WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
NATO
extends authorisation for Libya bombardment to September
லிபியா
மீது குண்டுத் தாக்குதல்களை செப்டம்பர் வரை விரிவாக்க நேட்டோ இசைவு கொடுக்கிறது
By
Patrick O’Connor
2 June 2011
நேற்று
லிபியாவில் தன்னுடைய இராணுவத் தலையீட்டை இன்னும்
90 நாட்களுக்கு
தொடரவுள்ளதாக நேட்டோ அறிவித்தது.
இது ஜூன்
27 அன்று
முடிவடைந்திருக்கும் ஆரம்ப
90 நாட்கள் விரிவு
செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
எண்ணெய் வளமுடைய வட
ஆபிரிக்க நாட்டின் மீது குற்றம் சார்ந்த குண்டுத் தாக்குதல் செப்டம்பர் இறுதி வரை
தொடரும் என்று கூறப்பட்டுவிட்டது.
வாஷிங்டனும் அதன்
ஐரோப்பிய நட்பு நாடுகளும் முயம்மர் கடாபி தலைமையிலான அரசாங்கத்தை அகற்றிவிட்டு,
திரிப்போலியில் ஒரு
வாடிக்கை அரசாங்கத்தை நிறுவும் நடவடிக்கையை தீவிரப்படுத்தத் தயாராகி விட்டன என்பது
தெளிவு.
90
நாட்கள் விரிவாக்கம்
செய்துள்ளமையானது அனைத்து
28 நேட்டோ நாடுகள்
மற்றும் ஜோர்டான்,
கட்டார்,
ஐக்கிய அரபு
எமிரேட்டுக்கள்,
மொரோக்கோ மற்றும்
ஸ்வீடன் ஆகிவற்றிலிருந்து கலந்து கொண்ட தூதர்கள் பிரஸ்ஸல்ஸில் நடத்திய கூட்டத்தில்
ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டன.
அமெரிக்காவும் அதன்
நட்பு நாடுகளுடன் பின்னர் இந்த விரிவாக்கம் இறுதிக்கெடு இல்லை என்பதை மறுத்தனர்.
பென்டகனின் செய்தித்
தொடர்பாளர் கேணல் டேவ் லாபான் நடவடிக்கை முடிவடைதல் என்பது
“தரையில் நடப்பதைப்
பொறுத்து உள்ளது”,
வாஷிங்டனின்
“நோக்கங்கள்
முழுமையாக அடையப்பெறும் வரை வாஷிங்டன் பணியின் ஒரு பகுதியாக இருக்கும்”
என்றும் கூறினார்.
நேட்டோவின்
தலைமைச் செயலாளர்
Anders Fogh Rausmussen 90
நாட்கள் விரிவாக்கம் பற்றி
ஒரு அறிக்கையை வெளியிட்டார்:
“இந்த முடிவு
கடாபியின் ஆட்சிக்குத் தெளிவான செய்தியை அளிக்கிறது—நாங்கள்
லிபிய மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையைத் தொடர்வதில் உறுதியாக இருக்கிறோம்.
ஐ.நா.
உத்தரவை
நிறைவேற்றுவதில் எங்கள் முயற்சியைத் தொடர்வோம்.”
நேட்டோவின்
போருக்கான இந்த போலிக்காரணங்கள் முற்றிலும் குறைமதிப்பிற்கு உட்பட்டவை ஆகும்.
அமெரிக்கா,
பிரிட்டன் மற்றும்
பிரான்ஸ் ஆகியவை லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான உந்துதலுக்கு ஊக்கம் கொடுத்துள்ளன.
இதற்குக் காரணம்
அண்டைய துனிசியா மற்றும் எகிப்தில் எழுந்துள்ள எழுச்சிகளை ஒட்டி அவற்றின் பிராந்திய
புவி மூலோபாய நலன்களை மீண்டும் உறுதிப்படுத்துக் கொள்ளும் விழைவுதான்.
மேலும் நாட்டின்
வளம் கொழிக்கும் எண்ணெய் இருப்புக்களை சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு
வசதியளிக்கும்,
இன்னும் வளைந்து
கொடுக்கக் கூடிய ஆட்சியை அங்கு நிறுவ வேண்டும் என்பதும் ஆகும்.
