தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா Sri Lankan SEP public meeting on Middle East uprisingsமத்திய கிழக்கு எழுச்சிகள் பற்றிய இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி நடத்தும் பொதுக் கூட்டம் 14 June 2011இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, “மத்திய கிழக்கில் வெகுஜன எழுச்சியும் நிரந்தரப் புரட்சி தத்துவமும்” என்ற தலைப்பில் பகிரங்கக் கூட்டம் ஒன்றை யாழப்பாணத்தில் நடத்தவுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பூராவும் உள்ள நாடுகள் சமூக எழுச்சிகளால் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. மே 27 அன்று, இலட்சக் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும், பெப்பிரவரி 11ல் முபாரக்கின் வெளியேற்றத்துக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக “இரண்டாம் புரட்சிக்காக” அழைப்பு விடுத்து, எகிப்தின் பிரதான நகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இராணுவ அரசாங்கம், புரட்சிக்கு ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலாக இருக்கின்றது என்பதை எதிர்ப்பாளர்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளதையே இந்த ஆர்ப்பாட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கையில் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள், அண்மையில் தொழிற் சங்கங்களை நிராகரித்துக் கொண்டு, திட்டமிடப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக பிரமாண்டமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள். அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்டகால உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட இராணுவத்தினை அங்கு நிலை நிறுத்தியதன் மூலம் எதிர்ச் செயலாற்றியது. தொழிலாளர்கள், அமெரிக்கா மற்றும் கிரேக்கம், போத்துக்கல் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடினார்கள். இத்தகைய போராட்டங்கள், சர்வதேச ரீதியில் புரட்சிகர எழுச்சிகளின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கின்றன. மத்திய கிழக்கின் நிகழ்வுகளும் அதேபோல் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் துன்பகரமான படிப்பினைகளும், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் செல்லுபடியான தன்மையை உறுதிப்படுத்தியுள்ளன. சோசலிசப் புரட்சியின் பாகமாக தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே ஜனநாயகத்துக்கான போராட்டத்தினை யதார்த்தமாக்க முடியும், என நிரந்தரப் புரட்சி தத்துவம் விளக்குகின்றது. மத்திய கிழக்கு எழுச்சிகளின் அத்தியாவசியமான அரசியல் படிப்பினைகள் மற்றும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு புரட்சிகர முன்னோக்கின் அவசியம் பற்றி சோசலிச சமத்துவக் கட்சியின் கூட்டத்தில் கலந்துரையாடப்படும். நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் இந்தக் கூட்டத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கின்றோம். கூட்டம் ஜூன் 19, ஞாயிறு பி.ப. 2 மணிக்கு யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெறும். சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் நந்த விக்கிரமசிங்க விரிவுரையாற்றுவார். |
|
|