WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
Western powers fashion a puppet regime for Liby
லிபியாவில் ஒரு கைப்பாவை ஆட்சியை உருவாக்க மேற்கத்தைய சக்திகள் முயற்சி
By
Peter Symonds
10 June 2011
நேட்டோவின்
குண்டுத் தாக்குதல்கள் தொடர்கையில்,
நேற்று அபு தாபியில்
அமெரிக்காவின் லிபிய தொடர்புக் குழு மற்றும் அதன் நட்பு அமைப்புக்களை சந்தித்து,
கேணல் முயம்மர்
கடாபியின் ஆட்சிக்கு பதிலாக ஒரு வாடிக்கை ஆட்சியை அங்கு அமைக்கும் திட்டங்கள் பற்றி
விபரமாக பேசியது.
லிபியாவில்
ஜனநாயகத்தை நிறுவுதல் என்ற மேற்கத்தைய நாடுகளின் பிரச்சாரம் ஒருபுறம் இருக்க,
கடாபி இறுதியில்
பதவியிலிருந்து அகற்றப்பட்டால் நாட்டில் பெருங்குழப்பம் ஏற்படும் என்னும் அச்சங்கள்
தெளிவாக உள்ளன.
தன்னைத்தானே
நியமித்துக் கொண்டிருக்கும் மாற்றுக்காலத் தேசியக் குழு
(TNC),
முன்னாள் கடாபி மந்திரிகள்,
இஸ்லாமியவாத
தலைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்துள்ள நபர்களைக் கொண்டுள்ளதுடன்,
அதிகமாக வெளிநாட்டு
உதவியை நம்பியுள்ளது,
குறைந்த அளவே மக்கள்
ஆதரவை கொண்டுள்ளது.
நேற்றைய
கூட்டத்திற்கு முன் பேசிய பிரிட்டனின் மத்திய கிழக்கு மந்திரி ஆலிஸ்டர் பர்ட்
மேற்கத்தைய சக்திகள் கடாபியின் வீழ்ச்சி
“ஒரு சர்வாதிகார
சமூகத்தில் திடீரென ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும்”
என்ற ஆபத்தைக்
கொண்டுள்ளது பற்றி
“மிக அதிகமான முழு
நனவுடன் உள்ளது”
என்று கூறினார்.
ஈராக்கில்
அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்பை தொடர்ந்து பேரழிவைக் குறிப்பிட்ட பர்ட்,
“முக்கியமாக
ஈராக்கில் நடந்தவற்றில் இருந்து,
சில படிப்பினைகள்
கற்றுக் கொள்ளப்பட்டன என்று நாம் நம்புகிறோம்.
எப்படி நாம் சமூக
ஒழுங்கு,
சமூக அதிகாரத்தை காப்பது
என்பது பற்றியும்,
இதையொட்டி
சக்தியில்லாத உணர்வு ஏற்பட்டுவிடக்கூடாது,
மோசமான நிகழ்வுகள்
ஏற்பட்டுவிடக்கூடாது என்பது பற்றியும்”
என்றும் சேர்த்துக்
கொண்டார்.
பர்ட்டின்
கருத்துக்கள் கடாபியின் வீழ்ச்சி பிராந்திய,
பழங்குடிப்
பிரிவுகளுக்கு இடையே ஒரு நீடித்த உள்நாட்டுப் போருக்கு முன்னோடியாக ஆகிவிடலாம்
என்று மேற்கத்தைய தலைநகரங்களில் உள்ள அச்சங்களைத்தான் பிரதிபலிக்கின்றன.
மேற்கத்தைய
சக்திகளின் ஆதரவு பெற்ற
TNC “அரசாங்கத்தை
அமைத்திடக் காத்துள்ள அமைப்பு”
அல்ல என்றும்
தேர்தல்களை நடத்துவதற்கு சில கடாபி ஆட்சி அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட
வேண்டியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று
வெளிவந்த
பைனான்சியல்
டைம்ஸின்
தலையங்கம் இதேபோன்ற எச்சரிக்கையை கொடுத்து,
மேற்கு தொடர்ந்து
ஈடுபாட்டில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
“அனைத்துத்
தரப்பினரும் கடுமையான தன்னடக்கத்தை கொள்ள வேண்டும்”
என்று
முறையிட்டதுடன் “ஆட்சியின்
ஊழியர்களை மொத்தமாக அகற்றுவது கூடாது”
என்றும் எச்சரித்தது.
