WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
சீனத்
தொழிலாளர்களிடையே சீற்றம் மிகுந்த எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன
By
John Chan
15 June 2011
Use
this version to print | Send
feedback
குவாங்ஜௌ
மாவட்டத்திலுள்ள ஜெங்செங் என்னுமிடத்தில் ஆயிரக்கணக்கான குடியேறியுள்ள தொழிலாளர்கள்
மூன்று நாட்களாக,
கடந்த
வெள்ளியிலிருந்து,
பொலிசுடன்
எதிர்ப்புக்கள் மற்றும் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்குச் சீன
மாநிலமான குவாங்டோங்கின் தலைநகரில் வெடிப்புத் தோன்றியுள்ளது.
தொழிலாளர்களின்
வாழ்க்கை நிலைமைகளில் ஏற்பட்ட சரிவினால் எரியூட்டப்பட்டுள்ள பெருகிய சமூக
அழுத்தங்கள் தொடர்பான மற்றொரு அடையாளம் இதுவாகும்.
பல
ஆயிரக்கணக்கான பொலிசார் ஜெங்சாங்கில் நிறுத்தப்பட்டனர்.
இது ஒரு துணைத்
தொழிற்துறைச் சிறுநகரமாகும்.
உலகில்
உற்பத்தியாகும் ஜீன்சுகளில் ஆறில் ஒரு பங்கு இங்குதான் தயாராகின்றன.
நகர்ப்புற
நிர்வாகத்தின் பாதுகாப்புப் பிரிவினர் கர்ப்பமாகவிருந்த ஒரு
20 வயது தெருவில்
விற்பனை செய்யும் வாங் லியன்மீயை கடந்த வெள்ளியன்று சாலையில் அவருடைய கடையை அகற்ற
முற்படுகையில் தள்ளியதையடுத்து கலகங்கள் தூண்டுதல் பெற்றன.
இப்பெண்மணியும் அவருடைய கணவரும் ஒரு முக்கிய
“தொழிலாளர்களை
ஏற்றுமதி செய்யும்”
மாநிலமான சிசுவானைச்
சேர்ந்தவர்கள்.
ஊழல் மிகுந்த
பாதுகாப்பு அதிகாரிகள் நீண்ட காலமாகவே குடியேறியுள்ள தொழிலாளர்களை இரண்டாந்தரக்
குடிமக்களைப் போல்தான் நடத்துகின்றனர் என்பதுடன் அவர்கள் மீது அபராதம் விதித்தும்,
சிறு
குற்றங்களுக்காக இலஞ்சங்கள் வாங்குவதுமாக உள்ளனர்.
சீனாவின் நகர்ப்புற
வீட்டுப் பதிவு முறையினால் நாட்டின்
150 மில்லியன்
கிராமப் புறத்திலிருந்து குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அவர்களுடைய
குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளைப்பெறும் உரிமை இல்லை.
வாங்கின்
மீதான தாக்குதல் விரைவில் அவரும் அவருடைய கணவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற
வதந்திகளைக் கிளப்பியது.
இந்நிகழ்வு ஆலைத்
தொழிலாளர்களிடையே அடக்கி வைக்கப்பட்டுள்ள சீற்றத்திற்கு எரியூட்டியது.
தொழிலாளர்கள்
அதிகமாக உயரும் உணவுப் பொருட்களின் விலைகள்,
வீடுகளுக்கான
செலவுகள் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹாங்காங்கிலிருந்து வரும் சிங்டாவோ
டெய்லி
கொடுத்துள்ள தகவலின்படி,
சிசுவானின்
குடியபெயர்ந்துள்ள தொழிலாளர்கள் குழு ஒன்று அம்புலன்ஸில் வாங் எடுத்துச்
செல்லப்பட்ட பொலிஸ்கார்களை தாக்கினர்.
ஏராளமானவர்கள் இதில்
சேர்ந்து கொண்டனர்.
குறைந்தபட்சம்
மூன்று பொலிஸ் கார்களும் ஒரு அம்புலன்ஸ் வாகனமும் அழிக்கப்பட்டன.
சனிக்கிழமை
மாலை உள்ளூர்ப் பாதுகாப்பு அலுவலகத்தின் முன்
100
தொழிலாளர்கள் நடத்திய
எதிர்ப்பு ஒன்று விரைவில்
1,000 பேரை ஈர்த்தது.
South China Morning Post
இடம் ஒரு கடைக்காரர்
கூறினார்: “மக்கள்
அரசாங்க அலுவலகத்தைத் தாக்கி இறுதியில் அதை எரித்துச் சாம்பலாக்கினர்.”
கிட்டத்தட்ட
25 பேர் கேடயங்களைக்
கொண்ட கவச வாகனங்களில் வந்த கலகப்பிரிவு பொலிஸ் வந்தபின் கைது செய்யப்பட்டனர்.
