WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The
slaughter in Oslo
ஒஸ்லோ
படுகொலைகள்
Peter Schwarz
25 July 2011
Back to
screen version
வெள்ளியன்று குறைந்தபட்சம்
92
பேர்கள்,
பெரும்பாலும் இளவயதினர்,
ஒஸ்லோவின் பயங்கரவாதத்
தாக்குதல்களால் கொல்லப்பட்ட நிகழ்வானது,
ஒரு வலதுசாரிப் பின்னணியைக் கொண்டிருந்த
1995ல்
ஒக்லஹோமா
நகரக் குண்டுத் தாக்குதலுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.
கொலரோடாவிலுள்ள கொலம்பைன் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜேர்மனியின்
வின்னென்டன் மற்றும் ஏர்ஃபோர்ட் பள்ளிகள் மீதான குண்டுத் தாக்குதல்களுடனும் ஒஸ்லோ
கொடூரம் ஒப்பிடப்பட்டுள்ளது.
ஆனால்
ஒஸ்லோப்
படுகொலைகள்
ஒரு
புதிய
பரிமாணத்தை கொண்டுள்ளன.
அதிதீவிர
வலதுசாரித்
தீவிரவாத
வன்முறை
இப்பொழுது
அதைச்
செய்தவர்
பார்வையில்
அதனுடைய
தற்போதைய
கொள்கைகள்
எப்படி
இருந்தபோதிலும் பொதுவான
இடதுசாரிக்
கருத்துக்கள்,
“கலாச்சார
மார்க்சிசம்”
மற்றும்
சர்வதேசியத்தை
வெளிப்படுத்தும் ஒரு
அரசியல்
கட்சியைத்
தாக்கும்
நோக்கத்தை
அது
கொண்டுள்ளது.
நிகழ்ச்சி
நடந்த இடத்தில் கைதுசெய்யப்பட்ட
Anders Behring Breivik
தன்னுடைய
குண்டுத் தாக்குதலுக்கு இலக்காக சமூக ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த பிரதம மந்திரி
Jens Stoltenberg
இன்
அலுவலகங்களைக் கொண்டுள்ளார்.
அதன் பின்,
பல தசாப்தங்களாக நோர்வேயின் தொழிற் கட்சி அதன் இளைஞர் முகாம்களை
நடத்திவந்த உடோயாத் தீவில்,
முகாமில் பங்கு பெற்றவர்களைத் திட்டமிட்டு கொடூரமாக அவர் படுகொலை
செய்தார்.
சமூக ஜனநாயக கட்சிக்கு எதிராக ஒரு பாசிசவாதியின் அரசியல் உந்துதல்
பெற்ற ஒரு பயங்கரவாத தாக்குதலாகும் இது.
இப்படுகொலையை செய்தவர் பற்றி அறியப்பட்டுள்ளவை அனைத்தும் இது ஒரு இலக்கு
வைக்கப்பட்ட அரசியல் நடவடிக்கையே தவிர,
கட்டுப்பாடற்ற மனநோயாளியின் செயல் அல்ல என்பதைத்தான் தெரிவிக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கான தயாரிப்பை ப்ரீவிக் நடத்தி அதை
மிகத் துல்லியமான வகையில் செயல்படுத்தியுள்ளார்.
பல கிறுக்குப் பிடித்து அலைபவர்களைப் போல் இல்லாமல்,
அவர் தன்னையே கொன்று கொள்ளவில்லை.
மாறாகப் பொலிசிடம் சரண் அடைந்தார்.
இவர் தனியே செயல்பட்டாரா அல்லது உடந்தையாக எவரேனும் இருந்தனரா
என்பது இன்னும் முடிவாகத் தெரியவில்லை;
ஆனால் கிடைக்கும் தகவல்களின்படி வெள்ளி நடந்த படுகொலை தொடர்பாக
இன்னும்
6
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல்
அதன்
பெரும்
எண்ணெய்
இருப்புக்களினால்
இலாபம்
அடைந்துள்ள
ஒரு
சிறிய,
செல்வம்
கொழிக்கும்
நாட்டில்
நடைபெற்றுள்ளது
என்பதில்
குறிப்பிடத்தக்க
அரசியல்
முக்கியத்துவம்
உள்ளது.
