WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
Oil companies prepare for post-Gaddafi
Libya
கடாபிக்குப் பிந்தைய லிபியாவிற்கு எண்ணெய்
நிறுவனங்கள்
தயாரிப்பு செய்கின்றன
By Patrick O’Connor
17 June 2011
லிபியாவில் முன்பு இயங்கிவந்த பெரிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய
எண்ணெய் பெருநிறுவனங்கள் இப்பொழுது சட்டவிரோத நேட்டோ தலைமையிலான போர் அதன் நோக்கமான
"ஆட்சி
மாற்றத்தை”
அடைந்து,
முயம்மர் கடாபியை அதிகாரத்தில் இருந்து அகற்றிவிட்டு இன்னும் தம்முடன்
இயைந்துபோகக்கூடிய ஆட்சி திரிப்போலியில் நிறுவப்பட்டால்,
வணிகத்தை மீண்டும் தொடங்குவதற்கன தயாரிப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
சர்வதேச எரிசக்தி நிறுவனம்
(International
Energy Agency-
IEA)
நேற்று எண்ணெய் உற்பத்தித் துறையில் ஒப்புமையில் மெதுவான,
ஆனால் உறுதியான மீட்பு ஏற்படும் என்று கணித்துள்ளது.
“அடுத்த
ஆண்டில் ஏதேனும் ஒருவகையில்,
அரசியல் இயக்கமுறை உறுதியாகிவிடும்,
2013க்குள்
முழுத்திறனும் நெருக்கடிக்கு முந்தைய அளவுகள் கிட்டத்தட்டை அடையப்படும், 2015ல்
முழு மீட்பு ஏற்பட்டுவிடும்”
என்று சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் அறிக்கை கூறியுள்ளது.
இத்தாலிய எண்ணெய் பெருநிறுவனமான
ENI
யின் தலைமை நிர்வாக அதிகாரி பவோலோ ஸ்காரோனி புதன் அன்று இதேபோன்று அறிவித்தார்:
“லிபியாவின்
அனைத்தும் சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும் என்று நாம் நினைக்கிறோம்….
லிபியாவில் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் ஏற்கனவே நாட்டை நன்கு அறிந்துள்ள
நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தியை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும்.
இப்போதிலிருந்து முதல் ஓராண்டிற்குள்ளாக நிலைமை சீராகிவிடும் என்பதில் நம்பிக்கை
கொண்டுள்ளோம்.”
என்றார்.
லிபியாவில் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மற்ற
முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளும்
(இதில்
அமெரிக்காவின்
ConocoPhilips,
பிரிட்டனின்
BP
ஆகியவையும் அடங்கும்)
இன்னும்
கூடுதலான எச்சரிக்கை உணர்வுடன் உள்ளன;
அதே
நேரத்தில் எண்ணெய் வளம் உடைய வட ஆபிரிக்க நாட்டில் தங்கள் பங்குகளை பாதுகாப்பதற்கு
திரைமறைவில் பரபரப்புடன் செயல்படுகின்றன.
கடந்த வாரம் வாஷிங்டன் போஸ்ட் கோனோகோ பிலிப்ஸ்
(ConocoPhillips)
மற்றும் பிற அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடைக்காலத் தேசியக் குழு
என அழைக்கப்படும் பெங்காசியைத் தளமாகக் கொண்ட
“எழுச்சி”யாளர்களின்
பிரதிநிதிக்குழுவை சந்தித்தனர்.
லிபிய அரசாங்கத்துடன் இந்நிறுவனங்கள் முன்னதாக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் அனைத்தும்
மதிக்கப்படும் என அவர்கள் உறுதியளிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ஹூஸ்டன் தளத்தை உடைய எண்ணெய் பொறியியல் நிறுவனமான
Quantum Reservoir Impact
இன்
தலைமை நிர்வாகி நான்சென் சலேரி வாஷிங்டன் போஸ்ட்டிடம்
“இப்பொழுது
எவர் வெற்றி அடையப்போகிறார்கள் என்பதை நீங்கள் ஊகிக்கலாம்,
அப்பெயர் ஆனால் கடாபி அல்ல.
அடிதளத்தில் சில மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
மேற்கு நிறுவனங்கள் நிலைப்பாடு எடுத்துக்கொள்கின்றன.…
இப்பொழுதில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் லிபிய உற்பத்தி இப்பொழுது உள்ளதைவிட
உயர்ந்து இருக்கும்,
இன்னும் முதலீடுகள் வரவுள்ளன.”
