WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France’s New Anti-Capitalist Party continues support for war on Libya
லிபியாவிற்கு எதிரான போருக்கு பிரான்ஸில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி
ஆதரவளிக்கிறது
By Kumaran Ira
16 June 2011
கேணல்
முயம்மர் கடாபியின் ஆட்சியிடமிருந்து
“குடிமக்களைக்
காப்பாற்றுதல்”
என்ற ஏகாதிபத்திய
சக்திகளின் இழிந்த போலித்தனத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் மார்ச் மாதம்
லிபியாவிற்கு எதிராக பிரான்ஸ்,
அமெரிக்கா மற்றும்
பிரிட்டன் ஆகிய நாடுகள் போரைத் தொடங்கியபோது பிரான்ஸின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக்
கட்சி (NPA)
அதற்குத் தன்
ஆதரவைக் கொடுத்தது.
ஆனால்
ஒவ்வொரு நாள் கடக்கப்படுகையிலும் மேற்கத்தைய இராணுவத் தலையீட்டின்
ஏகாதிபத்தியத்தன்மை மிகவும் வெளிப்படையாக தெரிகிறது.
கடந்த சில நாட்களில்
நேட்டோ போர் விமானங்கள் லிபியத் தலைநகரான திரிப்போலியில் வான்வழித் தாக்குதல்களை
அதிகரித்து,
உள்கட்டுமானங்கள்,
பள்ளிகள்,
மருத்துவமனைகள்
ஆகியவற்றை அழித்து வருகின்றன.
தீவிரமாக்கப்பட்டுள்ள நேட்டோ குண்டுவீச்சுக்கள் நூற்றுக்கணக்கான குடிமக்களை
கொன்றுள்ளன.
இதில் கடாபியின்
கடைசி மகன் மற்றும் அவருடைய மூன்று பேரக்குழந்தைகள் ஏப்ரல்
30 அன்று
கொல்லப்பட்டதும் அடங்கும்—இந்த
எண்ணிக்கையில் மிக அதிகமான லிபிய இராணுவ இறப்புக்கள் சேர்க்கப்படவில்லை.
வெற்றி
கிட்டாமல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ ஆக்கிரமிப்புப் போர் தீவிரமடைந்துள்ள
நிலையில்,
ஏகாதிபத்தியப்
போருக்கு ஆதரவு கொடுத்த போலி
“இடது”
சமூக அடுக்குகள்
பெருகிய முறையில் கலங்கியுள்ளன.
குறிப்பாக இது
NPA இற்குப்
பொருந்தும்;
இதன் வலைத் தளம்
கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் போர் பற்றி முற்றிலும் மௌனம் காத்தது.
இறுதியில் இது தன்
மௌனத்தை கலைத்து ஜூன்
4ம் திகதி ஒரு
சுருக்கமான,
தெளிவற்ற கட்டுரையை
வெளியிட்டது.
மே
11ம் திகதி வெளிவந்த
கட்டுரை லிபியா பற்றிய அதன் கடைசிக் கட்டுரை ஆகும்.
“லிபியா:
நிலைமை
அழுந்தியுள்ளது”
என்ற தலைப்பில்
வந்துள்ள இக்கட்டுரை நேட்டோவின் போர் முயற்சி,
சகதிக்குள்
சிக்கியுள்ள நிலை பற்றிக் குறைகூறுகிறது.
“தன்னை வெளியேற்றிக்
கொள்ளும் விதத்தில் தள்ளி விடுவதற்கு முயம்மர் கடாபி அனுமதிப்பாரா?
இதைத்தான்
நேட்டோவும் G8
சக்திகளும் நடக்கும்
என நம்புவது போல் தெரிகிறது.”
நேட்டோ
நடத்தும் போரின் தளத்திலுள்ள உந்துதல்கள் மற்றும் மூலோபாயம் பற்றி ஒரு நிலைப்பாட்டை
எடுப்பதை
NPA தவிர்க்கும்
வகையில் எழுதுகிறது:
“ஆனால்,
இராணுவ தலையீட்டின்
நோக்கங்கள் தரை நிலைமையைப் பொறுத்தவரை அதிகம் தெளிவாக இல்லை.
