World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா 

Trial of Khmer Rouge leaders underway in Cambodia

கம்போடியாவில் கேமர் ரூக் தலைவர்கள் விசாரணை நடைபெறுகிறது

By John Roberts
25 July 2011

Back to screen version

நான்கு மூத்த முன்னாள் கேமர் ரூஜ் அதிகாரிகள் மீதான ஆரம்ப கட்ட விசாரணை ஜூன் 27ம் திகதி நோம் பென்னில் கம்போடிய நீதிமன்ற விஷேட மன்றத்தில் தொடக்கப்பட்டது.

கேமர் ரூஜ் இன் முக்கிய தத்துவாசிரியர் எனக் கருதப்படும் நுவோன் ஷியா, முன்னாள் நாட்டுத்தலைவர் கீயு சம்பான், முன்னாள் வெளியுறவு மந்திரி லெங் சாரி, மற்றும் சாரியின் மனைவியும் முன்னாள் சமூகத்துறை மந்திரியுமான லெங் திரித் ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்துப்பட்டுள்ளது. இவற்றுள் 1975 முதல் 1979க்கு இடையே நடைபெற்ற இனக்கொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், கொலை ஆகியவை அடங்கும்.

இந்த விசாரணை சில மாதங்கள், ஏன் சில வருடங்கள் கூட நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2007ல் தொடங்கிய வழக்குகளில் ஆரம்ப கட்ட விசாரணையின் முக்கிய நோக்கம் தப்பிப்பிழைத்தவர்களுக்கு நீதி வழங்குதல் இல்லை என்பது ஏற்கெனவே தெளிவாகிவிட்டது. மாறாக இது கேமர் ரூஜ் இன் இனக்கொலையை பற்றி மூடிமறைக்கும் ஒரு போலி விசாரணையும், கம்போடியா மற்றும் சர்வதேச அளவில் இதற்கான பொறுப்புடையவர்களை மூடிமறைக்கும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருவித மாவோவாத அடித்தளத்தை கொண்ட கேமர் ரூஜ் நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மீது ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டு, சந்தேகத்திற்கு இடமின்றி அதன் அச்சுறுத்தும் ஆட்சியின் போது பெரும் கொலைகளுக்கு காரணமாக இருந்தது. ஆனால் இக்குற்றங்களில் தொடர்புடையவர்களில் தற்போதைய கம்போடிய அரசாங்கம் மற்றும் சீனா, அமெரிக்கா போன்ற பெரும் சக்திகளும் ஏதேனும் ஒரு வகையில் கேமர் ரூஜ் இற்கு ஆதரவு கொடுத்தவர்களுள் அடங்குவர்.

தற்போதைய கம்போடிய பிரதமர் ஹுன் சென் அவர் தூக்கிவீசப்படும் ஆபத்தை தவிர்க்கும் வகையில் வியட்நாமிற்கு தப்பியோடும் வரை கேமர் ரூஜ் அரசாங்கத்தில் ஒரு மாவட்டத்தின் துணைத்தலைவராக இருந்தவர் ஆவார். ஜனவரி 1979ல் அவர் மீண்டும் திரும்பி வந்து நாட்டின்மீது வியட்நாமிய படைகள் படையெடுத்தபோது ஒரு புதிய ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.

அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் வியட்நாமில் நடந்த புதுவகையிலான காலனித்துவப் போரின் ஒரு பகுதியாக கம்போடியாவை ஸ்திரமற்றதாக்குவதில் நேரடிப் பொறுப்பைக் கொண்டிருந்தார். இது கேமர் ரூக்கின் எழுச்சிக்கு வழிசெய்தது. வாஷிங்டன் ஒரு ஆட்சிசதிக்கு ஏற்பாடு செய்தது. அது இளவரசர் நோரோடோம் ஷிகானௌக்கை 1970ல் அகற்றி ஜேனரல் லோன் நோல் இனை பதவியில் இருந்தி, ஒரு உள்நாட்டுப்போரை தூண்டியது.  1969ல் இருந்து 1973 வரை நடத்தப்பட்ட அமெரிக்கச் சட்டத்தின்படிக்கூட சட்டவிரோதமான பாரிய குண்டுத்தாக்குதல்கள் கிட்டத்தட்ட 700,000 கம்போடிய மக்களைக் கொன்றதுடன் மற்றும் பொருளாதாரத்தைச் சிதைத்தது.

