WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
ஐரோப்பிய
கடன் நெருக்கடி பற்றிய பிளவுகள் ஆழமடைகின்றன
By Stefan
Steinberg
15 July 2011
டிரோய்கா
எனப்படும் முக்கூட்டிற்குள்
—சர்வதேச
நாணய நிதியம்,
ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை—பெரும்
கருத்து வேறுபாடுகள் எழுந்து கொண்டிருக்கின்றன;
அதேபோல் தனிப்பட்ட ஐரோப்பிய நாடுகளிடையேயும் யூரோப்பகுதி சிதைதலை
எப்படித் தடுக்கப்படலாம் என்பது பற்றி முக்கிய வேறுபாடுகள் எழுந்துள்ளன.
மே
5, 2010ல்
ஏதென்ஸ் நகர மையத்தில் மோதல்கள்
புதன்கிழமையன்று வெளியிடப்பட்ட
IMF
ஊழியர் அறிக்கை ஒன்று யூரோப்பகுதி அதிகாரிகளை கண்டத்தின் கடன்
நெருக்கடியை எதிர்த்துப் போரிடும் நடவடிக்கைகள் பற்றி ஐக்கியப்பாட்டுடனான
நிலைப்பாட்டை வளர்க்காததற்காக குறை கூறியுள்ளது.
இந்த அறிக்கை ஐரோப்பிய நாடுகளிடையே ஐக்கியம் இல்லாத நிலை ஐரோப்பிய
நாடுகள் ஒழுங்கற்ற முறையில் கடனைத் திருப்பித்தர இயலாத தன்மையை எழுப்பியுள்ளது
என்று எச்சரித்துள்ளது.
IMF, ECB
மற்றும்
EU
அனைத்துமே கிரேக்கத்திற்கும் அயர்லாந்திற்கும்
2010லும்
போர்த்துக்கல்லிற்கு
2011
லும் பிணை எடுப்புக் கடன்களை அளிப்பதற்கு ஒன்றாகத் திட்டமிட்டன.
இப்பொழுது
IMF
பெருகிய முறையில் அதன் சீற்றத்தை ஐரோப்பிய பங்காளிகளுக்கு எதிராக-
குறிப்பாக ஜேர்மனிக்கு எதிராக
–
இயக்கிக் கொண்டிருக்கிறது.
IMF
அறிக்கைக்கு ஒரு நாள் முன்பு,
தற்போதைய புதிய நிர்வாக இயக்குனரும் முன்னாள் பிரெஞ்சு நிதி
மந்திரியுமான கிறிஸ்டின் லகார்ட் வெள்ளியன்று ஐரோப்பிய அரசாங்கங்களின் தலைவர்களுடைய
அவசர கூட்டத்திற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு தன் ஆதரவைக் கொடுத்துள்ளார்.
யூரோப்பகுதி நிதி மந்திரிகள் கூட்டம் திங்களன்று முடிந்ததை அடுத்து
மற்றொரு உச்சிமாநாட்டிற்கான திட்டம் உடனே வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை கூட்டத்திற்கான திட்டம் முதலில் ஐரோப்பிய ஒன்றிய குழுவின் தலைவர்
ஹெர்மன் வான் ரொம்பையினால் முன்வைக்கப்பட்டது;
இதற்கு பிரான்ஸ் மற்றும் பல முக்கிய நிதி நிறுவனங்களின் ஆதரவும்
இருந்தது.
ஆனால்
புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜேர்மனிய அரசாங்கம் தான் புதிய கூட்டம் எதையும்
எதிர்ப்பதாகத் தெளிவுபடுத்தியது.
அறிக்கை அப்பட்டமாகக் கூறியது:
“ஒரு
சிறப்பு உச்சிமாநாடு பற்றி உறுதியான திட்டங்கள் ஏதும் இல்லை.”
பேர்லினுக்கும் பாரிஸுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளின் முக்கிய ஆதாரம் வங்கிகள்
மற்றும் தனியார் அரசாங்கப் பத்திரம் வைத்திருப்போர் கிரேக்கத்திற்கான புதிய
மீட்புத் திட்டத்தின் செலவில் ஒரு பகுதியை ஏற்பது குறித்ததாகும்.
ஜேர்மனியத் திட்டம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியினால்
நிராகரிக்கப்பட்டது.
பிந்தைய அமைப்பு தன்னுடைய கணக்கில் கிரேக்கத்திற்குக் கடனாக பல
பில்லியன் டாலர்களைக் கொடுத்துள்ளது,
தனக்கும் மற்ற ஐரோப்பிய வங்கிகளுக்கும் பெரும் இழப்புக்கள் ஐரோப்பிய
நிதிய முறையில் தொடர்சங்கிலி விளைவுச் சரிவினால் ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறது.
புதன்கிழமை
வெளியிட்ட அறிக்கையில்
IMF
தன் ஆதரவை ஜேர்மனிய நிலைப்பாட்டிற்குக் குறிப்புக் காட்டியது;
ஒரு புதிய கிரேக்கப் பிணை எடுப்பிற்கு
“விரிவான
தனியார் துறை ஈடுபாடு தேவை”
என்று அறிவித்தது.
