சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Murdoch and the rule of the oligarchy

மேர்டோக்கும் தன்னலக்குழுவின் ஆட்சியும்

Chris Marsden
11 July 2011
Use this version to print | Send feedback

ருப்பேர்ட் மேர்டோக்கின் News of the World ஊழியர்களால் ஆயிரக்கணக்கான தொலைபேசிகள் மற்றும் கணினிகளில் இருந்து திட்டமிட்டு தகவல் திருடுதல் அம்பலப்படுத்துப்பட்டுள்ளமை வெளியாகி இருப்பது பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் பெருநிறுவன மற்றும் அரசியல் உயரடுக்கில் பெருகியுள்ள குற்றத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 7,000 பேர் தங்கள் தொலைபேசிகள் ஒற்றுக் கேட்கப்பட்டதற்கு உட்பட்டனர், அவர்களுடைய அந்தரங்கம் பாதிக்கப்பட்டதற்கு உட்பட்டனர். அரசியல்வாதிகள், அரச குடும்ப உறுப்பினர்களில் இருந்து கொலையுண்டவர்கள் குடும்பங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் கொல்லப்பட்ட படையினரின் குடும்பம் வரை தனிப்பட்டவர்கள் பற்றிய தகவலை அறியும் நோக்கம் பரந்த அளவு பாதிப்பாளர்களை இலக்கு கொண்டிருந்தது.

இந்த ஊழல் பிரிட்டனில் முக்கிய கட்சிகள், பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் செய்தி ஊடகம் உட்பட அனைத்து உத்தியோகபூர்வ அமைப்புக்கள் மற்றும் ஜனநாயகத்தின் முழுவீழ்ச்சியையும்தான் வெளிப்படுத்துகிறது.  தொடர்ச்சியாக சட்டம் மற்றும் ஒழுங்கின்தேவை பற்றி முழங்கும் பிரித்தானியாவின் முக்கிய செய்தி நிறுவனம் தொழில்முறை தரத்தில்தகவல் திருட்டுக்கள் நடந்துள்ளன என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளபடி சட்டம் தீவிரமாக மீறப்படுவதை வழிநடத்துகின்றன. கிட்டத்தட்ட எந்த விதமான தண்டனையும் பெறாமல் இவை ஆண்டுதோறும் நடந்த வந்துள்ளன.

மேர்டோக்கின் நிர்வாகிகளும், நிருபர்களும் News International செயற்பாடுகளை விமர்சிக்கும் அல்லது மேர்டோக் குடும்பத்தின் கோபத்தை தூண்டும் வகையில் பேசும் அரசியல்வாதிகள் மற்ற முக்கிய பிரமுகர்களை அச்சுறுத்தல், மிரட்டுதல் ஆகியவற்றில் இழிவிற்கு பெயர்பெற்றவர்கள்.

இப்பொழுது ஒரு News of the World  நிர்வாகி இன்னும் கூடுதலான விசாரணைகளை தவிர்க்கும் வகையில் பாதிக்கும் சாத்தியப்பாடு கொண்ட மில்லியன் கணக்கான மின்னஞ்சல்களை அழித்துவிட்ட தகவல்களும் வெளிவந்துள்ளன.

கன்சர்வேடிவ், தொழிற்கட்சி என்னும் இரு முக்கியக் கட்சிகளும் இக்குற்றங்களில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. மேர்டோக்கின் பிரிட்டிஷ் செய்தி ஊடக வெளியீடுகளுக்கு, தாய் நிறுவனமான News International பொறுப்புக்கூற வேண்டும் என்று இவை அழைப்புவிடாததற்கு மட்டும் அல்ல, மேர்டோக் செய்தி ஊடகப் பேரரசுடன் அவை கொண்டுள்ள நெருக்கமான உறவுகளுக்கும்தான்.

