WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
Why is the NPA’s
Olivier Besancenot sitting out the 2012 French presidential
race?
புதிய
முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் ஒலிவியே பெசன்ஸெனோ ஏன் 2012 பிரெஞ்சு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை?
By
Alex Lantier
12 May 2011
புதிய
முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் (NPA)
நீண்ட நாள் செய்தித் தொடர்பாளரான ஒலிவியே பெசன்ஸெனோ தான் 2012 ஆம்
ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மே 5 அன்று
அறிவித்தார்.
பிரான்சின்
முதலாளித்துவ அரசியலின் முக்கிய கட்சிகளும் மற்றும் செய்திநிறுவனங்களும்
தமது குறுகிய கால
தேர்தல் வாய்ப்பு
பற்றிய
இந்த அறிவிப்பின்
பின்விளைவுகள் குறித்த ஊகங்களால் நிரம்பி வழிகின்றன. 2002 ஆம் ஆண்டில் தனது 27 ஆம்
வயதில் பெசன்ஸெனோ ஜனாதிபதித் தேர்தலுக்கு நிற்கத் தொடங்கியது முதல் அவருக்குக்
கிட்டி வந்த பரந்த ஊடக விளம்பரம் அவரை இதுவரையான காலத்தில்
NPAவின்
மிகப் பரவலாய் அறியப்பட்ட மனிதராக ஆக்கியிருக்கிறது. இப்போது பெசன்ஸெனோ போட்டியிடாத
நிலையில் 2002 மற்றும் 2007 தேர்தல்களில் அவர் பெற்ற 4 சதவீத வாக்குகளைக்
கைப்பற்றும் நம்பிக்கையுடன் போட்டிக் கட்சிகள் களமிறங்கியுள்ளன.
கூடுதல்
ஸ்திரமான முதலாளித்துவ ஆட்சியின் ஒரு காலகட்டத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியின் (PCF)
தலைமையிலான இடது
முன்னணி மற்றும் பெரு வணிக ஆதரவான சோசலிசக் கட்சி (PS)
[இக்கட்சியுடன்
NPA
நெருக்கமான அரசியல் உறவுகள்
கொண்டிருக்கிறது] போன்ற முதலாளித்துவ
“இடதின்”
மற்ற
வேட்பாளர்களுக்கு இது அனுகூலமளித்திருக்கக் கூடும். இதனால்,
அநேகமாக சர்வதேச
நாணய நிதியத்தின் (IMF)
தலைவரான டொமினிக்
ஸ்ட்ராஸ் கானை தனது வேட்பாளராக நிறுத்தத் திட்டமிட்டு வரும் சோசலிசக் கட்சியின்
செய்தித் தொடர்பாளர் நம்பிக்கையுடன் பின்வருமாறு கூறினார்:
“இதில்
சாதகமான அம்சம் என்னவென்றால்,
இடது வாக்குகள்
பிளவுபடுவதை இது குறைக்கும்.”
இடது முன்னணியின் வேட்பாளரான ஜோன்-லுக் மெலன்சோன் தான் இதில்
ஆதாயமடைவார் என்று மற்றவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் இவை
அத்தகைய காலம் இல்லை. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவெங்கிலும் உள்ள அரசாங்கங்கள்
கோருகின்ற சமூக வெட்டுகளை பற்றி
தொழிற்சங்கங்களும்
மற்றும் முதலாளித்துவ “இடது”
கட்சிகளும்
பேச்சுவார்த்தை நடத்துகின்றன அல்லது நேரடியாக அமல்படுத்துகின்றன என்பதால் மக்கள்
கோபம் எழுந்துள்ளது. வட ஆபிரிக்காவில் புரட்சிகரத் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள்
வெடிக்கின்ற நிலையில்,
பிரெஞ்சு ஆளும்
வர்க்கமானது ”மதச்
சார்பின்மை”யைப்
பாதுகாப்பதான போர்வையில் பர்தா மற்றும் குடியேறிய மக்களது உரிமைகளுக்கு எதிரான ஒரு
இனவாத
பிரச்சாரத்தை ஆழப்படுத்திக்
கொண்டிருக்கிறது. இதனை
NPA, PCF
மற்றும்
PS ஆகியவை
ஆதரித்திருக்கின்றன. மார்ச் மாதத்தில்,
பிரான்ஸ்,
அமெரிக்கா மற்றும்
இங்கிலாந்துடன் சேர்ந்து கொண்டு லிபியாவுக்கு எதிராக வலிந்து ஒரு போரைத் தொடக்கியது,
இதனை
NPA
பாராட்டியது.
