World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British Prime Minister Camerons position under threat in Murdoch scandal

மேர்டோக் ஊழலால் பிரிட்டிஷ் பிரதமர் காமெரோனின் நிலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது

By Julie Hyland
19 July 2011

Back to screen version

நியூஸ் ஆப் வேர்ல்ட் தொலைப்பேசி ஒற்றுக்கேட்டல் ஊழலை சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடி இப்பொழுது பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் நிலையையும் அச்சுறுத்துகிறது.

ஞாயிறன்று நியூஸ் இன்டர்நேஷனல் தலைமை நிர்வாகி ரெபக்கா ப்ரூக்ஸ் கைதுசெய்யப்பட்டதில், மெட்ரோபொலிடன் பொலிஸ் (Scotland Yard) மற்றும் ரூபர்ட் மேர்டோக்கின்  செய்தி ஊடகக்குழு ஆகியவை பகிரங்கமாக ஒன்றுடன் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளன.

நியூஸ் இன்டர்நேஷனலால் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்தல், தொலைப்பேசி ஒற்றுக் கேட்டல் ஆகியவை குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ப்ருக்ஸ் பத்தாவது நபர் ஆவார். ஆனால் இதுவரை எவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.

நியூஸ் ஆப் வேர்ல்டின் முன்னாள் ஆசிரியரான ப்ரூக்ஸ், பிரிட்டனில் மேர்டோக்கின் செய்தி ஊடகப் பிரிவுகளை கட்டுப்படுத்தும் நிறுவனமான நியூஸ் இன்டர்நேஷனலில் அவருடைய பதவியைராஜிநாமா செய்த சில மணி நேரங்களுக்குள் வார இறுதியில் வெள்ளியன்று பொலிசாரை சந்திக்க அழைக்கப்பட்டார். இது தொலைபேசி ஒற்றுக் கேட்டல் பற்றி பாராளுமன்ற சிறப்புக் குழு செவ்வாயன்று ரூபர்ட் மேர்டோக் மற்றும் அவருடைய மகன் ஜேம்ஸ் விசாரணை நடத்தும்போது அவரும் உடனிருப்பதை தடுப்பதற்காக செய்தி ஊடகக்குழுவும் பொலிசும் நடத்திய செயல் என்று ஆரம்பத்தில் சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

பொலிஸ் விசாரணைகளை ஒட்டித்தான் சிறப்புக்குழுவிற்கு தாங்கள் கொடுக்கும் விடைகளின் வரம்பு இருக்கும் என்பதை மேர்டோக்குகள் ஏற்கனவே தெளிவாக்கிவிட்டனர். ப்ரூக்ஸ் கைதுசெய்யப்படுவது அவர் குழுவின் முன் தோன்றுவதை தவிர்ப்பதற்கு வகை செய்யும் என்று வாதிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் குழுவிற்கு சாட்சியம் அளிப்பது தொடர்பாக குழுவினால்தான் தீர்மானிக்கப்படமுடியும் என்று ப்ரூக்ஸின் வக்கீல் கொடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஒன்பது பணி நேரம் வினாக்கள் கேட்கப்பட்டது தொடர்பாக கொதித்தெழுந்த  ப்ரூக்ஸின் கோபம் இதே அறிக்கையில் தெளிவாக்கப்பட்டுள்ளது. அவர் எவ்வித குற்றத்தையும் செய்யவில்லை என்ற நிலையில் மெட்ரோபொலிடன் பொலிசாரின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வது சுலபமாக இல்லை. நேற்று அவரை கைது செய்தபின்னரும் கூட, ஒன்பது மணி நேரம் நீடித்த பேட்டி ஒன்றை நடத்திய பின்னரும்கூட, அவர்மீது பொலிசார் குற்றச் சாட்டுக்கள் எதையும் காட்டவில்லை, அவரைக் குற்றத்துடன் தொடர்புபடுத்தும் ஆவணங்களை எதையும் காட்டவில்லை.என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் நடவடிக்கைகளுக்கு உரிய காலத்தில் பொறுப்பை அவர்கள் ஏற்கவேண்டும், குறிப்பாக அவரை கைதுசெய்வது என்னும் முடிவு அவரின் பாரிய மதிப்பில் எத்தகைய சேதத்தை ஏற்படுத்தும் என்ற நிலையில்.

