராக்கியது போல் ஒரு பெரிய ஜனநாயக முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லத் தயார்என்று அரசர்கள் பயன்படுத்தும்  நாம் என்று சொல்லை ஆப்ரி பயன்படுத்துகிறார்.” PS இன் 2012 வேலைத்திட்டம் கட்சியானது பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு இன்றியமையாத தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்குத் தலைமை தாங்க அதிகாரத்தை எடுத்துக் கொள்ள அது தயார் என்ற முன்னறிவிப்பைக் கொடுத்துள்ளது.

கருத்துக் கணிப்புக்களின்படி, இன்று ஜனாதிபதித் தேர்தல்கள் நடந்தால், PS தேர்ந்தெடுக்கப்படும். ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்குப் பின் ஜனாதிபதி சார்க்கோசி மிகவும் செல்வாக்கு இழந்தராகி விட்டார். வலதுசாரி நபர்கள் Jean-Louis Borloo, Dominique De Villepin போன்றோர் ஜனாதிபதித் தேர்தல்களில் நிற்பது பற்றி சிந்திக்கின்றனர். நவ பாசிச தேசிய முன்னணி (FN) ஆதரவில் விரிவாக்கத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு காரணம் பர்க்கா மீதான இனரீதியான தடையும், நிக்கோலா சார்க்கோசி தொடக்கியதேசிய அடையாளம் பற்றிய விவாதமும் ஆகும். இவை PS இன்னும் அதன் துணைக் கட்சிகளுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளன.

PS இன் வேலைத்திட்டம் அடிப்படையில் நம்பிக்கையற்ற தன்மையைக் கொண்டுள்ளது. இது தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையில் முன்னேற்றம் பற்றி எவ்வித தீவிர நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை. பிரெஞ்சு முதலாளித்துவம் வளர்ச்சி பெறும் நாடுகளின் எழுச்சியை எதிர்கொள்வதால் பெற்றுள்ள அச்சங்களை இது பிரதிபலிக்கிறது. அதேபோல் பிரான்ஸ் போன்ற நடுத்தர ஏகாதிபத்திய சக்திகளின் சரிவினால் வரும் அச்சங்களையும் பிரதிபலிக்கிறது குறிப்பாக மத்திய கிழக்கு, வட ஆபிரிக்காவில் படர்ந்துள்ள வர்க்கப் போராட்ட வளர்ச்சி பற்றியும் அதன் அச்சம் உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரான்ஸில் நிலவிய பொருளாதார உறுதிப்பாட்டுத் தன்மையின் அடித்தளங்கள்சிதைந்து விட்டனஎன்பதை PS அங்கீகரிக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார முன்னேற்றம் மேலாதிக்க உலகசக்தி என்று அமெரிக்கா கொண்டிருந்த பங்கு, வணிகத்திற்கு சர்வதேச நாணயமாக அமெரிக்க டாலர் கொண்டிருந்த பங்கு ஆகியவற்றுடன் பிணைந்து இருந்தது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு மற்றும் தங்கள் குறைந்த ஊதியத் தொழிலாளர் தொகுப்புடன் பிரான்ஸுடன் போட்டியிடும் திறன் கொண்ட வளர்ந்துவரும் நாடுகளின் வெளிப்பாடு நடுத்தர நாடுகளின் சரிவில் முக்கிய பங்கை கொண்டுள்ளன. PS ஆவணத்தின் நான்காம் பத்தி, “புதிய பொருளாதார பெருநாடுகளின் எழுச்சி, பொருள்சார் நலனில் அவை கோரும் பங்கு மற்றும் இயற்கையை தளமாகக் கொண்ட வளர்ச்சிப் போக்குடன் இணைந்த நிலையில் உலகம் ஒரு விளிம்பின் முனைக்கு வந்துள்ளதுஎன்று சுட்டிக் காட்டுகிறது.

