சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Thousands attend funeral of slain Sri Lankan FTZ worker

இலங்கை சுதந்திர வர்த்தக வலய தொழிலாளியின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்

By our correspondents
6 June 2011

Use this version to print | Send feedback

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடந்த வாரம் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிசார் நடத்திய தாக்குதலில் காயமடைந்து, பின்னர் உயிரிழந்த ரொஷான் சானக ரட்னசேகரவின் மரணச் சடங்கு சனிக்கிழமை அவரது கிராமத்தில் இடம்பெற்றது.

A section of the funeral
மரணச் சடங்கில் ஒரு பகுதி

பெருந்தொகையான சிப்பாய்கள் நிலை நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அநேகமான சு... தொழிலாளர்கள் உட்பட சுமார் 20,000 பேர் வரை மரணமடைந்த தொழிலாளிக்கு அஞ்சலி செழுத்தவும் மற்றும் அரசாங்கத்தின் மீதான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் நாள் முழுதும் வருகை தந்தனர். கொழும்பில் இருந்து 50 கிலோமீட்டரில் கல்லொலுவ பிரதேசத்தில் உள்ள புனித அகஸ்டீன் தேவாலயத்தில் அவரது மரணச் சடங்கு இடம்பெற்றது.

Roshen Chanaka Ratnasekera
ரொஷான் சானக ரட்னசேகர

அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதிய மசோதாவை எதிர்த்து சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நசுக்க பொலிசார் நடவடிக்கை எடுத்து இரண்டு நாட்களின் பின்னர், ஜூன் 1 அன்று 21 வயதே ஆன ரட்னசேகர மரணமானார். இந்தச் சட்டம் தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் அளவுகடந்த எதிர்ப்பு இருந்துகொண்டுள்ளது. தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிக்கு பணம் செலுத்தத் தள்ளப்பட்ட போதும் அநேகமானவர்கள் திருப்பி எதனையும் பெற முடியாதவர்களாக இருப்பர்.

கடந்த திங்களன்று வளாகத்தின் ஒரு பிரதேசத்தில் மறியலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தியதை அடுத்து 40,000 தொழிலாளர்களைக் கொண்ட முழு கட்டுநாயக்க சு... ஸ்தம்பித்துப் போனது. நீர்பீச்சு இயந்திரம், கண்ணீர் புகை, தடிகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் தொழிலாளர்களை தாக்கிய பொலிசார், ஒரு கட்டத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். 200 பேருக்கும் அதிகமானோர் கயமடைந்ததோடு பலர் கடும் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் ரட்னசேகரவின் காலில் காயமேட்பட்டது. அவரை இறாகமை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக, காயமடைந்த ஏனைய டசின் கணக்கான தொழிலாளர்களுடன், சிகிச்சையின்றி இரண்டு மணித்தியலாங்கள் இரத்தப் போக்குடன் பொலிசில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சுதந்திர வர்த்தக வலய ஆர்ப்பாட்டங்களையிட்டு தெளிவாகவே திகைப்படைந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், ரட்னசேகரவின் மரணம் மேலும் ஆர்ப்பாட்டங்களை வெடிக்கச் செய்யும் என பீதியடைந்தது. ஓய்வூதிய சட்டத்தை இடை நிறுத்திய அது, எதிர்க் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கின்றது.

ரட்னசேகரவின் பூதவுடல் அவரது குடும்பத்திற்கு கிடைத்த பின்னர், ஜூன் 2 அன்று அவரது வீட்டைச் சூழ நூற்றுக்கணக்கான படையினர் நிலை நிறுத்தப்பட்டனர். மரணச் சடங்கிற்கு முதல் நாள், தேவாலயத்தை தவிர வேறெங்கும் பூதவுடலை எடுத்துச் செல்லக் கூடாது என ஒரு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதச் சடங்குகளையும் மற்றும் ரட்னசேகரவின் சகோதரர்களில் ஒருவரின் உரைக்கும் மட்டுமே அனுமதியளித்த அவர், வேறு எவரும் உரையாற்றுவதற்கு தடை விதித்தார்.

மரணச் சடங்கு நடந்த அன்று, ஒரு இராணுவ ஆக்கிரமிப்புக்கு சமமான நிலையில் முழு கிராமமும் இருந்தது. ரட்னசேகரவின் வீட்டில் இருந்து கல்லொலுவ ரோமன் கத்தோலிக்க தேவாலயம் வரையான 500 மீட்டர் பாதையில் ஒவ்வொரு 10 மீட்டருக்கும் கனமாக ஆயுதம் ஏந்திய துருப்புக்களும் விசேட கமாண்டோ படையினரும் நிறுத்தப்பட்டிருந்தனர். அந்த தேவாலயமும் பாதுகாப்பு படையினரால் சூழப்பட்டிருந்தது. படையினர் அந்தப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து சென்றனர். இந்த நடவடிக்கையை உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர். சாதாரண உடையணிந்த இராணுவ மற்றும் பொலிஸ் புலணாய்வுப் பிரிவினரும், அதே போல் அரசாங்க-சார்பு குண்டர்களும் அங்கிருந்தனர்.

