WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
PSA auto workers protest plant closures in France
ஆலை
மூடல்களை எதிர்த்து பிரான்சில் கார்த்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்
By Antoine Lerougetel
11 July 2011
Back to
screen version
ஜூலை
7ம் திகதி வடக்கு
பிரான்சில்
Nord-Pas de Calais
பிராந்தியத்திலுள்ள
Hordain பகுதியில்
Sevelnord ல் உள்ள
PSA Citroen-Peugeot
கார்த் தயாரிப்பு
ஆலையிலுள்ள தொழிலாளர்கள்
2015ல்
திட்டமிடப்பட்டுள்ள ஆலை மூடுதலுக்கு எதிராக
Valenciennes
ல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கசியவிடப்பட்டடுள்ள ஆவணங்கள்
PSA அதன் ஆலைகள்
மூன்றை மூட இருப்பதைக் காட்டுகின்றன.
இதையொட்டி
2,800 வேலை
இழப்புக்கள் கூட்டாக சொந்தமாகவுள்ள
PSA/Fiat Sevelnord
ஆலையிலும்
பாரிஸுக்கு வடக்கே தொழிலாள வர்க்க
Seine-Saint-Denis
பகுதியிலுள்ள
Aulnay-Sous-Bois
ஆலையில் 3,600
வேலை இழப்புக்களும்
ஏற்படும்.
இத்திட்டம் ஒருவேளை
Sevelnord ஐப்
போதுமான நிதி இருந்தால் மூடாமல் இருக்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது.
மாட்ரிட்டில்
3,100
தொழிலாளர்களைக் கொண்ட இது மூன்றாவது
Peugeot ன் ஆலை
ஆகும்.
ஆவணங்களை
பார்க்கும் வாய்ப்புப் பெற்ற
Médiapart
வலைத் தளத்தின்படி,
இந்த மூடல்கள் ஜூன்
2009ல்
PSA ன் தலைவராக
நியமிக்கப்பட்ட
Philippe Varin உடைய
மூலோபாயத்தின் ஒரு பகுதி ஆகும்.
அவர்
“இது பிரெஞ்சுத்
தொழிலாளர்கள் தடையற்ற உலகப் போட்டிக்கு நடுவே இந்திய,
ஸ்லோவாக் அல்லது
துருக்கியத் தொழிலாளர்களுக்கு எதிரே நேரடியாக எதிர்கொள்ளும் தன்மையை ஒட்டிக்
கடைப்பிடிக்கப்பட வேண்டும்”
என்று கருதுகிறார்.
அவரினுடைய நோக்கம்
PSA ஒரு உலக
நிறுவனமாக, “இயன்றளவு
குறைவான உற்பத்திச் செலவுகளைக் கொண்டு ஆலைகளையும் தொழிலாளர் தொகுப்பையும்
“முறையாகச்
சீரமைப்பு செய்வதின் மூலம் போட்டியை எதிர்கொள்ள வேண்டும்”
என்பதாகும்.
Sevelnord
மூடுதலால் ஆலையில்
2,800 வேலைகளை
அகற்றுவது என்பது மட்டும் இல்லாமல்
10,000 வேலைகள்
பிராந்திய உதிரிப்பாகங்கள் மற்றும் துணை ஒப்பந்த நிறுவனங்களிலும் வேலைகள்
இழக்கப்படும்.
ஏற்கனவே
2008ல் இருந்து
பிராந்தியத்தின் கார்த் தொழில் தொழிலாளர் தொகுப்பு
58,000ல் இருந்து
2010ல்
50,000 ம் எனக்
குறைந்துள்ளதுடன் இன்னும்
20 முதல்
25 சதவிகிதம்
குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Douai
ல் அருகிலுள்ள
Renault கார்
ஆலையும்,
அதன் தொழிலாளர் எண்ணிக்கையை
5,500ல் இருந்து
4,000 எனக் குறைக்க
உள்ளது.
கடந்த
50 ஆண்டுகளில்
இப்பகுதி நிலக்கரிச் சுரங்கத் தொழில் மூடலையும் கண்டுள்ளது.