ஆழ்ந்த
சமூகநல
வெட்டுக்களை
சுமத்தியுள்ள
மற்ற
ஐரோப்பிய
நாடுகளுடன்
ஒப்பிடும்போது
இங்கு
சமூக
நலன்கள் மிகவும்
தாராளமாக
உள்ளன. இது சிலரை
முதலாளித்துவத்தின்
கீழ்
அமைதியும்,
செல்வக்கொழிப்பும்
பெறக்கூடிய சாத்தியத்தை வழங்கும் ஒரு
ஸ்கன்டிநேவிய
கற்பனை
உயருலகம்
என்பதை காணச்
செய்தது. ஆனால்
ஓஸ்லோவில்
நிகழ்ந்துள்ள
பெரும்
சோகச்
சம்பவம்
இந்த
மெத்தனமான
கண்ணோட்டத்தையும்
சிதைத்துவிட்டது.
ப்ரீவிக்கின் அரசியல் பயணப் பாதையானது அவருடைய கருத்துக்களும் நடவடிக்கைகளும்
ஐரோப்பிய முதலாளித்துவ அரசியலில் பரந்த சக்திவாய்ந்த போக்குகளில் இருந்து
வெளிப்பட்டவை எனக் காட்டுகிறது.
தாக்குதலுக்குச் சற்று முன்னதாக,
அவர் ஒரு
1,500
பக்க ஆவணத்தை மின்னஞ்சலில் அனுப்பினார்;
இது அவருடைய சிந்தனை பற்றிச் சில உட்பார்வைகளைக் கொடுக்கிறது.
பாசிச வட்டங்களில் மட்டும் இல்லாமல் சமூக ஜனநாயகவாதிகள் உட்பட
நடைமுறையிலுள்ள முதலாளித்துவக் கட்சிகள் அனைத்திற்குள்ளும் ஆதரவைக் கொண்டுள்ள
கருத்துக்களை இது தளமாகக் கொண்டுள்ளது.
முஸ்லிம்கள்
மீது
வெறுப்பு
என்பது
இதில்
ஒரு
மையம் ஆகும்.
நாஜிக்களுக்கு
யூத செமிட்சிச
எதிர்ப்பு
உதவியதுபோல்
இன்றைய
பாசிஸ்ட்டுக்களுக்கு
முஸ்லிம்-எதிர்ப்பு
இனவெறி
செயல்படுகிறது.
இஸ்லாமிய
குடியேறுபவர்கள் ஐரோப்பாவின் தேசிய கலாச்சாரங்களை அழிக்கின்றனர் என்ற எச்சரிக்கை
ப்ரீவிக்கின் எழுத்து மூலம் அறிக்கைகள் முழுவதிலும் படர்ந்துள்ளது.
அவருடைய வலைத் தளக் கட்டுரைகளை பகுப்பாய்ந்த
Welt
Online
கூற்றுப்படி
“இஸ்லாமியவாதம்,
ஒரு பன்முகக் கலாச்சார சமுதாயம் ஆகியவற்றிற்கு எதிராக குரூரமான
முறையில் ஒரு எச்சரிக்கை ஒளியை ஏற்றும் முயற்சியில்தான்”
இவர் வெகுஜன படுகொலைகளை செய்துள்ளார்
இடது,
“கலாச்சார
மார்க்சிசம்”,
“பன்முகக்
கலாச்சாரவாதம்”
மற்றும்
“அரசியலில்
சரியான தன்மை”
ஆகியவை தேசிய கலாச்சாரத்தின் பாதுகாப்பிற்கு தடை என்று அவர்
கருதினார்.
ஒரு வலைத் தளக் கட்டுரையில் அவர் தொழிற் கட்சியுடன்
“100
சதவிகித செய்தி ஊடக நிறுவனங்களும்”,
“98
சதவிகித நோர்வீஜிய செய்தியாளர்களையும்”
இவ்வகைகளில் அவர் சேர்த்துள்ளார்.
1997ல்
இருந்து
2007
வரை ப்ரீவிக் நோர்வீஜிய முற்போக்குக் கட்சி
(Norwegian Progress Party)
மற்றும்
அதன் இளைஞர் பிரிவில் உறுப்பினராக இருந்தார்.
