தொலைபேசி
ஒற்றுக் கேட்டல் மற்றும் ரூபர்ட் மேர்டோக்கின் நியூஸ் இன்டர்நேஷனல்
குழு,
பிரிட்டனின் பிற
சட்டவிரோதச் செயல்கள் பற்றிய சமீபத்திய ஊழலில் இரண்டாம் வாரத்தில்,
முந்தையதைவிடச்
சேதமானமுறையில் ஒன்றன்பின் ஒன்றாக பல புதிய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
“சட்டம்
மற்றும் ஒழுங்கு”
பற்றி முடிவில்லாமல்
முரசு கொட்டிய
News of the World,
அரசியல்வாதிகள்,
அரசாங்க மந்திரிகள்,
பொலிஸ்,
அரச குடும்பம்,
திரைப்பட உலகில்
புகழ்பெற்றவர்கள் மற்றும் செய்தியாளர்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான மக்களின்
கைத்தொலைபேசிகளை பல ஆண்டுகளாக ஒற்றுக் கேட்டு வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அதுவும்
மற்ற மேர்டோக் செய்தித்தாள்களும் சட்டவிரோதமாக முக்கிய அரசாங்க அதிகாரிகளின்
அந்தரங்கக் குறிப்புக்களை பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதம
மந்திரி கோர்டன் பிரௌன் மேர்டோக்கின்
சண்டே டைம்ஸ்
அவருடைய நிதிய மற்றும் சட்டக் கோப்புக்களை பெறுவதற்கு
“நன்கு அறியப்பட்ட
குற்றவாளிகளை”
பயன்படுத்தி
“அரசாங்க மந்திரி
என்னும் என்னுடைய நிலையை வீழ்த்தும்”
நோக்கத்தைக்
கொண்டிருந்தது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்கள் மேர்டோக் செய்தி ஊடகத்தின் ஊழல்,
மிரட்டுதல்
நடவடிக்கைகளின் வழமையான செயல்முறை பற்றிய பல தகவல்களுடன் இணைந்து வந்துள்ளன.
ஆயினும்கூட,
அரசாங்கம் மற்றும்
எதிர்த்தரப்புக் கட்சிகளின் அறநெறியிலான சீற்றம் போல் வெளிவந்தாலும்கூட,
குற்றச்சாட்டுக்கள்
பற்றிய குற்றவியல் விசாரணைக்கான தயாரிப்புக்கள் ஏதும் நடத்தப்படவில்லை.
நியூஸ்
இன்டர்நேஷனலின் பதிப்பக இடம் நீண்டகாலத்திற்கு முன்னரே ஒரு குற்றத் தளம் என்று
அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மாறாக,
தவறு பற்றிய
ஆதாரத்தைப் பெறுவதற்கு மிக அடிப்படையான நடவடிக்கைகளைக் கூட அரசாங்கம் எடுக்க
மறுக்கையில் அது ஒரு மூடிமறைக்கும் செயலுக்கு உடந்தையாக உள்ளது.
ஊழலில்
தொடர்புடைய ஆயிரக்கணக்கான,
ஏன்
மில்லியன்கணக்கான மின்னஞ்சல்கள்கூட,
நியூஸ்
இன்டர்நேஷனலின் நிர்வாகி ஒருவரால் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் வலுவான ஆதார
சாத்தியப்பாடு உடைய சான்றுகளை அழித்துவிடுவதை நிறுத்துவதற்கு ஏதும் செய்யப்படவில்லை.
கணினிகள் ஏதும்
கைப்பற்றப்படவில்லை,
hard-drives
கைப்பற்றப்படவில்லை,
குழுக்கூட்டங்களின்
நிகழ்ச்சி நிரல்கள்,
குறிப்புக்கள்
கேட்கப்படவில்லை.
மேர்டோக்கின் செய்தி ஊடகக்குழுவிற்கு சட்டவிரோத நடவடிக்கை பற்றிய சான்றுகளை
அழிப்பதற்கும் மற்றும் மூடிமறைப்பை ஏற்பாடு செய்ய அவகாசம் பெறவும் உதவும் வகையில்
முக்கிய நோக்கத்தைக் கொண்டு பல மாதங்கள் அல்லது ஆண்டுகளில் பிடிக்கக்கூடிய
பாராளுமன்ற விசாரணை பற்றிய உறுதிமொழி ஒன்று இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது.
குற்றச்சாட்டுகளில் மையமாக இருக்கும் நபர்களாக நியூஸ் ஆப் த வேர்ல்டின் முன்னாள்
ஆசிரியர் ரெபெக்கா ப்ரூக்ஸ்,
தற்பொழுது நியூஸ்
இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாகியாக உள்ள நியூஸ் இன்டர்நேஷனலின் தலைவர் அல்லது பெரிய
முதலாளியான ரூபர்ட் மேர்டோக்கின் மகன் ஜேம்ஸ்யே பொலிசார் இன்னும் விசாரணைக்காக
அழைக்கவில்லை.