நேட்டோத்
தலைவர்கள் இப்பொழுது இராணுவ நடவடிக்கைகள் கடாபியை அதிகாரத்திலிருந்து அகற்றும்
நோக்கத்தைத்தான் மையமாகக் கொண்டுள்ளன என்ற உண்மையை மறைக்க அதிகம் முயலவில்லை—இந்த
இலக்கு ஐ.நா.
அளித்ததாகக்
கூறப்படும் கட்டளையில் இசைவு பெறவில்லை.
இராணுவ
நடவடிக்கையானது கடாபி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எதிராக பலமுறை படுகொலை
முயற்சிகளைக் கொண்டிருந்தன.
ஒபாமா நிர்வாகம்
மற்றும் அதன் பங்காளிகளுக்கு ஐ.நா.
பாதுகாப்புச் சபைத்
தீர்மானம் 1973
சில இராஜதந்திர
மற்றும் போலித்தன சட்டபூர்வ மறைப்பை
ஏகாதிபத்திய
தலையீட்டிற்கு அளிப்பதைத்தவிர வேறு நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.
அமெரிக்க,
பிரிட்டிஷ் மற்றும்
பிரெஞ்சுத் தலைவர்கள் வேண்டுமென்றே லிபியாவில் கடாபி ஆட்சிக்கும் கிழக்குப் பகுதி
நகரமான பெங்காசியில் தளத்தைக் கொண்டிருக்கும் எதிர்த்தரப்புச் சக்திகளுக்கும் இடையே
உள்நாட்டுப் போரை முடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் மூலம் முடியுமா என்ற
நிலைப்பாட்டைச் சேதப்படுத்தியுள்ளனர்.
இத்தாலிய அரசாங்கம்
நிலைமையைத் தீர்ப்பதற்கு கடாபி ஒரு
“அரசியல்
வெளியேற்றம்”
செய்ய அனுமதிக்க
வேண்டும் என்று கொண்டிருந்த கருத்து கடந்த மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்
தலைமை வக்கீலால் வெளியிட்ட லிபியத் தலைவருக்கு எதிரான போர்க் குற்றங்கள் என்ற
கோரிக்கையினால் தகர்க்கப்பட்டுவிட்டது.
நேட்டோவின்
90 நாட்கள் கூடுதல்
குண்டுத் தாக்குதலுக்கான ஒப்புதல் குறைந்தபட்சம் ஆபிரிக்க ஒன்றியத்தின்
கோரிக்கைகளான உடனடி போர் நிறுத்தத்திற்கான ஒரு
“வழிமுறை”,
நேட்டோ குண்டுத்
தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி தேவை என்பதை ஒதுக்கிவிடும் நோக்கத்தை ஓரளவேனும்
கொண்டிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.
தென் ஆபிரிக்க
ஜனாதிபதி ஜாகப் ஜுமா திரிபோலிக்கு திங்களன்று வருகை புரிந்து கடாபியைச் சந்தித்தார்.
பின்னர் அவர்
லிபியத் தலைவர் ஆபிரிக்க ஒன்றியத்தின் வழிமுறையைச் செயல்படுத்தத் தயார் எனக்
கூறியதாகத் தெரிவித்தார்.
இதற்கு நேட்டோ
கொடுத்த விடையிறுப்பு ஜூமா லிபியத் தலைநகரில் இருந்து பறந்து சென்றபின் உடனே புதிய
வான் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டதுதான்.
நேட்டோ
கொடுத்துள்ள புள்ளிவிபரங்களின்படி அமெரிக்க,
ஐரோப்பிய வான்
படைகள் மார்ச் 31ல்
இருந்து 9,183
முறை அப்பகுதியில்
பறந்துள்ளன.
இந்த வாரம் லிபிய
அரசாங்கம் அதன் சுகாதார அமைச்சரகம் மார்ச்
19க்கும் மே
26க்கும் இடையே
சிவிலிய இறப்புக்கள்
718 என்றும்
காயமுற்றோர் எண்ணிக்கை
4,067 எனவும்,
இதில்
433 பேர் தீவிரக்
காயம் அடைந்துள்ளனர் என்று தொகுத்துள்ளதாகக்
கூறியுள்ளது.