2005
மற்றும்
2009
பாராளுமன்றத் தேர்தல்களில்,
முற்போக்குக் கட்சி கிட்டத்தட்ட
29
சதவிகிதம் மொத்த வாக்குகளில் தன் பங்காகப்பெற்றது.
தொடக்கத்தில் வரிக் குறைப்புக்குக்காக நிறுவப்பட்ட கட்சியாக இருந்த
அது இப்பொழுது சமூக வார்த்தைஜாலத்தையும் -வெகுஜனத்தை உணர்ச்சியால்
கட்டுப்படுத்துபவையாகவும் பிற்போக்கை போற்றுவதாகவும் மற்றும் தடையற்ற சந்தைப்
பொருளாதாரக் கொள்கைகளின் கலவையைக் கொண்டுள்ளதுடன் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு மற்றும்
வெளிநாட்டவர் எதிர்ப்புணர்வு ஆகியவற்றையும் இணைத்துள்ளது.
கடந்த
ஆண்டுகூட முற்போக்குக் கட்சியின் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் சமூக ஜனநாயகவாதிகளை
நோர்வீஜியக் கலாச்சாரத்தை
“முதுகில்”
குத்துகின்றனர் எனக் குற்றம் சாட்டினர்.
Aftenposten
என்னும்
செய்தித்தாளில்
“ஒவ்வொரு
ஆண்டும் தொழிற் கட்சி ஆயிரக்கணக்கான புதிய நோர்வீஜியர்களை வித்தியாசமான கலாச்சார,
கலாச்சாரமற்றவர்களை நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது”
என்று எழுதினார்கள்.
இதுதான் ப்ரீவிக்கின் கருத்துக்களை எடுத்துரைப்பது ஆகும்.
ப்ரீவிக்
தன்னுடைய படுகொலை வெறிச்செயலுக்கு முன்னதாக
“2083 --
ஒரு சுதந்திர ஐரோப்பா அறிவிப்பு”
என்னும் தலைப்பின் கீழுள்ள
1,500
பக்க அறிக்கையை மின்னஞ்சலிட்டார்;
இது
Spiegel
Online
கூறியுள்ளது போல்
“பன்முகக்
கலாச்சாரத்தை வெறுப்பவர்கள் மற்றும் இஸ்லாமிய விரோதிகளின்”
ஐரோப்பிய காட்சி பற்றிய மேற்கோள்களின் தொகுப்பாகும்.
ஜேர்மனிய
வலைத் தளமான
Politically Incorrect
ஒப்புக்
கொண்டுள்ளதாவது:
“அவர்
(ப்ரீவிக்)
எழுதுவது இந்த அரங்கில்
(forum)
பெரும்பாலும் காணலாம்.”
ப்ரீவிக் பயன்படுத்தும் பல மேற்கோள்கள்
Fjordman
என்னும் பெயருடைய ஒரு பிளக்கை நடத்துபவருடையவை
(blogger)
ஆகும்;
அவருடை எழுத்துக்கள் பரந்த அளவில் இணைய தளத்தில் வழங்கப்படுகின்றன.
Spiegel Online
குறிப்பிடும் ஐரோப்பிய காட்சி என்பது பிளக்குகள் மற்றும் வலைத்
தளங்களின் ஒரு வலையமைப்பு ஆகும்,
இவை,
மற்றவற்றுடன்,
அமெரிக்க
Tea
Party
இயக்கம்,
ஆஸ்திரிய சுதந்திரக் கட்சி மற்றும் ஆங்கில பாதுகாப்புக் கழகம்
(English Defence League)
ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது.
மரபார்ந்த நவ நாஜிகளைப் போல் இல்லாமல்,
இந்த வலையமைப்பு வெளிப்படையாக அமெரிக்க,
இஸ்ரேலிய சார்புடையது.
சில நேரம் யூதப் பாதுகாப்பு கழகத்துடனும்
(Jewish
Defense League)
சேர்ந்து
செயல்படுகிறது.
முஸ்லிம்கள்
மற்றும் பிற கலாச்சாரத்தினருக்கு எதிரான சூனிய வேட்டை இந்த வலதுசாரி வட்டங்களுடன்
நின்றுவிடவில்லை.