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பியச் சக்திகள் கேமர் ரூக்கை 1991 வரை கம்போடியாவின் சட்டரீதியான அரசாங்கம் என அங்கீகரித்தன. பனிப்போர் முடிந்தவுடன், முக்கிய சக்திகள் ஹுன் சென் அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டு கம்போடியாவை ஒரு குறைவூதியத் தொழிலாளர் அரங்காகத் திறப்பதற்கு ஏற்பாடு செய்தன. 1991 பாரிஸ் சமாதான உடன்படிக்கையின்படி, வியட்நாம் தன் இராணுவத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு தேர்தல்கள் நடத்தப்படுவதற்கும், வெளிநாட்டு முதலீடு பெருமளவில் வருவதற்கும் வழிவகை செய்தது. ஆனால் கேமர் ரூஜ்ஜின் குற்றங்கள் புறக்கணிக்கமுடியாத அளவிற்கு மிகப் பெரியவை ஆகும். அவை பற்றி முடிவெடுக்கப்படவேண்டும்; ஆனால் அதே நேரத்தில் பழைய தொட்டியில் இருக்கும் புழுக்களும் வெளியே வரக்கூடாது. இதன் விளைவாக ECCC எனப்பட்ட கம்போடிய நீதிமன்றச் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. இது ஒரு நீண்ட, சுற்றிவளைக்கும் தன்மையைக் கொண்டு தொடர்புடைய நாடுகள் அனைத்தின் நலன்களையும் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் முடிவடைந்த முதல் விசாரணையில் டச் என்றும் அறியப்பட்ட கைங் குவக் இயவ் என்று நோம் பென்னில் S-21 என இழிந்த சிறைக்கு பொறுப்பாக இருந்தவர் தண்டனை பெற்றார். அச்சிறையில் 12,272 பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஒப்புமையில் குறைந்த அதிகார மட்ட கேமர் ரூக் செயலரான டச் ECCC நடவடிக்கைகளுடன் ஒத்துழைத்து, தன் குற்றங்களை ஒப்புக்கொண்டு, வருத்தங்களை தெரிவித்து, தன் பாதுகாப்பை ஒட்டி மேலிடத்து உத்தரவுகளைச் செயல்படுத்தியதாகக் கூறினார்.

இந்த வழக்கு தற்போதைய விசாரணைக்கு தளம் அமைக்கும் வகையில் வடிவமைப்பை கொண்டு இருந்தது. இது முறையாகஇரண்டாம் வழக்குஎன்று அழைக்கப்படுகிறது. இது இன்னும் சிக்கல் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது; குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றங்களை மறுத்திருப்பது முக்கிய காரணம் என்று கூறலாம்.

அரசாங்க வக்கீல் தரப்பில் நான்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் 1998ல் இறந்துவிட்ட கேமர் ரூக் தலைவர் பொல் பொட் இரத்தக்களரி ஏற்படுத்திப் பல கொலைகளை செய்ததற்குப் பொறுப்பு என்றும் இது நகர்ப்புற மக்களை கிராமப்புறத்திற்குச் செல்லும் கட்டாயத்திற்கு உட்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது. கம்போடியாவின் ஆவண மையம் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் தூக்கிலிடப்பட்டனர் மற்றும் ஒரு மில்லியன் மக்கள் பட்டினி, அதிக வேலைப்பழு மற்றும் நோயினால் இறந்தனர் என்று மதிப்பிட்டுள்ளது.

