WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
லிபியாவில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பிரெஞ்சு சார்க்கோசி மீது வழக்குத் தொடுக்கின்றனர்
By Antoine
Lerougetel
17 June 2011
இரண்டு
உயர்மட்ட
பிரெஞ்சு
வக்கீல்கள் Jacques Verges,
முன்னாள்
சோசலிஸ்ட்
கட்சி
மந்திரி Roland Dumas
இருவரும்
தாங்கள்
பிரெஞ்சு
ஜனாதிபதி
நிக்கோலா
சார்க்கோசி
மீது
லிபியாவில்
இப்பொழுது
நேட்டோ
இராணுவத்
தலையீட்டினால்
நடக்கும்
போரில்
இழைக்கப்பட்டுள்ள
மனித
குலத்திற்கு
எதிரான
குற்றங்கள்
பற்றி
குற்றச்சாட்டுக்களைப்
பதிவு
செய்யத்
திட்டமிட்டுள்ளதாக
அறிவித்துள்ளனர்.
மே
29ம்
தேதிலிபியாவில் நடத்தப்பட்ட செய்தியாளர்கூட்டம் ஒன்றில்அவர்கள் மே30,
திங்களன்று பிரெஞ்சு நீதிமன்றங்களில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடக்க இருப்பதாக
அறிவித்தனர்.
இந்த
அறிவிப்பைப்பற்றி அநேகமாக ஒரு முழு இருட்டடிப்பு பிரெஞ்சுச்செய்தி ஊடகத்தில்
உள்ளது.
சோசலிஸ்ட் கட்சிசார்புடையவார ஏடான
Marianne
ஒன்றுதான் டுமாவையும் வெர்ஜேயையும்
குடியரசு ஜனாதிபதியைப்பற்றிக்கொடூரமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளதற்கு
தாக்கியுள்ளது.
லிபியாவில்
ஞாயிறு
நடந்த
செய்தியாளர்
கூட்டத்தில்
டுமா
நேட்டோ
குண்டுத்
தாக்குதலைக்
குறிப்பிட்டு,
“குடிமக்களைக்
காப்பதற்கு
எனக்
கூறப்படும்
இப்பணி
அவர்களைக்
கொல்லும்
வழிவகையில்
உள்ளது”
என்றார்.
லிபியாவில்
நடக்கும்
போர்
ஒரு
இறைமை
உடைய
நாட்டிற்கு
எதிரான
மிருகத்தனமான
ஆக்கிரோஷச்
செயல்
ஆகும்”
என்றார்
அவர்.
நேட்டோ
கூட்டு
நாடு
கொலைகாரர்கள்
என்று
குறிப்பிட்ட
வெர்கே,
“பிரான்ஸ்
நாடு
குண்டர்கள்
மற்றும்
கொலைகாரர்கள்
தலைமையில்
வழிநடத்தப்படுகிறது….
இந்த
மௌனச்சுவரை
உடைக்க
நாங்கள்
விரும்புகிறோம்
என்று
கண்டித்தார்.
மருத்துவமனையில்
பல
பாதிக்கப்பட்ட
குடிமக்களைத்
தான்
பார்த்துள்ளதாகவும்,
மருத்துவர்களில்
ஒருவர்
கிட்டத்தட்ட
20,000
பாதிக்கப்பட்டவர்கள்
உள்ளனர்
என்று
கூறியதாகவும்
தெரிவித்தார்.
ஹேகில்
உள்ள
சர்வதேசக்
குற்றவியல்
நீதிமன்றத்தில்
(ICC)
கடாபிக்கு
வக்கீலாக
இருக்கும்
பொறுப்பைக்கூட
தான்
ஏற்கத்தயார்
என்று
டுமா
கூறினார்.
மே
16ம்
திகதி,
முக்கிய
மேற்கத்தையச்
சக்திகளின்
சார்பாக
ICC
யின்
வக்கீல்
கடாபிக்கு
எதிராக
மனிதகுலத்திற்கு
எதிரான
குற்றங்களுக்காக
பிடி
ஆணை
ஒன்றைக்
கோரியிருந்தார்.
சார்க்கோசி
மற்றும்
நேட்டோ
ஐ.நா.
பாதுகாப்பு
சபைத்
தீர்மானம்
1973ன்
கீழ்
குண்டுத்தாக்குதல்
நடத்தும்
அதிகாரத்தை
வினாவிற்கு
டுமா
உட்படுத்தியுள்ளர்:
இது
“செயற்கையானது
மிகவும்
செயற்கையானது
ஐக்கிய
நாடுகளை
மூடிமறைக்கும்
தன்மை
உடையது
என்று
விவரித்தார்.
