WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
தென்
சீனக்கடல் பகுதியில் வாஷிங்டன் சீனாவுடனான மோதலை முடுக்கிவிடுகிறது
By Joseph
Santolan
22 July 2011
ஆசியான்
பிராந்திய அரங்கில்
(ASEAN Regional Forum)
பேச்சுக்களுக்காக பாலியில் சீன மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு
மந்திரிகளை சந்திக்க அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் தயாரிப்பு
நடத்துகையில்,
வாஷிங்டன் தென் சீனக் கடலில் தன் நலன்களை ஆக்கிரோஷமாக
உறுதிப்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது.
ஜூலை
14ம்
திகதி செனட்டர்கள் ஜோன் மக்கெயின் மற்றும் ஜோன் கெர்ரி இருவரும் சீன அரச ஆலோசகர் டை
பிங்குவோவிற்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.
“தென்
சீனக் கடலில் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு எதிரான சீனா எடுக்கும் உறுதியான
நடவடிக்கைகளும்,
நீர்நிலையில்
“மோதலுக்கு
இடமில்லாத இறைமை”
பற்றிய பரந்த கூற்றுக்களும் வருங்காலத்தில் நிகழ்வுகளை ஏற்படுத்தும்”
என்று அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
“இது
அமெரிக்காவின் முக்கிய தேசிய நலன்களுக்கு ஊறு விளைவிக்கலாம்”
என்றும் சேர்த்துக் கொண்டனர்.
சீன
நடவடிக்கைகள்
“அமெரிக்காவின்
முக்கிய தேசிய நலன்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடும்”
என்னும் மக்கெயின்,
கெர்ரி ஆகியோரின் கூற்று மோதலுக்குட்பட்ட நீர்நிலையில் மோதலுக்கான
வனப்புரையை வாஷிங்டன் பயன்படுத்துவதை தீவிரமாக்கியுள்ளது.
ASEAN
பிராந்திய அரங்கு கடந்த ஜூலையில் நடைபெற்றபோது,
கிளின்டன்,
“மற்ற
நாடுகளைப் போலவே அமெரிக்காவும் தடையற்ற கப்பல் போக்குவரத்து,
ஆசியக் கடல் பொதுப்பகுதிகள் ஆகியவற்றில் தேசிய நலன்களை
கொண்டுள்ளதுடன் தெற்கு சீனக் கடலில் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பு தேவை என்றும்
கருதுகிறது”
என்று கூறியிருந்தார்.
தென் சீனக்
கடலில் ஒரு அமெரிக்க தேசிய நலனை உறுதிப்படுத்துவது என்பது அதிகமாகப் பேசப்பட்டு ஒரு
முக்கிய தேசிய நலனாக மாறி,
சீனா அதற்கு ஊறு விளைவிக்கக் கூடும் என்று மக்கெயினும் கெர்ரியும்
குற்றம் சாட்டியுள்ளனர்.
இத்தகைய சொல் பிரயோகம் மிகவும் பயங்கரமானது;
ஏனெனில்
“முக்கிய
தேசியப் பாதுகாப்பு நலன்கள்”
என்பவை ஒரு நாடு அவற்றைப் பாதுகாக்கப் போருக்குச் செல்லும் என்ற
பொருளைத் தரும்.
இத்தகைய சொற்களுக்கு மிக அதிக தூரத்தில் ஒன்றும் அமெரிக்க ஆயுதத்
தலையீடு என்ற அச்சுறுத்தல் இல்லை.
தென் சீனக்
கடல் என்பது ஒரு முக்கிய கடல் பாதையாகும்.
உலகின் கடல் போக்குவரத்தில் ஐந்தில் இரு பங்கு இதன் வழியே நடக்கிறது;
இதில் வடகிழக்கு ஆசியாவிற்குச் செல்லும் எண்ணெய் அளிப்புக்கள்
பெரும்பாலானவை உள்ளன.
இது ஒரு செழிப்பு மிக்க மீன்பிடித் தளமும் ஆகும்.
மோதலுக்குரிய நீர்நிலையின் வடக்குப் பகுதியில் வியட்நாம்
மீன்பிடிப்பிற்கு சீனா ஒவ்வொரு ஆண்டும் ஒருதலைப்பட்சத் தடையை விதிக்கிறது.
தென் சீனக்
கடலின் கடல்தளம் பரந்த அளவில் இன்னமும் பயன்படுத்தப்படாத இருப்புக்களைக்
கொண்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் சீனா,
பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவை எண்ணெய்,
மற்றும் இயற்கை எரிவாயுவிற்காக குழாய்கள் தோண்டுகின்றன—ஒவ்வொரு
நாடும் மற்றொன்றை தம் தேசிய இறைமையை மீறுவதாகவும் குற்றம் சாட்டுகிறது.
அரசிற்குச் சொந்தமான சீனத் தேசிய தொலைக்கடல் எண்ணெய் நிறுவனம்
(CNOOC)
தென் சீனக்
கடல் ஆழ் நீரில் எண்ணெய் தோண்டுவதற்காக
30
பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் திட்டத்தைக்
கொண்டுள்ளது.
