WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
லிபியாவின்
மாற்றுக்கால தேசிய சபையை அமெரிக்கா அங்கீகரிக்கிறது
Patrick
O’Connor
20 July 2011
மாற்றுக்கால
தேசிய சபை
(TNC)
என அழைக்கப்படும் அமைப்பை லிபியாவின்
“நெறியான
ஆளும் அதிகார அமைப்பு”
என்று ஒபாமா நிர்வாகம் முறையாக அங்கீகரித்துள்ளது முற்றிலும்
அரசியல் கொள்ளைச் சட்டவிரோத நடவடிக்கை ஆகும்.
இது லிபியாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ
போரின் ஏகாதிபத்திய தன்மையை இன்னும் அம்பலப்படுத்துகிறது.
கடந்த
வெள்ளியன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் அறிவித்துள்ள நிலையானது,
இது பில்லியன் கணக்கில் மதிப்புடைய லிபிய அரச சொத்துக்களைத் திருடி
போரில் நேட்டோவின் சார்பில் தரையிலுள்ள படைகளாக செயற்படும் பெங்காசியைத் தளமாகக்
கொண்ட
TNC
க்கு அளிப்பதற்கு போலித்தன சட்டப்பூர்வ மறைப்பைக் கொடுக்கிறது.
TNC
அதிகாரிகள் முன்னதாக அமெரிக்கா,
ஐரோப்பா மற்றும் அரபு வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து
நிதிகளைப் பெற்றுள்ளனர்.
இப்பொழுது வாஷிங்டன் அவர்களுக்கு மேற்கத்தைய வங்கிகளில்
முடக்கிவைக்கப்பட்டுள்ள
34
பில்லியன் டொலர்கள் மதிப்புடைய லிபிய நிதிகளை அளிக்க முடியும்.
TNC
ஐ அமெரிக்கா அங்கீகரித்துள்ளதே சர்வதேச சட்டத்தை மீறிய செயல் ஆகும்.
வெளிவிவகார அலுவலக முன்னாள் சட்ட ஆலோசகர் ஜோன் பெலிங்கர்
“TNC
ஐ அமெரிக்கா அங்கீகரித்தது,
குறிப்பாக சர்வதேச சட்டத்தின் கீழ் அசாதாரணமானது;
ஏனெனில்
TNC
லிபியாவின் அனைத்துப் பகுதிகள் மீதும் கட்டுப்பாட்டைக்
கொண்டிருக்கவில்லை,
அனைத்து லிபிய மக்களுக்கும் தான் சார்பாக உள்ளது என்றும்
கூறமுடியாது…..செயல்பட்டுவரும்
ஒரு அரசாங்கம் இருக்கும்போது,
ஒரு எழுச்சிக் குழுவிற்கு அங்கீகாரம் என்பது ஒரு நாட்டின்
உள்விவகாரங்களில் சட்டவிரோதக் குறுக்கீடு ஆகும் என்று சர்வதேச நிபுணத்துவமுடைய
வக்கீல்கள் கூறுகின்றனர்.”
TNC
க்கு வாஷிங்டன் அங்கீகாரம் அளித்ததில் ஒரு பெருந்திகைப்புத் தன்மை
உள்ளது.
லிபியாவில் நேட்டோ நடத்தும் போர் இப்பொழுது ஐந்தாவது மாதத்தில்
உள்ளது;
ஆயினும்கூட கேணல் முயம்மர் கடாபியின் அரசாங்கத்தை வீழ்த்துவதில் அது
ஒன்றும் அருகில் சென்றுவிடவில்லை—இதற்குக்
காரணம் லிபிய மக்களிடையே அதிருப்தியை
TNC
கொண்டிருப்பதும் அதன் வலுவற்ற நிலையும்தான்.
அமெரிக்கா
TNC
யை
அங்கீரித்தல் என்பது லிபிய மக்களை கடாபியின் தீமைகளிலிருந்து லிபியக் குடிமக்களை
காப்பாற்றுவதற்குத்தான் என்னும் வாஷிங்டனின் ஆரம்பக் கூற்றுக்களுக்கு இறுதி
மறுப்பைத்தான் அளிக்கிறது.
