சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Chancellor Merkel visits the US

ஜேர்மன் சான்ஸ்லர் மேர்க்கெலின் அமெரிக்க விஜயம்

By Stefan Steinberg 
10 June 2011

Use this version to print | Send feedback

ஜேர்மனியச் சொற்றொடரான ‘Zuckerbrot und Peitsche’ என்பதின் பொதுவான மொழிபெயர்ப்பு சற்றே முழுமையற்றகாரட்டும் தடியும் என்பதாகும். Peitsche என்பது ஒரு சாட்டையே ஒழிய தடி அல்ல. ஆயினும்கூட 19ம் நூற்றாண்டின் ஜேர்மனிய சான்ஸ்லர் ஒட்டோ வொன் பிஸ்மார்க்கினால் இச்சொற்றடர் அதிகம் பரப்பப்பட்டது; இதுதான் இப்பொழுது ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் புதன் கிழமை முடிவுற்ற மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தை விளக்குவதற்கு மனதில் உடனடியாக எழுகிறது.

அமெரிக்க மற்றும் ஜேர்மன் நாட்டுத் தலைவர்கள் ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் சான்ஸ்லர் மேர்க்கெல் இருவரும் புகைப்படக் கருவிகளுக்காக கடமையுணர்வுடன் சிரித்து பொது மக்கள் திருப்திக்காக ஒருவர்மீது ஒருவர் நிறைய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

செவ்வாயன்று ஒபாமா காரட்டுக்களை முன்வைத்தார். வெள்ளை மாளிகை ரோசா மலர்த் தோட்டத்தில் ஒரு இரவு விருந்தில் மேர்க்கல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 19 துப்பாக்கி வேட்டுக்கள் முழக்கத்தை மரியாதையைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதியின் சுதந்திரப் பதக்கத்தை ஒபாமாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்தச் சிறப்பைப் பெற்ற இரண்டாம் ஜேர்மனிய அரசியல் வாதியாக மேர்க்கெல் உள்ளார்.

இந்நிகழ்வில் தன்னுடைய உரையில் ஒபாமா ஜேர்மனியுடனான அமெரிக்கக் கூட்டுஇன்றியமையாதது என்று அறிவித்தார். இதற்கு இணையாக விடையிறுக்கையில் மேர்க்கெல்ஐரோப்பாவும் ஜேர்மனியும் அமெரிக்காவைவிடச் சிறந்த பங்காளியைக் கொள்ளவில்லை என்றார். ரோசாத் தோட்டத்தில் மாலை நிகழ்வு மூத்த மக்கள் பாடகர் ஜேம்ஸ் டெலர் “You’ve got a friend” என்பதைப் பாடியதுடன் நிறைவுபெற்றது.

திங்கள் மாலை ஒபாமாவும் மேர்க்கெலும் பிரத்தியேக வாஷிங்டன்  உணவகமான 1789ல் தனி உணவு அருந்தினர். அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து, பிரான்ஸுடன் அவருடைய தற்பொழுதைய உறவுகள் ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜேர்மனியுடையதைவிட சிறப்பாக உள்ளது என்பதை அதிக சூட்சுமம் இல்லாமல் உணர்த்தப்பட்ட செயல் இது.

உண்மையில், திரைக்குப் பின்னால் இன்னும் அப்பட்டமான விவாதங்கள் நடைபெற்றன; இதில் அமெரிக்க ஜனாதிபதி தன் தடியை வைத்து மிரட்டவும் ஜேர்மனிய சான்ஸ்லர் பல முக்கியமான பிரச்சினைகளில் அமெரிக்காவுடன் இன்னும் கூடுதலான உறுதிப்பாடு கொண்ட முடிவுகளை எடுக்குமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டார்.

அமெரிக்காவின் ஜேர்மனியுடனான பெருகிய அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட Brookings Institution உறுப்பினர் ஒருவரான Fiona Hill மேர்க்கெலின் பயணத்திற்கு முன், “இப்பொழுது வாஷிங்டனில் உள்ள கருத்து அமெரிக்காவுடனான நட்பு ஒன்றும் ஜேர்மனியின் உயர்ந்த முன்னுரிமையாக இல்லை என்பதுதான் என்றார்.

