World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The International Socialist Organization’s perspective in tatters

சர்வதேச சோசலிச அமைப்பின் முன்னோக்கு  கந்தலாக கிழிந்த நிலையில் உள்ளது

By David Walsh
18 July 2011

Back to screen version

சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) ஜூலை 13ம் திகதி (“குடியரசுக் கட்சியுடைய நிகழ்ச்சிநிரலை தன்னுடையது எனக் கூறுதல்) ஒரு தலையங்கத்தை, மகத்தான வரவுசெலவுத்திட்டங்கள் பற்றிய ஒபமாவின் பெரும் வெட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதைப் பற்றி எழுதியுள்ளது; இதுபுதிய உடன்பாட்டை (New Deal) புதுப்பிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த ஜனாதிபதி, மாறாக அதை எப்படியும் புதைத்துவிடுவது என உறுதி கொண்டிருக்கிறார்என்று கட்டுரை ஆரம்பிக்கிறது.

தவறான எதிர்பார்ப்புக்கள் கொண்டிருந்தபலமக்களில் எவரையும் இக்கட்டுரை பெயரிட்டு குறிப்பிடவில்லை. socialistworker.org இன் ஆசிரியர்கள் மிக கவனமாகத்தான் உள்ளனர். ஒபாமாவை பற்றி பெரும் ஆர்வத்துடன் போலித்தோற்றங்களை ஊக்குவித்தவர்களுள் ISO, அதன் வலைத் தளம் மற்றும் ISO செயல்படும் சூழலில் உள்ள பலர், நேஷன் இதழின் இடது-தாராளவாத ஆதரவாளராக இருப்பவை உட்பட, மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவைதான் உள்ளனர். தற்போதைய பேரழிவுகரமான நிலைக்கான அரசியல் பொறுப்பை இவர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

அமெரிக்க மக்களின் பரந்த அடுக்குகள் தங்கியுள்ள திட்டங்களில் ட்ரில்லியன் கணக்கில் வெட்டுக்களை ஒபாமா நிர்வாகம் முன்வைக்கிறது. பலருக்கும் வாழ்க்கை கடினமாவதுடன் பொறுத்துக் கொள்ளாமலும் போய்விடும். தொழிலாள வர்க்கத்தினரிடையே குழப்பங்களும் நப்பாசைகளும் உள்ளன.  ஆனால் நிகழ்வுகளின் புறநிலை தர்க்கம் மிகவும் தெளிவாக உள்ளது. அதாவது, காங்கிரஸில் குடியரசுக் கட்சியுடனான உடன்பாட்டில் இறுதியில் எவ்வாறான விவரங்கள் இருந்தபோதிலும் வர்க்கப் போராட்டம் அசாதாரணமான முறையில் தீவிரமடையும் என்பது நிகழ்ச்சிநிரலில் உள்ளது.

ISO இன் ஜூலை 13ம் திகதித் தலையங்கம் ஜனாதிபதியின் திட்டங்கள் குறித்துப் பல கருத்துக்களைக் கூறுகிறது. அது வாதிடுகிறது: “ஒபாமாவின் செயல்கள் மோசமானவை அல்லது திறமையற்ற தந்திரோபாயங்கள் என்று விளக்கப்படுத்தப்பட முடியாதவை. அவரும் அவருடைய நிர்வாகமும் இரு அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கும் நிதி அளிக்கும் வங்கியாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் செல்வந்தர்களின் ஆதரவை வெற்றியடையத்தான் விருப்பம் கொண்டவைசுருங்கக் கூறின் மூலதனத்தை  மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்.”

