WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா
மேர்டோக்கின் செய்தி ஊடகப் பேரரசுடனான மோதல்களில் அடித்தளத்தில் வணிகப் போட்டிகள்
உள்ளன
By Dave
Hyland
19 July 2011
நியூஸ் ஆப்
த வேர்ல்டின் தகவல் திருட்டு ஊழல் மற்றும் அதை அம்பலப்படுத்துவதற்கு இட்டுச்சென்ற
நிகழ்வுகளை சூழ்ந்த ஆளும் வட்டங்களுக்குள் வெடிப்புத்தன்மையுடைய பிளவுகளை
ஏற்படுத்திய நிகழ்வுகள் ஆரம்பத்தில் இருந்தே பொருளாதாரப் போட்டிகளால்
எரியூட்டப்பட்டிருந்தன.
பல
நாட்களுக்கு,
“ஒரு தொழில்முறைத்
தரத்திற்கு”
குற்றத்தன்மை
நிறைந்தசெயல்கள் பற்றிய வெளிப்பாடுகள் வந்துகொண்டிருக்கையில்,
தொழிற் கட்சித்
தலைவர் எட் மிலிபாண்டின் கவனம்
BskyB துணைக்கோள்
ஒலி-ஒளிபரப்பு அலைவரிசை மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொள்ள ரூபர்ட் மேர்டோக்
எடுத்துக் கொண்ட முயற்சிகளை தடுப்பதில் மையம்கொண்டிருந்தது. மேர்டோக் தன்
முயற்சியைத் திரும்பிப் பெற்றுக்கொண்டதும் பாராளுமன்றத்திற்கும்
“பிரிட்டிஷ்
மக்ளுக்கும்”
ஒரு வெற்றி என
அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் தற்பொழுது
BskyB உள்ள
39% உரிமையைத் தக்க
வைத்துக் கொள்ளவும்,
பல செனட்டர்கள்,
காங்கிரஸ்
உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ள விசாரணை,
கண்காணிப்பு ஆய்வு
தேவை என்னும் இவற்றைவிடப் பெரிய அளவில் அமெரிக்காவில் எழுந்துள்ள பாரிய
பிரச்சனைகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றுதான் இங்கு முயற்சிகளை
நிறுத்திக் கொண்டார்.
9/11
குண்டுவீச்சுக்களில்
பாதிக்கப்பட்டவர்களின் தொலைபேசிகளை இது ஒற்றுக் கேட்டது என்ற குற்றச்சாட்டுக்கள்
பற்றி ஒரு விசாரணையை
FBI
சமீபத்தில் அறிவித்துள்ளது.
தற்போதைய
ஊழல் வெடிக்கும் வரை,
தொழிற்கட்சி மற்றும்
கன்சர்வேடிவ் என இரு கட்சிகளுமே மேர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷனின் இங்கிலாந்தில்
செயல்படும் பிரிவான நியூஸ் இன்டர்நேஷனலுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்பட்டன.
அதையொட்டி பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறாமை மற்றும் கேலி கலந்த வகையில்
மேர்டோக்கை மந்திரிசபையின்
“24வது
உறுப்பினர்”
என்றுகூடப் பலமுறை
குறிப்பிட்டனர்.
கடந்த வாரம்
வரைகூட,
கன்சர்வேடிவ்/லிபரல்-டெமக்ராட்
கூட்டணி நியூஸ் இன்டர்நேஷனல்
BskyB யின் மற்ற
61% பங்கையும்
12
பில்லியன் பவுண்டுகள் பணம் கொடுத்து எடுக்க இருந்ததற்கு ஒப்புதல்
கொடுத்திருக்கக்கூடும் எனத்தோன்றியது.
ஆனால்
நியூஸ் இன்டர்நேஷனலின் முன்னாள் ஆசிரியர்கள் ஆண்டி கௌல்சன் மற்றும் ரெபக்கா
ப்ரூக்ஸ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு,
இங்கிலாந்தில் மிக
அதிகம் விற்பனையாகும்
168 ஆண்டு காலச்
செய்தித்தாள் மூடப்பட்டபின்,
அதன் உரிமையாளரும்
முக்கிய நிர்வாகிகளும் பாராளுமன்றத்தின் சிறப்புக் குழு ஒன்றின் முன் தோன்றி
கேள்விகளுக்கு பதிலளிக்க அழைக்கப்பட்டனர்.