“அப்படிச் செய்வது
2003ல் அமெரிக்கத்
தலைமையிலான படையெடுப்பு நடந்தபின் ஈராக்கைச் சூழ்ந்த வகையிலான பெரும்
குழப்பத்தைத்தான் தூண்டும்.
கன்னைகள்
அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி கூடாது”
ஈராக்கில்
சதாம் ஹுசைன் அகற்றப்பட்டது,
அவருடைய ஆதரவாளர்களை
ஒதுக்கி வைத்தது ஆகியவை விரைவில் ஈராக்கிய சமூகத்தில் ஒரு முறிவை ஏற்படுத்தியது.
அது குறும் பற்று
வழிகளில் நிலவி,
அமெரிக்காவால்
ஊக்குவிக்கப்பட்டு,
திரித்தலுக்கும்
உட்பட்டது.
பின்னர்
ஒட்டுமொத்தமாக ஈராக்கியர்களை படுகொலை செய்ததின் மூலம்தான் வாஷிங்டன் மக்களிடையே
பீதியை ஏற்படுத்த முடிந்தது.
அதன் இராணுவ
ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பை பல ஆண்டுகளுக்கு பின்னர்தான்
கட்டுப்படுத்த முடிந்தது.
லிபியாவிலும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்
பைனான்சியல்
டைம்ஸின்
கவலை என்பது வெளிப்படை.
இதற்கு மற்றொரு
நீடித்த மேற்கத்தைய இராணுவத் தலையீடு சரிசெய்வதற்கு தேவைப்படும்.
லிபியாவில்
வெளிநாட்டுத் துருப்புக்கள் இல்லை என்று பல முறை மறுப்புக்கள் வந்தபோதிலும்,
மத்திய கிழக்கு
மந்திரி பர்ட் ஐ.நா.
கொடியின்கீழ் ஒரு
இராணுவ ஆக்கிரமிப்பு ஏற்படலாம் என்ற குறிப்பைக் காட்டினார்.
நாட்டு மக்களைக்
காப்பதற்கு “ஒரு
அமைதி காக்கும் படை”
தேவையா என்பது பற்றி
ஐ.நா.வின்
கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார் அவர்.
இக்கருத்துக்கள் நேற்று அபு தாபியில் மூடிய கதவுகளுக்குப் பின் நடந்த உண்மை
விவாதங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.
TNC அதிகாரிகள்
பணத்தேவை,
இராணுவ ஆதரவு மற்றும்
அரசியல் அங்கீகாரத்திற்குப் பெரும் திகைப்பைக் கொண்டுள்ளனர்.
இக்குழுவின்
உறுதியற்ற,
சந்தேகத்திற்குரிய
தன்மை பற்றி மேற்கத்தைய சக்திகள் தெளிவாக அறிந்துள்ளன.
எனவே அத்தலைவர்களை
இறுக்கமாகக் கடிவாளத்தில் பூட்டியுள்ளனர்.
தன்னைத்தானே
அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் பெங்காசியிலுள்ள எழுச்சியாளர் ஆட்சிக்குக்
கிட்டத்தட்ட
1.3 பில்லியன்
டொலரைக் தருவதாக கூட்டம் உறுதி மொழி கொடுத்துள்ளது.
லிபியாவின் முன்னாள்
காலனித்துவ சக்தியான இத்தாலி
600 மில்லியன்
டொலரையும்,
பிரான்ஸ்
கிட்டத்தட்ட 420
மில்லியன் டொலரும்
மற்றும் குவைத்தும் கட்டாரும் இணைந்து
280 மில்லியன்
டொலரைக் கொடுக்க இருக்கின்றன.
இந்த எண்ணிக்கை
TNC கோரியுள்ள உடனடி
நிதியுதவியான 3
பில்லியன் டொலரை விட
மிகக் குறைவு ஆகும்.
அது ஐ.நா.
பாதுகாப்புச்
சபையின் உத்தரவின் பேரில் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள லிபியச் சொத்துக்களை
அணுகும் உரிமையையும் கோருகிறது.
