WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
Fascist killer appears in Norwegian court
பாசிசக் கொலைகாரர் நோர்வேஜிய நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்
By
Robert Stevens and Susan Garth
26 July 2011
Back
to screen version
வலதுசாரித்
தீவிரவாதி ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் நேற்று ஒரு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு
நோர்வேயில்
76 பேரை வெகுஜனப்
படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டார்,
அவர்களில் பலரும்
குழந்தைகளாவார்கள்.
ஒஸ்லோ
நீதிமன்றம் ஒன்றின் ஒரு மூடப்பட்ட விசாரணையில் ப்ரீவிக் தான் குற்றம் புரியவில்லை
என்று வாதாடியுள்ளார்.
வெள்ளியன்று ஒஸ்லோ
நகர மையத்தில் வெடித்த குண்டை இவர் தான் வைத்ததையும்,
பின்னர்
Otøya
தீவில் தொழிற் கட்சியின்
கோடைக் கால முகாமில் ஏராளமானவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒப்புக்
கொண்டும் கூட இவ்வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
குண்டுத்
தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்,
முன்பு
83 எனக்
கூறப்பட்டற்கு மாறாக
68 பேர்
துப்பாக்கிச் சூட்டில் மடிந்துள்ளனர்.
4 மில்லியன் மக்களை
மட்டுமே கொண்டுள்ள நோர்வேயின் மக்கள்தொகை இருக்கையில்,
அரை மில்லியனுக்குச்
சற்றே அதிகமாக இருக்கும் ஒஸ்லோ நகரத்தின் மக்கள்தொகையையும் கருத்திற்கொண்டால் இந்த
இறப்பு எண்ணிக்கை மிகக் கொடூரமானது ஆகும்.
ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வைத்திருக்கும்போதே ப்ரீவிக் கைதுசெய்யப்பட்டார்.
“பயங்கரவாத
நடவடிக்களுக்காக”
அவர் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
குற்றம்
சாட்டப்பட்டவரின் வாக்குமூலங்கள் பின்னர் நீதிபதியினால் செய்தி ஊடகத்திற்குத்
தெரிவிக்கப்பட்டன.
ஒரு
மொழிபெயர்ப்பாளர்
உதவியுடன் நீதிபதி
ஹெகர்,
ப்ரீவிக் தான் நோர்வே
மற்றும் மேற்கு ஐரோப்பாவை
“மார்க்சிச
கலாச்சாரம்,
முஸ்லிம்
மேலாதிக்கம்”
ஆகியவற்றிலிருந்து
காப்பாற்றுவதாக நம்புகிறார் என்றார்.
அவரினால்
பலியாக்கப்பட்டுள்ளவர்கள் பன்முகக் கலாச்சார நிலைப்பாட்டை வளர்த்தல் என்னும்
“தேசத்துரோகக்
குற்றம்”
செய்தவர்கள் என்று கொலையாளி
கூறியுள்ளார்.
எட்டு வார
காலத்திற்குக் காவலில் வைக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவரை நீதிபதி ஹெகர்
கூறியுள்ளார்;
முதல் நான்கு
வாரங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் இருக்க வேண்டும்.
பார்வையாளர்கள்
அனுமதிக்கப்பட மாட்டார்கள்,
மேலும் அவருடைய
வக்கீலை தவிர மற்றவர்களிடமிருந்து அவர் தகவல்களைப் பெறவோ,
அனுப்பவோ முடியாது.
ப்ரீவிக்கிடமிருந்து
குறுக்கீடு இல்லாமல் விசாரணை நடத்துவதற்கு இது பொலிசாரை அனுமதிக்கும் என்றும்
நீதிபதி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
விசாரணை
பகிரங்கமாக நடத்தப்பட மாட்டாது என்பதற்கும் ஹெகர் இதே காரணத்தைத்தான் கூறியுள்ளார்.
