World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Jean-Luc Mélenchon selected as the French Communist Party’s presidential candidate

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக Jean-Luc Mélenchon தேர்ந்தெடுக்கப்பட்டார்

By Anthony Torres 
7 July 2011

Back to screen version

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) உறுப்பினர்கள் ஜூன் 16-18ல் 2012 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தங்கள் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இடது கட்சியின் (PG) இணைத் தலைவரான Jean-Luc Mélenchon 1974ல் பிரான்சுவா மித்திரோனுக்கு பின்னர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரல்லாத ஒருவர் ஒரு ஜனாதிபதிப் போட்டியில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர் ஆகிறார். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது கட்சி இரண்டும் இடது முன்னணிக்குள் (Front de gauche ) இணைந்து இயங்குகின்றன. மரபார்ந்த அரசியல் கட்சிகள் முற்றிலும் மதிப்பிழந்துள்ள ஒரு சகாப்தத்தில் இக்கூட்டு பெரும் வர்க்க மோதல்களுக்கு இடையே பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை பாதுகாக்க முயற்சிக்கிறது.

PCF ன் தேசிய செயலாளர் பியர் லோரன்ட் 130,000 உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப்படும் கட்சியின் வாக்குப் பதிவின் இறுதி முடிவை வெளியிட்டார். இதில் 70,000 உறுப்பினர்கள் சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் ஆவர். இறுதியில் வாக்களித்த 47,789 பேரில் 59.12 சதவிகித வாக்காளர்கள் Mélenchon உம் PCF உம் பாராளுமன்ற தேர்தலில் ஒரு பொதுவேலைத்திட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தலாம் என்ற   உடன்படிக்கைக்கும் மற்றும் Mélenchon ஜனாதிபதித் தேர்தல்களில் வேட்பாளராக நிற்கலாம் என்பதற்கும் ஒப்புதலைக் கொடுத்தனர்பியர் லோரன்ட் இந்த முடிவைஒரு தெளிவான, பெரும், உறுதியான விருப்பத் தேர்வுஎன்று பாராட்டினார்.

2012 ஜனாதிபதித் தேர்தல்களில் Mélenchon னின் வேட்பாளர் தன்மை 1974ல் குறிப்பாக PCF அதன் பின் அடைந்துள்ள சரிவையொட்டி மித்திரோனின் வேட்பாளர் தன்மையிலிருந்து வேறுபட்டது ஆகும். முன்பு அது முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு மேலாதிக்க நிலையைக் கொண்டிருந்தது. பின்னர் 1980 களில் மித்திரோன் அரசாங்கத்தில் கலந்துகொண்ட பின்னரும் 1991ல் சோவியத் ஒன்றியம் சரிந்த பின்னரும் அதன் நம்பகத்தன்மையை அது பெரிதும் இழந்துவிட்டது. மித்திரோனை போல் இல்லாமல், Mélenchon பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலில் ஒரு இரண்டாம் நிலையில் இருப்பவர். ஆனால் இறுதிப் ஆய்வில் இந்தச் செயற்பாடு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர உணர்மை வளர்ச்சியடைவதற்கு எதிராகப் போராடுவது என்ற நோக்கத்தில் அதே மாதிரியாகத்தான் உள்ளது.

1968 பொது வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுத்த பின்னர், பல தொழிலாளர்களின் சிந்தனைகளில் PCF இனை கம்யூனிசம் மற்றும் அக்டோபர் புரட்சியுடன் தொடர்புபடுத்தவது 1970களில் கட்சிக்கு பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்ததோடு, தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் தன் செல்வாக்கை இழப்பது பற்றி அது அஞ்சியது. தொழிலாளர்களின் பல அடுக்குகள் PCF ஆனது புரட்சிகரக் காலகட்டத்தில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வருவர் என்று அது அஞ்சியது. அத்தகைய விருப்பத்தை ஒருபோதும் கொண்டிராத PCF ஆனது தொழிலாளர்கள் அதன் இடதுபுறம் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்வது குறித்துக் கவனம் செலுத்தினர்.