என்றார்.
போரினால் எண்ணெய் அகழும் செயற்பாடுகள் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்தாலும்,
சர்வதேச நிறுவனங்கள் லிபியாவிலும் வட ஆபிரிக்க பகுதி முழுவதும் புதிய வாய்ப்புக்களை
தீவிரமாகத் பின்தொடர்கின்றன.
Oil & Gas Journal
ல்
கடந்த வாரம் வெளியிடப்பட்ட தகவல் ஒன்றின்படி,
கனேடியத் தளத்தைக் கொண்ட
Sonde Resources
லிபியா மற்றும் துனிசியாவினால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள மத்தியதரைக்கடல் பகுதி
எண்ணெய் வயல் ஒன்று
362
மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும்
981
பீப்பாய் கன அடி எரிவாயு வர்த்தகத்திற்கான சாத்தியப்பாட்டை
கொண்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
நேற்று ராய்ட்டர்ஸ் கூறியது:
“அரபு
வசந்தம் என்பது எண்ணெய் நிறுவனங்களைப் பாதிக்காது”
என்ற தலைப்பில்,
எரிசக்தி பெருநிறுவனங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வட ஆபிரிக்கா மற்றும்
மத்திய கிழக்கில் செய்துவரும் எழுச்சிகள் முன்பு பல அகற்றப்பட்ட சர்வாதிகாரிகளுடன்
உடன்பட்டிருந்த இலாபகரமான உடன்பாடுகளைப் பாதிக்காமல் இருக்கும் செயற்பாடுகளை
உறுதியாக்குகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
“கடந்த
காலத்தில் மத்திய கிழக்கில் பெரும் அரசியல் மாற்றங்கள் பல நேரமும் வெளிநாட்டு
எண்ணெய் உற்பத்தியாளர்களை அகற்றுவதில் முடிந்தது”
என்று கட்டுரை கூறுகிறது.
“எண்ணெய்
நிறுவனங்கள் எகிப்து மற்றும் துனிசியாவின் புதிய தலைவர்களுக்கு பாதை
அமைத்துள்ளார்கள் என்று இத்தாலிய அமைச்சரக ஆதாரங்கள் ராய்ட்டர்ஸிடம் கடந்த மாதம்
தெரிவித்தன;
ஏன்,
லிபிய எழுச்சித் தலைவர்களும் நன்மை பெற்றுள்னர்.
இதுவரை பெறப்பட்டுள்ள அறிகுறிகள் பரந்த முறையில் சொத்துக்கள் அபகரிப்பிற்கு
இடமில்லை என்பதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.
“
இப்போக்குகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தாக்குதல்கள் லிபியா மீது
நடத்துபவதில் உள்ள அப்பட்டமான கொள்ளைமுறை மற்றும் புதிய காலனித்துவ முறையின்
தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
ஒபாமா நிர்வாகமும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இப்பொழுது ஐக்கிய நாடுகள்
பாதுகாப்பு சபை தீர்மானம்
1973
க்கு உட்பட்டு நடக்கிறோம் என்ற போலித்தனத்தையும் அல்லது அதன் கூறப்பட்ட இலக்கான
“குடிமக்களை
காப்பாற்றுதல்”
என்பதையும்கூட கைவிட்டுவிட்டன.
கடாபியும் அவருடைய குடும்பமும் பல படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியுள்ளன. பல
பொது உள்கட்டுமைப்பு வசதிகள் முறையாக இலக்கு வைக்கப்படுகின்றன,
குண்டுத்தாக்குதல்கள் உறுதியாகத் தீவிரமடைந்துள்ளன,
இன்னும் அதிக குடிமக்கள் இறப்பிற்கு இவை காரணமாகியுள்ளன.
உண்மையான செயற்பட்டியல் லிபிய அரசாங்கத்திற்குப் பதிலாக ஒரு கைப்பாவை அரசாங்கத்தை
நிறுவுதல் ஆகும். அத்தகைய புதிய அரசாங்கம் ஏகாதிபத்திய சக்திகளின் பூகோள மூலோபாய
மற்றும் பொருளாதார நலன்கள் அந்நாட்டிலும் இன்னும் பரந்த பிராந்தியத்திலும்
முன்னேற்றுவிக்கும் வழிவகையாக இருக்கும்.