இது அதன்
12வது
ஐந்தாண்டுத் திட்டத்திலுள்ள
(2011-2016)
விரிவான தோண்டும் பணி முனைப்புடன் ஒத்திருக்கிறது.
ஜூலை
19
அன்று செல்வாக்கு மிக்க
Center for Strategic and International Studies (CSIS)
என்னும்
சிந்தனைக்குழு கூறியதாவது:
“தென்கிழக்கு
ஆசியா,
குறிப்பாக ஆசியன்,
ஒரு நீண்டகால ஆசிய மூலோபாயத்திற்குத் தளமாக உதவும் என்று கிளின்டன்
முடிவெடுத்துள்ளார்.
இதனால் அதிக மக்கள் உடைய இந்தோனேசியா வழிகாட்டுதலில் இயங்கும்
ஆசியனானது இந்தியா,
சீனா அல்லது ஜப்பானை விட மூலோபாயவகையில் கூடுதல் முக்கியத்துவம்
கொண்டது என்ற பொருள் இல்லை;
ஆனால்
21ம்
நூற்றாண்டின் புவியியல்சார் மூலோபாயச் சதுரங்க விளையாட்டு என்னும் முக்கியமான
தளத்தின் குவிப்புப் புள்ளியாக அது உள்ளது”
தென்கிழக்கு
ஆசியாவுடன் சீனப் பொருளாதாரப் பிணைப்புக்கள் வியத்தகு அளவில் அமெரிக்காவுடையதை விட
வியத்தகு அளவில் பரந்து மறைத்துள்ளது.
அமெரிக்க வணிகப் பிரதிநிதி அலுவலகம் கூறும் விபரங்களின்படி ஆசியான்
மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மொத்த வணிகம்
2010ல்
178
அமெரிக்க பில்லியன் டொலர்கள் என்று இருந்தது.
சீனா ஆசியான் தடையற்ற வணிக உடன்பாடு ஜனவரி
2010ல்
நடைமுறைக்கு வந்து,
அந்த ஆண்டு மொத்த வணிகம்
298
அமெரிக்க பில்லியன் டொலர்கள் என ஆயிற்று.
சீன ஆசியான் வணிகம்
2011
முதல் காலாண்டில்
25
சதவிகிதம் பெருகியுள்ளது.
இப்பகுதியில் தன் மேலாதிக்கத்தை இராஜதந்திர,
இராணுவ வழிவகைகள் மூலம் மீண்டும் உறுதி செய்ய வாஷிங்டன்
முற்படுகிறது.
தென் சீனக் கடல் சீன வணிகத்திற்கும் பெட்ரோலிய பொருட்களைப்
பெறுவதற்கும் ஒரு முக்கியமான போக்குவரத்துக் கூடிய இடமாகும்.
கடந்த மாதம் அமெரிக்கா வியட்நாம்,
பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்கு நாடுகளுடன் தென் சீனக் கடலில்
இராணுவப் பயிற்சிகளை நடத்தியது.
ஜூன் மாதம்
வெளியேறும் பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் அமெரிக்காவானது சிங்கப்பூரில் அதன் புதிய
லிட்டோரல் போர்ப் படைக் கப்பல்களை நிறுத்தும் என்றும் அவை முக்கிய மலாக்கா
ஜலசந்திகளைக் காக்கும் என்றும் அறிவித்தார்.
லிட்டோரல் போர்ப்படைக் கப்பல்கள் சிங்கப்பூரில் நிரந்தரமாக
நிறுத்தப்படும் அமெரிக்கக் கப்பல்கள் ஆகும்.
இக்கப்பல்கள் விரைவாகவும்,
இரகசியமாகவும் குறுகிய கடலோர நீர்நிலைகளில் செயல்படுமாறு
வடிவமைக்கப்பட்டுள்ளவை ஆகும்.
“அமெரிக்கப்
படைகளுக்கு முக்கிய கடல் பாதைகள் மற்றும் தொடர்பு முறைகளை மறுப்பவற்றிற்கு”
எதிராக இவை பயன்படுத்தப்படும் என்று கேட்ஸ் கூறினார்.
அமெரிக்க
அரசாங்கத்தின் அறிக்கைகளையொட்டி,
இது சீனா பற்றிய வெளிப்படையான குறிப்பு ஆகும்.
ஜூன் கடைசியில் அமெரிக்க செனட் ஒரு தீர்மானத்தை இயற்றி தென் சீனக்
கடலில் சீனா வலிமையைப் பயன்படுத்துவதைக்
“கண்டித்தது”;
மேலும் அப்பிராந்தியத்தில் தொடர்ந்து அமெரிக்க இராணுவச்
செயற்பாடுகள் வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.