கட்டுரையாளர்கள் எழுதுகின்றனர்: “ஒபாமா வலதுசாரி பக்கம் திரும்பியுள்ளது வெறும் அரசியல் சந்தர்ப்பவாதமோ 2012 தேர்தல்களில் சுயாதீன வாக்காளர்களை ஈர்ப்பதற்கான முயற்சியோ அல்ல. அவர் முன்வைக்கும் வெட்டுக்கள் நெருக்கடியைக் கடப்பதற்காக அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் கொண்டுள்ள உந்துதலின் ஒரு பகுதிதான். அதாவது நெருக்கடியின் செலவைத் தொழிலாள வர்க்கத்தின்மீது சுமத்தி, ஊதியங்களைக் குறைத்தல், சமூகநலச் செலவுகளை குறைத்தல் ஆகியவற்றின் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தை இன்னும் போட்டித்தன்மை உடையதாக ஆக்குவதுதான்.”

socialistworker.org எக்கருத்தை முன்வைக்கிறது? அதிகமாக ஒன்றையும் இல்லை. தலையங்கம் முடிக்கிறது:  “தொழிலாள வர்க்கத்திற்குக் கடும் சிக்கனம் மற்றும் கஷ்டம் என்ற நிலையில், இப்பொழுது அமெரிக்க அரசியலில் உத்தியோகபூர்வ இருகட்சி முறையில் அதுதான் ஒருமித்த உணர்வு என்ற நிலையில், பல மக்களும் மாற்றீட்டு அரசியல் மற்றும் அமைப்புக்களை எதிர்பார்க்கலாம், வெட்டுக்களைக் குறைக்க அவை போராடவேண்டும். அவை குடியரசு, அல்லது ஜனநாயக எக்கட்சியினால் கொண்டுவரப்பட்டாலும் என எதிர்பார்ப்பர்.”

ஒரு நம்பிக்கையான அல்லது போராடும் குணம் உடைய முடிவுரை என்று எவரும் கூறமுடியாது. உண்மையில் தான் எக்கருத்தை முன்வைக்கிறோம் என்பதை ISO தெரிந்திருக்கவில்லை என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளைப் பற்றி பாராட்டிப் பேசுவது கடினம் என்று அமைப்பு உணர்கிறது; ஆனால் வசதி வாய்ந்த பிரிவுகளான உயர்கல்வியாளர்கள், செய்தியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அசையா உறுதிகொண்ட பல எதிர்ப்பு இயக்கங்களில் உள்ள தொழில்நேர்த்தியானசெயலர்கள்ஆகியோருக்காக இது பேசுகிறது, அவர்களிடம் இருந்து ஆதரவைப் பெறுகிறது. எனவே தலையங்கம்மாற்றீட்டு அரசியல், அமைப்புக்கள்என்று தெளிவற்ற முறையில் வலியுறுத்துகிறது. இவை, ஒன்று ஒருபொழுதும் வெளிப்படப்போவது இல்லை அல்லது முதலாளித்துவஇடதுஅரசியலின் மற்றொரு வடிவில் இருக்கும்ஜனநாயகக் கட்சியின் தொடர்ச்சியாக அல்லது வேறொரு வடிவத்தில் (உதாரணம் ரால்ப் நாடெர், பசுமைவாதிகள், போல்).

உண்மையில் தலையங்கமே ஜனநாயகக் கட்சியினருக்கு மக்கள் மீது அவர்கள் கட்டுப்பாட்டினை வைத்திருக்காதற்கு அவர்களுடைய நடவடிக்கைகளே ஆபத்தைக் கொடுக்கும் என்று எச்சரிக்கை கொடுப்பதுபோல்தான் உள்ளது. குடியரசுக் கட்சியினருக்குமாபெரும் சாதகமான சந்தர்ப்பத்தைகொடுப்பதின் மூலம், ஒபாமா ஏற்கனவே கணக்கிடமுடியாத அரசியல் சேதத்தை ஏற்படுத்தி விட்டார் என்று அது தெரிவிக்கிறது. சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பை தலையைத் துண்டிக்கும் தளத்தில் வைத்துவிட்ட முறையில், ஜனநாயகக் கட்சியினர் தாங்கள் ஒரு பெரு முதலாளித்துவக் கட்சி என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இது பிற்போக்குத்தனமானது, மிருகத்தனமானது, மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் ஒபாமாவிற்கு வாக்களித்த அமெரிக்க மக்கள் கொண்டுள்ள நப்பாசைகளுக்குள்பெரும் சேதத்தைஏற்படுத்தும்.

