WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
லிபியா மீது நேட்டோவின் பயங்கரவாத குண்டுவீச்சு
9 June
2011
Bill Van Auken
Use
this version to print | Send
feedback
திரிப்போலி மீது கடந்த 48 மணிநேரத்தில் நடத்தப்பட்ட இரக்கமற்ற
குண்டுவீச்சானது,
1930களில் ஹிட்லர் மற்றும் முசோலினியால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு
யுத்தங்களுக்குப் பின்னர்,
நடத்தப்பட்டிருக்கும் மிகவும் அப்பட்டமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில்
ஒன்றின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.
செவ்வாய்கிழமைக்கும் புதன்கிழமை காலைக்கும் இடையில் யுத்த
விமானங்கள் லிபிய தலைநகரை 62 முறை தாக்கின. நண்பகல் விமானத் தாக்குதல்கள்,
லிபியா உண்மையில் அமெரிக்க-நேட்டோவின்
திடீர்தாக்குதலில் திணறிக் கொண்டிருக்கிறது என்பதை அடிக்கோடிடுகின்றன. லிபியாவின்
விமானப்படை மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புக்கள் முந்தைய தாக்குதல்களால்
சேதப்படுத்தப்பட்டன.
குறைந்தபட்சம் 31 மக்கள் கொல்லப்பட்டனர்,
டஜன் கணக்கானவர்கள் காயமுற்றனர். வீடுகள்,
மருத்துவமனைகள், பாடசாலைகளைச் சேதப்படுத்தியதோடு,
குண்டுவீச்சு பொதுமக்களுக்கான அரசு
கட்டிடங்களையும் அழித்துள்ளது. அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் நோக்கம்
திரிப்போலியின் 1.7 மில்லியன் மக்களை அச்சுறுத்துவதே.
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு தாக்குதல் ஹெலிகாப்டர்கள்
நிலைநிறுத்தப்பட்ட சில நாட்களில்,
இந்த கூர்மையான தீவிர குண்டுவீச்சு
நடவடிக்கை நடந்துள்ளது. இது பரந்தளவில் ஒரு நேரடி தரைப்படை தாக்குதலுக்கு
முன்னறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
புதனன்று புருசெல்ஸில் கூடிய நேட்டோ வெளியுறவு மந்திரிகளின் ஒரு
உச்சிமாநாடு,
“தேவைப்படும் வரையில்" அந்த 10-வார குண்டுவீச்சு நடவடிக்கையை தொடர
ஒப்புக்கொண்டது. அதேவேளையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ரோபர்ட் கேட்ஸ்,
நேட்டோ பொதுச்செயலாளர் ஆண்டர்ஸ் போஹ் ரஸ்முஸ்சென் ஆகியோர் ஜேர்மன்,
போலாந்து, துருக்கி,
ஸ்பெயின் உட்பட ஏனைய நேட்டோ உறுப்பு நாடுகளும்
ஒடுக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகள் மீது நடத்தப்படும் இந்த குண்டுவீச்சில்
சேர்ந்துகொள்ள வேண்டுமென அழுத்தம் கொடுத்தனர்.
முன்னர் ஒரு காலக்கட்டத்தில்,
இதுபோன்ற விமான தாக்குதல்கள் "பயங்கரவாத குண்டுவீச்சாக"
வர்ணிக்கப்பட்டன. அவை 1937இல் ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் கோர்னிகாவிலும்,
1939இல் வார்ஷோவிலும், 1940இல்
ரொட்டெர்டாமிலும், 1941இல் பெல்கிரேடிலும்,
இலக்கு வைக்கப்பட்ட நாடுகளை அழிக்கவும்,
வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்த அனைத்தின் நெறிமுறைகளையும் உடைக்கவும்,
அந்நாடுகளின் ஆயுதந்தாங்கிய படைகளை நிர்மூலமாக்கும் நோக்கத்தோடு,
ஆதரவற்ற பொதுமக்களுக்கு எதிராக ஹிட்லரின்
விமானப்படையால் நடத்தப்பட்டன.
வட ஆபிரிக்காவில் இதேபோன்ற ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாத
நடவடிக்கைகள் அப்போதைய எதியோப்பியாவிற்கு (இப்போதைய லிபியாவிற்கு) எதிராக
முசௌலினியின் பாசிச ஆட்சியால் நடத்தப்பட்டன.
மூன்றாம் ஜேர்மன் குடியரசின் தலைவர்கள் நூரெம்பேர்க்கில்
தூக்கிலிடப்பட்ட இத்தகைய முந்தைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் தற்போதைய
அமெரிக்க-நேட்டோ யுத்தத்திலிருந்து வெகுசில விஷயங்களே வேறுபடுத்தி காட்டுகின்றன.
