World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain’s 15-M protests and the politics of “autonomy”

ஸ்பெயினின் 15-M ஆர்ப்பாட்டங்களும் தனித்தியங்கும் அரசியலும்

By Robert Stevens
3 June 2011

Back to screen version

மாட்ரிட்டின் Puerta Del Sol சதுக்கத்தில் உள்ள எதிர்ப்பாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் “சீற்றம் அடைந்துள்ளவர்களின்” ஆர்ப்பாட்டங்களுக்கு “தலைமை” ஏதும் இல்லை என்றும் இவை “தனித்தியங்கும்” கூட்டமைப்புக்கள், குழுக்கள் மற்றும் மன்றங்களால் நடத்தப்படுகின்றன என்று வலியுறுத்தியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக எக்கட்சியும் “இயக்கத்தின்மீது” ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் ஒவ்வொரு தன்னியல்பான இயக்கத்திலும் அரசியல் போக்குகள் காணப்படுகின்றன. இதில் பிரச்சினை என்னவெனில் பலவித்தியாசமான போக்குகள் பிரதிநிதித்துவப்படுத்தும்  சமூக சக்திகள் எவை மற்றும் அவை எடுத்துக்கூறும் திசை என்ன என்பதுதான்.

அரசியல் கூடாதுஎன்று வலியுறுத்தப்படுவதற்கு ஆதரவு உள்ளது. ஏனெனில் ஆளும் PSOE என்னும் ஸ்பெயினின் சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் ஸ்ராலினிசத் தலைமையிலான ஐக்கிய முன்னணி உட்பட முக்கிய கட்சிகள் மீது பரந்த விரோதப் போக்கு உள்ளது. ஆனால் இதன் தாக்கம் இக்கட்சிகளுக்கு ஒரு அரசியல் பொது மன்னிப்பு வழங்குவதும், மேலும் PSOE மற்றும் அதன் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மேலாதிக்கத்திற்கு எந்தவித அரசியல் சவாலையும் தடுக்கும் தீவிர நோக்கத்தைக் கொண்ட பல போலி இடது குழுக்களின் செயல்களுக்கும் இந்த நிலைப்பாடு ஊக்கம் அளிக்கும்.

முகாமில் உள்ள இரு பிரதிநிதிகளின் கருத்துக்கள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன: இருவரும் அவர்கள் எந்த அரசியல் அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் பெரும் சிக்கனத்தை சுமத்தும் PSOE மற்றும் பழைமைவாத எதிர்க்கட்சியான மக்கள் முன்னணி (PP) ஆகியவற்றிற்கு எதிராகத்தான் விரோதப் போக்கை தெரிவித்துள்ளனர்.

மரியன் மார்ட்டிநெஸ் மொண்டேயாஸ் 15-M எதிர்ப்புக்களில் மையப்பகுதி மீது ஆதிக்கம் கொண்டுள்ள மத்தியதர வர்க்க அடுக்குகளின் சமூக நலன்களால் தெளிவாக உந்துதல் பெறுகிறார். “சிறு மற்றும் நடத்தர வணிகம்தான் நாடு முழுவதையும் தாங்கிப்பிடிக்கின்றதுஎன்றார் அவர். “இவை திவாலானால் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலைகளை இழப்பர்.”

இயக்கத்தின் திட்டங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. மக்கள் அனைவராலும் இவை முன்கொண்டுவரப்படுகின்றன. எங்களுக்கு என்ன வேண்டும் என்பதைப்பற்றி அனைவரும் உணர்மை பெற்றிருக்கிறோம். நாட்டை மாற்றுவதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும், ஒரு நேர்மையான, பொறுப்பான அரசியல் வேண்டும்.”