பெசன்ஸெனோ
நட்பான அதேசமயத்தில்
”போர்க்குணத்துடனான”
பகுதிநேர அஞ்சல்
ஊழியராக தனது செயற்கையான ஊடகப் பிம்பத்தை எந்தப் பிரமைகளின் மேல் எழுப்பியிருந்தாரோ
அந்த பிரமைகளை நிகழ்வுகள் உடைத்தெறிந்து கொண்டிருக்கின்றன. அதற்குப் பதிலாக,
NPA
உழைக்கும் மக்களின் கவலைகளில் இருந்து வெகுதூரத்திலும்
சம்பந்தமில்லாத நிலையிலும் இருப்பதாக ஒரு உணர்வு அதிகரித்து வருகிறது.
இந்த
மகிழ்ச்சி குன்றிய நிலை தனது பின்வாங்கலை நியாயப்படுத்துவதற்கு பெசன்ஸெனோ எழுதிய
கடிதத்திலும் கூட பிரதிபலிக்கிறது.
NPA
தன்னை மீண்டும் வேட்பாளராய்
நிறுத்துவது “அபாயகரமான
‘கன்சர்வேட்டிவ்’
உணர்வுகளுக்கு
வளைந்து கொடுத்தது போல் ஆகி விடும்,
அதை நாம் செய்யக்
கூடாது,
மற்றவர்களிடம் விட்டு விட
வேண்டும்”
என்றார் பெசன்ஸெனோ.
“இது
என் பார்வையைப் பொறுத்தவரை ஒரு ஏற்றுக்கொள்ளப்படமுடியாத முரண்பாடாகவும் இருக்கும்:
ஒரு பக்கத்தில் அரசியல் ஒரு பண்டமாய் ஆகி விட்ட அமைப்புமுறையை நாம் கண்டனம் செய்து
கொண்டிருப்போம்,
இன்னொரு பக்கத்தில்
’ஒரு
நிரந்தர ஜனாதிபதி வேட்பாளருக்கான’
தொலைக்காட்சி
நேரத்தில் நமது கட்சி மற்றும் சிந்தனைகளை இறுகிப் போகச் செய்வதன் மூலமாக இந்த
மரபுவழியான அரசியல் சூழலுக்குள் நம்மையுமறியாமல் நாம் ஒருங்கிணையத் தொடங்குவோம்.
இது கடைசியில் நம்மை நாமே கேலிக்கூத்தாகிக்கொள்வதாகவும்,
இன்னும் சொல்லப்
போனால் தற்போதுள்ள
அமைப்புமுறையை
நியாயப்படுத்துவோராகவும்
அர்த்தமாகி விடும்.”
பெசன்ஸெனோவே
கூறும் இவை,
பத்து வருடக் கால
பொது வாழ்க்கையில் அவர் ஆற்றியிருக்கக் கூடிய பாத்திரத்தின் ஒரு அடித்துநொருக்கும்
சித்திரமாக இருக்கிறது. அரசியல் ஸ்தாபகத்துக்குள்
NPA
ஒருங்கிணைவதை அடையாளம்
காணும் அவரது திறன் இந்த ஒருங்கிணைவு தம்மையறியாமல் நிகழ்வதல்ல என்பதையும்
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
NPA
இந்த அமைப்புமுறையை
நியாயப்படுத்த,
அரசியல்
ஸ்தாபகத்திற்கு
எதிரான
தொழிலாள வர்க்க
எழுச்சியையும்
மற்றும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச முன்னோக்கின் எழுச்சியையும்
தடுப்பதற்கான ஒரு போலி
“இடது”
மறைப்பாக நனவுடன் செயல்படுகிறது.
ஆளும்
வர்க்கம் துரிதமாக வலது நோக்கித் திரும்பிய விளைவுகள்
NPA.
போன்ற முதலாளித்துவ
“இடது”
கட்சிகளின்
திவால்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நவ பாசிச தேசிய முன்னணியைச் (FN)
சேர்ந்த மரின் லு பென் கருத்துக்கணிப்புகளில் மேலே சென்று கொண்டிருக்கிறார்,
ஏனென்றால் தொழிலாள
வர்க்கத்திலான பெருகும் எதிர்ப்பு மனோநிலை மதிப்பிழந்து விட்ட
“இடது”
எனக் கூறப்படும்
கட்சிகளுக்கான எந்த அதிகமான ஆதரவையும் உருவாக்கவில்லை. எந்தப் புரட்சிகர
முன்னோக்கும் இல்லாமல்
“போர்க்குண”மிக்க
போராட்டங்களுக்கு பெசன்ஸெனோ விடுக்கிற தளர்ச்சியான அழைப்புகள் தான்
“இடது”
என்பதாகக்
காணப்படுகின்ற வரை,
லு பென்னின் தீவிர
வலது ஜனரஞ்சகவாதம் தான் மக்களின் மிகக் குழப்பத்தில் இருக்கின்ற மற்றும் பின்தங்கிய
தட்டுகளுக்கான மிகச் சக்திவாய்ந்த எதிர்ப்பு தேர்வாக
தோன்றுகிறது.
