WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஹம்பேர்ட்டோ லீல் கார்சியா அரசாங்கத்தால் சட்டவிரோதமாக கொலை செய்யப்படுகிறார்
Bill
Van Auken
9 July 2011
ஹம்பேர்ட்டோ
லீல்
கார்சியா
வியாழன்
அன்று
டெக்சாஸ்
மாநில
அரசாங்கத்தால்
கொலைசெய்யப்பட்டது
அமெரிக்க
முதலாளித்துவ
சமூகத்தின் ஆழ்ந்த
நெருக்கடியின்
அடையாளம்
ஆகும். இது
வெளிநாட்டில்
குற்றமிழைத்தலாலும்,
உள்நாட்டில்
காட்டுமிராண்டித்தனத்தாலும் குணாதிசயப்படுத்தப்படுகின்றது.
2
வயதில்
இருந்து
அமெரிக்காவில்
வசித்து
வரும்
38
வயதான
மெக்சிகன்
குடிமகனான
லீல் ஒரு
தூக்கிசெல்லக்கூடிய
படுக்கையில்
கட்டிவைக்கப்பட்டு
உயிர்
பறிக்கும்
மருந்துகள்
ஊசிபோடப்பட்டார்.
அவருடைய
இரத்தத்தில்
நச்சுக்
கலவை
புகுந்த
பின்
லீல்
இரு
முறை
“மெக்சிகோ
வாழ்க!”என
ஆர்ப்பரித்தார்.
16
ஆண்டுகளுக்கு
முன்பு
ஒரு
16வயது
பெண்ணை
கற்பழித்து
கொன்ற
வழக்கில்
இவர்
குற்றவாளியெனக்
கருதப்பட்டு
மரண
தண்டனை
விதிக்கப்பட்டார்.
அமெரிக்காவில்
மரணதண்டனை
விதிக்கப்பட்ட
இன்னும்
50
மெக்சிகோ
குடிமக்களுடன்
இவருடைய
வழக்கும்
சர்வதேச
நீதிமன்றத்தின்
தீர்ப்புப்படி
அனைத்து
51
வழக்குகளும்
மறு
ஆய்விற்கு
உட்படுத்தப்பட
வேண்டும்
என்று
கூறப்பட்டது.
ஏனெனில்
இவர்களுக்கு
மெக்சிகன்
தூதரகத்தில்
இருந்து
உதவி
மறுக்கப்பட்டிருந்தது.
வாஷிங்டன்
கையெழுத்திட்டுள்ள
வியன்னா
ஒப்பந்ததின்படி
தங்கள்
நாட்டிற்கு
வெளியே
இருந்து செய்யப்பட்ட
குற்றங்களுக்காக கைது
செய்யப்பட்ட
அனைவருக்கும்
அவர்களது நாட்டின்
தூதரகத்தை உதவிக்காக நாடுதல்
என்பது
அளிக்கப்பட்டுள்ள
உரிமையாகும்.
லீலைப்
பொறுத்தவரை,
மரணத்தை
எதிர்நோக்கியுள்ள
வரிசையில்
உள்ள
மற்றவர்களைப்
போலவே,
தூதரகத்தின் உதவியை
நாடுதல்
உண்மையிலானே
வாழ்வா-மரணமா
என்ற
விவகாரம்
ஆயிற்று. இவர்கள்
தங்கள்
உரிமைகள்
அமெரிக்கச்
சட்டத்தின்
கீழ்
புரிந்துகொண்டார்களா,
முறையான
வக்கீல்கள்
வசதியளிக்கப்பட்டிருந்தனரா
அல்லது
அது
போலின்றி,
லீப்
வழக்கு
போல்
நீதிமன்றம்
நியமித்த
வக்கீல்,
திறமையற்று
இருந்ததற்கும்,
பலமுறை
அறநெறி
மீறியதற்கும்
தற்காலிகப்
பணிநீக்கம்
செய்யப்பட்டு,
கண்டனத்திற்குட்பட்ட
ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டாரா என்பது
ஒரு
தீர்மானகரமான ஒன்றாகும்.
டெக்சாஸ்
ஆளுனர் ரிக்
பெரி
மற்றும்
அமெரிக்க
தலைமை
நீதிமன்றம்
5-4 என்ற
பெரும்பான்மையுடனும்
ஒபாமாவின்
வெள்ளை
மாளிகையும்
நீதித்துறையும் ஐக்கிய
நாடுகள்
மற்றும்
மற்றும்
மெக்சிகோ
அரசாங்கம்
கோரியிருந்தபோதிலும்
மரண
தண்டனையை
நிறுத்த
மறுத்துவிட்டனர்.
