WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
கிரேக்க
அரசியல்
நெருக்கடி
ஆழமடைகையில்
உலகச்
சந்தைகள்
பெரும்
சரிவைச்
சந்திக்கின்றன
By Stefan Steinberg
17 June
2011
Use
this version to print | Send
feedback
கிரீஸின்
சமீபத்திய
நிகழ்வுகளாலும்,
அமெரிக்க
பொருளாதாரம்
குறித்து
தொடர்ந்து
வந்து
கொண்டிருக்கும்
எதிர்மறையான
செய்திகளாலும்
கடந்த
இரு
தினங்களில்
உலகெங்கிலுமான
சந்தைகள்
எதிர்மறையாக
பிரதிபலித்தன.
புதனன்று
ஒரு
சமயத்தில்
டவ்
ஜோன்ஸ்(Dow
Jones) புள்ளிகள்
200 இற்கு
அதிகமாய்ச்
சரிந்தது.
வர்த்தகத்தின்
முடிவில்,
அது
ஓரளவுக்கு
மீட்சி
கண்டதென்றாலும்,
அப்போதும்
அது
1.5
சதவீதம்
வீழ்ச்சி
கண்ட
நிலையில்
தான்
இருந்தது.
ஐரோப்பியக்
குறியீடுகளும்
புதனன்று
சரமாரியாய்
சரிந்தன.
ஒரு
சமயத்தில்
ஆஸ்திரேலியக்
குறியீடானது
ஜப்பானில்
மார்ச்
11
பூகம்பத்துக்குப்
பின்
நேர்ந்த
மிகக்
குறைந்த
அளவைத்
தொட்டது.
அமெரிக்க
நிதி
ஐரோப்பாவில்
இருந்து
வெளியேறியதன்
காரணத்தால்
டவ்
ஜோன்ஸ்
வியாழனன்று
இலேசான
மீட்சி
கண்டது.
gஐரோப்பிய
வங்கிகளைக்
கைவிடுவதில்
அமெரிக்க
முதலீட்டாளர்கள்
பாரபட்சமில்லாத
அணுகுமுறையைக்
கடைப்பிடித்தனர்h
என்று ஒரு ராய்டர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
நடப்பு
இழப்புகளால்
டவ்
ஜோன்ஸ்
ஏப்ரல்
இறுதி
முதலான
காலத்தில்
சுமார்
7
சதவீதம்
வரை
சரிந்திருக்கிறது,
அத்துடன்
இந்த
வருடத்தில்
அது
பெற்ற
இலாபத்தில்
பெரும்
பகுதியை
இழந்து
விட்டிருக்கிறது.
கிரீஸ்
கடனைத்
திருப்பிச்
செலுத்த
முடியாத
நிலை
நேர்ந்தால்
அதனால்
விளையக்
கூடிய
விளைவுகள்
குறித்த
சர்வதேசக்
கவலைகளைப்
பிரதிபலிக்கும்
விதமாக,
எண்ணெய்
விலைகளும்
யூரோவும்
கூர்மையான
சரிவைச்
சந்தித்தன,
கருவூலப்
பத்திரங்களின்
விலை
அதிகரித்தது.
கிரேக்க
நெருக்கடியில்
இருந்து
நேரக்
கூடிய
தொடர்விளைவு
குறித்த
சந்தை
அச்சங்களைப்
பிரதிபலிக்கும்
முகமாக,
வியாழனன்று
கிரேக்க
பங்குகள்
சுமார்
3
சதவீதம் வரை சரிந்தன.
ஸ்பெயின்
அரசாங்கப்
பத்திரங்கள்
மீதான
வட்டி
விகிதங்கள்
அதிகரித்தன.
இந்த வார ஆரம்பத்தில் ஸ்டாண்டர்டு &
பூவர்’ஸ் (Standard and Poorfs) தரமதிப்பீட்டு முகமை கிரேக்க அரசாங்கக்
கடன்களையும் கிரேக்க வங்கிகளையும் ஒரு மலிந்த நிலைக்கான தரமதிப்பீட்டுக்கு
கீழிறக்கியதைத் தொடர்ந்து, இன்னொரு தர மதிப்பீட்டு முகமையான மூடி’ஸ்(Moodyfs )தனது
பார்வையை பிரதான ஐரோப்பிய நாடுகளை நோக்கித் திருப்பியுள்ளது.