1970 ன்
கடைசிகளிலும்
1980 தொடக்க
ஆண்டுகளிலும்
Usinor ஆலை
மூடப்பட்டதை அடுத்து எஃகுத் தொழிலில்
7,000 வேலை
இழப்புக்கள் இழக்கப்பட்டதின் அதிர்ச்சியை இப்பகுதி இன்னமும் தாங்கிக்
கொண்டிருக்கிறது.
வியாழன்
நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது பல உள்ளூர் ஆலைகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.
Renault Douai, Faurecai, Totota, Thyssen Krupp, Merceds, Lisi Automotive
போன்ற கார்த் தயாரிப்பு
தொழிலின் பல பிரிவுகளிலுள்ள தொழிலாளர்கள் பங்கு பெற்றனர்.
இவர்களுடன்
Aulnay ல் இருந்து
வந்த 10
தொழிலாளர்கள் அடங்கிய
பிரதிநிதிகள் குழுவும் இருந்தது.
அவர்கள்
WSWS இடம் தங்கள்
ஆலையிலுள்ள தொழிற்சங்கங்கள் அன்று ஒருநாள் பணி நிறுத்தத்திற்கு மட்டுமே அழைப்பு
விடுத்திருந்ததாக கூறினர்.
ஸ்ராலினிச
பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு
(PCF) நெருக்கமான
தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின்
(CGT)
ஆதிக்கத்திற்கு உட்பட்ட
இந்த அணிவகுப்பில் உணர்வு சற்றே இறுக்கமாக இருந்தது.
இதற்கான
ஒலிக்குறிப்பு
Sevelnord குழுவின்
CGT பதாகையில்
காணப்பட்டது;
அதில்
“நேற்று
Usinor, இன்று
Sevelnord. ஒரு
நேரடி வேலை இழப்பு நான்கு மறைமுக இழப்புக்களுக்குச் சமம் ஆகும்”
என்று
எழுதப்பட்டிருந்தது.
உள்ளூர்
PCF இளைஞர் பிரிவு
துண்டுப் பிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்தது.
இது ஸ்ராலினிச
பொருளாதாரத் தேசிய நிலைப்பாட்டைப் பிரதிபலித்தது:
உற்பத்தியை அது
எதிர்த்து “வெளிநாடுகளில்
தொழிலாளர்களுக்கு கைநிறைய கற்கள் கொடுக்கப்படுகிறது”,
மேலும்
“வெளிநாட்டுப்
போட்டி என்னும் போலித்தனத்தினால்,
பெரும் முதலாளிகள்
நம் பொருளாதாரத்தை அழிக்கின்றனர்,
ஏனெனில் நாம்
வெளிநாட்டில் இருந்து வாங்கும் கட்டாயத்திற்கு உட்படுவதால்”
என்று அவர்கள்
அறிவித்தனர்.
சீனா
மற்றும் மக்ரெப்பில் வர்க்கப் போராட்டங்களின் எழுச்சியானது ஆலை மூடல்கள் மற்றும்
குறைவூதியங்களுக்கு எதிராகக் கூட்டுப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும்,
அவர்களுடைய வர்க்க
சகோதார,
சகோதரிகளுடன் ஐரோப்பாவிலும்
அமெரிக்காவிலும் ஒன்றாக இணைந்துகொள்ளயில் என்ற கருத்து இந்த ஸ்ராலினிச
துண்டுப்பிரசுரங்களில் காண்பதற்கில்லை.
உள்ளூர்த்
தொழிலாளர் தொகுப்பைச் சுரண்டுவதின் மூலம் மிக அதிக இலாபங்களைச் சம்பாதிக்க முடியும்
என்று முதலாளிகளுக்கு உத்தரவாதம் கொடுப்பதின் மூலம் வேலைகள் பாதுகாக்கப்படமுடியும்
என்ற பொய்,
CGT மற்றும் அதன்
அரசியல் நட்பு அமைப்புக்களானது பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு
கீழ்ப்படிந்திருக்கும் நிலையின் ஒரு பகுதி ஆகும்.