அரசாங்க வக்கீல் ஒரு
பகிரங்க விசாரணை நடைபெற்றால் அதைப் பயன்படுத்திக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர் சக
சதியாளர்களுக்குத் தகவல் அனுப்பக்கூடும் என்ற வாய்ப்பு உள்ளது என்ற பிரச்சினையை
எழுப்பியுள்ளார்.
முன்னதாக
தன் வக்கீல்
Geir Lippestad
இடம் ப்ரிவீக் தான்
தனியாகத்தான் செயல்பட்டதாகக் கூறினார்.
ஆனால் ஹெகர்,
“இப்பொழுது
சந்தேகத்திற்கு உரியவர் மீது பகிரங்க விசாரணை நடத்தினால் அது அசாதாரண நிலையை
ஏற்படுத்தும்,
விசாரணை,
பாதுகாப்பு
ஆகியவற்றில் மிகப் பெரிய இடர்களுக்கு வழிவகுக்கும் என்பது பற்றி உறுதியாக தகவல்கள்
உள்ளன”
என்றார்.
பொலிஸ்
துறைத் தலைவர்
Sveinung Sponheim
செய்தியாளர்களிடம் ப்ரீவிக் தனியே செயல்பட்டாரா இல்லையா
“என்பது பற்றி
உறுதியாகத் தெரியவில்லை”
என்றார்.
“விசாரணையின்
குவிப்புக் காட்டும் விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்”
என்றார் அவர்.
ஆனால் பொலிசார்
இப்பொழுது வேறு எவரையும் சந்தேகிக்கவில்லை என்று ஒப்புக் கொண்டார்.
விசாரணைக்குப்பின் நீதிபதி ஹெகர்,
ப்ரீவிக்குடன் இரு
பயங்கரவாதிகளின் பிரிவுகளுடன் தொடர்புள்ளது என நம்பப்படுவதாகத் தெரிவித்தார்.
விசாரணைக்
கூண்டில் எதைக் கூறப் ப்ரீவிக் முற்படுவார்,
அரசியல் அறிக்கையா
அல்லது சக சதியாளர்களுக்கு தகவலா என்பது பற்றிக் குறிப்பு ஏதும் இல்லை.
ஏற்கனவே இணைய
தளத்தில் மிகப் பரந்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்;
இதில் ஒரு
1,500 பக்க ஆவணம்,
அவருடைய வலதுசாரிக்
கருத்துக்களைத் தொகுத்துக் கூறுவதும் அடங்கியுள்ளது.
நீதிமன்றத்தில்
அக்கருத்துக்களைப் பற்றிய மற்றொரு அறிக்கை,
கட்டுப்பாடுள்ள
நிலைமையில்,
குறுக்கு விசாரணை
திறமையான வக்கீல்கள் செய்யும்போது என்றாலும் இனி அதிக சேதத்தை விளைவிப்பதற்கு இல்லை.
ப்ரீவிக்கிற்கு தனி விசாரணை நீதிமன்றம் என்பது நோர்வீஜிய அதிகாரிகள் எதையோ மறைக்க
விரும்புகின்றனர் என்பதைத்தான் தெரிவிக்கிறது.
இரகசிய
பொலிசார் ஒப்புக் கொண்டுள்ளபடி மார்ச் மாதமே இவர் அவர்களுடைய கவனத்திற்கு
வந்திருந்தார்;
அப்பொழுது அவர் ஒரு
போலந்து நாட்டு இரசாயனப் பொருள் நிறுவனத்தில் பொருட்களுக்கான தேவையைக்
கொடுத்திருந்தார்.
நோர்வேயின் இரகசியப்
பொலிஸ் பிரிவின் தலைவர்
Janne Kristiansen
அது பற்றி மேலும் விசாரிக்கவில்லை என்றார்.
ப்ரீவிக்கும் ஒரு
அடையாளம் தெரியாத நபரும் இந்த ஆண்டு உரம் வாங்க முயற்சித்தனர் என்றும்
கூறப்படுகிறது.
