WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
போர்த்துக்கல் பொதுத் தேர்தலில் சோசலி்ச கட்சிக்கு பெரும் தோல்வி
By
Chris Marsden
7 June 2011
Use
this version to print | Send
feedback
ஆளும் ஜோஸே
சோக்ரடிஸின்
சோசலிஸ்ட் கட்சிக்கு
(SP)
பெரும்
தோல்வியுடனும்
எதிர்த்தரப்பு
மத்திய-வலது
சமூக ஜனநாயகக் கட்சிக்கு
(PSD) வெற்றி என்ற
வகையில் போர்த்துக்கல்லின் பொதுத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளது.
கிட்டத்தட்ட
80% வாக்குகள்
எண்ணப்பட்டுள்ள நிலையில்,
சமூக ஜனநாயகக் கட்சி
39%
வாக்குகளைப் பெற்றுள்ளது;
சோசலி்ச கட்சியோ
28% வாக்குகளைத்தான்
பெற்றுள்ளது.
புதிய தலைவர் பெட்ரோ
பாசோஸ் கொயிலோவின்
கீழ் சமூக ஜனநாயகக்
கட்சி இப்பொழுது வாக்கில்
12% பெற்றுள்ள
இதேபோன்ற வலதுசாரியான
PP எனப்படும் மக்கள்
கட்சியுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை
அமைக்கும்.
230
இடங்கள் உள்ள
பாராளுமன்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சி
105 இடங்களையும்,
மக்கள் கட்சி
24 இடங்களையும்
கைப்பற்றியது.
சோசலிஸ்ட் கட்சி
73
என்ற குறைந்த அளவு
இடங்களில்தான் வெற்றி பெற்றது.
இது ஜூன்
15 அன்று
மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் நான்கு தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்தாலும்
கணிசமாக எதையும் மாற்றாது.
பொதுவாக அவை
சோசலிஸ்ட் கட்சிக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படும்.
சமூக ஜனநாயகக் கட்சி-மக்கள்
கட்சி கூட்டணி என்பது
2002-2005 இன் போது
முன்னதாக ஆண்டிருந்த அவ்விரு கட்சிகளுக்கும் அறுதிப்பெரும்பான்மையான
120 இடங்களைக்
கொடுக்கும்.
சோக்ரடிஸும்
சோசலிஸ்ட் கட்சியும் உலகச் சந்தைகள் கோரியிருந்த,
“முக்கூட்டான”
ஐரோப்பிய ஒன்றியம்,
சர்வதேச நாணய
நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றின் ஆணையின் பேரில் கடுமையான சிக்கன
நடவடிக்கைகளைச் சுமத்தியதற்குரிய
தண்டனை பெற்றுள்ளனர்.
இந்நடவடிக்கைகளை
எடுப்பதற்கு ஈடாக அவர்களுக்கு
78 பில்லியன் யூரோ
கடனாகக் கிடைத்தது.
இது
போர்த்துக்கலுக்கு
கடன் கொடுத்துள்ள
ஐரோப்பிய மற்றும் உலக வங்கிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சென்று அடையும்.
சோசலிஸ்ட்
கட்சியின் ஆழ்ந்த செல்வாக்கிழப்பு வாக்காளர் வாக்களிக்காதது மிக உயர்ந்த அளவான
41.1% என்பதை
அடைந்ததில் தெரியவந்தது.
முன்னர்
அதிகளவில்
கலந்துகொண்டது
செப்டம்பர்
2009ல்
40.3%
ஆக
இருந்தது.
சோசலிஸ்ட்
கட்சிக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட
வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் ஆகும்.
ஆனால் பரந்துபட்ட
தொழிலாள
வர்க்கத்தின் சீற்றத்தை வெளிப்படுத்துவதற்கு மாற்றீடு வேறு ஏதும் இல்லாத நிலையில்,
தவிர்க்க முடியாமல்
வெற்றி வலதுசாரிக்குச் சென்றுள்ளது.
முழுத்
தேர்தலும் போர்த்துகீசிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு சதித்திட்டத்தின்
தன்மையைத்தான் கொண்டிருந்தது.
சோக்ரடிஸின்
சிறுபான்மை அரசாங்கம் சமீபத்தில்
தொடர்ச்சியான சிக்கன
நடவடிக்கைகளில் செயல்படுத்த முற்பட்ட நிலையில் இந்த
தேர்தல்கள் நடந்தன.