ஜூலை
15ம்
திகதி வெளியுறவுகள் பற்றிய மன்றக்குழு அதே போன்ற தீர்மானத்தை காங்கிரஸில்
அறிமுகப்படுத்தியது;
அது சீனா வலிமையைப் பயன்படுத்துவது குறித்து கண்டித்து,
“வெளிப்படையான
அச்சுறுத்தலைகளை அது கொடுக்கிறது”
என்றும்
“துப்பாக்கிப்
படகு இராஜதந்திரத்தில்”
ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியது.
தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவச் செயற்பாடுகள் தொடர்ந்து இருக்க
வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.
ஆசியான்
பிராந்திய அரங்கில்,
நாளை பாலியில்,
கிளின்டன் பேச உள்ளார்.
அவருடைய கருத்துக்கள் ஆத்திமூட்டும் தன்மையைக் கொண்டிருக்கும்,
இப்பிராந்தியத்தின் அமெரிக்க நலன்களை ஆக்கிரோஷமாக உறுதிப்படுத்தும்
வகையில் இருக்கும் என்று செய்தி ஊடகத்தில் பரந்த ஊகங்கள் உள்ளன.
அமெரிக்க
தூதுக் குழுவின் வனப்புரையை முன்கூட்டியே தவிர்க்கும் முயற்சியில்,
ஆசியான் வெளிநாட்டு அமைச்சர்களை சீனத் தூதர்கள் கிளின்டன் வருவதற்கு
ஒரு நாள் முன்னதாகச் சந்தித்து தென் சீனக் கடலில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டிய
நெறிமுறை பற்றிய அறிக்கையைச் செயல்படுத்துவது குறித்த வழிகாட்டி நெறிகள்
(Guidelines on the Implementation of the Declaration on the Conduct of Parties
in the South China Sea)
என்ற
ஆவணத்தில் கையெழுத்திட்டது.
2002ல்
ஆசியான் தென் சீனக் கடலில் அனைத்துத் தரப்பினரும் சமாதானமாக நடந்து கொள்ள வேண்டும்
என்ற தீர்மானத்தை ஏற்றிருந்தது.
ஒன்பது ஆண்டுகளாக இத்தீர்மானம் கிடப்பில் போடப்பட்டிருந்தது;
அதைச் செயல்படுத்துவதற்கு வடிவமைப்பு ஏதும் இல்லை.
சீனாவும் இந்தோனேசியாவில் இருக்கும் ஆசியான் செயலகமும் புதிய
ஆவணத்தை
“வரலாற்றுத்
தன்மை”
வாய்ந்தது எனவும் ஒரு முன்னேற்றப் பாதையில் முக்கிய படி என்றும்
பாராட்டியுள்ளன.
உண்மையில் இது அப்படி ஏதும் இல்லை.
2002ம்
ஆண்டு முதல் அறிக்கை ஒரு வெற்று ஆவணம் ஆகும்.
செய்தி ஊடகத்திற்கு வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிகளின் ஒரு பிரிவு
கூறியது:
“DOC
செயற்பாடுகள் அல்லது உருப்படியான நடவடிக்கைகளை செயல்படுத்தும்
முடிவு தொடர்புடைய தரப்பினரின் ஒருமித்த உணர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும்,
ஒரு நன்னடத்தை நெறியைப் பின்னர் அடைவதற்கு வழிவகுக்க வேண்டும்.”
துரதிருஷ்டவசமாக எந்த
“நன்னடத்தை
நெறியும்”
ஒருமித்த உணர்வில் இருக்க வேண்டும் எனப்படுவது ஒரு வெற்றுத்தனத்தைத்
தளமாகக் கொண்ட ஆவணம்தான்.
இது முக்கிய சக்திகள் இடையே பெருகும் வேறுபாடுகளை மறைக்கும்
முயற்சியுடையதுதான்.
பிலிப்பைன்ஸ் குழுவின் வேண்டுகோளின்படி இந்த வழிகாட்டி நெறிகளும் தென் சீனக் கடல்
ஒரு சமாதான,
சுதந்திர,
நட்பு மற்றும் ஒற்றுமைப் பகுதியாகும் என அறிவித்தது;
விந்தையான முறையில் இதற்கு
ZoPFF/C
என்று பெயரிடப்பட்டிருந்தது.
வியட்நாமோ
அல்லது பிலிப்பைன்சோ சமாதானம் அடையவில்லை.
பிலிப்பைன்ஸின் வெளியுறவு மந்திரி ஆல்பரெட் டெல் ரோசரியா தென் சீனக்
கடலில் சீனாவின் கூற்றுக்கள் ஆசியன் நடத்தை நெறி அறிவிப்பை குறைமதிப்பிற்கு
உட்படுத்திவிட்டது எனக் கூறினார்.
வாஷிங்டன்
வெளிப்படையான இராஜதந்திர,
இராணுவ ஆதரவை வியட்நாமிற்கும் பிலிப்பைன்சிற்கும் சீனாவுடனான
அவற்றின் மோதல்கள் குறித்துக் கொடுத்துள்ளது;
மேலும் அவை நிலப்பகுதி இறைமையை பெருகிய முறையில் உறுதிபடுத்துவது
குறித்து அவற்றைத் தூண்டியும் விடுகிறது. |