WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
Fierce tensions in run-up to euro-zone emergency summit
யூரோ
வலையப் பகுதி அவசர உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கடுமையான அழுத்தங்கள்
By
Peter Schwarz
21 July 2011
Back to
screen version
இன்று
பிரஸ்ஸல்ஸில் நடக்கும் யூரோ வலைய பகுதியின் அவசர உச்சிமாநாடானது யூரோ நாணயம்
மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பல
நோக்கர்களாலும் கருதப்படுகிறது.
அரசினதும்,
அரசாங்கத்
தலைவர்களும்
ஒன்றுசேர்ந்து,
ஐரோப்பிய கடன்
நெருக்கடியைக் கடப்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் பற்றி உடன்படாவிட்டால்,
பொது நாணயமான யூரோ
நாணயத்தின் தோல்வி,
ஐரோப்பிய
ஒன்றியத்தின் முறிவு ஆகியவற்றிற்கு எதிரான மற்றொரு ஊக அலை அச்சுறுத்தல் இருக்கும்
என்றுதான் நோக்கர்கள் கருதுகின்றனர்.
“யூரோ
வலையப் பகுதியின் மூலோபாயம் தொடர்பான கையாளல் அதனது உறுப்பினர்களின் பொது நிதியப்
பிரச்சினைகளால் கிழிந்து,
நைந்து,
குப்பையாக உள்ளது.
வியாழனன்று அவர்கள்
சந்திக்கையில் தலைவர்கள் இன்னும் வெற்றிகரமான மாற்றீட்டு உபாயத்தைக் காண்பதற்கு
விரும்புவார்களோ,
முன்வருவார்களோ
என்பது மிகவும் உறுதியற்ற நிலையில் உள்ளது”
என்று
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
எழுதியுள்ளது. “அவர்கள்
அவ்வாறு வராவிட்டால் நாணயப் பகுதி தப்பிப் பிழைக்காது.”
பைனான்சியல்
டைம்ஸ்
கூறுகிறது: “யூரோ
நாணயம் பற்றிய பூசல் முற்றிலும் ஆபத்தான கட்டத்தில் நுழைகிறது என்பது வெளிப்படை.
… கதிரவன்
முத்தமிடும் மத்தியதரைக்கடல் அரசின் வெறும் ஒரு சிறு திவால் பிரச்சினையை மட்டும்
ஐரோப்பா முகங்கொடுக்கவில்லை,
மாறாக அதன் நாணய
ஒன்றியத்திலேயே ஒரு முறையான நெருக்கடியை எதிர்கொள்கிறது.”
பிரிட்டிஷ்
நிதிய ஏடு தொடர்கிறது:
“1945க்குப் பிந்தைய
ஐரோப்பிய அரசியல்,
பொருளாதார
ஒருங்கிணைப்பின் சிகரமாக யூரோ நாணயம் நிற்கிறது.
இந்தத் தூணை
அகற்றிவிட்டால் இந்த அமைப்பிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செல்வாக்கு உலகத்தின்
மீதும் எப்படி மாறும் என்று கூறுவதற்கில்லை.”
பொருளாதாரப்
பேராசிரியரும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய ஆலோசகருமான ஸ்டீபன் கோலினன் இந்த நிலைமையை முதல்
உலகப் போருக்கு முன்பு இருந்த சூழலுடன் ஒப்பிடுகிறார்.
“ஐரோப்பா இப்பொழுது
1913ல் இருந்த
நிலையைப் போல் கொண்டுள்ளது”
என்று
Die Welt
க்குக் கொடுத்துள்ள
பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
“எவரும் முதல் உலகப்
போர் வரவேண்டும் என விரும்பவில்லை;
ஆனால் திறமையின்மை,
முன்கூட்டிய பார்வை
இல்லாத நிலையில் அனைவரும் அதில் சரிந்தனர்.”
இந்த
உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இரு பரபரப்பான வாரங்கள் கடந்தன. கிரேக்கம், அயர்லாந்து,
போர்த்துக்கல் மற்றும் பெரிதும் கடனில் ஆழ்ந்துள்ள யூரோ வலையப்பகுதி உறுப்பினர்கள்
மிருகத்தனச் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், நிதியச் சந்தைகளும்
தரம் பிரிக்கும் நிறுவனங்களும் அழுத்தங்களை தீவிரப்படுத்தி அவற்றை முக்கிய ஐரோப்பிய
நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், மற்றும் ஓரளவிற்கு பிரான்சும் விரிவாக்கியும் உள்ளன.
