WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Germany offers bombs and military technology for war against Libya
லிபியாவிற்கு எதிரான போரில்
ஜேர்மனி குண்டுகளையும் இராணுவத் தொழில்நுட்பத்தையும் வழங்க முன்வருகிறது
Sven Heymanns
8 July 2011
Back to
screen version
நேட்டோப்
படைகள் நூறு நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த லிபியாவிற்கு எதிரான போரில் 5,000 க்கும்
மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இப்பொழுது முக்கிய போரிடும்
நாடுகளான பிரான்ஸும் பிரிட்டனும் வெடிமருந்துகள் பற்றாக்குறையுடன் உள்ளன. ஜேர்மனிய
அரசாங்கமும் பாதுகாப்பு மந்திரி தோமஸ் டி மசியர் (CDU\கிறிஸ்துவ
ஜனநாயக ஒன்றியம்) உடனடியாக இந்நிலையை சாதகமாகப்பயன்படுத்தி போருக்காக குண்டுகளையும்
இராணுவத் தொழில்நுட்பத்தையும் வழங்க முன்வந்துள்ளனர்.
Spigel
Online
தகவல்படி,
நேட்டோவின் தளவாட
நிறுவனமான NAMSA
(நேட்டோ பராமரிப்பு
மற்றும் பொருள் விநியோக அமைப்பு) எல்லா நேட்டோ உறுப்புநாடுகளும்
“தொழில்நுட்பம்
மற்றும் குண்டுகளுக்கும் பிற இராணுவத் தொழில்நுட்பத்திற்கான பாகங்களை”
வழங்குமாறு
வேண்டியது. ஜேர்மனிய பாதுகாப்பு மந்திரி இதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார்.
நேட்டோ இன்னும் முறைப்படியான வேண்டுகோளை கொடுக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும்
50
குண்டுத் தாக்குதல்கள்
நடத்தப்படுகையில்,
ஜேர்மன் கொடுப்பதை
நம்சா பெறுவது சில நாட்களுக்குள் நடக்கும்.
பேர்லின்
’50
குண்டுத் தொகுப்புக்களை”
வழங்கத் தயாராக
இருப்பதாக செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை நவீன வானில் இருந்து தரைக்கு
ஏவும் குண்டுகளுக்கு வழிகாட்டும் முறை என்பன உள்ளடங்கும் (Süddeutsche
Zeitung).
பாதுகாப்பு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த விநியோகங்களில்
வெடிக்கும் பொருட்கள் இருக்காது என்று வலியுறுத்தினார்.
விமர்சனங்களை எதிர்கொள்கையில்,
தோமஸ் டி மசியர் இது
ஒரு வாடிக்கையான நடைமுறை என்றும்
“நேட்டோ
கூட்டில் வாடிக்கையாக நடப்பதுதான். பங்காளிகள் எப்பொழுதும் தளவாடப் பற்றாக்குறையை
சமாளிக்க இப்படித்தான் நடந்து கொள்வர்”
என்றார்.
“நேட்டோ
பணியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு அவர்களை ஜேர்மனியில் உள்ள தளங்களை பயன்படுத்த
அனுமதிப்பது போல் இது ஒரு வாடிக்கையான நடைமுறை”
என்று மந்திரி கூறினார்.
ஜேர்மனியின்
பங்களிப்பை குறைத்துக் காட்டும் மந்திரியின் முயற்சிகள் ஜேர்மனிய அரசாங்கம் தன்
கொள்கையை லிபியாமீது படிப்படியாக மாற்றிக் கொண்டு வருகிறது என்ற உண்மையை மறைக்க
முடியாது. மார்ச் மாதம் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுவில் லிபியா மீது
பறக்கக்கூடாது பகுதி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் அரசாங்கம்
வாக்களிப்பதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களில் பேர்லின் அது தன்
நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதாக அதிகரித்தளவில் தெளிவாக்கியுள்ளது. மூன்று
வாரங்களுக்கு முன்புதான் தோமஸ் டி மசியர் ஜேர்மனியத் துருப்புக்கள் கடாபி
அகற்றப்பட்டபின் அங்கு நிலைநிறுத்தப்படலாம் என்றார்.
