World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Former Prime Minister Gordon Brown: Murdoch’s News International operated a “criminal-media nexus”

முன்னாள் பிரதம மந்திரி கோர்டன் பிரௌன்: ஒருகுற்றத்தனமான-செய்தி ஊடக தொடர்பில்”  மர்டோக்கின் நியூஸ் இன்டர்நேஷனல் செயல்பட்டது.

By Chris Marsden
16 July 2011

Back to screen version

ரூபர்ட் மர்டோக்கின் செய்தி ஊடகப் பேராட்சிய நியூஸ் கார்ப்பரேசனை எதிர்கொண்டிருக்கும் தொடர்ந்து ஆழமடையும் நெருக்கடியில் ரெபெக்கா ப்ரூக்ஸின் இராஜிநாமா ஒரு சமீபத்திய அடையாளம்தான்.

முன்பு அவர் ஆசிரியராக இருந்து, இப்பொழுது செயல்படாத நியூஸ் ஆப் த வேர்ல்டினால் பதிப்பிக்கப்பட்டுவந்த நியூஸ் இன்டர்நேஷனல் யு.கே.யின் தலைமை நிர்வாக அதிகாரிப் பதவியில் இருந்து ப்ரூக்ஸ் இராஜிநாமா செய்துவிட்டார். ஆனால் இதனால் எதிர்பார்க்கப்பட்ட சேதக் குறைப்பு மிகவும் சிறிய அளவில்தான் இருக்கும். ஆனால் இவர், மர்டோக் மற்றும் அவருடைய மகன் ஜேம்ஸுடன் ஒரு பாராளுமன்ற சிறப்புக்குழு முன் செவ்வாயன்று சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அக்குழு நியூஸ் ஆப் த வேர்ல்டின் தொலைப்பேசி ஒற்றுக் கேட்டல் ஊழலைப் பற்றி விவாதிக்க உள்ளது.

சிறப்புக் குழு நடவடிக்கைக்கு முன்னதாக, ஊழல் குறித்த தன் மௌனத்தை மர்டோக் அவருக்குச் சொந்தமான வோல் ஸ்ட்ரீட் ஜர்னலில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் கலைத்துவிட்டார். இவருடைய கருத்துக்கள் கோர்டன் பிரௌனைக் கண்டிக்கும் வகையில் மையம் கொண்டிருந்தது; ஜூலை 13ம் திகதி முன்னாள் பிரதம மந்திரியின் இழிவுதரக்கூடிய பாராளுமன்ற உரைக்கு விடையிறுக்கும் வகையில் இருந்தது. சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள்முழுப் பொய்கள் ஆகும் என்றார் மர்டோக்.

செய்தியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் பிரௌன் பெரிதும் சாடப்பட்டுள்ளார்; மர்டோக்குடன் அவர் கொண்ட நீண்ட நாள் தொடர்புகளை மேற்கோளிட்டு, 2009ல் தொழிற்கட்சியிடமிருந்து கன்சர்வேடிவ்களுக்கு விசுவாசத்தை நியூஸ் இன்டர்நேஷனல் மாற்றிக் கொண்டதால் ஏற்பட்ட மனவருத்தத்தில் அவருடைய உரை இருந்தது எனக் கூறப்பட்டு உதறித்தள்ளவும் பட்டுவிட்டது. ஆனால் புதிய தொழிற்கட்சியை கட்டமைப்பதில் முக்கியமாக இருந்தவர்களில் ஒருவர், பெருவணிகத்திற்கு வளைந்துகொடுக்கும் கருவி என்று பிரௌன் இருந்ததால் அந்தக் காழ்ப்பை ஒட்டி எவரும் இப்பிரச்சாரம் செய்தி கொண்டுவருபவரைச் சுடுவதின் மூலம் அனைத்தையும் மறைக்கும் நோக்கம் கொண்டது என்ற உண்மையைக் காணாமல் இருந்துவிடக்கூடாது.

நியூஸ் இன்டர்நேஷனல்பலமுறையும் பெரும் தொழில்துறைத் தன்மையில் சட்டத்தை முறித்தது, மிக இழிந்த தன்மையின்போது பிரிட்டிஷ் குற்ற உலகத்துடன் தொடர்புகளுக்கு நம்பியிருந்தது என்று பிரௌன் குற்றம் சாட்டியுள்ளார்.

மர்டோக்கின் செய்தி ஊடகம்குற்றம் சார்ந்த பாதாள உலகின் உறுப்பினர்களுடன்” “இணைந்து செயல்பட்டது மேலும்ஒரு குற்றத்தன்மை-செய்தி ஊடக தொடர்பு முறையிலும் செயல்பட்டது.”

