சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French bourgeois “left” calls for army occupation of Paris suburb

பாரிஸ் புறநகரில் இராணுவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று பிரெஞ்சு முதலாளித்துவஇடது அழைப்புவிடுகிறது

By Antoine Lerougetel
9 June 2011

Use this version to print | Send feedback

பாரிஸிற்கு வடக்குப் பகுதியில் ஒரு ஆரம்ப பள்ளிக்கு வெளியே குண்டர்கள் தொடர்பு உடைய சமீபத்திய துப்பாக்கிச் சண்டைகளை பயன்படுத்தி பிரெஞ்சு முதலாளித்துவஇடதுகட்சிகள் பிரெஞ்சு நகரங்களில் இராணுவம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. பிரான்சின் புறநகர்ப்பகுதிகளில் வறுமையும் சமூக அழுத்தங்கள் இருப்பது பல பொலிஸ்-எதிர்ப்புக் கலகங்களுக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக பாரிஸ் புறநகரான Clichy-sous-Bois ல் பொலிசாரிடம் இருந்து தப்ப முயன்ற இரு இளைஞர்கள் மின்சாரம் பாய்ந்து கொல்லப்பட்டதை அடுத்து எழுந்த 2005 வெகுஜன கலகங்களுக்குப் பின் இக்கோரிக்கைகள் வந்துள்ளன.

ஜூன் 1ம் திகதி வடக்கு பாரிஸ் புறநகரான செவ்ரனில் ஒரு இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். ஒரு ஆரம்ப பள்ளியின் வகுப்புக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சண்டையின் விளைவாக ஒரு தோட்டா அறையில் பாய்ந்ததை அடுத்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது. இந்த நிகழ்வு, போட்டிப் போதைக் குழுக்களிடையே தொடர்ந்த துப்பாக்கிச் சண்டைகளை அடுத்து ஏற்பட்டுள்ளது.

மறுநாள் பசுமைக் கட்சியை சேர்ந்த செவ்ரனின் மேயரான முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி (PCF) உறுப்பினர் Stéphane Gatignon இராணுவத்தை அரசாங்கம் அழைத்து இப்பகுதியில்சமாதானம் காக்கும் படையாக நிலைநிறுத்த வேண்டும் என்று முறையிட்டார்.

உள்துறை மந்திரியைசில அண்டைய பகுதிகளில்” 24 மணி நேரமும் இராணுவம்சமாதானம் காக்கும் படையாகச் செயல்பட வேண்டும்அதையொட்டி பதிலுக்கு மோதல்கள் நிறுத்தப்படலாம் மற்றும் எதிர்பாரா தோட்டாக்கள் மற்றும் பெரும் சோகங்கள் என்னும் இடர்கள் தவிர்க்கப்படலாம்என்பதைப் பரிசீலிக்குமாறு காடினோன் கோரியுள்ளார்.

இதற்கு 2007ம் ஆண்டு பெருவணிக சோசலிஸ்ட் கட்சியின் தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் செகோலீன் ரோயலின் உடனடி ஆதரவு இவருக்கு கிடைத்தது. அத்தேர்தலில் இப்பொழுது பதவியிலுள்ள கன்சர்வேட்டிவ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கடந்த ஞாயிறன்று ரோயல் பிரான்ஸ் இன்டர் வானொலியில், “இராணும் தலையிட வேண்டும் என்று மேயர் கேட்டிருக்கிறார், அவர் கேட்பது முற்றிலும் சரியேஎன்றார்.

சார்க்கோசியையும் விட வலதில் கூடுதலாக நிற்க அவர் முற்பட்டார்: “ஆயிரக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் பதவிகளை அகற்றிவிட்ட ஒரு உள்துறை மந்திரியை கொண்டிருக்கிறோம்….நான் குடியரசின் ஜனாதிபதியாக இருந்தால், இப்பகுதிகளுக்குச் செல்லக்கூடாது என்ற நிலையைப் பொறுக்க மாட்டேன்.” “சார்க்கோசி அதிகாரத்தில் உள்ளார், அவர் தொடர்ந்து செயல்பட வேண்டும், ஆனால் எதுவும் நடக்கவில்லை…. சட்டம் ஒழுங்குப் பிரச்சினையில், இத்தகைய மோசமான தோல்வியை நாம் இதுகாறும் பார்த்ததில்லைஎன்று அவர் தொடர்ந்து கூறினார்.

