World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா 

Gates outlines aggressive agenda for US imperialism in Asia

ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான செயற்பட்டியலை கேட்ஸ் ஆக்கிரோஷத்துடன் கோடிட்டுக் காட்டுகிறார்

By Joseph Santolan 
7 June 2011

Back to screen version
 

சிங்கப்பூரில் ஜூன் 4ம் திகதி நிகழ்த்திய உரை ஒன்றில் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ விரிவாக்கத்திற்கான திட்டங்களைக் கொடுத்து சீனாவுடன் மோதலுக்கான நிலையையும் உயர்த்தினார். ஆசிய பாதுகாப்பு உச்சிமாநாட்டின், சர்வதேச பாதுகாப்பு ஆய்வுகள் குழுவின் (IISS) 10வது மாநாட்டில் அவர் கொடுத்த கருத்துக்கள் சீனாவிற்கும் தென்சீனக் கடலில் உரிமை கொண்டாடும் மற்ற நாடுகளுக்கும் இடையே அழுத்தங்கள் பெருகிய நிலையில் வந்துள்ளன.

10வது IISS ஆசியப் பாதுகாப்பு உச்சிமாநாடு, ஷாங்க்ரி-லா உரையாடல் என்று அழைக்கப்படுவது ஜூன் 3 முதல் 5 வரை நடைபெற்றது. முந்தைய ஆண்டுகளில் இராணுவ மற்றும் இராஜதந்திரப் பிரமுகர்கள் சிறப்புக் கூட்டங்களில் முக்கிய பிராந்தியப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவது வழக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளாக கேட்ஸ் இவற்றில் கலந்து கொண்டு, கடந்த ஆண்டு தன்னுடைய உரையை தென் சீனக் கடல் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க எண்ணெய்ப் பெருநிறுவனங்களை சீனா மிரட்டுவதுபொறுத்துக் கொள்ள முடியாதது என்று எச்சரித்திருந்தார். இந்த ஆண்டு சீனப் பாதுகாப்பு மந்திரி முதல் தடவையாக கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் உச்சிமாநாட்டிலும் உரையாற்றினார்.

கடந்த ஆண்டு கேட்ஸின் உரைக்குப் பின்னர் பிராந்திய அழுத்தங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. குறிப்பாக தென்சீனக் கடலின் பூசலுக்குட்பட்ட கடல் பகுதிகள் பற்றி. இக்கடல் பகுதிகள் ஒரு முக்கியமான கடல்வழிப் பாதை ஆகும். கடலுக்கடியேயுள்ள பகுதியில் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் உள்ளன. சீனா, தைவான், வியட்நாம், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றால் தென் சீனக் கடல் முற்றிலும் அல்லது பகுதியாக உரிமை கொண்டாடப்படுகிறது. பிராந்திய பிளவு தீவிரமடைந்துள்ளமையானது உலகப் பொருளாதார நிலைமை முறையாக சீர்குலைந்து வரும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயுள்ள ஆழ்ந்த மோதலில் பிரதிபலிப்பாகிறது.

கடந்த இரு வாரங்கள் இரு மோதல்களைக் கண்டன. மே 26ம் திகதி வியட்நாம் அதன் அரசிற்கு சொந்தமான நிறுவனமான பெட்ரோவியட்நாம் என்னும் எண்ணெய் ஆய்வுக் கப்பலால் போடப்பட்ட கேபிள்களை சீனா வெட்டிவிட்டது எனக் குற்றம் சாட்டியுள்ளது. அக்கப்பல் ExxonMobil மற்றும் கனேடிய எண்ணெய் நிறுவனம் டாலிஸ்மன் எனேர்ஜி ஆகியவற்றிற்காக எண்ணெய் தோண்டுவதற்கு முன் சில அளவைகளை மேற்கொண்டிருந்தது.

மே 31ம் திகதி சீனா புதிய இராணுவ நிலையங்களை மக்கள் வசிக்காத ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டங்களில் கட்டமைக்கத் தொடங்கியுள்ளது என்று பிலிப்பைன்ஸ் கூறியது. சீனத் தூதரைத் தருவித்து இக்கட்டமைப்பு 2002 ASEAN-சீன தென்சீனக் கடல் பற்றிய புரிந்துணர்வு பிரகடனத்தைத் தெளிவாக மீறியதுஎன்று கண்டனம் தெரிவித்தது. அந்த உடன்பாடு பூசலுக்குட்பட்ட கடல்ப் பகுதிகளில் அனைத்து நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உச்சிமாநாட்டில் முதலாவது சிறப்புப் பேச்சாளராக கேட்ஸ் இருந்தார். அவருடைய உரை சீனாவை நோக்கி வீசப்பட்ட குண்டுபோல் ஆகும். மேலும் இப்பிராந்தியத்தில் சீன விரிவாக்கத்தை எதிர்க்குமாறு பிராந்திய நட்பு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பும் ஆகும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு விரிவான அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டிற்கான செயற்பட்டியலை அது தொகுத்துக் கொடுத்து, இப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்று தீவிரமாகவும் எச்சரித்தது.