NPA
தனது பிரிவினர்களுக்கு
ஆளெடுக்கும் சமூக அடுக்குகளுக்குள்ளாகவே லு பென்
முக்கிய
அழைப்புவிடுகின்றார்.
அவருக்கான
முக்கியமான புதிய ஆதரவாளர்களில் ஒருவரான தொழிற்சங்க நிர்வாகி ஃபாபியன் ஏங்கல்மேன்
ஒரு முன்னாள் NPA
உறுப்பினராவார்.
இந்த நிலைமைகளின் கீழ்,
பெசன்ஸெனோவின் பின்வாங்கல் லு பென்னுக்குத் தான் அனுகூலமளிக்கும்
என்று ஏராளமான செய்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Marianne
செய்தி இதழ் பின்வருமாறு
கருத்துக் கூறியது:
“பெசன்ஸெனோவின்
வாக்குகள் யாருக்குப் போகும்?
ஜோன் - லுக்
மெலன்சோனுக்கா?
அவர்
NPAஇன்
போட்டிப்
பங்காளி. பசுமைவாதிகளுக்கும்
நிகோலஸ்
ஹுலாட்டுக்கும் செல்லுமா?
[பசுமைக்கட்சித்
தலைவர்] டேனியல் கோன் - பெண்டிட் அவர்களது இயக்கத்துக்கு ஒரு வேட்பாளர் தேவை
என்பதிலேயே உறுதியாக இல்லை. டொமினிக் ஸ்ட்ராஸ் கானுக்கு?
இந்த வேலைநிறுத்தம்
செய்யும் அஞ்சல் ஊழியருக்கும் அந்த சர்வதேச நாணய நிதியத்தின் மிகவும் வணிக ஆதரவான
இயக்குநருக்கும் இடையில் பெரும் பிளவு பிரித்து நிற்கிறது. நிக்கோலோ சார்க்கோசிக்கு?
அவரது
Fouquet
[சார்க்கோசி தனது தேர்தலுக்குப் பிந்தைய வெற்றி விருந்திற்கு ஏற்பாடு செய்த ஒரு
ஆடம்பர உணவு விடுதி] நண்பர்கள் உண்மையில் முதலாளித்துவ எதிர்ப்பாளரல்லர். மரின் லு
பென்னாக ஏன் இருக்கக் கூடாது?
அவரது கதையாடல்
நடப்பு மேற்தட்டினருடன் முறித்துக் கொள்வதாகவும்,
ஐரோப்பாவை கட்டுமான
உடைப்பு செய்வதற்கான விருப்பமாகவும்,
அதனை
அமைப்புமுறையில் தோல்வியடைந்தவர்களின் அணியில் நிறுத்திக் கொள்வதாகவும் இருக்கிறது.
பார்க்கலாம் தேர்தல் வாக்குகள் என்ன சொல்லுகின்றன என்று.”
இறுதியாக
என்ன தேர்தல் முடிவுகள் பொதுமக்களிடம் காட்டப்பட்டாலும் சரி,
பெசன்ஸெனோவின்
அரசியல் பரிணாம வளர்ச்சி பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியலின் வலதுசாரி சரிவுக்கு
சாட்சியமளிப்பதாய் உள்ளது. ஒரு தொலைக்காட்சிப் புள்ளியாக பல ஆண்டு காலம் தான்
தொடர்ந்து திகழ்ந்து வந்ததன் விளைவு தான் இது என்பதாய் அவரது கடிதம் கூறினாலும்,
அவரது அரசியல்
வாழ்க்கையின் (NPAவின்
முன்னோடியான LCRல்)
ஆரம்பம் தொட்டே அவர் பிற்போக்குத்தனமான ஒரு அரச எந்திரத்தின் ஒரு சிறு உறுப்பு
மட்டுமே.
பெசன்ஸெனோவை
முதலாளித்துவ ஊடகங்களில் மக்களின் புகழுக்கு உயர்த்திய 2002 தேர்தல் வேட்பாளர்
போட்டி என்பது சோசலிஸ்ட்
கட்சி
பிரதமரான லியோனல்
ஜோஸ்பன் தனது “பன்முகத்தன்மை
படைத்த இடது”
அரசாங்கத்திற்கான
தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு ஒரு பாதுகாப்பு வால்வாக திட்டமிட்டு ஏற்பாடு செய்து
கொண்ட ஒன்றாகும். அந்த அரசாங்கத்தின் தனியார்மயமாக்கங்களும் மற்றும் வேலை நிலைமைகள்
மீதான தாக்குதல்களும்,
35 மணி நேர வாரச்
சட்டமும் நிறைவேற்றப்பட்டதுடன் சேர்ந்து,
தொடர்ச்சியான
வேலைநிறுத்தங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் இட்டுச் சென்றன.