வலதுசாரி முயற்சியான அமெரிக்க நலன்புரி அரசில் எஞ்சியிருப்பதை தகர்க்கும் வலதுசாரி முயற்சிக்கு”, “குடியரசுக் கட்சியினர் பல ஆண்டுகளாக விரும்பும் சமுகநலத்திட்ட நலன்களை வெட்டும் முயற்சிக்கு பச்சை விளக்கு காட்டும் வகையில்”, ஒபாமாதைரியம் கொடுக்கிறார்”, உதவுகிறார், உடந்தையாக இருக்கிறார் என்று தலையங்கம் அவர்மீது குறைகூறுகிறது. ISOவிலும் அதன் மத்தியதர அடுக்கின் ஆதரவாளர்களுக்கும் கவலை கொடுப்பது ஒபாமாவின் கொள்கைகள் பற்றிய சமூகச் சீற்றம் மக்கள் உத்தியோகப் பூர்வ அரசியலுடன் முறித்துக் கொண்டு ஜனநாயகக் கட்சிக்கும் இடதில் ஒரு வெகுஜன இயக்கம் அபிவிருத்தியடைந்துவிடலாம் என்ற நிலைப்பாடு இருப்பதுதான்.

ஆனால் தொடர்ந்து நம்பிக்கையுடன் ISO ஆசிரியர்கள் கூறுவது: “ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பை இவை அனைத்தும் மூழ்கடித்துவிடுமோ? ஒருவேளை இராது: ஏனெனில் குடியரசுக் கட்சியினர் எப்பொழுதுமே இன்னும் வலதிற்கு சென்றுவிடுவர் என்ற உண்மை இருப்பதால். 2008ல் ஒபாமாவிற்கு வாக்களிக்கும் ஊக்கம் பெற்ற ஜனநாயகக் கட்சியின் அடித்தளம் 2012ல் வாக்களிக்க அது வராவிட்டால் என்ன மாற்றீடு நிகழும் என்பது பற்றி அச்சம் அடையலாம்.” உண்மையில் ISO இங்கு ஜனநாயகக் கட்சியின் கட்டுக்குள் மக்களைத் தொடர்ந்து இருத்துவதற்கான அச்சத்தை தோற்றுவிக்கும் முயற்சியில் இணைகிறது.

எப்படிப்பார்த்தாலும் சான்றுகள் முற்றிலும் தெளிவாக உள்ளன. இன்று ISO ஒபாமாவைக் குறை கூறுகிறது. ஆனால் 2008ல் இது அவருடைய வேட்புத்தன்மையை ஒரு வரலாற்று அரிய செயல் என்றும் அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றும் கூறியது.

ஆகஸ்ட் 26, 2008 ல் அதிக ஆடம்பரம் இல்லாத தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒபாமாவைப் பெரிதும் குறைகூறிய ISO “ஆரம்ப தேர்தல்களில் அவருடைய வெற்றி அவருடைய வேட்புத்தன்மையின் வரலாற்றுச் சிறப்பு குறித்த பரபரப்பு உணர்வை கட்டமைப்பதை நம்பியிருந்தது... அரசியல் முறையை மாற்றுவதில் அவசர உணர்வும் அதில் இருந்தது. அவருடைய பிரச்சாரத்தில் கடந்த காலத்தில் இருந்து பெரும் அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களின் பெருமிதச் சின்னங்கள் இடம் பெற்றிருந்தன.” அப்பொழுது எதிர்பார்ப்புக்களை எவர் தோற்றுவித்துக் கொண்டிருந்தனர்? ஒபாமா பிராச்சாரத்தில் உருவாக்கப்பட்டபெறுமதிச் சின்னங்களில்பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட் ஒருவர் இல்லை, என்றால், யாரைப் பற்றித்தான் socialistworker.org மனத்தில் கொண்டுள்ளது?