முக்கியமாக கிழக்கு
லிபியாவிலுள்ள எழுச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில்
சர்வாதிகாரியின் ஆட்சியின் தாக்குதல்களை நிறுத்தும் பிரச்சினையா இது?
அல்லது கடாபியை
அகலுமாறு கட்டாயப்படுத்துவதா?
–அதற்காக அவர்
பிடிவாதத்துடன் இருந்து விலக மறுத்தால் கட்டாயப்படுத்துவதா?
நயமான
தெளிவற்றதன்மைதான் இப்பிரச்சினையைச் சூழ்ந்துள்ளது.”
இதன் பின்
NPA “கீழிருந்து
கடாபியை அகற்றுதல்,
மக்கள்
சக்திகளிடமிருந்து கட்டாயமாக அகற்றுவது என்னும் முன்னோக்கு செயலற்றுவிட்டது”
என்று குறைகூறுகிறது.
இதன்பின்
பெங்காசியில் மேற்கத்தைய சக்திகளின் ஆதரவைப் பெற்ற,
லிபியாவில்
நேட்டோவின் முக்கிய கைப்பாவை படைகள் போலுள்ள மாற்றுக்கால தேசிய சபை
(TNC)
பற்றி குறைந்த தன்மையுடைய
குறைகூறல்களை தெரிவிக்கிறது.
நேட்டோவையும்விட,
NPA இன் போர் பற்றிய
நிலைப்பாடுதான் “நயமான
தெளிவற்ற தன்மையைக்”
கொண்டுள்ளது—இன்னும்
வெளிப்படையாகக் கூறினால் இழிந்த தவிர்த்தல்களைக் கொண்டுள்ளது.
நேட்டோவின் போர்த்
திட்டங்கள் கடாபி ஆட்சியை அகற்றுவது என்பதை கொண்டுள்ளன என்பது தெளிவு.
அதற்காக பொறுப்பற்ற
முறையில் ஏராளமான லிபியக் குடிமக்கள் கொலை செய்யப்படுதலும் நிகழ்கிறது.
மறுபுறத்தில்
NPA இன்
குறைகூறல்கள் போருக்கு அக்கட்சியினர் முன்பு காட்டிய ஆரவாரம் நிறைந்த
ஒப்புதலுக்குப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் முயற்சியையும் காட்டுகின்றன.
(See: A
tool of imperialism: France’s New Anti-Capitalist Party backs war on Libya).
போருக்கு
அவர்கள் கொடுக்கும் ஆதரவு மிகத் தெளிவாக ஜில்பேர்ட் அஷ்காரால்
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருடைய அறிக்கை
NPA இன் வலைத்
தளத்தில் வெளியிடப்பட்டது.
லிபியா மீதான
நேட்டோவின் தாக்குதல் முக்கியமான
“மனிதாபிமானத்”
தலையீடு என்று
அஷ்கார் வாதிட்டுள்ளார்.
“மக்கள் உண்மையில்
ஆபத்திலுள்ள இடம் இது,
இங்கு அவர்களை
காப்பாற்ற வேறு எந்த மாற்றீடும் இல்லை….
ஏகாதிபத்திய-எதிர்ப்புக்
கொள்கைகள் என்ற பெயரில் குடிமக்கள் படுகொலை செய்யப்படும் நடவடிக்கையை எதிர்க்கக்
கூடாது.”
இந்த
அபத்தமான நிலைப்பாட்டினால்
NPA யினால்
உட்குறிப்பாக முன்வைக்கப்படும் கருத்து ஒரு ஏகாதிபத்தியப் போர் லிபியக்
குடிமக்களைப் பாதுகாக்கும்,
அதே நேரத்தில்
கடாபியின் ஆட்சி
“கீழிருந்து”
அகற்றப்படுவது
இயலும் என்பதாகும்—அதாவது
ஏதோ ஒருவகையில் ஏற்படும் வெகுஜன எழுச்சியை ஒட்டி.