“அரசியலில் ஒரு
வாரகாலம் என்பது மிகநீண்டகாலம்”
என்னும் பழமொழி
இங்கு நடந்தவற்றைச் சுட்டிக்காட்டுவதுபோல் வேறு எதிலும் அவ்வளவு பொருத்தம்
கொண்டிருக்கவில்லை.
தொழிற் கட்சித்
தலைவர் எட் மிலிபாண்டின் முனைப்பில் மூன்று முக்கியக் கட்சிகளின் இரகசியக்
கூட்டத்தை நடத்தி,
நிலைமை
கட்டுப்பாட்டை விட்டு மீறிச்செல்லாமல் இருப்பதற்கு ஒரு பொது அணுகுமுறை வேண்டும்
என்று ஏற்பாடு செய்யும் வரை முழு அரசியல் ஆளும்வர்க்கமும் குழப்பத்தில்
ஆழ்ந்திருந்தது.
இந்நிகழ்வுகள் மேர்டோக் குடும்பத்திற்கும் பிரிட்டிஷ் ஒலிபரப்பு கம்பனிக்கும்
(பி.பி.சி-BBC)
இடையே அடித்தளத்தில்
புகைந்து கொண்டிருந்த பூசலின் திருப்புமுனையாக ஆயின.
அதிகரித்துவரும்
பரஸ்பர போட்டி மற்றும் அது தோற்றுவித்த வெறுப்பு பற்றி மக்களுக்கு ஒரு சில
மேற்தோற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்கை
(Sky) BSB யுடன்
1990ல் இணைந்துபோது
BskyB
நிறுவப்பட்டது. இணைந்த
அமைப்பு பங்குச் சந்தையில்
1994ல் பதிவாகி
ஓராண்டிற்குப் பின்
FTSE 100
பங்குக்குறியீட்டில் சேர்ந்தது.
1992ல் பிரிமியர்
லீக் கால்பந்து உடன்பாட்டில் அது கையெழுத்திட்டு,
Sky+ ஐ
2001ல் துவக்கியபின்,
BskyB, 16,500 பேரை
வேலையில் நியமித்துள்ளது.
அகன்ற அலைவரிசை
மற்றும் தொலைத் தொடர்புகளில் விரிவடைந்த பின் இப்பொழுது
Sky
இற்கு இங்கிலாந்து
முழுவதும் 10
மில்லியன்
வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இது மூன்று
வீடுகளுக்கு ஒன்று என மதிப்பிடப்படலாம்.
சந்தை மூலதனமாக
நிறுவனம் 12.5
பில்லியனைக்
கொண்டுள்ளது.
FTSE 100
நிறுவனங்களில் இது இதையொட்டி
32வது பெரிய
நிறுவனமாக உள்ளது.
எனவேதான்
BskyB ஐ எடுத்துக்
கொள்ள மேர்டோக் பெரும் முயற்சியைக் கொண்டார்.
பெரும் கொந்தளிப்பு
நிறைந்த சந்தையில்,
News Corp இன் பங்கு
மதிப்பு திரும்பி வாங்கிக் கொள்ளலாம் என்ற உடன்பாட்டினாலும் மற்றும்
கையேற்கப்படுவதால் கூடுதலான இலாபம் கிடைக்கும் என்ற உத்திரவாத்தினாலும் தான்
உயர்ந்து இருந்தது.
இந்த ஒருங்கிணைப்பு
இல்லாவிட்டால், News
Corp பேரழிவு
தரக்கூடிய வகையில் சரிவைக் கண்டு,
அதன் பங்கு விலைகள்
இன்னும் குறைந்துவிடக்கூடும் என்னும் ஆபத்தை மேர்டோக் எதிர்கொண்டார்.
2010
பொதுத் தேர்தலுக்கு முன்,
2009ல் தொழிற்
கட்சியிடம் இருந்து டோரிக்களுக்கு ஆதரவை அவர் மாற்றியதற்கு இது ஒரு காரணி ஆகும்.
பிரதம மந்திரி
டேவிட் காமெரோன் மேர்டோக்கிற்கு மிகவும் வளைந்து கொடுக்கக்கூடிய கருவியாக இருப்பார்
என தோன்றினார். சமீபத்தில் வெளியாகியுள்ள ஆவணங்கள் மேர்டோக்கின் நிர்வாகிகளுடன்
காமெரோன் ஓராண்டில்
26
பேச்சுவார்த்தைகளுக்கு குறையாத வகையில் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை
வெளிப்படுத்தியுள்ளன;
அவற்றுள்
15 மே மாதத்தில்
இருந்து நடைபெற்றுள்ளன.