இந்த அறிக்கை அரசாங்க மற்றும் அரசியல் அமைப்புகளின் உயர்மட்டத்தில் இப்பொழுது வெடித்துள்ள மனக்கசப்பின் அடையாளம் ஆகும்.

மேர்டோக்கின் டைம்ஸ் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்தல் என்னும் குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால், பிரிட்டனின் பொலிசாரின் முழு அமைப்பும் ஊழலில் மூழ்கியுள்ளது என்ற பொருளை தரும். பொலிசாருக்கு இலஞ்சம் கொடுக்கும் செய்தியாளர்களை ஒரு தவறு நிகழ்ந்துள்ள தொழில்துறையின் அடையாளம் எனலாம். இலஞ்சம் கொடுக்கப்படலாம் என்ற நிலையில் உள்ள பொலிசார் ஒரு தவறுக்குட்பட்டுவிட்ட அரசாங்கத்தின் அடையாளம் ஆகும்.என்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இன்னும் முக்கியமாக காமெரோனுக்குக் குறிப்பாக சேதம் விளைவிப்பது ப்ரூக்ஸை விசாரிப்பது ஆகும்; ஏனெனில் கைது செய்யப்பட்டோரில் அவர் பிரதம மந்திரியின் இரண்டாம் மிக முக்கியமான நண்பர் ஆகும். கடந்த வாரம் நியூஸ் ஆப் வேர்ல்டின் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கௌல்சன் கைதுசெய்யப்பட்டது முதல் நண்பர் ஆகும்.

எதிர்க்கட்சியில் இருந்துபோதும், அரசாங்கத்தில் இருக்கும்போதும் காமெரோனின் முதன்மை செய்தித்தொடர்பாளராக கௌல்சன் நியமிக்கப்பட்டதை ஏற்பாடு செய்தது ப்ரூக்ஸ் என்று கூறப்படுகிறது. 2007ல் அவர் முதல் ஒற்றுக்கேட்டல் விசாரணையை அடுத்து 2007ல் நியூஸ் ஆப் வேர்ல்டில் இருந்து இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டிருந்தார். தொலைப்பேசி ஒற்றுக்களுக்கு பணம் கொடுக்க அவர் ஒப்புதல் கொடுத்தார் என்னும் சாட்சியங்கள் வந்தபோது, ஜனவரி மாதம் கௌல்சன் பேச்சாளர் என்ற பதவியிலிருந்து இறுதியில் இறங்கிபோதும் , காமெரோன் அவரைத் தொடர்ந்து ஆதரித்தார்.

ஞாயின்று மெட்ரோபொலிடன் பொலிஸ் ஆணையர் சேர் பால் ஸ்டீபகன்சன் தன் இராஜிநாமா அறிக்கையை விடுத்த பின் பிரதம மந்திரியும் இலக்காகியுள்ளார்.

அக்டோபர் 2009க்கும் செப்டம்பர் 2010க்கும்இடையே அவர் கௌல்சனின் கீழ் நியூஸ் ஆப் வேர்ல்டின் துணை ஆசிரியராக இருந்த நீல் வாலிசை தனக்கும் துணை ஆணையர் ஜோன் யேட்ஸுக்கும் செய்தி ஊடக மூலோபாயத்திற்கு ஆலோசகர் என்ற நியமித்தது தெரியவந்தபின் ஸ்டீபன்சனின் பதவி ஏற்கமுடியாமல் போய்விட்டது. இந்த நேரத்தில்தான் மேர்டோக்கின் செய்திக்குழு பற்றி விசாரணைகளை மீண்டும் நடத்துவதற்கில்லை என்று யேட்ஸ் கூறினார்.