5ம் பத்தியில் PS பேர்லின் சுவர் சரிந்த பின் கொடுக்கப்பட்ட அனைத்து உறுதிமொழிகளும் எப்படி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிக் கூறுகிறது. PS ஒப்புக்கொண்டுள்ள விதம் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் உண்மையில் முதலாளித்துவம்ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட நேரத்தில் கூறப்பட்டதற்கு மாறாகஅனைவருக்கும் சுதந்திரத்தை உறுதிபடுத்தும் ஒரு உறுதியான முறையாக இல்லை என்பது வெளிப்படை.

பொருளாதார நெருக்கடிக் காலத்தில் வங்கிகள் நடந்து கொண்ட முறை காட்டியுள்ளதுபோல், முதலாளித்துவம் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை இலாபங்களை அடையவும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் ஜனநாயக உரிமைகள் ஆகியவை அடக்கப்படுவதற்கும் பயன்படுத்துகிறது. பிரான்ஸ் மற்றும் உலகம் சமூக பிற்போக்குத்தன காலத்தில் நுழைவதாக PS காட்டுகிறது. இது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது என்றும் கூறுகிறது.

வேறு ஒரு மாற்றீட்டை PS முன்வைக்க முடியவில்லை. ஏனெனில் கிரேக்கத்தில் சமூக ஜனநாயகவாதி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூ அல்லது ஸ்பெயினில் ஜோஸ் லூயி ஜாபடெரோ போல்இதுவும் சிக்கன நடவடிக்கை திட்டங்களுக்கு உடன்படுகிறது. 7வது பத்தியில் PS தன் வரலாற்றைப் பற்றியே பேரழிவு தரக்கூடிய இருப்புநிலைக் குறிப்பை கொடுத்துள்ளது. நேர்மையற்ற முறையில் இது சமூக ஜனநாயக இயக்கம்செயல்படாமலுள்ளகுற்றத்தைத்தான் கொண்டிருக்கிறது என்று அறிவிக்கிறது. “இலாபங்களை அதிகரிப்பதற்காக, தடையற்ற சந்தை அரசாங்கங்கள் சமூகப் பாதுகாப்பை வலிமை குன்றச்செய்து, வாங்கும் திறனையும் வலுவழிக்கச் செய்துள்ளனஐரோப்பாவில் சமூக ஜனநாயக தலைவர்கள் சிலர் இது பற்றிப் பேசாமல் உள்ளனர்.”

 “ஒன்றும் செய்யாத நிலைபற்றி PS பேசும்போது அது பொய் உரைக்கிறது. சமூக ஜனநாயகவாதிகள் இன் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளுக்கு இத்தகைய அடைமொழியை அது பயன்படுத்துகிறது. உண்மையில் 1970 களில் பிரான்சில் தற்போதைய PS நிறுவப்பட்டதிலிருந்து PS அரசாங்கத்தில் இருக்கும்போது எல்லாம் தொழிலாளர்களுடைய போராட்டங்களை நசுக்கி, முதலாளித்துவ ஒழுங்கை தொழிலாளர்களின் இழப்பில் மீண்டும் நிலைநிறுத்துவதற்குத்தான் உதவியுள்ளது.

1983ம் ஆண்டு PS பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் பிரான்சுவா மித்திரோன் தலைமையில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு இரு ஆண்டுகளுக்கு பின், அது தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு சிக்கன நடவடிக்கையை ஏற்றது. இது 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின் ஏற்பட்டிருந்த வேலைநிறுத்த அலைகளை உறுதியாக நெரித்தது. இதையொட்டி முதலாளித்துவம் தொழில்துறையில் இருந்து நகர்வது, தனியார் மயமாக்கல் என்பவற்றில் இன்னும் உறுதியுடன் ஈடுபட்டது. குறிப்பாக பிரெஞ்சு எஃகுத் தொழில்துறையில்.