போர்
குறைந்தது
செப்டம்பர்
வரை,
90
நாட்களாவது
நீட்டிக்கப்படும்
என்று
நேட்டோ
கூறியிருக்கையில்,
பிரிட்டனும்
பிரான்ஸும்
இராணுவத்
தாக்குதல்
அதிகப்படுத்தப்படும்
என்று
அறிவித்துள்ள
நிலையில்,
இந்த
வழக்கு
வந்துள்ளது.
ஏற்கனவே
இப்போரில்
லிபியத்
தலைவர்
முயம்மர்
கடாபியின்
குடும்பத்தின்
வீடுகளை
இலக்கு
வைத்து
அரசியல்
படுகொலைகளை
இலக்காகக்
கொண்ட
சில
முயற்சிகள்
நடைபெற்றுள்ளன.
பிரிட்டனின்
முன்னாள்
SAS
சிறப்புத்
துருப்புக்கள்
மற்றும்
நேட்டோ
வேலைக்கு
அமர்த்தியுள்ள
சில
கூலிப்படையினரும்
லிபியத்
துறைமுக
நகரமான
மிஸ்ரடாவில்
இலக்குகளை
அடையாளம்
காண்பதற்கு
உதவி
வருகின்றனர்.
இவர்கள்
பிரிட்டன்,
பிரான்ஸ்
இன்னும்
பிற
நேட்டோ
நாடுகளுடைய
ஆசியுடன்
அங்கு
உள்ளனர்.
அந்நாடுகள்
இவர்களுக்குத்
தேவையான
தொடர்புக்
கருவிகளை
அளித்துள்ளன.
புதிதாகப்
பயன்படுத்தப்படும்
பிரிட்டிஷ்
மற்றும்
பிரெஞ்சுத்
தாக்குதல்
ஹெலிகாப்டர்களுக்கு
இவர்கள்
தகவல்
அளிக்கக்கூடும்.
ஐ.நா.
பாதுகாப்புச்
சபைத்
தீர்மானம்
இலக்கம்
1973
இயற்றப்படுவதற்கு
பிரெஞ்சு
அரசாங்கம்தான்
முன்னின்று
முனைந்து
செயல்பட்டது.
இத்தீர்மானம்
ஒரு
அப்பட்டமான
நவ
காலனித்துவ
முறை,
ஏகாதிபத்தியத்
தலையீட்டிற்கு
மிக
நலிந்த
சட்டப்பூர்வமான
மறைப்பு
ஆகும்.
லிபியாவின்
இராணுவத்திலிருந்து
குடிமக்களைக்
காப்பதாகக்
கூறிக்கொள்ளப்
பயன்படுகிறது.
உண்மையில்
லிபியாவின்
எண்ணெய்
மற்றும்
எரிவாயு
இருப்புக்கள்
மீது
ஆதிக்கத்திற்கான
போட்டியின்
ஒரு
பகுதிதான்
இது.
அதே
போல்
பெங்காசியில்
ஒன்றிணைக்கப்பட்டுத்
தயாரிக்கப்படும்
வளைந்து
கொடுக்கும்
ஏகாதிபத்தியச்
சார்புடைய
அரசாங்கத்தை
மக்கள்
மீது
சுமத்தும்
திட்டத்தின்
ஒரு
பகுதியும்
ஆகும்.
லிபியத்
தலைவர்
முயம்மர்
கடாபியின்
மகளான
Aicha Gaddafi
க்காக
வாதாடவுள்ள
மற்ற
வக்கீல்கள்
நேட்டோவிற்கு
எதிராக
ஒரு
பெல்ஜிய
நீதிமன்றத்தில்
குற்றச்சாட்டுக்களைப்
பதிவு
செய்துள்ளனர்.
“திரிப்போலியில்
ஒரு
சிவிலிய
வீட்டை
இலக்கு
வைத்துத்
தாக்குதல்
என்பது
ஒரு
போர்க்குற்றம்
ஆகும்”
என்று
அவர்கள்
அறிவித்துள்ளனர்.
ஏப்ரல்
30ம்
தேதி
கடாபியின்
கடைசி
மகன்
மற்றும்
அவருடைய
மூன்று
மிகச்சிறிய
பேரக்குழந்தைகளைக்
கொன்ற
நேட்டோ
வான்தாக்குதலுடன்
இக்குற்றச்சாட்டு
தொடர்பு
உடையது.
இரு
வக்கீல்களும்
ஐரோப்பிய
ஒன்றிய
மந்திரிகள்
லிபிய
ஆட்சியின்
நிதிக்
கணக்குகளை
மூடவேண்டும்
என்ற
முடிவை
எதிர்த்து
லுக்செம்பர்க்கிலுள்ள
ஐரோப்பிய
நீதிமன்றத்தில்
வழக்குத்
தொடுத்துள்ளனர்.