PCF, வெகுஜனங்களின் முழு நனவிலிருந்து கம்யூனிசத்தை அகற்றும் நோக்கத்துடன் மித்திரோன் மற்றும் அவருடைய சோசலிஸ்ட் கட்சியின் (PS) பக்கம் திரும்பியது. அக்கட்சி ஒரு முதலாளித்துவத் வேலைத்திட்டத்தை அடித்தளமாக கொண்டிருந்தது, சீர்திருத்த முன்னோக்குகள் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் என்ற போலித் தோற்றத்தை வளர்த்திருந்தது. அரசியலளவில் ஆயுதம் இல்லாமல், தொழிலாள வர்க்கம் வேலைநிறுத்தங்களின் போது மிகத் தீவிரமாக இருந்த தொழில்களை தகர்த்துவிடும் உறுதி கொண்ட ஒரு முதலாளித்துவத்திடம் ஒப்படைத்தது. 1983ல் அதுசிக்கனத் திட்டத்திற்கு மாறியபின், மித்திரோன் அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்த முடிந்தது. அதே நேரத்தில் பல கார்த் தொழிற்சாலைகளும் எஃகு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

இன்று PCF மற்றும் PS இரண்டும் தொழிலாளர்களின் பார்வையில் ஆழ்ந்த மதிப்பிளந்துள்ளன. முந்தைய PS-PCF-பசுமைவாதிகளின்பன்முக இடதுஅரசாங்கம் 2002ல் வலதுசாரி சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்தது. அதன் பின் அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பொருளாதார நெருக்கடியின் காரணமாக தொழிலாளர்கள் தீவிரமயப்படுதல் அடைந்துள்ளதும், இந்த மரபார்ந்த கட்சிகளின் சரிவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடமும் முதலாளித்துவத்திற்கு சக்தி வாய்ந்த வர்க்க மோதல்களை பற்றிய அச்சங்களை கொடுத்துள்ளன.

கம்யூனிச அடையாளத்தை கொண்டிருப்பது இன்னமும் PCF க்கு சங்கடத்தை கொடுக்கிறது. சோசலிசம் பற்றிய வினாக்களை மக்கள் மனங்களிலிருந்து அது அகற்ற விரும்புகிறது. PS ல் உறுப்பினராக இருந்தபோது முன்னாள் தொழில்துறைப் பயிற்சி மந்திரியாக இருந்த Mélenchon, PCF ன் தீயகுணமிக்க அதிகாரத்துவத்துவம் என்ற பங்கை மிகத் திறமையுடன் செய்கிறார். தன்னுடைய உரைகளில் அவர் PCF தலைமையின் வார்த்தைஜால பாணியில் நன்கு நடிக்க கூடியதாக இருந்தாலும், வாடிக்கையான முதலாளித்துவஇடதுகட்சிகளுக்கு வெளியே எந்த அரசியல் எதிர்பார்ப்புக்களையும் ஊக்குவிக்கவில்லை.

இதுவும் இடது முன்னணியின் ஒரு செயற்பாடுதான்; இது குழப்பமானஇடதுஎன்னும் முத்திரையைக் கொண்டுள்ளது; ஆனால் தேசியவாத, இராணுவவாத முன்னோக்கிற்குத்தான் ஆதரவைக் கொடுக்கிறது. இடது முன்னணியில் ஸ்ராலினிச PCF, Mélenchon இன் PG மற்றும் Christian Piquet (முன்னாள் LCR, புரட்சிர கம்யூனிஸ்ட் கழகம்) இன் பப்லோவாத இடது ஐக்கிய குழுவும் உள்ளன.

மற்ற ஐரோப்பிய நாடுகளிலுள்ள இதேபோன்ற அமைப்புகளைத்தான் இடது முன்னணி மாதிரியாகக் கொண்டுள்ளது. ஜேர்மனியில் Die Linke, ஸ்பெயினில் Izquierda Unida போல். இந்த அமைப்புக்கள் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு கொடுத்து தொழிலாள வர்க்கம் ஆலை மூடல்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக முதலாளித்துவத்திற்கு எதிராக அரசியல் போராட்டம் நடத்துவதைத் தடுக்கிறது.