2002
ஆம் ஆண்டில் ஒரு அவமானகரமான தோல்வியை தழுவிய ஜோஸ்பன்,
ஆளும் ஜனாதிபதி ஜாக்
சிராக் மற்றும்
FN
வேட்பாளர் ஜோன் மரி லு பென் ஆகியோருக்குப் பின்னால்
அதிர்ச்சியூட்டும் வகையில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெளியேற்றப்பட்டார்.
செய்தியாளர்
எரிக் ஹகமேண்ட் எழுதிய பெசன்ஸெனோவின் வரலாறு 2008 புத்தகத்தில் (சமீபத்தில்
NPAவின் புத்தகக்
கடைகளில் விற்பனைக்குக் கிடைத்த இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கத்தின் மீது
NPA
ஆட்சேபிக்கவில்லை)
பெசன்ஸெனோ வேட்பாளராகப் போட்டியிட்டமை அரசின் உயர் மட்டங்களில்
LCR
மற்றும்
PS
நிர்வாகிகளுக்கு இடையே நடந்த இரகசியப் பேச்சுவார்த்தைகளின் விளைவு தான் என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2001
ஏப்ரலில்,
LCR (இப்போது
NPA)
தலைவரான அலன் கிறிவின்
சோசலிஸ்ட் கட்சியின் ஜோன் கிறிஸ்தோபர் கம்படெலிஸை அவரின் கோடை இல்லத்தில்
சந்தித்தார். சோசலிஸ்ட் கட்சி
அரசாங்கத்துக்கான
எதிர்ப்புக்கு தீங்கில்லாத வடிகாலாக சோசலிசக்கட்சியின் இடது பக்கத்தில் இருந்து ஒரு
வகையான வேட்பாளரை ஏற்பாடு செய்வது தான் இந்த சந்திப்பில் கேம்படெலிஸின் நோக்கமாய்
இருந்தது. “சமீபத்திய
சமூக இயக்கங்களின் தீவிரமயமான கோரிக்கைகள் ஒரு அரசியல் வடிகாலைக் காண முடியவில்லை”
என்று அவர் கிறிவினிடம் தெரிவித்தார்.
ஆரம்பத்தில்
கம்படெலிஸ் முன்னாள்
LCR
தொழிற்சங்க நிர்வாகியான
கிறிஸ்தோப் அகிடனை முன்மொழிந்தார்,
ஆனால் பெசன்ஸெனோ தான் அந்த வேலைக்குச் சரியான ஆள் என்று கிறிவின்
அவரை இறுதியில் சமாதானப்படுத்த முடிந்தது.
பிரான்சில்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 500 உள்நாட்டு நிர்வாகிகளின் ஆதரவு வேண்டுமென்பதால்,
தேவையான
கையெழுத்துக்களைப் பெற
LCR
மீண்டும் சோசலிஸ்ட்
கட்சியை
அணுக வேண்டியதானது.
LCR
ஐச் சேர்ந்த பிரான்சுவா
சபடோ 2002 வசந்த காலத்தில் கம்படெலிஸை தொடர்பு கொண்டு
LCR
ஐ வாக்குச்சீட்டில்
இடம்பெறச் செய்ய சோசலிஸ்ட்
கட்சி
ஆதரவளித்தால்
தேர்தலில் இரண்டாம் சுற்றில் சோசலிஸ்ட்
கட்சியை
LCR
வழிமொழியும் என்று வாக்குறுதியளித்தார்.
கம்படெலிஸ்
கூறியிருந்தார்:
“எமது
வேட்பாளரை நிறுத்த 70 அல்லது 80 கையெழுத்துக்கள் தேவை என்று சபடோ கூறினார். இந்தப்
பிரச்சாரத்தில் ஒரு தீவிர இடது வேட்பாளருக்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும் என்று நான்
அவரைக் கேட்டேன்.
’ஜோஸ்பனும்
[கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆளும் வேட்பாளர்] சிராக்கும் ஒன்று தான் என இரண்டாம்
சுற்றில் பெசன்ஸெனோ கூற மாட்டார்’
என்று அவர்
பதிலளித்தார்.”