உரமும் பல
அடிப்படை வீட்டுப் பொருள் இரசாயனப் பொருட்களும் பல தடவைகள் வெடிப்புப் பொருட்களை
தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2007ம் ஆண்டு
பிரிட்டனில் உரக் குண்டைப் பயன்படுத்தி ஒரு கடை வரிசையை வெடித்துத் தகர்க்க
முயன்றதற்காக ஐந்து பேர் தண்டனைக்கு உட்பட்டனர்.
எவ்வாறு அசாதாரண
முறையில் இராசயனப் பொருட்கள் வாங்கப்பட்டதை விசாரிக்கவில்லை என்பது பற்றிய
நோர்வீஜிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருப்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
ஒரு தெளிவான உண்மை
வெளிப்படுகிறது;
அதாவது ஒஸ்லோ
குண்டுத் தாக்குதல்,
Otøya படுகொலைக்கு
முன்னரே பொலிஸ் கண்காணிப்பில் ப்ரீவிக் இருந்தார் என்பதே அது.
பிரிட்டிஷ்
உளவுத்துறைப் பிரிவும் இந்த நபரையும் அவருடைய
இங்கிலாந்திலுள்ள
வலதுசாரிக் குழுக்களுடனான தொடர்புகளையும் பற்றிக் கவனத்தில் கொண்டதாகத்
தெரியவந்துள்ளது.
ஏப்ரல்
2002ல் இங்கிலாந்து
பாசிட்டுக்கள் கூட்டம் ஒன்றில் அவர் பங்கு பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பாவை
இஸ்லாமியமயமாக்குவதை நிறுத்துக,
இங்கிலீஷ்
பாதுகாப்புக் கழகம் ஆகியவற்றுடன் அவர் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
யூ
ரியூப்பில் ஒரு வீடியோக் காட்சியையும் ப்ரீவிக் பதிவு செய்துள்ளார்—இப்பொழுது
அது அகற்றப்பட்டுவிட்டது;
அதில் அவர் ஸ்குபா
உடையணிந்து தானியங்கி ஆயுதத்தைப் புகைப்படக் கருவி முன் காண்பித்து,
“நாம் மதப் போரைத்
தொடங்குமுன்,
மார்க்சிச
கலாச்சாரத்தை அழிக்கும் வகையில் நம் கடமையைச் செய்ய வேண்டும்”
என்றார்.
இதற்கு
Knights Templar 2083
என்று பெயரிடப்பட்டுள்ளது.
வீடியோக் காட்சியின்
தலைப்பு 1683ல்
வியன்னாவில் நடைபெற்ற ஒரு முற்றுகையைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது;
அப்பொழுது ஒரு
துருக்கிய இராணுவப் பிரிவு தோற்கடிக்கப்பட்டது.
ப்ரீவிக்கின்
பிரகடனம் “2083—ஐரோப்பிய
சுதந்திரப் பிரகடனம்”
என்று
அழைக்கப்பட்டது;
அத் திகதி
முற்றுகையின் 400வது
ஆண்டு முடிவு தினம் ஆகும்.
இஸ்லாமிய எதிர்ப்பு
பிளக் தளக் கட்டுரைப் பதிப்பு ஒன்றில்
“வியன்னாக் கதவுகள்”
என்ற பெயரில்
கருத்துக்களைப் ப்ரீவிக் வெளியிட்டதாகத் தெரிகிறது.
ப்ரீவிக்கின் விருப்பங்களைப் பற்றி நிறைய எச்சரிக்கைகள் இருந்தன.
“நீங்கள்
தாக்குவதற்கு முடிவு எடுத்துவிட்டால்,
குறைவு என்பதைவிட
அதிகமானவர்களைக் கொல்லுவது நல்லது;
இல்லாவிட்டால்
தாக்குதலினால் விரும்பப்படும் சிந்தனைப் பாதிப்பு குறைந்துவிடும்.”
ப்ரீவிக்கிடம் நிறைய நிதியும் மிகவும் சரியான திட்டமிடலும் இருந்தது போல்
தோன்றுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு ஒஸ்லோவிற்கு வடக்கே ஒரு விவசாயப் பண்ணையை வாடகைக்கு எடுத்திருந்தார்.