பல ஐரோப்பிய அரசாங்கங்களும் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வை உள்நாட்டில்
பெருகும் சமூக அழுத்தங்களில் இருந்து திசைதிருப்பும் வகையில் தூண்டிவிடுகின்றன.
உதாரணமாக பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் பர்க்கா அணிவதைத்
தடைசெய்துள்ளன;
இதற்கு சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சிகளின் ஆதரவு உள்ளது.
ஜேர்மனியில்
சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் சமீபத்தில்
“பன்முகக்
கலாச்சார முயற்சி”
தோல்வி அடைந்துவிட்டது என அறிவித்தார்.
முன்னாள் பேர்லின் அரச நிதி மந்திரி திலோ சராஜின்
(இப்பொழுதும்
அவர் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்தான்)
அவருடைய இஸ்லாமிய எதிர்ப்புக் கோட்பாட்டிற்காக
Fjordman
ஆல் பாராட்டப்படுகிறார்.
ஈராக்,
ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் நடத்தப்படும்
“பயங்கரவாதத்தின்
மீதான போர்”
என்பதின் பகுதியான ஏகாதிபத்திய போர்களை நியாயப்படுத்தவும் இஸ்லாமிய
எதிர்ப்பு உணர்வு தூண்டிவிடப்படுகிறது.
எனவே ஓஸ்லோ படுகொலைகளுக்கு ஜனாதிபதி ஒபாமா
“பயங்கரவாதத்தின்
மீதான”
போர் முடுக்கிவிடப்பட வேண்டும் என அழைப்புவிடுவது இழிந்த தன்மை
உடையதாகும்.
உண்மையில் இந்தப்
“போர்”
தான் ஓஸ்லோ பெரும் சோகத்திற்கு நேரடியான விளைவை கொடுத்துள்ளது.
பாசிச சக்திகளின் வளர்ச்சிக்கான பொறுப்பு முழு முதலாளித்துவக்
கொள்கைகளில்தான் உள்ளது.
ஆனால் இதற்குள் சமூக ஜனநாயக மற்றும் குட்டி முதலாளித்துவ முன்னாள்
இடது கட்சிகளின் பங்கு--
இவைதான் இறுதியில் பாசிஸ்ட்டுக்களின் இலக்காகின்றன—
குறிப்பிடத்தக்க வகையில் பெருங்கேடு நிறைந்தது ஆகும்.
சமூக ஜனநாயகவாதிகள் சமூகநல அரசை தகர்த்து,
ஊதியங்களைக் குறைத்து,
உழைப்புச் சந்தையில் கட்டுப்பாடுகளை நீக்கிய நிலையில்,
குட்டி முதலாளித்துவ முன்னாள் இடதுகள் மற்றும் தொழிற்சங்க
அதிகாரத்துவம் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் அனைத்து எதிர்ப்பையும் நசுக்குகின்றன.
இதன்
விளைவாக,
எதிர்ப்பு
என்ற
சொல்லாட்சி
வலது
அதிதீவிரவாதிகளிடம் விட்டுக்கொடுக்கப்பட்டுவிட்டது.
இவ்விதத்தில் நோர்வேயும் ஒன்றும் விதிவிலக்காக இல்லை.
பிரிட்டனின் புதிய தொழிற் கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயருடன்
சார்புநிலை கொண்டுள்ள
Jens
Stoltenberg
தன்னுடைய குறுகிய முதல் பதவிக் காலத்தின் போது
(2000-2001)
தீவிரமாக சமூகநல அரசு செலவுகளைக் குறைத்து முக்கிய பொதுச்
சேவைகளையும் தனியார்மயம் ஆக்கினார்.
2005ல்
அவர் ஒபாமாவிடம் இருந்து ஊக்கம் பெற்று,
அதிகாரத்திற்கு
“ஜேன்ஸ்,
நம்மால் முடியும்”
என்ற கோஷத்தை முழக்கி அதிகாரத்திற்கு மீண்டும் வந்தார்.
அப்பொழுது முதல் அவர் ஒரு சமூக ஜனநாயக-பசுமைக்
கட்சிக் கூட்டணி என சோசலிச இடது கட்சி மற்றும் வலதுசாரி விவசாயிகள் கட்சிப்
பிரிவுடன் ஆட்சி செய்துவருகிறார்.