உண்மையில் வாஷிங்டன் லிபியக் குடிமக்களின் கணக்கிலடங்கா
இழப்புக்களில் லிபியாவின் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு லிபிய அரசாங்கத்திற்கு
ஆணையிடுதல் என்னும் கொள்கையை கொண்டிருந்தது.
இதைக்கூறித்தான் நேட்டோ பல முறை திரிப்போலியையும் மற்ற முக்கிய
லிபிய நகரங்கள் மீதும் குண்டுத் தாக்குதலை நடத்திவருகிறது.
இந்த மார்ச்
மாதம் லிபியாவில் தங்கள் தலையீட்டை மேற்கத்தைய சக்திகள் தொடக்கத்தில்
நியாயப்படுத்தும் வகையில்
TNC
ஐ கடாபி ஆட்சிக்கு எதிரான லிபிய ஜனநாயகத்திற்கான போராட்டத் தலைமை
என்று விளம்பரப்படுத்தியது.
அது அப்படி ஒன்றும் கிடையாது.
உண்மையில் செய்தி ஊடகங்கள் தெளிவாக்கியுள்ளபடி,
TNC
பல முன்னாள் கடாபி அதிகாரிகள்,
பழங்குடித் தலைவர்கள்,
நாட்டை விட்டு வெளியேறியுள்ள வணிகர்கள் மற்றும் சி.ஐ.ஏ.சொத்துக்கள்,
லிபிய இஸ்லாமியவாதக் குழுவில் இருக்கும் அல்-குவேடா
செயற்பாட்டாளர்கள் போன்ற பலதரப்பினரைக் கொண்ட கூட்டணி ஆகும்.
பெரும்பான்மை லிபிய மக்களுக்கு விரோதப் போக்குடைய இச்சக்திகள் லிபியாவில் ஒரு
ஜனநாயக ஆட்சியை தோற்றுவிப்பதில் எந்தப் பங்கையும் கொள்ள முடியாது.
மேலும் வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு
லிபியாவின் பல டிரில்லியன் டாலர்கள் எண்ணெய் இருப்புக்களை முக்கிய எண்ணெய்
நிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலாகத் திறந்துவிடுவதற்கும்,
அவை தங்கள் மேலாதிக்கத்தை
பிராந்தியத்தை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள எகிப்து மற்றும்
துனிசியாவில் நடக்கும் தொழிலாள வர்க்க எழுச்சிகளில் இருந்து மீட்கும் வகையில் உறுதி
செய்யவும்,
ஒரு வாடிக்கை ஆட்சியை நிறுவுவதற்கு வாய்ப்பைத்தான் தரும்.
வாஷிங்டனால்
முறையாக அங்கீகாரம் பெற்ற வகையில்,
TNC
இன்னும் கூடுதலாக ஏகாதிபத்திய சூழ்ச்சியின் ஒரு கருவி என்று
அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன் கூறியதை அது செய்யும் என
TNC
உறுதியளித்துள்ளதால் அமெரிக்கா அதை அங்கீகரித்துள்ளது என்று
ஹில்லாரி கிளின்டன் கடந்த வாரம் தெளிவாக்கியுள்ளார்.
பெங்காசியிலுள்ள தலைமை
“முக்கியமான
உத்தரவாதங்களைக் கொடுத்துள்ளது…இவை
லிபியாவின் தற்காலம் மற்றும் லிபியாவின் வருங்காலம் பற்றி சமாளித்துத் தீர்க்க உரிய
செயற்குழு என்னும் எமது நம்பிக்கையை உறுதிபடுத்தியுள்ளது”
என்று அவர் கூறினார்.
TNC “ஜனநாயக
சீர்திருத்தத்திற்கு”
உறுதியளித்துள்ளது,
பறிக்கப்பட்டுள்ள நிதிகளை
“வெளிப்படையாகப்
பயன்படுத்தும்”
என்றும் கிளின்டன் கூறியுள்ளார்.