ஆகஸ்ட் 2009ல் கொட்லாந்து யார்டின் துணை ஆணையாளர் ஜோன் யேட்ஸ்தன்னிச்சையாக மற்றும் ஒரு பொலிஸ் விசாரணை தேவை என்பதை நிராகரிக்க எட்டு மணி நேரம்தான் எடுத்துக் கொண்டார்அவர் விசாரணை நடத்த வேண்டிய நபர்களுடன் அவர் உணவருந்திய நேரத்தைவிட இது குறைவான நேரம் என்று நான் கூறலாம் என்று பிரௌன் குறைகூறினார்.

ஒரு சிறப்புக் குழு அறிக்கை பரந்த அளவில் தொலைபேசி ஒற்று நடப்பதை காட்டியதைக் கண்டுள்ள பிரௌன் ஆட்சித் துறையின் தலைவரான காபினெட் செயலர் கஸ் ஓடோனலை ஒரு நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்ய உடன்படுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால்இது பொலிசால் எதிர்க்கப்பட்டது, உள்துறை அலுவலகத்தால் எதிர்க்கப்பட்டது, மற்றும் ஆட்சிப்பணித் துறையினாலும் எதிர்க்கப்பட்டது; [கலாச்சாரம்] சிறப்புக் குழுவும் இதற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று அவர் நினைவு கூர்ந்தார்.

பிரௌனுடைய கூற்றின்படி, டோனல் சட்டவிரோத நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன என்று சிறப்புக் குழு நம்பவில்லை, அவசர பொதுமக்கள் அக்கறை என்ற சோதனையை ஒரு விசாரணை திருப்தி அளிக்காது என்று ஆலோசனை கூறிவிட்டார். மேலும் காலம் கடக்கப்பட்டுவிட்டது, சான்றுகள் அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும் அவர் வாதிட்டார்; பொலிசால் முறையான துறைத் தோல்வி ஏற்பட்டது என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை, அவர்களுடைய முடிவுகள் அனைத்தும் அரசாங்கக் குற்றவியல் வக்கீல் அலுவலகத்தால் சரிபார்க்கப்பட்டுவிட்டன; பொதுத் தேர்தலுக்கு அருகே இருக்கும்போது நியூஸ் ஆப் த வேர்ல்டை இலக்கு வைப்பது அரசியல் அளவில் உந்துதல் பெற்றது என நினைக்கப்பட்டுவிடும்.

காபினெட் அலுவலகத்தின் கருத்துப்படி, “நீதித்துறைத் தலைமையிலான விசாரணைக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பது மட்டும் இல்லாமல், நீதித்துறை அல்லாத விசாரணைக்கும் ஆதாரம் இல்லை; அதேபோல் சுயாதீன பொலிஸ் புகார்கள் ஆணையத்திடம் கருத்துக் கேட்பதற்கும் இடமில்லை; பொலிசை விசாரணையை மறுபடி செய்யலாம் என உத்தரவிடுவதற்கும் ஆதாரம் இல்லை என்று பிரௌன் சுருக்கமாகக் கூறினார்.

முதல் பொலிஸ் விசாரணையின் தலைவர் ஆண்டி ஹேமனிடம் இருந்தும் நடவடிக்கை ஏதும் வரவில்லை; “அவருடைய அடுத்த வேலை நியூஸ் இன்டர்நேஷனலில் என ஏற்பட்டது”, “அவருக்குப் பின் பதவிக்கு வந்த யேட்ஸிடம் இருந்து எச்செயற்பாடும் இல்லை”—ஆனால் பரந்த, ஆராயப்படாத ஆவணக் காப்பு ஆதாரங்கள் பெருமளவில் குற்றத்தன்மையை அம்பலப்படுத்தியிருந்தபோதிலும்கூட, இந்நிலைமை நீடித்தது என்று அவர் புகார் கூறினார்.

மே 2010ல் பதவியை விட்டு நீங்கியபின், பிரௌன் தான் துணைப் பிரதம மந்திரி நிக் கிளெக்கிடம் பேசியதாகவும்செய்தி ஊடகம் பற்றி விசாரிக்க ஒரு குழு தேவை என்ற எங்கள் திட்டத்தை நேரே அவரிடம் கொடுத்ததாகவும் கூறினார். “ஆட்சிப் பணித் துறைத் தலைவருக்கு நீதி விசாரணைக்கு எதிரான முந்தைய ஆலோசனை புதிய சான்றுகளால் வலுவற்றுப் போய்விட்டது என்றும் நான் எழுதினேன்.