இந்த பிற்போக்குத்தன
கட்டுக்கதை,
உண்மையுடன் எந்தத்
தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
லிபியாவில்
மேற்கத்தைய சக்திகள் அச்சுறுத்தும் வகையில் குண்டுத்தாக்குதல்கள் நடத்துதல்,
பெங்காசியிலுள்ள
பிற்போக்குத்தன
TNC குழுவுடன்
இணைந்த வகையில் நடத்துவது.
அதேபோல்
NPA வின்
நிலைப்பாடும் நேட்டோ சக்திகளின் விழைவுகளுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
குடிமக்களைக் காப்பாற்றுவதற்கு ஒரு போர் என்னும்
NPA இன் இழிந்த
சொற்றொடர் கையாளப்படுவதையும் மீறி,
எண்ணெய் வளமுடைய
லிபியாவிற்கு எதிரான ஏகாதிபத்திய ஆக்கிரோஷம் அவற்றின் புவிசார்-மூலோபாய
நலன்கள் மற்றும் எரிசக்திப் பெருநிறுவனங்களின் நலன்களுடன் பிணைந்துள்ளது.
தங்களை வட ஆபிரிக்க
மக்களின் காவலர்கள் என்று பெருகியமுறையில் காட்டிக் கொள்ளும் முயற்சியின் ஒரு
பகுதியே இது.
அதே நேரத்தில்
அவர்கள் அண்டை நாடுகளான துனிசியா,
எகிப்தி ஆகியவற்றில்
தொழிலாள வர்க்கப் புரட்சிகர போராட்டங்களை நசுக்க முற்படுகின்றனர்.
போருக்கு
ஆதரவு கொடுக்கையில்
NPA பிரெஞ்சு
முதலாத்துவத்தின் முக்கிய அரசியல் துணைக் கோள்களுடன் சேர்ந்துள்ளது—அதாவது
சோசலிஸ்ட் கட்சி,
பிரெஞ்சு
கம்யூனிஸ்ட் கட்சி
(PCF),
இடது கட்சி
(PG - PS ல் இருந்து
பிரிந்துவந்தது)
மற்றும் ஐரோப்பிய
சுற்றுச்சூழல் மற்றும் பசுமைக் கட்சி ஆகியவற்றுடன்.
இவை லிபியப்
போருக்கு ஒப்புதல் கொடுத்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு,
“தேசிய சபைதான்
லிபிய மக்களின் ஒரே நெறிவாய்ந்த பிரதிநிதிக்குழு என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்”
என்றும் கோரின.
இப்பொழுது
மேற்கத்தையச் சக்திகள் விரைவில் கடாபியை அகற்றுவதில் தோல்வி அடைந்துள்ள நிலையில்,
NPA இழிந்த முறையில்
ஏகாதிபத்தியத்தின் முக்கிய முன்னணியாக லிபியாவிலுள்ள
TNC ஐக் குறைகூறும்
வகையில் ஒரு “எதிர்ப்பு”
நிலைப்பாட்டைக் காண
முற்படுகிறது.
இக்குழுவோ கடாபி
ஆட்சியின் முன்னாள் மந்திரிகள்,
அல் கெய்டாவுடன்
தொடர்புடைய இஸ்லாமியவாத பயங்கரவாத சக்திகள் மற்றும் பல லிபிய பழங்குடித்
தலைவர்களால் முக்கியமாக வழிநடத்தப்படுகிறது.
TNC
யின் அரசியல் தன்மையைப்
பற்றி NPA
கணக்கில் எடுத்துக்
கொள்ளவில்லை.
மாறாக இது
TNC
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்ட கறுப்பர்கள்-எதிர்ப்புத்
திட்டங்களில் முக்கியமாகக் குவிப்பைக் காட்டுகிறது.
“எழுச்சியாளர்
பகுதியில் ஒரு சிலர் கடாபியின் கறுப்பர் கூலிப்படை பற்றி வெறித்தனமாகப் பேசி
ஆட்சியின் தாக்குதலை இனவழித் தாக்குதல்களாகக் காட்டுகின்றனர்.