இரு போருக்குப் பிந்தைய பங்காளிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளின் பட்டியல் நீளமாக உள்ளது, அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க நிர்வாகம் பலமுறை ஜேர்மனியை அதன் பொருளாதாரக் கொள்கை பற்றி குறைகூறியுள்ளது; குறிப்பாக மிகச் சமீபத்தில் லிபியாவிற்கு எதிரான நேட்டோப் போரில் அமெரிக்க இராணுவ மூலோபாயத்திற்கு ஆதரவு  கொடுக்காததற்கும்.  

அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர் பலமுறையும் ஜேர்மனிய ஏற்றுமதி உபரிகள் பற்றி சர்வதேச நிதி மந்திரிகள் கூட்டங்களில் தொடர்ச்சியாகக் குறைகூறி வந்துள்ளார். பல முறையும் ஜேர்மனிய அரசாங்கம் உள்நாட்டுத் தேவைக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும், இன்னும் உறுதியாக நலிவுற்றிருக்கும் ஐரோப்பிய பொருளாதாரங்களான கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்கு உதவ வேண்டும் என்று தெளிவாக்கியுள்ளார்.

தன்னுடைய பங்கிற்கு ஒபாமா நேரடியாக வாஷிங்டனில் மேர்க்கலுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் ஐரோப்பிய நெருக்கடி பற்றிக் கூறினார். “கட்டுப்பாட்டிற்கு அடங்காத அதிகரித்துவரும் கடன்கள் திருப்பிக் கொடுக்காத் தன்மையும் ஐரோப்பாவில் நிலவினால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்குபேரழிவு தரக்கூடிய விளைவுகள் ஏற்படும் என்று ஜனாதிபதி எச்சரித்தார்.

இவருடைய கருத்துக்கள் ஐரோப்பியச் செய்தி ஊடகத்தால் யூரோ நெருக்கடியை ஜேர்மனிய அரசாங்கம் எதிர்கொண்டுள்ள முறை பற்றிய விமர்சனமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கிரேக்கக் கடன் மறுகட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாதிடும் வடக்கு ஐரோப்பிய நாடுகள் குழுவில் ஜேர்மனி முன்னணியில் உள்ளதுஇச்செயற்பாடு நிதிச் சந்தைகளால் கடன் திருப்பிக் கொடுக்க இயலாத நிலை என்றுதான் கருதப்படும்.

கிரேக்கப் பத்திரங்களை வைத்துள்ள சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முழுப் பணமும் கொடுக்க உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்னும் ஐரோப்பிய மத்திய வங்கியுடன் அமெரிக்க நிலைப்பாடு இணைந்து உள்ளது, இந்த நிலைப்பாடு தவிர்க்க முடியாமல் ஜேர்மனி கிரேக்கத்திற்கும் பிற நாடுகளுக்கும் இன்னும் கூடுதலாக நிதி கொடுக்கச் செய்யும்; அதையொட்டி அது கூடுதல் இழப்புக்களைப் பெறும்.

இரு நாடுகளுக்கும் இடையே மோதலுக்கு உரிய மற்றொரு விவகாரம் இராணுவக் கொள்கை பற்றியதாகும். பல ஆண்டுகளாக அமெரிக்க நிர்வாகமும் அதன் இராணுவ உயர் கட்டுப்பாடும் ஜேர்மனி அமெரிக்கத் தலைமையிலான இராணுவச் செயல்களுக்கு கூடுதல் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றன; குறிப்பாக ஆப்கானிஸ்தானத்தில் நடக்கும் போரில். ஆப்கானிஸ்தானத்தில் எழுச்சிச் சக்திகள் புத்துயிர் பெற்றுவருவதை எதிர்கொண்டுள்ள மற்றும் உள்நாட்டில் போருக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், வெள்ளை மாளிகை ஜேர்மனி தன் படைகளை ஒருவேளை திரும்பப் பெற்றால் ஏற்படக்கூடிய விளைவு பற்றி எச்சரிக்கை அடைந்துள்ளது. ஏனெனில் இது மற்ற நாடுகளையும் போரில் இருந்து விலகச் செய்து அமெரிக்கா மட்டுமே போரில் இருக்கும் என்ற நிலையைத் தோற்றுவிக்கும்.