தான் கூறுவது அனைவருடைய மனத்திலும் முதலில் உள்ளதுஎன்று சுட்டிக்காட்டிய வகையில் கேட்ஸ் தன்னுடைய உரையைத் தொடங்கினார்அதாவது அமெரிக்காவின் பொருளாதார சக்திச் சரிவும் அதன் இராணுவ ஆதாரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுதலும். அமெரிக்காவின் உலகந்தழுவிய ஈடுபாடுகளின் நம்பகத்தன்மை கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர். “ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நீடித்த, பெரும் செலவுகளைக் கொடுத்த போர்களை நடத்தி வருவது அமெரிக்க இராணுவத்தின் தரைப் படைகளுக்கு வலுவைக் குறைத்துள்ளது, வருங்காலத்தில் அமெரிக்க மக்களின் இதேபோன்ற தலையீடுகளுக்கான பொறுமை, ஆர்வம் இவற்றையும் தகர்த்துவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. உள்நாட்டைப் பொறுத்தவரை, அமெரிக்கா பெரும் வரவு-செலவுப் பற்றாக்குறைகள், பெருகிய கடன் இவற்றைக் கொண்ட தீவிர மந்த நிலையில் இருந்து மெதுவாக வெளிப்பட்டுவருகிறது, இவை அமெரிக்க பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் புதிய கண்காணிப்பு மற்றும் கீழ்நோக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளன.”

ஆனால் இவற்றில் எதுவும்அமெரிக்க மக்களிடத்தில் பெருகியுள்ள எதிர்ப்பு உட்படவாஷிங்டனை தடுக்கவில்லை என்பதை கேட்ஸ் தெளிவாக்கினார். “ஆசியாவில் அமெரிக்க நிலைப்பாடு கணிசமாக வளர்தல், பரப்பு அதிகரித்தல் ஆகியவற்றைக் காண்போம் என எதிர்பார்க்கலாம்என்றார் அவர். கூடுதலான இராணுவ நிலைப்பாடு ஆசிய பசிபிக் பகுதியில் பாதுகாப்பு முயற்சிகளை நிறுவும், இப்பகுதியோ புவியியல் ரீதியாக பிரிந்துள்ளது, செயற்பாட்டு முறையில் எதிர்த்து தாங்கி நிற்கும் தன்மையைக் கொண்டது, அரசியல் அளவில் நீடித்திருக்கக் கூடியது. இந்நிலைப்பாடு நம் வடகிழக்கு ஆசிய ஈடுபாட்டைத் தக்க வைத்துள்ளது, அதே நேரத்தில் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய பெருங்கடலிலும் நம் நிலைப்பாட்டை அதிகரித்துள்ளது.”

இந்த இலக்கை அடைவதற்கு அமெரிக்கா சிங்கப்பூரில் Littoral Combat Ships என்னும் புதிதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள அமைப்பின் மூலம் செயல்படும். அங்கிருந்துதான் முக்கிய மூலோபாய மலாக்கா ஜலசந்தி (நீரிணைப்பு) பாதுகாக்கப்படும். “வரவிருக்கும் ஆண்டுகளில் அமெரிக்க இராணுவம் பெருகிய முறையில் அதன் துறைமுகங்களுக்குச் செல்லுதல், கடற்படைப் பயிற்சிகள், பன்முகப் பயிற்சி முயற்சிகள் பிராந்தியத்திலுள்ள பல நாடுகளுடனும் அதிகப்படுத்தும்.”