மூன்று
நபர்கள் மட்டும் பொலிசால் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில்
2003 முதல்
2007 வரை நியூஸ் ஆப்
த வேர்ல்டின் ஆசிரியராக இருந்த ஆண்டி கௌல்சன் அடங்குவார். இவர் ஜனவரி மாதம் வரை
பிரதம மந்திரி டேவிட் காமெரோனின் தொடர்புகள் பிரிவு இயக்குனராக இருந்தார்.
எவர்மீதும் இதுவரை
குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை.
கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் டெமக்ராட்டுக்ளான இரு ஆளும் கட்சிகளினதும் மற்றும்
எதிர்தரப்பு தொழிற்கட்சி ஆகியவற்றின் முழு பிரதிபலிப்பும் சர்வதேச செய்தி ஊடகப்
பேரரசர்,
பலருக்கும்
“அழுக்கைத் தோண்டி
எடுப்பவர்”
என்று அறியப்பட்டவரை
காப்பாற்றும் வகையில் மேர்டோக்கின் குற்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்படுவதைத்
தடுப்பதில் முக்கியத்துவம் காட்டுகிறன.
முக்கிய கட்சிகள்,
அரசாங்கம்,
பாராளுமன்றம்,
நீதிமன்றங்கள்,
பொலிஸ் என
முதலாளித்துவ அரசின் ஒவ்வொரு அமைப்பும் மேர்டோக்கின் குற்றங்களில் தொடர்பு
கொண்டுள்ளன.
ஏதேனும் ஒரு வகையில்
பில்லியனர் அளிக்கும் நிதி மானியத்தின் பட்டியலில் உள்ளனர்;
அனைவருமே அவருடைய
மாபியா போன்ற வழிவகைகளை மூடிமறைப்பதில் தொடர்பு கொண்டவர்கள்.
மெட்ரோபோலிடன் பொலிசின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் ஆண்டி
ஹேமன்தான்
2006ம் ஆண்டில்
தொலைபேசி ஒற்றுக் கேட்டல் பற்றிய முதல் விசாரணையை மேற்பார்வையிட்டார். அப்பொழுது
இரு நபர்கள் மீதான குற்றத்தை ஒட்டி மூடப்பட்டது.
அவர் இப்பொழுது
மேர்டோக்கின்
டைம்ஸில்
கட்டுரைகளை எழுதுகிறார்.
இந்த
நபர்தான்
90 நாட்களுக்கு
“பயங்கரவாத
எதிர்ப்பு”
நிலைப்பாட்டை ஒட்டி
மக்கள் காவலில் வைக்கப்படுவதற்குப் பொலிசாருக்கு அதிகாரம் வேண்டும் என்று கோரியவர்.
ஹேமனுடைய
கண்காணிப்பில்தான் நிரபராதியான இளம் பிரேசிலியத் தொழிலாளி ஜீன் சார்ல்ஸ் டி மெனேஸஸ்
பொலிசால் ஜூலை
2005ல் கொலையுண்டார்;
மற்றொரு
நிரபராதி ஜூன்
2006ல் ஒரு
“பயங்கரவாத-எதிர்ப்பு”
நடவடிக்கையின்போது
சுட்டுக் கொல்லப்பட்டார்.
மெட்ரோபோலிடன் பொலிஸில் உதவி ஆணையாளராக இருந்த ஜோன் யேட்ஸ்தான்
2009ம் ஆண்டு
ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதற்குத் தக்க ஆதாரங்கள்
இருந்தபோதும் தொலைப்பேசி ஒற்றுக் கேட்டல் பற்றிய மறுவிசாரணை தேவையில்லை என்ற முடிவை
எடுத்தார். அவர் விசாரணை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய அதே நபர்களுடன் மது
அருந்திக் கொண்டும் விருந்து உட்கொண்டிருந்தும் யேட்ஸ் இருந்ததாக இப்பொழுது
தகவல்கள் வந்துள்ளன. ஆகஸ்ட்
2008ல் இருந்து
நவம்பர் 2009
க்குள் அவர் நியூஸ்
இன்டர்நேஷனலின் பிரதிநிதிகளின் ஐந்து மதிய உணவு விருந்துகளை ஏற்றுள்ளார்.
குற்றவழக்குப் பதிவுப் பிரிவின் முன்னாள் இயக்குனரான கென் மாக்டொனால்ட் தொலைப்பேசி
ஒற்றுக் கேட்டல் பற்றிய சான்றுகள் பரிசீலனையை யேட்ஸ் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே
தானும் செய்து,
விசாரணை ஏதும்
தேவையில்லை என்ற முடிவிற்கு வந்தார்.