மொத்த உள்நாட்டு
உற்பத்தியில்
2012, 2013ல்
பொதுநலச் செலவுக் குறைப்புக்கள்
3.5 சதவிகிதம்
இருக்க வேண்டும் என்று முக்கூட்டினர்
(troika)
கோரியதை அடுத்து அச்சிக்கன
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆனால்
இச்சந்தர்ப்பத்தில்
சமூக ஜனநாயகக் கட்சி
அதன் முந்தைய கொள்கையை
கைவிட்டு,
சோசலிஸ்ட்
கட்சியினது
நடவடிக்கைகளை
செயற்படுத்தவிட்டு
அரசாங்கத்தை வீழ்த்திய நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.
சமூக
ஜனநாயகக் கட்சி போர்த்துகீசிய மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சார்பிலான
நடவடிக்கையை
எடுத்தது.
இதன் நோக்கம் தொழிலாள
வர்க்கத்தின்
அபிவிருத்தியடைந்துவரும்
ஒரு போராளித்தனத்தை
திசை திருப்புவது ஆகும்.
இவ்வியக்கத்தில்
பெரும் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் இருந்ததுடன் பெருவணிகத்தின்
அரசியல்
முன்னெடுப்பை இல்லாதொழிக்கும்
தன்மையும் இருந்தது.
நடத்தப்பட
வேண்டியதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பொதுத் தேர்தலில் பங்கு பெற்றதில்,
அனைத்துக்
கட்சிகளுமே முக்கூட்டு கோரிய விதிகள் பெருமைப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியின்
அடிப்படையில்தான் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தின.
சமூக
ஜனநாயகக் கட்சி மேலும்
முன்சென்று,
பதவிவிலகும்
அரசாங்கம்
நிர்ணயித்திருந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு
அப்பாலும் தான்
“செயல்பட இருப்பதாக”
உறுதி கொடுத்துள்ளது.
சமூக
ஜனநாயகக் கட்சித் தலைவர் கொயிலோ ஒரு தொழில்அதிபர் ஆவார்.
அவர்
அரசாங்கப் பதவி
எதையும் வகித்தவர் அல்ல.
இவருடைய அரசியல்
போக்கு முதலில் கம்யூனிஸ்ட் இளைஞர் கழகத்தில் தொடங்கியது.
பின்னர் அவர் சமூக
ஜனநாயக
கழகத்தில்
(Social
Democrat’s League)
சேர்ந்துவிட்டார்.
மே
30ம் திகதி
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில்
வந்துள்ள “போர்த்துக்கல்லை
நிலைநிறுத்தும் நம் திட்டம்”
என்ற கட்டுரையில்
கொயிலோ சர்வதேச நிதியாளர்களுக்கு தன் நோக்கம் மற்றும் அரசியல் செயல்திட்டத்தைப்
பற்றிய கருத்துக்களை எழுதியிருந்தார்.
“சமீபத்தில்
அறிவிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் வாக்களித்தோம் என்றால்,
அவை மிக அதிகமாக
இருந்தன என்பதால் அல்ல,
அவை போதாது
என்பதால்தான்.
போர்த்துக்கல்லின்
முக்கிய பொருளாதார சவாலின் மையத்தானத்தை அவை கவனிக்கவில்லை.
அதாவது நிதியக்
கட்டுப்பாட்டுடன்கூட வளர்ச்சி என்பது இணைந்து இருக்க வேண்டும் என்பது
உறுதிபடுத்தப்பட வேண்டும்.
கொயிலோ
“வருமானத்தை
பெருக்குதல்,
செலவைக் குறைத்தல்
என்பதில் ஒவ்வொரு முறையும் நாம் கூட்டு நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கிறோம்.
வரி உயர்வுகள்
விரைவில் செயல்படுத்தப்படுகின்றன,
அதே நேரத்தில்
செலவுக் குறைப்புக்கள் மற்றும் வளர்ச்சி சார்புடைய சீர்திருத்தங்கள் திட்டமிட்டு
ஒத்தி
வைக்கப்படுகின்றன.
இது வரிவிதிப்பு
அதிகமாகவும்,
போதுமான செலவுக்
குறைப்பையும் செய்வதில்லை.”