அமெரிக்கா
லிபியாவிற்கு மற்றும் ஒரு மனிதாபிமான உதவியாக
$26 மில்லியனை
அறிவித்துள்ளது.
இதையொட்டி அது
கொடுக்கும் மொத்தத் தொகை
$81 மில்லியன் என
ஆகியுள்ளது.
ஆனால்,
அதே நேரத்தில் ஒபாமா
நிர்வாகம் காங்கிரஸ் மூலம் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து ஐ.நா.
பாதுகாப்புச் சபை
தீர்மானத்தைக் கடக்கும் வகையிலும்,
அமெரிக்க வங்கிகளில்
வைக்கப்பட்டுள்ள லிபிய நிதிகளில்
$38 பில்லியனுக்கும்
மேலானவற்றை திருப்பி எடுக்க இசைவு பெறுவதற்கு முயல்கிறது.
அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் நாடுகளில் இருக்கும் சொத்துரிமைச் சட்டங்கள்
லிபியப் பணத்தை லிபியாவின் சட்டப்பூர்வ அரசாங்கம் என்னும் சட்டப்படியான நிலைப்பாடு
இல்லாத எழுச்சி இயக்கத்திற்கு கொடுப்பதில் உள்ள தடைகளை வலியுறுத்தியுள்ளன.
ஆனால் இரு
நாடுகளிலும் எதுவுமே
TNC க்கு முறையான
அங்கீகாரத்தை அளிக்க முன்வரவில்லை.
ஆஸ்திரேலியாதான்
TNC ஐ லிபிய
மக்களின் சார்பான
“நெறியாக முறையிடும்
அமைப்பு”
என்று ஒப்புக் கொண்டுள்ள
சமீபத்திய நாடாகும்—இந்த
நடவடிக்கை முறையான ஒப்புதலுக்கு சற்றே குறைந்தது ஆகும்.
பிரான்ஸ்,
கட்டார்,
இத்தாலி உட்பட மற்றய
நாடுகளும் அதைச் செய்துள்ளன.
லிபியாவில்
நேட்டோ குண்டுத் தாக்குதல் தொடர்ந்து வரும் பின்னணியில்தான் அபு தாபியில் கூட்டம்
நடைபெற்றது.
வாரத் தொடக்கத்தில்
போர் விமானங்களும்,
தாக்கும்
ஹெலிகாப்டர்களும் கடுமையாக திரிப்போலி மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து
புதன்கிழமை நிலவிய ஒரு தற்காலிக நிறுத்தத்தை தொடர்ந்து நேற்று லிபியத் தலைநகர் மீது
புதிய சுற்று வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அசோசியேட்டட் பிரஸ்
கருத்துப்படி மொத்தம்
14
குண்டுத்தாக்குதல்கள் நேற்று இரவு,
முக்கியமாக
திரிப்போலியை ஒட்டி நடத்தப்பட்டன.
அபு
தாபியில் பேசிய அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன்,
“கடாபியின் நாட்கள்
எண்ணப்படுகின்றன.
ஐ.நா.
மூலம் நம் சர்வதேச
பங்காளிகளுடன் இணைந்து தவிர்க்கமுடியாத ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறோம்:
“அதாவது கடாபிக்குப்
பிந்தைய லிபியா பற்றி’
என்றார்.
சமீபத்திய அமெரிக்க
நிலைப்பாட்டை மீண்டும் கூறிய ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி கெவின் ருட்,
கடாபியின்
ஆதரவாளர்களிடம் இருந்து
“பன்முக ஆதரவுகள்”
வந்துள்ளன,
“ஆட்சி
பெருந்திகைப்பில் உள்ளதை அது காட்டுகிறது,
அது முடிவடையும்
தறுவாயில் உள்ளது என நாம் நம்புகிறோம்”
என்றார்.
வாஷிங்டனில்
CIA இயக்குனரான
லியோன் பானெட்டா,
ரோபர்ட்
கேட்ஸுக்குப் பதிலாக பாதுகாப்பு மந்திரியாக நியமிக்கப்பட உள்ளவர்,
சற்று
எச்சரிக்கையுடன் செனட் குழு ஒன்றிடம் நேற்று கூறினார்:
“லிபிய ஆட்சி
கணிசமாக வலுவிழந்து வருவதை நாம் காண்கிறோம்….இந்த
அழுத்தம் தொடரப்பட்டால்,
நாம் தொடர்ந்து
ஈடுபட்டால்,
இறுதியில் கடாபி
பதவியில் இருந்து விலகிவிடக்கூடும் என்ற அடையாளங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.”