இப்பொழுது
மக்டோனல்ட் பிரபுவாக இருக்கும் மக்டோனல்ட்,
டைம்ஸுக்குக்
கட்டுரை எழுதுபவராக இருப்பதுடன்,
நியூஸ் ஆப் த
வேர்ல்டினால் அதன் செய்தியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் ஆலோசனை கூறவும்
நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த
வெள்ளியன்று காமெரோன் கூறினார்:
“இதில் உண்மை என்ன
என்றால்,
செய்தி ஊடகம்,
அரசியல்வாதிகள்,
அனைத்துக் கட்சியின்
தலைவர்கள் ஆகிய நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருந்துள்ளோம். ஆம்,
நானும் இதில்
அடங்கியுள்ளேன்.”
எந்த
உண்மையான ஜனநாயக முறையிலும் இத்தகைய பேரழிவு தரும் தன்னையே குற்றம் சாட்டிக்
கொள்ளுவது என்பது அரசாங்கம் உடனடியாக இராஜிநாமா செய்யும் விளைவை
ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால் இப்பொழுது
அரசியல் நடைமுறையிலோ அல்லது செய்தி ஊடகத்திலோ எந்த முக்கியமான குரலும் அத்தகைய
கருத்தைக் கூறவில்லை.
தொழிற் கட்சித்
தலைவர் எட் மிலிபண்ட் ஊழலை ஒட்டி அரசியல் ஆதாயம் தேட முற்பட்டுள்ளார் என்றாலும்,
அவருடைய கட்சி
காமெரோனுடைய கட்சியைப் போன்றே சமரசத்திற்கு உட்பட்டுவிட்ட கட்சி—எனவேதான்
அரசாங்கத்திற்கு கட்சி கடந்த அவருடைய ஆதரவு வந்துள்ளது.
ஒரு தனிநபர்
அல்லது ஒரு நிறுவனத்தின் அறநெறி,
அரசியல் கீழ்த்தன்மை
மட்டும் இப்பொழுது அம்பலப்படுத்தப்பட்டிருக்கவில்லை. முழுச் சமூக மற்றும் அரசியல்
முறையின் அழுகிய தன்மை வெளிப்பட்டுள்ளது.
தொழிற்கட்சி அல்லது
டோரிக்கள் கூறும் எதுவும்
30 ஆண்டுகளுக்கும்
மேலாக பிரிட்டிஷ் அரசியல் அரியணைக்குப் பின்னே அதிகாரம் செலுத்துவபவராக மேர்டோக்
இருந்துவந்துள்ளார் என்ற உண்மையை மறைக்க முடியாது.
இதில் அமெரிக்காவும்
அடங்கும்;
அங்கு மேர்டோக்கின் பாக்ஸ்
இணையம்,
நியூ யோர்க் போஸ்ட் மற்றும்
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலும் இரு பெருவணிகக் கட்சிகளின் பிற்போக்குத்தனச்
செயற்பட்டியலைப் பெரிதும் நிர்ணயித்து வருகின்றன.
பிரிட்டனில்
தொழிற்கட்சி மற்றும் கன்சர்வேடிவ் அரசாங்கங்கள் போட்டியிட்டு மேர்டோக்கின் ஆதரவை
நாடுவதுடன், அவரின் கொள்கை இருப்புக்களான தீமைநிறைந்த தொழிலாள வர்க்க விரோத,
ஜனநாயக விரோத,
இராணுவவாதக் கொள்கைகளையும் மற்றும் மேர்டோக் உருவகப்படுத்தி
நிற்கும் உலகளாவிய நிதிய ஒட்டுண்ணி தட்டுக்களின் கோரிக்கைகளை செயல்படுத்த அவை
போட்டியிடுகின்றன.
மேர்டோக்கை
ஒன்றும் செய்யக்கூடாது என்று நடக்கும் செயல்கள் முதலாளித்துவ
“நீதியின்”
வர்க்க அடித்தளத்தை
விளக்கிக் காட்டுகிறது. இதில் செல்வந்தர்களும் செல்வாக்குப் பெற்றவர்களும்
அரசாங்கத்தால் பாதுகாப்பிற்கு உட்பட்டு சட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட முழு
விதிவிலக்குப் பெறுகின்றனர்.
அரசாங்கம் தொடரும்
கொள்கைளில் எந்தப் பாதிப்பும் இல்லாத தேர்தல்களும் அடங்கும் முதலாளித்துவ
“ஜனநாயகத்தின்”
பெருகிய முறையிலான
வெற்றுச் சடங்குகளைத் தவிர இதில் தற்கால நிதியப் பிரபுக்கள் நடைமுறையில்
சர்வாதிகாரத்தைத்தான் செலுத்துகின்றனர்.