தடையற்று கடலில் பயணிக்கும் சுதந்திரம் பற்றி அமெரிக்காவிற்கு முக்கிய தேசிய நலன் உண்டு என்று கேட்ஸ் வற்புறுத்தினார். அமெரிக்க இராணுவம் ஏற்கனவே ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரினால் அதிக பளுவில் இருந்தாலும், அது முக்கிய நவீனப்படுத்தம் திட்டங்களை மேற்கொள்ளும். அவற்றுள் ஒன்று வானத்தில் நாம் காணும் முக்கிய பாதுகாப்பு பற்றிய சவால்களாகும். அதாவது புதிய தடைக்குட்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களும் ஆயுதங்களும் முக்கிய கடல் பாதைகளில் அமெரிக்கப் படைகள் வராமல் தடுத்து நிறுத்தக்கூடும், தொடர்புகளையும் தடுக்கக்கூடும் என்ற நிலை உள்ளது.” இந்த உறுதிமொழி பெய்ஜிங்கிற்கு எதிராக இயக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை. அமெரிக்கத் தூதர்களும் இராணுவ அதிகாரிகளும் பல முறையும் சீனாவிற்கு எதிராக அது தென்சீனக் கடலில் வணிகப்பாய்வு மற்றும் கடல் போக்குவரத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சீனப் பாதுகாப்பு மந்திரி லியங் குவங்லி ஒரு கடுமையான, ஆனால் வேண்டுமென்ற சமரசம் நிறைந்த உரையைக் கொடுத்தார். பிராந்தியத்தில் பெருகும் அழுத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவதை சாமர்த்தியமாகத் தடுத்த அவர், தைவான் பற்றியோ சமீபத்தில் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸுடனான நிகழ்வுகளைப் பற்றியோ குறிப்பிடவே இல்லை. கேள்வி-பதில் தொடர் முடிவடையும் நேரத்தில்தான், அமெரிக்க Foreign Policy ஏட்டின் நிருபரால் பலமுறை அழுத்தம் கொடுக்கப்பட்டபோது அவர் கேட்ஸ் கூற்றுக்கள் பற்றி சற்றே எரிச்சலுடன் பதில் கொடுத்தார். கடல் பயணத்தின் சுதந்திரம் ஒருபொழுதும் தடைக்கு உட்படுத்தப்படவில்லை. அது ஒரு பிரச்சினையாக இருந்தது இல்லை, தென் சீனக் கடலில் நிலைமை உறுதியாகத்தான் உள்ளதுஎன்றார்.

இதற்கு மாறாக கேட்ஸின் சொற்கள் முழுவதுமே தீவிர மோதல் தன்மையைத்தான் கொண்டிருந்தன. “அமெரிக்காவின் எதிர்த்து நின்று மீளும் தன்மை, உறுதிப்பாடு மற்றும் அடித்தளத்திலுள்ள சக்தி ஆகியவற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்திய சர்வாதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களால் வரலாற்றின் குப்பைக்கூடை நிறைந்துள்ளதுஎன்று தன்னுடைய முடிவுரையில் கூறினார். இது சீனாவிற்குச் சிறிதும் மறைப்பு இல்லாத அச்சுறுத்தல்தான்.

உச்சிமாட்டிற்கு முன்னதாகக் கொடுத்த பேட்டி ஒன்றில் கேட்ஸ் கூறினார்: “சீனர்கள் சோவியத் அனுபவத்தில் இருந்து ஒரு சக்திவாய்ந்த படிப்பினையைக் கற்றுள்ளனர். அவர்கள் ஒன்றும் அமெரிக்காவுடன் முழு இராணுவத் திறன்கள் பற்றி எல்லா இடங்களிலும் போட்டியிட முயற்சிக்கவில்லை. ஆனால் ஆசியாவில் தங்களுக்குக் கணிசமான சுதந்திரம் கொடுக்கும் செயற்பாடுகளைக் கட்டமைக்க முற்படுகின்றனர் என்று நினைக்கிறேன். அதேபோல் தங்கள் செல்வாக்கையும் விரிவாக்க முயல்வர்.” அவருடைய உரை தெளிவாக்கியதுபோல், அமெரிக்க இதை எதிர்கொள்வதற்கு சோவியத் ஒன்றியத்திடம் காட்டியதைவிடச் சற்றும் குறைவற்ற ஆக்கிரோஷத்தைத்தான் காட்ட விழைகிறது.

கேட்ஸின் உரை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலால்  ஜூன் 6ம் திகதி ஒரு கருத்துக் கூறும் கட்டுரையில் பாராட்டப்பட்டது. அது பெரும் பரபரப்புடன் பெய்ஜிங் அநேகமாக எல்லா பிராந்திய நாடுகளும் அமெரிக்காவுடன் பிணைப்புக் கொள்ள விரும்புகின்றன என்ற அசௌகரியமான உண்மையை எதிர்கொள்வதுடன் ஆசியாவில் அமெரிக்க மூலோபாய மேலாதிக்கத்தை எப்பொழுதும் நிலைநிறுத்தவும் தீவிரமாக தந்திரோபாயம் செய்கின்றன என்பதையும் எதிர்கொள்கிறதுஎன்று தம்பட்டம் அடித்துள்ளது.