நவம்பர் 2008ல் ஒபாமாவின் வெற்றிக்குப் பின், ISO தேர்தலுக்குப் பிந்தைய அதன் முதல் தலையங்கத்தை, “அமெரிக்க அரசியலின் புதிய வடிவம்என்று தலைப்புக் கொடுத்தது. அதுவே எந்த அளவிற்கு அது நப்பாசைகளை வளர்த்தது என்பதற்கும் அதன் அரசியல் போக்குக்கும் சரியான தீர்ப்பாகும். “ஜனாதிபதித் தேர்தல்களில் பாரக் ஒபாமா பெற்றுள்ள மகத்தான வெற்றி அமெரிக்க அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தைத்தரும் நிகழ்வு ஆகும்; ஒரு ஆபிரிக்க அமெரிக்கர் அடிமைத்தன முறையில் கட்டமைக்கப்பட்ட நாட்டின் மிக உயர்ந்த பதவியைப் பெறுகிறார்.” என்று கட்டுரை ஆர்வத்துடன் கூறியது. அகராதியின்படி, “மாற்றத்தைத்தரும்என்பதுஒரு குறிப்பிடத்தக்க மாற்றம், தோற்றத்திலோ, குணத்திலோ, பொதுவாக இன்னும் சிறந்த நிலைப்பாட்டிற்குஎன்பதாகும். எது உண்மை? ஒபாமாவின் தேர்தல், அரசியல் அமைப்புமுறை அல்லது அமெரிக்க மக்களின் வாழ்க்கையைமாற்றியதா”?

socialistworker.org இல் பதிக்கப்பட்ட அடுத்த தலையங்கம்பெரும் எதிர்பார்ப்புக்கள்”, அதாவது ஒபாமா பற்றிய எதிர்பார்ப்புக்கள் என்று தலைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வைத்தான் இப்பொழுது ISO விமர்சிக்கிறதுஒபாமா சார்பு உணர்வுக்கு இழிந்த வகையில் உரமூட்டும் அதன் முழுத் தன்மையையும் அறிவதற்கு இக்கட்டுரை முழுவதுமாக மேற்கோளிடப்பட வேண்டும். இங்கு நாம் சில பகுதிகளை மட்டுமே கொடுக்கிறோம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் மறு தேர்தலுக்குப் பின் பெரும் திகைப்பு மற்றும் அச்சம்தான் படர்ந்தது….நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்த உணர்வு வேறுவிதமாகவும் இருக்க முடியாது

அடிமைத்தனத்தில் நிறுவப்பட்ட மற்றும் திட்டமிட்ட இனவெறியை முற்றிலும் தக்கவைத்துக் கொண்ட ஒரு நாடு அதன் முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தது.

இவ்விதத்தில் ஒபாமாவின் வெற்றி பற்றிய கொண்டாட்டங்கள் ஒரு புறம் மற்றொரு புறத்தைத் தாக்குவது என்பது மட்டும் இல்லாமல், வரலாறு உருவாக்கப்படுதல் என ஆகியுள்ளது.”

ஒபாமாவின் ஆரம்ப நடவடிக்கைகளை பற்றிச் சில கவலைகளை தெரிவித்த பின்னர், தலையங்கம் தொடர்ந்தது: “ஆனால் பில் கிளின்டன் சகாப்தத்தில் இருந்த முக்கோணத்தன்மை உடைய கொள்கைகள்தான் மீண்டும் வரும் என நாம் எதிர்பார்க்க வேண்டும் என்ற பொருளை இது தராது. கிளின்டனின் ஆண்டுகள் உட்பட அமெரிக்க அரசியலை மூன்று தசாப்தங்களாக மேலாதிக்கம் கொண்டிருந்த வலதுசாரி செயற்பட்டியலை இழிவுபடுத்திய பின்னர்தான் ஒபாமா ஜனாதிபதியாக வந்துள்ளார் என்பதுதான் வேறுபாடு.

குறிப்பாக பொருளாதாரத்தில், ஒபாமா புதிய தாராளக் கொள்கைச் சகாப்தத்தில் புகழ்பெற்றிருந்த அரசாங்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளாத நிலையில் ஒபாமா நெருக்கடிக்கு முகங்கொடுக்கிறார்….