வரவிருக்கும் 2012 ஜனாதிபதித் தேர்தலில் 2007 தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கொண்டிருந்த அதே கருத்துக்களை முன்வைத்து PS ன் வேட்புத் தன்மையை பெற ரோயல் பிரச்சாரம் செய்கிறார். மிகவும் அடக்குமுறைத்தன்மை கொண்ட சட்டம் மற்றும் ஒழுங்கு, நாட்டுப் பற்றுடைய வேட்பாளர் என்னும் முறையில் அவர் சார்க்கோசியுடன் போட்டியிட விரும்பியதுடன் குற்றச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீதான பொறுப்பை இராணுவம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். தேசிய பாடலான Marseillaise ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்தில் முடிவிலும் இசைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

காட்டினோன் மற்றும் ரோயலுடைய கருத்துக்கள் பல PS அரசியல்வாதிகள் பொலிசுக்குச் செலவழிக்கவும், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு செலவழிக்கவும் கூடுதலான அழைப்புக்களை வெளியிடும் வாய்ப்புக்களாக உள்ளன. நிதியப் பிரபுத்துவத்தின் ஆணையின்படி அரசு செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு வெகுஜன எதிர்ப்புக்கள் பெருகியுள்ள நிலையில் ஆளும் வர்க்கத்தினதும் அரசினதும் பெரும் தளர்ச்சியைத்தான் பிரதிபலிக்கிறது.

PS இன் முன்னாள் முதன்மைச் செயலரான François Hollande, PS ஜனாதிபதி வேட்பாளராக இவரும் நியமனம் பெற விரும்புவர், மேயர் செவ்ரனின்கவலையைநன்கு தான் புரிந்துகொள்ளுவதாகக் கூறினார். ஆனால் இதைக் கண்காணிக்க இராணுவம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு அவர் ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் AFP இடம் அவர் கூறினார்: “முதலில் முறையாக பொலிஸ் தலையிட வேண்டும். இரண்டாவதாக கலகக் கூட்டங்களை அகற்றுதல், போதைவஸ்து தொடர்புடைய குழுக்களை அகற்றுதல் ஆகியவற்றிற்கு ஒரு கொள்கை கண்டிப்பாக வேண்டும்.”

சார்க்கோசி பொலிஸ் அதிகாரங்களை மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளபோதிலும்கூட, ஹோலன்ட், சார்க்கோசி சட்டம்-மற்றும்-ஒழுங்குத் துறையில்பொறுப்புக்களை புலனாகும்படி கைவிட்டுள்ளார்என்று கூறினார்.

PS ன் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவிற்கான தேசிய செயலாளர் Jean-Jacques Urvoas, தான் இராணுவத் தலையீட்டை எதிர்ப்பதாகக் கூறி, ஆனால் இன்னும் கூடுதலான செலவுகள் பொலிஸ் மற்றும் நீதித்துறைச் செயற்பாடுகளுக்கு வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

PCF இன் இத்தொகுதிப் பிரதிநிதியான François Asensi, உள்துறை மந்திரி Claude Guéant உடன் வெள்ளியன்று நகரவைப் பகுதியான la cité Montceleux க்குச் சென்றிருந்தார். அங்குத்தான் துப்பாக்கிச் சண்டை விவகாரம் நடந்திருந்தது. இராணுவம் பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால்மாபியா போதைவஸ்து வலையமைப்புக்களை தகர்க்கும் வகையில் உரிய வழிவகைகள் மேற்கொள்ள பொலிசிற்கு வசதி வேண்டும் என்றார். கண்காணிப்பு புகைப்படக்கருவிகள் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அரசியல் ஸ்தாபனத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பெரிய பொலிஸ் அடக்குமுறை விரிவாக்கம் தேவை என்பதற்கு ஒருமித்த ஆதரவு உள்ளது என்பதை இக்கருத்துக்கள் தெளிவாக்குகின்றன. கிரேக்கத்தில் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக அரசாங்கம், ஸ்பெயினில் லூயி ஜாபடெரோவின் அரசாங்கம் ஆகியவை ஏற்கனவே வேலைநிறுத்தம் செய்த வாகன சாரதிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக இராணுவத்தைப் பயன்படுத்தி அவர்களை வேலைக்குத் திரும்பச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PS மற்றும் PCF ஆகியவற்றின் அறிக்கைகளில் குறிப்பாகக் காணப்படாதது புறநகர்ப் பகுதிகளிலுள்ள மோசமான நிலைமைகள் பற்றியதாகும். ஜனாதிபதி பிரான்சுவா மித்தரெண்ட் மற்றும் பிரதம மந்திரி Pierre Mauroy ஆகியோரின் PS அரசாங்கம் 1983ல் தொடக்கிய சிக்கனக் கொள்கைகள் பெரிய அளவில், இன்னும் கடுமையாக இன்றும் நிலவத் தொடர்கின்றன. மூன்று தசாப்தங்களாக இடது மற்றும் வலது அரசாங்கங்களால் புறக்கணிப்பு என்ற நிலை சரிந்துள்ள புறநகரவை குடியிருப்புக்களில் ஏற்கனவே பேரழிவு தரக்கூடிய 25 வயதிற்குட்டபட்ட இளைஞர்களிடையே 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வேலையின்மை என்பதுடன் பொதுவான மொத்த இளைஞர் வேலையின்மையானது 40 சதவிகிதம் என்றும் உள்ளன.