இந்த இலக்குகளுக்கு மையமாக இருப்பது லிபிய எண்ணெய் மீதான
கட்டுப்பாடு ஆகும்.
முன்பு மொத்த உலக எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட
2
சதவிகிதம் என்று இருந்த லிபிய எண்ணெய் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்த தரத்தை
உடையது.
மேலும் இன்னும் கண்டறியப்படாத பரந்த இருப்புக்கள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது;
நாட்டின் வளத்தில்
70%
இன்னமும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.
விக்கிலீக்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகத் தகவல்
செய்திகள் லிபியாவில் அமெரிக்க,
ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களின் மோசமான செயற்பாடுகளை பற்றித் தெளிவாக்கியுள்ளன.
பல தகவல்களின் உள்ளடக்கத்தை வாஷிங்டன் போஸ்ட் சுருக்கிக்
கூறியுள்ளது;
“2004ல்
ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் லிபியா அணுவாயுதம்,
பயங்கரவாதம் ஆகியவற்றைக் கைவிடுவதற்கு ஈடாக அதன் மீதான பொருளாதாரத் தடைகளை
எதிர்பாராதவகையில் நீக்கிவிட்டார்.
அமெரிக்க எண்ணெய் நிறுவன உயரதிகாரிகளிடையே பெரும் நம்பிக்கை மலர்ந்து இரு
தசாப்தங்களுக்கு முன் அவர்கள் கைவிட நேர்ந்த லிபிய எண்ணெய் வயல்களுக்கு திரும்பும்
ஊக்கம் நிறைந்தது…
ஆனால் இந்த ஆண்டு ஆயுதமோதல்கள் லிபியாவில் இருந்து அமெரிக்க
நிறுவனங்களை அகற்றுவதற்கு முன்னரே,
கடாபியுடனான அவர்களுடைய உறவுகள் சீர்குலைந்திருந்தன.
லிபிய தலைவர் உடன்படிக்கைகளில் இன்னும் கடுமையான நிபந்தனைகளை கோரியிருந்தார்.
முன்கூட்டியே பெரும் தொகைகளை முற்பணமாக கொடுக்கவேண்டும் என்று அவர் கோரினார்.
மேலும் அவர் முன்னதாகக் காட்டியிருந்த சலுகைகளுக்காக அமெரிக்க அரசாங்கத்திடம்
இருந்து அதிக மரியாதையை பெறவில்லை என்ற வருத்தத்தையும் கொண்டிருந்தார். இதனால்
அமெரிக்கக் கொள்கைகள் இயற்றுவதில் செல்வாக்கை பெறவேண்டும் என்று நிறுவனங்களுக்கு
அழுத்தமும் கொடுத்தார்.”
வெளிவிவகாரத்துறை தகவல் ஒன்று டிசம்பர்
2004ல்
ConocoPhilips
நிர்வாகிகள் லிபிய அரசாங்கத்துடன் அப்பொழுது அவர்கள் கொண்ட உடன்பாட்டை “சிறப்பாக
இல்லை”
என்று விவரித்திருந்தனர். ஆனால்
“லிபியச்
சந்தையில் மீண்டும் நுழைவதற்காக கட்டுப்பணமாக அதை வைத்துக் கொள்ளலாம் என்று
நிறுவனங்கள் கருதுவதாகவும் கூறினர்.”
ஆனால் நவம்பர்
2007ஐ
ஒட்டி,
மற்றொரு வெளிவிவகாரத்துறை தகவல்“லிபிய
மூலவள தேசியம் பெருகியுள்ளதற்கான சான்றுகள்”
பற்றிக் குறிப்பிட்டது.
ஒரு
உரையில் கடாபி,
“லிபிய
மக்கள் இந்த எண்ணெய் பணத்தில் இருந்து இலாபம் பெற்றுத் தங்கள் உரிய இடத்தை
அடையவேண்டும்”
என்று கூறியிருந்த உரையை அமெரிக்க அதிகாரிகள் வேண்டாவெறுப்பாக மேற்கோளிட்டனர்.