கம்படெலிஸ்,
ஜோஸ்பன் மற்றும்
சோசலிஸ்ட்
கட்சி செயலரான பிரான்சுவா
ஹோலேண்டுக்கு தகவல் தெரிவித்திருந்தார். பச்சைக் கொடி காட்டப் பெற்ற பின்,
சில நாட்கள் கழித்து
மீண்டும் சபடோவைச் சந்தித்தார். அவர் இவரிடம் கூறினார்:
“நாங்கள்
உறுதியளிக்கிறோம்,
சோசலிஸ்ட்
கட்சிக்கு நேரடியாக
வாக்குக் கோராமல் ஆனால் மிகத் தெளிவான ஒரு அறிவிப்பாக ஒலிவியே அளிப்பார். அது
தெளிவாகவும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதாகவும் இருக்கும். அதாவது,
‘அடிப்படையாக
ஜோஸ்பனையும் சிராக்கையும் ஒன்று என நாங்கள் பார்க்கவில்லை.”
ஆனாலும்
இறுதியில் சோசலிஸ்ட்
கட்சி
மற்றும்
LCR இரண்டுமே
ஜோஸ்பனுக்கான மக்கள் எதிர்ப்பின் ஆழத்தை குறைமதிப்பீடு செய்திருந்தன. முதல்
சுற்றிலேயே அவர் வெளியேற்றப்பட்டது ஒரு பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியது.
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஜாக் சிராக் மற்றும் நவ பாசிசவாதியான லு பென் ஆகிய
இருவருக்கு இடையில் தான் மக்கள் தெரிவு செய்ய முடியும் என்கிற நிலையிலான
தேர்தலுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன. இந்த நிலைமைகளின் கீழ்,
சிராக்குக்கு எதிராக
ஜோஸ்பன் வாக்குக்கு அழைப்பு விடுக்க சபடோ பயன்படுத்தத் திட்டமிட்ட அதே நேர்மையற்ற
வழிமுறையை LCR
பயன்படுத்தியது,
ஒரே வித்தியாசம் லு
பென்னுக்கு எதிராக சிராக்குக்கு வாக்களிக்க அழைப்பு விடுவதாய் இது இருந்தது.
தேர்தலைப்
புறக்கணிக்கவும்,
சிராக் பதவியில்
அமர்ந்ததும் செயல்படுத்தவிருக்கும் வெட்டுகளுக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்புப்
பிரச்சாரத்தைத் தயாரிப்பு செய்வதற்கும் அழைப்பு விடுத்து நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழு
LCR,
மற்றும் பிற
“தீவிர
இடது”
பிரெஞ்சுக் கட்சிகள்,
தொழிலாளர் போராட்டம்
(LO)மற்றும்
தொழிலாளர் கட்சி (PT)ஆகிய
அமைப்புகளுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியது.
ஆயினும்
LCR
இந்தக் கடிதத்தைப்
புறக்கணித்தது. ஹகேமாண்ட் கூறுவதன் படி,
தேர்தல் நாள் இரவில்
கிறிஸ்டியான் பிக்கே உள்ளிட்ட முன்னணி
LCR
நிர்வாகிகள்
பொதுமக்களிடையான தங்களது பதிலிறுப்பை பாரிஸில் சோல்ஃபெரினோ வீதியில் இருக்கும்
சோசலிஸ்ட் கட்சி தலைமையகத்துடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சிராக்கை
வழிமொழியவும்,
2002 முதல் 2007
வரையில் அவர் மேற்பார்வையில் நடந்த போர்கள் மற்றும் ஓய்வூதியங்கள்,
சமூக நலங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளிலான வெட்டுகளுக்கு
அரசியல்ரீதியாகப் பொறுப்பேற்கவும் முடிவு செய்தனர்.
ஆயினும்
இந்த விவாதங்கள் எல்லாம் பொதுமக்கள் பார்வையில் இருந்து கவனமாய் மறைக்கப்பட்டன.
LCR
இன் பிற்போக்குத்தனமான
அரைவேக்காடுகள் எல்லாம் பொது அரங்கில்
“தீவிர
இடது”
போலவும் சில சமயங்களில் புரட்சிகரவாதிகளாகவும் தொடர்ந்து காட்டிக்
கொண்டு வந்திருக்கின்றனர். இந்த வேடத்துக்கு அவர்களுக்கு கொழுத்த பரிசுகள் கிட்டின
என்றாலும் இது பெருகிய முறையில் ஒரு கேலிக்கூத்தாக ஆகியது.
சிராக்கை
LCR
வழிமொழிந்ததற்குப்
பிரதிபலனாக,
அவர்களுக்கு வெகுஜன
ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிக்கு தொடர்ந்த அணுகல் கிட்டியது. விவாத நிகழ்ச்சிகள்
முதல் பிரபலங்களுடனான பேட்டிகள் என்பது வரையான நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றன.