எனக் குறைகூறினார்
தேர்தல்
முடிந்தவுடன் கொயிலோ தனக்குத்தான் பேசிக் கொண்டாரே ஒழிய வாக்காளர்களுக்கு அல்ல;
அவருடைய உண்மையான
ஆதரவாளர்களான
“நம்மை
வெளிநாடுகளில் இருந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களை”
நோக்கித்தான்
பேசினார்.
“போர்த்துக்கல்
வருங்காலத்தில் ஒரு சுமையாக இருக்க விரும்பவில்லை.
… போர்த்துக்கல்
அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே
ஏற்பட்டுள்ள உடன்பாட்டை பெருமைப்படுத்த இயன்றதைச் செய்வோம்;
இதையொட்டி
சந்தைகளின் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம்.”
வரி
உயர்வுகள்,
அரசாங்க
ஓய்வூதியங்கள் மற்றும் ஊதியங்களில் தேக்கம்,
வேலையின்மை நலன்கள்
மற்றும் அவற்றின் கால அவகாசத்தில் குறைப்பு ஆகியவை அடங்கியிருந்த நிபந்தனைகளைப்
பொறுத்துத்தான் பிணையைடுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் கொயிலோ
இன்னும் அதிகாமாகச் சென்று கூடுதலான செலவுக் குறைப்புக்களைச் செய்து பரந்தளவில்
தனியார்மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறார்.
இதில் அரசாங்க வங்கியான
Caixa Geral de Depositos SA
ஓரளவு
தனியார்மயமாக்கப்படுதலும் அடங்கும்.
இதைத்தான்
துல்லியமாக முதலாளித்துவம் கேட்க விரும்புகிறது.
ஐரோப்பிய ஆணையத்தின்
தலைவரான ஜோஸே
மானுவல் பாரோசோ,
முன்னாள் மாவோயிச
மற்றும் முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி பிரதம மந்திரி இந்த வாக்களிப்பு
“தீர்மானகரமானது”
என்று
விவரித்திருந்தார்.
நியூ
யோர்க் டைம்ஸ்
அடுத்த அரசாங்கம் இப்பொழுது
“கடுமையான சிக்கன
நடவடிக்கை எடுப்பதற்கு வலுவான ஆதரவைக் கொண்டுள்ளது”
என்று
கூறியிருக்கிறது.
போர்த்துக்கல்லின் விளைவு ஐரோப்பா முழுவதும் முன்பு
“இடது”
என்று
கூறப்பட்டிருந்த கட்சிகளின் தோல்வி என்ற பொது வடிவமைப்பைத்தான் பின்பற்றியுள்ளது.
இதற்குக் காரணம் அவை
கடுமையான சிக்கன நடவடிக்கைகளுடன் தவிர்க்க முடியாமல் தொடர்பு கொண்டிருந்ததும்
அவற்றின் நீண்டகால தொழிலாளர்
தாக்குதல்கள்
குறித்த சான்றுகளும் ஆகும்.
ஸ்பெயின்,
கிரேக்கம் போன்ற
சமூக ஜனநாயகவாதிகள்
அரசாங்கத்தில் உள்ள நாடுகளில்கூட
அவை சர்வதேச
நாணய நிதியத்தினதும்,
ஐரோப்பிய
ஒன்றியத்தினதும்
ஆணைகளை அடிமைத்தனமாக
செயல்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்புக்களை சந்திக்கின்றன.
ஸ்ராலினிச
மற்றும் குட்டி முதலாளித்துவக் கட்சிகள்,
சோசலிஸ்ட்டுகள்
என்று முகமூடியோடு
உலா வந்துகொண்டு
சமூக ஜனநாயக மற்றும்
தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அவை கொடுத்துள்ள ஆதரவினால் மதிப்பிழந்துள்ள
வடிவமைப்பைத்தான்
போர்த்துக்கல்லும் பின்பற்றியுள்ளது.
போர்த்துக்கல் கம்யூனிஸட் கட்சி-பசுமைக்
கட்சி கூட்டணி மொத்த வாக்குகளில்
7.9% ஐப் பெற்றுள்ளன.
இதனால்
அவற்றிற்கு
16 இடங்கள்
கிடைத்துள்ளன.
இடது முகாம்
5.2% வாக்குகளைப்
பெற்று 8
இடங்களை கொண்டுள்ளது.