அவர் ரெபக்கா
ப்ரூக்ஸை பிரதமரின் நாட்டுப்புற மாளிகையான செக்கர்ஸுக்கு இருமுறை வருமாறு அழைப்பு
விடுத்திருந்தார்;
அதேபோல்
Boxing Day
கூடலிலும் அவரைச்
சந்தித்தார்.
மேர்டோக்கின் திட்டங்களில் பெரிய தடை பி.பி.சி
யாக இருந்தது.
துணைக்கோள்
ஒலி-ஒளிபரப்பு புதிய சந்தைகளைத் தோற்றுவித்து போட்டியின் வேகத்தையும் பெரிதும்
அதிகரித்துவிட்டது.
பி.பி.சி
அடிப்படையில் ஒரு பொது தேசிய ஒளிபரப்பு நிறுவனம் என்பதாக இருந்து,
கணக்கிலடங்காத்
தனியார் நிறுவனங்களுடன் பல கூட்டுக்களையும் ஏற்படுத்திக் கொண்டவிதத்தில் உலகம்
முழுவதுமான வாய்ப்புக் கொண்டதாக மாறிவிட்டது.
2005
எடின்பரோ சர்வதேச விழாவில்
அப்போதைய பி.பி.சி.யின்
தலைமை இயக்குனராக இருந்த மார்க் தோம்சன் நிறுவனத்தின் கொள்கை முன்னோக்குப் பற்றி
விவரித்தார்:
“வலைத்
தள உலகைப் பற்றி நாம் அறித்துள்ளது அனைத்தும் அது பெரிய வணிக முத்திரையாளர்களான
அமேசன்கள்,
மைக்ரோசாப்ட்டுக்களே
ஈடுகொடுக்கும் தன்மை உள்ளது என்பதைக் காட்டுகிறது. பி.பி.சி.யும்
ஒரு பெரிய வணிக முத்திரை கொண்ட நிறுவனம் ஆகும்.
உள்ளடக்கத்தில்
உலகில் மிகப் பெரிய வலைத் தள முத்திரை பதித்த ஒன்று,
இதுகாறும்
பிரிட்டனிலேயே மிகப் பெரியது ஆகும்.
அதுகூட நாம் நம்
அமைப்பின் முழுப் படைப்புத் திறன் மற்றும் சந்தைப்படுத்தும் ஆற்றலை இத்திசையில்
திருப்பத் தொடங்குவதற்கு முன்பு.”
2008ம்
ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியும் மந்தநிலையும் மேர்டோக் நிறுவனத்திற்கும் பி.பி.சி.க்கும்
இடையே அழுத்தங்களைத் தீவிரப்படுத்தியது. இது அடுத்த ஆண்டு அனைவரும் அறியும் வண்ணம்
வெளிப்பட்டது.
2009ம் ஆண்டு
எடின்பரோ சர்வதேச விழாவில் மாக்டாகர்ட் உரையில்,
மேர்டோக்கின் மகன்
ஜேம்ஸ் டார்வின்,
டோல்ஸ்டோய் மற்றும்
அவர் கருதிய பலருடைய படைப்புக்களைப் பற்றிக் குறிப்பிட்டு இங்கிலாந்துச் செய்தி
ஊடகம்,
பி.பி.சி.
மற்றும் அரசாங்கக்கட்டுப்பாடு ஆகியவற்றின் மீதான தாக்குதலுக்கு தனது
அறிவார்ந்த பலத்தை காட்ட முனைந்தார்.
“முற்றிலும்
எளிதாக அறிந்துகொள்ளக்கூடிய வகையில் நிலப்பறிப்பு நடந்து கொண்டிருக்கிறது”,
“இது ஒரு சுதந்திர
சமூகத்தின் நலன்களுக்காக எதிர்க்கப்பட வேண்டும் இந்த நிலப்பறிப்பிற்கு பி.பி.சி.
தலைமை தாங்குகிறது.
அதன் தற்போதைய
நடவடிக்கைகள் மற்றும் வருங்கால விழைவுகளின் அளவும் பரப்பும் சிந்தனையை உறையவைக்கும்
தன்மை உடையவை”
என்று அவர் பேசினார்.
“அனைவரும்
கொடுக்கும் வரிப்பணத்தில் நிதியைப் பெறும் பி.பி.சி.
சந்தையின் மூலம்
நலன் பெறும் பகுதிகள் உட்பட அனைவருக்கும் ஏதேனும் கொடுக்கும் சக்தியைத் தான்
கொண்டுள்ளது மற்றும் கடமைப்பட்டுள்ளது என நினைக்கிறது.