அரசாங்க வக்கீல் அலுவலகம் கேமர் ரூஜ் அரசாங்கத்திற்கும் நாடெங்கிலும் இருந்த அதன் கொலைசெய்பவர்களுக்கும் தொடர்பு இருந்தது குறித்து நிறைய சான்றுகள் உள்ளன என்று கூறுகிறது. தலைமைப்பதவியில் இருந்த குற்றம்சாட்டப்பட்டவர்கள்கூட்டுக் குற்றநடவடிக்கையில் ஈடுபட்டகுற்றம் உடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நான்கு பேரும் நிரபராதிகள் என்று கூறுவதுடன், குற்றங்களில் மற்றவர்களையும் தொடர்பு படுத்துக் கூடும்.

நியூ யோர்க் டைம்ஸ்  விசாரணையின் முதல் கட்ட விசாரணை பற்றி பின்வருமாறு கூறியது: “இந்த விசாரணை கேமர் ரூக் ஆட்சி ஆண்டுகள் பற்றி மட்டும் நடத்தப்படுகிறது; வரலாற்றுப் பின்னணியைப் பற்றி அதிகம் கூறப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள் சான்றுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோருவது பல ஆண்டுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கடுமையான சட்டப்பிரச்சினைகள் பற்றிய முன்மாதிரியாகத் தோன்றுகின்றது.”

நீதிமன்றத்தில் முதல் நாள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வக்கீல் மிஷியல் பெஸ்ட்மன் ஐந்து நீதிபதிகள் குழுவிடம் ஒரு நியாயமான விசாரணை நடக்காது என்றார். தன்னுடைய கட்சிக்காரர் 84 வயதான நுவோன் ஷியா நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி தன்னுடைய சிறை அறையில் இருந்து வழக்கினை பார்க்க அனுமதிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் உரையை துவக்கினார்.

எங்களுடைய முக்கிய எதிர்ப்புக்கள் எங்கள் கட்சிக்காரர் நுயௌன் ஷியாவின் உரிமைகளுக்கு எதிராக நியாயமற்ற முறையில் முதல் விசாரணை நீதிபதிகளால் நீதி விசாரணை நடத்தப்படுகிறது என்பதாகும். இந்த விசாரணைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்என்று பெஸ்ட்மன் நீதிமன்றத்தில் கூறினார்.

2006ல் ஹுன் சென் ஆட்சிக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே ஒரு தசாப்த பேரங்களுக்குப்பின் இயற்றப்பட்டுள்ள ECCC ன் சிக்கல்வாய்ந்த முறைப்படி, இந்த விசாரணைக்கட்டம் மிகவும் முக்கியமாகும். விசாரணை நீதிபதிகளின் அறிக்கை முறையான விசாரணைக்கு நெறிவரையறைகளாக இருக்கும். குற்றச்சாட்டுக்கள், சாட்சிகள் பட்டியல், எத்தகைய சான்றுகள அளிக்கப்படலாம் என்பவை அதில் குறிக்கப்படும். விசாரணை நீதிபதிகள் துவக்க நீதிபதிகளின் கருத்துக்களை ஒதுக்கிவிட்டு, ஒரு புதிய விசாரணைக் கட்டத்திற்குக்கூட உத்தரவிடமுடியும். ஆனால் இது நடக்காது இந்த வழக்கில் என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது.

நுவோன் அழைக்க விரும்பிய 300 சாட்சிகள் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுவிட்டது என்று பெஸ்ட்மன் புகார் கூறினார். மேலும் விசாரணை நீதிபதிகள்  குற்றம்சாட்டப்பட்டவர்களின் வக்கீலின் ஒவ்வொரு வாதத்தையும் நிராகரித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் ஷிகனௌக், முக்கிய கம்போடிய அரசாங்க மந்திரிகள், அதிகாரிகள், வியட்நாம் மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து அறிந்த சாட்சியங்களை சாட்சியம் அளிக்கப் பலமுறையும் முறையிட்டனர்.