ப்ரூக்ஸைப் பற்றிக் கூறுகையில், “2002 குளிர்காலத்திலேயே கொட்லாந்தின் மூத்த பொலிஸ் அதிகாரிகள் அப்பொழுது நியூஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாகியாக இருந்த அவரைச் சந்தித்து, அவருடைய செய்தித்தாள் ஊழியர்கள் உடைய தீவிர தவறான செயற்பாடுகளையும் அவர்கள் சார்பில் குற்றவாளிகள் கண்காணிப்பு நடத்துவது பற்றியும் கூறினர் என்றார்.

நியூஸ் இன்டர்நேஷனலின் தலைவர் அவருடை குழுவிடம் கேட்காமல் சில பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிட்டத்தட்ட 500,000 பவுண்டுகளைக் கொடுக்க எடுத்த முடிவு இப்பொழுது மௌனத்தை விலை கொடுத்து வாங்கியது போல் தோன்றும்இது இப்பொழுது முழுப் பாராளுமன்ற மற்றும் பொலிஸ் ஆய்வின் பொருளாக வேண்டும் என்று ஜேம்ஸ் மர்டோக் பற்றிக் கூறுகையில் அவர் குறிப்பிட்டார்.

பிரௌனின் அறிக்கைகள் பெயரிடப்படாத அவருடைய முன்னாள் காபினெட்உறுப்பினர்கள்”, கிளெக் இன்னும் பிறரால் வினாவிற்கு உட்படுத்தப்பட்டன என்பதில் வியப்பு ஏதும் இல்லை. காபினெட் அலுவலகம் பிரௌன் மேற்கோளிட்ட குறிப்புத் தகவல் ஒன்றையும் வெளியிட்டது; இது எதிர்த்தாக்குதல் என விவரிக்கப்படுகிறது. ஆனால் டெலிகிராப் ஒப்புக் கொண்டுள்ளபடிஇன்று காபினெட் அலுவலகம் வெளியிட்டுள்ள ஏழு பக்க கருத்துரை எம்.பி.க்களுக்கு திரு பிரௌன் தன் உரையில் நினைவுகூர்ந்த கருத்துக்களின் சுருக்கத்துடன் இயைந்து உள்ளது.”

டோனல் தன்னைக் காத்துக் கொள்ளும் விதம்ஒரு பொது விசாரணை நடத்துவதா வேண்டாமா, அதன் பரப்பு, தன்மை என்ன போன்றவை பற்றிய முடிவுகள் எப்பொழுதும் ஒரு மந்திரியுடையதுதான் என்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் சாரத்தைத்தான் கொண்டுள்ளது.

ஆனால் பிரௌனின் அரசியல் தோல்விகள் சிறிதளவு கூட மற்றவர்கள் பங்கைப்பற்றி அவர் என்ன கூறுகிறார் என்பதை குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை; மர்டோக் மற்றும் ப்ரூக்ஸுடன் அவருடைய கடந்தகால உறவுகள் பற்றி மேற்கோளிடுவதும் பொருத்தம் இல்லை. அவர் மர்டோக் கூறியபடியெல்லாம் செயல்பட்டிருக்கலாம், ஆனால் அவரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் அவர் தன்னுடைய முந்தைய எஜமானருக்கு எதிராக மாறிவிட்டார் என்பதால்தான்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நியூஸ் இன்டர்நேஷனலை அம்பலப்படுத்துவதில் திரைக்குப் பின் நிகழ்வுகளில் முக்கிய பங்கை பிரௌன் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. ஜூலை 14 அன்று டெலிகிராப்பில் ரோபர்ட் வின்னர் தான்இரகசியமாக ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும்குறைந்தபட்சம் ஆதரவாவது கொடுத்ததாகவும்அது தொலைபேசி ஒற்றுக் கேட்டல் ஊழல் பற்றி பொதுமக்கள் கவனத்திற்கு தொழிற்கட்சி எம்.பி.க்கள் கொண்டுவரவேண்டும் என்ற நடவடிக்கையாகும்….இந்நடவடிக்கை இரு முன்னாள் தொழிற்கட்சி மந்திரிகள் டாம் வாட்சன் மற்றும் கிறைஸ் பிரையன்ட்டினால் வழிநடத்தப்பட்டது; இவர்கள் 2006ம் ஆண்டு தன் இராஜிநாமா நேரம் பற்றி டோனி பிளேயரை அறிவிக்கக் கட்டாயப்படுத்திய பால்டி ஹௌஸ் சதி என அழைக்கப்பட்டதிலும் முக்கியமாக இருந்தனர் என எழுதியுள்ளார்.