ஐ.நா.வின்
சிறப்புத்
தொடர்பாளர்,
நீதிக்குப்
புறம்பான
தூக்கிலிடுதல்
மற்றும்
சித்திரவதைப்
பிரிவைக்
கவனிப்பவர்
லீல்
கொலைசெய்யப்பட்டது
“ஒருதலைப்பட்சமாக
உயிரைப்
பறித்த
விஷயம்”
என்று
நியாயமாக
விவரிக்கப்படலாம்
என்றார். மேலும்
லீல்
முந்தைய
16 ஆண்டுகளில்
மரணத்தை
எதிர்நோக்கிய
வரிசையில்
இருக்கும்போது
இருந்த
நிலைமைகள்
“நடைமுறையிலுள்ள
சர்வதேச
சட்டத்தரத்தின்படி
மனிதத்தன்மையற்ற
இழிந்த
முறையாகும்”
என்றும்
விளக்கினார்.
டெக்சாஸ்
மற்றொரு
மெக்சிக
நாட்டுக்
குடிமகனை
சர்வதேச
நீதிமன்றத்
தீர்ப்பிற்கு
உட்பட்ட
நபருக்குக்
மரணதண்டனை
கொடுக்கப்பட்ட
நிகழ்வு
நடந்த
2008ல்
இருந்ததைப்
போலவே,
ஆளுனர் சர்வதேச
நீதிமன்றங்கள்
மற்றும்
சர்வதேச
சட்டங்கள்
டெக்சாஸ்
மாநிலத்திற்குப்
பொருந்தாதவை
என்று
உதறிவிட்டார்.
இந்த
மரண
தண்டனை
நிறைவேற்றம்,
குடியரசுக்
கட்சி
சார்பில்
ஜனாதிபதி
வேட்பிற்கான
தனது
முயற்சியில்
ஒரு
சொத்து
என்று
பெரி
நினைத்திருக்கலாம்.
இவ்வகையில்
அவர்
ஜோர்ஜ்
டபுள்யூ
புஷ்
மற்றும்
ஜனநாயகக்
கட்சியின்
பில்
கிளின்டன்
ஆகியோரின்
அடிச்சுவட்டைத்தான்
பின்பற்றுகிறார்.
அவர்கள்
இருவரும்
ஆளுனர்களாக
இருந்தபோது அப்போதைய தங்கள்
ஜனாதிபதிப்
பிரச்சாரத்தின் போது
நேரத்தை ஒதுக்கி இந்த
நீதிமன்றக்
கொலைகளை
மேற்பார்வையிட்டனர்.
இந்த
ஆண்டு
டெக்சாஸ்
மாநிலம்
கொலைதண்டனைக்குட்படுத்தும்
ஏழாம்
நபர்
லீல்
ஆவார்.
இப்பொழுதில்
இருந்து
செப்டம்பர்
மாதத்திற்குள்
இன்னும்
எட்டு
மரணதண்டனைகளை
அது
நிறைவேற்ற
உள்ளது.
மரணதண்டனை
கொடுப்பதை
இன்னும்
தக்க
வைத்துக்
கொண்டிருக்கும்
ஒரே
முன்னேறிய
முதலாளித்துவ
நாடு
அமெரிக்காதான்.
காட்டுமிராண்டித்தனத்தின்
மிச்சசொச்ச அடையாளச்சின்னம்
என்று
இந்த
அரசாங்கக்
கொலைமுறை
உலகின்
நாடுகளின்
மூன்றில்
இரு
பகுதிகளால்
அகற்றப்பட்டுவிட்டது.
சீனா,
ஈரான்,
சவுதி
அரேபியா
மற்றும்
பாக்கிஸ்தான்
ஆகியவற்றுடன்
மரணதண்டனை
செயல்படுத்தும்
உயர்
ஐந்து
நாடுகளில்
அமெரிக்காவும்
ஒன்றாகும்.
உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண
தண்டனை
தற்காலிகமாக
நிறுத்தப்பட
வேண்டும்
என்று
வாதிடுகையில்
ஒபாமா
நிர்வாகம்
மரண
தண்டனை
பற்றியே
குறைகூறவில்லை,
மரண
அறையை
முகம்
கொடுக்கும்
லீலின்
உரிமைகள்
சார்பாகவும்
முறையிடவில்லை.
மாறாக
இது
தேசிய
நலன்
என்னும்
அடிப்படையில்
மட்டுமேதான்
வாதிட்டது.
அமெரிக்காவில்
தலைமை
அரசாங்க
வக்கீல்
உயர்நீதி
மன்றத்தில்
கொலைக்கு
உட்படுவது
“மிக
அதிக
அளவில்
வெளிநாட்டுக்
கொள்கை
நலன்களுக்கு
சரி
செய்ய
முடியாத
தீமையை
விளைவிக்கும்”
என்று
கூறினார்.