கடாபி கூலிப்படைகளை
பயன்படுத்துகிறார் என்பது உண்மையானால்,
உண்மையான கறுப்பு-எதிர்
திட்டங்கள் இச்சூழ்நிலையில் பலமுறையும் தோற்றுவிக்கப்பட்டது முற்றிலும்
கண்டனத்திற்கு உரியது ஆகும்.”
ஆனால்
TNC பற்றிய
NPA
இன் குறைகூறல்கள் இழிந்தவை,
ஆதாரமற்றவை.
தொடக்கத்தில்
இருந்தே NPA, TNC
யை ஆதரித்து அது
லிபியாவில் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்தை நிலைநிறுத்தப்
போராடுகிறது எனக்கூறி வந்தது.
TNC க்கு தான்
அளிக்கும் அரசியல் ஆதரவு பற்றிய முடிவை
NPA ஒருபொழுதும்
மதிப்பீடு செய்யவில்லை.
அதபோல்
TNC
நடவடிக்கைகளுக்கான பொறுப்பு பற்றியும் மதிப்பீடு செய்யவில்லை.
மார்ச்
மாதம் போர் தொடங்கியபின்,
பிரான்ஸ் லிபிய
எதிர்ப்பிற்கு ஆயுதங்கள் கொடுக்க வேண்டும் என்று
NPA
கூறியது.
NPA உடைய அறிக்கை,
“லிபிய மக்களுக்கு
நம் முழு ஒற்றுமை உணர்வு உண்டு;
அவர்களுக்கு நாம்
தற்காப்பிற்கு வழிவகை செய்யவேண்டும்,
சர்வாதிகாரியை
அகற்றுவதற்குத் தேவையானால் ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும்,
விடுதலை,
ஜனநாயகம் ஆகியவற்றை
அடைவதற்கு அதைச் செய்ய வேண்டும்”
என்று கூறியது.
இப்பொழுது
NPA தன்
TNC க்கான ஆதரவை ஒரு
சில வெற்றுச் சொற்றொடர்கள் மூலம் மறைக்க முயல்கிறது.
அதன் கட்டுரை
“TNC வழிநடத்தும்
எழுச்சியாளர்களின் தொகுப்பிலுள்ள பலதரப்பட்ட சக்திகள்”
பற்றிக்
குறைகூறுவதுடன் “இந்த
அமைப்பு இணைத்துக் கொள்ளப்பட்ட நபர்களை உடையது”
என்றும்
குறைகூறுகிறது.
உண்மையில்
NPA, TNC இல் யார்
“இணைக்கப்பட்டனர்”
என்பதை விளக்கத்
தயாராக இல்லை.
லிபியாவில்
எழுச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பிரெஞ்சு முன்னாள் இராணுவச் சக்திகளை
வேலைக்கு அமர்த்தியிருக்கும் தனியார் நிறுவனமான
Secopex என்ற
உண்மையைத்தான் சுருக்கமாகக் கூறுகிறது.
ஆனால்
NPA இடம் இருந்து
வரும் இந்தக் கருத்து ஒருவேளை விருப்பமின்றி அது புலப்படுத்தும் கருத்தாக
இருக்கலாம்.
தான் பலமுறையும்
பாராட்டிய குழு,
ஜனநாயக விடுதலையை
வளர்க்கக் கூடிய சக்தி என்பது பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் இராணுவப் பிரிவுகளை
“வெறுமனே இணைத்துக்
கொண்டது”
என ஒப்புக் கொள்ளுகிறது.
ஆயினும்கூட,
தன் அரசியல்
மூலோபாயம் அல்லது முன்னோக்கில் முக்கிய மாற்றத்தைக் கொள்ளும் தேவையை அது உணரவில்லை.
NPA
யே பிரெஞ்சு அரசுடன்
“இணைக்கப்பட்டுள்ளது”
என்பதை அறியும்
என்பதற்கு இதைவிட நேரடியான நிரூபணத்தைக் கற்பனை செய்வது மிகவும் கடினமாகும். |