சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation unions sign poverty-level pay deal

இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் வறிய-மட்ட சம்பள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன

By M. Vasanthan
11 June 2011
Use this version to print | Send feedback

இலங்கையில் பிரதான பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களான, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.) இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும், மேலும் இரு வருடங்களுக்கு வறிய-மட்டத்திலான சம்பளத்தை ஊர்ஜிதம் செய்வதற்காக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் திங்களன்று கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.

அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக சுதந்திர வர்த்தக வலயத்தைச் (சு.வ.வ.) சேர்ந்த பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கடந்த மூன்று வாரங்களாக போராட்டங்களை முன்னெடுத்ததை அடுத்து, பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் முதலாளிமாரும் பேச்சுவார்த்தைகளை துரிதமாக முடிவுக்குக் கொண்டுவந்தனர். அந்த ஆர்ப்பாட்டங்கள் சு.வ.வ. தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் அபிவிருத்தியடைந்ததை கண்டு நிச்சயமாக திகைப்படைந்த அரசாங்கம், தோட்டத் தொழிலாளர்களும் தீடீர் வேலை நிறுத்தங்களில் குதிக்கக் கூடும் என்பதையிட்டு கவலை கொண்டது.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம், உடன்படிக்கைக்கு செல்வதற்கு முன்னதாக எமது தலைவர்கள் ஜனாதிபதியுடன் [மஹிந்த இராஜபக்ஷவுடன்] கலந்துரையாடினர், அவர் உடனடியாக விடயத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு எங்களுக்கு அறிவுறுத்தினார்,எனத் தெரிவித்தார். விரைவில் உடன்படிக்கைக்குச் சென்றதற்கான காரணத்தை சுட்டிக் காட்டிய அவர், முன்னைய சந்தர்ப்பங்களில் போல் அன்றி, இம்முறை தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்பாட்டை இழந்து நடக்காது என்பதில் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை கொண்டிருந்தன, என பிரகடனம் செய்தார்.

2006ல், தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட தோட்டப்புற வேலை நிறுத்தப் போராட்டம், தொழிற்சங்கங்கள் அதை நிறுத்தி ஒரு சம்பள-வியாபார உடன்படிக்கையை திணிப்பதற்கு முன்னதாகவே வேகமாக விரிவடைந்ததோடு, தொழிற்சங்கங்களை மீறிச் செல்லுமளவுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. 2009ல் தொழிற்சங்கங்கள் தோட்டங்கள் பூராவும் ஒத்துழையாமை பிரச்சாரம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தன. இ.தொ.கா. கைச்சாத்திட்ட இன்னுமொரு மோசடி உடன்படிக்கைக்கு எதிராக, பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தனர்.

இம்முறை இ.தொ.கா. அந்த வாய்ப்புகளை எடுக்கவில்லை. தொழிற்சங்க தலைவர்கள் முதலாளிமாருடன் மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திங்களன்று ஒரு சில தோட்டங்களில் மட்டும் ஒரு அடையாள ஒத்துழையாமை போராட்டம் என்ற மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அதே தினம், உடன்படிக்கை ஒன்று காணப்பட்டுள்ளதாக அறிவித்த தொழிற்சங்கங்கள், தமது போலி பிரச்சாரத்தை உடனடியாக முடித்துக்கொண்டன.

Daily ft.com என்ற இனையத் தளம் ஒன்று நேற்று எழுதியிருந்த ஒரு ஆசிரியர் தலையங்கத்தில், இந்த சம்பள அதிகரிப்பு தொழிற்துறையினர் கொடுப்பதற்கு நினைத்திருந்த தொகையை விட அதிகமானதாகும், [மற்றும்] நிச்சயமாக அது ஒரு சவாலாக இருக்கும் என அறிவித்தது. ஆனால், சர்வதேச ரீதியில் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பின் மத்தியில், கம்பனிகள் பிரமாண்டமான இலாபங்களைப் பெற்றுள்ளன. 23 தேயிலை மற்றும் இறப்பர் கம்பனிகள், 2009ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2010ல் தமது இலாபத்தை 935 வீதத்தால் அதிகரித்துக்கொண்டுள்ளன, என கொழும்பு பங்குச் சந்தை அறிக்கையொன்று கண்டுள்ளது.

இந்த சம்பள உட்ன்படிக்கை, தீவின் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை பெருந் தோட்டங்களில் வேலை செய்யும் அநேகமாக தமிழ் பேசும், சுமார் அரை மில்லியன் தொழிலாளர்களுக்கு செல்லுபடியாகும். இலங்கை தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினராக இந்த தொழிலாளர்கள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் போன்ற அத்தியாவசிய வசதிகள் அற்ற பெருந்தோட்டங்களில் குறுகலான வீடுகளில் வசிக்கின்றனர்.