பொலிசார்
நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்று வலியுறுத்தினாலும்,
கிட்டத்தட்ட
1,000 குடியேறியுள்ள
தொழிலாளர்கள் மீண்டும் ஞாயிறன்று பொலிஸ் அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்ததையும்
பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கார்களையும் கட்டிடங்களையும் உடைத்து,
பினிக்ஸ் நகரத்தை
நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
“இது
சந்தைக்கருகேயுள்ள குடியிருப்பு வளாகம் ஆகும்.
அங்கு ஏராளாமான
பொலிசார் மனிதத் தடுப்பு ஒன்றை நிறுவி மக்கள் அதிகமாக வசிக்கும் இடத்தைப்
பாதுகாத்தனர்”
என்று தென்
சீன
மார்னிங்
போஸ்ட்
குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர்வாசிகள் கைபேசி புகைப்படக் கருவியில் எடுத்த வீடியோ புகைப்படங்கள்
“ஆயிரக்கணக்கான
கோபமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வார இறுதியில் அரசாங்கக் கட்டிடங்களுக்கு தீ
வைப்பதையும்,
பொலிஸ் வாகனங்களை
உடைப்பதையும்,
கலகப் பிரிவுப்
பொலிசாருடன் மோதுவதையும் காட்டுகின்றன”
என்று ராய்ட்டர்ஸ்
தெரிவிக்கிறது.
பொலிசார்
கண்ணீர்ப்புகைக் குண்டு போடுதல்,
எதிர்ப்பாளர்களைக்
கலைக்க கவசங்கள் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தியது மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
கைகளில் விலங்கிட்டது ஆகியவற்றை வீடியோக்காட்சிகள் காட்டுகின்றன.
சீன
அதிகாரிகள் பொது உறவுகளைச் சீர்திருத்தவும் முயன்றனர்.
வாங்கின் கணவர்
குவாங்ஜௌ நகரசபை அரசாங்கச் செய்தியாளர் கூட்டத்தில் தோன்றி அவரும் அவருடைய
மனைவியும்,
இன்னும் பிறக்காத
குழந்தையும் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஜெங்செங்கின் மேயர்
வாங்யே இந்த நிகழ்வு
“தெருவில்
விற்பவர்களுக்கும் உள்ளுர்ப் பொதுப் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையே நடக்கும்
சாதாரண மோதல்தான்,
இது சிலரால்
தொந்தரவு கொடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது”
என்று கூறினார்.
உண்மையில்
ஆட்சிக்கு குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்களில் பரந்த அடுக்கினர் இதில் ஈடுபட்டனர்
என்பது நன்கு தெரியும்.
அதிகாரிகள்
திங்களன்று 1,200
வணிகங்களின்
மேலாளர்களுடன் ஒரு கூட்டம் நடத்தி அவர்களிடம் அவர்களுடைய ஊழியர்கள் எந்த
எதிர்ப்பிலும் சேர்வதைத் தடுக்குமாறு உத்தரவிட்டனர்.
“உங்கள் நிலையங்களை
ஒழுங்குற வைத்துக் கொள்ளுங்கள்,
நீங்களே செயல்பட்டு
சமூக உறுதிப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்”
என்று
மேலாளர்களுக்கு கூறப்பட்டது.
ஒரு சில
நாட்களுக்கு முன்பு
200
குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மற்றொரு கான்டோனிஸ் நகரமான ஷாவோஜௌவில் நகரவை
அரசாங்கக் கட்டிடத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த அணிவகுப்பு சில
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கு பெற்ற ஒரு கலகமாக மாறியது.
அதில் நான்கு
கார்கள் அழிக்கப்பட்டன.
பொலிசார்
9 பேரைக் கைது
செய்தனர்.
ஷாவோஜௌ
நிகழ்ச்சி சிசுவானில் ஒரு குடியேறியுள்ள தொழிலாளியின் மகனும் சில உறவினர்களும்
மகனின் முதலாளியிடமிருந்து
3,000 யுவான்
(அமெரிக்க டொலர்
435)
சம்பளப் பாக்கியைக் கேட்டதை
அடுத்து வெடித்தது.
தந்தை இதில்
தாக்கப்பட்டதுடன் மகனுடைய கைகளும் கால்களும் முதலாளி மற்றும் அவருடைய அடியாட்கள்
இருவரால் சேதப்படுத்தப்பட்டன.
இதற்கு அடுத்த நாள்
தொழிலாளர்கள் அரசாங்கக் கட்டிடத்தில் கூடித் தாக்கியவர்களைக் கைது செய்யுமாறு
கோரினார்.
மாறாக பல எதிர்ப்பாளர்கள்
காவலில் வைக்கப்பட்டது கோபத்தை அதிகரித்தது.