கார்டியன் ஜூலை 11ம் திகதிப் பதிப்பில் பாட்ரிக் வின்டூர் இன்னும் அதிகம் அறிந்த முறையில் எழுதியுள்ளார். டோரிக்களுக்கு ஆதரவு என்று த சன் மாறியதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக, “தொலைபேசி ஒற்றுக்கள் மற்றும் நியூஸ் இன்டர்நேஷனல் பற்றி மூடிமறைக்கப்படல் வந்தபின், பிரௌன் ஒரு நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்த தொடங்கினார். குறைந்தபட்சம் 15 நாட்களுக்கேனும் அவர் உள்துறைச் செயலர் ஆலன் ஜோன்சனுடன் விவாதங்கள் நடத்தினார். பிரௌனும் மண்டெல்சன் பிரபுவும் கார்டியனின் முதன்மை ஆசிரியர் ஆலன் ரஸ்பிரிட்ஜருடன் ஊழல் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ளுவதற்கு விவாதித்தனர்.”

தேர்தலுக்குப் பின் பிரௌன் தொலைப்பேசி ஒற்றுக் கேட்டல் பற்றி தொடர்ந்து அக்கறை எடுத்து, விசாரணை வழிவகைகளுக்கு ஊக்கம் கொடுத்து, பலருக்கும் மின்னஞ்சல்களை அனுப்பி ஊழல் பற்றி நியூ யோர்க் டைம்ஸ் நடத்திய விசாரணையையும் நெருக்கமாகக் கவனித்து வந்தார். அது இறுதியில் செப்டம்பர் 2010ல் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில்தான் பிரௌன் தனிப்பட்ட முறையில் பிரௌன் மெட்ரோபொலிடன் பொலிசாருக்கு அவருடைய தொலைபேசியும் ஒற்றுக் கேட்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார் என வின்டூர் தொடர்ந்து எழுதியுள்ளார்.

மர்டோக் உறுதியாக பிளேயர் பக்கம் ஆதரவு காட்டி நின்ற பிளேயர்-பிரௌன் மோதல் காலம், இன்னமும் அதன் பங்கை ஒற்றுக் கேட்டல் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதில் கொண்டுள்ளது. ஜூலை 10ம் திகதி டெய்லி மெயில்திரு பிரௌனின் நண்பர்களும் மற்றும்சில உயரிட ஆதாரங்களும் பிளேயர்நியூஸ் ஆப் த வேர்ல்ட் தொலைபேசி ஒற்றுக் கேட்டல் அம்பலத்திற்கு பிரச்சாரம் செய்திருந்த தொழிற்கட்சி எம்.பிக்களை அது கூடாது எனப் பின்வாங்குமாறு வலியுறுத்த முயற்சித்தார் என்று குற்றம் சாட்டினர் எனத் தகவல் கொடுத்துள்ளது.

திரு பிரௌன் தன்னுடைய நண்பர் டாம் வாட்சன் நியூஸ் இன்டர்நேஷனல் (NI) பட்டத்தை அகற்ற வேண்டும் என்று பிளேயர் விரும்பியதாகக் கூறப்படுகிறது, “ஆனால் திரு பிரௌன் மறுத்துவிட்டார்.”

“NI தலைமை நிர்வாக அதிகாரி ரெபெக்கா ப்ரூக்ஸ் மற்றும் தலைவர் ஜேம்ஸ் மர்டோக்கிற்கு எதிரான சில ஆபத்து தரும் குற்றச்சாட்டுக்களை” மெயில் சுருக்கிக் கூறுகிறது; பாராளுமன்றத்தின் சட்டபூர்வ பாதுகாப்பை பயன்படுத்தி வாட்சன் அதைப் பயன்படுத்திக் கொண்டார். ப்ரூக்ஸ் “பிளேயரின் முன்னாள் காபினெட் மந்திரி டெசா ஜோவலை “இக்கிறுக்கு டாம் வாட்சனைத் தடுத்து நிறுத்த” உதவுமாறு கேட்டுக்கொண்டதும், அவருடைய நண்பர் திரு பிளேயருக்கு உதவுமாறும் கோரினார் என்பவை இதில் அடங்கும்.

