சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Notes on the US social crisis

அமெரிக்க சமூக நெருக்கடி பற்றிய குறிப்புக்கள்

By Naomi Spencer
26 July 2011
Use this version to print | Send feedback

மாநில மற்றும் உள்ளாராட்சி வரவுசெலவுத் திட்ட நெருக்கடிகள் அதிகரிக்கையில், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மோசடைந்துகொண்டிருக்கின்றன.

கடன்தர நிர்ணய நிறுவனம் மூடிஸ் ஐந்து மாநிலங்களின் கடன்தரம்  குறைக்கப்பட்டுவிடும் என அச்சுறுத்துகிறது

ஐந்து மாநிலங்களான மேரிலாந்து, நியூ மெக்சிகோ, தென் கரோலினா, டெனசி மற்றும் வேர்ஜீனியா ஆகியவற்றிற்கு மத்திய அரசாங்கம் கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் அவற்றின் கடன்தரங்கள் குறைக்கப்படக்கூடிய நிலைமையை எதிர்பார்க்கலாம் என்று கடன்தர நிர்ணய நிறுவனம் மூடிஸ் ஜூலை 19ம் திகதி அறிவித்துள்ளது. உயர்ந்த தரம் கொடுக்கப்பட்டுள்ள மற்றும் ஒரு 10 மாநிலங்களை விட இந்த மாநிலங்கள் மத்திய அரசின் உதவித்திட்டத்தைத்தான் தங்கள் பொது உள்கட்டுமானச் செலவுகளுக்கு அதிகம் நம்பியுள்ளன.

இந்த எச்சரிக்கையின் விளைவாக மேரிலாந்து அது திட்டமிடப்பட்டுள்ள பள்ளிகள் கட்டமைப்பு மற்றும் பிற பொதுப் பணித் திட்டங்களுக்கும் கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர்கள் விற்பனை செய்வதாக உள்ள நகரசபை பத்திரங்களின் வட்டிவிகிதங்கள் அதிகமாவதைக் காணக்கூடும். உண்மையில், இப்பத்திரங்கள் மூன்று A தரத்தை தக்கவைத்துக்கொள்ளும், ஆனால் மாநில நிதிய வல்லுனர்கள் விளைவு தெளிவாக இல்லை என்று கூறியுள்ளனர்; ஏனெனில் நினைவிலுள்ள சமீபத்தியகாலத்தில் எந்த மாநிலமும் கடன்தரக் கண்காணிப்பின்கீழ் இருக்கையில் ஒரு பத்திர விற்பனை செய்தது இல்லைஎன்று வாஷிங்டன் போஸ்ட்  கூறியுள்ளது.

பென்சில்வானியாவின் ஹாரிஸ்பேர்க் நகரவை மாநில சிக்கனத்திட்டத்தை நிராகரிக்கிறது

ஹாரிஸ்பேர்க்கின் நகரவை ஜூலை 19ம் திகதி பென்சில்வானியா மாநிலத்தின் சிக்கலுக்குள்ளான நகரத்திட்டம்சுமத்தப்பட்டதை நிராகரித்தது. 4-3 என்ற வாக்குக் கணக்கில், அதிகாரிகள் குடியரசுக் கட்சி ஆளுனர் டோர் கார்பெட்டின் சிக்கனத் திட்டத்தை நிராகரித்தனர். அத்திட்டத்தின்கீழ் நகரவை பொதுச் சொத்துக்களை விற்றிருக்க வேண்டும்; அவற்றில் பெருமதிப்புடைய கார் நிறுத்துமிட முறை மற்றும் குப்பை எரிக்கும் திட்டம் ஆகியவையும் இருந்தன. அவற்றிற்கு மட்டுமே நகரவை $300 மில்லியனுக்கும் மேலான கடன்களைக் கொண்டுள்ளது. பொதுத்துறைத் தொழிலாளர்கள் தங்கள் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டு ஊதியங்கள் தேக்கம் அடைந்துவிட்ட நிலையைக் கண்டிருப்பர்.

இத்திட்டம் மிகப்பெரிய அளவில் நகரவாழ் மக்களால் எதிர்க்கப்பட்டன. அவர்கள் குப்பைகளை எரிக்கும் திட்டத்தின் பொருளாதார இழப்புக்களின்  சுமையை முதலீட்டாளர்களிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் ஏற்றும் முயற்சி என்று நன்கு அறிந்துள்ளனர்.

