சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Killing of Karzai’s brother deepens US crisis in Afghanistan

கர்சாய் சகோதரர் கொலை செய்யப்பட்டமையானது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நெருக்கடியை தீவிரமாக்குகிறது

By Bill Van Auken
13 July 2011
Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் அரைச் சகோதரரான அஹ்மத் வாலி கர்சாய் செவ்வாயன்று கொலையுண்டமையானது முக்கிய தென்மாநிலமான காந்தகாரில் அமெரிக்க மூலோபாயத்திற்கு ஒரு தீவிர அடியாகும்.

இச்சக்தி வாய்ந்த காந்தகார் போர்ப் பிரபுவும் நீண்டகாலமாக அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி...யின் சொத்துமானவர் மார்பிலும் தலையிலும் அவருடைய நெருங்கிய ஆட்களில் ஒருவராலேயே சுடப்பட்டார், சுட்டவரோ கர்சாயிக்கு மிகவும் விசுவாசமான என்று கருதப்பட்ட தளபதிகளில் ஒரு குடிப்படை துப்பாக்கி நபர் என விவரிக்கப்படுகிறது.

இப்படுகொலைக்கு தாலிபன் பொறுப்பேற்றது; சுட்டவர் சர்தார் மஹம்மத்நீண்ட காலம் முன்னரே இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்றும் இறுதியில்இன்று இலக்கைச் சாதிக்கும் வாய்ப்பை எட்டினார்என்றும் அது கூறியது. இக்கொலை தன்னுடையமிகப் பெரிய சாதனைகளில்ஒன்று எனவும் அது விவரித்தது. கர்சாயை சுட்ட உடனயே மற்ற மெய்காவலர்களால் மஹம்மது சுடப்பட்டு விட்டார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக மஹம்மத் கர்சாய்க்காக பணிபுரிந்து வந்தார் எனக் கூறப்படுகிறது; காந்தகார் நகரத்தின் தெற்கேயுள்ள டண்ட் மாவட்டத்தில் குடும்பத்தின் கிராமமான கர்சைச் சுற்றி சாலைத் தடைகளை ஏற்படுத்திக் கட்டுப்படுத்தும் குடிப்படைகளுக்கு தலைமை தாங்கியவர்.

ஆரம்பத்தில் இக்கொலை ஒரு தனிப்பட்ட பூசலின் விளைவு என்ற கருத்துக்கள் இருந்தன. ஆனால் காந்தகாரின் இடைக்கால பொலிஸ் தலைவர் தளபதி அப்துல் ரசிக் விளக்கியுள்ளபடி படுகொலை செய்தவர் கர்சாயின்நல்ல நண்பராக இருந்தவர். காந்தகார் நகரத்தில் நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அவர் சில சந்தேகத்திற்கு உரியவர்கள் படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர், விசாரணைக்கு உட்பட்டுள்ளனர் என்று அறிவித்தார்.

அவருடைய முன்னோடி ஒரு தாலிபன் ஊடுருவல்காரரால் ஏப்ரல் 15ம் திகதி கொலை செய்யப்பட்டபின், இப்பதவியை எடுத்துக் கொண்ட ரசிக் சமீபத்திய கொலையில் ஒருவெளிநாட்டுக் கரத்தின் ஈடுபாடு இருப்பதைத் தள்ளிவிட முடியாது என்றும் கர்சாயியின் மரணத்தைப்பெரும் இழப்புஎன்றும் விவரித்தார்.

ஆக்கிரமிப்பு அமெரிக்க அதிகாரிகளுக்கு அபிமானியான ரசிக்கர்சாய் போன்றேஇப்பிராந்தியத்தில் பெரும் ஆதாயம் கொடுக்கும் அபின் வணிகத்துடன் தொடர்புபடுத்தப்படும் அறிக்கைகளில் பிணைந்துள்ளார்; முறையாக நீதிக்குப்புறம்பான கொலைகளை, சந்தேகத்திற்குரியஎழுச்சியாளர்களைச்செய்வதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

காந்தகார் கவர்னர் தூர்யலை வேசா ஒரு படி மேலே சென்று இப்படுகொலைஅனைவருக்கும் ஒரு பேரழிவு என்று கூறி, கர்சாய்இப்பகுதியில் அமைதியையும், உறுதிப்பாட்டையும் கொண்டுவருவதற்கு உதவினார்என்று வலியுறுத்தினார்.