இதில் பெசன்ஸெனோவின் அரசியல் வாழ்க்கையில் மிக நினைவுகூரத்தக்க தருணங்களில் ஒன்றாக
2003ல் “எல்லாமே
எங்கோ ஆரம்பிக்கிறது”
(Everything
starts somewhere)என்கின்ற
டனியேலா லும்ப்ரோசோவின் பிரான்ஸ்-3
நிகழ்ச்சியில் அவர்
“சிறந்த
மருமகனாக”
முடிசூட்டப்பட்டார்.
இவ்வாறாக,
பெசன்ஸெனோ நிகழ்வு
என்பது ஆரம்பத்தில் இருந்தே சோசலிஸ்ட்
கட்சி மற்றும்
முதலாளித்துவ ஊடகங்களைச் சார்ந்து தான் இருந்து வந்திருக்கிறது.
LCR
தலைமை இந்த சூழலை நனவுடன்
தழுவிக் கொண்டது. இதன் அர்த்தம் என்னவென்றால் புரட்சிகர அரசியலை விடுங்கள்,
பிரெஞ்சு
முதலாளித்துவத்தின் கொள்கைகளுக்கு எந்த தீவிரமான எதிர்ப்பையும் வழங்கும் திறன் கூட
அவர்களுக்கு இருக்கவில்லை என்பதே ஆகும்.
சோசலிஸ்ட்
கட்சியுடனான அதன் உறவுகளைப் போலவே,
இந்த விவகாரமும்
பொதுமக்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டது. எப்படியிருப்பினும்,
பெசன்ஸெனோவின்
வரலாற்றை எழுதிய ஜூலியன் பீஹெர் குறிப்பிட்டதைப் போல,
LCR கட்சி
உறுப்பினர்களுடனான நேர்காணல்களில்,
பெசன்ஸெனோவின் ஊடக
ஆதரவுடனான இருப்புக்கு விநோதப்பட்ட வகையில் அவருக்கு ஒரு
“புரட்சிகரவாதி”யின்
பிம்பத்தை உருவாக்க அவசியமிருந்தது குறித்து அவர்கள் நனவுடன் இருந்தனர். அவர்
எழுதுகிறார்,
“கட்சிக்குள்ளாக,
யாரும் அதை
மறைப்பதில்லை,
ஊடக விவகாரம் தான்
மிக நுட்பமாய்க் கையாள வேண்டிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. ஊடகங்கள் ஒரு
புரட்சிகரவாதியாக அவரது நம்பகத்தன்மை கெட்டுவிடாத வகையில் அவரைத் தூக்கிவிட
வேண்டும்.”
இந்த
விவகாரம் முன்னால் வந்ததற்குக் காரணம் ஒரு
“புரட்சிகரவாதி”
பெருநிறுவன
ஊடகங்களால் பிரான்சின் மிக விரும்பத்தக்க மருமகனாக கொண்டாடப்படுகின்ற சிந்தனை
பெசன்ஸெனோவுக்கே கொஞ்சம் அசவுகரியத்தை அளித்திருந்தது என்பதால் தான். ஆயினும்
LCR
தலைமையும் கிறிவினும் இவரைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் தோற்றமளித்து வர குறிப்பாக
வற்புறுத்தி வந்தனர்.
பீஹேர்
தொடர்ந்து கூறுகிறார்:
“அலன்
கிறிவினைப் பொறுத்தவரை,
[ஊடகங்களுடனான]
இத்தகைய ஒத்துழைப்பு கட்டாயமானது,
அதனை ஒலிவியே
விரும்பாவிட்டாலும் சரி. இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்குபெற மறுப்பதானது அவரைக்
காணாமல் போகச் செய்து விடும். இந்த தீவிர-இடது கட்சிகளைப் பொறுத்தவரை,
’வெகுஜன
வர்க்கங்கள் எல்லாம் அரசியலில் இருந்து மிகவும் அந்நியப்படுத்தப்பட்டு விட்டன,
அவற்றுடன் தொடர்பு
கொள்வதற்கு பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் நட்சத்திரங்களாய் பங்குபெற்றாக
வேண்டியிருக்கிறது’.”
இந்த
விரக்தியடைந்த நாட்டாண்மைத்தனமான முன்னோக்குக்குப் பின்னால் முதலாளித்துவத்தின் புற
நெருக்கடி (இது ஒரு சில வருடங்களுக்குப் பின்னர் 2008 உலகப் பொருளாதார
நெருக்கடியில் வெடித்தது)
குறித்த ஒரு
தீவிரமான குறைமதிப்பீடு மட்டும் அமைந்திருக்கவில்லை;
பாட்டாளி
வர்க்கத்திற்கு எந்த அரசியல்,
புரட்சிகர
விண்ணப்பமும் செய்யப்பட முடியாது என உறுதியாய் நம்புகிற கல்வியாளர்கள் மற்றும்
தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் அடுக்குகளில் இருந்து - இவற்றில் இருந்து தான்
LCR
பெருமளவில் தனது உறுப்பினர்களைப் பெறுகிறது - தொழிலாள வர்க்கத்தை நோக்கிப் பாயும்
ஆழமான புற குரோதத்தையும் இது பிரதிபலிக்கிறது.