பல நேரங்களில் தான் மறைமுகமாக நியூஸ் இன்டர்நேஷனலினால் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவருடைய குப்பைக் கூடைகள் சோதிக்கப்பட்டன என்றும் வாட்சன் கூறியுள்ளார். பிரௌனின் மற்றொரு நண்பர் கிறைஸ் பிரையன்ட் நியூஸ் இன்டர்நேஷனல் “குண்டர்கள் போல் நடந்து கொள்ளுகிறது.  அதில் உள்ளவர்கள் அச்சுறுத்தல், வெகுமதி அளித்தல் என்பவற்றை இணைத்துச் செயல்படுகின்றனர்” எனக் கூறினார்.

எத்தனை சுயநலமாக அவருடைய உந்துதல்கள் இருந்தபோதிலும், பிரௌனின் குறுக்கீடு மற்ற முக்கிய கட்சிகள் அனைத்தின் முயற்சிகளையும் எதிர்க்கிறது; ஆனால் பயனற்ற விசாரணைக்குப் பின் அனைத்தும் முன்பு போலவே மீண்டும் நடக்கும்.

எனவேதான் பைனான்சியல் டைம்ஸ் ஆணித்தரமாகக் கூறியது: “தன்னுடைய எம்.பிக்களிடம் இருந்தே சீற்றத்திற்கு திரு பிரௌன் உட்பட்டார்; அவர்கள் அவருடைய சீற்றமான நிலைப்பாடு மக்கள் மன்றத்தின் உணர்வை தவறாக மதிப்பிட்டுள்ளது என்றனர். .... எட் மிலிபண்டின் நண்பர்கள் திரு பிரௌனின் “பின்னோக்கி ஆராயும்” உரை பொதுவாக ஒருமித்த உணர்வு, இனி நடப்பதைப் பார்ப்போம் போன்ற உரைகளில் இருந்து வேறுபட்டிருந்தது. அத்தகைய உரைகள்தான் தொழிற்கட்சி தலைவரால் வருங்கால செய்தி ஊடகக் கட்டுப்பாட்டிற்கு கொடுக்கப்பட்டது.”

இதே தன்மையில்தான் க்வின்டின் லெட்ஸ் டெய்லி மெயிலில் எழுதினார்: “தங்கத்தைச் சகதியாக மாற்றும் விந்தையான மேதாவித் தன்மையினால் திரு பிரௌன் சில கணங்களுக்கு முன் மகிழ்ச்சியுடன் உறுதியாக இருந்த மன்றத்தில் மீண்டும் வெறுப்புணர்வை அறிமுகப்படுத்தினார்.... எட் மிலிபண்ட் அப்பொழுதுதான் நிதானமான, பரந்த ஒத்துழைப்பளிக்கும் உரையை முடித்திருந்தார்; அது மக்கள் மன்றத் தலைவரின் பாராட்டைப் பெற்றிருந்தது.  முந்தைய மக்கள் மன்றப் பேச்சு மோதல்களில் திரு காமெரோனும் தொழிற்கட்சி உறுப்பினர்களும் மர்டோக் பிரச்சினையை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது பற்றி கனிந்த உணர்வைப் பெற்றிருந்தனர் எனத் தோன்றுகிறது.”

“மர்டோக் பிரச்சினையை” அணுகுதல் ஆளும் வர்க்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தை நடத்துவதை விட முற்றிலும் மாறுபட்டது எனத் தோன்றுகிறது. மர்டோக் மற்றும் அவரைப் போன்றவர்களின் அழிக்கும் தன்மை உடைய, சமூக விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பு ஆகும். தங்களுக்காக மற்றவர்களை அவர்கள் இனியும் நம்பிப் பயனில்லை; அதுவும் புத்துயிர் பெற்றுள்ள திரு பிரௌன் போன்றவர்களை; மர்டோக் பிரதிபலிக்கும் சமூகச் சக்திகளுக்கு உண்மையான அரசியல் எதிர்ப்பு என்பதை விட அவர் தனிப்பட்ட காழ்ப்பினால்தான் வழிநடத்தப்படுகிறார்.

இப்பொழுது தேவைப்படுவது தொழிலாள வர்க்கம் சுயாதீன முறையில், தீவிரமாக அரசியல் வாழ்வில் தலையிடுவதுதான். இவ்வகையில்தான் மர்டோக் போன்ற சிறு குழுத் தன்னல ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடைய பாராளுமன்றத்தில் இருக்கும் எடுபிடிகளின் இரும்புப் பிடி முற்றிலுமாக உடைக்கப்பட முடியும்.