இது அபத்தமானது;
TNCயின்
பிற்போக்குத்தன செயற்பாட்டாளர்கள் அத்தகைய உத்தரவாதங்களைக் கொடுத்தாலும் அவற்றை
எவரும்
தீவிரமாக நம்பமுடியாது.
கிளின்டன் கேட்டுள்ள உத்தரவாதங்கள் மேற்கத்தைய எண்ணெய்
நிறுவனங்களுக்கு லிபிய இருப்புக்களைப் பெறவும் அதன் பொருளாதாரத்தை முக்கிய
முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடும் உத்தரவாதங்களைக் கொண்டவை என்பதில் சந்தேகம்
இல்லை.
TNC
நேட்டோ இராணுவ ஆதரவைத்தான் கடாபிக்கு எதிராக முற்றிலும்
நம்பியிருப்பதால்,
அது நேட்டோவின் இராணுவ மற்றும் உளவுத்துறைச் சொத்துக்கள் லிபியாவில்
போருக்குப் பின்னரும் நிலைப்பாடு கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும்
ஏற்றிருக்கக்கூடும்.
500 TNC
போராட்டக்காரர்கள்
LIFG
எனப்படும் லிபிய இஸ்லாமியவாதக் குழுவின் உறுப்பினர்கள் என்பது பற்றி
அமெரிக்கச் செய்தி ஊடகத் தகவல்களில் அதிகம் கூறப்படவில்லை.
பலரும் ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்துடன்
போராடிய அனுபவங்களைக் கொண்டுள்ளனர்.
LIFG
தளபதிகளில் ஒருவரும் இப்பொழுது கடாபிக்கு எதிராக அமெரிக்க
நேட்டோவின் கீழ் போராடுபவருமான அப்தெல்-ஹகிமல்-ஹசிடி
என்பவர் இத்தாலியச் செய்தித்தாள்
II Sole
24 Ore
இடம் தான்
2001ல்
ஆப்கானிஸ்தான் போரில் இருந்ததாகவும்,
பாக்கிஸ்தானில்
2002ல்
சிறைப்பிடிக்கப்பட்டு லிபியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அங்கு
2008
வரை சிறையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
கிழக்கு
லிபியாவிலிருந்து ஈராக்கில் போரிட தான்
“கிட்டத்தட்ட
25
பேர்களை”
தேர்ந்தெடுத்ததாகவும்,
அவர்களில் சிலர்
“இன்று
அஜ்டபியாவில்”
முன்னணியில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அவருடைய படைகள் பயங்கரவாதிகள் அல்லர் என்ற அவர்,
“அல்
குவேடாவின் உறுப்பினர்கள் நல்ல முஸ்லிம்கள்கூட,
ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராகப் போராடுபவர்கள்”
என்றார்.
“பயங்கரவாதம்”
என அழைக்கப்படும் மோசடியை பேரழிவுதரக்கூடிய வகையில் இது
அம்பலப்படுத்துகிறது.
பயங்கரவாதிகள்
“தீயவர்கள்”என்று
அறிவிக்கப்பட்டு சில நேரம் படுகொலைக்கும் இலக்காகுகிறார்கள்—மற்றவர்கள்
ஏகாதிபத்தியக் கொள்கைக்கு பயனுடைய கருவிகளாக செயல்படுகின்றனர்.
வாஷிங்டன் தன் கொள்கையை அல் குவேடாவிற்கு எதிரான அசைக்க முடியாத
எதிர்ப்பை தளமாகக் கொண்டிராமல் அதன் ஏகாதிபத்திய நலன்களின் மாறும் கணக்கீட்டை
ஒட்டித்தான் கொள்கிறது.
லிபியாவில்
ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்காவின் பகிரங்கமான முடிவு சர்வதேச அளவில் ஆழ்ந்த
விளைவுகளை ஏற்படுத்தும்.
முறையாக அமெரிக்க-லிபிய
உறவுகள்
2003ல்
புஷ் நிர்வாகத்தால் இறுதி செய்யப்பட்ட பின்னர்,
கடாபி வாஷிங்டனிலும் சர்வதேச அளவிலும் உபசாரங்களைப் பெற்றார்.