ஒரு ஊழல்மிக்க நிருபரும் ஒரு தனியார் துப்பறிவாளர் ஆகியோர்தான் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை செய்துள்ளனர் என்ற மிக போலிக்குற்றத்தை ஏற்ற மத்திய பொலிசாரையும் இவை சவாலுக்கு உட்படுத்தவில்லை. அதே நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் News of the World  இடம் இருந்து பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் இலஞ்சம் வாங்கியுள்ளதும் வெளிப்பட்டுள்ளது.

செய்தித்தாள் மீது தொலைபேசித் தகவல் திருட்டிற்கு உட்பட்ட பிரமுகர்கள் கணக்கிலடங்கா உரிமையியல் வழக்குகள் பதிவு செய்த பின்னர்தான் ஜனவரி மாதம் அரசாங்க குற்றவியல்துறை பொலிஸிடம் News of the World  இன் தொலைப்பேசித் தகவல் திருட்டு பற்றி உள்ள தகவல்கள் பரிசீலிக்கப்படும் என்றும் ஒரு புதிய குற்றவியல் விசாரணை தேவையானஎன மதிப்பிடுவதற்குப் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தது.

வெள்ளியன்று பிரதம மந்திரி டேவிட் காமரோன் மேர்டோக் செய்தி ஊடகத்துடன் உத்தியோகபூர்வ பிணைப்பை ஒப்புக் கொள்ளும் வகையில், உண்மை என்னவென்றால், நாம் இதில் செய்தி ஊடகம், அரசியல் வாதிகள், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் என ஒன்றாக இருந்துள்ளோம், ஆம், அதில் நானும் அடக்கம்தான்என்றார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், ஒரு பொலிஸ் விசாரணை மேற்கோள்ளப்பட்டது. அது பொருத்தமற்றதும், போதிய அளவு செய்யப்படவும்வில்லை. தகவல் ஆணையரிடம் இருந்து அறிக்கைகள் வந்தபோதும் ஆனால் அவை பொருட்படுத்தப்படவில்லை. சிறப்புக் குழுக்கள் அறிக்கைகளும் தொலைப்பேசித் தகவல்திருட்டுக்களைப் பற்றி வந்தன, அவை பின்தொடரப்படவில்லை. இவை அனைத்திலும், எல்லா எச்சரிக்கைகள், எல்லா கவனங்களிலும் அரசாங்கம் அப்பொழுது ஏதும் செய்யவில்லை. வெளிப்படையாகக் கூறினால், எதிர்க்கட்சியும் எதுவும் செய்யவில்லைஎன்று அவர் கூறினார்.

இப்படி பொறுப்பு, தவறு தன்னுடையது எனக் ஒத்துக்கொள்ளும் காமரோனின் முயற்சி அவருடைய அரசாங்கத்திற்கு இந்த ஊழலால் ஏற்பட்டுள்ள சேதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கைதான். காமரோனின் தொடர்புகள் பிரிவுத் தலைவரும் News of the World இன் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கௌல்உசன் கைதுசெய்யப்பட்ட அதே காலையில்தான் இத்தகவலும் வெளிவந்துள்ளது. ஆனால் பொறுப்பை காமரோன் ஒப்புக் கொண்டுள்ளதோ, முன்னாள் தொழிற்கட்சி அரசாங்கங்களை  பொறுப்பிற்கு இழுப்பதோ மேர்டோக் பேரரசிற்கும் பிரிட்டனின் அரசியல் உயரடுக்கிற்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் இழிந்த உறவின் தன்மையை எள்ளளவுகூட நியாயப்படுத்தவில்லை.