ஆனால் மற்ற உச்சிமாநாட்டு உரைகள் நிரூபித்துள்ளது போல், தீவிர தந்திரோபாயங்களைவிட அதிகமானவை நடந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஆதரவினால் ஊக்கம் பெற்ற வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றின் பாதுகாப்பு மந்திரிகள் தீவிரமாக பேசி தென் சீனக் கடலில் சமீபத்திய நிகழ்வுகள் பற்றி குறிப்பாகச் சுட்டிக் காட்டினர்.

வியட்நாமின் பாதுகாப்பு மந்திரி ஜெனரல் புங் குவங் தனஹ் வெளிப்படையாக சீன வியட்நாம் கப்பல்களுக்கு இடையே மே 26 அன்று நிகழ்ந்த மோதலை மேற்கோளிட்டுக் கூறினார்: “இதே போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காது என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.” தென் சீனக் கடலில் அனைத்துப் பகுதிகளுக்கும் உரிமை என்னும் சீனாவின் கூற்றிற்கு சர்வதேச சட்டத்தில் இடமில்லை என்று தனஹ் வலியுறுத்தினார். துணைப் பாதுகாப்பு மந்திரி எல்குயென் சி வின் ஒரு பேட்டியில் கூறினார்; “எந்த தரப்பாவது விரிவாக்கத்திற்கு முற்பட்டால், வியட்நாம் தன் இறைமையைக் காத்துக் கொள்ளச் செயற்படும். வெறுமே உட்கார்ந்து கொண்டு பார்த்திருக்க மாட்டோம்.”

சீனாவின் நடவடிக்கைகள் பிலிப்பைன்ஸிற்கு கவலை, அக்கறைஆகியவற்றைக் கொடுத்துள்ளது என்று அவர் அறிவித்தார். ஆதார இருப்புக்களை ஆய்வு செய்யும் தனியார் வணிக நிறுவனங்கள், அதாவது எண்ணெய் தோண்டுதல், போன்றவை அச்சறுத்தலுக்கு உட்படுகின்றன. பூசலுக்குட்பட்ட தீவுகளில் கட்டமைப்புக்கள் நிறுவப்படுதலை காஸ்மின் கண்டித்தார். ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்கத் தூண்டுதலில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அக்வினோ தான் இதே பூசலுக்குட்பட்ட தீவுகளில் இராணுவ நிலையங்களைக் கட்டமைக்கத் தொடங்குவேன் என்று கூறியதை அவர் இப்பொழுது குறிப்பிடவில்லை. சீனர்களுடைய கட்டமைப்புச் செயல் பிலிப்பைன்ஸ் செய்ய இருந்ததை முன்கூட்டியே செய்துவிட்டது.

பிலிப்பைன்ஸில் விடையிறுப்பு மற்ற ஆயுத சக்திகளுடன் சேர்ந்து கடல் பயணம், அமைதி ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்என்று காஸ்மின் பலமுறையும் வலியுறுத்தினார். “மற்ற சக்திகளுடன் மிக வலுவான உறவுகளைபிலிப்பைன்ஸ் தொடரும், அதையொட்டி அது அதன் அமைதிக்குத் தொந்திரவு கொடுக்கும் சக்திகளிடம் இருந்துஅச்சமற்று இருக்கும் என்றார் அவர். “சக்திகள்என்னும் மறைமுகச்சொல் தெளிவாக இல்லை என்றால், பேச்சு முடிந்தபின் கொடுக்கப்பட்ட பேட்டி ஒன்று வெளிப்படையாக இருந்தது. சீனா தவறாக நடக்காமல் இருப்பதற்கு இப்பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் இருப்பது முக்கியம் என்றார் அவர். “பூனை நகர்ந்துவிட்டால் எலிகள் விளையாடித் திரியும்என்றார் அவர். அமெரிக்கா தென்சீனக் கடல் பகுதி மீது தன் செல்வாக்கான சக்தியை கொள்ள வேண்டும்என்று அவர் வலியுறுத்தினார்.

வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் பிற ASEAN உறுப்பு நாடுகளும் ஆபத்தான சமநிலை விளையாட்டில் ஈடுபட்டுள்ளன. அவற்றின் பெரும் வணிகப் பங்காளியான சீனாவிடத்தில் பொருளாதாரத்தில் நம்பியிருக்கும் நிலையில், அவை பெய்ஜிங்கிற்கு எதிரான தங்கள் நலன்களை உறுதி செய்வதற்கு வழிவகையாக கூடுதல் அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டிற்கு ஊக்கம் அளிக்கின்றன. ஒபாமா நிர்வாகத்தின் தென் கிழக்கு ஆசியாவில் ஆக்கிரோஷத் தலையீட்டின் விளைவு பிராந்திய அழுத்தங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றமும் இராணுவ மோதல்கள் மற்றும் பூசல்களுக்கு கூடுதல் திறனும் ஆகும்.