ராய்ட்டர்ஸ்
கருத்துப்படி இந்தப் பண்ணை ஒரு இராணுவத் தளத்திற்கு அருகே இருந்தது;
அதில்
2,000 பேர் அடங்கிய
டெலிமார்க் இராணுவப் பிரிவு இருந்தது.
தன்னுடைய இணையத்தள
நாட்குறிப்பில்அதற்கு அருகே இருப்பது பற்றி எழுதியிருந்தார்.
எழுதியதாவது
“இது
மிகவும் விந்தையானது.
நாட்டின் மிகப்
பெரிய இராணுவத் தளத்தின் உயரே கிட்டத்தட்ட இருப்பது.
என்னுடைய அருமை
அண்டை வீட்டவரிடமிருந்து நான் ஒரு கப் சர்க்கரையும்
3 கிலோ
C4 வெடிமருந்தும்
“கடன் வாங்க
முடிந்திருந்தால்”
என்னைப் பல
இடர்களிலிருந்து பாதுகாக்கலாம்.”
உள்ளூர்வாசிகள்,
ப்ரீவிக் ஒரு
விவசாயியாக இருக்க முடியாது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
உள்ளூர் மதுபானக்
கடை மற்றும் பெட்ரோல் விற்பனையிடத்தில் வேலைபார்த்து வந்த பெண் அவர் வாங்கிய
பொருட்கள் அனைத்திற்கும் ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்,
கடன் அட்டை மூலம்
பணம் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
உள்ளூர்
இராணுவ முகாமில் இருந்த படையினர்கள்
இந்த மதுபானக் கடையில் மது அருந்துபவர்கள்; ஆகவே அந்த
இடம் ஆப்கானிஸ்தான் பற்றிய படங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ஒரு
பண்ணைக்குச் சொந்தக்காரராக இருந்ததால் ப்ரீவிக் நிறைய உரங்களை முறையான
நோக்கத்திற்கு வாங்குவது போல்,
வாங்க
முடிந்திருந்தது.
அப்படியும்கூட அவர்
வாங்கிய அளவினால் கவலை கொண்ட போலந்து நிறுவனம் பொலிசாருக்கு எச்சரிக்கை கொடுத்தது.
நோர்வீஜிய
இராணுத்தின் முகாமிற்கு வெகு அருகிலேயே இருக்கும் இவருடைய இந்தப் பண்ணையில்தான்,
பொலிசாருக்கு இவர்
பொருட்கள் வாங்குவது பற்றி எச்சரிக்கப்பட்டு இருந்தும்கூட,
மத்திய ஒஸ்லோவை
அழிவிற்கு உட்படுத்திய கார்க் குண்டு தயாரிக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது.
2005ம்
ஆண்டில் ஒரு துப்பாக்கி சுடும் கழகத்தில் ப்ரீவிக் சேர்ந்தார் எனத் தெரிகிறது;
அவரிடத்தில் பல
பதிவு செய்யப்பட்ட ஆயுதங்கள் இருந்தன.
ஆனால் மிக எளிதான
வகையில் அவர் தானியங்கி ஆயுதங்களைக் கையாண்டது,
Otøya தீவில்
மக்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் டம்டம் துப்பாக்கித்
தோட்டாக்கள் ஆகியவை பல வினாக்களை எழுப்புகின்றன.
நோர்வே ஒரு
வேட்டையில் ஈடுபடுபவர்களுடைய நாடு ஆகும்;
ஆனால் சுடும்
வெடிபொருட்கள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் இருப்பவை;
துப்பாக்கியால்
எற்படுத்தப்படும் குற்றங்கள் ஒப்புமையில் இங்கு குறைவு.
தன்னுடைய ஆயுதத்
தேவைகளை செக் நாட்டு பாதாள உலகத்தாரிடமிருந்து பெற்றதாகப் ப்ரீவிக் கூறுகிறார்;
இது உண்மையானால்,
அவற்றை எப்படி
நோர்வேக்குள் கொண்டுவந்தார் என்பது பற்றி அவர் விளக்கவில்லை.