அதே நேரத்தில் கிரேக்கத்திற்கு புதிய பிணை எடுப்புப் பொதியில் பங்கு
பெறுவதை எதிர்க்கும் நிதியச் சந்தைகளின் சக்தியை ஒப்புக் கொள்ளும் விதத்தில்,
ஜேர்மனிய அரசாங்கம் தனியார் பத்திரம் வைத்திருப்போர்
“கணிசமான
தன்னார்வ அளிப்பை”
கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நம்பவில்லை என்று ஜேர்மனிய
செய்தித்தாள்
Handelsblatt
அறிவித்துள்ளது.
வளர்ந்து
கொண்டிருக்கும் யூரோ நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிய பெருகிய
பிளவுகள் நிதியச் சந்தைகள் முக்கூட்டை அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகளுக்குப் புதிய
பெரும் நிதிகளை அளிப்பதற்கு அழுத்தம் கொடுத்த இணைந்த நடவடிக்கைக்குப் பின்
வந்துள்ளன; அதே நேரத்தில் தனியார் முதலீடுகள் எவ்வித பிணை எடுப்பிற்கும் உதவி
கொடுக்கக் கட்டாயப்படுத்தப்படவில்லை.
கடந்த வார
இறுதியில் நிதியச் செய்தி ஊடகத்தில் இத்தாலிய அரசாங்கம் கடுமையான சிக்கன
நடவடிக்கைச் செயல்படுத்தும் திறன் பற்றி ஐயங்களை எழுப்பியது; இது இத்தாலியக் கடன்
பற்றி கிட்டத்தட்ட ஒரு பெரும் பீதியை ஏற்படுத்தியது.
கடந்த
ஓராண்டாக வங்கிகள் மற்றும் ஊகவணிகர்களின் முக்கிய இலக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்தை
சுற்றியுள்ள சிறு பொருளாதாரங்களான போர்த்துக்கல், அயர்லாந்து, கிரேக்கம்
ஆகியவற்றின்மீது உள்ளன. இப்பொழுது அவை ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய
பொருளாதாரத்தின்மீது தங்கள் கவனத்தை திருப்பியுள்ளன. இத்தாலியின் மொத்தக் கடன்
கிட்டத்தட்ட 1.8 டிரில்லியன் யூரோக்கள் என்பது கிரேக்கத்தின் கடன் தொகையை (340
பில்லியன் யூரோக்களை) மிக அற்பமாக்குகிறது; மேலும் இது ஐரோப்பிய பிணை எடுப்புப்
பொதி நிதியிலுள்ள மொத்த நிதியான 750 பில்லியன் யூரோக்கள் என்பதைப்போல் இரண்டரை
மடங்கு அதிகம் ஆகும்.
இத்தாலியின்
பத்திரச் சந்தையானது, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளை அடுத்து உலகில் மூன்றாவது
பெரிய சந்தை ஆகும். இத்தாலிய வங்கிகளில் இருந்து ஏராளமான நிதியத்தை எடுப்பது
சர்வதேச வங்கி முறையில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதையொட்டி, இத்தாலி
“தோற்க முடியாத அளவிற்குப் பெரிய நாடு”, அதே நேரத்தில் “காப்பாற்ற முடியாத
அளவிற்குப் பெரிய நாடு” என்று விவரிக்கப்படுகிறது.
திங்களன்று
கிரேக்கத்திலுள்ள நெருக்கடி மற்றும் புதிய இத்தாலிய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு
நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் ஐரோப்பிய நிதி மந்திரிகள் நிதிய சந்தைகளுக்கு ஒரு
சலுகை கொடுத்தனர்; இதன்படி அவர்கள் ஐரோப்பிய பிணை எடுப்பு நிதியில் உள்ள
இருப்புக்களில் இருந்து கிரேக்கக் கடனை நேரடியாக வாங்குவதன் வாய்ப்பு பற்றி
உடன்பட்டனர்.
கடன் தரம்
நிர்ணயிக்கும் நிறுவனங்கள் பின் அயர்லாந்தின்மீது தங்கள் கவனத்தைத் திருப்பின.
செவ்வாயன்று மூடிஸ் அயர்லாந்தின் கடனை திருப்பிச் செலுத்துதலில் அதிக ஆபத்துத்
தகுதிக்குக் கீழிறக்கியது; அயர்லாந்திற்கு 2013 முடிவில் இரண்டாவது பிணை எடுப்பு
நிதி தேவைப்படலாம் என்ற “பெருகிய வாய்ப்பு” இதற்கு மேற்கோளிடப்பட்டது. இதுபோன்ற
நடவடிக்கையைத்தான் மூடீஸ் கடந்த வாரம் எடுத்து போர்த்துக்கல்லின் தரத்தை அதிக
ஆபத்து தரத்திற்கு கீழிறக்கியது.