இரண்டு
ஆண்டு கிரேக்க அரசாங்கப் பத்திரங்களில் கிடைக்கும் ஆதாயம் 42 சதவிகிதம் என
உயர்ந்துவிட்டது. வேறுவிதமாகக் கூறினால், அந்நாடு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்
சர்வதேச நாணய நிதியத்திடமும் பணம் வாங்காமல் வெளிச்சந்தையில் இருந்து வாங்கினால்
அது 42 சதவிகிதம் வட்டி கொடுக்க நேரிடும். கடுமையான சிக்கன நடவடிக்கைகள்
எடுக்கப்பட்ட போதிலும், கிரேக்கத்தின் மொத்தக் கடன் சிறிதும் குறையாமல் உயர்கிறது.
சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பிய மீட்புப் பொதியில் இருந்து பெறப்படும்
நிதியங்களுக்கு ஒப்புமையில் கொடுக்கும் உயர்ந்த வட்டி ஆகியவற்றினால் ஏற்பட்டுள்ள
மந்தநிலை,
இந்நிலைக்கு தூண்டுதல் காரணமாக உள்ளது.
கிரேக்கப்
பொதுக்கடன் 2013ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 175 சதவிகிதம் என ஆகிவிடும். அதன்
வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் கடனுக்கு வட்டி கொடுப்பதற்கு மட்டும் நாடு 27
சதவிகிதம் செலவழிக்க நேரும். இச்சூழ்நிலையில், கடன் பொறியில் இருந்து தப்புவது
முடியாததாகும்; கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலோ அல்லது மறுசீரமைக்கப்பட்டாலோதான்
திவால் ஆவது தவிர்க்கப்பட முடியும்.
ஆனால் ஐரோப்பிய
அரசாங்கங்கள் அத்தகைய நிகழ்வு எப்படி நடக்க முடியும் என்பது குறித்து பிளவுற்ற
கருத்துக்களைக் கொண்டுள்ளன.
அயர்லாந்தும் இப்பொழுது முன்பு வெளிச்சந்தைகளில் பெற்ற கடன் போல் அன்றிக் கூடுதலான
வட்டி விகிதங்களை கொடுக்க வேண்டும்;
இந்நாடு
IMF ன் ஒரு
முன்மாதிரி மாணவர் போல் உள்ளது என்று கருதப்பட்டு
2011 முதல்
காலாண்டுக் காலத்தில் வலுவான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருந்தும் இந்நிலைதான்
உள்ளது.
இந்த வாரம்
முன்னதாக இத்தாலிய மற்றும் ஸ்பெயினின் அரசாங்கப் பத்திரங்களுக்கான வட்டி தீவிரமாக
அதிகமாயிற்று;
கடந்த வாரம்
இத்தாலிய பாராளுமன்றம்
79 பில்லியன்
யூரோக்கள் மதிப்புடைய சிக்கனப் பொதிக்கான சட்டத்தை இயற்றியும் இந்நிலை உள்ளது.
இரு நாடுகளிலும்
வட்டி விகிதம் 6%
க்கும் மேலாக உள்ளது;
பொதுவாக வட்டி
வரம்பு 6.5
ஐ விட
அதிகமாகிவிட்டால் கடனைக் கட்டுப்படுத்துவது முடியாது என்று கருதப்படுகிறது.
வட்டி
விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையில்,
ஐரோப்பிய
அரசாங்கங்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய பல பில்லியன் யூரோ நிதியப் பொதியை உருவாக்க
வேண்டும் என்று நிதியச் சந்தைகள் அழுத்தம் கொடுக்கின்றன.
இது
உத்தியோகபூர்வமாக கடன்பட்டுள்ள நாடுகளுக்கு ஒரு
“பிணை எடுப்பு
நடவடிக்கை”
என்று
கூறப்பட்டாலும்,
உண்மையில்
இந்நிதியங்கள் நேரடியாக வங்கிகள் மற்றும் நிதிய முதலீட்டாளர்களைத்தான் சென்றடையும்.
கிரேக்கத்தின் கடன் இதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இந்நாடு சர்வதேச
“உதவியினால்”
காப்பாற்றப்படவில்லை,
மாறாக அழிவில்
உள்ளது.
வேலையின்மை,
வீடின்மை மற்றும்
பட்டினி ஆகியவை வியத்தகு அளவில் பெருகிவிட்டன.
ஏதென்ஸின் பான்டீயன்
பல்கலைக்கழகப் பேராசிரியர் சவஸ் ரோபோலிஸ் நடத்திய ஆய்வு ஒன்று
2008 உடன்
ஒப்பிடும்போது தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைத் தரங்கள்
2015 ஐ ஒட்டி
40 சதவிகிதம்
குறைந்துவிடும் என முடிவுரையாகக் கூறுகிறது.