“இந்த
அணுகுமுறை முற்றிலும் அரசாங்கக் குறுக்கீடு பற்றிய தவறான கருத்தின் அடிப்படையை
தளமாகக் கொண்டுள்ளது. மேலும் இது விந்தையான,
பெரும் தவறான
விளைவுகளையும் தோற்றுவிக்கிறது.
சந்தையால்
வழங்கப்படாத இடங்களில் கவனத்தை காட்டுவதற்குப் பதிலாக பி.பி.சி.
தனக்கு ஆதாயத்தைப்
பெருக்கிக் கொள்ளுவதற்காக வணிக வாய்ப்பு அளிக்கும் பார்வையாளர்களுக்காக நேரடிப்
போட்டியில் ஈடுபட முயல்கிறது.
இன்னும்
துல்லியமாகக் கூறினால்,
எதிர்ப்பை
நசுக்குகிறது –
ஒரு கட்டாய உரிமைக்
கட்டணம் கொண்டுவருவதின்மூலம்.”
இந்த
வேறுபாடுகள் இம்முறை கூட்டணிக்குள் மீண்டும் டிசம்பர்
2010ல் வெளிப்பட்டன.
அப்பொழுது முன்னர் இரு
Daily Telegraph
பத்திரிகையின்
இரகசிய நிருபர்களிடம்
“தான் மேர்டோக் மீது
போரைப் பிரகடனம் செய்துள்ளதாகக்”
கூறிய லிபரல்
டெமக்ராட்டின் வணிகச் செயலரான வின்ஸ் கேபிள் இப்படி கையேற்றுக் கொள்வதை
அனுமதிக்கலாமா என்று தீர்மானிப்பதில் அவருடைய பங்கு அகற்றப்படுவதைக் கண்டார்.
மேர்டோக்
வாங்க முயன்ற முயற்சி போட்டி ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட வேண்டுமா என்று கேபிள்
தீர்மானிக்க வேண்டியிருந்தது.
ஒரு இரகசியக்
குத்தலின் விளைவாக இந்த முடிவு கன்சர்வேடிவ் கலாச்சார மந்திரி ஜேரிமி ஹன்டிடம்
ஒப்படைக்கப்பட்டது.
இப்படி
நிறுவனங்களை கையேற்றுக்கொள்ளுதல் நீண்டகாலமாக பிரிட்டனில் கார்டியன் உட்படப் பிற
செய்திஊடக வலைப்பின்னல்களால் எதிர்க்கப்பட்டது.
கார்டியன்
பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது,
தொலைபேசி ஒற்றுக்
கேட்டல் ஆகியவற்றை அம்பலப்படுத்துவதில் முக்கியப் பங்கைக் கொண்டிருந்தது.
கார்டியனின்,
ஞாயிறுப்பதிப்பு
சகோதரப் பத்திரிகையான
அப்சேர்வரில்
வில் ஹட்டன் எழுதினார்:
“அனுமதிக்கப்பட்டிருந்தால்
மேர்டோக் பிரிட்டனின் தொலைக்காட்சி வருவாய்களில் பாதிக்கும் மேலாகவும்,
செய்தி ஊடகத்தின்
வருவாய்களில் பாதிக்கும் மேலாக அடுத்த தசாப்தத்தின் நடுப்பகுதிக்குள்
கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்திருப்பார்.”
பின்வாங்குமாறு மேர்டோக் மற்றும் காமெரோன் மீதான அழுத்தங்கள் அதிகரிக்க
தொடங்கியபின்,
துணைப் பிரதம
மந்திரி நிக் கிளெக் மேர்டோக்கிடம்
“கௌரவமாக நடந்து
கொள்ளும்படியும்”
BSkyB எடுத்துக்
கொள்ளுவது பற்றி மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
செய்தி ஊடகக்
கட்டுப்பாட்டு அதிகார அமைப்பு
Ofcom
க்கு ஜேரிமி ஹன்ட் கடிதம்
எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டார். திட்டமிடப்பட்டுள்ள வாங்குதல் பற்றி புதிய
மதிப்பீட்டைக் கேட்டார்;
மேர்டோக்
பின்வாங்கும் நிலை கட்டாயமாயிற்று.
ஆனால் இது
நீடிக்கவில்லை.