இந்த முதலாளித்துவ
சார்பு அமைப்புக்களிலிருந்து முறித்துக் கொண்டு,
தொழிலாள
வர்க்கத்தின் சுயாதீன அமைப்புக்களை கட்டமைப்பதின் மூலமும்,
ஒரு சர்வதேச,
சோசலிச முன்னோக்கு
உடைய போராட்டத்தை நடத்துவதின் மூலமும்தான்,
தொழிலாளர்கள் தங்கள்
வேலைகள்,
பணியிடங்கள் மற்றும் சமூக
உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
ஆர்ப்பாட்ட
அணிவகுப்பில் தொழிலாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொழிலாள வர்க்கமானது தொழிற்சங்க
அதிகாரத்துவம் மற்றும் அவற்றின் அரசியல் நட்பு அமைப்புக்கள் ஆகியவற்றுடன் கொண்டுள்ள
பெருகிய அதிருப்தி,
தேசியவாத
முன்னோக்கில் கொண்டுள்ள அதிருப்தி மற்றும் ஐரோப்பா,
சர்வதேச அளவில்
அவர்கள் காணும் தொடர்ந்த தோல்விகள் பற்றிய அதிருப்தி ஆகியவற்றை பிரதிபலித்தன.
கிரேக்கத்தின் மீது வங்கிகள் சுமத்திய மிருகத்தனச் சிக்கன நடவடிக்கைகள் மற்றும்
ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக அரசாங்கத்தின் தீவிர ஒத்துழைப்புடன்
செயல்படுத்தப்பட்டவை,
கிட்டத்தட்ட
30 சதவிகித ஊதியக்
குறைப்பை ஏற்படுத்தியவை பிரான்சிலுள்ள தொழிலாளர்களையும் அச்சறுத்துகிறது என்று
ஒப்புக் கொண்டனர்.
PCF
இளைஞர் இயக்கத்தின்
உறுப்பினரான
Jean-Noël ஐ
WSWS பேட்டி கண்டது;
இவர் கார் உருவ
அமைப்பு தயாரிப்பு பற்றி படித்துக் கொண்டிருக்கிறார்,
அடுத்த ஆண்டு
உயர்நிலைப்பள்ளியில் இருந்து வெளியேறியதும் கார்த்தொழிலில் ஒரு வேலை கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் உள்ளார்.
“இப்பொழுதுள்ள
நிலைமையில் இது மிகவும் கடினமாகும்”
என்றார் அவர்.
இந்நடவடிக்கை தினம்
எதையும் தீர்த்து வைக்கும் என்று அவர் நம்பவில்லை.
Clairoix ல்
கொன்டினென்டல் டயர் ஆலையில்
CGT செய்தது போல்
பணியில் இருந்து நீங்குவதற்கான ஊதியம் கொடுக்கப்பட்டுவிட்டால் வேலைகள்
விற்கப்பட்டுவிடலாம் என்ற கருத்தையும் எதிர்த்தார்.
“அனைத்து
மூடல்களையும் நிறுத்த நாம் போராட வேண்டும்”
என்றார் அவர்.
Jean-Noël
உடன் வந்திருந்த
PCF உறுப்பினர்கள்
கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் நட்புத் தொழிற்சங்கங்களும் சமூக
வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தை ஒரு சில பயனற்ற ஒரு நாள் வேலைநிறுத்தங்கள் என
வரம்பு கட்டிவிட்டனர்,
அதில் அரசியல்
முன்னோக்கு ஏதும் இல்லை,
இதையொட்டி
பாப்பாண்ட்ரூ பதவியில் தொடர உதவகின்றன என
WSWS சுட்டிக்
காட்டியதை எதிர்த்தனர்.
கார்த்
தொழிலுக்கு திருகாணிகள் தயாரிக்கும் லிசி கார்த் தயாரிப்பு ஆலையிலுள்ள பாட்ரிக்
Sevelnord ஆலை
மூடலால் உடனடியாகப் பாதிக்கப்பட மாட்டார் என்றும்,
“அனைத்துப்
பெருநிறுவனங்களும் மூடப்பட்டால் அது பேரழிவைத் தரும்.