இப்படி அனைத்தையும் தழுவும்மக்கள்”, “நேர்மையான, பொறுப்பான அரசியல்பற்றிய குறிப்புக்கள் அதிகபட்சமாக கபடமற்ற தன்மையைத்தான் காட்டுகின்றன. ஆனால் இவை PSOE க்கு அரசியல் அறைகூவல்விடுவதற்கான அவரின் எதிர்ப்பிலிருந்து பிரிக்க முடியாததையும் காட்டுகின்றன. “அரசாங்கத்தை இல்லாதொழிப்பதற்கான போராட்டம் அல்ல இது; அரசாங்கத்தை மாற்றுவதற்கானதுஎன்று அவர் வலியுறுத்தினார். “மக்களுடைய குரலை அவர்கள் கேட்க வேண்டும்.”

மொண்டேஜஸ் ஸ்பெயினில் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக உள்ள வெகுஜன இயக்கத்திற்கும் எகிப்து மற்றும் துனிசியாவில் வெறுக்கப்பட்ட ஆட்சியாளர்களைக் கவிழ்ப்பதில் முடிந்த வேலையின்மை வறுமை இவற்றை எதிர்கொள்ள வெடித்தெழுந்த இயக்கங்களுக்கும் இடையே தொடர்பு உண்டு என்ற கருத்தை நிராகரிக்கிறார். “துனிசியா இன்னும் பிற அரபு நாடுகளில் நடந்த இயக்கங்கள் ஸ்பெயினில் நடப்பதுடன் தொடர்பு கொண்டவை அல்லஎன்று அவர் அறிவித்தார். “எகிப்து ஒரு ஜனநாயக நாடு அல்ல. ஸ்பெனியினோ ஒரு ஜனநாயக நாடு ஆகும்.”

உண்மையில், மற்ற நாடுகளில் இருப்பதைப் போலவே ஸ்பெயினிலும் முதலாளித்துவ வர்க்கம் நீண்டகாலமாக உள்ள ஜனநாயக உரிமைகளை அகற்றிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் பெருவணிகத்தின் சார்பில் அது சுமத்திக்கொண்டிருக்கும் மிருக்கத்தனமான வெட்டுக்கள் தாக்குதலுக்கு இலக்காக உள்ள மக்களிடம் இருந்து ஒருபோதும் ஆதரவைப் பெறமுடியாது. எனவேதான் தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியல்வாதிகள் அவர்களது போக்கை மாற்றிக் கொள்வதற்கு கொடுக்கும் அழுத்தத்தையும் விட கூடுதலானதற்குப் போராட முன்வந்துள்ளனர். தோல்வியடைந்துவிட்ட முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகப் போராட்டம் உள்ளதுடன், எனவே அதற்கு ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் தலைமை தேவைப்படுகிறது.

27 வயதான ஒரு பகுதிநேரத் தொழிலாளியும் பல்கலைக்கழக மாணவருமான பப்லோ முகாம் தகவல் நிலையத்தில் இருந்த ஊழியர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார். WSWS இடம் அவர் முகாமின் கொள்கைஅரசியல் கட்சிகளைத் தளமாகக் கொள்ளவில்லை என்றும் குடிமக்கள் ஒன்றாக மன்றத்தில் கூடும் முறை வந்துள்ளது. இது சமூகத்தால் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானிப்பது, செல்வாக்கைச் செலுத்துவது மற்றும் இயன்றளவு அத்தகைய முடிவுகள் மீது சாத்தியமானளவு எவ்வளவு செல்வாக்கைச் செலுத்தமுயலுமோ அதற்கு  முற்படுவது என்பதாகும்என்றார்.

மன்றம் என்பது ஆரம்பத்தில் இருந்தே மிகத் தெளிவாக உள்ளது. அரசியல் கட்சிகள் குறுக்கே புகுதலை நாம் ஏற்க மாட்டோம்என்று அவர் தொடர்ந்தார். “இது ஒரு இயக்கம் அல்ல, ஒருவித சமூக அரசியல் போக்கு என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இங்கு பரந்து செல்லும் தன்மை கொண்ட பல மன்றங்கள் உள்ளன.”