இத்திட்டத்தின் 24 ஆண்டு வரலாற்றில் இந்த முடிவு முதலாவது ஆகும். நியூயோர்க் டைம்ஸ் அதன் ஜூலை 20ம் திகதி பதிப்பில் இந்த வாக்கெடுப்பின் மூலம் நகரவை பென்சில்வானியாவின் கிரேக்கம் என்று சுருக்கமாக மாற்றப்பட்டுள்ளது. தங்கள் பொருளாதாரத்திற்கு இடர் என்றாலும் நகரவாசிகள் நிதியச் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்என்ற கருத்தைக் கூறியுள்ளது. நகரசபைத்தலைவர் லிண்டா தோம்சன் ஆகஸ்ட் 3ம் திகதிக்குள் ஒரு மீட்புத் திட்டத்தைக் கொடுக்க வேண்டும்அல்லது மாநில நிதியங்கள் நிறுத்தி வைக்கப்படலாம்.

மிச்சிகன் வாழ் மூத்த குடிமக்களில் மூன்றில் ஒருவர் வறியவர்

65 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட மிச்சிகன்வாழ் மக்களில் மூன்றில் ஒருவர் பொருளாதாரப் பாதுகாப்பு அற்ற நிலையில்இருக்கின்றனர் என்று வேன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் மூத்தோர் பற்றிய உயர்கல்விக்கூட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வு மருத்துவப் பாதுகாப்பு, வீட்டுச் செலவினங்கள் மற்றும் கூட்டாட்சி வறுமை பற்றி வழிகாட்டிநெறிகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத மற்ற வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.

குறிப்பாக வீடுகளின் விலைகள் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பெரும் இடர்பாடுகளைக் கொடுக்கின்றன. இந்த நாகரிக வீட்டைத் தாங்கள் பணிபுரிந்தபோது வாங்கிய மூத்தோர்களாக இருந்திருக்கலாம், ஆனால் இப்பொழுது அவர்கள் அதன்மீது சொத்துவரிகளைச் செலுத்தவேண்டும், அதற்கு இன்னும் திணறுகின்றனர்குறிப்பாக இப்பொழுது [வீட்டுச்] சந்தை மக்களை அந்த வீடுகளுக்குள் பூட்டிய நிலையில் வைத்துள்ளதுஎன்று கட்டுரையாளர் தோமஸ் ஜன்கோவ்ஸிகி டெட்ரோயின் ப்ரீ பிரஸ்ஸின்  ஜூலை 20ம் திகதிப் பதிப்பில் கூறியுள்ளார்.

வீடுகள் பராமரிப்புச் செலவுகள் மூத்தோருக்கு இன்னும் பெரிய சுமையைக் கொடுக்கின்றன. அவர்கள் பொதுவாக சிறிய, நிர்ணயிக்கப்பட்ட வருமானங்களில் வசிக்கின்றனர்; பல குறைபாடுகள், உடல் நலக்குறைவுகளைப் பெற்றிருக்கலாம். வயதான வீட்டுச் சொந்தக்காரர்கள் பழுதுகளை நீக்குவதற்கு, புல் வெட்டுவதற்கு அல்லது பனியை அகற்றுவதற்கு பணியாட்களை நியமிக்க நேரிடும்.

இந்த இடர்களைக் கூட்டும் வகையில் வீடுகளின் மதிப்புக்கள் குறைந்தும் உள்ளது. அதைத்தவிர சுருங்கிவிட்ட 401K ஓய்வூதியப் பொதிகள் மற்றும் வீடுகளை வெப்பப் படுத்துவதற்கான செலவுகள், மற்ற தேவைகள் ஆகியவையும் உள்ளன.

சென்ட்ரல் பால்ஸ், ரோட தீவுகள் நிதிய மேலாளர் பொதுத்துறை ஓய்வூதியச் செலவுகள் பாதியாகக் குறைக்கப்பட வேண்டும் எனக் கோருகிறார்