சுருங்கக்கூறின், பொருளாதாரத்தில் மட்டுமின்றி. வெளியுறவுக் கொள்கை இன்னும் மற்றவற்றிலும் அமெரிக்கா எதிர்பார்க்கும் பிரச்சினைகளும் வினாக்களும் ஒபாமாவை வேறு ஒரு செயற்பட்டியலை நோக்கிச் செல்லும் உந்துதலைக் கொடுக்கிறது.

நவம்பர் 2008க்குப் பின் பல மாதங்கள் ISO ஒபாமா நிர்வாகம் அமெரிக்க முதலாளித்துவம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையை ஒட்டி சீர்திருத்தங்களை செய்யக் கடமைப்படுவார் என்று பலமுறை கூறியது.

ஒரு சில வாரங்களுக்குப் பின், டிசம்பர் 2008ல் socialistworker.org அதன் வாசகர்களிடம், “25 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சியினராயினும், ஜனநாயகக் கட்சியினராயினும் சரி பழைமைவாதிகளின் இரும்புப் பிடி முறிக்கப்பட்டுவிட்டது.” ஒபாமா நெருக்கடியை எதிர்க்கத் தவிர்க்க எப்படி முயன்றாலும் அவருடைய நிர்வாகம்மாறுபட்ட செயற்பட்டியலுக்குத்தான்உந்தப்படும், அதாவது ஒரு முற்போக்கானதாக  நிலைக்கும்; ஏனெனில்உண்மையான உலக நிலை பழைய வழியில் தீர்க்கப்படமுடியாத நிகழ்கால வினாக்களைத்தான் அளிக்கும். ஒபாமா நிர்வாகம் பொருளாதாரம் மற்ற பிரச்சினைகளில் காலம் கடந்துவிட்ட தீர்வுகளைக் காண விரும்பினால், அத்தீர்வுகள் தோற்றுப்போகும்இறுதியில் ஏதேனும் ஒரு வகையில் குப்பையில் போடப்பட வேண்டியிருக்கும்.”

இவ்வகையில் அது பல மாதங்கள் தொடர்ந்து எழுதியது. இதற்கிடையில் இதே போல் அல்லது இதையும் விட அதிகமாக ஒபாமா பற்றியப் நப்பாசைகளை வளர்க்க விரும்பிய ISO இன்  கூட்டாளிகளையும் நாம் மறப்பதற்கு இல்லை.

ஜனவரி 2009ல் ISO விஸ்கான்சனில் உள்ள மாடிசனில் ஒரு அரங்கிற்குக் கூட்டாக ஏற்பாடு செய்தது; அதில் மற்றவர்களுடன் அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான லான்ஸ் செல்பாவும் நேஷனின் ஜோர் நிக்கோலஸும் உரையாற்றினர். 2008 தேர்தல் முடிவுகளைவரலாற்றுத் தன்மை வாய்ந்தது என்று விவரித்து, வெளிப்படையான, ஆர்வமிகு ஒபாமாவின் ஆதரவாளராக நிக்கோலஸ் அன்றும் இன்றும் உள்ளார். நேஷன் கட்டுரையாளர் நவம்பர் 5ம் திகதிஅமெரிக்க வரலாற்றில் நீண்டகாலப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நீண்ட தேர்தல் இரவிற்குப் பின் முடிவு வந்தது. கதிரவன் ஒரு புதிய நாளில் உதித்தபோது, விட்மன் கூறியது போல் அமெரிக்கா இசைக்கிறது என்பதைச் சற்றே எளிதாகக் கேட்க முடிந்தது.”என்று பரபரப்புடன் கவிதை நயத்தில் பாராட்டினார். எவ்வளவு குமட்டுகிறது?

