WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
கிரேக்க அரசாங்கம் வெகுஜன எதிர்ப்பிற்கு இடையே புதிய வெட்டுக்களை அறிவிக்கிறது
By
Stefan Steinberg and Alex Lantier
13 June 2011
Use
this version to print | Send
feedback
ஐரோப்பிய
ஒன்றியம்
(EU) மற்றும்
சர்வதேச நாணய நிதியம்
(IMF)
ஆகியவற்றிடமிருந்து கடன்களைப் பெறத் தகுதியாவதற்கு புதிய சுற்று ஆழ்ந்த வெட்டுக்கள்
மற்றும் சமூகநலச் செலவுக் குறைப்புக்களை வெள்ளியன்று கிரேக்கப் பிரதம மந்திரிய
ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் அரசாங்கம் அறிவித்தது.
சர்வதேச வங்கிகள்
இனியும் கடன் கொடுக்க முன்வராததால் கிரேக்க அரசாங்கம் கடன்களைத் திருப்பிக்
கொடுப்பதற்குத் திணறுகிறது.
இத்திட்டங்களானது
2011ல்
செலவுகளை 6.5
பில்லியன் யூரோக்கள்
குறைக்கும் நோக்கத்தையும்,
2012 முதல்
2015க்குள் இன்னும்
22 பில்லியன்
யூரோக்களைக் குறைக்கும் நோக்கத்தையும் கொண்டது.
தனியார்மயமாக்குதல்
மூலம் 50
பில்லியன் பணத்தைப் பெறவும்
அரசாங்கம் முயல்கிறது.
முழு அல்லது பகுதி
விற்பனைக்காகவுள்ள பொது நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களில் கீழ்க்கண்டவை
அடங்கியுள்ளன. “ஹெலெனிக்
போஸ்ட்பாங்க்,
ஏதென்ஸ் மற்றும்
தெசலோனிகி அருகேயுள்ள பைரீயஸ் துறைமுகங்கள்,
OTE எனப்படும்
ஹெலெனிக் தொலைத்தொடர்பு,
ஏதென்ஸ் மற்றும்
தேசலோனிகி தண்ணீர் நிறுவனங்கள்,
ஹெலெனிக் பெட்ரோலிய
எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம்,
PPC எனப்படும்
மின்சக்தி நிறுவனம்,
பல துறைமுகங்கள்,
விமான நிலையங்கள்,
நெடுஞ்சாலைகள்
மற்றும் சுரங்க உரிமங்கள்.
இந்த
நடவடிக்கைகள் முன்னதாக சர்வதேச அதிகாரங்கள் மற்றும் கிரேக்க அரசாங்கம் ஒப்புக்
கொண்டதைப் போல் இரு மடங்காகும்.
இந்த முந்தைய
நடவடிக்கைகள் ஏற்கனவே கிரேக்கப் பொருளாதாரத்தில் பேரழிவு விளைவை ஏற்படுத்தியுள்ளன.
வேலையின்மை
16
சதவிகிதத்திற்கும் மேல் சென்றுள்ளது.
இந்த ஆண்டு முதல்
கால்பகுதியில் பொருளாதாரம்
5.5 சதவிகிதம்
சுருங்கிவிட்டது.
தனியார்மயமாக்கலும் வெட்டுக்களும்—சொத்து,
நுகர்வு வரி
இணைப்புக்கள் மற்றும் பொதுச்செலவுக் குறைப்புக்கள்,
சமூகநலக்
குறைப்புக்கள் ஆகியவை இணைந்த நிலை—கிரேக்கத்
தொழிலாள வர்க்கத்தை கிரேக்க மற்றும் சர்வதேச மூலதனத்தின் அப்பட்டமான
சர்வாதிகாரத்திற்கு தாழ்ந்து நிற்கும் கட்டாயத்தை ஏற்படுத்தும்.
இவை முன்னோடியில்லாத
வகையில்
சமூகச் சொத்துக்களை நிதியப்
பிரபுத்துவத்தின் கைகளில் மாற்றுவதற்கு ஒப்பாகும்.
சமூகநலச்
செலவுக் குறைப்புக்கள் இந்த ஆண்டு மொத்தம்
1 பில்லியன்
யூரோக்கள், 2012
ல்
1.5 பில்லியன்
யூரோக்கள், 2013ல்
1 பில்லியன்,
2014 ல்
790 மில்லியன்,
2015ல்
400 மில்லியன்
யூரோக்கள் என்று இருக்கும்.
பொதுத்துறை ஊதியக்
குறைப்புக்கள்
2011ல்
800 மில்லியன்
யூரோக்கள், 2012ல்
660 மில்லியன்
யூரோக்கள், 2014ல்
398 மில்லியன்
யூரோக்கள் மற்றும்
2015ல்
71 மில்லியன் என்று
இருக்கும்.