சுமார் 9.45 மணியளவில், ரட்னசேகரவின் வீட்டுக்கு திடீரென வந்த இராணுவத்தினர், குடும்ப உறுப்பினர்களின் உடன்பாடு இன்றி பூதவுடலை தேவாலயத்துக்கு எடுத்துச் சென்றனர். நான் காலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எனது சகோதரனின் பூதவுடலை கொண்டு செல்லப் போகின்றார்கள் என்று சொன்னவுடன், என்ன செய்வது என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை, என அவரது சகோதரர் மதுஷான் ரட்னசேகர விளக்கினார். அவ்வளவு காலையில் எதற்காக அவர்கள் பூதவுடலை எடுத்துச் சென்றார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, என அவரது சகோதரி உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் கிராமத்தவர்கள் ஆத்திரமடைந்தார்கள். [வடக்கில் உள்ள] மக்கள் பயங்கரவாதிகளானது தற்செயலானது அல்ல. இது போன்ற நடவடிக்கைகளுக்கு அவர்கள் நிச்சயமாக உள்ளாக்கப்பட்டிருப்பார்கள், என ஒரு இளைஞர் தெரிவித்தார். நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழர்கள் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட முறையைப் பற்றியே அவர் குறிப்பிட்டார்.

 “இந்த மரணத்தின் பின்னர், [மேல் மாகாணத்தின் முதலமைச்சர்] பிரசன்ன ரணதுங்க தனது சகாக்களுடன் இங்கு சுற்றிக்கொண்டிருந்தார். ஏதே ஒரு பிரச்சினை இடம்பெறப் போகின்றது என நாம் நினைத்தோம். சானகவுக்கு இறுதி மரியாதை செய்யும் சந்தர்ப்பம் எங்களுக்கு இல்லாமல் போனது. அரசாங்கம், இராணுவம் மற்றும் தேவாலயமும் கூட்டாகச் சேர்ந்தே இதைச் செய்தன, என இன்னுமொருவர் விளக்கினார்.

சுதந்திர வர்த்தக வலயத்தை சேர்ந்த தனது சகோதரரின் சக ஊழியர்கள் பீதியின்றி அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதால், தேவாலயத்தினுள் பூதவுடலுக்கு அருகில் அயுதம் ஏந்திய சிப்பாய்களை நிறுத்த வேண்டாம் என மதுஷான் ரட்னசேகர இராணுவத்திடம் கேட்டுக்கொண்டார். இந்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் நிகழ்வுகளில் தான் பங்கேற்க மாட்டேன் என அவர் தெரிவித்திருந்தார். இரண்டு மணித்தியாலங்களின் பின்னரே சிப்பாய்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

தேவாலயத்துக்கு வருகை தந்த சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள், ஆயுதம் ஏந்திய சிப்பாய்களின் வரிசையின் ஊடாகவே செல்ல வேண்டியிருந்தது. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் வெளியேறியவுடன், அவர்கள் ஒன்றுகூடுவதை தடுப்பதற்காக மீண்டும் வீதிக்கே திரும்பிச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டனர்.

மரணச் சடங்கில் சுமார் 5,000 பேர் இருந்தனர். எச்சரிக்கையோடு கருத்துத் தெரிவித்த மத குரு, இது ஒரு அசாதாரணமான நிலைமை என தெளிவுபடுத்தினார். நீதிமன்ற உத்தரவின் காரணமாக குடும்ப உறுப்பினர் ஒருவரின் நன்றி உரை தவிர இந்த மரணச் சடங்கில் வேறு எவரையும் உரையாற்ற என்னால் அனுமதிக்க முடியாது. சவக் குழி வரை பூதவுடலை எடுத்துச் செல்ல சானகவின் உள்ளூர் நண்பர்களை மட்டுமே என்னால் அனுமதிக்க முடியும், என அவர் கூறினார்.

மிகவும் சுருக்கமாகப் பேசிய மதுஷான் ரட்னசேகர, மரணச் சடங்கை நிகழ்த்துவதற்கு தனது குடும்பத்துக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மதச் சடங்கின் பின்னர், ரட்னசேகரவின் பேழை தேவாலய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Commandos outside the church
தேவாலயத்துக்கு வெளியில் கமாண்டோ படையினர்

மரணச் சடங்கில் பிரமாண்டமானளவு இராணுவம் நிறுத்தப்பட்டமை, தொழிலாளர்களின் அடுத்த ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படவுள்ள வழிமுறைகள் பற்றிய ஒரு கூர்மையான எச்சரிக்கையாகும். ஓய்வூதிய சட்டத்தை இடை நிறுத்தும் முடிவு ஒரு வெற்றி என தொழிற்சங்கங்கள் தெரிவித்துக்கொண்ட போதிலும், அரசாங்கம் தெளிவாகவே தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் ஆணையர் லக்ஷ்மன் ஹுலுகல்ல, சனிக்கிழமை ஊடகங்களுடன் பேசுகையில், சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையிலான கடந்த வார மோதல்களின் போது செயற்பட்ட திட்டமிட்ட கும்பலை அடையாளங் காண்பதற்காக வீடியோ, தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளில் இருந்து தகவல்களை திரட்டும் நடவடிக்கையில் தேசிய புலனாய்வுத் துறை ஈடுபடுகின்றது, எனத் தெரிவித்தார்.