இடது முன்னணி என்னும்இடதுமுத்திரை இந்த அமைப்பின் இரு முக்கிய அரசியல் பிரமுகர்களை ஆராய்ந்த பின் தயக்கமின்றி உதறித்தள்ளப்படுகிறது. சார்க்கோசி அரசாங்கத்தின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு அவர்கள் இன்னும் கூடுதலான ஆதரவைத்தான் கொடுக்கின்றனர். ஒரு PCF பாராளுமன்ற உறுப்பினரான André Gerin பர்க்கா தடை பற்றிய குழுவில் பங்கு பற்றி, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் பற்றிய தன் இகழ்வுணர்வை நிரூபித்தார்.

ஜூன் 21ம் தேதிசட்டமன்ற உறுப்பினர் André Gerin PCF இனுள் குடியேற்றம் பற்றிக் குறைகூறி கருத்து விவாதத்தை உருவாக்குகிறார்என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் அவர் கீழ்க்கண்டவாறு கூறியதாக Le Monde மேற்கோளிட்டுள்ளது. அதாவதுநூற்றுக்கணக்கான நகரங்களில் தொழிலாள வர்க்க சமூகங்களில் ஏற்கவியலாத வெடிப்புத் தன்மை நிறைந்த நிலையை எதிர்கொள்ளும்போது சட்டபூர்வ குடியேற்றத்தை மட்டுப்படுத்துவதும்கூட முக்கியமாகும். நவ பாசிச தேசிய முன்னணியைத் (FN) தடுக்கும் ஒரே வழி, நிலைமை ஒன்றும் கட்டுப்பாட்டைவிட்டு போய்விடவில்லை என்று காட்டுவதுதான். எல்லாவற்றிற்கும் மேலாக பிரான்சிலும் ஐரோப்பாவிலும் மக்கள் தொகுப்பு சரிவடைவதை பற்றி இது விதிப்படி நடக்கும் என்று கருத காரணம் ஏதும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறினார். இத்தகைய கருத்து இடதினால் கடுமையாக தாக்கிப்பேசப்பட்ட உள்துறை மந்திரியை Claude Guéant இன் கருத்தினைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது.”

இக்கருத்தில் PCF மற்றும் FN எழுச்சியைஎதிர்ப்பதற்குஅதன் கொள்கைகளை ஏற்கும் திட்டங்களைக் கொண்டிருப்பதை Gerin காட்டுகிறார். FN தடைக்கு உட்படுத்துவதற்காக Gerin குடியேறுபவர்களை தாக்குதல், FN வலதில் இருந்து தாக்குதல் ஆகியவற்றிற்கு முயல்கிறார். இதுதான் ஜனாதிபதி சார்க்கோசியின் கொள்கையும் ஆகும். மேலும், André Gerin 2009ல் பர்க்கா எதிர்ப்புக் குழுவில் பங்கு பற்றியதற்காக ஒருபோதும் PCF னால் தடைக்குட்படுத்தப்படவில்லை.

Mélenchon பொறுத்தவரை, இவர் வெளிப்படையாக தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரம் மற்றும் சோசலிசத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு ஒரு சுயாதீனக்கொள்கை தேவை என்ற முன்னோக்கிற்கு விரோதப் போக்கைத்தான் காட்டுகிறார், “வாக்குப்பெட்டிகளின் மூலம் புரட்சிஎன்பதை விரும்புகிறார்.

லிபியாவிற்கு எதிரான பிரெஞ்சு ஆக்கிரமிப்புப் போருக்கு அவர் ஆதரவு கொடுத்துள்ளார். Wordpress ல் மார்ச் 28 வந்த கட்டுரை ஒன்று Mélenchon னுடைய போர் சார்பு அறிக்கைகளை சுருக்கமாகத் தெரிவிக்கிறது. “மார்ச் 10, 2011 அன்று அவர் ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் உறுப்பு நாடுகள் லிபியாவிற்கு எதிராகத் தலையிடத்தயாராக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். மார்ச் 20ம் திகதி, வான்வழித் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுத்து, அவர் Nouvel Observateur ல் நிக்கோலா சார்க்கோசிக்கு நன்றி செலுத்த வேண்டுமா என வியந்தார். கடைப்பிடிக்கப்படும் கொள்கை பிரான்சின் நலன்களுக்கு இயைந்து உள்ளது என்று அவர் லிபரேஷன் பத்திரிகைக்கு கூறினார்.”