பிரான்சின்
மூன்று மிகப்பெரிய வங்கிகளின் தரமதிப்பீட்டு அளவுகளை மறுஆய்வு செய்து
கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் புதனன்று அறிவித்தது.
சர்வதேச கணக்குமுடிப்புகளுக்கான வங்கியில் இருந்தான சமீபத்திய தரவு கூறுவதன் படி,
கிரேக்க வங்கிகளின் வீழ்ச்சி மற்றும் அரசாங்கத்தின் கடன் திருப்பிச் செலுத்த
முடியாத நிலை ஆகியவற்றால் ஜேர்மனி,
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற மற்ற நாடுகளின் வங்கிகளைக் காட்டிலும்
பிரெஞ்சு வங்கிகள் இழப்பதற்கு அதிகமாய் இருக்கிறது.
உலகச்
சந்தைகளில் பெருகி வரும் பயவுணர்வு கிரேக்கப் பொருளாதார நெருக்கடியின்
கையாளுவதற்குச் சிக்கலான தன்மையின் ஒரு வெளிப்பாடு ஆகும். இத்தன்மை
ஐரோப்பாவெங்கிலுமான முக்கிய வங்கிகள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின்
முற்றிலும் பொறுப்பற்ற முதலீட்டு மூலாபாயங்களில் இருந்து உருவானதாகும். பரவலான
மக்கள் கோபம் அதிகரிப்பதும் அது பேரளவில் போர்க்குணமிக்க வடிவங்களை எடுப்பதும்
வெளிப்படையாகத் தெரிகின்ற நிலைமைகளின் கீழ் கிரீஸிலும் ஒட்டுமொத்தமாய்
ஐரோப்பாவிலும் பெருகி வரும் அரசியல் நெருக்கடி குறித்து பதற்றம் பெருகி வருவதையும்
சந்தைகளின் இந்தத் தள்ளாட்டம் பிரதிபலிக்கிறது.
இந்த
வாரத்தில்
ஐரோப்பிய
அமைச்சர்கள்
சந்தித்துப்
பேசிய
அடுத்தடுத்த
கூட்டங்களிலும்
கிரீஸின்
அதிகரித்து
வரும்
பொருளாதார
நெருக்கடிக்கு
ஒரு
கூட்டான
அணுகுமுறைக்கான
யோசனையைக்
கொண்டு
வர
முடியவில்லை.
செவ்வாயன்று,
“மிகத்
தீவிரமான”
விவாதங்கள் என்று விவரிக்கப்பட்ட ஒன்றில் ஐரோப்பிய
அமைச்சர்கள் பங்குபெற்றனர்.
இந்த
பேச்சுவார்த்தைகள்
அமைச்சர்களுக்கு
இடையிலான
கடுமையான
வாக்குவாதங்களால்
நிரம்பியிருந்தது
என்றும்,
பேச்சுவார்த்தைகளின்
முடிவில்
அவர்களால்
ஒரு
கூட்டு
அறிக்கையையும்
கூட
விநியோகிக்க
முடியவில்லை
என்றும்
ஐரோப்பிய
ஒன்றியத்
தூதரக
அதிகாரி
ஒருவர்
தெரிவித்தார்.
கிரேக்கத்தை நோக்கிய ஐரோப்பியக்
கொள்கை தொடர்பாக முக்கியமான பிளவுக் கோடு, பிரான்சுக்கும் கடன் நிவாரண ஏற்பாட்டில்
தனியார்துறை முதலீட்டாளர்களும் ஓரளவு பங்கெடுத்துக் கொள்ள எதிர்பார்க்கும்
ஜேர்மனிக்கும் இடையில் தான் இருந்து வருகிறது. ஐரோப்பிய மத்திய வங்கி, அமெரிக்க
நிர்வாகம் மற்றும் ஏராளமான பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எடுத்திருக்கும்
நிலைப்பாட்டின் வரிசையில், பிரான்சும் இத்தகையதொரு தீர்வு எதனையும் எதிர்க்கிறது.