சோசலிஸ்ட் வேர்க்கர் நிக்கோலஸ் ஜனவரி 2009ல் மாடிசன் அரங்கம் ஒன்றில் உரையாற்றியபோதும் பெரும் பரபரப்புடன் கூறியது: “ஜனாதிபதி பாரக் ஒபாமா பதவியேற்பிற்குப் பின் விரைவில் வந்துள்ள வகையில் நிகழ்ச்சியின் ஒலிக்குறிப்பு ஆர்வத்தை தூண்டி உந்துதலைக் கொடுத்தது. உரையற்றியவர்கள் பலரும் ஒபாமா தேர்தலை ஒட்டி பெரும்பான்மையான அமெரிக்கர்களிடையே ஏற்பட்டுள்ள ஆர்வம் தொடர்ந்து இருக்க வேண்டியதின் தேவை பற்றிப் பேசினர்; சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் கூறினர்.” இதை ஒரு சிலரின் நெற்றியில்தான் முத்திரையிட வேண்டும்.

சந்தேகப்படாதவர்கள்  ISO  இப்பொழுது ஒபாமா பதவியில் வளர்ச்சியுற்றது குறித்து நிக்கோலாஸ் கூறியது சரியா என இரண்டாம் முறை சிந்தித்தால், அவர்கள் மீண்டும் இப்படி இருந்திருக்குமா எனத்தான் நினைக்க வேண்டும் சில வாரங்களுக்கு முன்பு, ஜூன் 23, 2011 ல் ISO “சோசலிசத்திற்கு திரும்புதல் என்னும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்தது; இதில் நிக்கோலஸ் மாடிசனில் அவருடைய குறிப்பிட்ட குப்பை வகையை மீண்டும் கீழிறக்கினார்.

ISO வின் மற்றும் ஒரு நண்பர் சால் ரோசெல்லி ஆவார். இவர் தற்பொழுது சுகாதாரத்தொழிலாளருக்கான தேசிய தொழிற்சங்கத்தின் (National Union of Healthcare Workers) தலைவராக உள்ளார். இது SEIU எனப்படும் சேவைத்துறை ஊழியர்களின் சர்வதேச தொழிற்சங்கத்தில் இருந்து முறித்துக் கொண்டது. இது அச்சங்கத்தின் உயர் நிர்வாகத்தினுள் ஏற்பட்ட உட்பூசலின் விளைவாகும்.

ரோசெல்லி ஒபாமா பற்றி ஆரம்பத்தில் பெரும் ஆர்வத்துடன் ஆதரவு கொடுத்தவர் ஆவர். அப்பொழுது அவர் SEIU வில் ஒரு அதிகாரியாக இருந்தார். ஜனவரி 31ம் திகதி அவர் ஓர் அறிக்கையில் கூறியது: “உழைக்கும் குடும்பங்களுக்கு ஒபாமாதான் சிறந்த வேட்பாளர் என நாங்கள் உணர்கிறோம்; SEIU வின் கலிபோர்னிய மாநிலக்குழுவை உத்தியோகபூர்வமாக அவருக்கு ஒப்புதல் கொடுக்குமாறு வலியுறுத்துவோம்.” ஒபாமாவிற்கு ஆதரவு கொடுத்து அவரைப்பற்றிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்த தொழிற்சங்கங்களின் ரோசெல்லி ஒரு முக்கியமாற்றுசிந்தனைகொண்ட நபராவார். சமீபத்திய socialistworker.org ஆசிரியர் குழுவில் அவர் பெயரிடப்படவில்லை, ஒபாமாவிற்கு அவர் கொடுத்த ஆதரவுசோசலிசம் 2010”, “சோசலிசம் 2011” மாநாடுகளில் முக்கிய பேச்சாளராக இருந்ததையும் தடுக்கவில்லை.

ஒபாமா நிர்வாகம் முற்றிலும் ஒரு வலதுசாரிக் கொள்கையைத்தான் செயல்படுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் ISO காலம்கடந்து கண்டறிந்துள்ளது. இதன் பின் சற்றே பின்வாங்கி, இது எப்பொழுதுமே தங்கள் நிலைப்பாடு என்பது போல் காட்டிக் கொண்டது; கீழிருந்து ஒபாமாவிற்கு கொடுக்கப்படும் அழுத்தத்தில் அனைத்தும் அடங்கியுள்ளது என்று கூறுகிறது.