அவற்றின் நோக்கங்களும்,
முறைகளும் இரண்டுமே,
பெருமளவிற்கு ஒரேமாதிரியாக உள்ளன.
அந்நாட்டின் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக "தேவையான அனைத்து
முறைமைகளையும்" அங்கீகரித்திருக்கும் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை
நடைமுறைப்படுத்தும் வேஷத்தின்கீழ்,
அமெரிக்க-நேட்டோ யுத்தம் நடத்தப்பட்டு
வருகிறது. அமெரிக்கா மற்றும் பிரதான ஐரோப்பிய சக்திகளின் தலைவர்கள் அனைவரும் இந்த
தீர்மானத்தை கேலிக்குரிய ஒன்றாக ஒப்புக் கொள்கின்றனர்.
1930களில்
தொடுக்கப்பட்ட யுத்தங்களைப் போன்றே இந்த யுத்தத்தின் உண்மையான நோக்கமும்,
ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பே ஆகும். அமெரிக்கா,
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலியும்,
தற்போதிருக்கும் மௌம்மர் கடாபியின் அரசாங்கத்தை கீழிறக்கி விட்டு,
பிரதான சக்திகளின் மற்றும் மேற்கத்திய எரிசக்தி பெருநிறுவனங்களின்
கைப்பாவையாக வேலை செய்யும் ஒரு புதிய கைப்பாவை அரசை ஸ்தாபிக்க கோரி,
லிபியாவில் வெளிப்படையாகவே "ஆட்சி மாற்றத்தை"
பின்தொடர்கின்றன.
மிக தூர-தேசங்களுக்கும் பரவக்கூடிய எழுச்சிகள் நடந்தேறிய எகிப்து
மற்றும் துனிசியா ஆகிய இரண்டு அரேபிய நாடுகளுக்கும் இடையில் மூலோபாயரீதியில்
அமைந்திருக்கும்,
மக்கள்தொகை குறைந்த இந்நாட்டை அடிபணியவைக்க,
மத்தியகிழக்கு மற்றும் வடஆபிரிக்காவில் எழுந்த மக்கள் எழுச்சிகளை
அவை பயன்படுத்திக் கொண்டன. பராக் ஒபாமாவும், ஹிலாரி
கிளிண்டனும் எரிச்சலூட்டும் வகையில் முறையிடுவதைப் போல, “அரேபிய
வசந்தத்தை" பாதுகாப்பதல்ல அவர்களின் நோக்கம்,
மாறாக அதன் குரல்வளையை நசுக்கி ஓர் இராணுவ நிலைப்பாட்டில்
தம்மைத்தாமே நிறுத்திக் கொள்வதே அவற்றின் நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தை அமுலாக்கவும்,
பொதுமக்களைப் பாதுகாக்கவும் என்ற வேஷத்தின்கீழ் செயல்பட்டு கொண்டு,
அமெரிக்காவும், அதன்
கூட்டாளிகளும் லிபிய மக்களுக்கு பாரிய துன்பங்களை ஏற்படுத்தி உள்ளனர். இவ்வாறே
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதை
மறுக்கும் மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்குத் தடைவிதிக்கும் மற்றும் தேசிய
இறையாண்மை கோட்பாட்டை தாங்கிபிடிக்கும் ஐ.நா. ஸ்தாபக சாசனத்தின் அடிப்படை
உள்ளடக்கங்களையும் அவை தூக்கி வீசியெறிந்துள்ளன.
லிபிய அரசின் தலைவரைப் படுகொலை செய்யும் மற்றும் அதன் ஆயுதமேந்திய
படைகளையும்,
நாட்டின் உள்கட்டமைப்பையும் அழிக்கும் தனி நோக்கத்தோடு அவை
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நடத்தி உள்ளன. இந்த செயல்முறையில் திரிப்போலியின் மைய
பகுதியையும் மற்றும் ஏனைய நகரங்களின் பகுதிகளையும் சிதறடிக்க குண்டுகளை வீசியுள்ள
அவை, அப்பாவி ஆண்களையும்,
பெண்களையும், குழந்தைகளையும் மற்றும்
வெளியே தெரியாத படிக்கு எண்ணிக்கையிலான பல படையினரையும் (இவர்களில் பலர் கட்டாயமாக
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 17 வயதிற்கும் குறைந்தவர்கள்) கொன்றுள்ளன.