இந்த
முன்னோக்கு முழுமையாக நிகழ்வுகளால் மறுதலிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில்,
துனிசியாவிலும்
எகிப்திலும் மாபெரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் ஜனாதிபதி ஜைனுல் அபிதின் பென்
அலி மற்றும் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் ஆகிய நீண்ட கால சர்வாதிகாரிகளை கழுத்தைப்
பிடித்து வெளியேற்றியிருக்கின்றன என்பதோடு,
அரபு உலகம் முழுவதிலுமான முதலாளித்துவ ஆட்சிகளை ஆட்டம் காணச்
செய்திருக்கின்றன. நிதி உயரடுக்கினருக்கு டிரில்லியன் கணக்கான தொகையைக் கையளித்த
பெரும் பிணையெடுப்புகளுக்கு பின்னர் ஆளும் வர்க்கத்தால் கோரப்படும் சமூக
வெட்டுகளுக்கு எதிரான மாபெரும் போராட்டங்களை ஐரோப்பாவும் அமெரிக்காவும்
கண்டிருக்கின்றன.
அதிகரித்து
வரும் வர்க்கப் போராட்டம்
NPA
ஐ ஆளும் வர்க்கத்துடன்
இன்னும் நெருக்கம் பாவிக்கத் தள்ளியிருக்கிறது. 2010 அக்டோபரில் எண்ணெய் நிறுவன
ஊழியர்களின் வேலைநிறுத்தத்தின் போது,
பெருந்திரளான
ஆர்ப்பாட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஆர்ப்பாட்டங்களுக்கு
இடையே, NPA,
ஜனாதிபதி நிக்கோலோ
சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு தொழிற்சங்கங்களின் மவுனமான ஒப்புதலை ஆதரிக்கும்
வகையில்,
போலிஸ் வேலைநிறுத்த
உடைப்புக்கு எதிரான
“விளையாட்டுத்தனமான”
ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டும் அழைப்புவிடுத்தது. வேலைநிறுத்தம்
உச்சத்தில் இருந்த சமயத்தில் பெசன்ஸெனோவே கூட ஒரு வாரத்துக்கும் மேல் மக்கள்
பார்வையில் இருந்து மறைந்து விட்டிருந்தார்.
பெசன்ஸெனோவின் நிலைமைகள் மிகவும் வசதியானதாகிவிட்டதால் அவர் தனிப்பட்ட வாழ்க்கைக்கு
முன்னுரிமை கொடுத்துச் செல்வதாய் தோன்றுகிறது. 2003 ஆம் ஆண்டில்,
முன்னாளில்
Flammarion
என்கிற பெரும் புத்தக
வெளியீட்டு நிறுவனத்தில் அரசியல் எழுத்துக்களின் தலைமை ஆசிரியராக இருந்து இந்நாளில்
Don Quixote
புக்ஸ் என்கின்ற வெளியீட்டு நிறுவனத்தின் உரிமையாளராக
மாறியிருக்கும் ஸ்ரெபானி செவ்ரியேரை அவர் திருமணம் செய்து கொண்டார்.
ஒரு அரசியல்
பிரபலமாக சர்வதேசரீதியாக பயணங்கள் மேற்கொள்வதையும் அவர் எடுத்துக்
கொண்டிருக்கிறார். பிரான்சில் இருந்து கொண்டு அவர் செய்வதைப் போல் பிரெஞ்சு
ஏகாதிபத்தியத்தின் அரசியல் தேவைகளுக்கு இணங்கிச் செல்வதான ஒரு பாத்திரமே இது. ஜனவரி
மாதத்தில்,
துனிசியாவின்
முன்னாள்-ஸ்ராலினிச எடாஜ்டிட் இயக்கம் மற்றும் துனிசிய மாவோயிச தொழிலாளர்
கம்யூனிஸ்ட் கட்சி (PCOT)
போன்ற குட்டிமுதலாளித்துவக் கட்சிகளுடன்
NPA
தனது உறவுகளை ஆழப்படுத்திக்
கொண்டிருந்ததொரு சமயத்தில் இவர் துனிசியாவுக்கு விஜயம் செய்தார். இந்தக் கட்சிகளில்
பலவும் இப்போது துனிசிய அரசாங்கத்தில் இருக்கின்றன,
இங்கு உட்கார்ந்து கொண்டு துனிசியாவில் ஒரு புதிய முதலாளித்துவ
ஆட்சி உருவாவதற்கு தோன்றுகின்ற தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை வெல்வதற்கு அவை
முயற்சி செய்து வருகின்றன.
