சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The political establishment and the Oslo massacre

ஒஸ்லோ படுகொலைகளும் அரசியல் அமைப்பு முறையும்

Peter Schwarz
27 July 2011
Use this version to print | Send feedback

கடந்த வெள்ளியன்று ஒஸ்லோவில் நடந்த படுகொலைகளை அடுத்து ஸ்தாபன அரசியல் கட்சிகளும் செய்தி ஊடகமும் தங்கள் பின்னணியை மூடி மறைப்பதில் முனைப்புக் காட்டுகின்றன.

32 வயதான கொலைகாரர் ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் தனியே செயல்பட்டாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றாலும் ஒன்று மட்டும் உறுதி: அதாவது அமெரிக்காவின் அனைத்து அரசியல் கட்சிகளினதும் ஆதரவிற்குட்பட்ட, மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ ஸ்தாபனம் மற்றும் செய்தி ஊடகத்தின் ஆதரவைக் கொண்ட முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கும் 76 பேரைக் கொன்ற பாசிஸ்ட்டின் அரசியல் உந்துதல்களுக்கும் இடையே நிச்சயமான தொடர்பு உள்ளது.

திங்களன்று நடைபெற்ற முதல் நீதிமன்ற விசாரணையின்போது ப்ரீவிக் நாட்டினுள் ஏராளமான முஸ்லிம் மக்களை அனுமதித்து நோர்வீஜியக் கலாச்சாரத்தை சீரழித்துவிட்டதால் நோர்வேயின் சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் மீது மிக அதிகச் சேதத்தை ஏற்படுத்த விரும்பியதாக அறிவித்தார். அவருடைய இஸ்லாமிய எதிர்ப்பு பிளக் வலைத் தள கட்டுரைகள் மற்றும் 1,500 பக்க அறிக்கை ஆகியவற்றிலிருந்து ப்ரீவிக் முஸ்லிம் குடியேறியவர்கள் மற்றும் அவர் கருதிய மார்க்ஸிஸ்ட், இடது, பன்முகக் கலாச்சாரம் மற்றும் அரசியலில் உண்மைஆகிய அனைத்தின் மீதும் தன் இரத்தவெறித் தாக்குதலை நடத்த விரும்பினார் என்பது தெளிவு. அவர் நோர்வீஜிய தொழிற் கட்சியை இலக்கு கொள்ள முற்பட்டதின் காரணம் அவர், அதை ஒரு மார்க்சிச கட்சியாகவும்,  குடியேறுபவர்கள் சார்புடையது என்று தவறாகக் கருதியதுதான்.

ப்ரீவிக்கின் வெளிப்படையான பாசிசச் செயல்கள் மற்றும் நன்கறியப்பட்டுள்ள தீவிர வலதுசாரித் தொடர்புகளாலும், இன்னும் துல்லியமாக கூறினால் அவற்றால்தான் செய்தி ஊடகம் அவருடைய கொடூரத்தை எடுத்துக் காட்டும் அரசியல் பிரச்சினைகளை மூடிமறைக்கப் பெரும் முயற்சிகளை எடுத்து, அவர் ஒரு தனியான மனநிலை குழம்பியவர் என்பதைத்தவிர வேறு ஏதும் இல்லை எனச் சித்திரிக்க முற்பட்டுள்ளது. ஆனால் அவருடைய கருத்துக்கள் ஒன்றும் ஒரு தனிநபரின் நோய்வாய்ப்பட்ட மன நிலையின் உருவாக்கங்கள் அல்ல, மாறாக ஒரு நோய்வாய்ப்பட்ட சமூக அமைப்பு முறையின் விளைவுகள்தாம்.

அவர் தன்னுடைய இணையத்தள வெளியீட்டிற்கு முஸ்லிம்-எதிர்ப்பு பிளக் தளக் கட்டுரைகள், அமெரிக்க Tea Party இயக்கம் மற்றும் ஐரோப்பாவிலுள்ள ஜனரஞ்சகவாத வலதுசாரிக் கட்சிகளிலிருந்து பாசிச பிதற்றல்களை ப்ரீவிக் அப்படியே எடுத்துக் கொண்டது மட்டும் இல்லாமல், முக்கிய முதலாளித்துவக் கட்சிகள், அரசாங்கங்கள், பொது அதிகாரங்கள் மற்றும் செய்தி ஊடகத் அலுவலகங்களின் பிரச்சாரங்களிடம் இருந்தும் எடுத்துக் கொண்டார்.