நேற்று மேர்டோக்கின்
உரிமையான வோல்
ஸ்ட்ரீட்
ஜேர்னல்
ஒரு தலையங்க
எதிர்த்தாக்குதலில்
கார்டியனும்
பிபிசியும் “வணிக
மற்றும் கருத்தியல்ரீதியான நோக்கங்களுக்காக”
நியூஸ் இன்டர்நேஷனல்
மற்றும் நியூஸ் கோர்ப்பை தொடர்வதற்காகக் குற்றம்சாட்டி,
“அரசியல்வாதிகளும்
நம் போட்டியாளர்களும் நியூஸ் கார்ப் என்னும் ஒரு பிரிட்டிஷ் கோடியில் ஒரு
வருடத்திற்கு முன் நடந்த தொலைபேசி ஒற்றுக் கேட்டல்களை பயன்படுத்தி
ஜேர்னலை
தாக்குவதற்கும் பொதுவாக செய்தி ஊடகச் சுதந்திரத்தை தாக்கவும் பயன்படுத்துகின்றனர்.”
என எழுதியது.
தலையங்கம்
தொடர்கிறது:
“இப்பொழுது அரசியல்
மீது செய்தி ஊடகத்தின் ஆதிக்கம் பற்றிப் புலம்புகின்ற இதே பிரிட்டிஷ்
அரசியல்வாதிகள்தான் நீண்டகாலமாக செய்தி ஊடகம் கொடுக்கும் ஆதரவிற்கு புலம்புபவர்களாக
இருந்தனர்.
பிபிசியும்
கார்டியன் செய்தித்தாளும் பொது விவகாரங்களைச் தமது செல்வாக்கிற்குட்படுத்த
முயலவில்லை என்ற கருத்து,
தங்கள் வெளியீட்டுத்
தன்மையை அவ்வகையில் செலுத்துவதில்லை என்பது ஒரு நாள் கண்காணிப்பிலேயே உண்மையைக்
காட்டிவிடும்.”
முதலாளித்துவத்தின் அரசியல் நெருக்கடி ஒரு முழுப்பேரழிவு உடையதாக விரைவாக
மாறுகிறது. முதலாளித்துவ செய்தி ஊடகம் செய்யும் சட்டவிரோத வழிவகைகள்,
பொலிஸ்
அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் இலஞ்சம் மற்றும் செய்தி ஊடக உயர்மட்த்திற்கும்
அரசியல்வாதிகளுக்கு இடையான நெறியற்ற உறவுமுறை ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது.
இக்கட்டத்தில்தான் அரசாங்கத்தின் இராஜிநாமாவைக் கோருவதற்குப் பதிலாக,
எட் மிலிபண்ட்
காமெரொன் மற்றும் கூட்டணியின் நிலையைக் பாதுகாக்க முன்வந்துள்ளார்.
பரஸ்பரம்
ஒப்புக்கொள்ளும் உடன்பாட்டிற்கு அவகாசம் கொடுக்கும் வகையில் சமரச முயற்சியை
அளிக்கிறார்.
ஆனால்
மேர்டோக்கிற்கு நிறைய விரோதிகள் உள்ளனர். இந்த நெருக்கடி ஓய்ந்துவிட்டது என்ற
நிலையில் இருந்து மிகவும் அப்பால் உள்ளது.
இப்பொழுது
பிரிட்டனை சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் சொந்த
சோசலிச தீர்வுடன்
குறுக்கிட வேண்டும்.
இம்முன்னோக்கின் ஒரு
பகுதியாக BSkyB
உரிமை பற்றிய முடிவு
மற்றும் டிஜிடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆகியவை பெருநிறுவனங்களான நியூஸ் கோர்ப்
அல்லது முதலாளித்துவ அரசு நிறுவனங்களான பி.பி.சி.ஆகியவற்றால்
திரைமறைவில் தீர்மானிக்கப்படக்கூடாது.
BskyB,
News Corp, BBC
ஆகியவற்றின் கணக்குகள்
மற்றும் அனைத்து அரசாங்க இரகசிய குழுக் கூட்டங்களின் குறிப்பையும் பார்க்க வேண்டும்
என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கவேண்டும்.
முழுத்
தொலைத்தொடர்பு துறையையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின்கீழ்,
தற்பொழுதைய உரிமையாளர்களுக்கு எந்தவித இழப்பீடும் இல்லாமல்
எடுத்துக் கொள்ளுவதின் மூலம்தான் தொழிலாள வர்க்கம் தன் நலன்களுக்கு ஏற்ப
இத்தொழில்துறையின் வருங்கால வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும். |