அரசாங்கம் நியமித்துள்ள நிதிய மேலாளர் ரோபர்ட் பிளாண்டர்ஸ் ஜூனியர் ஜூலை 19 அன்று ஒரு பொதுக்கூட்டத்தில் ஓய்வு பெற்றுள்ள பொலிஸ், தீயணைப்பு படையினரின் நலன்களை பாதியாக்கும் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தை பெரிதாக கேட்பதுஎன்று அழைத்த அவர் இழிந்த முறையில் இந்த ஓய்வு பெற்றவர்களும் தங்கள் ஓய்வூதியங்கள் பாதிக்கும் மேல் குறைக்கப்படுவதைக் கண்டுகொள்ளக்கூடாது என்றும் அது அற்பமான ஆண்டு ஒன்றிற்கு $10,000க்கும் குறைவாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு பிளாண்டர்ஸ் நகரவை நூலகம் மற்றும் சமூக மையம் மூடப்படுவதை மேற்பார்வையிட்டார். ஒபாமா நிர்வாகத்தின் ஒப்புதலுடன், நகரவை அதன் பொதுப் பள்ளிமுறையில் மோசமான தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, கூட்டாட்சியின் உயர்மட்டத்திற்குப் போட்டியிடுவதில் ஒரு தோல்வி அடைந்து கொண்டிருக்கும் பள்ளிஎன்ற தர அளவு அறிவிக்கப்பட்டபோது, உயர்நிலைப் பள்ளியில் எல்லா ஆசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஓய்வூதியம் பெறுவோர் அடுத்த சில வாரங்களில் இந்த நலன்களை வெட்டுக்களை ஏற்கும் வகையில் வாக்களிக்காவிட்டால், அதன் மாற்றீடு நகரசபை திவால் ஆவதுதான் என்றும் இன்னும் கடுமையான மாற்றங்கள் வரும்என்றும் பிளாண்டர்ஸ் அச்சுறுத்தினார். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிளாண்டர்ஸ், தலையையே வெட்டிவிடுவதைவிட தலைமுடியைக்குறைப்பது எவ்வளவோ சிறந்தது என்று உங்களுக்கு நான் ஆலோசனை கூறுவேன்....சிந்தித்துப்பார்த்தால் எதுவுமே கிடைக்காது என்ற நிலையைவிட ஏதோ சிறிதேனும் கிடைப்பது நல்லது என்ற கருத்தை அவர்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.என்றார்.

இதில் என்ன நியாயம் இருக்கிறது?என்று ஒரு ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கூட்டத்தில் கேட்டு, நகரவை திவால்தன்மைக்குப் பதிவு செய்யட்டும் எனத் தான் விரும்புவதாகத் தெரிவித்தார். எங்கள் பணத்தைக் கொடுத்துள்ளோம், நகரவை அதன் பொறுப்பற்ற செயற்பாட்டினாலும் மற்றவற்றினாலும் பணத்தையெல்லாம் வீணாக்கிவிட்டதுஎன்று மற்றொரு ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கூறினார். செய்தி ஊடகத் தகவல்கள் இத்தகைய உணர்வுகள் கூட்டத்தில் இருந்து பெரும் கரவொலியைப் பெற்றன என்ற குறிப்பைக் காட்டுகின்றன.

மெம்பிஸ், டெனசி பொதுப் பள்ளிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக இலையுதிர்காலம் வரை திறக்கப்படாமல் போகலாம்

மெம்பிஸ் நகரவை அதன் பள்ளிகளுக்கு $150 மில்லியனுக்கும் மேலாக பணப் பாக்கிகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. இது ஏற்கனவே குறைந்த நிதியை உடைய முறையில் செயற்பாடுகளை முடக்கியுள்ளது. பள்ளி மாவட்ட மேற்பார்வையாளரின் கருத்துப்படி 2009ல் இருந்தே பள்ளிகள் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதியங்களில் 52% மட்டுமே பெற்றுள்ளன.

பள்ளி முறை அதன் செயற்பாட்டுச் செலவுகள் கடந்த ஆண்டு நிதியாண்டுகளில் பெரிதும் குறைத்துவிட்டது. 2008 முதல் மாவட்டம் 1,400 வேலைகளுக்கும் மேலாக அகற்றிவிட்டதுடன் கிட்டத்தட்ட $200மில்லியன் நிதியை அதன் செலவுகள் திட்டத்தில் இருந்தும் குறைத்துவிட்டது. நகரவைப் பள்ளிகள் 100,000 குழந்தைகளுக்கு உதவுகின்றன. இவர்களில் 87% குறைவூதிய வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தவை; பள்ளிகளையைத்தான் அடிப்படை உதவிகளுக்கும், உதவிமானியத்துடனான உணவிற்கும் நம்பியிருக்கின்றனர்.

நகரவை தனியார் பட்டயப்பள்ளிகள் செயல்படுவதற்கு வழிவகை செய்வதற்காக பொதுப் பள்ளிகளுக்கு நிதிப்பற்றாக்குறையை கொடுத்து  அவற்றை அழிக்க முயல்கிறது.