ஜூன் 29, 2009ல் லான்ஸ் செல்பா ஒபாமாஅடுத்த பிராங்ளின். டி. ரூஸ்வெல்ட் அல்லது அடுத்த ஹூவராகஇருப்பாரா என்ற வினாவை socialistworker.org இல் எழுப்பினார். அவரைப் பொறுத்தவரை இது ஒரு தீர்க்கப்படாத பிரச்சினை. ரூஸ்வெல்ட் “(முழு உணர்வுடனோ அது இல்லாமலோ) ஒரு அமைப்புமுறையை உறுதிப்படுத்தும் அவருடைய விருப்பம் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையுடன் அதைக் கோரும் ஒரு புதிய சமூக உடன்பாட்டைக் கொள்ளாமல் சாதிக்கப்பட முடியாது என்பதை நன்கு அறிந்தார்.” என அவர் எழுதினார்.

அக் கடந்த காலத்தில் இருந்து இன்றைக்கு படிப்பினையை நாம் எடுத்துக் கொண்டால், தெருக்கள், சமூகங்கள், மற்றும் பணியிடங்களில் நடப்பதுதான் தொழிலாளர் வர்க்கம் வெற்றியடையக்கூடிய சீர்திருத்தம் என்பதை நிர்ணயிக்கும் இறுதிக் காரணம் ஆகும்.” என்று செல்பா எழுதினார். எனவே ஒபாமாவை ஒரு ரூஸ்வெல்ட்டாக மாற்றக்கூடியது மக்கள்தான். அதாவது நிர்வாகம் சமூகச்சீர்திருத்தங்கள் எதையும் முன்வைக்காததற்கும் மற்றும்  இயன்றதை வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களைக் பாதுகாக்க அனைத்தையும் செய்தது என்ற உண்மைக்கும் மக்களைத்தான் குறைகூறவேண்டும் என்பது பொருளாகும்.

ISO ஒபாமா பற்றிக் கொண்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் பின்னிகழ்வுகளால் இழிவிற்கு உட்பட்டுவிட்டது. ஆனால் அடுத்து என்ன? தன்னுடைய முந்தைய சார்பு பற்றி அமைப்பு மறுசிந்தனை செய்து அதை இரக்கமற்ற விமர்சனத்திற்கு உட்படுத்துமா? ஒருபோதும் செய்யாது. அதன் தலைவர்கள் இறுக்கமான அரசியல் செயலர்கள் வகையைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் முதலாளித்துவ அரசியலுக்கு இடது புறம் உள்ள அவர்களுடைய நிலை அவர்களை நேர்மையானவர்களாகவோ முரண்பாடற்றவர்களாகவோ இருக்கவைக்க இயலாது.

ISO நிர்வாகம் பற்றிய அதன் அணுகுமுறையைச் சரி செய்துகொண்டுள்ளது. ஏனெனில் வேறுவிதமாகச் செய்வது என்பது அமைப்பு முற்றிலும் இழிவிற்கு உட்பட்டுவிடும் என்ற பொருளைத்தரும். இன்று ஒபாமாவை சோசலிஸ்ட் வேர்க்கர் குறைகூறுகிறது. இதற்குக் காரணம் ஜனநாயகக் கட்சி, தாராளவாத இடது, தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் வரம்புகளில் இருந்து முறித்துக் கொள்ள விரும்பி, இலாப முறையைச் சவாலுக்கு உட்படுத்தும் ஒரு இயக்கத்தின் வளர்ச்சியை அது திசைதிருப்பும் முயற்சியைத் தொடர்கிறது.