உண்மையான ஜனநாயகரீதியான விவாதம் மற்றும் ஒழுங்கமைப்பிற்கு இட்டுச்செல்வதற்கு மாறாக அரசியல் கட்சிகள் வெளிப்படையாக பங்குபெறுவதை மன்றங்கள் தவிர்ப்பது, அவற்றிற்கு முற்றிலும் ஜனநாயகமற்ற தன்மையைக் கொடுக்கிறது. ஒரு வெளிப்படையான அரசிய் போராட்டம் இல்லை என்றால், அனைத்துமே பொதுவான கருத்துக்களைப் பற்றிய திட்டமான வடிவமற்ற விவாதங்கள் ஆகிவிடுவதுடன், இது மிகவும் பிற்போக்குத்தன பிரிவுகளின் ஆதிக்கத்தைத்தான் அனுமதித்து விடும்.

பப்லோவும் கூட மன்றங்கள்அனைத்து சமூகக் குழுக்களுக்கும் திறந்தே இருக்கும்என்று கூறினார்.

சில சமூகக் குழுக்களின் சார்பில் அவற்றில் பங்கு பெறுவது பற்றிக் கூட நான் பேசமாட்டேன், ஆனால் தனிப்பட்ட முறையில், ஒருவருக்காகப் பேசலாம். மன்றங்களில் ஆரம்பத்தில் செய்ய வேண்டியது நம்மை முன்பு வரையறுத்துள்ள அனைத்துப் பிரிவுகளுடனும் முறித்துக் கொள்ள வேண்டும். “ [வலியுறுத்தல் நமது]

மொண்டேயாஸின் கருத்தினை எதிரொலிக்கும் வகையில், இவர்பிணை எடுப்புக்கள், வெளிநாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய கடன்கள் போன்றவற்றைப் பற்றிய முடிவுகள் ஒரு சிறு அதிகாரத்துவக் குழுவினரின் கைகளில் இருக்கக் கூடாது. அவை நம் அனைவராலும் முடிவெடுக்கப்பட வேண்டும், ஏனெனில் அவை அனைத்து ஸ்பெயின் குடிமக்களையும் பாதிக்கிறது.” என்று அவர் அழுத்தமாகக் கூறினார். [வலியுறுத்தல் நமது]

நம்மை முன்பு வரையறை செய்த பிரிவுகளுக்குஎதிராக என்று முழங்கும்போதுஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கைப் பிரகடனம் செய்தல், அபிவிருத்திசெய்தல் என்ற அடித்தளத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன  நலன்களை வரையறை செய்யும் எவ்விதமான முயற்சியையும் நிராகரிப்பதாகும். ''அனைத்து சமூக பிரிவுகளையும்'', ''குடிமக்களையும்'' ஐக்கியப்படுத்தும் ஒரு பொதுவாக இயக்கத்திற்கு அனைத்தும் கீழ்ப்படுத்துவது என்பதாகும்.

இந்த நிலைப்பாடு பற்றி களிப்புக்கும் மேலான நிலையைத்தான் பல அரசியல் போக்குகள் கொண்டுள்ளன. PSOE க்கு வெளிப்படையான ஆதரவு என்று மட்டும் இல்லாமல், பல முன்னாள் இடது குழுக்கள் வாடிக்கையாக இத்தகைய ஆதரவை மறைவாக சோசலிசச் சொற்றொடர்கள் மூலம் கொடுத்துவிடுகின்றன.

பல அரசியல் அமைப்புக்களும் எதிர்ப்பு முகாமில் ஈடுபட்டுள்ளபோது, “பல அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத்தில் இருந்து வருபவர்கள் தங்கள் திட்டங்களையும் உரைகளையும் ஏதோ ஒருவிதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும், ஏனெனில் மன்றத்தின் கட்டமைப்பு அவ்வாறு உள்ளதுஎன்று பப்லோ கூறியது ஒரு வெளிப்பாடான கருத்து ஆகும். (வலியுறுத்தல் நமது)

இதன் பொருள் என்ன?

போலிஇடதில்உள்ள பல சக்திகள் மன்றங்களில் நெருக்கமாகத் தொடர்பு கொண்டவை. ஆனால் அவ்வாறு இருக்கையில் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நலன்களில் முழுமையாக வடிவமைத்து  தங்கள் அடையாளங்களை மறைத்தும் மற்றும் தங்கள் அரசியல் முன்னோக்கை ஒரு போலிக் கொடியின் கீழ் காட்டுகின்றன.