முதலாளிகள் எங்களை
ஏதோ கருவிகளைப் போல் நடத்துகின்றனர்”
என்றார்.
பல நாடுகளில்
இருக்கும் தொழிலாளர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தப்படுவது குறித்து அவர்
முற்றிலும் எதிர்ப்பதாகவும் கூறினார்.
“தேச
அடிப்படையில் மட்டும் அனைத்துமே இருக்கக் கூடாது;
அது தேசிய
முன்னணியின் பொறிக்குள் விழுவது போல் ஆகும்
[பிரான்ஸிலுள்ள நவ
பாசிசக் கட்சி].
நமக்குத் தேவை
உலகளவில் குறைந்தட்ச ஊதியம்.
தொழிற்சங்கங்கள்
ஐரோப்பா தழுவியபோராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
CGT தலைவர்
பேர்னார்ட் தீபோ சமரசத்திற்கு உட்படுத்தப்பட்டுவிட்டார் என்று நான் உணர்கிறேன்…..அது
உண்மை,
ஏனெனில் கிரேக்க,
ஸ்பானியத்
தொழிலாளர்களுக்கு ஆதரவாக பதாகைகள் ஏதும் காணப்படவில்லை.
அவை இருந்திருக்க
வேண்டும்.
பங்குதாரர்களும்
வங்கியாளர்களும்தான் அனைத்தும் நடத்தி வருகின்றனர்.
இதை எதிர்த்து ஒரு
சர்வதேசப் போராட்டம் தேவை”
என்று அவர்
சேர்த்துக் கொண்டார்.
ஆறு
ஆண்டுகள் சமூகப் பணியாளராக வேலைபார்த்தபின் இப்பொழுது ஓராண்டு காலமாக பணியில்லாமல்
இருக்கும் டைசி கூறினார்:
“வெறும்
ஆர்ப்பாட்டங்கள் மட்டும்தான் என்றால்,
நாம் வெற்றிபெற
முடியாது.
நாம் பொருளாதாரத்தைத் தடை
செய்ய வேண்டும்;
2010ல்
சுத்திகரிப்பு ஆலைகள் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் நிறுத்தியது போன்றவை
அனுமதிக்கப்படக்கூடாது.
CGT பொலிசுடன்
சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தம் செய்தவர்களை வேலைக்குத் திரும்புமாறு
கட்டாயப்படுத்தியதில் ஒத்துழைத்தது என்பது உண்மை,
அதுவும் பொருளாதாரம்
தடைக்குட்பட்டிருந்தபோது.
அப்போராட்டம்
கீழ்மட்ட தொழிலாளர்களால் அல்ல,
தொழிற்சங்க
தலைவர்களால்தான் முறிக்கப்பட்டது.”
தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் கருவிகள் அல்ல,
புதிய வர்க்கப்
போராட்ட அமைப்புக்களை தொழிற்சங்கம் மற்றும் முன்னாள்
“இடதுகளில்”
இருந்து சுயாதீனமாக
கட்டமைத்தல் முக்கியம் என்ற பதில் பற்றி அவர் கூறினார்:
“நாம் அரசாங்கத்தை
அகற்ற வேண்டும்,
பிரான்சில் மட்டும்
அல்ல.
வெனிஜூலாவில் மக்கள்
ஷாவேசைப் பெரிதும் போற்றுகின்றனர்;
ஆனால் அங்கு
உண்மையில் எதுவும் மாறவில்லை.
அனைத்தையும்
தகர்த்து எறிந்துதான் புதியதைக் கட்டமைக்க வேண்டும்.
1979ல்
Usinor போல்தான்
மீண்டும் நடக்கிறது.
இது என்னைப்
பாதிக்கிறது.
என் குடும்பத்தில்
பலரும் வேலை இழந்துள்ளனர்;
இருக்கும் இடத்தை
விட்டு போக வேண்டியுள்ளது.” |