இத்தகைய இடைவிடாத இனவெறுப்பு, தேசியவாதம், குடியேறுவோருக்கு எதிரான சோவனிசம் மற்றும் இராணுவவாதம் ஆகியவை ஒஸ்லோவில் நடைபெற்ற நடவடிக்கை போன்றதற்கு ஊக்கம் கொடுத்தல் என்பது காலத்தினால் விளைந்துவிடக் கூடியதுதான்.

இஸ்லாமிய-எதிர்ப்புப் போராட்டத்தை தங்கள் செயல்திட்டத்தின் மைய அச்சாகக் கொண்ட கட்சிகள் ஆஸ்திரியா, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களில் இருந்துள்ளன அல்லது தற்பொழுது உள்ளன. பிரான்சில் பாசிச தேசிய முன்னணி கட்டமைக்கப்பட்டுள்ளது; இதன் இனவெறி, குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை முக்கியக் கட்சிகள் எதிரொலிக்கின்றன; இவற்றின் தன்மையானது ஜனாதிபதிப் பதவிப் போட்டிக்கு அக்கட்சி தீவிர ஆர்வம் கொண்டுள்ள அளவிற்கு உள்ளது. நோர்வேயில் ப்ரீவிக் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்த இஸ்லாமிய எதிர்ப்பு முற்போக்குக் கட்சி அரசியல் ஸ்தாபனத்தில் இணைக்கப்பட்டு, நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக வெளிப்பட்டுள்ளது.

பன்முகக் கலாச்சார சமூகத்திற்கு எதிரான அவருடைய போராட்டத்தில், ப்ரீவிக் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களின் தலைவர்களிடமிருந்து கருத்துக்களை பற்றி எடுத்துள்ளார். ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஆகியோர் அனைவரும் பகிரங்கமாக பன்முகக் கலாச்சார முறை”, அதாவது, பல கலாச்சாரங்களில் இருந்து வரும் மக்கள் அமைதியாக ஒன்றாக இருத்தல் என்பது, “தோற்றுவிட்டதுஎன்று கூறியுள்ளனர்.

முதலாளித்துவ இடதானதுமுஸ்லிம்களுக்கு எதிரான தூண்டுதலில் சேர்ந்துள்ளது. பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும், சமூக ஜனநாயகக் கட்சியினர் தீவிர இடதுஎன அழைக்கப்படும் குழுக்களின் ஆதரவுடன் முஸ்லிம் தலை மறைப்புக்கள், பர்க்காக்கள் ஆகியவற்றின் மீது பாகுபாடான முறையில் தடைகளுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர். ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியில், அதன் முக்கிய உறுப்பினர்களிடம் காணப்படும் முஸ்லிம் எதிர்ப்புக் கருத்தாய்வுகளில் திலோ சராஜின் உடையவை நியாயமான கண்ணோட்டம் என்று கருதப்படுகின்றன.

வெள்ளியன்று நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து உடனடியாக பல முஸ்லிம்-எதிர்ப்பு பிளக் வலைத் தள கட்டுரை எழுதும் வலதுசாரி ஜனரஞ்சகவாத கட்சிகளும் தேசியக் கலாச்சாரத்திற்குமுரசு கொட்டுபவர்களும் ப்ரீவிக்கின் செயல்களைக் கண்டிப்பதின் மூலம் அவரிடம் இருந்து தங்களை ஒதுக்கிக் காட்டிக்கொள்ள முற்பட்டுள்ளன. இது வெறும் தந்திரோபாயம்தான். ஜேர்மன் PI (“Politically Incorrect”) வெளியிட்டுள்ள வலைத்தளக் கட்டுரை ஒன்றின்படி ப்ரீவிக்கின் அறிக்கை மிகச்சிறந்தது, ஆனால் அவரின் தாக்குதல் எதிர்விளைவுடையதாக உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