நோர்வேப்
படுகொலைகளிலுள்ள இருகட்ட தன்மை ப்ரீவிக் தனியே செயல்பட்டிருக்க முடியாது என்பதை
வலுவாகத் தெரிவிக்கிறது.
நோர்வேயில்
6 பேர்
கைதுசெய்யப்பட்டுள்ளனர் மற்றும் ப்ரீவிக்கிற்கு உரத்தை விற்ற போலந்து விவசாயப்
பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் ஒரு ஊழியர் கைதுசெய்யப்பட்டார் என்றும்
கூறப்படுகிறது.
ஆனால் குற்றச்சாட்டு
ஏதும் போடப்படாமல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
முகாமிற்குள் அவர் எளிதாக நுழைந்ததும் விளக்கப்பட வேண்டும்.
தொழிற் கட்சி
வாடிக்கையாகக் கோடைகாலத்தில் ஏற்பாடு செய்யும் முகாம்தான் இது.
வருங்கால
அரசியல்வாதிகள்,
நாட்டின் வருங்காலத்
தலைவர்களுக்கு இது மழலைப் பள்ளி போல் கருதப்படுகிறது.
தொழிற் கட்சித்
தலைவரும் நோர்வீஜிய பிரதம மந்திரியுமான
Jens Stoltenberg
சனிக்கிழமை அன்று அங்கு
வருவதாக இருந்தது.
ஒரு பொலிஸ்
போல் வேடமணிந்து ப்ரீவிக் இத்தீவிற்குள் நுழைய முடிந்துள்ளது.
பாதுகாப்புக்
கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளை இவர் உத்தியோகபூர்வ வேலையாக அங்கு
வந்துள்ளார் என்பதை நம்பவைக்கும் வகையில் இவருக்கு எப்படி,
எங்கிருந்து ஒரு
சீருடை கிடைத்தது என்பது பற்றியும் எவரும் விளக்கம் கொடுக்கவில்லை.
Otøya
நடந்த படுகொலை பற்றிப்
பொலிசாருக்கு உசார் எச்சரிக்கை அளிக்கப்பட்டும்,
அவர்கள் தீவிற்கு
வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.
ப்ரீவிக்கின்
துப்பாக்கிச் சூட்டுக் கேளிக்கை
90 நிமிடங்கள்
நீடித்தது.
அவர்கள் வந்தபோது,
ப்ரீவிக் அங்கு
இருந்தார்,
தன்னையே போராட்டம்
ஏதுமின்றி அவர்களிடம் ஒப்படைத்துக் கொண்டார்;
அவரிடம் இன்னும்
நிறைய துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் இருந்தன.
படுகொலைக்கு
பொலிசாரின் விடையிறுப்பு பற்றி பெருகிய குறைகூறல்கள் உள்ளன. அப்பகுதிக்குச்
செல்லவதற்குத் தகுந்த ஹெலிகாப்டர் தங்களிடம் இல்லை என்று பொலிசார் கூறினர்; மேலும்
படகு மூலம் அவ்விடத்தை அடைய அவர்கள் முற்பட்டபோது, பொலிஸ் மற்றும் கருவிகளினால்
படகு நிறைந்த நிலையில் படகில் நீர் வரத்தொடங்கியது; அதையொட்டி அவர்கள் பின்வாங்க
நேரிட்டது.
திங்களன்று
ஒஸ்லோவில் தாக்குதலினால் பலியானவர்களுக்கு ஒற்றுமை உணர்வைக்காட்டுவதற்கு 100,000
மக்கள் கூடினர். அணிவகுப்பு என்று முதலில் அழைக்கப்பட்ட இதில் பின்னர்
ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருமளவு கலந்து கொண்டதால் நகரத் தெருக்கள் வழியே செல்ல
முடியவில்லை. நோர்வே முழுவதும் இதேபோன்ற அணிவகுப்புக்கள் நடைபெற்றன. |