உண்மையில், மாநிலத்தின் நடைமுறை கவர்னர் மாதிரியும், இன்னும் கூடுதலான அதிகாரத்துடனும்தான் கர்சாய் செயல்பட்டு வந்தார். “காந்தகாரின் அரசர்என்று விவரிக்கப்பட்ட அவருடைய உத்தியோகபூர்வ அதிகாரப் பெயர் மாநிலக் குழுவின் தலைவர் என்பது ஆகும். ஆனால் அவருடைய அதிகாரம் அவருடைய சகோதரரின் மத்திய அரசாங்கத்துடனான உறவு, மற்றும் பல தனியார்மய பாதுகாப்பு நிறுவனங்களை அவர் கட்டுப்படுத்தியது ஆகியவற்றில் இருந்து வெளிப்பட்டது. இந்நிறுவனங்கள் பொருட்கள் விநியோக வாகனத் தொடர்கள் மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்கள் மீது கிட்டத்தட்ட ஏகபோக உரிமையை அவர் கொண்டிருந்தார்.

அவருடைய இயக்கத்தின்கீழ் இருந்த ஆயுதமேந்திய குடிப்படைகளில் காந்தகார் தாக்கும் படை என்ற இரகசியப் பிரிவும் இருந்தது; இது சி... மற்றும் அமெரிக்கச் சிறப்புப் படைகளின் கொலைக் குழுவுடன் சந்தேகத்திற்குட்படும் எழுச்சியாளர்களைக் கொலை செய்பவற்றுடன் இணைந்து செயற்பட்டது.

அஹ்மத் கர்சாய் மில்லியன் கணக்கில் பணத்தை ஒப்பந்தக்காரர்களை மிரட்டிப் பெற்றார் என்றும், மிக ஆதாயம் தரும் நில, நீர் ஆதாரங்களை எடுத்துக் கொண்டார் என்றும் வெளிநாட்டுக் கடன்கள், உதவித்தொகைகள் ஆகியவற்றில் ஏகபோக உரிமை பெற்றிருந்தார் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இளம் கர்சாய் தன்னுடைய சகோதரர் ஜனாதிபதி ஹமித் கர்சாய்க்கு முக்கிய ஆதரவையும் கொடுத்தார். 2009ம் ஆண்டு ஹமித் கர்சாய் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தேர்தல் முடிவுகளில் தில்லு முல்லுகள் செய்வதற்கும் உதவினார்.

விக்கிலீக்ஸ் கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட ஜூன் 2009 இரகசிய ராஜதந்திரத் தகவல் தந்திகளின்படி ஆப்கானிஸ்தானிலுள்ள அதிகாரிகள் ஜனாதிபதியின் சகோதரர் பற்றித் தெளிவான சித்திரத்தை அளித்துள்ளனர்: “காந்தகாரில் அனைத்தையும் இயக்குபவர் என்ற முறையில் அஹ்மத் வாலி கர்சாய் (AWK) பொருளாதார ஆதாரங்கள், உரிமையாளர் தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு அணுகுதல் என அனைத்திலும் மேலாதிக்கம் கொண்டுள்ளார். காந்தகாரை நடத்துவதின் உண்மையான செயற்பாடுகள் பலவும் பொதுப் பார்வையில் நடைபெறுவதில்லை. அவை AWK ன் கீழ் செயல்படுகின்றன. முறையான அரசாங்கக் கருவிகளுக்கு இணையான அமைப்புக்கள் மூலம், அரசாங்க நிறுவனங்களை நெறியான, நெறியற்ற செயற்பாடுகளை நடத்த, பாதுகாப்பு அளிப்பதின் மூலம் அவை நடத்தப்படுகின்றனஎன்று தகவல் தந்தி ஆவணங்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல் தந்தி இளம் கர்சாயை காந்தகாரின்போட்டியற்ற வலுவான நபர் என்று விளக்குகிறது; அதே நேரத்தில் அவர் ஆழ்ந்த ஊழல்களில் ஈடுபட்டதால், “காந்தகாரில் பரந்து இகழ்வுபெற்றிருந்தார்என்பதையும் ஒப்புக் கொள்ளுகிறது. “காந்தகார் மாநிலக் குழுவின் தலைவர் மற்றும் தெற்கே ஜனாதிபதியின் சொந்தப் பிரதிநிதி என்ற அரசியல் பங்குகளை அவர் இணைந்திருந்த தன்மையின் முக்கிய நோக்கம் கர்சாய் இனத்தின் செல்வக்கொழிப்பு விரிவாக்கப்பட்டு, நிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும் என்றும் தகவல் தந்தி கூறுகிறது.