ரட்னசேகரவின் மரணமும், கட்டுநாயக்கவில் பொலிசாரின் வன்முறைத் தாக்குதல்களும் ஏனைய சுதந்திர வர்த்தக வலையங்களிலும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி விட்டன.

Workers protesting at Biyagama Free Trade Zone
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் மறியலில் ஈடுபடும் தொழிலாளர்கள்

கொழும்பு புறநகர் பகுதியான பியகமவில் உள்ள சு.வ.வலயத்தில் வெள்ளியன்று சுமார் 1,000 தொழிலாளர்கள் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர். அன்சல் லங்கா, அகியோ டுபேகோ மற்றும் டெலபோ வீல் போன்ற கம்பனிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள் ரட்னசேகரவின் கொலை மற்றும் கட்டுநாயக்க சு.வ.வ. தொழிலாளர்கள் மீதான பொலிஸ் தாக்குதலையும் கண்டனம் செய்து கோஷங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

அன்சல் லங்கா தொழிலாளி ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்ததாவது: இது ஒரு கொடூரமான தாக்குதல். குற்றத்தை பொலிசார் மீது போட்டுவிட்டு அரசாங்கத்தால் சும்மா போக முடியாது. தமது உரிமைகளுக்காக அமைதியான ஆர்ப்பாட்டங்களைக் கூட மேற்கொள்ள தொழிலாளர்களை அனுமதிப்பதில்லை என்பதையே அரசாங்கம் இந்த தாக்குதலின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளது.

1994ல் அன்சல் லங்கா தொழிலாளர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தின் மீது பொலிசார் நடத்திய முன்னைய தாக்குதலை அவர் நினைவூட்டினார். பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தால் ஏற்பட்ட காயங்களால் பிரேமரத்ன என்ற தொழிலாளி உயிரிழந்தார்.

 “அராசங்கம் ஓய்வூதிய மசோதாவை இரத்துச் செய்துவிட்டதாக விடுக்கும் அறிவித்தலை நாம் நம்பவில்லை. அவர்கள் அதனை பின்னர் மீண்டும் கொண்டுவருவர். அது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி செயற்படுகின்றது. மசோதாவை நாம் தோற்கடிக்கும் வரை போராடுவோம் என அவர் கூறினார். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதாக அவர் விமர்சித்தார். அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராகவும் எமது உரிமைகளை காக்கவும் ஒரே பதாதையின் கீழ் சகல தொழிலாளர்களும் ஐக்கியப்பட வேண்டும் என அவர் கூறினார்.

சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்கமே (FTZGSWU) வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. சங்கத்தின் தலைவர் அன்டன் மார்க்கூஸ் தெரிவித்ததாவது: இந்தச் சட்டத்தை தோற்கடிக்கும் வரை நாம் போராடுவோம். சாதாரண நிலைமையை உருவாக்க வேண்டுமெனில், அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை தண்டிக்க கூடாது, வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு வெட்டுக்கள் இன்றி முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டும், தொழிலாளர்களை தாக்கியவர்களை தண்டிக்க வேண்டும் மற்றும் காயமடைந்த தொழிலாளர்களுக்கும் ரட்னசேகரவின் குடும்பத்துக்கும் நட்ட ஈடு வழங்க வேண்டும்.

ஓய்வூதிய திட்டத்தை தோற்கடிப்பதற்காகப் போராடுவதற்கு மாறாக, சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை சங்கங்கள் நிறுத்திக்கொண்டதோடு, இப்போது தமது அறிவுறுத்தல்களை மீறி வெடித்துள்ள தொழிலாளர்களின் இயக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. மார்க்கூசும் அவரது தொழிற்சங்கமும் பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய பேச்சுவார்த்தைகள் சிறிய திருத்தங்களுடன் சட்டத்தை மீண்டும் கொண்டுவரும் வியாபார கொடுக்கல் வாங்கலுக்கே வழி வகுக்கும்.

Workers marching in Ja-Ela
ஜா-எலயில் ஊர்வலம் செல்லும் தொழிலாளர்கள்

கடந்த வெள்ளிக் கிழமையும், ஜா-எலயில் உள்ள ஏகல தொழிற் பேட்டையில் இருந்து சுமார் 5,000 தொழிலாளர்கள் பொலிஸ் வன்முறைக்கும் ரட்னசேகர கொலைக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். பொலிடெக்ஸ், பொலிமேட், ஜோன் கீல்ஸ், சிங்கர், எல்பிஷ் மற்றும் லோட்ஸ்டார் டயர் ஆகிய கம்பனிகளைச் சேர்ந்த இளம் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர். இராணுவ அதிகாரிகள் எச்சரித்த போதும், அவர்கள் தொழிற் பேட்டையில் இருந்து ஜா-எல நகருக்கு ஊர்வலமாகச் சென்றதோடு உள்ளூர் பொலிஸ் நிலையத்தின் முன்னால் நின்று கோஷங்களை எழுப்பினர்.