திங்கட் கிழமை கைச்சாத்தான உடன்படிக்கையின் கீழ், வருகை, விலை மற்றும் உற்பத்தி போன்றவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ள மேலதிக கொடுப்பணவுகளுடன், அடிப்படை சம்பளம் 285 ரூபாயில் இருந்து 380 ரூபா வரை (3.50 அமெரிக்க டொலர்) அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கு எத்தனை நாட்கள் வேலை கொடுப்பது பொதுவில் ஒரு மாதத்துக்கு சுமார் 24 அல்லது 25 நாட்கள்- என்பதை தீர்மானிக்கும் தோட்ட நிர்வாகத்தாலேயே மொத்த வருமானம் தீர்மானிக்கப்படும்.

கம்பனி கொடுக்கும் வேலை நாட்களில் குறைந்தபட்சம் 75 வீதம் வேலை செய்திருந்தால் வழங்கப்படும் வருகைக்கான கொடுப்பணவு, 90 ரூபாயில் இருந்து 105 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயினும், அநேகமான தொழிலாளர்களால், குறிப்பாக பெண்களால், இந்த வீதத்தை எட்ட முடியாது. ஆகையால் அந்த கொடுப்பணவை அவர் பெறமாட்டார். மற்றைய கொடுப்பணவான 30 ரூபா, உற்பத்தி விலையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இறுதியாக, கம்பனிகளால் தீர்மானிக்கப்படும் உற்பத்தி இலக்குகளை தொழிலாளர்களால் பூர்த்தி செய்ய முடியுமாயின் அவர்களால் மேலதிகமாக 17 ரூபாவை பெற முடியும்.

உற்பத்திக்கான கொடுப்பணவுக்கு அப்பால், 2009 முற்பகுதியில் வழங்கப்பட்ட 405 ரூபாவில் இருந்து 110 ரூபா வரை மட்டுமே புதிய சம்பள மட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடைசி முடிவு என்னவெனில், 2009ல் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பு போதாததாக இருந்ததோடு, இன்னமும் அப்படியே உள்ளது. 2009 ஜனவரி மற்றும் 2011 ஜனவரிக்கும் இடையில், உத்தியோகபூர்வ வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் 12.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் தமது சம்பளத்தில் பெருந்தொகையை செலவிடும் அடிப்படை உணவுப் பொருட்களின் விலை மிகவும் செங்குத்தாக அதிகரித்துள்ளது.

நோர்வுட் தோட்டத்தின் உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசிய போது, ஏனைய செலவுகள் ஒரு புறம் இருக்க, உயர்ந்த வாழக்கைச் செலவுடன் பார்க்கும் போது, இந்த சம்பளம் அன்றாட சாப்பாட்டுக்கே போதாது. விலைவாசி அன்றாடம் அதிகரித்து வருவதோடு அநேக தொழிலாளர்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். எங்களது தொழிற்சங்கம் இந்தக் காட்டிக்கொடுப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாரில்லை. நான் தொழிற்சங்க அலுவலகத்துக்கு சென்று அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை, என்றார்.

வெலிஓயா தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, தனது தோட்டத்தில் உள்ள 150 இ.தொ.கா. உறுப்பினர்களும் இந்த உடன்படிக்கையை எதிர்க்கின்றனர் என விளக்கினார். எங்களது உடன்பாடு இல்லாமலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எவரும் எங்களிடம் வந்து கலந்துரையாடவில்லை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் தேவைக்க்காக செயற்படுவதில்லை. அவை கம்பனிகளின் நலன்களுக்காகவே வேலை செய்கின்றன. மற்றைய தொழிற்சங்கங்களும் இந்த ஒப்பந்தத்தை சவால் செய்யவில்லை. எங்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை. யாராவது முன் வந்து இந்த ஆபத்துக்களை தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்துவதோடு அவர்களை வழி நடத்தவும் வேண்டும், என அவர் கூறினார்.

தங்குமிடம் முதல் திருமணம் மற்றும் சமய விழாக்கள் வரை தோட்ட மக்களின் வாழ்க்கையில் ஏறத்தாழ ஒவ்வொரு அங்கத்தையும் கட்டுப்படுத்த நிர்வாகத்துடன் நெருக்கமாக செயற்படும் தோட்டப்புற தொழிற்சங்கங்கள் பற்றி தொழிலாளர்களுக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தொழிற்சங்கத் தலைவர்கள் வர்த்தகங்களை முன்னெடுக்கவும் மற்றும் பாராளுமன்றத்தில் பதவிகளைப் பெறவும் தமது அமைப்புக்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

மிகப்பெரும் தொழிற்சங்கமான இ.தொ.கா. ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருப்பதோடு அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஒரு அமைச்சரவை அமைச்சராவார். பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் கூட, லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கூட்டணி பங்காளிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. LJEWU வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை (யூ.என்.பீ.) சார்ந்ததாகும்.

இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அலட்சியம் செய்கின்றன. தொழிற்சங்கத்தின் முயற்சிகளால் தொழிலாளர்கள் நியாயமான அதிகரிப்பைபெற்றுள்ளார்கள் என இ.தொ.கா. தலைவர் தொண்டமான் வஞ்சகமாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஏனைய தொழிற்சங்கங்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டா என்பதை நன்கு அறிந்திருந்த அவர், அவர்களால் இதைவிட அதிகமாக பெற முடியும் என்றால் நாம் அதை எதிர்க்கப் போவதில்லை, என அறிவித்தார்.