பிரெஞ்சு
ஆதரவு சர்வாதிகாரியான பென் அலியின் வீழ்ச்சியால் உலுக்கப்பட்டிருந்த பிரான்சுக்கும்
அதன் முன்னாள் காலனிக்கும் இடையிலான உறவுகளை மறுஸ்தாபகம் செய்யும் நோக்கத்தோடு
துனிசியாவுக்கு விஜயம் செய்த பிரெஞ்சு முதலாளித்துவ
“இடதின்”
தூதுவர்களின்
வரிசையில் முதலாவதாய் சென்றவர் தான் பெசன்ஸெனோ. பிரெஞ்சு
கம்யூனிஸ்ட்
கட்சித்
தலைவரான
Pierre Laurent
மற்றும் பசுமைக்கட்சியின்
Eva Joly
ஆகியோரும் இந்த வரிசையில் இடம்பெற்றிருந்தனர்.
பிப்ரவரியில் தகார் சமூக மன்றத்திற்கு சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான மார்டின் ஆப்ரி,
கம்படெலிஸ்,
மற்றும் பல
பிரெஞ்சு
கம்யூனிஸ்ட்
கட்சி மற்றும்
பசுமைக்கட்சிப் பிரபலங்களுடன் பெசன்ஸெனோவும் சென்றார். இங்கு ஆப்ரி பிரேசிலின்
முன்னாள் ஜனாதிபதி லுலா டா சில்வாவை சந்தித்துப் பேசினார். அந்த சமயத்தில் பிரெஞ்சு
ஏகாதிபத்தியமானது,
பிரெஞ்சு தயாரிப்பான ரபேல் போர் ஜெட் விமானங்களை பிரேசில் வாங்கும்
என்கிற நம்பிக்கையில் அந்த ஒப்பந்தத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கின்ற வேலையிலும்
அத்துடன் பென் அலியின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆபிரிக்காவில் உலுக்கப்பட்டிருந்த
தனது கவுரவத்தைப் பாதுகாக்கவும் முனைந்து கொண்டிருந்தது.
L’Express
எழுதியது போல,
”ஆபிரிக்காவில்
பிரான்சின் வெறுக்கத்தக்க பிம்பத்தை திருத்திக்கொ்ள்வதுதான்”
தகாருக்கு சோசலிஸ்ட்
கட்சி பயணம் செய்ததன் முக்கிய நோக்கமாய் இருந்தது. இந்த வேலைக்கு பெசன்ஸெனோ தனது
பெயரை வழங்கினார்,
எப்படி லிபியாவில்
பிரெஞ்சு அரசாங்கம் போரைத் தொடக்கியபோது அந்நாட்டின் குடிமக்களைப் பாதுகாப்பதான
“மனிதாபிமான”
சான்றிதழை
NPA
பின்னர்
வழங்கியதோ அதைப் போல.
பெசன்ஸெனோவின் பரிணாம வளர்ச்சியில் ஒரு ஒட்டுமொத்த அடுக்கின் வளர்ச்சிப் போக்கும்
அத்துடன் அடிப்படையாய் விரக்தியடைந்த,
நடுத்தர வர்க்க
அரசியல் முன்னோக்கு ஒன்றின் விளைவும் அடங்கியிருக்கிறது. இறுதி ஆய்வில்,
பெசன்ஸெனோவின்
அரசியல் வாழ்க்கை என்பது,
ஊடகங்கள்,
அரசியல் ஸ்தாபனம்,
மற்றும் தொழிற்சங்க
அதிகாரத்துவம் ஆகியவை வர்க்கப் போராட்டத்தை சூழ்ச்சியுடன்
கையாளவும்
ஒடுக்குவதற்கும் முடிந்திருந்த ஒரு காலகட்டத்தின் விளைபொருளே.
போட்டியிடுவதில்லை என அவர் எடுத்த முடிவு முதலாளித்துவத்தின் ஆழமடைந்திருக்கும்
அரசியல் நெருக்கடிக்கு சாட்சியம் கூறுவதோடு மட்டுமன்றி தொழிற்சங்க மற்றும் அரச
அதிகாரத்துவங்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக மாபெரும் புரட்சிகரப் போராட்டங்கள்
எழுந்து கொண்டிருப்பதைக் கட்டியம் கூறுவதாகவும் அமைந்திருக்கிறது. |