எண்பது
வயதான
வெர்ஜே
மற்றும்
டுமா
ஆகியோர்,
நீண்ட,
நெருக்கமான
தொடர்பை
பிரெஞ்சு
அரசாங்கத்துடன்
கொண்டவர்கள்,
பிரெஞ்சு
அரசாங்கத்தின்
மற்ற
பிரிவுகளுடன்
நேரடியாக
பணி
புரிகின்றனரா
என்பது
தெளிவாகத்
தெரியவில்லை.
ஆனால்
லிபியாவில்
இராணுவத்
தலையீட்டைச்
செய்ய
வேண்டும்
என்னும்
சார்க்கோசியின்
முடிவிற்கு
பிரெஞ்சு
ஆளும்
வட்டங்களில்
தீவிர
சந்தேகங்கள்
எழுந்துள்ளன
என்பது
உறுதி.
TTU
பாதுகாப்புத்
தகவல்
மையமும்
இதுவரை
வெளியிடப்படாத
50
பக்க
அறிக்கை
ஒன்று
பற்றிக்
கருத்துக்
கூறியுள்ளது.
இது
மூன்று
வார
காலம்
லிபியாவிற்கு
உளவுத்துறை
வல்லுனர்கள்
சென்று
வந்ததற்குப்
பின்
வெளியிடப்பட்டுள்ளது.
அந்த
வல்லுனர்
குழுவிற்குத்
தலைவராக
பிரெஞ்சுத்
தேசிய
உளவுத்துறை
அமைப்பான
DST
யின்
முன்னாள்
தலைவர்
Yves Bonnet
இருந்தார். TTU
வலைத்தளக்
கருத்துப்படி,
இத்தலையீடு
1973
தீர்மானத்தை
மீறுவது
ஆகும்.
மேலும்
தற்பொழுதைய
மூலோபாயத்தின்
இதயத்தானத்திலுள்ள
கருத்து
எரிசக்தி
ஆதாரங்கள்
மீது
கட்டுப்பாடு
கொள்ளுவது
என்பதுதான்.
அமெரிக்கா
கடாபியை
அகற்ற
விரும்புவதின்
காரணம்
அது
நாட்டிலிருந்து
சீனாவை
அகற்றுவதற்குத்தான்.
Cyrenaica
மற்றும்
அதன்
எண்ணெய்
இருப்புக்கள்
திரிப்போலிக்கு
அளிக்கப்பட்டதை
ஒப்புக்
கொள்ளாத
எகிப்தும்
நாடு
துண்டாடப்பட்டால்
நலன்களை
அடையலாம்
என
நம்புகிறது.
வலைத்தளம் மேலும்கூறுகிறது: “இந்த அறிக்கைபாரிஸின் “சிந்தனையற்ற
இத்தொடர்பைக்குறித்துபீதியைவெளிப்படுத்துகிறது. பாரிஸ்
அமெரிக்கநிர்வாகத்தின்பிடிகளில்சிக்குகிறது. அதுவோ தன்கைகளை அதிகம் செயல்படுத்தாமல்
பிரான்ஸ் எல்லா இடர்களையும் எதிர்கொள்ளட்டும் என விட்டுவிட்டது.” பெங்காசியின்
மாற்றுக்காலக்குழு “தொடர்புடையசக்திகளின்நலன்களைக்காக்கமுடியுமா என்பதுபற்றியும்
தீவிரஐயங்களை எழுப்பியுள்ளது. அதிலும் உட்குறிப்பாக பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின்
நலன்கள்காக்கப்படுமாஎன
இராணுவப்
பிரிவு
விமர்சகர் Jacques Borde
பிரான்ஸ்
பயனற்ற
முறையில்
தன்
இராணுவத்
திறன்களைச்
செலவழிக்கிறது
என்று
கூறியுள்ளார்.
அதன்
அரபு
மற்றும்
மேற்கத்தையச்
சக்திகள்தான்
கொள்ளையில்
பங்கு
என
வரும்போது
அதிக
ஆதாயங்களைப்
பெறும்.
மேலும்
சோமாலி
போல்
ஆகக்கூடும்”
என்ற
ஆபத்தும்
உள்ளது.
அதாவது
நாடு
முழுவதும்
போரிடும்
பழங்குடி
மக்கள்,
போர்ப்
பிரபுக்களின்
மோதல்கள்
என்று
சிதையக்கூடும்.