தன்னுடைய அறிக்கையில் ஸ்டீபன்சன் தான் வாலிஸை நியமித்தது ஒன்றும் கௌல்சனை காமெரோன் நியமித்ததோடு ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்கது ஒன்றும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கௌல்சனை போல் அன்றி, வாலிஸ் ஒன்றும் நியூஸ் ஆப் வேர்ல்ட் ல் இருந்து இராஜிநாமா செய்யவில்லை, எனக்குத் தெரிந்தவரை ஆரம்ப தொலைபேசி ஒற்றுக்கேட்டல் விசாரணையிலும் எவ்கையிலும் தொடர்பை கொண்டிருக்கவில்லை.

வாலிஸுடன் தன் தொடர்பை முன்னதாக வெளிப்படுத்தாமல் இருந்தது, திரு. கௌல்சனுடன் நெருக்கமான உறவைத் தெளிவாகக் கொண்டிருந்த சந்தேகத்திற்கு உரியவரை பற்றிய விவாதம் அல்லது வெளிப்படுத்துதலால் எவ்விதத்திலும் பிரதம மந்திரியை சமரசப்படுத்தத் தான் விரும்பவில்லைஎன்று ஸ்டீபன்ஸன் கூறியுள்ளார்.

இவருடைய கூர்மையான சொற்கள் நிறைந்த இராஜிநாமா கடிதம் காமெரோனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஆபிரிக்காவிற்கு ஒரு வணிகத் தூதுகுழுவுடன் செல்லும் போது, அவர் பெருகும் நெருக்கடி காரணமாக பயணத்தின் காலஅளவை நான்கு நாட்களில் இருந்து இரண்டு நாட்களாகக் குறைக்கும் கட்டாயத்திற்கு ஏற்கனவே உட்பட்டுவிட்டார்.

திங்கள் பிற்பகல் தன் இராஜிநாமாவை யேட்ஸ் அறிவித்தார். தன்னுடைய நிரபராத தன்மையை கபடமற்ற முறையில் எதிர்ப்பதுபோல் காட்டினாலும், அவரும் காமெரோன் மீது மறைமுகத்தாக்குதல் கொடுக்கும் வகையில், பொலிஸ் பணியில் உள்ள நாங்கள் உண்மையில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்தான். மிகக் கடினமான பணிகளை எங்களில் எடுத்துக் கொள்ளுவோர், சம்பவங்கள் மோசமாகப் போகும்போது அதற்கான பொறுப்பைத் தெளிவாக ஏற்க வேண்டியுள்ளது.என எழுதியுள்ளார்.

பிரிட்டனின் மிகப் பெரிய பொலிஸ் அமைப்பு இப்பொழுது அதன் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுத் தலைவர் உட்பட இரு முக்கிய அதிகாரிகளையும் இழந்துவிட்டது. நியூஸ் இன்டர்நேஷனலுடன் பொலிசின் இணைந்த செயற்பாடு பற்றிக் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ள 24 மணி நேரத்திற்குள் இது நடந்துள்ளது.

காமெரோன் நியூஸ் இன்டர்நேஷனல் ஆதரவு உட்பட அவரைப் பதவிக்கு கொண்டுவந்த பிரிவிற்கு அரசியல் கூட்டு உள்வெடிப்பு பெறும் தன்மையை சமாளிக்கப்பார்க்கிறார். நெருக்கடியின் காரணங்கள் ஆராயப்படும்போது, அடுத்த ஆண்டு எத்தகைய பிளவுகள், பகைமை உணர்வுகள், சிறைத்தண்டனையை எதிர்பார்க்கும் தனி நபர்கள் தங்கள் புகழைக் காப்பதற்காக மேற்கோள்ளும் காட்டிக் கொடுப்புக்கள் பற்றி அவர் அறிந்திருக்க முடியாது.என்று கார்டியன்  பத்திரிகை கூறியுள்ளது.