ஜனாதிபதி ஜாக் சிராக்கின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு பிரதம மந்திரிப் பதவியை எடுத்துக் கொண்ட PS அரசாங்கம், 1995ல் வேலைநிறுத்தங்களால் அதிர்விற்கு உட்பட்டு, மிருகத்தனமான தனியார்மயமாக்கும் கொள்கையைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டியது.

தற்பொழுது உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் ஐரோப்பிய கடன் நெருக்கடி இருக்கையில், சமூக ஜனநாயக அரசாங்கங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் சமூக நலன் ஆதாயங்களுக்கு எதிராகத் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. PS கூறுவது போல் செயலற்று இருப்பது என்பதற்கு மிகத் தொலைவில் இவை கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் ஓய்வூதியத் தகுதி பெறும் வயதை உயர்த்தியுள்ளன. அதே நேரத்தில் சமூக நலன்களையும் பணிநிலைமைகளையும் தாக்கியுள்ளன.

இந்நாடுகளிலுள்ள கொள்கைகள் சமூக ஜனநாயகவாதிகளால் ஆளப்படுகின்றன. இவை மேலும் மேலும் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லுகின்றன. கடந்த ஆண்டு எதிர்ப்புக்களை முகங் கொடுக்கும் வகையில் அரசாங்கங்கள் அரசாங்கப் படைகளை அனுப்பினஸ்பெயினில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு எதிராக, கிரேக்கத்தில் பரா வாகன சாரதிகளுக்கு எதிராக என. இப்படித்தான் சார்க்கோசி CRS கலகப்பிரிவு பொலிசை அவருடைய ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்த எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்களை அடக்க அனுப்பியிருந்தார்.

இதைப்பற்றி PS மௌனமாக இருந்தது, இதேபோன்ற கொள்கைகளை பிரான்ஸில் அவர்கள் செயல்படுத்தத் தயாரிப்பு நடத்துகின்றனர் என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் PS ம் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு உடந்தைதான். தேசிய சட்டமன்றத்தில் அது கிரேக்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வாக்களித்தது.

சார்க்கோசியின் மத்தியரைக்கடல் பற்றிய வெளியுறவுக் கொள்கையை PS குறைகூறுகிறது. ஆனால் இப்பிராந்தியத்தில் அவருடைய முக்கிய முனைப்புடன் உடன்பாடு கொண்டுள்ளது. அதாவது லிபியாவிற்கு எதிரான பிரெஞ்சு இராணுவ ஆக்கிரோஷ நடவடிக்கை பற்றி. சார்க்கோசிபிரான்ஸின் நம்பகத் தன்மையை, படுகொலை செய்த கடாபிக்கு சிகப்புக் கம்பளம் விரித்ததின் மூலம் குறைத்துவிட்டது, மற்ற ஜனநாயக நாடுகள் அவருடைய செயலை அப்பொழுது கண்டித்திருந்தன. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர் சரியாக நடந்து கொண்டபோது, லிபிய ஆட்சி தன் மக்களையே படுகொலை செய்யும்போது, அவர் செயல்பட்டது மிகவும் தாமதமாகத்தான்….”

இவ்வகையில் சார்க்கோசியின் இழிந்த பொய்யை PS மீண்டும் கூறுகிறது. இதன்படி லிபியப் போர் குடிமக்களைக் காப்பதற்கு தேவையானது என எடுத்துக் கொள்ளப்படுகிறதுஅதாவது லிபியாவில் நடக்கும் போருக்கு அதன் ஆதரவை நியாயப்படுத்தவும். பிரான்ஸ் மற்றும் நேட்டோ குடிமக்களைக் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்துவதை நியாப்படுத்தவும்.