நேட்டோ குண்டுவீச்சு ஆயிரக்கணக்கான லிபிய மக்களையும்,
புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் அகதிகளாக ஆக்கியுள்ளது. அவர்கள்
தங்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேறி வருகின்றனர். பல நூற்றுக்கணக்கானவர்கள்
மத்தியதரைக்கடலைக் கடக்கும் முயற்சியில் இறந்துள்ளனர். இந்த யுத்தம்,
பொதுமக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர்
மற்றும் மருத்துவ உதவிகளை இல்லாமல் செய்து,
ஒரு மனிதயின பேரழிவைத் தூண்டிவிடும் என்ற அச்சமும் அதிகரித்து
வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்களான பராக் ஒபாமா,
டேவிட் கேமரூன்,
நிக்கோலா சார்க்கோசி மற்றும் ஏனையவர்களும் யுத்த குற்றங்களுக்காக
குற்றம்சாட்டப்படவேண்டியவர்களாவர்.
புருஸெல்ஷ் கூட்டத்தில்,
நேட்டோ வெளியுறவுத்துறை மந்திரிகள் "கடாபிக்குப் பிந்தைய
லிபியாவிற்கான" தயாரிப்புகளை செய்யத் தொடங்க வேண்டுமென கூறினர். அது அடையப்பட்டால்,
இந்த நோக்கம் ஓர் இரண்டாம் இராணுவ நடவடிக்கையின் வடிவத்தை
எடுக்கும், அதாவது வெளிநாட்டு ஆதிக்கத்தை எதிர்க்கும் எந்த
எதிர்ப்பையும் நசுக்கும் விதத்தில்,
லிபிய மக்களுக்கு எதிரான ஒரு பயங்கரவாத ஆட்சியாக அமையும் என்பதை நிச்சயமாக
கணிக்கலாம்.
லிபிய நகரங்கள் மற்றும் மக்களின் மீது தற்போது குண்டுமழை
பொழிந்துவரும் டென்மார்க்,
நோர்வே, ஸ்வீடன் உட்பட ஏனைய நாடுகளை லிபியா
என்ன செய்தது? ஒன்றும் செய்யவில்லை என்பது தான் இதற்கான
பதிலாக உள்ளது. அந்நாட்டின் உடைமைகளை,
அதன் எண்ணெய் வளங்கள் மற்றும் மேற்கத்திய வங்கிகளில்
"உறைந்திருக்கும்" பில்லியன் கணக்கான டாலர்களை "கடாபிக்குப் பின்னர்" பங்குபோட்டு
கொள்வதில் நுழைவுக் கட்டணமாக இந்த ஏகாதிபத்திய தாக்குதலில் அவை இணைந்து
கொண்டிருக்கின்றன.
இந்த குற்றம்மிகுந்த ஏகாதிபத்திய சாகசத்தை நடத்துவதில்,
அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ முற்றிலுமாக ஒரு யுத்த-எதிர்ப்பு
போராட்டம் இல்லாதிருப்பதை, அமெரிக்காவும்,
நேட்டோவும் பயன்படுத்திக் கொள்கின்றன.
வியட்நாம் யுத்தத்திலிருந்து நான்கு தசாப்தங்களில்,
இரண்டு கண்டங்களிலேயுமே ஒழுங்கமைக்கட்ட யுத்த-எதிர்ப்பு உணர்வு ஓர்
அரசியல் பாத்திரம் வகித்துள்ளது. 2003இல் அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பின்
சூழலில், யுத்தம் மற்றும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முன்னொருபோதும் இல்லாத சர்வதேச ஆர்ப்பாட்டங்களில் உலகம்
முழுவதிலிருந்தும் மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கினர்.
இதுவரையில்,
ஒரேசமயத்தில் மூன்று ஆக்கிரமிப்பு யுத்தங்களை அமெரிக்க
ஏகாதிபத்தியம் பிரதான ஐரோப்பிய சக்திகளோடு சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கும்
நிலையில், பரந்த மக்களால் உணரப்படும்
தொடர்ச்சியான யுத்த எதிர்ப்பு எவ்வித குறிப்பிடத்தக்க பொது வெளிப்பாட்டையும்
காணவில்லை.
இந்த அரசியல் நிகழ்வுப்போக்கை,
இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் நிகழ்ந்த யுத்த-எதிர்ப்பு
போராட்டங்களில் தலைமை ஏற்றிருந்த ஒட்டுமொத்த மத்தியதர வர்க்க முன்னாள்-இடதுகளின்
பரிணாமத்தினால் பரந்தளவில் விளங்கப்படுத்தலாம். அமெரிக்காவில் ஜனநாயக கட்சிக்குள்
முன்னில்லாதளவிற்கு ஆழமாக ஒருங்கிணைந்ததும், ஐரோப்பாவில்
பசுமைக்கட்சியினருக்கும் மற்றும் "இடது" என்றழைக்கப்படும் அரசியல் போக்குகளுக்கு
மூடுதிரையை வழங்கிய இந்த பரிணாமங்கள் வெவ்வேறு அரசியல் வடிவங்கள்
எடுத்திருந்திருந்த போதினும், இது பொதுவான சமூக மற்றும்
அரசியல் வேர்களைக் கொண்டுள்ளது: அதாவது,
இந்த அடுக்கிடம் சேர்ந்திருந்த பெரும் செல்வவளம் மற்றும் "மனித
உரிமைகள்" என்ற முற்றிலும் போலித்தனமான முழக்கத்தின்கீழ் ஏகாதிபத்தியத்தோடு அவை
சேர்ந்திருந்தமை ஆகியவையாகும்.