லிபிய இராணுவ
இறப்புக்கள் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும்,
ஆனால் அவை
வெளியிடப்படவில்லை.
இறப்பு
எண்ணிக்கையின் உயர்வு நேட்டோவின்
“லிபிய மக்களைப்
பாதுகாத்தல்”
என்னும் கூற்றுக்களை
அம்பலப்படுத்துகிறது.
இன்னும் விரிவாக்கம்
இப்பொழுது தயாராகிறது,
குறைந்தபட்சம்
நான்கு பிரிட்டிஷ்
Apache
ஹெலிகாப்டர்கள் இப்பொழுது லிபிய கடற்ப பகுதியில் மோதலிலுள்ள மிஸ்ரடா நகரை
அண்மிக்கின்றன.
12 பிரெஞ்சு டைகர்
ஹெலிகாப்டர்களும் மத்தியதரைக்கடல் பகுதிக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
லிபியாவில்
ஆக்கிமிப்புத் துருப்புக்கள் கூடாது என்னும் ஐ.நா.
தீர்மானத்தை மீறி
இன்னும் கூடுதலான அமெரிக்க-ஐரோப்பியச்
சிறப்புப் படைகள் தரையிலும் தீவிரமாக உள்ளன என்பதற்கான சான்றுகள் வந்துள்ளன.
இவை திறமையற்ற
அரசாங்க எதிர்ப்புத் துப்பாக்கி படையினர்களை ஒரு சீரான படையாக மாற்ற முற்படுகின்றன.
இந்த வாரம் முன்னதாக
அல்
ஜசீராவானது
6
மேலைநாட்டினர்,
ஐந்து பேர்
ஆயுதமேந்தியவர்கள்,
மிஸ்ரடாவில்
“எழுச்சி”
தளபதிகளுடன்
விவாதங்களை நடத்தியதை வீடியோ படம் பிடித்தது.
இக்குழுவினர்
தாங்கள் படமெடுக்கப்படுகின்றோம் என்பதை அறிந்த உடன் அந்த இடத்தில் இருந்து
ஓடிவிட்டனர்.
பெயரிடப்படாத
“உயர்ந்த ஆதாரங்களை”
மேற்கோளிட்டு
கார்டியன்
இக்குழுவினர் பிரிட்டிஷ் முன்னாள்
SAS சிறப்புப்
படையினர்கள் என்று கூறியுள்ளது.
இக்கட்டுரை நேட்டோ
கூலிப் படைகளைத் தன் குண்டுத்தாக்குதலுக்கு உதவப் பயன்படுத்துகிறது என்பதை
குறிக்கிறது. “முன்னாள்
SAS படையினர்கள்
மற்றும் பிற மேற்கத்தைய தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் இப்பொழுது
நேட்டோவிற்கு லிபியத் துறைமுக நகரமான மிஸ்ரடாவில் இலக்குகளை அடையாளம் காண
உதவுகின்றனர்.
இது முயம்மர்
கடாபியின் படைகளுக்கும் எழுச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான போர் நடக்கும்
இடமாகும்”
என்று செய்தித்தாள்
விளக்கியுள்ளது.
“முன்னாள்
படையினர்கள் பிரிட்டன்,
பிரான்ஸ் மற்றும்
பிற நேட்டோ நாடுகளின் ஆசியுடன் அங்கு உள்ளனர்.
இவை அவர்களுக்கு
தொடர்புக் கருவிகளை வழங்கியுள்ளன.
இவர்கள் பிரிட்டிஷ்
மற்றும் பிரெஞ்சு ஹெலிகாப்டர் விமானிகளுக்குத் தகவல் அளிக்கக் கூடும்,
பிந்தையவர்கள் இந்த
வாரம் மிஸ்ரடாவிலும் அதைச் சுற்றியும் வான் குண்டுவீச்சைத் துவங்குவர் என
எதிர்பார்க்கப்படுகிறது.”
இதேபோன்ற
தகவல் நேற்று டெய்லி
மிரரிலும்
வந்துள்ளது.
அதன்படி
கூலிப்படைகள் பாதுகாப்பு அமைச்சரகத்திடமிருந்து ஊதியம் பெறுகின்றன எனத் தெரிகிறது.