உடன்படிக்கையை விமர்சித்த தேசிய தொழிலாளர் சங்க (NUW) தலைவர் ஆர். திகாம்பரம், இ.தொ.கா. தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்து விட்டது, கடவுள் அவர்களைத் தண்டிப்பார்எனத் தெரிவித்தார். இ.தொ.கா. காட்டிக்கொடுக்காவிட்டால், சம்பளம் 550 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கும், என அவர் தெரிவித்தார். ஆயினும், அவரது தோரணை, அவரது தொழிற்சங்கம் எந்தவொரு பிரச்சாரத்தையும் முன்னெடுக்கப் போவதில்லை என்பதை தெளிவாக்கியது.

திகாம்பரம் தன்னை அரசாங்கத்தின் எதிரியாகக் காட்டிக்கொண்டே கடந்த ஆண்டு தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். சில மாதங்களுக்குள்ளேயே அவர் மறு பக்கம் தாவியதோடு இப்போது அவர் இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளியாக உள்ளார்.

விலைவாசி அதிகரிப்பின் மத்தியில் இந்த சம்பள உயர்வு போதாது என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் (ஜ.தொ.கா.) தலைவர் மனோ கனேசன் புலம்பினார். தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை கொடுக்கத் தலையீடு செய்யுமாறுஅவர் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக தொழிலாளர்கள் பட்டினியை எதிர்கொள்வர் என கூறிய அதே வேளை, அதை சவால் செய்வது பற்றி அவர் எதனையும் முன்வைக்கவில்லை.

மலைய மக்கள் முன்னணியின் (ம.ம.மு.) தலைவர் பி. இராதாகிருஷ்னன், பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் ஒரு பக்கம் சார்ந்துள்ளன என முறைப்பாடு செய்தார். எல்லா தொழிற்சங்கங்களும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றியிருந்தால் நாம் அதிக சம்பளத்தைப் பெற்றிருப்போம். அடுத்த முறை அவர்கள் பேச்சுக்களில் பங்கெடுக்க ஏனைய தொழிற்சங்களையும் ஐக்கியப்படுத்த வேண்டும், என அவர் கூறினார். எவ்வாறெனினும், இம்முறை ம.ம.மு. மேலதிக நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

மிகவும் போர்க்குணமிக்க வாய்ச்சவடாலை விட்ட அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்க (ACEWU) தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன், தொழிலாளர்கள் ஒரு அழிவுகரமான நிலைமையை எதிர்கொண்டுள்ளார்கள் என்றும், அவரது தொழிற்சங்கம் 700 ரூபா நாள் சம்பளத்துக்காகப் போராடியதாகவும் பிரகடனம் செய்தார். ஆயினும், புதன் கிழமை, ACEWU செயலாளர் எ.டி. பிரேமரத்ன உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்ததாவது: இப்போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுவிட்டது. தொழிற்துறை முரண்பாட்டு சட்டத்தின் படி, எங்களால் எதுவும் செய்ய முடியாது.

இத்தகைய இ.தொ.கா. எதிரிகளின்இந்தத் தோரணை அழிவுகரமான நிலைமையை எதிர்கொண்டுள்ள தொழிலாளர்களின் சீற்றத்தை சிதறடிப்பதை இலக்காகக் கொண்டதாகும். 2009ம் ஆண்டிலும், இ.தொ.கா.வின் சம்பள வியாபாரத்தை எதிர்த்துப் போராடுவதாக இதே சங்கங்கள் வாக்குறுதியளித்தன. பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்ததோடு அதிக சம்பளத்துக்காகப் போராடுவதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தயாரானார்கள். எவ்வாறெனினும், ம.ம.மு., ACEWU, மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் விரைவாக எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு முடிவுகட்டன. அப்படி தொடர்ந்திருந்தால், அது தொழிலாளர்களை மத கொண்டாட்டங்களை கொண்டாடுவது மட்டுமே. ஆனால் அவர்கள் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கவே இல்லை.

நியாயமான சம்பளம் மற்றும் நிலைமைகளுக்காகப் போராடுவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் நம்பிக்கை வைக்கக்கூடாது, ஆகையால் விவகாரத்தை தமது கையில் எடுக்க வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்னர் சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்திருந்தது. இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சம்பளப் போராட்டத்தை சுயாதீனமாக முன்னெடுக்க வேண்டும் என சோ.ச.க. வெளியிட்ட அறிக்கையை தொழிலாளர்கள் கவனமாக படிக்க வேண்டும் என நாம் வேண்டுகின்றோம். அவர்கள் தமது சொந்த நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபித்துக்கொண்டு, சு.வ.வ. தொழிலாளர்கள் உட்பட ஏனைய தொழிலாளர் பகுதியினரின் பக்கம் திரும்புவதோடு, சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் மற்றும் தொழிற்துறை ரீதியான எதிர்த் தாக்குதலை முன்னெடுக்க வேண்டும்.