அக்டோபர் 2009ல் நியூ யோர்க் டைம்ஸ்  இரு பெயரிட விரும்பாத அமெரிக்க ஆதாரங்களை மேற்கோளிட்டு கர்சாயின் நெருக்கமான தொடர்புகள் எவ்வாறு ஹெரோயின் போதைப்பொருளுடன் இருந்தது மற்றும் 2001ல் இருந்து சி...யின் நிதியுதவியையும் பெற்றுவந்தார் என்பது பற்றி விரிவாக தகவல்களைக் கொடுத்தன. அமெரிக்க இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் இளம் கர்சாய் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்; ஏனெனில் அவருடைய ஊழல் மிகுந்த நடவடிக்கைகள் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கும் கர்சாய் ஆட்சிக்கும் வெறுப்பை வளர்ந்திருந்தன.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரண்டாவது தகவல் தந்தி, பெப்ருவரி 2010ல் எழுதப்பட்டது, அமெரிக்கத் தூதரக, இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள்குற்றம் சார்ந்த, ஊழல் மிகுந்த ஆப்கானிய அதிகாரிகளுக்கு எதிராகஎத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விவாதித்ததைப் பற்றி அக்கூட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாகமூன்று முக்கிய ஆப்கானியத் தீய செயற்பாட்டாளர்களுக்குஎதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி அது குவிப்புக் காட்டியது: தற்பொழுது காந்தகாரில் பொலிஸ் தலைவராகவுள்ள அப்துல் ரசிக், (இப்பொழுது படுகொலை செய்யப்பட்டுவிட்ட) அஹ்மத் வாலி கர்சாய் மற்றும் அண்டை மாநிலமான ஹேமண்டில் அப்பொழுது பொலிஸ் தலைவராக இருந்த அசதுல்லா ஷெர்சத் ஆகியோரே அவர்கள்.

ஒரு மாதத்திற்குப்பின், பெயரிடப்படாதமூத்த அமெரிக்க இராணுவ அதிகாரிஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தான் அஹ்மத் கர்சாய்இங்கிருந்து அகற்றப்பட வேண்டும்என விரும்புவதாகக் கூறினார்; ஏனெனில் அவர்பெரும் பிளவுகளை ஏற்படுத்துபவர்.” மேலும்அவரை எழுச்சியினுள் தொடர்புபடுத்துவதன் மூலம்தான்இராணுவம் அவ்வாறு செயற்படுத்த முடியும் என்றார்; “….அவரைப் பட்டியலில் சேர்த்து, கைதுசெய்து, கொன்றுவிடலாம்என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாஷிங்டன் போஸ்ட் ஆப்கானிஸ்தானில் மூத்த அமெரிக்க இராணுவத் தளபதியாக அப்பொழுது இருந்து ஜேனரல் ஸ்டான்லி மக்கிறிஸ்டலுடன் நடந்த பேச்சுக்களைப் பற்றித் தகவல் கொடுத்தது. அப்பொழுது மக்கிறிஸ்டலிடம் அஹ்மத் வாலி கர்சாயின் ஊழல்களைப் பற்றி விளக்கியிருந்த கோப்புத் தொகுப்புக்கள் கொடுக்கப்பட்டன. கூட்டம் முடிந்த உடன் மக்கிறிஸ்டல் “AWK பற்றி மோசமான தகவல்கள் கொடுப்பதை நிறுத்தங்கள், அவரோடு ஒத்துழைப்புடன் செயல்படுங்கள்என்று கூறியதாக போஸ்ட் தெரிவிக்கிறது.

இது மக்கிறிஸ்டலை தொடர்ந்து அதன் பின்னர் அவரிடம் இருந்து பொறுப்பை எடுத்துக் கொண்ட ஜெனரல் டேவிட் பெட்ரீயஸின் கொள்கைகளைத்தான் நினைவுபடுத்துகிறது; இவர் இப்பொழுது ஆப்கானியக் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மத்திய உளவுத்துறை அமைப்பின் இயக்குனராகப் பதவியேற்றுள்ளார்.