2005 இலையுதிர்காலத்தின்போது ஆளும் வர்க்கம் ஜனாதிபதி ஜாக் சிராக் அனைத்து முதலாளித்துவஇடதுகட்சிகள் ஆதரவுடன் மூன்று மாத கால நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்ததைக் கண்டது. இதில் ஒலிவியே பெசன்ஸநோவின் NPA வின் முன்னோடியான LCR ம் இருந்தது. அது நகரவைக் குடியிருப்புக்களிலிருந்து கலகப் பிரிவுப் பொலிசார் திரும்பப் பெற வேண்டும் என்று அழைப்புவிட மறுத்துவிட்டது. (See, “France: ‘far-left’ LCR refuses to take a stand on police repression”).   Noisy-le Grand ன் PS மேயர் அப்பொழுது இராணுவம் தலையிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆளும் UMP கட்சி, காடினோனின் வேண்டுகோளான இராணுவம் நிறுத்தப்பட வேண்டும் என்பதை மறுத்துவிட்டது. Guéant கூறினார்: “ஒரு ஜனநாயக நாட்டில், குடியரசுப் பொலிசின் பணி, நீதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சட்டம் மற்றும் ஒழுங்கை மறுபடி நிறுவுதலாகும்.” ஆனால் அவர், “குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இரக்கமற்று இருக்கும்என்று சேர்த்துக் கொண்டார்.

UMP உறுப்பினரான Eric Raoult, பர்க்காவைத் தடைசெய்ய சட்டத்தை தயாரித்த பாராளுமன்றக் குழுவில் இடம் பெற்றிருந்தவர், பசுமைவாதிகள்-PS-PCF தாக்குதலுக்கு விடையிறுக்கும் வகையில் கூறினார்: “ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பது பொலிஸின் பணியாகும், இராணுவத்துடையது அல்ல.” காடினோன் பொறுப்பற்ற முறையில் பேசுவதாகவும்தீவிர வலதுகளின் போக்கில், நெருப்புடன் விளையாடுவதாகவும்அவர் குற்றம் சாட்டினார்.

நவ பாசிச தேசிய முன்னணியின் தலைவரான Marine Le Pen, PS ன் வலதுசாரிப் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய ஜனநாயக எதிர்ப்பு கூக்கூரல்களை நெறிப்படுத்த முற்பட்டார். காடினோனுக்குப் பரிவுணர்வை வெளிப்படுத்திய இவ்வம்மையார், “தன்னுடைய நகரவை சிக்காகோ போல் ஆகிவிட்டது என்று ஒப்பிடும் உரிமையைக் கொண்டுள்ளார்என்றார். அதாவது 1920 களில் குண்டர்கள் குழுத் தலைவர் அல் கபோனேயின் கீழ் கட்டுப்பாட்டில் இருந்த நகரம் போல்.

ஏராளமான பேர் கைது செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்து, “பிரான்சில் 20,000 பேர் சிறையில் அடைக்கப்பட வேண்டும். பிரெஞ்சுச் சிறைகளில் 50,000 பேருக்குத்தான் இடம் இருக்கிறது. இது 90,000 என உயர்த்தப்பட வேண்டும்என்று அவர் கூறினார்.

செவ்ரன்சார்க்கோசிசத்தின் கடும் தோல்வியின் அடையாளம், இது வெறும் பேச்சு உடைய கொள்கை, செயல் ஏதும் இல்லை…. காலிக் கும்பல்களும் போதைவஸ்துக் குழுக்களும் நிக்கோலா சார்க்கோசி, Claude Guéant போன்றோரிடம் சிறிதும் அச்சம் கொள்ளவில்லைஎன்று அவர் விவரித்தார். 2006ல் இருந்து 19,000 வேலைகள் அகற்றப்பட்டுவிட்டன என்று அவர் குறைகூறினார்.

ஒரு அடையாளத்தை ஒட்டிப் பேசுவது போல், UMP பிரதிநிதி சார்க்கோசிக்காக தயாரித்த அறிக்கை ஒன்றில் சிறைச்சாலைக் கட்டிடங்கள் 80,000 பேரை அடைத்து வைக்கும் வகையில் 2018க்குள் மாற்றியமைக்க அவசரத்திட்டங்கள் தேவை. நீண்ட கால சிறைத்தண்டனை அப்பொழுதுதான் அனுமதிக்கப்பட முடியும். இந்த அறிக்கை இளம் குற்றவாளிகளுக்குபொதுப் பணிகொடுக்கப்பட வேண்டும் (service civique) என்றும் கூறுகிறது.