பொதுத் துறை ஊதியச்
செலவுகளில் இக்குறைப்புக்கள் பணிக்கு நியமனம் செய்வதை நிறுத்துதல்,
ஊதிய வெட்டுக்கள்
மற்றும் தற்காலிக ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களில்
50% ஐ பணிநீக்கம்
செய்வது ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும்.
நிதி
மந்திரி ஜோர்ஜ் பாப்பாக்கான்ஸ்டான்டினௌ வலதுசாரி எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக்
கட்சி
(ND)
புதிய சிக்கன நடவடிக்கையை
ஆதரிப்பதை உறுதி செய்ய,
இன்னும்
நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.
இதில் செப்டம்பர்
மாதம் இயற்றப்படவுள்ள வரிச்சட்டத்தில் வரவிருக்கும் பெருநிறுவன வரிகள்
குறைப்புக்களும் அடங்கும்.
இந்தக்
குறைப்புக்களின் பெரிய தன்மையை உணர்ந்து கொள்வதற்கு இப்புள்ளி விவரங்கள்
கிரேக்கத்தில்
11 மில்லியன் மக்கள்
தொகை,
பொருளாதாரத்தின் அளவுடன்
இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்—2010ல்
இது
305 பில்லியன் டொலர்
என்று இருந்தது.
அமெரிக்கப்
பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இது அமெரிக்காவில் செலவுக் குறைப்புக்கள் ஆண்டு
ஒன்றிற்கு 250
முதல்
385 பில்லியன்
டொலர்கள் வரை,
மற்றும் சொத்துக்கள்
விற்பனை 3
டிரில்லியன் டாலர்
என்பதற்குச் சமமாக இருக்கும்.
இதன் பொருள் ஒவ்வொரு
ஆண்டும் அமெரிக்க மூத்த குடிமக்கள் சுகாதாரத் திட்டம்,
மருத்துவ பாதுகாப்பு
ஆகியவற்றில் பாதியை ஐந்து ஆண்டுகளுக்கு குறைத்தல் மற்றும் முக்கிய
S&P பங்குச்
சந்தையிலுள்ள நிறுவனங்களில்
20 சதவிகிதத்தை
விற்றுவிடுவது என்பதாகும்.
வெட்டுக்களின் அளவு ஏப்ரல் மாதம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டு
முன்வைத்துள்ள பற்றாக்குறைக் குறைப்புக்களில் இருந்து அதிகம் விலகி இருக்கவில்லை—அவர்
அடுத்த 12
ஆண்டுகளில்
4 டிரில்லியன் டொலர்
பற்றாக்குறைகளில் குறைப்பு இருக்கும் என்றார்.
ஞாயிறன்று
பல்லாயிரக்கணக்கான மக்கள் மீண்டும் கிரேக்கம் முழுவதும் குறைப்புக்களுக்கு எதிரான
தங்கள் சீற்றத்தையும்,
முக்கிய அரசியல்
கட்சிகள் பற்றி தங்கள் எதிர்ப்பையும் காட்டும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏதென்ஸ்,
தெசலோலினிகி இன்னும்
பல நகரங்களில் “கோபமுற்றவர்கள்”
என்று
அழைக்கப்பட்டோரின் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஞாயின்று நடைபெற்ற
பெரும் எதிர்ப்புக்கள் கிரேக்கத்தின் முக்கிய நகரங்களில் இரு வாரங்களுக்கும் மேலாக
ஒவ்வொரு நாளும் கூடும் பல்லாயிரக்ககணக்கான மக்கள் தொடர்புடைய எதிர்ப்புக்களுடன்
இணைந்து நடைபெற்றன.
இந்த
எதிர்ப்புக்கள் சமீபத்திய வாரங்களில் ஸ்பெயின் முழுவதும் நகரச் சதுக்கங்களை
ஆக்கிரமித்த
கோபமுற்றோர்கள்
எதிர்ப்பை மாதிரியாகக் கொண்டவை.
ஐரோப்பா மற்றும்
சர்வதேச அளவில் நாடுகள் மீது வங்கிகள் சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான
மக்கள் எழுச்சியின் அடையாளம் ஆகும் இவை.
மக்கள்
எதிர்ப்புக்கள் மீது கட்டுப்பாட்டை மீட்டுக் கொள்ளும் முயற்சியாக கிரேக்கத்
தொழிற்சங்கங்கள் மற்றொரு ஒரு-நாள்
வேலைநிறுத்தத்தை புதன்கிழமை நடத்துகின்றன.