இவருடைய பர்க்கா எதிர்ப்பு நிலைப்பாடுகளும் அதே போன்ற வலதுசாரித் தன்மையைத்தான் கொண்டவை. ஜனவரி 14ம் திகதி “Mélenchon அபராதங்களை விதிக்க விரும்புகிறார்என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் Le Figaro  Mélenchon னின் அறிவிப்புக்களை மேற்கோளிடுகிறது. “முழு உடை மறைப்பு அங்கி அணியப்படுவதை நாம் தடைக்கு உட்படுத்த வேண்டும். இது என்னுடைய ஆணித்தரமான நம்பிக்கை; ஆனால் சட்டம் குடியரசின் கொள்கைளையும் மதிக்க வேண்டும் என்ற முன்னிபந்தனை தேவை என்பது இயல்புதான்என்று பிரான்ஸ் 24 இற்கு ஐரோப்பா பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.”

குடியரசின் கொள்கைகளைக் காத்தல் என்ற போலித்தனத்தில் பர்க்கா அணியும் பெண்களை அபராதம் கட்டச் சொல்லுவது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீது அரசாங்கம் நடத்தும் தாக்குதல்கள் போன்றவைதான். தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி Mélenchon இகழ்வைக் காட்டும் வகையில் அரசாங்கத்தின் இனவெறிப் பிரச்சாரத்துடன் இணைந்து கொள்கிறார்இப்பிரச்சாரம்தான் FN பிரான்சின் உத்தியோகபூர்வ பொது வாழ்வில் பங்கு பெறும் ஓர் அரசியல் கட்சியாக நெறிப்படுத்துவதில் முடிந்துள்ளது.

ஐரோப்பிய எல்லைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் Mélenchon அழைப்பு விடுத்துள்ளார்இது பெரும் தேசியவாத குறிப்புக்களைக் கொண்டுள்ளது: “ஐரோப்பிய தடையற்ற சந்தைக்கு எதிரானதைப் போல், உலகில் ஆதிக்கம் செலுத்தும் அபத்தமான தடையற்ற சந்தைப் போக்குகள் அனைத்திற்கும் திறந்துவிடப்பட்டிருப்பது போல், நாம் ஐரோப்பிய ஒன்றிய எல்லைகள் இந்த அசாதாரண காலத்தில் சுங்க வடிகட்டும் முறையைக் கொள்ள வேண்டும்; இது சமூக மற்றும் சுற்றுச் சூழல் மாசுப் பொருட்கள் உள்ளே வருவதைத் தடுக்கும்.”

இடது முன்னணியில் PCF உடன் இணைந்து அவர் வேட்பாளராக நிற்பது என்னும் Mélenchon னின் சொற்கள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டவை அல்ல. மாறாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் மூலோபாய நன்களை பாதுகாக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன. சீனா போன்ற வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் இருந்து வரும் போட்டியை வரம்பிற்கு உட்படுத்தும் வகையில் ஐரோப்பிய வணிக முகாமை வளர்த்தல் என்னும் நோக்கத்தை கொண்ட அவருடைய அறிக்கைகளில் இருக்கும் தர்க்கம் குறிப்பிடத்தக்கது. இடது முன்னணியின் திட்டம் அடிப்படையில் 2012 ன் PS திட்டத்தைப் போல்தான் உள்ளது  பெரும் வர்க்கப் போராட்டங்களுக்கு முன்னதாக வலதுசாரிக் கொள்கைகளை ஏற்பதின் மூலம் இது தொழிலாள வர்க்கம் இடதிற்கு நகர்வதைத் தடுக்க முயல்கிறது.