மார்கரெட் தாட்சர் மற்றும் ஜோன் மேஜர் ஆகியோரின் கன்சர்வேடிவ் அரசாங்கங்களுடன் மேர்டோக் எப்பொழுதுமே தொடர்புபடுத்தப்படுபவர். எல்லாவற்றிற்கும் மேலாக, தாட்சரின் தொழிலாள வர்க்கத்தின் மீதான மிருகத்தனமான தாக்குதல் தொடர்பாக. லண்டன் நகரத்தின் மீதான கட்டுப்பாடுகளை அகற்றியது, பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு வரிக் குறைப்புக்கள், தனியார்மயமாக்குதல் ஆகியவற்றிற்காக அவர் அவ்வம்மையாரைப் பாராட்டினார். இவற்றில் இருந்து பலரையும் விட இவர் மிக அதிக ஆதாயம் அடைந்தார். News of the World இன் தாய் நிறுவனமான News International ஒரு இகழ்வான தொழிற்சங்கத்தை முறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, 6,000 அச்சுத் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ததோடு 1986ல் செய்தித்தாள் தயாரிப்புப் பிரிவை லண்டன் ஈஸ்ட் எண்டில் உள்ள வாப்பிங்கிற்கு மாற்றியது.

இதன்பின், மேர்டோக் தொழிலாள வர்க்கத்தின் மீது  தாக்குதல் நடாத்துவதற்கும் மற்றும் ஆளும் உயரடுக்கிற்கு செல்வம் சேர்ப்பதில் ஒரு கருவியாக டோரிக்கள் தங்கள் பயன்பாட்டை இழந்துவிட்டனர் என்று முடிவெடுத்தபின் அவரது ஆணையைச் செயல்படுத்த பெரும் ஆர்வத்துடன் இருந்த தொழிற்கட்சிக்கு தன்னுடைய ஆதரவை  மாற்றினார். மேர்டோக் அரசாங்கத்தின் கொள்கைகள் மீது ஆணையிட்ட விதத்தினால் முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயரின் செய்தி ஊடக ஆலோசகர் Lance Price மேர்டோக்கை மந்திரிசபையின் 24வது உறுப்பினர்என்றார். அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் உணரப்பட்டதுஎன்றும் பிரைஸ் சேர்த்துக் கொண்டார்.

ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் சட்டம் ஒழுங்கு முறிந்துவிட்டதுபற்றிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் செயற்பட்டியலை நிர்ணயித்ததது தானே என்று மேர்டோக்கே பகிரங்கமாக தன்னைப் பாராட்டிக் கொண்டார். மேர்டோக் செய்தி ஊடகம் இடைவிடாமல் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளது. மிகக் குறிப்பான முறையில் 2003ம் ஆண்டின் ஈராக் மீதான சட்டவிரோதப் படையெடுப்பிற்கு ஆதரவழித்தது. அமெரிக்க பிரிட்டிஷ் படையெடுப்புக் காலத்திற்கு முந்தைய நாட்களில் முன்று முறை பிளேயரே மேர்டோக்கிடம் தனியே தொலைபேசித் தொடர்பைக் கொண்டார்.

தற்போதைய தொழிற்கட்சி தலைவர் எட் மிலிபண்ட் இப்பொழுது News of the World ன் குறை கூறுபவராகக் காட்டிக் கொள்கிறார். கௌல்சன் மற்றும் மேர்டோக் செய்தி ஊடக நிர்வாகியான ரெபக் ப்ரூக்ஸுடனான காமரோனின் உறவுகளில் இருந்து பெரும் அரசியல் ஆதாயத்தைக் காண முயல்கிறார். இது ஒரு வெளிப்படையான மோசடி ஆகும்.

News of the World  தகவல் திருட்டு ஊழல் 2006ல் முதலில் வெளிவந்தது. உடனேயே மெட்ரோபாலிட்டன் பொலிசால் அது மறைக்கப்பட்டுவிட்டது. இதற்கு பிளேயர் அவரைப் பின்தொடர்ந்த கோர்டன் பிரௌன் ஆகியோரால் எவ்வித எதிர்ப்பும் காட்டப்படவில்லை. ஏப்ரல் 9ம் திகதி, பெயரிட விரும்பாத ஒரு முன்னாள் மந்திரி கார்டியன் செய்தித்தாளிடம் மேர்டோக் கடந்த ஆண்டு பிரௌனிடம் மூன்றாம் நபர் மூலம் செய்திகளை அனுப்பி அவரை பிரச்சனை பற்றிய அரசியல் சூட்டை தணிக்க உதவுமாறு கூறினார். அவருடைய நிறுவனத்திற்கு இது பெரும் சேதம் விளைவிக்கலாம் என்ற ஆபத்து இருந்தது எனத் தெரிவித்தார்என்றார்.