இந்த
இரட்டைத் தன்மை இன்னும் கூடுதலான வெட்கம்கெட்டதனத்துடன் உள்ளது.
பிரிட்டனில் கல்வித்
தகர்ப்பு பற்றி எதிர்க்கும் இளைஞர்கள்,
ஒரு கௌரவமான
வருங்காலம் பற்றி நம்பிக்கையுடன் எதிர்ப்புக் காட்டுபவர்கள் குண்டர்கள் என்று
முத்திரையிடப்பட்டு,
பொலிசால்
அடிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்படுகின்றனர்.
பிரதம
மந்திரி காமெரோன்,
தொழிற்கட்சித்
தலைவர் மிலிபண்ட் மற்றும் லிபரல் டெமக்ராட் தலைவர் கிளெக் ஆகியோர் பிரிட்டிஷ்
Sky
ஒலி,ஒளி பரப்பின் மீதான
முழுக் கட்டுப்பாட்டை எடுக்கும் அவரின் முயற்சியை திரும்பப் பெறுமாறு மேர்டோக்குடன்
கோர தைரியத்தைத் தேடுகையில்,
ஜூலியன் அசாங்கே
லண்டன் நீதிமன்றத்தில் ஸ்வீடனுக்கு அவர் அனுப்பப்படுவதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட
போலி பாலியல் குற்றச்சாட்டுக்களையொட்டி அமெரிக்க அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கக்
கூடும் என்று வாதிடும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.
அவருடைய
“குற்றம்”
உண்மையான
செய்தியாளரின் கொள்கை ரீதியான பணி ஆகும். அதாவது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு
நாடுகள் செய்த போர்க்குற்றங்களைக் கண்டறிதல், மேர்டோக் செய்தி ஊடகத்தின் வணிக
முத்திரையான பொய்களையும் இழிந்த தகவல்களையும் பரப்புதல் என்று இல்லாமல்.
மேர்டோக்கிற்கும் இரு முக்கியக் கட்சிகளுக்கும் இடையே உள்ள உறவு பொதுவான பொருளாதார,
அரசியல்
செயற்பட்டியலை தளமாகக் கொண்டது.
இது
1980 ன்
முன்பகுதியிலேயே ஏற்பட்டது. ஆளும் வர்க்கம் அப்பொழுது பெருநிறுவனங்களுக்கும் லண்டன்
நகரசபைக்கும் தடையற்ற வழியை கொடுக்க தொழிலாளர்கள் வெற்றிபெற்று அடைந்திருந்த சமூக
உரிமைகளை தகர்க்க முன்வந்தனர்.
ஒரு தொழிலாள
வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலை தொடக்குவதற்கு மேர்டோக் தாட்சருக்கு ஆதரவு
கொடுத்து,
பின்னர் அதை டோனி
பிளேயர் மற்றும் தொழிற்கட்சி ஆழப்படுத்த வேண்டும் என்றார். பின்னர் மீண்டும்
டோரிகளுக்கும் காமெரோனுக்கும் திரும்பி ஒரு நூற்றாண்டுக் காலம் தொழிலாள வர்க்கப்
போராட்டத்தின் சமூக நலன்களை அழிக்கும் வேலையை முடிக்கத் தூண்டினார்.
அரசியல்
நடைமுறையின் முக்கிய கவலை மேர்டோக் பேரரசைப் பாதுகாத்தல் என்றுதான் உள்ளது. அதேபோல்
அவருடைய குற்றங்களையும் மற்றும் அவருக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருந்தவர்களின்
பங்கு பற்றியும் உண்மையான பொது விசாரணையின் கீழ் வருவதை தடுத்தல் என்றுதான் உள்ளது.
இத்தகைய
அரசாங்க உடந்தை பெருநிறுவனக் குற்றத்திற்கு இருப்பது எங்கும் காணப்படும்
நிகழ்வாகும்.
கடந்த ஆண்டில்தான்
அமெரிக்காவில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பாரிய அளவில் மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய்
கசிவிற்கு பெரும் குற்றம் சார்ந்த தன்மையில் புறக்கணிப்பை ஒட்டி காரணமாயிற்று—அதில்
11 தொழிலாளர்கள்
கொல்லப்பட்டனர்,
கூறமுடியாத
சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரச்சேதம் ஏற்பட்டது.
ஒபாமா நிர்வாகம் இதை
எதிர்கொண்ட விதம் உண்மையை அறிந்து பொறுப்பாய் இருந்தவர்களை நீதியின் முன்
நிறுத்துவது என்று இல்லாமல் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கும் அதன் முக்கிய
முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்புக் கொடுத்தல் என்றுதான் இருந்தது.
ஓராண்டு கடக்கப்பட்ட
பின்னரும்கூட எவர் மீதும் குற்றவிசாரணைப் பதிவு நடக்கவில்லை.