பெயரிடப்படாத ஒரு
மூத்த இராணுவ ஆதாரம் கூறியது:
“இவர்கள்
பிரிட்டனைப் பிரதிநிதிப்படுத்துபவர்கள்—அது
மறுக்கப்பட்டாலும்,
மறுக்கப்படாவிட்டாலும்—மேலும்
பிரிட்டிஷ் அரசாங்கம் இதற்கு பச்சை விளக்கை சுற்றுவளைத்துக் கொடுத்துள்ளது…
தரையில் எங்கள்
காலணிகள் இல்லை என அரசாங்கம் மறுத்துள்ளது அப்பட்டமான மறைக்கும் தன்மைதான் எனக்
கூறப்பட வேண்டும்.”
ஒரு சிறிய
எண்ணிக்கையிலான
(“10
பேர் இருக்கலாம்”)
பிரிட்டிஷ்
சிறப்புப் படையினர் பெங்காசியில்
“ஆலோசகர்களாக”
இருக்கலாம் என்று
லண்டன் ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் மற்றவர்கள்
மிஸ்ரடாவிலோ மற்ற முன்னணிப் பகுதியில் தீவிரமாக உள்ளனர் என்பதை மறுத்துள்ளது.
பெங்காசியிலுள்ள இடைக்கால மாற்றுச் சபை என்பது—முன்னாள்
கடாபி ஆட்சி உறுப்பினர்கள்,
இஸ்லாமியவாத
அமைப்பினர் மற்றும் நாடு திரும்பிய வெளியேறியவர்கள் மற்றும்
CIA
சொத்துக்கள் ஆகியோர்கள்—அமெரிக்க
மற்றும் ஐரோப்பிய சக்திகளால் லிபியாவில்
“ஜனநாயகத்திற்கான”
நெறியான சக்தி என்று
பாராட்டப்பட்டுள்ளது.
இக்கூற்றை மேலும்
அம்பலப்படுத்தும் வகையில்,
ஐ.நா.
மனித உரிமைகள் சபை
நேற்று “எழுச்சியாளர்களை”
போர்க்
குற்றங்களுக்காகக் கண்டனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கடாபியின்
படைகள் மீது இந்த அறிக்கை எதிர்பார்த்தபடி குவிப்புக் காட்டியது,
ஆட்சி
“மனிதகுலத்திற்கு
எதிரான மற்றும் பிற போர்க் குற்றங்களைச் செய்துள்ளது”
என்ற முடிவிற்கு
வந்திருந்தது,
பின்னர்
“எதிர்தரப்பு
ஆயுதமேந்திய படைகள்,
சில சித்தரவதை,
கொடூரச் செயல்களைச்
செய்துள்ளன என்றும் நிரூபணம் ஆகியுள்ளது.
அதை போல் சில மோசமான
செயல்கள் தனிநபர் கௌரவத்திற்கு எதிராக இழிவு தரும் வகையில்,
அவமானகரமான முறையில்
நடத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இவை காவலில்
இருக்கும் நபர்கள் மீதும்,
குடியேறியுள்ள
தொழிலாளர்கள் மீதும் கூலிப்படையினர் எனக் கருதப்படுவோர் மீதும் நடத்தப்பட்டுள்ளன”
என்று கூறியுள்ளது.
இந்தக்
கண்டுபிடிப்புக்கள் பெங்காசியில் கொலைக் குழுக்களின் நடவடிக்கைகளை விவரிக்கும்
அறிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளன.
இக்குழுக்கள் கடாபி
ஆட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இலக்கு கொண்டுள்ளன.
கொலைக் குழுவின்
செயற்பாடுகள் பெங்காசி ஹோட்டல் ஒன்றிற்கு வெளியே நேற்று ஒரு கார்க் குண்டு
தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து முடுக்கிவிடப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த ஹோட்டல்
மாற்றுக்கால தேசிய சபை வருகை புரியும் வெளிநாட்டுத் தூதர்களால்
பயன்படுத்தப்படுவதாகும்.
“எழுச்சித்”
தலைமை உடனடியாக
கடாபியின் நகரத்திலுள்ள
“உறங்கும் குழுதான்”
இதற்குப் பொறுப்பு
என்று குற்றம் சாட்டியுள்ளது. |