இவ்விதத்தில்தனித்தியங்கும்கோரிக்கை புரியும் அரசியல் பங்கைப் பற்றிப் போலித் தோற்றங்களைக் கொண்டுள்ளவர்கள் மிகவும் கவனத்துடன் En Lucha (போராட்டத்தில்) என்ற குழுவின் படைப்புக்களைப் படிக்க வேண்டும். இது பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கட்சியின் ஸ்பெயின் பிரிவு ஆகும்.

மே 31ம் திகதி ஒரு முக்கிய En Lucha  உறுப்பனிரான ஆண்டி துர்கன் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை மோசடித்தனமாகசோசலிஸ்ட்”, “புரட்சிகரஎன்று தன்னைக் கூறிக்கொள்ளும் இயக்கம், முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசத்தினதும் ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் அவசியம் பற்றி ஒரு முறைகூட எழுப்பப்படாதிருப்பதை உறுதிப்படுத்த இயங்குவதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.

துர்கன்உண்மையான பங்கு பெறும் ஜனநாயகத்தில் புரட்சிகர தாக்கங்கள்  தேவை என்னும் அழைப்பு, கோரும் பலரும் அவ்வாறு அதைப் பார்க்கவில்லை என்றாலும், உள்ளது.” என ஆரமிபிக்கின்றார்.

En Lucha எவ்வித புரட்சிகர தாக்கங்கள்பற்றி விளக்கும் நிலையில் இல்லை. டுர்கன் தொடர்கிறார்: “முகாம்களின் தன்மையை எச்சக்திகள் நிர்ணயிக்கின்றன என்பது இடத்திற்கு இடம் மாறுகிறது; ஆனால் எந்த அமைப்பும் அனுமதிக்கப்படக்கூடாது என்ற பொது ஒருமித்த கருத்து உள்ளது.

இந்நிலைமையில், விவாதங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்களுக்கான முன்னேற்றப்பாதை பற்றி நடக்கின்றன, “எங்களைப் போன்ற En Lucha வில் உள்ள புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள்…. அவற்றில் தலையீடுகிறோம்.”

முகாம்களின் முக்கிய மன்றங்களில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். நாங்கள் ஈடுபாடு கொண்டுள்ள எல்லா இடங்களிலும் நடவடிக்கையாளர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து கடினமாக உழைத்து மன்றத்தையும் முகாமையும் ஒவ்வொரு தரத்திலும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறோம். நிகழ்வுகள் எவ்வாறு வளர்ச்சியுற வேண்டும் என்பது பற்றி எங்கள் கருத்துக்கள் இருந்தாலும் மற்றும் இவற்றை எப்படி முன்வைக்க வேண்டும் என்று இருந்தாலும் முகாம்களை நடத்தும் வெகுஜன நேரடி ஜனநாயகத்தை மதித்தல் மிகவும் முக்கியமாகும். [வலியுறுத்தல் நமது]

திட்டங்களிலும் முன்னோக்குகளிலுமான முக்கிய பிரச்சினைகளில் அரசியல் மௌனத்தைக் கடைப்பிடிக்க உதவுதல்வெகுஜன நேரடி ஜனநாயகத்திற்குமதிப்பு என்ற போர்வையினால் மூடப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் PSOE உடன் முறித்துக் கொள்ளுவது என்ற ஆபத்து வரும்போது பின் En Lucha அவர்கள்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தோளோடு தோள்சேர்ந்துசெயல்படுவதின் நோக்கத்தைத் தெளிவாக்குகிறது.

செப்டம்பர் மாதம் ஒரு பெயரளவு பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள்தொழிலாளர்களின் உரிமைகளைத் தாக்கிய ஆளும் சோசலிஸ்ட் கட்சியுடன் உடன்பாடுகளில் கையெழுத்திட்டன'' என்று துர்கன் ஒப்புக் கொள்கிறார். இவை மக்களை பணிநீக்கம் செய்வதை எளிதாக்கி, ஓய்வூதியங்களை தாக்கி, ஓய்வூதியம் பெறத் தகுதி வயதை உயர்த்தியது.

ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இழிந்த செயல்களை அவரே விவரிக்கும்போது, “இயக்கம் பரந்து, ஆழ்ந்து போக வேண்டும் என்றால் தொழிற்சங்க எதிர்ப்புக் கருத்துக்களை நாம் சமாளிக்க வேண்டும் என்று நம்புகிறேன். மற்ற முதலாளித்துவ-எதிர்ப்பாளர்களுடனும் இடது தொழிற்சங்கப் போராளிகள், முகாம்களில் இந்த நோக்கத்துடன் தீவிரமாக உள்ளவர்களுடனும் இணைந்து உழைக்க விரும்புகிறோம்.”

Puerta del Sol முகாமில் நடந்து செல்லும்போது நம் பலரும் ஆர்வத்துடன் விவாதங்களில் ஈடுபடுவதைக் காண்கிறோம். பல தகவல் நிலையங்கள், ஒரு பெண்ணுரிமை இயக்கக் குழு, ஒரு விலங்குகள் உரிமைகள் பிரிவு, சுற்றுச்சூழல் குழுக்கள், ஒரு சட்டப்பூர்வ விளக்கக் குழு, ஒரு தேர்தல் சீர்திருத்தப் பகுதி, ஒரு கலைஞர்கள் பிரிவு என்பன உள்ளன. இளைஞர்கள் பரபரப்புடன் பதாகைகளைத் தயாரிக்கின்றனர், கோஷங்கள் எழுதுகின்றனர், பலவித கலைப்படைப்புக்களை மேற்கொள்கின்றனர்.

இந்தக் கூட்டுக் குழுக்கள் முறையான மன்றங்களைக் கொண்டுள்ளன. டஜன்கணக்கான அத்தகைய கூட்டங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது. ஆனால் வியக்கத்தக்கது இத்தனை செயற்பாடுகளின் நடுவிலும், நூற்றுக்கணக்கான கோஷங்களுக்கு இடையேயும், எல்லான இடங்களிலும் ஸ்பெயினின் புரட்சி என்று அழைக்கப்படுவதின் தலைமையகத்தைத்தான் காண்கிறோம். ஒரு இடத்தில் கூட PSOE அரசாங்கம் கவிழ்க்கப்பட வேண்டும் என்ற முறையீடு காணப்படவில்லை.

Puerta del Sol இல் ஒரு இளம் பங்கு பெறுபவர் இந்த எழுத்தாளரிடம் அவர்கள் கருத்துக்களையும் தீர்விற்கான திட்டங்களையும் தொடர்புடைய மக்களிடம் இருந்து திரட்டுவதாகவும், ஸ்பெயினின் பல சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பிரச்சினைகள் குறித்து இவை உள்ளன என்றும் கூறினார். இத்திட்டங்கள் பின்னர் விவாதிக்கப்பட்டு PSOE அரசாங்கத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படு முன் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படுகின்றன.

PSOE இதைக் கேட்குமா என்று வினவப்பட்டதற்கு அவர் கூறினார்: “கேட்கும் என்று நான் நினைக்கவில்லை; ஆனால் கேட்க வேண்டும் என்று விரும்புகிறோம்.”

PSOE அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்ற பேச்சு ஏதேனும் உள்ளதா என்று வினவப்பட்டபோது, அவர்அப்படி முடியும் என்று தோன்றவில்லைஎன்றார்.

இதுதான்பரந்து செல்லும் தன்மை”, “தனித்தியங்கும் அரசியல் செல்லும் முட்டுச் சந்து ஆகும். இந்த நிலைக்குப் பொறுப்பானவர்கள் En Lucha போன்றவை; இவற்றின் அரசியல் செயற்பாடு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் விமர்சனரீதியான தன்மையை மழுங்கடித்தல் ஆகும்