வட ஆபிரிக்காவிலும் பல அரபு நாடுகளும் புதியப் போர்க்களங்களை எதிர்கொள்ளும் நிலையில், ஒபாமா நிர்வாகம் ஐரோப்பிய நாடுகள், ஜேர்மனியின் முன்னணியில், தங்கள் இராணுவ ஈடுபாட்டை ஆப்கானிஸ்தானத்தில் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

தன்னுடைய பங்கிற்கு மேர்க்கெல் அரசாங்கம் அத்தகைய ஈடுபாட்டிற்கு எதிராக ஜேர்மனிக்குள் பெரும் மக்கள் எதிர்ப்பைச் சந்திக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் சமீப நாட்களில் இன்னும் நான்கு ஜேர்மனிய படையினர்கள் இறந்துள்ளது, பலர் காயமுற்றது ஆகியவை இப்பகுதியில் ஜேர்மனியில் பங்கு பற்றிய உள்நாட்டுச் சீற்றத்திற்கு எரியூட்டியுள்ளது.

அமெரிக்க இராணுவ மூலோபாயத்துடன் இணைந்து செயற்படாமல் ஜேர்மனி இருப்பதில் அமெரிக்காவின் அதிருப்தி, அமெரிக்காவின் லிபிய மூலோபாயத்திற்கு ஆதரவாக பேர்லின் வாக்களிக்க மறுத்ததில் வெடித்தெழுந்தது. ஜேர்மனிய வெளியுறவு மந்திரி ரஷ்ய மற்றும் சீன வெளியுறவு மந்திரிக்களுடன் சேர்ந்து லிபியாவில்பறக்கக்கூடாத பகுதியைச் சுமத்தும் பிரச்சினையில் வாக்களிக்காமல் இருந்தது அமெரிக்க அதிகாரிகளால் ஒரு நேரடி அவமதிப்பாகக் கருதப்பட்டது. ஏப்பிரல் மாதக் கடைசியில் நடந்த தனிக் கூட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் லிபியப் போர் பற்றி ஜேர்மனி கலந்து கொள்ளாமல் இருந்ததற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஜேர்மனி பாதுகாப்பு மந்திரி Thomas de Maiziere ஐ கடுமையாகச் சாடினார்.

கேட்ஸின் கருத்துக்கள் அமெரிக்க வெளிவிவகார செயலர்  ஹில்லாரி கிளின்டனால் எதிரொலிக்கப்பட்டன; அவர் பேர்லினுள்ள அமெரிக்க உயர்கல்விக்கூடத்தில் ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்தில், “பெங்காசி என்று அழைக்கப்படும் இடத்தில் மற்றொரு செப்ரினிகாவிற்காக (Srebrenica-கொசவோ) உலகம் காத்திருக்கவில்லை என்றார். கிளின்டனுடைய கருத்துக்கள் பரந்த அளவில் லிபியாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு ஜேர்மனி ஒப்புதல் கொடுக்க மறுப்பதற்கு ஒரு குறைகூறலாகக் கருதப்பட்டது.

ஜேர்மனியுடனான அமெரிக்க அதிருப்தி சமீபத்தில் Deauville இல் நடைபெற்ற G8 உச்சிமாநாட்டின்போதும் வெளிப்பட்டது. ஒபாமா  ஆக்கிரோஷடத்துடன் லிபியப் போருக்கு ஆதரவாக உள்ள பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் தனிப்பட்ட பேச்சுக்கள் நடத்தினார். ஆனால் ஒபாமா மேர்க்கெலை பொருட்படுத்தவில்லை. கடைசியில் ஐரோப்பாவிற்குத் தன் சுருக்கமான பயணத்தில் ஒபாமா குறிப்பாக பேர்லினைத் தவிர்த்து அவர் கடைசியாகப் பயணித்த போலந்திற்கு அந்நாட்டின் மீது பறந்து சென்றுவிட்டார்.