தரம்
பிரிக்கும் நிறுவனங்களின் தாக்குதல் புதன் அன்றும் தொடர்ந்தது; அன்று பிட்ச்
ரேட்டிங்ஸ் மீண்டும் கிரேக்க அரசாங்கக் கடனைக் கீழிறக்கி நாடு கடனைத் திருப்பிக்
கொடுக்க முடியாத நிலை என்பது “உண்மையாக ஏற்படக்கூடிய நிகழ்வு” எனத் தான் கருதுவதாக
தெரிவித்தது.
நிதிய
உயரடுக்கின் திமிர்த்தனம், ஐரோப்பா முழுவதிலுமுள்ள அரசாங்கங்களுக்கு ஆணைகளை இடுவது
என்பது, ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தலைவரான பிலிப் மேஸ்டாட்டால் சுருக்கமாக
கூறப்பட்டது. இந்த வார இறுதியில் ஐரோப்பிய தலைவர்களின் புதிய அவசரக்கால உச்சிமாநாடு
தேவை என்பதற்கு ஆதரவு தெரிவிக்கையில், அவர் கூறினார்: “சந்தைகள் உறுதியற்ற தன்மையை
வெறுக்கின்றன. ஒரு நிலைமை தெளிவாக இல்லை என்றால் சந்தைகள் மோசமானவற்றைத்தான்
சிந்திக்கின்றன. எனவே அவற்றிற்கு மறு உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும், அது
தெளிவுடன் கொடுக்கப்பட வேண்டும்.”
ஆழ்ந்த
நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பெருகிய சமூக எதிர்ப்பு என்னும் நிலையில்,
ஐரோப்பிய அரசியல் வட்டங்களுக்குள்ளேயே காலம் கடந்துவிட்ட ஜனநாயக செயல்முறைகளை
குப்பைத் தொட்டியில் போட்டு சர்வாதிகாரவகை ஆட்சிக்கு ஆதரவு என்பதற்கான விவாதம்
வளர்கிறது.
ஜேர்மனியில்
இந்த விவாதம் பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்
Herfried
Münkler
இன் தலைமையில் நடக்கிறது; இவர் முன்னதாக “நொண்டி வாத்து ஜனநாயகம்”
என்று விவரித்த முறையில் அவருடைய குறைகூறலுக்காகப் பெயர் பெற்றிருந்தார்.
ஜேர்மனியில் மிக அதிகமாகப் படிக்கப்படும் இதழ் சமீபத்தில் அதன் பக்கங்களைப்
பேராசிரியருக்காகத் திறந்துவிட்டது; இவர் யூரோ நெருக்கடி பற்றிப் பேசுகையில்
தன்னுடைய அபிமானத் தலைப்பிற்கு மீண்டும் வந்துவிட்டார்.
Der
Spiegel
க்கு
எழுதிய
“அதிகாரக்
குவிப்பிற்கான தேவை”
என்ற தலைப்பைக் கொண்ட கட்டுரை ஒன்றில் முங்கலர்
“தற்போதைய
ஐரோப்பிய ஒன்றியம் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகள் இருந்தபோதிலும்,
ஜனநாயக முறை என்பது ஒரு சரியான விடை அல்ல”
என்று எழுதியுள்ளார்.
இப்பொழுது
தேவைப்படுவது
“ஒரு
வலுவான,
சக்திவாய்ந்த மையத்தை கொண்ட”
ஐரோப்பாதான் என்று முங்கலர் கூறினார்.
இல்லாவிடில் இவை அனைத்தும்
“தோற்றுவிடும்”
என்று அவர் எச்சரித்தார்.
அவர்களுடைய
தவறுகள் இருந்தபோதிலும்,
“உயரடுக்கினர்தான்
ஐரோப்பாவை ஒன்றாக வைத்துக் கொண்டிருக்கின்றனர்”
என்று முங்கலர் வலியுறுத்தியுள்ளார்.
“ஜனநாயகத்தைப்
பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக,
உயரடுக்கினரின் திறன்களை முன்னேற்றிவிக்கக் கூடிய வழிவகைகளை நாம்
காண வேண்டாமா?
என்று அவர் தொடர்ந்து எழுதியுள்ளார்.
ஐரோப்பியத்
தலைவர்கள் அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்திற்கு அறைகூவும் திறனுடைய ஐரோப்பிய தரம்
பிரிக்கும் நிறுவனங்களை தோற்றுவிப்பதில் தவறிவிட்டதற்காக முங்கலர் குறிப்பாக
ஐரோப்பிய தலைவர்களைக் குறைகூறியுள்ளார்.
இக்கட்டுரை
ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஒரு செல்வாக்கு மிக்கப் பிரிவின்
சிந்தனை பற்றிய உட்பார்வையை அளிக்கிறது.
பேர்லினிலுள்ள முக்கிய சமூக ஜனநாயக மற்றும் பசுமைக் கட்சி அரசியல்
வட்டங்களுடன் முங்கலர் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது. |