ISO வின் சார்பும் தன் ஒபாமா நிர்வாகத்திற்கான அரசியல் பரிவுணர்வும் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் உலக சோசலிச வலைத் தளம் முன்வைக்கும் முன்னோக்கில் இருந்து முற்றிலும் எதிரிடையாக உள்ளன. ஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமத்துவக் கட்சி ஒபாமா நிர்வாகத்தின் வலதுசாரித் தன்மை பற்றி எச்சரிக்கை கொடுத்து வந்துள்ளது. செப்டம்பர் 2008ல் அதன் தேர்தல் பிரச்சார அறிக்கையில் நம் கட்சிஅடுத்து ஜனாதிபதிஅவர் பெயர் மக்கெயினாக இருந்தாலும் சரி, ஒபாமாவாக இருந்தாலும் சரிஅநேகமாக உடனடியாக அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின்மீது தாக்குதல்களை விரிவாக்குவார்என்று கணித்துக் கூறியிருந்தது

இந்த அறிக்கை மிக வெளிப்படையாகஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவது, இரு முக்கிய முதலாளித்துவக் கட்சிகளில் ஒன்றின் ஜனாதிபதி வேட்புமனுத் தகுதியைப் பெறும் முதல் ஆபிரிக்க அமெரிக்கர் என்ற முறையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்ளையில் உறுதியான மாற்றத்தைக் கட்டியம் கூறும் நப்பாசைகளுக்கு எதிராக எச்சரித்ததுமேலும்அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒபாமா அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களை, புஷ்ஷைவிடச் சற்றும் குறையாத வகையில் இரக்கமற்று தொடர்வார்என்றும் எழுதியது.

நவம்பர் , 2008 அன்று நாம் எழுதினோம்: “பாரக் ஒபாமாவின் தேர்தல் வெற்றிக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் அவருடைய நிர்வாகத்தை தயாரிக்கும் முதல் முயற்சிகள் அவருடைய கொள்கைகள் மக்கள் எதிர்பார்ப்புக்களை ஒட்டி நிர்ணயிக்கப்படமாட்டாது, ஆனால் அமெரிக்க நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கை நலன்களை ஒட்டித்தான் நிர்ணயிக்கப்படும் என்பதை ஏற்கனவே எடுத்துக்காட்டுகின்றது.”

ஒபாமாவின் இடைக்காலக்குழுவின் வலதுசாரித் தன்மையை தேர்தல் முடிந்த இரு வாரங்களில் விவரித்த WSWS முடிவுரையாகக் கூறியது: “அமெரிக்க ஏகாதிபத்தியக் கொள்கையை மறு பொதியிட்டு ஊக்கத்துடன் செயல்படுத்துவதற்கு அமெரிக்க அரசியல் ஆளும்தட்டு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது அவர் சிறந்த பெயரளவுக்கான தலைவர் என்பதற்கு உகந்தவராக இருப்பார் என்ற காரணம்தான்.” (பார்க்கவும்:  “Obama’s transition: A who’s who of imperialist policy”.)

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்புக்களில் டிரில்லியன் கணக்கில் செலவழித்தபின், அமெரிக்க போர்களை பாக்கிஸ்தான், லிபிய உட்பட நாடுகளில் விரிவாக்கியது நடந்துள்ள பின்னர், WSWS ன் பகுப்பாய்வு முற்றிலும் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் பிரதிநிதித்துவப்படுத்துவதை மறைக்கும் ISO போன்ற அமைப்புக்கள், இறுதி ஆய்வில் ஆளும்வர்க்கத்தின்  மாற்றுசிந்தனை பிரிவுகள்தான்.

ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட விரும்பவர்கள் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளை செயல்ப்படுத்தும் இரு கட்சிகளுக்கும் எதிராகப் போராட விரும்புபவர்கள், ISO போன்ற சந்தர்ப்பவாத, போட்பாடற்ற அரசியல், செயல்கள் இவற்றிற்கு எதிராக தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இறுதிப்பகுப்பாய்வில் அந்த அமைப்பு செய்யும் அனைத்தும் தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதை தடுத்தல் என்னும் மத்தியதர வகுப்பின் கூடுதல் சலுகை பெற்ற பிரிவுகளின் உறுதிப்பாட்டினால்தான் உந்துதல் பெறுகிறது.