பொருளாதார மற்றும் இராணுவப் பிரச்சினைகள் வாஷிங்டன் மற்றும் பேர்லினுக்கு இடையே வேறுபாடுகள் பட்டியலில் மேல் இடத்தில் இருந்தாலும், அவை மட்டுமே முரண்பாடுக்கான மூலகாரணங்கள் அல்ல. அமெரிக்க நிர்வாகம், ஜேர்மனியின் ஈரானுடனான வணிக உறவுகள் பற்றிப் பெரிதும் குறைகூறுகிறது; மேலும் ஜேர்மனிய-ஈரானிய வணிகம் மற்றும் நிதி உறவுகள் மூடப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது. பல சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் ஜேர்மனி மேற்கொண்டுள்ள நிலைப்பாடு பற்றியும் வாஷிங்டன் ஆக்கிரோஷத்துடன் தாக்கியுள்ளது. மிகச் சமீபத்தில் ஜேர்மனிய அரசாங்கத்தின் அணுசக்தி மூலம் விசை என்பதை படிப்படியாக அகற்றுவிடுவது குறித்த முடிவும் இதில் அடங்கும்.

எப்படியும், ஐரோப்பிய நிதி நெருக்கடி குறித்த ஒபாமாவின் கருத்துக்களைத் தவிர, இந்த வேறுபாடுகள் எவையும் பகிரங்கமாக சான்ஸ்லரின் அமெரிக்கப் பயணத்தின்போது இரு தலைவர்களாலும் பகிரங்கமாகப் பேசப்படவில்லை. மாறாக இறுதி அறிக்கைகளும் பேச்சுக்களும் மேர்க்கெலும் ஒபாமாவும் பல பிரச்சினைகளில் உடன்பாட்டைக் கண்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளது. ஜேர்மனியின் சான்ஸ்லர் ஒபாமாவிடம் ஜேர்மனி தன் ஆப்கானிய மூலோபாயத்தை, படைகள் திரும்பப் பெறுவது உட்பட அமெரிக்க இராணுவ உயர்மட்டத்துடன் முறையாக ஒருங்கிணைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இதைத்தவிர, மேர்க்கெல் மற்றும் ஒபாமா இருவரும் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்பதற்கு ஒன்றுபட்ட மூலோபாயத்தை வெளிப்படுத்தி, ஒருதலைப்பட்சமாக ஒரு பாலஸ்தீனிய நாடு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் மூலம் கொண்டுவரப்பட வேண்டும் என முயற்சிக்கும் பல நாடுகளையும் எதிர்த்தனர்.

உள்நாட்டில் மேர்க்கெல் பெருகிய அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கிறார். சான்ஸ்லர் தலைமையில் உள்ள கன்சர்வேடிவ் கூட்டணி பேர்லினுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த அழுத்தங்களை ஏற்படுத்தி பல கொள்கைகள் பற்றிய உள் எதிர்ப்புக்களினால் முறிந்து வருகிறதுயூரோ நெருக்கடியை ஜேர்மனி கையாண்ட முறை, மற்றும் அரசாங்கத்தின் விசை மற்றும் இராணுவக் கொள்கை போன்றவை. பெருகிய முறையில் உள்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட மேர்க்கெல் அமெரிக்காவிடம் இருந்து புகைப்படங்கள், மற்றும் நட்பை வெளிப்படுத்தும் அறிக்கைகள் குறித்துப் பெரிதும் நன்றி உணர்வுடன்தான் இருப்பார்.

ஆனால் ஒரு நீடித்த கால நிலைப்பாட்டில், மேர்க்கெல்லின் மூன்று நாள் பயணம் இரு அட்லான்டிக் கடந்த பங்காளிகளுக்கும் இடையே பெருகியுள்ள பிளவை முடிவிற்குகொண்டுவர இயலாது. சக்தி வாய்ந்த பொருளாதார, மற்றும் மூலோபாய பூகோள-அரசியல் சக்திகள் இரு நாடுகளையும் வெவ்வேறு திசைகளில் தள்ளுகின்றன.