இப்பொழுது
வேலையின்மையில் இருக்கும்
800,000 பேரில்
280,000 பேர்தான்
ஓரளவு அரச உதவியைப் பெறும் தகுதியைக் கொண்டவர்கள்;
மற்றவர்கள்
முற்றிலும் வறிய நிலையை முகங்கொடுக்கின்றனர்.
தலைநகரில் வீடின்மை
25 சதவிகிதம்
உயர்ந்துவிட்டது.
ஏதென்ஸின்
நடுப்பகுதியில் மட்டும்
4,000 மக்கள்
ஒவ்வொரு நாளும் மரபார்ந்த திருச்சபை நடத்தும் சூப் சமையலறை மூலம் உணவைப்
பெறுகின்றனர்.
நாட்டின் மற்ற
பகுதிகளில்,
இத்தகைய சமையலறைகள்
நூற்றுக்கணக்கில் உள்ளன.
நான்கு
பேருக்குமிகாமல் வேலையில் அமர்த்தியுள்ள சிறு வணிகங்கள்—மொத்தமுள்ள
960,000 கிரேக்க
நிறுவனங்களில் இவற்றின் எண்ணிக்கை
930,000 ஆகும்—ஒன்றும்
அதிகமாகச் செய்துவிட முடியவில்லை.
கடந்த ஆண்டு
இவற்றில் 60,000
நிறுவனங்கள்
மூடப்பட்டுவிட்டன.
இந்த ஆண்டும் அதே
எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மூடப்பட்டுவிடும்.
சர்வதேச
பிணை எடுப்பு நிதிகள் கிரேக்க மக்களுக்கு உதவப் பயன்படுத்தப்படுவதில்லை,
மாறாக கடனுக்கு
வட்டி கொடுப்பதற்குத்தான் உபயோகப்படுகிறது.
மிக அதிக வட்டிகளை
வசூலித்து விட்ட கடன்கள் மீது வங்கிகளும் பெரும் முதலீட்டாளர்களும் முழுப்
பணத்தையும் பெற்றுவிட்டனர்;
அதே நேரத்தில் புதிய
கடனைச் சூழ்ந்துள்ள பெரும் பகுதியும் யூரோ வலையப் பகுதி நாடுகளின் பொதுப்பணத்தினால்
ஏற்கப்படுகின்றன.
ஐரோப்பிய மத்திய
வங்கியும் பெரும் நிதிகளை கிரேக்க அரசாங்கப் பத்திரங்களை வாங்கச் செலவழித்துள்ளது.
இதையொட்டி தனியார்
வங்கிகளின் இடர்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
கொள்கையளவில் எல்லா ஐரோப்பிய நாடுகளும் அவை வங்கிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க
வேண்டும்,
புதிதான பல
பில்லியன் யூரோ மீட்புப் பொதியை அமைத்து
2008 நிதியச்
சரிவைத் தொடர்ந்து வந்த வங்கிப் பிணை எடுப்புக்கள் தோற்றுவித்த பற்றாக்குறைகளை
தீர்க்க நிதி கொடுக்க வேண்டும் என ஒப்புக் கொண்டுள்ளன.
ஆனால் இவற்றின்
செலவுகளை யார் சுமப்பது என்ற வினாதான் ஆழ்ந்த அழுத்தங்கள் மற்றும் மோதல்களுக்கு
வழிவகுத்துள்ளன.
இவை இப்பொழுது
ஐரோப்பிய ஒன்றியத்தையே சிதைத்துவிடும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக,
ஜேர்மனிய அரசாங்கம்
—நெதர்லாந்து,
ஆஸ்திரியா,
பின்லாந்து போன்ற
சில செழிப்புடைய நாடுகளுடன்—கிரேக்கத்திற்கான
பிணை எடுப்புப் பொதி இனி அளிக்கப்படுவதற்கு தனியார் கடன்கொடுப்போர் பங்கும் தேவை
எனக் கூறியுள்ளது.
இது வங்கிகளுக்கு
எதிரான நிலைப்பாடு இல்லை;
ஆனால் அவற்றின்
செலவுப் பங்குகளை குறைக்கும் நோக்கத்தைக் கொண்டது.
பொருளாதாரத்தில்
வலுவான நாடு என்னும் முறையில் ஜேர்மனி யூரோ வலையப் பகுதியிலுள்ள பொது மீட்புப்
பொதியின் செலவில் கிட்டத்தட்ட கால் பங்கை சுமக்க வேண்டும்.