இந்த
வேலைநிறுத்தங்கள்,
GSEE, ADEDY
தொழிற்சங்கங்கள் என
PASOK ஆளும்
கட்சியுடன் இணைந்தவற்றால் நடத்தப்படுபவை சர்வதேச நிதியப் பிரபுத்துவத்துடன்
சேர்ந்துகொண்டு தொடர்ச்சியாக,
கடுமையான
குறைப்புக்களை நடத்தும் பாப்பாண்ட்ரூ அரசாங்கத்திடம் எவ்விதப் பாதிப்பையும்
கொடுக்கவில்லை.
ஏதென்ஸ்
நியூஸ்
என்னும் செய்தித்தாள்,
“அரசாங்கத்தின்
சிக்கன நடவடிக்கைத் திட்ட உந்துதலின் போது முற்றிலும் ஓரம் கட்டப்பட்ட
தொழிற்சங்கங்கள்,
கட்சியில்
எப்படியும் நுழைய முற்படுகையில் தங்கள் கொடிகளையும் கொண்டுவருமாறு
வலியுறுத்தப்பட்டன.
பொதுத் தொழிலாளர்கள்
சங்கம் கடந்த வாரம் மற்றும் ஒரு
24 மணி நேரத் தேசிய
வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு கொடுத்திருக்கும் முடிவு,
இப்பொழுது ஜூன்
15ல் என்பது,
போராட்டத்திற்கு
மக்கள் கொடுத்த அழைப்பிற்கு ஏற்பட்ட பொறாமையைத்தான் காட்டுகிறது.”
வெட்டுக்களை
எதிர்க்கையில் தொழிலாள வர்க்கம் கிரேக்கத்திலும் சர்வதேச அளவிலும் முழு அரசியல்
மற்றும் நிதிய ஸ்தாபனத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது—இந்த
நிலைமையில் புரட்சிகர உட்குறிப்புக்கள் உள்ளன.
கிரேக்கத்தில் நிகழும் ஆர்ப்பாட்டங்களின் புதிய தன்மை
Public Issue
கருத்துக் கணிப்பு அமைப்பின் நிர்வாக இயக்குனர்
Yiannis Mavris உடைய
கருத்தை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.
மாவ்ரிஸ்
குறிப்பிடுகிறார்:
“ஆளும் கட்சிகள்
மற்றும் தற்போதைய தலைமுறை அரசியல்வாதிகள் பரந்த முறையில் சமூகத்தால்
நிராகரிக்கப்பட்டுள்ளது பரந்த சமூகத் திரட்டிற்கு வழிவகுக்கிறது.
கடந்த மாதம்
அனைத்துவித நிகழ்வுகள் மற்றும் சமூக எதிர்ப்பு வகைகளில் கலந்து கொண்ட மக்களின்
எண்ணிக்கை 12ல்
இருந்து 25
சதவிகிதமாக இரு
மடங்கிற்கும் மேலாகப் போயிற்று.
இது கிட்டத்தட்ட
2.2 மில்லியன்
மக்கள் என்ற பொருளைத் தரும்.
மாவ்ரிஸின்
கருத்துக்களுக்கு
கதிமெரினி
நாளேட்டின் சார்பாக அவருடைய
Public Issue
அமைப்பு நடத்திய கணிப்பீடு ஒன்று ஆதரவைத் தருகிறது.
இந்தக் கணிப்பீடு
கேள்வி கேட்கப்பட்டவர்களில்
27
சதவிகிதத்தினர்தான் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தேர்தலில்
வாக்களிக்கத் தயாராக உள்ளனர் என்று கண்டறிந்துள்ளது.
PASOK நவம்பர்
2009ல் அது பெற்ற
வாக்குகளோடு ஒப்பிடுகையில்
17 சதவிகிதம் ஆதரவை
இழந்துள்ளது.
கன்சர்வேடிவ்
ND புதிய கருத்துக்
கணிப்பில் PASOK
ஐ விட
4% அதிக ஆதரவைக்
கொண்டுள்ளது.
ஆனால் அதன் ஆதரவும்
2.5 சதவிகிதப்
புள்ளிகள் குறைந்து
31 என உள்ளது.
இதே
கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட மாதிரி வாக்களார்களில் முக்கால் பகுதியினர்
(74%) PASOK அல்லது
ND இரண்டில் எதுவுமே
நாட்டைச் சரியாக ஆளாது என நம்புவதாகத் தெரிவிக்கிறது.
82 சதவிகிதத்தினர்
தங்கள் வாழ்வில் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்,
87 சதவிகிதத்தினர்
நாடு தவறான திசையில் செல்வதாக நினைக்கின்றனர்.