மார்ச் 9ம் திகதி மெம்பிஸ் மக்கள் நகரவைப் பள்ளிக்குழுவைக் கலைத்து கூடுதல் நிதியுடைய ஷெல்பி சிறுமாவட்டக்குழு என்பதற்குள் அதைக் கரைப்பதற்கு வாக்களித்தனர். பள்ளிக்குழு மற்றும் மெம்பிஸ் நகரவைக்குழு ஆகியவை 1961ல் ஒப்புதல் பெற்ற நகராட்சி உரிமை ஆவண விதிகள் நடைமுறையில் உள்ளதா அல்லது மாநிலச் சட்டத்தை ஒட்டி காலாவதியாகிவிட்டனவா என்பது பற்றிய கூட்டாட்சி நீதிமன்றத் தீர்ப்பிற்குக் காத்திருக்கின்றன. அவ் நகராட்சி உரிமை ஆவணம் நகரவையின் பொதுப்பள்ளி முறை பள்ளிக்குழு வாக்கெடுப்பைப் பெற்றுநகரவையின் இசைவையும் பெற்றுவிட்டால் கலைக்கப்படலாம் என்று கூறுகிறது.

பல ஆண்டுகளாக மாநிலம் தழுவிய நகராட்சி உரிமை ஆவண முறையை உருவாக்குவதற்காக டெனசி முயன்றுவருகிறது. பல மில்லியன் டாலர்கள் ஆதரவு இதற்காக ஒபாமா நிர்வாகத்தின் உயர்மட்டத் திட்டத்திற்கான போட்டி என்பதின் மூலம் கிடைக்கிறது.

குடியேறிய குடும்பங்களிடையே பட்டினி அதிகரிக்கிறது

மின்னிசோட்டாவில் மெக்சிகோ நாட்டில் இருந்து வந்து குடியேறியுள்ள தொழிலாளர்கள் அறக்கட்டளை உணவு வழங்கும் அமைப்புக்கள் காலியான நிலையில் கடுமையான உணவுப் பற்றாக்குறையுடன் போராடுகின்றனர். மாநிலத்தில் உணவு வழங்கும் முறை பல வாரங்கள் அரசாங்கத்தால் மூடப்பட்டாதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20,000 ஆவணமற்ற குடியேறியவர்கள் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் பெரும்பாலும் கறிகாய்கள் பதனிடும் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள ஆலைகளுக்கு விவசாயத்துறையில் வேலை செய்ய மாநிலத்திற்கு வருகின்றனர். அவர்களில் பலர் தங்கள் குறைந்த ஊதியத்தை பயணத்திற்கு வருவதற்கே செலவழித்துவிட்டு வறிய நிலையில் வந்து சேருகின்றனர். பல நேரமும் குடும்பத்துடன். பல வாரங்கள் சம்பளத்தை நாடாமல் அவர்கள் உழைக்க நேரிடும், சிறிய, நெரிசல் மிகுந்த வீடுகள் அல்லது சமைக்கும் வசதிகள் இல்லாத விடுதி அறைகளில் தங்க நேரிடும்.

சமீபத்தில் மின்னிசோட்டா பொது வானொலித் தகவல் ஒன்று பலரும் சால்வேஷன் இராணுவம் மற்றும் மோன்கோமெரி உணவுத் திட்டம் என்று பெருநகரப் பகுதியில் உள்ள இரட்டை நகரங்களின் தென்புறத்திற்கு வந்துள்ளன என்று கூறியுள்ளது. இந்த உணவு மையம் மிகவும் அதிகமான நபர்களுக்கு உணவு வழங்க நேரிடுவதால் பல குடும்பங்கள் அறை மூலைகளில் அல்லது வெளியே காத்திருக்க வேண்டும்.

முதல் நாட்கள், முதல் வாரங்கள், இவை மிகவும் கொடூரமானவைஎன்று ஜீசஸ் கார்சா கூறினார்; இந்த உணவுமையம்தான் அவர்கள் குடும்பத்திற்கு உயிர்காப்பது என்றும் கூறினார். “இது எங்களுக்கு மட்டும் அல்ல. எங்களுக்குக் குழந்தைகள் உள்ளன. அதுதான் எங்கள் கவலை. ஏனெனில் அவை உணவு உட்கொள்ள வேண்டும். நாங்கள் இரண்டு மூன்று நாட்கள்கூட நீரைப் பருகி, சிறிதாக ஏதேனும் சாப்பிட்டு வாழமுடியும். ஆனால் குழந்தைகளால் முடியாதுஎன்றார் அவர். அவரும் அவருடைய மனைவியும் 12 மணி நேரம் பல நாட்கள் உழைக்கின்றனர், அநேகமாக வாரம் முழுவதும் இப்படித்தான்.

மாநிலங்கள் முழுவதிலும் இத்தேவைகள் பெருகியுள்ளன. செயின்ட் பால் தளமுடைய அமைப்பான Hunger Solutions என்ற அமைப்பின்படி, மின்னிசோட்டாவின் உணவு மையங்கள் கடந்த இரு ஆண்டுகளில் 62%க்கும் அதிகமானவர்கள் உதவியைப் பெறும் நிலையைக் காண்கின்றன.