இந்த அடுக்குகளில் பிரசித்தமானவை,
முந்தைய "இடதுசாரி" ஆய்வாளர்கள் ஒரு குழுவாகும். இது மிச்சிகன்
பல்கலைக் கழகத்தில் மத்திய கிழக்கு வரலாற்றாளர் ஜூயான் கோலினால்
பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது. அவர் ஒவ்வொரு தாக்குதலையும் "சுதந்திர
லிபியாவிற்கான" ஒரு அடி என்று கூறி, ஒவ்வொரு புதிய நேட்டோ
குண்டுவீச்சையும் நடைமுறையில் சந்தோசப்பட்டுக்கொண்டார். இத்தகைய சில தொழில்ரீதியான
பொறுக்கிகளின் வெட்ககேடான யுத்த ஆதரவு பிரச்சாரத்தில்,
தவறுக்கிடமில்லாத விதத்தில் நாசிச எழுச்சியின் போது
ஜேர்மனியில் மத்தியதர-தட்டு அடுக்கால் எடுக்கப்பட்ட இதேபோன்ற நிலைப்பாடுகளின்
எதிரொலி உள்ளன.
லிபிய தாக்குதலுக்குப் பிரதிபலிப்பாக,
ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் தொடர்ந்து நடந்துவரும் குற்றங்களுக்கு பிரதிபலிப்பாக
மற்றும் இன்னும் வரவிருக்கும் புதிய இராணுவவாத நடவடிக்கைகளுக்கு பிரதிபலிப்பாக ஒரு
சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அமைந்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய
யுத்த-எதிர்ப்பு போராட்டம் மேலெழ வேண்டும்.
உலகையும்,
எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா மற்றும்
முதலாளித்துவத்தையும் நெருக்கிவரும் பொருளாதார நெருக்கடியின் பேரழிவுமிக்க
விளைவுகளை ஈடுகட்டும் ஒரு முயற்சியில் ஆளும் நிதியியல் மேற்தட்டால் இத்தகைய
யுத்தங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடு மீதான இராணுவவாதம் ஒவ்வொரு நாட்டிலும்
உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரங்கள் மற்றும் அடிப்படை சமூக உரிமைகளுக்கு எதிரான
ஓர் இரக்கமற்ற யுத்தத்தோடு பிணைந்துள்ளது. இதற்கிடையில் மத்தியதரதட்டு வர்க்க
எதிர்ப்பு போராட்டங்களின் முன்னாள்-இடதுகளின் தலைமை வலதுசாரிப்பக்கம் நகர்ந்து
வருகிறது. ஆனால் இந்த நெருக்கடி தொழிலாளர்களை இடதுபக்கம் தள்ளி வருகிறது.
யுத்தத்திற்கு எதிரான போராட்டமானது,
அதாவது லிபியாவிற்கு எதிராக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முடிவுக்குக்
கொண்டு வருவது, மத்தியகிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தானில்
இருந்து அனைத்து அமெரிக்க மற்றும் ஏனைய வெளிநாட்டு துருப்புகளை திரும்பபெறுவது,
புதிய மற்றும் இன்னும் இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய பெருந்தீயின்
அச்சுறுத்தலை நிறுத்துவது ஆகியவற்றிற்கு எதிரான போராட்டமானது,
இராணுவவாதத்தின் ஆதாரமாக விளங்கும் இலாப
அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒன்றுதிரட்டி போராடுவதன்
பாகமாகவே நடத்தப்பட முடியும்.
இதில் வெற்றிகொள்ள வேண்டுமானால்,
முதலாளித்துவத்தை முடிவுக்கு கொண்டு வரவும்,
தனியார் இலாபத்திற்கு பதிலாக சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும் உலக
பொருளாதாரத்தின் சோசலிச மறு-ஒழுங்கமைப்பைத் தொடங்கவும், ஒரு
பொதுவான போராட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை
ஐக்கியப்படுத்த, இந்த போராட்டமானது
ஒரு புதிய முன்னோக்கு மற்றும் சர்வதேச சோசலிச மூலோபாயத்தின் அடிப்படையில்
அமைக்கப்பட வேண்டும். |