இந்த
அரசாங்கம் வேண்டுமென்றே வெளிநாட்டவர் எதிர்ப்புணர்வுகளை தூண்டுகிறது.
உதாரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரஷியாவில் பிறந்த எழுத்தாளர் மரியா
அமிலி அனைவரும் அறியப்படத்தக்க வகையில் நாடுகடத்தப்பட்டார்;
ஒன்பது ஆண்டுகள் அவர் நோர்வேயில் வசித்தும்,
அவருடைய பாதுகாப்பிற்கு ஒரு பரந்த இயக்கம் அமைக்கப்பட்டும் கூட
இந்நிலைதான் நிலவியது.
கணிசமான உள்நாட்டு எதிர்ப்பு இருந்தும்கூட நோர்வே ஆப்கானிஸ்தான்
போரிலும் பங்கு பெற்றதுடன்,
லிபியா மீதான விமானத் தாக்குதல்களிலும் பங்கு கொண்டுள்ளது.
ஒஸ்லோ
நிகழ்வுகள்,
ஐரோப்பா
முழுவதிலுமுள்ள
தொழிலாள
வர்க்கத்திற்கு
ஒரு
எச்சரிக்கை
ஆகும்.
இஸ்லாமியவாத
எதிர்ப்பு,
ஏகாதிபத்தியப்
போர்
ஆகியவற்றால்
நஞ்சூட்டப்பட்ட
இந்த
அரசியல்
மண் இப்பொழுது
அதன்
முதல்
நஞ்சுப்
பழத்தை
உற்பத்தி
செய்துள்ளது.
ஒரு
பெரும்
ஆபத்து
உருவாகிக்
கொண்டிருக்கிறது;
ஒரு
கொலைக்கார
பாசிச
இயக்கத்திற்கான
கூறுகள்
வெளிப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.
ஆனால் தீவிர
வலதுசாரிச் சக்திகள் எண்ணிக்கையில் குறைந்தவைதான்.
முக்கிய ஆபத்து சமூக
ஜனநாயகக் கட்சி,
தொழிற்சங்கங்கள்
மற்றும் அவற்றைப் பாதுகாப்பவர்களான முன்னாள் இடதுகளிடமும் தொழிலாள வர்க்கம்
தொடர்ந்து அடிபணிந்து இருப்பதின் மூலம் ஆபத்து எழுகிறது.
இதையொட்டி தொழிலாள
வர்க்கத்திடையே ஏற்படும் ஆற்றலிழந்த நிலைதான்
பாசிசவாதிகள்
அரசியல் செல்வாக்கு வளர்ச்சி அடைவதற்கு சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது.
ஓஸ்லோ
படுகொலைகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்வது என்பது சமூக ஜனநாயகவாதிகள்,
தொழிற்சங்கங்கள்,
அவற்றின் போலி இடது
காப்பாளர்களிடம் இருந்து முறித்துக்கொண்டு,
புதிய,
ஜனநாயக மற்றும்
மக்கள் அமைப்புக்களை தொழிலாள வர்க்கப் போராட்டங்களுக்கு நிறுவி ஒரு புதிய புரட்சிகர
தலைமையையும் கட்டமைப்பதாகும்.
வெகுஜனத்தை
உணர்ச்சியால்
கட்டுப்படுத்துபவர்களும்
பிற்போக்கை
போற்றுபவர்களுமான
வலதுசாரி
வார்த்தைஜாலவாதிகளிடம் இருந்து தொழிலாளர்கள்
தங்களை
துண்டித்து
பொதுநலச்
செலவுக்
குறைப்பு,
வெகுஜனத்தை
உணர்ச்சியால் கட்டுப்படுத்துபவர்களும் பிற்போக்கை போற்றுபவர்களுமான
வலதுசாரிகளிடமிருந்து
தொழிலாளர்கள்
தங்களைத் துண்டித்து பொதுநலச் செலவுக் குறைப்பு,
வேலையின்மை மற்றும்
ஊதியக் குறைப்புக்களுக்கு எதிரான போராட்டங்களை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின்
அடிப்படையின் கீழ் ஆரம்பிக்க வேண்டும். |