குறிப்பாக
வணிகக் குழுக்கள் லிபியா ஒரு செல்வம் படைத்த நாடு,
மறுகட்டமைப்புத்
திட்டங்கள் என வரும்போது ஜேர்மனி ஒதுங்கி நிற்கக்கூடாது எனச் சுட்டிக்
காட்டியுள்ளன. ஜேர்மனிய பெருநிறுவனங்கள் பெரும் இலாபம் கொடுக்கும் வாய்ப்புக்களை
எதிர்பார்க்கின்றன. இதைத்தவிர,
அமெரிக்காவும் ஜேர்மனிமீது அரசியல் அழுத்தம் கொடுக்கிறது. தன்
மரபார்ந்த நட்பு நாட்டில் இருந்து ஒவ்வொரு வாய்ப்பின்போதும் அது நெருக்கமான
ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது.
மேலும் சமூக
ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை வாதிகளும் உள்நாட்டில் பெருகிய அரசியல் அழுத்தங்களை
கொடுக்கின்றன. இவ்விரு பெரிய எதிர்த்தரப்புக் கட்சிகளும் ஆளும் கட்சியின் சில
பிரிவுகளும் பாதுகாப்புக் குழுவில் அரசாங்கம் வாக்குப் போடாதது பற்றிக் கடுமையாகக்
குறைகூறின.
அமைச்சரின்
சமீபத்திய முடிவைப் பற்றிய எதிர்த்தரப்பு குறைகூறல் முற்றிலும் பாசாங்குத்தனம்
ஆகும். சமூக ஜனநாயக கட்சியின் பாதுகாப்பு வல்லுனர் ரைனர் ஆர்னோல்ட் நேர்மையற்று
நடக்கிறார் என்று டி மசியர் மீது குற்றம் சாட்டியுள்ளார். பசுமைக் கட்சியின்
பிரதிநிதி ஒமிட் நௌவ்ரிபூர் அவரைப் பொய்யர் என்று கூட அழைத்துள்ளார்.
இவ்விமர்சனங்கள் கடுமையானவையாக தோன்றினாலும், உண்மையில் இவை பாதுகாப்பு
மந்திரியில் தகவல் கொள்கைக்கு எதிராகத்தான் முற்றிலும் இயக்கப்படுகின்றன ஒழிய அவர்
குண்டுகளை கொடுப்பதை எதிர்த்து அல்ல.
“ஒருபுறம்
நேட்டோ நடவடிக்கையில் பங்கு பெற அவர்கள் மறுக்கின்றனர். பின்னர் பின்புறம் வழியே
ஆயுதங்களைக் கொடுக்கின்றனர்.”
என்று ஆர்னோல்ட் புலம்பினார்.
நௌவ்ரிபூர்
கூறினார்:
“வெளியுறவு
மந்திரி வாக்களிப்பில் கலந்து கொள்ளக்கூடாது என்று வாதிடுகிறார்,
ஆனால் பாதுகாப்பு
மந்திரி போருக்கு உதவ குண்டுகள் தர இருப்பதாக உறுதியளிக்கிறார்.”
இருவருமே
அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனத்தைக் குறைகூறுகின்றனர்.
அரசாங்கம் போரில்
அதன் பங்கு பெறும் தன்மையைக் குறைத்துக் காட்ட பொது மக்கள் ஏற்கும் வகையில்
முற்படுகிறது.
அதே நேரத்தில் ஒரு கூட்டின் உறுப்பினர் என்னும் முறையில்
நேட்டோவினால் அதன் கடமைகளைப் பற்றித் தொடர்ச்சியாக நினைவுறுத்தப்படுகிறது.
