WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
பாலஸ்தீனிய சிரிய ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்களை இஸ்ரேலிய துருப்புக்கள் கொலை செய்கின்றன
By
Chris Marsden
6 June 2011
Use
this version to print | Send
feedback
ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ள கோலன் குன்றின் போர்நிறுத்த எல்லைக்கருகே ஒரு
அமைதியான,
நிராயுதபாணியான
ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய இஸ்ரேலியப் படைகள்
13 எதிர்ப்பாளர்களை
கொன்றனர்.
மஜ்டல்
ஷம்ஸ் பகுதியில் ஒரு முள்வேலித் தடுப்பைத் தகர்க்க ஒரு முயற்சி
மேற்கொள்ளப்பட்டவுடன்,
இஸ்ரேலிய
துருப்புக்கள் எச்சரிக்கை குண்டுகளைச் சுடுவதை நிறுத்திவிட்டு எதிர்ப்பாளர்களை
நோக்கி இலக்கு வைத்தனர்.
13
எதிர்ப்பாளர்கள்
கொல்லப்பட்டதுடன்,
225 பேர்
காயமுற்றனர் என்று சிரிய தொலைக்காட்சி கூறியுள்ளது.
“குறைந்தபட்சம்
20 பேர் காயம்
அடைந்துள்ளதுடன்,
சிலர்
அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டபோது குருதி கொட்டிய கறை இருந்ததைப் பார்த்ததாக”
AFP யின் நிருபர்
கூற்றின்படி தெரியவந்துள்ளது.
அரபு
மொழியில் படையினர்கள்
“வேலிக்கு
அருகே வருபவர்கள் தங்கள் உயிருக்குத் தாங்களே பொறுப்பு”
என்று
“இஸ்ரேலிய
பக்கத்தில் மஜ்டன் ஷம்ஸில் வாழும் மக்களை ஒலிபெருக்கியில் ஆர்ப்பாட்டக்காரர்களை
எச்சரித்தபோது அவர்களிடம் சுடுவதை நிறுத்தமாறு மன்றாடினார்கள்”
என்றும் அது
குறிப்பிட்டுள்ளது.
மஜ்டல்
ஷம்ஸில் வசிக்கும் ஆப்பிள் உற்பத்தியாளர் பௌத் அல்-ஷார்
ராய்ட்டர்ஸிடம் கூறினார்:
அதாவது
“இது
ஒரு அப்பட்டமான துருக்கியச் துப்பாக்கிச் சூடு போலுள்ளது.”
குனீட்ரா
மருத்துவமனையின் இயக்குனரான மருத்துவர் அலி கனான் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்,
94 பேர் காயமுற்றனர்,
அதில்
6 பேருடைய நிலைமை
கவலைக்கிடமாக உள்ளது என்று கூறியதாக
AP செய்தி
தெரிவித்துள்ளது.
ஐரிஷ்
டைம்ஸ்
தெரிவிப்பதாவது:
“இஸ்ரேலிய
தொலைக்காட்சியில் பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நடந்த நிகழ்ச்சி
போல் இது தோன்றுகிறது.
அந்த இடத்தில்
இருந்த நிருபர்கள் காட்சி ஒளிபரப்பாகும்போது அதற்கு அதே நேரத்தில் வர்ணனை
கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இஸ்ரேலின் சனல்
10 தொலைக்காட்சியில்
ஒரு நிருபர் ‘ஹோப்பா’
என்று
கூக்கூரலிட்டார்.
‘ஒரு பாலஸ்தீனிய
இளைஞர் பதுங்கு குழியிலிருந்து ஓடுகிறார்.
இஸ்ரேலிய ஸ்னைப்பர்
ஒருவர் மூன்று முறை அவர்மீது சுடுகிறார்,
ஆனால் குறி
தப்பிவிட்டது என்று தோன்றுகிறது.’”
ஏராளமான
மக்கள் ஒரு டாங்கு-எதிர்ப்புக்
கண்ணிவெடி குனீட்ராவில் வெடித்தபோது காயமுற்றனர் என்று இஸ்ரேல் வானொலி கூறியுள்ளது.
எல்லைக்கு அருகே
மற்றொரு எதிர்ப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது.
மேற்குக்கரையிலுள்ள ரமல்லாவில் கலண்டியா சோதனைச் சாவடிக்கு அணிவகுத்துச் சென்ற
நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களோடும் மோதல்கள் நிகழ்ந்தன.
அதேபோல் எரெஸ்
எல்லையைக் கடக்கும் இடத்தில் காசா ஆர்ப்பாட்ட அணிவகுப்பு ஒன்றிலிருந்த
எதிர்ப்பாளர்களுடனும் மோதல்கள் நிகழ்ந்தன.