அத்துடன்
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து
27
நாடுகளுமே கிரீஸுக்கான ஒரு புதிய பிணையெடுப்பில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும்
ஜேர்மனி வலியுறுத்தி வருகிறது.
பிரிட்டிஷ் அரசாங்கமும்,
அத்துடன் இன்னும் பல ஐரோப்பிய அரசுகளும்,
கிரீஸுக்கு இரண்டாவதான கடனுதவி ஒன்றுக்கு எந்த பங்களிப்பும் செய்வதை கண்டிப்பாய்
மறுத்து விட்டிருக்கின்றன.
இரண்டு பிரதான எதிரெதிர் நாடுகளின்
தலைவர்களும், அதாவது பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மற்றும் ஜேர்மனியின்
சான்சலரான அங்கேலா மேர்கேல் இருவரும் வெள்ளியன்று பேர்லினில் சந்தித்துப்
பேசவிருக்கின்றனர். ஏதோ ஒருவகை சமரச வழியைக் காண்பதற்கு இருவருக்குமே சந்தைகளில்
இருந்தான கடும் அழுத்தம் இருக்கிறது.
அடுத்த
வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இடையே நடக்கவிருக்கும் சந்திப்பிற்கு
முன்னோட்டமாக ஞாயிறன்று ஐரோப்பிய மண்டல நிதி அமைச்சர்கள் லுக்சம்பர்கில்
சந்தித்துப் பேசவிருக்கின்றனர்.
கிரேக்கத்திற்கு நிதியளிப்பதில் ஒரு உடன்பாடு அடைவதில் தோல்வியேற்படுமானால்,சர்வதேச
நாணயநிதியத்தால் அந்நாட்டிற்கு கிடைக்கவிருக்கும் அண்மைய ஒருபகுதி பணத்தை வழங்குவதை
அபாயத்திற்குள்ளாக்கும்.
எப்படியிருப்பினும், ஜேர்மனிக்கும்
பிரான்சுக்கும் இடையிலான எந்த சமரசமும் கிரீஸுக்கு ஒரு தற்காலிக ஆசுவாசத்தையே
வழங்கும் என்பதிலும், அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஒரு புதிய
ஐரோப்பிய மற்றும் சர்வதேச நிதி நெருக்கடியில் விளையும் என்கிற பெரும்பாலும்
தவிர்க்கமுடியாத விளைவாகவே கருதப்படுகிற ஒன்றைத் தள்ளிப் போட மட்டும் தான் முடியும்
என்பதிலும் ஏறக்குறைய எல்லா வருணனையாளர்களுமே உடன்படுகின்றனர்.
இதனிடையே,
கிரீஸுக்குள்,
ஜோர்ஜ் பாப்பன்ரூவின் தலைமையிலான ஆளும்
PASOK
தப்பிபிழைப்பதற்குப் போராடி வருகிறது.
ஒரு தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்துக்கான பாப்பான்ரூவின் ஆலோசனை நேற்று
எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரால் நிராகரிக்கப்பட்டது,
அவர் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கடந்த
சில
நாட்களில்
ஏராளமான
பிரதிநிதிகள்
கட்சி
தாவியதிலும்
பாப்பன்ரூ
அரசாங்கம்
பாதிப்புற்றுள்ளது.
அடுத்த
வாரத்தின்
ஆரம்பத்தில்
நடக்கவிருக்கும்
நம்பிக்கை
வாக்கெடுப்பில்
அரசாங்கம்
தப்பிப்
பிழைப்பதற்கு
அமைச்சரவையை
மாற்றியமைக்க
அவர்
கூறியுள்ள
யோசனைகள்
மட்டும்
போதுமானதாய்
இருக்குமா
என்பது
சந்தேகமே.