தங்கள்
பங்கிற்கு சமூக ஜனநாயகக் கட்சியின் மற்றும் பசுமை வாதிகள் இந்த நிலைமையில் இருந்து
பயன்பெற முயல்கின்றன. ஜேர்மனிய நலன்கள் உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டும்
என்பதற்காக அரசாங்க அதிகாரத்தை அவை எடுத்துக் கொள்ள முயல்கின்றன. குறிப்பாக
பசுமைவாதிகள் அரசாங்கம் ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் வாக்களிப்பில் கலந்து
கொள்ளாததால் அரசாங்கம்
“வாலைச்
சுருட்டிக் கொண்டுவிட்டது”
என்று குற்றம்
சாட்டியுள்ளது (ஜோஷ்கா பிஷ்ஷர்). நௌவ்ரிபூர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
“வெட்ககரமானவை”
என்று கூறினார். இரு
கட்சிகளும் “மனிதாபிமானக்
காரணங்களுக்காக”
லிபியா மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று
வாதிடுகின்றன.
இடது
கட்சியின் விமர்சனம், இன்னும் குறிப்பாக அதன் தலைவர் கிரிகோர் கீஸியின்
கருத்தின்படி நம்பகத் தன்மை ஏதும் இல்லாமல் உள்ளது. கீஸி ஜேர்மனி
“படையெடுப்பவர்களின்
கூட்டணியில்”
நுழைந்துவிட்டதாக
அறிவித்தார். கட்சியின் முன்னாள் தலைவரும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரதிநிதியாகவும்
உள்ள லோதர் பிஸ்கி விரும்பியபடி நடக்க முடிந்தால்,
ஜேர்மனி தொடக்கத்திலேயே குண்டுவீச்சு தாக்குதலில் சேர்ந்திருக்கும்.
மார்ச் மாதம் பிஸ்கி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் லிபியா மீது பறக்கக்கூடாத பகுதி
ஒன்றை நிறுவக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தார்.
இதன்
விளைவாக ஜேர்மனிய ஆயுதங்கள் விரைவில் லிபியாவிற்கு இறப்பையும் அழிப்பையும்
கொண்டுவரும். கடந்த மூன்றரை மாதங்களில் நேட்டோவின் திரிப்போலி மீதான தாக்குதல்கள்
ஏற்கனவே 400 குடிமக்களை கொன்று 1,400 பேருக்கு மேல் காயப்படுத்தியும் உள்ளது.
அதன்
நட்புநாடுகளுக்கு முந்தைய
“தளவாட
பற்றாக்குறைகளை”
பொறுத்தவரையில்
ஜேர்மனிய அரசாங்கத்தின் வரலாற்று சான்று எப்பொழுதும் தெளிவற்றுத்தான் இருந்துள்ளது.
நேட்டோவிற்குள் இருந்து வரும் வேண்டுகோள் பாராளுமன்றங்கள் மூலமோ,
உரிய பாராளுமன்றக்
குழுக்கள் மூலமோ செயல்படத்தப்பட வேண்டியதில்லை. தேவையானது அனைத்தும் பாதுகாப்பு
மந்திரியின் முடிவுதான்—அவர்தான்
வேண்டுகோள்களும் உதவிகளும் பகிரங்கமாக அறிவிக்கப்படலாமா வேண்டாமா என்பது பற்றி
முடிவு செய்வார். ஒரு விசாரணையை அடுத்து அமைச்சரகம் தான் 900 டிரேசர் சுற்றுக்களை
(tracer rounds)
ஒரு நேட்டோப் பங்காளிக்கு மே மாதம் கொடுக்க ஒப்புதல் கொடுத்ததாக
வெளிப்படுத்தியது.
லிபியப்
போரில் நேட்டோவிற்கு உதவுவதற்கு வந்துள்ள சமீபத்திய ஜேர்மனிய உதவியளிப்பிற்குப்
பின்னர் ஜேர்மனிய அரசாங்கம் 200 லியோபோல்ட் டாங்கிகளை சவுதிஅரேபியாவிற்கு அனுப்பி
வைப்பது என்று இசைவு கொடுத்ததும் வெளிவந்துள்ளது. சவுதி அரேபியா இப்பொழுது அதன்
உள்ளநாட்டு எதிர்ப்பை வன்முறையின் மூலம் அடக்குவதில் ஈடுபட்டுள்ளது. |