துருப்புக்கள்
கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைச் சுட்டனர்.
மேற்குக்கரையில் ஒரு பாலஸ்தீனிய மருத்துவர் ரப்பர் தோட்டாக்களினால்
14 பாலஸ்தீனியர்கள்
காயமடைந்தனர் என்றார்.
இஸ்ரேலியப் படைகள்
“ஸ்கங் மொபைல்”
ஒன்றையும்
பயன்படுத்தினர்.
இது துர்நாற்றம்
வீசும் திரவத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பீய்ச்சி அடித்தது.
ஹெப்ரோனிலும் டெயிர் அல்-ஹடாப்
கிராமத்திலும் சிறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அங்கு இஸ்ரேலிய
எலோன் மோரே குடியிருப்பிற்கு எதிராக அணிவகுப்பு ஆர்ப்பாட்டத்திற்கான முயற்சி
நடந்தது.
கிழக்கு ஜெருசலத்தில்
இசவியா கிராமத்திற்கு அருகே ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்
அணிதிரண்டனர்.
பாதுகாப்புப்
படைகளின் மீது கற்களை வீசினர்.
மௌண்ட் ஸ்கோபஸிற்கு
அருகே இருந்த எதிர்ப்பாளர்கள் ஹடசா பல்கலைக்கழக மருத்துவமனைக்குப் பின்புறம்
நெருப்புக் கோளங்களை வீசினர்.
காயங்கள்
பற்றிப் பல தகவல்கள் வந்துள்ளன.
ஆனால் எண்ணிக்கையில்
வேறுபாடுகள் உள்ளன.
இஸ்ரேலின் சனல்
2 மோதல்களில்
50 பேர் காயமுற்றனர்
என்று தெரிவித்துள்ள நிலையில் மற்ற ஆதாரங்கள்
100க்கும்
மேலானவர்கள் காயமுற்றனர் எனக் கூறுகின்றன.
இந்த
எதிர்ப்புக்களானது ஆறு நாள் போரின் நக்சா தினம் நிகழ்ந்து
44 ஆண்டுகள்
முடிவடைவதைக் குறிக்க நடத்தப்பட்டன.
அப்பொழுதுதான்
இஸ்ரேலியப் படைகள் கோலன் ஹைட்ஸ்,
மேற்குக்கரை மற்றும்
காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றின.
மே
15 அன்று இஸ்ரேல்
துப்பாக்கிச் சூடு நடத்தி,
சிரியா மற்றும்
லெபனான் எல்லைத் தடைகளை வெற்றிகரமாக அகற்றிய
15
எதிர்ப்பாளர்களையேனும் குறைந்தபட்சம் கொன்றது.
இது
1948ம் ஆண்டு
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்டபோது ஏராளமானவர்கள் வெளியேறிய நாள் ஆகும்.
இம்முறை லெபனிய
இராணுவம் இஸ்ரேலுடனான தன் எல்லையில் கூட்டங்கள் கூடுதலை தடை செய்தது.
இஸ்ரேலிய
அரசாங்கம் கட்டவிழ்த்த வன்முறை மற்றும் இஸ்ரேலிய செய்தி ஊடகத்தை அது நடத்தும் முறை
ஆகியவை ஆட்சியானது துனிசியா,
எகிப்திலிருந்து
யேமன் மற்றும் பஹ்ரைன் வரை இப்பொழுது அரபு உலகை அதிர்ச்சிக்கு உட்படுத்திக்
கொண்டிருக்கும் வெகுஜனப் போராட்ட அலையை எதிர்கொள்வதில் பெருகிய முறையில்
திகைப்புள்ளது மற்றும் உறுதிப்பாடற்ற தன்மையக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
உண்மையில்,
வெளியுறவுக் கொள்கை
பற்றிய மோதல்கள் பெருகியிருப்பது தெரியவந்துள்ளது.
ஏனெனில் மூத்த
முன்னாள் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகள் பகிரங்கமாகத் தங்களை பிரதம மந்திரி
பென்ஜமின் நேடன்யாகுவின் கொள்கைகளிலிருந்து ஒதுக்கிக் காட்டுகின்றனர்.
மிகச்
சமீபத்திய மற்றும் மே
15 எதிர்ப்புக்களை
நசுக்கியது பற்றி இஸ்ரேல் அரசாங்கம் மன்னிப்புக் கோரும் நிலையில் இல்லை.
தன் உள்நாட்டு
அரசாங்க எதிர்ப்புக்களை அடக்குவதில் இருந்து மக்களைத் திசை திருப்ப சிரியாதான்
ஊடுருவலைச் செய்கிறது என்றும் கூறுகிறது.