போர்த்துக்கல்
கம்யூனிஸட் கட்சிக்கு
கிடைத்துள் வாக்கு
அதிகம் மாறவில்லை,
இடது முகாமின்
வாக்குகள் 2009
பெற்றதைவிட
10.7%
என்ற
பாதியானதைத்தான்
கண்டுள்ளது.
இடது
முகாமின் தேர்தல் திட்டம் தான் சோசலிஸ்ட் கட்சியின் இணைப்பு என்று அது செயல்படுவதை
தெளிவாக்கியுள்ளது.
“இடது அரசாங்கம்
ஒன்று நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு”
அமைக்கப்பட வேண்டும்
என்பதில் கவனம்
காட்டப்பட்டுள்ளது.
இதன் பொதுச்
செயலாளர்
Francisco Louçã “சோசலிஸ்ட்
கட்சி இல்லாமல் இடது என்பதில்லை”
என்று பெரிதும்
வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இதன்
பொருளாதாரத் திட்டங்கள் இச்சார்பை ஒட்டித்தான் உள்ளன;
அவை
“புதிய
காலக்கெடுக்கள் நிர்ணயித்தல்,
புதிய வட்டி
விகிதங்கள் நிர்ணயிக்கப்படுதல் மற்றும் நியாயமான நிபந்தனைகளை ஏற்றல்”
ஆகியவற்றை ஏற்றலை
மையமாகக் கொண்டுள்ளன.
இடது முகாம்
போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒன்றுபட்ட அரசியல் முன்னணியை அமைப்பதற்கான
விவாதங்களில் ஈடுபட்டுள்ளது.
ஸ்ராலினிஸ்ட்டுக்கள்
இதை “தேசப்பற்றுடைய,
ஒரு இடது
மாற்றீட்டுக் கொள்கை
பொருளாதார வளர்ச்சி,
சமூக முன்னேற்றம்
இவற்றிற்கு வழிவகுத்து தேசிய நலன்களை உறுதி செய்யும்.”
என்று
விவரித்துள்ளனர்.
தேர்தலுக்கு
முன்பு போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி
“ஒரு தேசப்பற்று
உடைய இடது அரசாங்கம் தோன்றுவது தேவை”
என்பதைத் தான்
வலியுறுத்துவதாகக் கூறியிருந்தது.
இது
“அரசியல் சக்திகள்
மற்றும் பிரிவுகள்,
ஜனநாயகவாதிகள்
மற்றும் சுதந்திர நபர்கள் ஆகியோரை
அடித்தளமாக
கொண்டிருக்கும்.
அவர்கள் தேசப்பற்று
மற்றும்
ஒரு இடது கொள்கையின்
மூலமும் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன்,
பன்முக
சமூகப் பிரிவுகளின்
வெகுஜன அமைப்புக்கள்,
இயக்கங்கள்
ஆகியவற்றின் ஆதரவையும் கொண்டிருப்பர்.”
இதன் பொருள்
அனைத்தும் நடைமுறையில் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியும்
மற்றும் இடது
முகாமும் சோசலிஸ்ட்
கட்சியை
எதிர்த்தரப்பில்
இருந்து ஆதரவு கொடுக்கும் என்பதுதான்.
போர்த்துக்கல் ஒரு சமூக வெடிக்கிடங்காக உள்ளது.
வேலையின்மை
30 ஆண்டுகளாகக்
காணப்படாத 12.6%
என உயர்ந்துள்ளது.
அடுத்த ஆண்டு
13% உயரும் என
கணக்கிடப்பட்டுள்ளது.
இன்னும் கூடுதலான
மிருகத்தனமான வெட்டுக்கள் இந்நிலைமையை மோசமாக்கும்.
ஏற்கனவே பொருளாதாரம்
இந்த ஆண்டு இரு சதவிகிதம் சுருங்கிவிடும் என்றும் அடுத்த ஆண்டும் இன்னும் கூடுதலான
2 சதவிகிதம்
சுருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்புகளுக்கான
அனைத்து பாராளுமன்ற வழிவகைகளும் மூடப்பட்டுள்ள நிலையில்,
எதிர்ப்பை
சூழ்ச்சிகளால் ஒடுக்குவது வெளிப்படையாக வர்க்கப் மோதல்களுக்கே வழிவகுக்கும்.
|