ஏன் அரசியல் உடன்பாடு உள்வெடிப்புத் தன்மை பெறும் என்று கார்டியன் கூறவில்லை. முக்கிய கட்சிகள், பொலிஸ் மற்றும் செய்தி ஊடகம் அனைத்தும் மேர்டோக்கிற்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றிப் பல ஆண்டுகளாக நன்கு அறியும். அவர் கொடுக்கும் பணந்தை ஏதேனும் ஒரு வகையில் பலரும் பெறுகையில், நிலைமை வேறு எப்படி இருக்க முடியும்?

ஆனால் போட்டி செய்திக்குழுக்கள் விற்பனைச் சந்தைப்பங்கு பற்றிய போராட்டம் என்று தொடங்கியதை, மேர்டோக்கின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டு, அரசியல் மாற்றத்திற்கு வழிசெய்ய முற்படும் சிலர் உள்ளனர் என்பதும் இதில் தெளிவாகிறது.

இதில் தொழிற்கட்சியும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அதன் தலைவர் எட் மிலிபண்ட் மேர்டோக் மற்றும் காமெரோனுக்கு இடையே உள்ள உறவுகளை இயல்பிற்கு எதிராக நேர்மையுடன் தாக்குகிறார். பாராளுமன்ற கோடைகால இடைவேளையை நிறுத்திவைக்குமாறு பிரதம மந்திரியைக் கட்டாயப்படுத்தியுள்ளார். புதன்கிழமை அன்று தொலைப்பேசி ஒற்றுக்கேட்டல் பற்றி ஒரு விவாதம் பாராளுமன்றத்தில் நடக்க உள்ளது.

மிலிபண்டின் தாக்குதல்கள் மிகவும் இழிந்தவை. ஏனெனில் தொழிற்கட்சி  அரசாங்கமும் முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயரும் பல ஆண்டுகள் மேர்டோக்கின் விருப்பத்திற்குரிய அரசியல் கருவியாகச் செயல்பட்டுள்ளனர்.

ஊழல் பற்றிய பேச்சு ஒன்றில் நேற்று மிலிபண்ட் மேர்டோக்கிற்கு எதிராக, இப்பொழுது காமெரோனுக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கருத்துக்கள் ஆராயப்பட வேண்டும் என்று குறிப்புக் காட்டினார். ஒரு சில ஆண்டு காலத்திற்குள் கூடிய அதிகாரத்தை செலுத்துபவர்கள் மற்றும் அமைப்புக்களுக்குள் நாம் மூன்று பெரிய நெருக்கடிகளை கண்டுவிட்டோம்.அவை வங்கிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் செலவுகள், இப்பொழுது செய்தி ஊடகம் பற்றியதுஎன அவர் பின் மேற்கோளிட்டார்.

 இவை அனைத்துமே சக்தி வாய்ந்தவர்களின் பொறுப்பற்ற தன்மை பற்றியதாகும். இவை அனைத்துமே பிரிட்டனை ஆழ்ந்த முறையில் பின்தங்க செய்துள்ளனஎன்று அவர் தொடர்ந்து கூறினார்.

இந்தத் தவறுகள்எப்படி சமாளிக்கப்பட வேண்டும் என்று மிலிபண்ட் உருப்படியாக எதையும் கூறவில்லை. மேர்டோக் மற்றும் அதிகாரக் குவிப்பு அதிகம் உள்ளவைஆகியவை பற்றி அவருடை விமர்சனங்கள் தடையற்ற சந்தை இன்னும் திறமையுடன் செயல்பட வேண்டும், உண்மையான போட்டி நிறைந்ததனியார் நிறுவனங்கள் திறம்பட நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளவை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

அவருடைய அழைப்பின் உண்மையான நோக்கம் சிறப்பு மிக்க பிரிட்டனின் சீரிய தன்மைக்கான பொறுப்பை மீட்பதாகும், தொழிலாளர்களின் உரிமைகள், வாழ்க்கத் தரங்களுக்கு எதிரான சமூக எதிர்ப்புரட்சியை நடத்துவதற்கு தொயிற்கட்சிதான் சிறந்த கட்சி என்ற கருத்தை வலியுறுத்துவது ஆகும்.