கடந்த மாதம்தான் மிலிபாண்டே News Internationals இன் ஆண்டுக் கோடைக்கால விருந்து லண்டனில் நடந்தபோது கலந்துகொண்டிருந்தார். அதில் நிழல் நிதிமந்திரி Ed Balls, அவருடைய இரு நெருக்கமான ஆலோசகர்கள் Tom Baldwin, Stewart Wood, நிழல் உள்துறை மந்திரி Yvette Cooper, நிழல் வெளியுறவு மந்திரி Douglas Alexander ஆகியோருடன் கலந்து கொண்டார். அப்பொழுது கார்டியன் காமரோன் மற்றும் அவருடைய மனைவி சமந்தா தலைமையில் இருந்து கன்சர்வேடிவ் குழு உறுப்பினர்களைவிட தொழிற்கட்சி பிரமுகர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் என்று கூறியது.

இந்த உறவுகள் பிரிட்டனில் உள்ள தேர்தல் வழிகளின் பெரும் போலித்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அரசாங்கக் கொள்கை மக்கள் விருப்பமான ஒரு கன்சர்வேடிவ் அல்லது தொழிற்கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதின் மூலம் உறுதி செய்யப்படுவதில்லை; மாறாக அனைத்துப் பெரிய கட்சிகளின் செயற்பட்டியலையும் நிர்ணயிக்கும் பில்லியனர்களின் தன்னலக்குழுவினால்தான் இயற்றப்படுகிறது. இக்குழுவில் மேர்டோக் குறிப்பிடத்தக்க வகையில் அவருடைய செய்தி ஊடகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலினால் ஒரு செல்வாக்குப் படைத்த உறுப்பினர் ஆவார்.

News International இன் ஊழியர்கள் இத்தகையை குற்றம்சார்ந்த நடைமுறையை தடையேதும் இன்றிப் பெருமளவில் செய்யும் திறன் பற்றி எவ்வாறு விளக்கமுடியும்?

பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் செய்தி ஊடகத்தின் அமைப்புக்கள் பொது மக்களின் நலன்களில் இருந்து முற்றிலும் பிரிந்து, வெளிப்படையான விரோதப் போக்கையும் கொண்டுள்ளன. இவை எந்த சட்டப்பூர்வ தடுப்பும் அற்ற சிறு தன்னலக்குழுவின் தனித் துறையாகிவிட்டன.

மேர்டோக்கே பிரிட்டனிலும் உலகிலும் மிகச் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகப் பரந்த முறையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளார். நிதிய ஒட்டுண்ணித்தனம் மற்றும் முன்னோடியற்ற சமூக சமத்துவமின்மையின் அடிப்படையில் வெளிப்பட்டுள்ள உலக நிதியத் தன்னலக்குழுவின் முன்மாதிரியான பிரதிநிதியாக அவர் உள்ளார்.

மேர்டோக் உள்ள மிகக் குறுகிய பெரும் செல்வந்தர் அடுக்கு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டின் மீதும் ஆணையிடுகின்றது. அவருடைய 175 க்கும் மேலான செய்தித்தாட்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், பிரிட்டனில் Sky, அமெரிக்காவில் Fox உட்பட, பரந்த முறையில் அரசியல் ஆளும்வர்க்கத்திற்குள் ஆட்சியாளரை தீர்மானிப்பவை எனக் கருதப்படுகின்றன.