இந்தக் குளிர்காலத்தில் புரட்சிப் போராட்டங்கள் அரபு உலகில்
வெடிக்கும் முன்னர் அவர்தான் மேற்கத்தைய சக்திகளின் முக்கிய நண்பராக இருந்தார்.
கிட்டத்தட்ட ஒரே நாளில் லிபியா நேட்டோத் தலைமையிலான ஆட்சி
மாற்றத்திற்கு இலக்காயிற்று.
கடாபி மற்றும் அவருடைய குடும்பம் பலமுறை படுகொலை முயற்சிகளை
எதிர்கொண்டது.
இத்தகைய
அசாதாரண மாற்றம் உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்கள் மற்றும் அரசியல் இயக்கங்களுக்கு ஒரு
எச்சரிக்கை ஆகும் என்பதுடன் தொலைதூர விளைவுகளையும் கொண்டது.
ஈரான்,
வடகொரியா போன்றவற்றிலுள்ள ஆட்சிகள்,
லிபியா போல் அமெரிக்காவுடன் மீண்டும் உறவுகளை மறுசீரமைத்துக் கொள்ள
முடியவில்லை என்றாலும்,
வாஷிங்டன் நீண்டகால சமாதான விருப்பங்களை கொண்டுள்ளது என்று கூறும்
அறிக்கைகள் அவை அச்சிடப்பட்ட காகிதங்களின் மதிப்பைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதை
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்னும் பரந்த அளவில்,
ஒரு நாளைக்கு வெள்ளை மாளிகை பாராட்டும் எந்த அரசியல் நபர் அல்லது
போக்கும் மறுநாள் அமெரிக்கப் படைகளின் படுகொலைக்கு இலக்காகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக லிபாயா மீது நடத்தப்படும் அமெரிக்க-நேட்டோப்
போர்
TNC
க்கும்
“மனிதாபிமான”
அடிப்படையில் லிபியாவில் நேட்டோவின் தலையீட்டிற்கும் ஆதரவு கொடுத்த
பல இடது”
மற்றும் தாராளவாதப் போக்குகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.
இவை திறனாயாத வகையில்
TNC
ஒரு எழுச்சி பெற்று மலரும் ஜனநாயக இயக்கம்,
மேற்கத்தைய இராணுவச் சக்திகளால் எப்படியும் காப்பாற்றப்பட வேண்டும்
என்ற கூற்றை ஏற்றன.
பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியிலிருந்து
Nation
ஏடு வரை
மற்றும் அமெரிக்க உயர்கல்வியாளர் ஜுயான் கோல் என்று அனைத்துச் சக்திகளும் அமெரிக்க
ஏகாதிபத்தியக் கொள்கையின் போலி இடதுசாரி செய்தித் தொடர்பாளர்கள் என்பதைத்தவிர தாம்
வேறு ஒன்றும் இல்லை என்பதை நிரூபித்துள்ளன.
இவைகள்தான் இப்பொழுது லிபிய மக்கள் மீது இழைக்கப்படும் வன்முறைக்கு
அரசியல் பொறுப்பைக் கொண்டிருக்கின்றன.
உலக சோசலிச
வலைத் தளம்
மற்றும்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவை முன்வைக்கும் முன்னோக்கில் இருந்து
இந்த நிலைப்பாடுகள் முற்றிலும் எதிரிடையானவை ஆகும்.
லிபிய மோதலில் வர்க்க சக்திகள் பற்றிய பகுப்பாய்வை தளமாகக் கொண்டு
அது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வட ஆபிரிக்க தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு
காலனித்துவ முறையிலான போருக்குத் தயாரிப்புக்கள் நடத்துகின்றன என்று எச்சரித்தது;
மேலும் கடாபி ஆட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பு
TNC
யைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக,
வளைந்து கொடுக்காத விரோதப்போக்கை கொள்வதோடு ஆரம்பிக்க வேண்டும்
என்றும் வலியுறுத்தியது.
இப்பகுப்பாய்வு முற்றிலும் நிரூபணமாகியுள்ளது. |