வியாழனன்று
கதிமேரினி
செய்தித்தாளில்
எழுதிய
ஒரு
பத்தியில்,
ஸ்டாவ்ரோஸ்
லைகிரோஸ்
கிரீஸின்
ஆழமுற்று
வரும்
பொருளாதார
மற்றும்
அரசியல்
நெருக்கடியை
பிரதிபலித்தார்.
கிரேக்க
மக்கள்
இன்னும்
கூடுதல்
தீவிரமயமாய்
பதிலளிப்பு
செய்ய
எழக்
கூடிய
நிலை
குறித்து
அவர்
எச்சரித்தார்.
லைகிரோஸ்
குறிப்பிடுகிறார்,
gகிரீஸ்
ஒப்பந்தத்தில்
(ஐரோப்பிய
ஒன்றியம்
-
சர்வதேச
நாணய
நிதியம்
-
ஐரோப்பிய
மத்திய
வங்கி
ஆகியவை
கிரீஸுக்கு
கடனுதவி
அளிக்க
குறிப்பிட்ட
நிபந்தனைகளுக்கு
ஒத்துக்
கொண்ட
ஒப்பந்தம்)
கையெழுத்திட்டு
மூன்று
மாதங்களுக்குப்
பிறகு....இன்று
நாடு
ஆழமான
மந்தநிலைக்குள்
மூழ்கி,
அதனை
மேலும்
மேலும்
பொருளாதார
மற்றும்
சமூக
நாசமடைந்த
நிலையில்
விட்டுச்
சென்று
கொண்டிருப்பதை
குடிமக்கள்
காண்கிறார்கள்.
நம்பிக்கை
விரக்தியால்
இடம்பெயர்க்கப்படுகிறது,
அந்த
விரக்தி
கொஞ்சம்
கொஞ்சமாய்
கோபமாய்
மாற்றமடைந்து
கொண்டிருக்கிறது.
இத்தகைய
வெடிப்புமிகுந்த
நிலைமைகளின்
கீழ்
சமூகத்தின்
கோபமானது
அமைதியான
ஆத்திரமுற்றோர்(Indignant)
இயக்கத்தின்
வழியே
பாயச்
செய்யப்படுவது
சந்தோசமான
விடயம்
தான்.
ஆனால்
அது
எவ்வளவு
காலம்
நீடிக்கும்?”
ஜோர்ஜ்
பாப்பன்ரூவின்
அரசாங்கம்
தனது
நிதிய
இலக்குகளை
எட்டுவதில்
மட்டும்
தோல்வியடையவில்லை
என்று
இந்த
பத்தியாளர்
பின்
சுட்டிக்
காட்டுகிறார்.
“வலி
மிகுந்த
நடவடிக்கைகள்
மற்றும்
சீர்திருத்தங்களுக்கான
சமூகத்தின்
பொறுமை
என்கிற
விலைமதிப்பற்ற
மூலதனத்தையும்
அது
பிரயோகித்துத்
தீர்த்து
விட்டது.”
PASOK
அரசாங்கம்
gfபெரிய
மீன்களைf
அல்லது
கொள்ளைக்
கும்பலின்
முக்கிய
ஆசாமிகளைத்
தொட
முடியவில்லை,
அதே
சமயத்தில்
ஒட்டுமொத்த
சுமையையும்
பலவீனமான
இலக்குகள்
மீது,
அதாவது
ஊதியம்
பெறுவோர்,
ஓய்வூதியதாரர்கள்
மற்றும்
உற்பத்தியாளர்கள்
ஆகியோர்
மீது
சுமத்தியது.h
லைகிரோஸ்
இறுதியாய்
எச்சரிக்கை
செய்கிறார்,
“சுமையின்
நியாயமற்ற பங்கீடு நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான கூட்டு முயற்சியின்
அடித்தளங்களை அரித்து விடுகிறது.
அதற்குப்
பதிலாய்
மக்களின்
கோபத்தையும்
ஒரு
சமூக
வெடிப்புக்கான
வாய்ப்பையும்
அதிகமாக்குகிறது.” |