அக்டோபர் 2009ல் விசாரணை நீதிபதி மார்செல் லெமோண்ட்டின் பாரபட்சம் குறித்து ஊழல் ஒன்று வெடித்தது. பிரெஞ்சு நீதிபதியின் விசாரணைக்குழுவின் மூத்த உறுப்பினரான வேன் பாஸ்டின் ஆஸ்திரேலிய பொலிஸ் நிலையத்துடன் அந்த மாதம் அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். இது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், “நான்கு பேரின் நிரபராதத்தன்மை என்று இல்லாமல் குற்றத்தை நிரூபிக்கும், குற்றத்தில் இருந்து விடுவிக்கும் என்பதைவிட குற்றத்தைக் கூறும் சாட்சியம் எங்களுக்கு கிடைக்கும் என்று நான் விரும்புகிறேன்என்று லெமோண்ட் கூறியதாக கூறினார்.

லெங் சாரியின் வக்கீல்களான மைக்கேல் கார்னவாஸ் மற்றும் அங் உடோம் ஆகியோர் ECCC யிடம் லெமோண்ட் அகற்றப்பட வேண்டும், “ஏனெனில் அவர் அவருடைய விசாரணை அதிகாரிகளிடம் வழிவகையை அவர் விருப்பப்படி செய்யவேண்டும் என்கிறார். வேறு விதமாகக் கூறினால், குற்றம் சாட்டுபவர்களுக்கு ஆதரவான சாட்சியத்தைத்தான் முக்கியமாக விரும்புகிறார்என்று கோரினர். ECCC விதிகளின் படி விசாரணை நீதிபதிகளின் பணி எக்கட்சிக்கு ஆதரவு என்று பார்க்காமல் அனைத்துச் சான்றுகளையும் பரிசீலிப்பதுதான்.

அக்டோபர் 2010ல் ECCC  விசாரணைக்கு முந்திய சிறப்பு மன்றம் அனைத்து விசாரணைகளும் பட்சபாதத்துடன் நடக்கின்றன என்ற நிலைப்பாட்டில் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. நீதிபதி பாரபட்சமற்றவர் என்ற முன்கருத்து இருப்பதாகவும், லெமோண்டேயின் கருத்து ஒருபுறம் இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல் அவருடைய ஒருபக்க உணர்வை நிரூபிக்கவில்லை என்று தீர்ப்பளித்தது.

விசாரணைக்கு முந்தைய நீதிமன்றமும் இதேபோன்ற குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்களுடைய எதிர்ப்புக்களை நிராகரித்தது. அப்பொழுது  பிந்தையவர்கள் சார்பில் ஒரு பிரெஞ்சுத் தொலைக்காட்சிக்குழு ஒரு சாட்சியைப் பேட்டிகாண அனுமதிக்கப்பட்டது என்றும் இது ECCC விதிமுறைகளுக்கு மாறானது, அனைத்து விசாரணைகளின் இரகசியத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதற்கு எதிரானது என்று கூறப்பட்டது.

இத்தீர்ப்புக்கள் விசாரணை எந்த வகையில் நடக்கும் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள் பரந்த அரசியல் பின்னணி பற்றிச் சுட்டிக்காட்டும் முயற்சியில் ஈடுபட்டால், குறிப்பாக 1960கள், 1970களில் இந்தோசீனாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள் பற்றி ஈடுபட்டால், அவை முறையற்றவை என ஒரேயடியாக ஒதுக்கப்பட்டுவிடும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்று கூறப்படுவதில் நீதிபதிகள் உறுதியாக உள்ளனர் என்பது தெளிவு. அதேபோல் முக்கி சக்திகளுக்கு சங்கடம் கொடுக்கும், தொடர்புபடுத்தும் சான்றுகளை நசுக்கி விடவும் உறுதியாக உள்ளனர்.