முதலாளியும்
அவருடைய கூலியாட்களும் எதிர்ப்புக்கள் ஜேங்சாங்கில் வெடித்தவுடன்தான் ஞாயிறன்று
கைதுசெய்யப்பட்டனர்.
ஏனெனில் இயக்கம்
பரந்த அளவில் தொழிலாளர்களிடையே பரவிவிடுமோ என்று அரசாங்கம் அஞ்சியது.
மற்றொரு
மோதலில்
2,000
எதிர்ப்பாளர்கள் ஹுபேய் மாநிலத்திலுள்ள லிசுவான் நகரத்தை முன்னாள் உள்ளூர் சட்டமன்ற
உறுப்பினர் ரான் ஜியனிக்சன் இறப்பையொட்டி அரசாங்கக் கட்டிடத்தைத் தாக்கினர்.
அவர் பெரும்
செல்வத்தை ஈட்டிக் கொடுத்த நில விற்பனை விவகாரங்களில் அரசாங்க ஊழல் பற்றி விசாரணை
நடத்திக் கொண்டிருந்தார்.
ரான் பொலிஸ்
விசாரணையில் இருந்தபோது ஜூன்
4ம் தேதி
இறந்துபோனார்—இது
1989 தியனன்மென்
சதுக்கப் படுகொலையின் ஆண்டு நினைவு தினம் ஆகும்.
அதில் ஸ்ராலினிச
ஆட்சி மிருகத்தனமான முறையில் அரசாங்க எதிர்ப்பாளர்களைத் துருப்புக்களைக் கொண்டும்
டாங்குகளைப் பயன்படுத்தியும் நசுக்கியது.
நியூ
யோர்க்
டைம்ஸ்
ரானின் குருதி கொட்டிய
சடலத்தைக் காட்டிய ஆன்லைன் புகைப்படங்கள்
“வியாழனன்று பெரும்
கூட்ட ஆர்ப்பாட்டத்தைத் தூண்டியது.
கூட்டம் முட்டைகள்,
பாட்டில்கள் மற்றும்
குப்பைகளை நகரவைக் கட்டிடங்கள் மீது வீசினர்.
எதிர்ப்பையொட்டி
மக்கள் ஆயுதப் பொலிசின் துணைப் பிரிவிலிருந்து ஏராளமானவர்கள் நிறைய கவச வண்டிகளில்
கொண்டுவரப்பட்டனர்”
மக்கள் சீற்றத்தைத்
தணிக்கும் வகையில் இரு உள்ளூர் அதிகாரிகள் காவலில் வைக்கப்பட்டனர்,
மற்றும் இருவர்
பதவியில் இருந்து அகற்றப்பட்டனர்.
இந்நிகழ்வுகள் பெருகிவரும் அதிருப்தியின் பல அடையாளங்களுள் சிலவாகும்.
கடந்த மாதம்
ஆயிரக்கணக்கான மாணவர்களும் கால்நடைகளை மேய்ப்பவர்களும் இன்னர் மங்கோலியாவில் பல
நாட்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இதற்குக் காரணம்
சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக ஈடுபட்டிருந்த உள்ளூர்வாசியும் மேய்ப்பாளர்
ஒருவரும் கொல்லப்பட்டதுதான்.
ஏப்ரல் மாதம்
ஆயிரக்கணக்கான வாகன சாரதிகள் ஷாங்காயில் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு
குறித்து வேலைநிறுத்தம் செய்தனர்.
இத்தகைய
அமைதியின்மை சீனப் பொருளாதாரத்தில் பெருகியுள்ள முரண்பாடுகளில் வேர்களைக்
கொண்டுள்ளது.
வியாழக்கிழமை
வெளியிடப்பட்ட நுகர்வோர் பொருள் விலைக் குறியீடு பணவீக்கம்
34 மாதம் இல்லாத
அளவிற்கு 5.5
ஆண்டு விகிதத்தில்
உயர்ந்துவிட்டதைக் காட்டுகிறது.
உணவுப் பொருட்களின்
விலைகள் 11.7
சதவிகிதம் உயர்ந்தன.
இது தொழிலாள வர்க்க
வீடுகளில் பெரிய அளவு பாதித்துள்ளது.
அதே
நேரத்தில் சீன ஆட்சி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் கடன் கொடுப்பதில்
தடையை ஏற்படுத்தி சிறு மற்றும் நடுத்தர முனைவோரை தாக்கியுள்ளன.
அவர்கள் பல
மில்லியன் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள்.
அக்டோபர்
மாதத்திலிருந்து மைய வங்கிகள் நான்கு முறை வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
மேலும் கடன்
கொடுப்பதைக் குறைக்கும் வகையில் வங்கி இருப்பு விகிதங்களையும் அதிகப்படுத்தியுள்ளன.