இஸ்ரேலின் தலைமை
இராணுவச் செய்தித்தொடர்பாளர்,
பிரிகேடியர் யோவ்
மோர்டேஷாய் இஸ்ரேலின் விடையிறுப்பு
“அளவானது,
குவிப்புக்
காட்டுவது மற்றும் முறையானது”
என்று விவரித்தார்.
“துரதிருஷ்டவசமாக
நம்மைச் சுற்றியுள்ள தீவிரவாத சக்திகள் இப்பொழுது நம் எல்லைகளை அகற்ற முற்பட்டு நம்
சமூகங்களையும் நம் குடிமக்களையும் அச்சுறுத்துகின்றன.
நாம் அவர்களை
அவ்வாறு செய்யவிட மாட்டோம்”
என்று தன்
காபினெட்டிடம் நேடன்யாகு கூறினார்.
இஸ்ரேலின்
இராணுவத் தயாரிப்புக்கள் பரந்த முறையில் உள்ளன.
ஆயிரக்கணக்கான
துருப்புக்கள் இஸ்ரேலின் காசாப் பகுதி,
லெபனான் மற்றும்
சிரியா,
மேற்குக்கரை முழுவதுமுள்ள
எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்டன.
மஜ்டல் ஷம்ஸ் இராணுவ
ரீதியாக மூடப்பட்டுள்ள பகுதி என்று குறிக்கப்பட்டு,
ஒரு புதிய வேலியும்,
நிலக்கண்ணி
வெடிகளும் புதைக்கப்பட்டன.
இந்தச்
சமீபத்திய இஸ்ரேலிய அக்கிரமத்திற்கான பொறுப்பும் வெள்ளை மாளிகையின் கதவுகளுக்கு
முன்புதான் வைக்கப்பட வேண்டும்.
கடந்த மாதம்
ஜனாதிபதி பராக் ஒபாமா நேடன்யாகுவுடன் ஒரு வாரம் நடத்திய விவாதங்களை முடித்தபின்னர்
மே 22ம்
தேதி வலதுசாரி அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகாரங்கள் குழுவிடம்
(AIPAC) “இஸ்ரேலின்
பாதுகாப்பு பற்றிய அமெரிக்காவின் உறுதிப்பாடு இரும்புக் கவசம் போன்றது”
என்றார் மேலும்
பாலஸ்தீனியர்களுடன் இறுதி முடிவு ஏதும்
“தற்பொழுது
நாட்டிலுள்ள மக்கள் தொகை உண்மைகளின் அடிப்படையைக் கருத்திற்கொள்ளும்”
என்றும்
தெரிவித்தார்.
இஸ்ரேல்
கைப்பற்றியுள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளில் அனைத்து எதிர்ப்புக்களையும் அடக்குவதற்கு
தான் விரும்புவதைச் செய்யலாம் என்பதற்குத் தடையேதும் இல்லை என்ற முறையில்தான் இந்த
விளக்கத்தை நேடன்யாகு ஏற்றுள்ளார்.
நேடன்யாகு
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் காணப்படும் எரியூட்டும் தன்மையின் தீவிரத்தினால்
ஜனவரியில் ஓய்வு பெற்ற முன்னாள் மொசத்தின் தலைவரான மெயிர் டாகன் அவற்றை
“சிறிதும்
பொறுப்பற்றவை,
தீவிரமானவை”
என்று
Yedioth Abronoth
செய்தித்தாளில்
விவரித்துள்ளார்.
தான்
மொசத்தின் தலைவர் என்ற முறையிலும்,
ஷின் பெட் உள்துறைப்
பாதுகாப்பு அமைப்பின் தலைவரான யுவல் டிஷ்கின் மற்றும்
IDF ன் தலைவர் கபி
ஆஷ்கெனசி ஆகிய மூவரும் நேடன்யாகுவையும் பராக்கையும் தவறு இழைப்பதிலிருந்து தடுக்க
முடிந்த நிலை காணப்பட்டது என்று அவர் கூறினார்.
ஆனால் இப்பொழுது
மூன்று பேரும் தற்போதைய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் அகற்றப்பட்டுப்
புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“பீபியை
(நேடன்யாகுவை)
மற்றும்
[பாதுகாப்பு மந்திரி
எகுட்)
பராக்கை நிறுத்துவதற்கு
ஒருவரும் இல்லை”
என்றும் அவர்
கூறினார்.
இஸ்ரேல்
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் ஒளிவுமறைவு இல்லாமல் பகிரங்கமாக
நடப்பதற்கு எதிரான டாகன் எச்சரித்தார்.
இது ஒரு பிராந்தியப்
போரின் மையத்தில் இஸ்ரேலை நகர்த்திவிடும் என்றும் எச்சரித்தார்.