அவருடைய கடைசி உத்தியோகப்பூர்வச் செயல்களின் ஒன்றாக பெட்ரீயஸ் ஆப்கானிய ஜனாதிபதியிடம் சகோதரரும் காந்தகாரின் போர்ப் பிரபுவுமான அஹ்மத்தின் இழப்பை ஒட்டிதன்னுடைய சொந்த பரிவுணர்வு, இரங்கல் அனுதாபம்ஆகியவற்றைத் தெரிவித்தார். மேலும் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் கொலையில் ஈடுபட்டுள்ளவர்களைநீதிக்கு முன் நிறுத்துவதற்கு அனைத்தையும் செய்யும்என்றும் உறுதியளித்தார்.

ஒபாமா நிர்வாகம் அதன் 30,000 துருப்புக்கள் விரிவாக்கத்தைத் தொடங்கிய நேரத்தில், காந்தகார், ஹெல்மண்ட் ஆகிய தெற்கு மாநிலங்களுக்கு எதிராகப் பெருகிய முறையில் என்ற வகையில், பெட்ரியஸ், மக்கிறிஸ்டல் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகள் அஹ்மத் கர்சாய் ஒதுக்கமுடியாத சொத்து என்று உறுதி கொண்டனர். இது அவருடைய வெளிப்படையான ஊழல் கர்சாய் ஆட்சி மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஆயுதமேந்திய குழுக்களுக்கு முக்கிய ஆதரவு ஆதாரத்தை அளித்தது என்ற அச்சத்தையும் மீறி இருந்த நிலைப்பாடு ஆகும்.

ஒரு அமெரிக்க அதிகாரி கடந்த ஆண்டு வாஷிங்டன் போஸ்ட்டிடம்  கூறினார்கர்சாயை அகற்றிவிட்டால், உங்களுக்கு ஒன்றும் நல்ல ஆட்சி ஏற்பட்டுவிடாது, உங்களுக்கு ஆட்சியே இல்லை என்ற நிலைதான் ஏற்டும். அமெரிக்காவிற்கு பல நல்லவற்றை அவர் செய்துள்ளார்; மிகத் திறமைசாலி.”

போர் 10 ஆண்டுகளாக நடைபெற்றும், வாஷிங்டன் இத்தகைய நபரிடம் நம்பிக்கை கொண்டிருந்தது, இப்போரின் குற்றம் சார்ந்த தன்மை, அரைக் காலனித்துவ தன்மை ஆகியவற்றிற்கு அசைக்கமுடியாத சான்று ஆகும்; அதேபோல் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் காபூலில் இருத்தப்பட்டுள்ள ஆட்சியின் ஊழல் ஆகியவற்றிற்கும் உண்மையான மக்கள் ஆதரவு இல்லை என்பதற்கும் சான்று ஆகும்.

இப்பொழுது அவர்அகற்றப்பட்டுவிட்டார்”, அவருடைய இறப்பையொட்டிநல்ல ஆட்சி தோற்றுவிப்பதற்கான வருங்கால வாய்ப்புக்கள் பூஜ்யம் என ஆகிவிட்டன.

கடந்த காலத்தில் பலமுறையும் அஹ்மத் கர்சாயைக் கொல்ல முற்பட்ட தாலிபன் உண்மையிலேயே செவ்வாய் படுகொலைக்குப் பொறுப்பா என்பது தெளிவில்லை. கடந்த காலத்தில் அது மற்றவர்களுடைய செயல்களுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது; இப்போர்ப் பிரபு கொலை செய்யப்பட வேண்டும் என விரும்பிய பலர் தக்க காரணத்துடன் உள்ளனர். இதில் போட்டிப் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், போட்டி பழங்குடித் தலைவர்கள் மற்றும் அவருடைய அமைப்பிலேயே அவருடைய இடத்தை குண்டர்கள் மாதிரியில் அகற்றிவிட்டு கைப்பற்ற நினைப்பவர்கள் என்ற திறனைக் கொண்டவர்கள் ஆகியோர் உள்ளனர்.

நியூ யோர்க் டைம்ஸ் இளம் கர்சாயின் இறப்பு தெற்கு ஆப்கானிஸ்தானின் பஷ்டுன் பிராந்தியத்தில்அதிகார வெற்றிடம்என்னும் அச்சுறுத்தலை எழுப்பியுள்ளது, “கட்டுப்பாடு கொள்வதற்கான போராட்டத்தைஏற்படுத்தியுள்ளது மற்றும் போட்டியாளர்கள் மேலாதிக்கம் பெறுவதற்குப் போரிடுகையில்இன்னும் இரத்தக் களரி ஏற்படலாம்என்ற கவலையைத் தெரிவித்துள்ளது.