இந்தச்
சூழ்நிலையில்,
சர்வதேச நிதிய
அமைப்புக்கள் முற்றிலும் நிபந்தனையற்ற சரணாகதி வங்கிகளின் கோரிக்கைகளுக்கு தேவை என
அழுத்தம் கொடுக்கின்றன.
கிரேக்கத்திற்கான
IMF ன் மூத்த
பிரதிநிதி Bob
Traa, “கிரேக்கம்
நெருக்கடியான கட்டத்தில் உள்ளது,
வீணடிப்பதற்கு நேரம்
இல்லை,
தாமதப்படுத்தும் நேரமும்
அல்ல இது”
என்று கூறியுள்ளார்.
அதே
நேரத்தில்,
IMF இந்த மாதம்
கொடுக்கப்பட வேண்டிய கிரேக்கத்திற்கான அடுத்த தவணைக் கடன் ஐரோப்பிய நாடுகள்
கிரேக்கத்தின் ஆழ்ந்துவரும் பொருளாதாரச் சரிவு குறித்து கொண்டுவரும் நீண்ட காலத்
திட்டத்தைப் பொறுத்து இருக்கும் என்றார்
Bob Traa. “ஐரோப்பாவில்
(ஜூன் மாதத்தில்)
நாடுகளின்
தலைவர்களுடைய உச்சிமாநாடு நடக்கும்,
அங்கு கடினப்
பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு சில முடிவுகள் வரும் என நம்புகிறேன்”
என்றார்.
கிரேக்க
கடன் மறுகட்டமைப்பது குறித்த எத்திட்டத்தையும்
Bob Traa
எதிர்க்கிறார்.
ஏனெனில் பெரிய
வங்கிகளும் கிரேக்கக் கடன் பத்திரங்கள் வைத்திருப்போரும் பெரும் இழப்பிற்கு அதனால்
உட்படுவர் என்றார் அவர்.
கிரேக்கக்
கடன் திருப்பிக்
கொடுக்கப்படுவதில் தவறு ஏற்படும் என்று ஜேர்மனிய அரசாங்கம் கூறியுயுள்ளது—பெரும்
சமூகநலக் குறைப்புக்களுக்கு ஈடாக கடன்கள் பெறப்பட்டன.
ஜேர்மனிய நிதிய ஏடான
Handelsblatt
உடைய
கருத்துப்படி கிரேக்கத்தில் வருங்காலம் பற்றி முக்கிய ஐரோப்பிய சக்திகளிடையேயுள்ள
கருத்து வேறுபாடுகள் மிகவும் ஆழ்ந்ததன்மை உடையவை,
அதையொட்டி
யூரோப்பகுதி நிதி மந்திரிகள்,
ஜூன்
20ல் கூட
இருப்பவர்கள்,
கிரேக்கத்திற்கு
இன்னும் கடன் கொடுப்பது பற்றி உடன்பாடு காண்பதில் தோல்வி அடைவர் என்று
கூறப்படுகிறது.
உடன்பாடு
காண்பதில் தோல்வி என்பது,
கிரேக்கத்திற்கு
IMF கொடுக்க
இருக்கும் கடன் பற்றிச் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதையொட்டி முழு
ஐரோப்பிய நிதிய முறையுமே கொந்தளிப்பில் தள்ளப்படலாம்.
சிக்கனக்
கொள்கைகளின் எதிர்ப்புரட்சி உட்குறிப்புக்களின் மற்றொரு அடையாளமாக கிரேக்கத்தில்
இராணுவரீதியான ஆட்சி மாற்றம் மற்றும் உள்நாட்டுப் போர் ஏற்படலாம் என்றும் அதிகமாகப்
பேசப்படுகிறது.
ஜேர்மனிய
Bild
செய்தித்தாளின்
கருத்துப்படி அமெரிக்க
CIA கிரேக்கத்தில்
இப்பொழுது சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள் சமூகப் பூசலை விரிவாக்கி ஒரு கட்டாய
ஆட்சி மாற்றத்திற்கு வகை செய்யலாம் என்று ஒரு அறிக்கையில் எச்சரித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
1967ல் இருந்து
1974 வரை கிரேக்கம்
ஒரு இராணுவ ஆட்சிக் குழுவின் கீழ் ஆளப்பட்டது.
இக்கட்டுரை ஏதென்ஸ்
நகர மேயர்
Giorgod Karninis ஐ
மேற்கோளிட்டு கிரேக்க உள்நாட்டுப் போர் பற்றிக் குறிப்பிடுவதாவது.
“மிகக் குறுகிய
காலத்தில் ஏதென்ஸ் லெபனானின் தலைநகரமான பெய்ரூட் எழுபதுகளில் இருந்ததைப் போன்ற
நிலையில் தள்ளப்படும் அபாயம் உள்ளது.” |