ப்ரீவிக்கின் அறிக்கையில் ஐரோப்பா இஸ்லாமிற்கு தாழ்ந்து நிற்பதைக் கண்டிப்பதாக மேற்கோளிடப்பட்டுள்ள ஜேர்மனிய செய்தியாளர் ஹென்ரிக் எம். ப்ரோடர், அவருடைய முஸ்லிம் எதிர்ப்பு கருத்தாய்வுகளுக்கும் ஒஸ்லோப் படுகொலைக்கும் இடையே தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளார். ஜேர்மனியின் முக்கிய செய்தித்தாளான Die Welt  டில் அவர் தன்னுடை விரோதிகள் இஸ்லாமைக் குறைகூறுபவர்கள் மீது படுகொலைக்கான பொறுப்பைச் சுமத்துவதின் மூலம் அறநெறி ஆதாயம் பெற முற்படுகின்றனர்என்று குற்றம் சாட்டியுள்ளார். “இஸ்லாமைக் குறைகூறுபவர்களுள்ப்ரோடர் தன்னையும் சராஜின் மற்றும் டச்சு வலதுசாரி ஜனரஞ்சகவாத கீர்ட் வில்டெர்ஸையும் சேர்த்துக் கொள்ளுகிறார்.

பல ஆண்டுகளாக Der Spiegel, Die Welt  ஆகியவற்றின் பக்கங்களை ப்ரோடர் நிரப்பியிருப்பதுடன், பல வலைத்தளக் கட்டுரைகள், நூல்கள் மூலமும் ஐரோப்பியர்கள் இஸ்லாமிற்கு நிபந்தனையற்ற சரணடைதலைஎதிர்த்து எச்சரிக்கைகளைக் கொடுத்துள்ளார். அவருடைய கருத்துக்கள் ப்ரீவிக்கினால் மேற்கோளிடப்பட்டுள்ளது குறித்து அவர் வருத்தப்படுகிறாரா என்று செய்தியாளர் ஒருவரால் கேட்கப்பட்டபோது, ப்ரோடர், “நான் இன்றும் கூட அதே கருத்துக்களைத்தான் கூறுவேன்என்று விடையிறுத்தார்.

ஒரு குறுகிய காலத்திற்குப் பின் ப்ரோடர் தன்னுடைய பிளக் வலைத் தளத்தில் நன்மையின் அச்சுஎன்பதில் தன் மேற்கோள்களைக் கொண்டுள்ள ப்ரீவிக்கின் அறிக்கையில் இருந்து நீண்ட பத்திகளை வெளியிட்டார். இம்மேற்கோள்கள் துவக்கத்தில் மற்றொரு பிளக் வலைத் தள கட்டுரையாளர் Fjordman உடையவை. அவர் வலது தீவிர Brussels Journal, Gates of Vienna மற்றும் islam-watch போன்ற வலைத் தளங்களிலும் எழுதுபவர். ப்ரீவிக் தன்னுடைய அறிக்கையை தயாரிப்பதற்கு Fjordmanதான் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டவர் ஆவார்.

தீவிர வலதுசாரி, முஸ்லிம்-எதிர்ப்புச் சக்திகள் மற்றும் தீவிரசெய்தி ஊடகங்கள் Die Welt, Der Spiegel  ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்புகள் பற்றி அத்தாட்சி தேவையாக இருந்ததால், ப்ரோடர் அவற்றை அளித்துள்ளார்.