இவருடைய
அறிக்கைகளானது அறிவியல்,
தொழில்நுட்பத்துறை
மந்திரி டானியல் ஹெர்ஷ்கோவிட்சை டாகன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறத்
தூண்டியது.
துறையில்லாத மந்திரி
யோசி பெலட் டாகன் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளுகிறார்,
இஸ்ரேலுக்குத் தீமை
செய்கிறார் என்றும் கூறினார்.
“தான்
நிலைத்திருப்பதற்கு அனைத்தையும் இஸ்ரேல் செய்யும் என வலியுறுத்தும்.
இதில் மாறுதல் இல்லை”
என்றார் அவர்.
ஆனால் கடிமா
எம்.கே.
மற்றும் ஷின்
பெட்டின் முன்னாள் இயக்குனருமான அவி டிஷ்டர்,
“அவர் பேசியது பற்றி
எனக்கு மகிழ்ச்சிதான்….இங்கு
ஒன்றும் செயற்பாட்டுமுறை பற்றிய கருத்துக்கள் இல்லை.
அவர் ஒன்றும் எந்த
நேரம்,
எப்படிப்பட்ட முறையிலான
தாக்குதல் என்பது பற்றி விவாதிக்கவில்லை”
என்றார்.
மொசத்தின்
மூன்னாள் மூத்த அதிகாரியான ரமி இக்ரா
ஜெருசலம்
போஸ்ட்டிடம்
“தான் நினைப்பதைக்
கூறும் உரிமை டாகனுக்கு உள்ளது.
அவருடைய
கருத்துக்கள் பல ஆண்டுகள் பாதுகாப்புத் துறையில் பெற்ற அனுபவத்தை ஒட்டியவை”
என்றார்.
இஸ்ரேல்
இப்பொழுதும் சிரியாவில் ஆட்சி மாற்றம் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளது.
ஆனால் பராக்,
“அசாத் தான்
அதிகாரத்தை இழக்கும் தருணத்தை அணுகியுள்ளார்…அசாத்திற்குப்
பதில் வேறு ஒருவர் பதவிக்கு வருவது பற்றி இஸ்ரேல் பீதி கொள்ளத் தேவையில்லை என நான்
நினைக்கிறேன்”
என்றார்.
வெளியுறவு
மந்திரி அவிக்டர் லிபர்மனும்,
லிபியாவில் நடந்து
கொள்வது போல் சிரியாவில் எதிர்ப்பிற்கு ஆதரவாக மேற்கத்தைய சக்திகள் நடந்து
கொள்ளாதது குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்த நிலையற்ற
நிலைப்பாடுகள்தான் மத்திய கிழக்கில் மக்களுக்கு கொடுக்கப்படும் தகவல்களில்
சேதங்களைக் கொடுக்கின்றன.
இவை சமாதானம்,
பாதுகாப்பு மற்றும்
ஜனநாயகம் என்று இந்தப் பிராந்தியத்தில் நிலைப்பதை அரித்துவிடும்.”
இதற்கிடையில் பாலஸ்தீனிய அதிகாரம் ஜூலை மாதம் பாரிசில் நடக்க இருக்கும் மாநாடு
ஒன்றிற்கு சார்க்கோசி அரசாங்கம் கொடுத்துள்ள அழைப்பை ஏற்றுள்ளார்.
பிரெஞ்சு வெளியுறவு
மந்திரி அலன் யூப்பே நேடன்யாகுவையும் பாலஸ்தீனிய அதிகாரத்தின் தலைவர் மஹ்முத்
அப்பாஸையும் கடந்த வாரம் சந்தித்த பின்னர் சமாதானப் பேச்சுக்களை புதுப்பிக்க
இம்மாநாடு முயல்கிறது.
இரு
தரப்பினரும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டால்தான்,
அதுவும்
மேற்குக்கரையிலும் கிழக்கு ஜெருசலத்திலும் இஸ்ரேல் குடியிருப்புக்களை நிறுவுவதை
நிறுத்தும் என்பதால்தான் அழைப்பை ஏற்றது என்று பாலஸ்தீனிய அதிகாரம் கூறியுள்ளது.
தனக்கு
அவ்வாறு உடன்படும் நோக்கம் இல்லை என்று நேடன்யாகு கூறினார்.
செய்தி ஊடக்திடம்
அவர், “நம்
பிரெஞ்சு நண்பர்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்,
இது பற்றி ஆலோசனைகள்
நடத்தியபின் விடை கொடுப்போம்….
திட்டத்தை ஆராய்ந்து
நம் அமெரிக்க நண்பர்களுடனும் விவாதிப்போம்”
என்றார். |