பொதுநல அரசாங்கத்தை சீர்திருத்துவதின்முக்கியத்துவம் பற்றி மிலிபண்ட் பலமுறை வலியுறுத்தினார்: எதுவும் கொடுக்காமல் ஏதெனும் பெறலாம் எனக் கருதும் சமூகத்திற்கு நாம் ஒப்புதல் கொடுக்க முடியாது. உயர்ந்த பெருநிறுவனக் குழுக்களில் இருந்து வேலையின்மை நலன் பெறுவோர் அலுவலகம் வரை மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்என்றார் அவர்.

அனைத்து முக்கிய கட்சிகளும் கடும் சிக்கன நடவடிக்கைகள் பற்றிய தேவையில் உடன்பாடு கொண்டுள்ளன என்றாலும், காமெரோனுக்கு எதிராக மக்கள் கொண்டுள்ள மக்களின் விரோதப் போக்கு உணர்வு அத்தாக்குதலை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று முதலாளித்துவத்தின் ஒரு பிரிவினர் நம்புகின்றனர்.

கார்டியனில்  எழுதிய டெய்லி மிரரின் முன்னாள் ஆசிரியர் ரோய் க்ரீன்ஸ்லேட் தாராளவாத ஜனநாயகவாதிகள் (Liberal Democrats) பிரதம மந்திரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்இது பாராளுமன்றத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்கும்மற்றும் தேர்தல் நடப்பதற்கான சூழலை ஏற்படுத்தும், அதில் அச்சமுடைய தாராளவாத ஜனநாயகவாதிகள் பெரும் இலாபம் அடையலாம்என்று அவர் எழுதியுள்ளார்.

இதுவரை துணைப் பிரதம மந்திரி மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகளின் தலைவர் நிக் கிளெக் காமெரோனுக்கு வலுவான ஆதரவைக் கொடுத்துள்ளார். பிரதம மந்திரி இராஜிநாமா செய்ய வேண்டும் என்று சில தொழிற்கட்சி  பின்இருக்கையில் அமர்பவர்கள் கொடுத்துள்ள குரலை மிலிபண்டே நிராகரித்துள்ளார்.

ஆனால் கன்சர்வேடிவ் பின்னிருக்கையில் உள்ளவர் உட்பட சிலர் காமெரோனின் பதவிக்கால இறுதி நாட்கள் வந்து விட்டன என நம்புகின்றனர். டோரி சார்புடைய டெய்லி டெலிகராப்பின் டேமியன் தோம்சன், [அரசியல் ஊழலின்] வெள்ளம் மெதுவாக உயர்கிறது, எவரும் அதைப் பற்றி அநேகமாக எதையும் செய்ய இயலாதுஎன்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரிப் பதவியில் இருந்து காமெரோன் விலகக் கூடும் என்பது மிகக் குறைந்த வாய்ப்பு என்றாலும்அடுத்த வாரம் நடக்கக் கூடியதேஎன்றார் அவர்.

யேட்ஸ் இராஜிநாமா பற்றியச் செய்தியாளர் கூட்டம் ஒன்றில், லண்டனின் கன்சர்வேடிவ் நகரசபைத்தலைவர் போரிஸ் ஜோன்சன் காமரோன் இராஜிநாமா செய்ய வேண்டுமா என்ற வினாவிற்கு விடையளிப்பதைத் தவிர்த்து விட்டார். அரசாங்க நியமனங்கள் பற்றி விவாதிக்க நான் இங்கு வரவில்லை. அரசாங்கத்திடம் நீங்கள் இந்த வினாக்களை எழுப்புங்கள்என்றார்.

மெட்ரோபொலிடன் பொலிஸ் அதிகாரத்திற்கு ஜோன்சன் பொறுப்புக் கொண்டுள்ளார். தலைநகரின் பொலிஸ் பிரிவை இந்த அமைப்புத்தான் கண்காணித்து, ஜனநாயகரீதியாக பொறுப்பேற்றுள்ளது.