சமீபத்திய
கலகங்களுக்கு சற்று முன்பு அனைத்துச் சீன தொழில்துறை மற்றும் வணிகக் கூட்டமைப்பு
(All China Federation
of Industry and Commerce)
போதிய அளவு ரொக்கம்
இல்லாதது ஆலை மூடல்கள் என்னும் அச்சத்தை கொடுக்கிறது என்றும்,
அது
2008 உலக நிதியக்
கரைப்பில் ஏற்பட்டதற்கு ஒப்பாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
அப்பொழுது
20 மில்லியன்
குடியேறியுள்ள தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர்.
புதிய
வேலைநிறுத்த அலைகள் தொடங்கியிருப்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன.
Zegcheg ஜப்பானிய
கார்த்தொழில் பெருநிறுவனம் ஹோண்டாவின் உற்பத்தி நிலையங்களில் இருந்து ஒரு சில கிலோ
மீட்டர்கள் தூரத்தில்தான் உள்ளது.
அங்கு
வேலைநிறுத்தங்கள் கடந்த ஆண்டு குறைந்த ஊதியங்களை எதிர்த்து நடைபெற்றன.
அப்பொழுது
கொடுக்கப்பட்ட ஊதிய உயர்வுகள் விலைவாசி உயர்வுகளை அடுத்து அரித்துப்போயின.
வடகிழக்கு
நகரமான சாங்சுன்னில்,
ஒரு
தென்கொரியாவிற்கு சொந்தமான கும்ஹோ டயர் ஆலையில்
400க்கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் ஜூன்
8ல் இருந்து
12 வரை
வேலைநிறுத்தம் செய்தனர்.
தொழிலாளர்களில்
80 சதவிகிதத்தினர்
அடிப்படை ஊதியமான
870-950 யுவானை
($134-147) மாதம்
ஒன்றிற்குப் பெற்றனர்,
அதிக நலன்களையும்
பெறவில்லை என்று அவர்கள் குறைகூறினர்.
நகரசபை நிர்வாகம்
மோதலை நிறுத்தும் வகையில்
800 யூவான் ஊதிய
உயர்வை அனுமதித்தது மற்றும் தொழில்துறை நடவடிக்கைக்காக தொழிலாளர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படமாட்டாது என்றும் உறுதியளித்தது.
அதிகாரிகள்
சீனாவிலுள்ள மற்ற மூன்று கும்கோ ஆலைகளிலும் மற்ற நிறுவனங்களிலும் கடந்த ஆண்டு
ஹோண்டா வேலைநிறுத்தத்தின் போது ஏற்பட்டது போல் வேலைநிறுத்தங்கள் வந்து விடுமோ என்று
அஞ்சினர்.
சமீபத்திய
அமைதியின்மை சர்வதேசப் பெருநிறுவனங்கள் வட்டத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.
அவை பெரிதும் மிக
அதிகம் சுரண்டப்படும் சீனத் தொழிலாளர்களைத்தான் நம்பியுள்ளன.
“கடந்த மூன்று
வாரங்களாக நகர்ப்புற சீனாவில் வன்முறை அமைதியின்மை அலை என்பது கம்யூனிஸ்ட்
கட்சியின் முயற்சிகளால் சிக்கல் வாய்ந்த,
பொறுமை இழந்த
சமூகத்தின் மீது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியைச் சோதனைக்கு
உட்படுத்தியுள்ளன”
என்று
வோல்
ஸ்ட்ரீட்
ஜேர்னல்
எச்சரித்துள்ளது.
பெய்ஜிங்கின் பொலிஸ்-அரச
நடவடிக்கைகள் அமைதியின்மையை நசுக்குவதற்கு என்பது இந்த பேரழிவு உண்மையில்
அரசாங்கத்திற்கு கலக்கம் கொடுக்கிறது என்பதைத் தெரிவிக்கிறது.
அரசாங்கம் உலகப்
பெருநிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அதிருப்தியை அடக்க எதையும் செய்யும்
என்பதையும் கூறுகிறது.
அரச செய்தி ஏடான
Global Times
திங்களன்று
வலிமையுடன் கூறியது:
“சீனா ஒன்றும்
மக்களின் கூட்டுச் சீற்றம் இருக்கும் ஒழுங்கை மாற்ற முற்படும் நாடு அல்ல.
இத்தகைய இழிந்த
பொய்யை அம்பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது.”
ஆளும்
வட்டங்களிலுள்ள வெளிப்படையான அச்சம் தற்போதைய தனிமைப்பட்ட எதிர்ப்புக்கள் ஒரு பரந்த
அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறக்கூடும்,
அது தற்போதைய
அரசாங்கத்தை மத்திய கிழக்கு,
வட ஆபிரிக்கா
ஆகியவற்றில் நடந்தது போல் வீழ்த்திவிடக்கூடும் என்பதுதான். |