அத்தகவல் முடிவுரையாகக் கூறியது:
“லிபியாவின்
அரசியல் மற்றும் பொருளாதார தலைமையில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் பெருகிய முறையில்
எரிசக்தித்துறையில் தேசியவாதக் கொள்கைகளைத் தொடர்கின்றனர். இது லிபியாவின் பரந்த
எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களைத் திறமையுடன் சுரண்டுவதைப் பாதிக்கக் கூடும்.”
2008ல்
மற்றொரு தகவல் லிபிய அரசாங்கம்
ExxonMobil
நிர்வாகத்திடம்
“அமெரிக்காவைத்
தண்டிப்பதற்காக”
தன்
எண்ணெய் உற்பத்தியை
“கணிசமாகக்
குறைக்கக் கூடும்”
என்று எச்சரித்தது.
இது
லாக்கர்மே விமானத் தாக்குதல் பாதிப்பிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு கொடுக்க லிபிய
வணிகச் சொத்துக்களை இலக்கு வைப்பதை எளிதாகும் வகையில் காங்கிரஸ் ஒரு சட்டத்தை
இயற்றியபின் கூறப்பட்டது.
இத்தகவல்கள் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் கடாபியுடன் ஒப்பந்தம்
செய்து கொண்டிருக்கும் உடன்பாடுகளைக் காப்பாற்ற மட்டும் கவனம் கொண்டிருக்கவில்லை,
இன்னும் சாதாகமான விதிகளைக் கொண்டு உடன்படிக்கைகளை பழையபடி எழுத ஆர்வம்
கொண்டுள்ளனர் என்பதை தெளிவாக்குகின்றன.
அதே
நேரத்தில் லிபியாவின் எண்ணெய்க்காக நடக்கும் போட்டியில் பெரும் சக்திகளின்
போட்டிகள் விரிவடைந்து கொண்டு வருகின்றன.
அமெரிக்க,
பிரிட்டிஷ்,
மற்றும் பிரெஞ்சுப் பெருநிறுவனங்கள் கடாபிக்குப் பின் வரும் ஆட்சி அவர்களுக்கு
முன்பே லிபியாவில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ரஷ்ய,
சீன,
இத்தாலிய,
ஜேர்மனிய நிறுவனங்களைக் காட்டிலும் அதிக சாதகமாக இருக்கும் என
எதிர்பார்க்கவில்லை.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஒரு தகவல் ஏப்ரல்
2008ல்
அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகார மற்றும் நிதித் துறைகளை இத்தாலிய
அரசாங்கத்திடம் எண்ணெய் பெருநிறுவனம்
Eni
மற்றும் ரஷ்ய
Gazprom
ஆகிவை பெற்றுள்ள உடன்பாட்டிற்குச் சவால் விடுமாறு வலியுறுத்தினர்.
கருங்கடலுக்குக் குறுக்கே ஒரு குழாய்த்திட்டத்தை அமைப்பதற்கு Gazprom
இற்கு
Eni
உதவுவதற்கு ஈடாக,
இத்தாலிய நிறுவனம் தன் பங்கில் ஒரு பகுதியை லிபியாவில் உள்ள பெரும் ஆதாயம் தரும் “Elephant”
எண்ணெய் வயலை அதற்கு விற்கத் திட்டமிட்டது.
இரகசியத் தகவல் கூறியது:
“புதிய
பெர்லுஸ்கோனி அரசாங்கம்
Eni
ஐ
Gazpromஇன்
நலன்களுக்கு உதவியாக இருப்பதைக் குறைத்துக் கொள்ளக் கட்டாயப்படுத்த வேண்டும் என்று
போஸ்ட் விரும்புகிறது…..
Eni
ஐரோப்பிய எரிசக்தி விநியோகத்தில் மேலாதிக்கம் செலுத்த விரும்பும்
Gazprom
இன்
முயற்சிகளுக்கு உதவும் வகையில் உழைப்பதுடன்,
அமெரிக்க ஆதரவைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய முயற்சிகளான எரிசக்தி விநியோகம்
பன்முகப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு எதிராகச் செயல்படுகிறது.”
இப்போர் மிகத்திறைமையுடன் ஏப்ரல்
20
அன்று திட்டமிடப்பட்டிருந்த உடன்பாட்டை சேதப்படுத்திவிட்டது.
Eni
நிர்வாகிகள் தாங்கள் லிபிய எண்ணெய் வயல் விற்பனையை காலவரையின்றி ஒத்திப்போடுவதாக
அறிவித்துள்ளனர். |