அமெரிக்கத் தொழில்துறை மற்றும் வணிகம் கடந்த இரு தசாப்தங்களில் ஆழ்ந்த சரிவை அடைந்திருக்கையில், ஜேர்மனி ஐரோப்பாவில் தன் முக்கிய நிலைமையைப் பயன்படுத்தி சர்வதேசச் செல்வாக்கை விரிவாக்கிக் கொண்டுள்ளது. ஏற்கனவே 1990களின் தொடக்கத்தில் ஜேர்மனி அமெரிக்காவைவிட ஏற்றுமதிகளில் உயர்ந்த இடத்தைப் பிடித்து, சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தாற்போல் நின்றது.

அமெரிக்காவுடனான இன்னும் சமீபத்திய ஜேர்மனிய வணிகப் புள்ளி விவரங்கள் ஜேர்மனிக்கு ஆதரவாக பெரும் வணிக இருப்பு உள்ளதைக் காட்டியுள்ளன; சில அமெரிக்க வர்ணனையாளர்கள் விகித முறையில் (அதாவது நாட்டின் தரத்தை ஒட்டி) அமெரிக்கப் பற்றாக்குளை ஜேர்மனியுடன், சீனாவுடனான அதன் தற்போதைய பற்றாக்குளையைவிட அதிகமானது என்று குறைகூறியுள்ளனர்.

அதே நேரத்தில், ஜேர்மனி பெருகிய முறையில் தன் கவனத்தை கிழக்கு மற்றும் பசிபிக் பகுதிப் புறம் ஏற்றுமதிகள், முதலீடுகள் ஆகியவற்றில் செலுத்துகிறது. அங்கு இது அமெரிக்காவை வணிகப் போட்டி நாடாக எதிர்கொள்கிறது. குறிப்பாக ஜேர்மனிய வணிக விரிவாக்கம் சீனாவில் வியத்தகு முறையில் பெருகியுள்ளது. 2010ன் முதல் 10 மாதங்களில் ஜேர்மனி சீனாவிற்கு விற்பனை செய்தது 2009 ஆண்டின் முழு அளவைவிட 17% அதிகம் ஆகும், 2007 ல் இருந்ததை விட 47% அதிகம் ஆகும். கடந்த தசாப்தத்தில் எந்தப் பெரிய, பணக்காரப் பொருளாதாரமும் சீனாவுடனான ஏற்றுமதிகளை இவ்வளவு விரைவாக அதிகப்படுத்தியதில்லை.

இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவை அடுத்து, பொருளாதார அளவில் வலுவிழந்த, பிளவடைந்த ஜேர்மனி அமெரிக்க கூறியபடி அதன் பின்னர் நடந்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தது. மேற்குடன் அதாவது அமெரிக்காவுடன் ஜேர்மனியின் கூட்டு அதன் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூணாக இருந்து, அங்கிருந்த அனைத்துக் கட்சிகளாலும் தழுவப்பெற்றிருந்தது. இப்பொழுது அரை நூற்றாண்டிற்குப் பின்னர், ஒரு புதிய, பொருளாதாரரீதியாகச் சக்தி வாய்ந்த, கூடுதலான தன்னுணர்வு பெற்றுள்ள ஜேர்மனி வெளிப்பட்டுள்ளது; தன் நண்பர்களைத் தானே விரும்பித் தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டும் என்று கோருகிறது.

இவ்விதத்தில் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திற்கு முக்கிய பிரச்சினை உண்மையான சுயாதீன இராணுவக் கொள்கையை நடத்துவதற்குத் தேவையான இராணுவ வலிமையைப் பெறுதல் என்று உள்ளது. தன்னுடைய சொந்த ஏகாதிபத்திய போர்கள், ஆக்கிரமிப்புக்ளையும் நடத்த அது உதவும் எனக் கருதுகிறது. இத்திசையில் செல்லத் தேவையான மிக முக்கியமான படிகளான தொழில்நேர்த்தி உடைய இராணுவத்தைத் தோற்றுவித்தல், தனது சொந்த கட்டுப்பாட்டு தலைமையகத்தை கொண்டிருத்தல் என்பது பற்றி ஏற்கனவே அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவிட்டன.