தீவிர வலதுசாரி, இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்களும் ஸ்தாபனமயமான முதலாளித்துவ வட்டங்கள் அவற்றிற்குக் கொடுக்கும் ஊக்கமும் முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடி மற்றும் சிதைவைத்தான் பிரதிபலிக்கின்றன. ஆரம்ப தயக்கத்திற்குப் பின் ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் 1930களில் ஹிட்லருக்கு ஆதரவைக் கொடுத்து, தேசிய சோசலிஸ்ட்டுக்களை தொழிலாளர் இயக்கத்தை நசுக்குவதற்கும், பொருளாதாரத் தேக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்கத் தேவையான புதிய போரைத் துவக்குவதற்கும் ஒரு திறமையான கருவி என்று கருதியது. இன்று அழுகிவிட்ட முதலாளித்துவ சமூகம் மீண்டும் முதலாளித்துவ வர்க்கம் பாசிசச் சக்திகளுக்கு ஆதரவைக் கொடுப்பதைத்தான் காண்கிறது.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின், இஸ்லாமிய எதிர்ப்புப் போராட்டம் முதலில் ஆப்கானிஸ்தான், பின்னர் ஈராக், இப்பொழுது லிபியா என ஏகாதிபத்தியப் போர்களுக்கு ஆதரவைத் திரட்டுவதற்கு முக்கிய வழிவகையாயிற்று. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் ஈராக் போரை சிலுவை யுத்தம்என்று குறிப்பிட்டபோது, அது ஒன்றும் ப்ரீவிக்கில் இருந்து அதிக தொலைவில் இருந்துவிடவில்லை; ப்ரீவிக் தன்னை சிலுவை யுத்தத்தை நடத்தியவர்களில் தற்காலத்திய மறுபிறப்பு என்று கருதுகிறார்.

அதே நேரத்தில் முஸ்லிம் குடியேறுபவர்களுக்கு எதிரான தூண்டுதல்கள் தொழிலாள வர்க்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தவும், பொதுநலச் செலவுக் குறைப்புக்கள், வேலையின்மை, பெருகிய சமூக சமத்துவமின்மை இவற்றிற்கு எதிரான சீற்றத்தை வலதுசாரித் திசைகளில் திருப்பப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா வலதுசாரி ஜனரஞ்சகவாத கட்சிகளும் இவ்வகையைத்தான் கையாள்கின்றன. அவை சமூக வார்த்தைஜாலங்களை தேசியவாதம், வெளிநாட்டவர் வெறுப்பு ஆகியவற்றுடன் இணைக்கின்றன.

தொழிலாள வர்க்கத்திற்கு முக்கிய ஆபத்து பாசிச சக்திகளின் உடனடியான வலிமையல்ல. அவை தற்பொழுது அதிகமாக மக்கள் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. தொழிலாள வர்க்கம் தொடர்ந்து அரசியல்ரீதியாக முதலாளித்துவம் மற்றும் அதன் கட்சிகளுக்குத்  தாழ்ந்து நிற்பதுதான் பெரிய ஆபத்து ஆகும்அவை உத்தியோகப்பூர்வ இடதாயினும்வலதுசாரிக் கட்சிகள் ஆயினும்; ஏனெனில் அவை தொழிலாள வர்க்கத்தை முடக்கி, முதலாளித்துவத்தின் வலதுசாரித் தீவிர அமைப்புக்களை குழப்பத்தைப் பயன்படுத்துவதற்கும் மத்தியதர வர்க்க அடுக்கு, தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் சில பிரிவுகளை நெறிபிறள்வடைய செய்கின்றன.

முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன இயக்கமாக வெளிப்படுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு தொழிற்சங்கங்கள், மத்தியதர வர்க்க முன்னாள் இடது என்னும் அவற்றின் நட்பு அமைப்புக்களால் பங்காற்றப்படுகின்றன. ஒஸ்லோவில் நடைபெற்ற கொடூரத்தாக்குதல் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன வலிமை இறுதியில் அடக்கப்படும் என்ற நிலை பற்றிய எச்சரிக்கைதான்.

ப்ரீவிக் தன்னை ஒரு தியாகி எனவும், மேலும் ஒரு புதிய போர்க்குணமிக்க தீவிர வலதுசாரி இயக்கத்தின் முன்மாதிரி எனவும் காண்கிறார். இத்தகைய சக்திகள் பிரதிபலிக்கும் ஆபத்தைத் தோற்கடிப்பதற்கு தொழிலாளர்கள் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொண்டு, சமூகநலச் செலவு வெட்டுக்கள், வேலையின்மை, ஊதியக் குறைப்புக்கள் இவற்றிற்கு எதிரான சுயாதீன போராட்டத்தை மேற்கோள்ள வேண்டும். அது ஒரு சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் இருக்க வேண்டும். போராட்டத்திற்கான புதிய அமைப்புக்கள் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி அணிதிரட்டி இணைக்கப்பட வேண்டும் என்பதுடன் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையும் கட்டமைக்கப்பட வேண்டும்.