குறிப்பிட்ட வகையிலான குப்பைச் செய்திகளை வழங்குபவர் மர்டோக் ஆவார். செல்வந்தர்கள் மற்றும் புகழ்பெற்றவர்களுடைய பாலியல் ஊழல்கள் மற்றும் இழிசெயல்கள் பற்றிய வலியுறுத்தல் பொதுமக்களை திசைதிருப்பவும் குழப்பவும் பயன்படுவதுடன் மிகவும் பிற்போக்குத்தனமான உணர்வுகளுக்கும் ஊக்கம் கொடுக்கின்றன.

அமெரிக்காவில் Fox News, New York Post ஆகியவை Sun, News of the World (ஞாயிறன்று மேர்டோக் இதை மூடிவிட்டார்) மற்றும் Sky என்று பிரிட்டனில் செயல்படுவதைப் போலவே பணிபுரிகின்றன. இதே நேரத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலையங்கப் பக்கம் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் மிகப் பிற்போக்குத்தனப் பிரிவுகளின் அரசியல் செயற்பட்டியலைத்தான் கூறுகிறது. மேர்டோக்கின் செய்தி ஊடகம் வலதுசாரி சமூகப் பிரச்சினைகளுக்கு அதன் தீர்வு, போருக்கு முழக்கம் இடுதல், தேசிய வெறி, தடையற்ற வர்த்தகத்தைபாராட்டுதல் ஆகியவற்றில் இடைவிடாமல் ஈடுபடுவதுடன் மில்லியன் கணக்கான மக்கள் நம்பியிருக்கும் சமூகப் பணிகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

இந்த உருவாக்கிய அரசியல் மற்றும் சிந்தனைப்போக்கின் மிகக் குறிப்பிடத்தகுந்த அழுகிய வெளிப்பாடு முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சிகளான பிரிட்டனின் தொழிற்கட்சி போன்றவற்றில் காணப்படலாம். அவை அனைத்தும் மேர்டோக்கின் வகைப்பட்ட அரசியலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொண்டு, 2008 நிதியச் சரிவிற்குப் பின் கோரப்பட்ட மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளின் வெட்கமற்ற பாதுகாவல் அமைப்புக்களாக வெளிப்பட்டுள்ளன.

News of the World அம்பலப்படுத்தியுள்ள குற்றச் செயல்களின் அளவு ஒரு முழுதான பொதுவிசாரணை தேவை என்பதைக் காட்டுகிறது. கௌல்சன், ப்ரூக்ஸ் மற்றும் மேர்டோக் உட்பட News International உடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணத்தின் கீழ் ஒரு குற்றவியல் விசாரணையின் பகுதியாக விசாரிக்கப்பட வேண்டும். அத்தகைய விசாரணையில் பிளேயர், பிரௌன், காமரோன் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகள் சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் அத்தகைய விசாரணை எதையும் நடத்தாது என்பது தெளிவு. தற்பொழுதுள்ள அரசியல் நடைமுறையின் கட்டுப்பாட்டின்கீழ் நடக்கும் எந்த விசாரணையும் மூடி மறைக்கும் தன்மையைத்தான் கொண்டிருக்கும். News International மற்றும் அதன் அரசியல் நடைமுறை மற்றும் அரசாங்க அமைப்புகளில் இருக்கும் கூட்டாளிகளை பாதுகாக்கவும் அது இலக்கு கொண்டிருக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சியின் தொடர்புபட்டுத்தான் செய்தி ஊடகப் பிரபுக்களின் கொள்கை முறை, சமூகத்தை அழிக்கும் செயல்கள் ஆகியவை நிறுத்தப்பட்டு நீதி பாதுகாக்கப்படமுடியும். அத்தகைய இயக்கம் தான் ஆளத்தகுதியற்றது என்று தன்னை நிரூபித்துள்ள உயரடுக்கிடம் இருந்து அதிகாரத்தை அகற்றுவதை தனது நோக்கமாக கொண்டிருக்கும்.