மேலும்
“அமெரிக்காவில்
வெளியுறவுகளில்
தீவிர
விளைவுகளை
ஏற்படுத்தும்,
சட்டத்தை
செய்லபடுத்துவது
மற்றும்
மெக்சிக்கோவுடன்
பிற
ஒத்துழைப்பிலும்
தீவிர
விளைவுளை
ஏற்படுத்தும்”
என்று
முறையீடு
வாதித்தது.
சுருங்கக்
கூறின்,
ஒபாமா
நிர்வாகத்தின்
கவலைகள்
ஜனநாயக
உரிமைகள்
அல்லது
சர்வதேச
சட்டம்
பற்றிக்
கூட
தொடர்பு
கொண்டிருக்கவில்லை;
மாறாக
மெக்சிகோ
அரசாங்கத்துடன்
ஒரு
இரத்தக்களரியான
போதைமருந்துப்
போர்
நடத்துவதில்
தொடர்ந்த
ஒத்துழைப்பு
பற்றி
இருந்தது.
இது
பல
ஆயிரக்கணக்கான
உயிர்களைக்
குடித்துள்ளது;
அமெரிக்க-மெக்சிக
எல்லையை
இராணுவமயமாக்கி
எல்லைக்குத்
தெற்கே
தொழிலாளர்களை
சுரண்டிப்
பெரும்
இலாபம்
ஈட்ட
உதவுகிறது.
நிர்வாகத்தின்
மேல்முறையீட்டிற்கு
எதிர்ப்பு
தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தின்
வலதுசாரிகள் தீவிர
சீற்றத்துடன்
மரண
தண்டனை
வழங்கும்
பெரும்பான்மை மரணதண்டனை பற்றிய வெளியுறவுக்
கொள்கை
தாக்கங்கள் பற்றிய
“தடையற்ற
கருத்துரைகள்”,
பற்றி இழிந்த
முறையில்
குறிப்பிட்டு
வாதங்கள்
“சட்டபூர்வ
உரிமைகளைக்
கோருவதில்”
தோற்றுவிட்டன
என்ற
முடிவிற்கு
வந்தது.
நீதிமன்றத்தில்
பெரும்பான்மை
நிர்வாகத்தின்
கோரிக்கையான
மரண
தண்டனை
உலக
நீதிமன்றத்
தீர்ப்பினால்
பாதிக்கப்பட்டுள்ள
லீல்
மற்றும்
பிறர்
வழக்குகள்
மீண்டும்
விசாரிக்கப்பட
வேண்டும்
என்பது
பற்றிய
சட்ட
வரைவு
காங்கிரசில்
நிலுவையில்
உள்ளதால்,
நிறுத்தி
வைக்கப்பட
வேண்டும்
என்பதையும்
நிராகரித்தது.
அத்தகைய
வழக்குகள்
விசாரணை
“உண்மையிலேயே
முன்னுரிமை
பெற்றவை”
என்றால்,
அவற்றைக்
கட்டாயப்படுத்தும்
சட்டம்
இதற்குள்ளாக
இயற்றப்பட்டிருக்கும்”
என்று
அது
கூறியது.
இந்த
வாதம்
மறுப்பதற்கில்லை.
சர்வதேச
சட்டத்தை
நிலைநிறுத்துவது
மற்றும்
ஜனநாயக
உரிமைகளைக்
காப்பது
என்பது
அமெரிக்க
ஆளும்
தட்டின்
எப்பிரிவிலுமோ
அல்லது
அதன்
இரு
முக்கிய
கட்சிகளிடமோ
எவ்வகையிலும்
ஒரு
முன்னுரிமையாக
இல்லை.
உலகக்
கருத்து
மக்கள்
சர்வதேச
சட்டத்திற்கு
டெக்சாஸ்
கொலைத்தண்டனை
காட்டும்
இகழ்வு
ஒரு விதிவிலக்கல்ல.
மாறாக
இது
ஆழ்ந்து,
நீடித்துள்ள
அரசியல்
மற்றும்
சமூக
நிகழ்வுப்போக்குகளின்
விளைவுதான்.
ஐ.நா.
பட்டயம்
1945ன்
படி
சர்வதேச
நீதிமன்றத்தை
தோற்றுவிப்பதில்
வாஷிங்டன்
ஒரு
முக்கிய
பங்கைக்
கொண்டிருந்தது.
அதன்
அதிகார
வரம்பையும்
ஏற்றிருந்தது.