கர்சாய் கொலைக்கு யார் பொறுப்பாக இருந்தாலும், இரு வாரங்களுக்கு முன்பு காபூலில் இன்டர் கான்டினென்டல் ஹோட்டல் மீது நடந்த தாக்குதலுக்குப் பின்னர், மற்றும் காந்தகார் பொலிஸ் தலைவர் மற்றும் பிற உயர்மட்ட நபர்கள் படுகொலைசெய்யப்பட்டதை அடுத்து இது வந்துள்ளது என்பது அரசாங்கமும் வெளிநாட்டு    ஆக்கிரமிப்புப் படைகளும்  உயர்மட்ட அதிகாரிகள், ஆதரவாளர்களைக் காப்பாற்றும் திறன் அற்றவர்கள் என்ற மக்களின் உணர்வைத்தான் உறுதிப்படுத்துகின்றன.

அடுத்த ஆண்டு இறுதியில் 33,000 அமெரிக்கத் துருப்புக்களைத் திரும்பப் பெறுவதற்கான செயற்பாட்டிற்கு அவர்கள் தயாரிப்பு நடத்துகையில் ஒபாமா நிர்வாகத்திற்கும் இராணுவத்திற்கும் இப் படுகொலை அவை எதிர்கொள்ளும் நெருக்கடியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கிட்டத்தட்ட 70,000 அமெரிக்கத் துருப்புக்களும் மரைன்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நாட்டில் தொடர்ந்து இருப்பர் என்றாலும், ஆப்கானியப் பாதுகாப்புப் படைகள் மற்றும் ஆப்கானிய அரசாங்கம் எதிர்ப்பை அடக்குவதில் கூடுதல் பொறுப்பை எற்கும் என்ற நிலைப்பாட்டில்தான் திரும்பப் பெறுதல் தளம் கொண்டுள்ளது. அஹ்மத் கர்சாய் போன்ற நபர் கொண்டிருந்த பங்கு மற்றும் அவருடைய இறப்பு தூண்டிவிட்டுள்ள நெருக்கடி ஆகியவை ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்து வாஷிங்டன் இருத்தியுள்ள அரசாங்கத்தின் அழுகிய, இயலாத்தன்மையைத்தான் நிரூபிக்கிறது.

அஹ்மத் கர்சாய் காந்தகாரில் கொலைசெய்யப்பட்ட அன்றே, கிழக்கு லோகர் மாநிலத்தின் அதிகாரிகள் முந்தைய தினம் நேட்டோ வான்தாக்குதல் ஒன்று குறைந்தபட்சம் 16 பேரைக் கொன்றது என்று தகவல் கொடுத்தனர்.

பெண்கள், குழந்தைகள் உட்பட 12 குடிமக்கள் நேற்று இரவு நேட்டோ விமானங்கள் இரண்டு வீடுகளை இலக்கு வைத்துத் தாக்கியதில் இறந்து போயினர் என்று வட்டாரப் பொலிஸ் அதிகாரி AFP இடம் கூறினார். தாலிபனைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட நான்கு பேரும் இத்தாக்குதலில் இறந்தனர் என்று அதிகாரி கருதுகிறார். இத்தாக்குதல் தாலிபன் உறுப்பினர்கள் கூட்டம் நடத்தியது எனச் சந்தேகிக்கப்பட்ட வீட்டின் மீது நடத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது; ஆனால் தாக்குதல் அண்டை வீடு ஒன்றையும் அழித்துவிட்டது.

இப்பயங்கரத் தாக்குதல் தென்கிழக்கு கோஸ்ட் மாநிலத்தில் நடந்த, எட்டு குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 13 குடிமக்களைக் கொன்ற மற்றொரு வான்வழித் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குள்ளேயே நடந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ போர் விமானங்கள் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்கள் எழுச்சியின் தொடக்கத்திற்கு பின் கணிசமாக அதிகரித்துள்ளன. அமெரிக்க தரைப்படைகள் விலகி, ஆக்கிரமிப்பு அதிகமாக வான் சக்தியை நம்புகையில், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுரையாசிரியர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்.

What are US troops dying for in Afghanistan?