இரு
வயதான
வக்கீல்கள்
நீண்டகால
அரசியல்,
சட்ட
வரலாறுகளைக்
கொண்டுள்ளவர்கள். 1922ல்
பிறந்த
டுமா
பிரான்சுவா
மித்தரெண்ட்
என்னும்
சோசலிஸ்ட்
கட்சியைச்
சேர்ந்த
பிரெஞ்சு
ஜனாதிபதியின்
(1981-1985)
நெருக்கமான
ஒத்துழைப்பாளர்
ஆவார்.
பல
PS
அரசாங்கங்களில்
மந்திரியாகப்
பணி
புரிந்திருக்கிறார்.
ஒரு
கொள்கை
இயற்றுபவராக
அவர்
இருந்ததில்லை.
ஆனால்
நிர்வாகத்திற்கு
நம்பகமான
எடுபிடியாகச்
செயல்பட்டுள்ளார்.
Françafrique
என
அறியப்பட்ட
ஆபிரிக்க
அரசாங்கங்களுடன்
பிரெஞ்சு
ஏகாதிபத்தியத்தின்
ஊழல்கள்
மலிந்த
உறவுகளில்
அவர்
ஒரு
பகுதியாக
இருந்தார். 1983ம்
ஆண்டு
அவர்
மித்திரோனின்
சிறப்புத்தூதராக
கடாபியிடம்
அனுப்பப்பட்டிருந்தார்.
அவருடைய
பணி
லிபியா
சாட்
மீது
படையெடுக்காமல்
செய்வதாகும்.
அப்பொழுது
நாட்டின்
வடக்கே
ஒரு
எழுச்சி
பிரெஞ்சுச்
சார்புடைய
அரசாங்கத்திற்கு
எதிராக
இருந்தது.
அதற்கு
ஆதரவு
கொடுக்காமல்
பார்க்க
வேண்டியது
இவர்
பொறுப்பாக
இருந்தது.
இறுதியில்
கடாபியின்
உடந்தையுடன்
அரசாங்கம்
பிரான்ஸின்
தலையீட்டால்
நிலைநிறுத்தப்பட்டது.
1995ல்
டுமா
அரசியலமைப்புக்
குழுவின்
தலைவராக
மித்திரோனால்
நியமிக்கப்பட்டார்.
இது
பிரெஞ்சு
அரசியலமைப்பு
நீதிமன்றம்
ஆகும்.
ஜனவரி
1999ல்
அவர்
Elf
ஊழல்
விவகாரத்தை
ஒட்டி
இராஜிநாமா
செய்தார்.
1925ல்
ஒரு
வியட்நாம்
தாயாருக்கும்
Réunionese
தந்தைக்கும்
Vergès
பிறந்தார்.
இவர்
மிகச்
சிறப்பாக
வாதிட்ட
வழக்குகளுள்
ஒன்று
“நரி”
எனப்பட்ட
பயங்கரவாதி
கார்லோஸ்
வழக்கு
மற்றும்
நாஜிப்
போர்க்குற்றவாளி,
ஆக்கிரமிப்புக்
காலத்தில்
“லியோயனின்
கொலைகாரன்”
Klaus Barbie
உடைய
வழக்கு
ஆகியவை
ஆகும்.
பிரஞ்சு
ஏகாதிபத்தியமும்
அதேமாதிரியான
குற்றத்தை
அல்ஜீரியாவில்
நாசிகள்
மாதிரி
செய்துள்ளதாக
அவர்
குற்றம்சாட்டினார்.
தானும்
Vergèsம்
கடாபி
ஆட்சியால்
வழக்கை
எடுத்துக்
கொள்ளுமாறு
கோரப்பட்டதாக
டுமா
ஒப்புக்
கொண்டுள்ளார்.
ஆனால்
அவர்களுடைய
உந்துதல்கள்
எப்படி
இருந்தாலும்,
பிரெஞ்சு
மற்றும்
மேற்கத்தைய
ஏகாதிபத்தியத்தின்
குற்ற
நடவடிக்கை
லிபிய
மக்களுக்கு
எதிராக
என்பது
பற்றி
அவர்கள்
தொகுக்கும்
குற்றச்சாட்டுக்கள்
சார்க்கோசி
அரசாங்கம்
மற்றும்
அதன்
ஏகாதிபத்திய
நட்பு
நாடுகளுக்கு
சங்கடங்களின்
ஆதாரமாக
இருக்கும்.
அதேபோல்தான்
PS, PCF
மற்றும்
போலி
இடதுளுக்கும்
NPA
ஆகியவற்றிற்கும்
இருக்கும்.
இவை
அனைத்தும்
லிபிய
மக்களைப்
பாதுகாப்பதற்காக
வடிவமைக்கப்பட்ட
ஒரு
“மனிதாபிமானச்
செயல்”
என்றுதான்
தலையீட்டைப்
பற்றி
பொய்யை
வலியுறுத்திக்
கூறியுள்ளன |