ஆனால்
நாற்பது
ஆண்டுகளுக்குப்
பின்,
நிக்கரகுவாவிற்கு
எதிரான
போரில்
CIA
யின்
அச்சுறுத்தல்
தொடர்பாக
அமெரிக்க
குற்றம்
இழைத்தது
என்று
நீதிமன்றம்
கண்டறிந்த
பின்னர்,
ரேகன்
நிர்வாகம்
நீதிமன்றத்தின்
பொது
அதிகார
வரம்பு
ஏற்கப்பட்டிருந்ததைத்
திரும்பப்
பெற்றுக்
கொண்டது.
அப்படியும்
அது
வியன்னா
உடன்படிக்கையை
பொறுத்தவரை
நீதிமன்றத்தின்
ஆணையை
ஏற்றது.
அவ்வுடன்படிக்கை
அமெரிக்கத்
தூதர்கள்
மற்றும்
குடிமக்கள்
என்று
வெளிநாட்டில்
இருப்பவர்களை
பாதுகாக்கும்
பயனுடைய
கருவியாக
கருதப்பட்டதால்
அந்த
ஒப்புதல்
இருந்தது.
ஆனால்
புஷ்
நிர்வாகம்
மெக்சிகன்
நாட்டு
மக்கள்
அமெரிக்க
மரணதண்டனைக்கு
உள்ளாகும் தீர்ப்பை தீர்மானிக்கும் அந்த
அதிகார
வரம்பையும்
திரும்பப்
பெற்றது.
கடந்த
தசாப்தத்தில்
வாஷிங்டன்
சர்வதேசச்
சட்டம்
மற்றும்
ஜனநாயக
உரிமைகளுக்கு
காட்டும்
இகழ்வுணர்வு
அதிகரித்துவிட்டது;
இதற்குக்
காரணம்
பல
சட்டவிரோத
ஆக்கிரமிப்புப்
போர்களை
நடத்தியதும்,
“அசாதாரணக்
கடத்தல்கள்”
போன்ற
குற்ற
வழிவகைகளை,
விசாரணையின்றி
காவலில்
வைத்தல்,
சித்திரவதை
போன்றவற்றையும்
நடத்தியதும்தான்.
இது
உள்நாட்டிலும்
அடிப்படை
ஜனநாயக
உரிமைகள் மீதான
இடையறா
தாக்குதலில்
பிரதிபலிக்கிறது.
இது
ஒரு
நிர்வாகத்தின்
சிந்தனைப்போக்கின்
விளைவுதான்
என்ற
கருத்து
ஏற்பதற்கில்லை;
ஏனெனில்
ஒபாமாவின்
வெள்ளைமாளிகையும்
புஷ்ஷின்
இராணுவ
வாதம்
மற்றும்
ஜனநாயக
விரோதக்
கொள்கைகளை
தீவிரமாகச்
செயல்படுத்துகிறது.
இந்த
வழிவகைகள்
அமெரிக்க
முதலாளித்துவத்தின்
வரலாற்றுத்
தன்மை
நிறைந்த
நெருக்கடியிலும்,
அமெரிக்க
சமூத்தை
சூழ்ந்துள்ள
சமூக
சமத்துவமின்மையிலும்
வேறூன்றியுள்ளன.
இதையட்டி
உண்மையான
ஜனநாயகம்
நடப்பது
அரிதாகவிட்டது.
நீதித்துறை
மூலம்
கொலை
மற்றும்
மில்லியன்
கணக்கான
அமெரிக்கர்கள்
சிறையில்
அடைக்கப்படுவது
என்பதுதான்
ஆளும்
உயரடுக்கு
கொள்ளும்
விடையிறுப்பாக
உள்ளது;
ஏனெனில்
அதனால்
பொருளாதார
மற்றும்
சமூக
நெருக்கடிக்கு
முற்போக்கான தீர்வை
வழங்க இயலாததுடன்,
மேலும்
அது
வர்க்கப்
போராட்டத்தையும்
மற்றும்
சமூக
எழுச்சியையும்
புதுப்பித்து
எழுமோ
என்றும்
அஞ்சுகிறது.
ஜனநாயக
உரிமைகளை
பாதுகாத்தலும்
அத்துடன்
மரண
தண்டனையை
இல்லாதொழிப்பதும்
அமெரிக்க
இராணுவம்,
உளவுத்துறை,
பொலிஸ்,
சிறை
அமைப்புகளை
அகற்றுவது
என்பது
சமூகத்தை
சோசலிசப்
போராட்டத்தின்
அடிப்படையில்
மறுசீரமைக்கும்
போராட்டத்தின் அடித்தளத்தில் தொழிலாள
வர்க்கத்தின் மூலம்தான்
செயல்படுத்தப்பட
முடியும். |