ஒரு தேசியப் பொருளாதார கொள்கை பற்றியும் PS விரிவாகக் கூறுகிறது. இது ஏற்கப்பட்டால் உலக வணிகத்தில் அது ஆழ்ந்த பிளவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவிடமிருந்து அதிக சுதந்திரம் பெற்று ஜேர்மனியிடம் சார்பு கொள்ளும் கருத்தை இது வளர்க்கிறது.நம் வணிக நலன்களை உண்மையான பாதுகாப்புமுறைக்கு உட்படுத்துவது குறைவூதிய நாடுகளை எதிர்கொள்ளக் கூடியதாகவும், அரசாங்கங்கள் பாதுகாப்புவாத வரிகளை விதித்தல் என்பதுமாக இருக்க வேண்டும். இதை அடைவதற்கு நாம்ஊக்கமளிக்கும் ஒத்துழைப்பிற்குஆக்கம் அளிக்க வேண்டும். பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி முன்னோடி நாடுகளாக இருந்து கோடிட்டுக் காட்டும் திட்டத்தை முன்வைப்போம்.”

ஒரு போலித்தன சமூக நியாயப்படுத்துதலை PS ஐரோப்பிய வணிகக் கொள்கைக்கு அளிக்க முற்படுகிறது. இதில் முக்கியமான தன்னாட்சி உட்குறிப்புக்கள் உள்ளன. PS ஐரோப்பிய நாடுகளுக்கு வளரும் நாடுகள் அணுகும் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொள்கைகள் தோற்றுவிக்கப்பட விழைகிறது. இதையொட்டி ஐரோப்பிய எல்லைகள் மூடப்படும்.

நிக்கோலா சார்க்கோசியின் வழிவகைகளைத்தான் PS ன் நடவடிக்கைகளும் கொண்டுள்ளன. PS ஊதியம் பற்றி முதலாளிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் ஆண்டு மாநாடுகள் நடத்த வேண்டும், ஊதிய வளர்ச்சி வடிவமைப்பிற்கு ஒரு பொதுத் தளம் நிறுவப்பட வேண்டும் என விரும்புகிறது.

சார்க்கோசி அரசாங்கம் முன்வைத்த நடவடிக்கைகள் அனைத்திலும் தொழிற்சங்கங்கள் பங்குபெற்றுள்ளன. அவை தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களைக் குறைத்து அது அரசாங்கம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை ஏற்க வைத்தது. இவற்றுள் ஓய்வூதியச் சீர்திருத்தங்கள் இருந்தன. அப்படித்தான் அரசியல் வெடிப்பை ஏற்படுத்தாமல் இரயில் தொழிலாளர்கள் போராட்டமும் முடிவிற்கு வந்தது.

பாதுகாப்புவாத நடவடிக்கைகளைத் தவிர, எல்லாவற்றிற்கும் மேலாக PS தான் செயல்படுத்த இருக்கும் கொள்கைகளின் தொழிலாளர் விரோதப் போக்குத்தன்மைப் பொருளுரையை நிரூபிக்கின்றது. தொழில்துறை அகற்றப்படுதல் ஒரு PS அரசாங்கத்தின் கீழும் தொடரும் என்பதை அடிக்கோடிடும் வகையில், அதுநிறைய பங்கு இலாபங்களை அளிக்கும் நிறுவனங்களில் அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்து செலவு அதிகரிக்கப்பட வேண்டும்என்ற திட்டத்தை முன்வைக்கிறது.

1981 அல்லது 1997ல் அரசாங்கத்திற்கு வந்தவுடன் செய்ததைப்போல் PS தேர்தல் பிரச்சாரங்களில் கொடுத்த உறுதிமொழிகளுக்கு மிகவும் அதிகமான வலது புறத்தில்தான் PS ஆட்சி நடத்தும். இதன் 2012 திட்டம்இடதுஅல்ல, ஒரு வலதுசாரி வேலைத்திட்டம்தான், அது போரையும் சமூக சிக்கன நடவடிக்கைகளையும் காப்பாற்றும் என்ற உண்மையின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டுகிறது. இது 2012ல் பதவிக்கு வந்தால், உலக முதலாளித்துவ முறையின் ஆழ்ந்த நெருக்கடிக்கு இடையே வந்தால், PS அரசாங்கம் மிகப் பிற்போக்குத்தன்மையைக் கொண்டதாகத்தான் இருக்கும்.