குடியரசுக்
கட்சி செனட்டரான ஜோன் மக்கெயின் இன்னும் ஆக்கிரோசமான அமெரிக்க இராணுவத் தலையீடு
தேவை என்று வாதிட்டு அறிவித்தார்:
“தேக்கம் தொடரும்
என்ற நிலை இல்லை.
அமெரிக்க மூலோபாயம்
தடுப்புக்களை இயன்றளவு குறைத்து விரைவில் கடாபி அதிகாரத்தை விட்டு விலகச் செய்ய
வேண்டிய வகையில் இருக்க வேண்டும்,
குறைந்த முயற்சி
எடுத்து அந்த இலக்கை இறுதியில் அடைந்து விடுவோம் என்று வெறுமனே நம்புவதை விட.”
ஆனால் கடாபி
ஆட்சி ஒன்றுதான் களைப்பின் அடையாளங்களைக் கட்டுகிறது என்று இல்லை.
புதன்கிழமை நேட்டோ
உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் குண்டுத் தாக்குதலில்
ஈடுபட்டுள்ள நேட்டோ நாடுகள்
“பெருகிய முறையில்
அழுத்தத்தில் உள்ளன”
என்றார்.
ஜேர்மனி,
போலந்து,
நெதர்லாந்து,
ஸ்பெயின் மற்றும்
துருக்கி ஆகியவை வான் தாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்று அவர் மீண்டும் அழுத்தம்
கொடுத்தார்.
பெயர் கூற
விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர்
லாஸ்
ஏஞ்சல்ஸ்
டைம்ஸிடம்
விமானப் பணிக்குழுக்கள்
“களைப்படைந்து
வருகின்றன”
என்றும்,
“விமானங்கள் மீதான
அழுத்தமும் கணிசமாக உள்ளது”
என்றும் இது
“ஒரு உளரீதியான
போராகிவிட்டது”
என்றும் கூறினார்.
அமெரிக்கா,
பிரிட்டன் மற்றும்
பிரான்ஸுடன் டென்மார்க்,
பெல்ஜியம் போன்ற
நாடுகளும் லிபியாவிற்கு எதிரான வான் நடவடிக்கைகளில் சேர்ந்துள்ளன.
“அவற்றுள்
சிலவற்றிற்கு ஒரு வான் மற்றும் தரைப் போரில் ஈடுபடுவது இதுதான் முதல் தடவையாகும்.
வாடிக்கையாக இதை அவை
செய்வதில்லை.”
தொடர்புடைய
அரசாங்கங்கள் அனைத்திற்கும் கவலையளிப்பது இராணுவத்தினரின் மனத் தளர்ச்சி என்பது
மட்டும் இல்லை;
மாறாக வட ஆபிரிக்கா
மற்றும் மத்திய கிழக்கில் முக்கிய சக்திகளின் பொருளாதார,
மூலோபாய
விளைவுகளுக்காக மற்றொரு கொள்ளைமுறை,
ஏகாதிபத்திய போர்
நடத்தப்படுவது பற்றிய பரந்த மக்கள் எதிர்ப்புத்தான்.
சமீபத்திய
CBS News நடத்திய
கருத்துக் கணிப்பு அமெரிக்கர்களில்
60%, லிபியாவில்
அமெரிக்க தலையிடுவது பற்றி எதிர்க்கின்றனர் என்றும்
30% தான் ஆதரவு
கொடுப்பதாகவும் காட்டியுள்ளது.
ஆளும்
வட்டத்தில் உள்ள பயம்,
இந்த பரந்த விரோதப்
போக்கானது அமெரிக்கா அல்லது மற்ற நாடுகளில் தற்பொழுது அரசியல் ஸ்தாபனத்தில்
வெளிப்பாடு இல்லாதது,
இறுதியில் எதிர்பார
வழிகளில் வெடிக்கக் கூடும் என்பதுதான். |