ஜேர்மனிய வங்கிகள்
—கிரேக்கத்
திவால் அரசாங்கத்தின் பிணை எடுப்பினால் மீட்கப்படுமேயானால்—
பிரான்ஸ் போன்ற மற்ற
நாடுகளில் இருப்பவற்றைவிட குறைந்த விகித கிரேக்கக் கடனைத்தான் கொண்டுள்ளன.
ஜேர்மனியும்
அதன் நட்பு நாடுகளும் செலவினங்களில் கூடுதல் விகிதத்தை அவை சுமக்கும் மற்ற
நடவடிக்கைகளையும் எதிர்க்கின்றன.
உதாரணமாக
“யூரோப் பத்திரங்கள்”
வெளியிடுவதை அவை
நிராகரிக்கின்றன;
இது ஒரு பொது
ஐரோப்பிய பத்திரம்,
கிரேக்கத்திற்கு
குறைந்த விட்டி விகிதத்தில் நிதிகளை அளிக்கும்;
ஆனால் அவற்றின்
வட்டி விகிதங்களையும் சற்று உயர்த்திவிடும்.
ஆனால்
அத்தகைய யூரோப் பத்திரங்கள் பிரான்ஸ் மற்றும் இத்தாலியினால் விரும்பப்படுகின்றன;
அவை ஊகத்தின்
உச்சியில் இழுபட்டுவிடக்கூடும் என்று அஞ்சுகின்றன.
இத்தாலிய
பத்திரங்களின் மீதான வட்டி விகிதங்கள் ஏற்கனவே அதிகமாக உயர்ந்துள்ள நிலையில்,
பிரான்ஸில் கடன்
மாற்றுப் பத்திரங்களுக்கான
(credit default swaps-CDS)
விலை உயர்ந்துவிட்டது.
உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நெருக்கடியை தீர்ப்பதற்கான பல முன்மாதிரிகள்,
நிலைப்பாடுகள் ஆகியவை திரைக்குப் பின் பரபரப்புடன் விவாதிக்கப்படுகின்றன; இவை
பின்னர் முடிவு செய்யப்பட்டால் உச்சிமாநாட்டில் முடிவாகும்.
யூரோ
நெருக்கடி கடுமையான உள் அரசியல் அழுத்தங்களைக் குறிப்பாக ஜேர்மனியில்
ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கக் கட்சிகளுக்குள் ஒரு சிறிய, ஆனால் குரல் எழுப்பும்
சிறுபான்மைப் பிரிவு, கிரேக்கத்திற்கு எத்தகைய நிதி உதவியையும் நிராகரிக்கிறது.
பின்லாந்து, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்தில், வலுவான வலதுசாரி வெகுஜனக் கட்சிகள்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளிப்படையான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன.
மிக எளிதாக
இத்தகைய சக்திகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுகிறார், யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
பாதுகாக்கப்படுவது குறித்து அதிகம் பேசுவதில்லை என்று சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கல்
குற்றம் சாட்டப்படுகிறார். வணிக வட்டங்கள் ஜேர்மனிய ஏற்றுமதித் தொழில்கள்
யூரோவினால் பெரும் ஆதாயம் அடைந்துவிட்டன என்று சுட்டிக் காட்டுகின்றன. ஒற்றை நாணய
முறையில் தோல்வி புதிய பிணை எடுப்பு நிதியில் அதிக பணயம் வைப்பதைவிடக் கூடுதலான
செலவைக் கொடுக்கும் என்றும் கூறுகின்றன. முன்னாள் சான்ஸ்லர்கள் ஹெல்முட் ஷ்மிட்
(சமூக ஜனநாயகக் கட்சி-SPD),
மற்றும் ஹெல்முட்
கோல் (கிறிஸ்துவ
ஜனநாயக ஒன்றியம்-CDU)
ஆகியோர்
ஐரோப்பாவிற்கு உறுதிப்பாடற்ற தன்மையை அங்கேலா மேர்க்கல் காட்டுவதாகக் குற்றம்
சாட்டியுள்ளனர்.
கடந்த வாரம்
முன்று முக்கிய சமூக ஜனநாயகவாதிகளான
—கட்சித்
தலைவர் Sigmar
Gabriel,
பாராளுமன்றத் தலைவர்
Frank-Walter Steinmeier,
மற்றும் நிதி மந்திரி
Peer Steinbrück
—ஆகியோர் ஒரு
கூட்டுக் கடிதத்தை சான்ஸ்லரிடம் அளித்து அவருக்கு முறைசாராக் கூட்டணிக்கு ஒப்பான
முறையை அளிக்க முன்வந்துள்ளனர்.
“ஐரோப்பாவின் சுற்று
நாடுகளுக்கு ஒரு மார்ஷல் திட்டம்”
வேண்டும் என்று
அவர்கள் கூறியுள்ளனர்;
அது
கிரேக்கத்திற்குக் கொடுக்கப்பட்ட கடனில் வெட்டு,
யூரோப் பத்திரங்கள்
வெளியிடப்படல்,
யூரோவைப் பாதுகாக்க
வலுவாக வாதிட்டால்
SPD
சான்ஸ்லருக்கு ஆதரவு உறுதி
ஆகியவை இக்கூட்டுக் கடிதத்தில் அடங்கியுள்ளன.
SPD
தலைமை
“நிதிய
நெருக்கடிக்குத் தீர்வு”
என்று அளிப்பது
வங்கிகளின் ஆணைகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டைக் கொள்ளுதல் என்ற பொருளைத்தராது.
மாறாக காப்ரியல்,
ஸ்டீன்மெயர் மற்றும்
ஸ்டீன்ப்ரக் ஆகியோர் ஜேர்மனி தன் ஆணையை ஐரோப்பா மீது இன்னும் வலுவாகச் சுமத்த
வேண்டும்,
கிரேக்கத்தில் மட்டுமின்றி
ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள்
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நம்புகின்றனர்.
SPD-பசுமைக்
கட்சிக் கூட்டணி முதலில் கெஹார்ட் ஷ்ரோடார் பின்னர் அங்கேலா மேர்க்கேலின் கீழ்
பெரிய கூட்டணி என்று இருந்தபோது,
இவை மூன்றுமே
மந்திரிகளைக் கொண்டிருந்தபோது,
SPD பெரும்
குறைவூதியத் துறையைத் தோற்றுவிப்பதில் மைய நிலையைக் கொண்டிருந்தது.
இக்கட்சியினர்
பொதுநலச் செலவுக் குறைப்புக்கள் மற்றும் தொழிலாளர்துறை
“சீர்திருத்தங்களை”
சுமத்தினர்,
ஓய்வூதிய வயதை
67 என்றும்
உயர்த்தியிருந்தனர்.
இப்பொழுது
இக்கொள்கைகளை அனைத்தையும் ஐரோப்பா முழுவதும் சுமத்த வேண்டும் என்று
திட்டமிடுகின்றனர்.
SPD
யின் தலைவர் செல்வாக்கற்ற
நடவடிக்கைகளை சுமத்தினால் மேர்க்கலுக்கு ஆதரவு கொடுக்கப்படும் என்று குறிப்பாகக்
கூறினார். “இதற்கு
அரசாங்கத்தின் பணம் தேவை;
அதாவது குடிமக்களின்
பணம் செலவழிக்கப்படும்,
இதையொட்டி
அவர்களுக்கு நலன்கள் ஏதும் இல்லை.
ஆனால்
SPD எப்படியும்
இதற்கு ஆதரவைக் கொடுக்க வேண்டும்”
என்று அவர் கூறினார்.
இத்தாலிய
சமூக ஜனநாயகவாதிகள்
(இத்தாலியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் பின்தோன்றல்கள்)
இதேபோன்ற முனைப்பைக்
கொண்டுள்ளனர்.
கடந்த வாரம்,
அவர்கள்
பெர்லுஸ்கோனி அரசாங்கத்தின் புதிய சிக்கன நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்தனர்.
இப்பொழுது அவர்கள்
பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனிக்குப் பதிலாக வேறு ஒருவரைக் கொண்டுவருவதற்கு
வழிவகையை நாடுகின்றனர்;
ஏனெனில் வணிக
வட்டங்களில் அவர் வலுவற்றவர் என்றும் மிருகத்தனமான சமூகநலக் குறைப்புக்களை
சுமத்துவதற்குப் பதிலாக தன்னுடைய சொந்த நலன்களில்தான் குவிப்புக் காட்டுகிறார்
என்று கருதப்படுகிறது.
முன்னாள் பிரதம
மந்திரி மாசிமோ டி’அலேமா
(ஒரு ஜனநாயகக்
கட்சிக்காரர்)
தேசிய கூட்டு
அரசாங்கம் ஒன்று தேவை என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
இதற்கு கட்சி
சார்பற்ற பொருளாதார வல்லுனரும் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்
Mario Monto தலைமை
ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். |