WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு சமூகநலக் கொடுப்பனவுகள் தாக்குதலுக்கு உட்படுகின்றன
By
Pierre Mabut
28 June 2011
Use
this version to print | Send
feedback
பிரெஞ்சு
ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஆளும் வலதுசாரி
UMP (Union for a Popular Movement)
நீண்ட காலமாக
வேலையின்மையில் வாடுபவர்களின் அடிப்படை சமூகநல கொடுப்பனவுகள் மீது முழுத் தாக்குதலை
ஜூன் 8ம்
தேதி ஒரு மாநாடு நடத்தி ஆரம்பித்துள்ளது.
RSA
(Active Solidarity Revenue –
வருவாய்க்கான
ஒருமைப்பாட்டுச் செயல்)
மூலம் குறைந்தபட்ச
சமூகநல கொடுப்பனவு பெறுபவர்கள் மீது இது நேரடித் தாக்குதலை முன்வைத்துள்ளது.
வாரத்திற்கு
10 மணி நேர வேலையை
சமூகத்திற்கு கட்டாயமாக வேலைசெய்யும் நிலைமையை இது ஏற்படுத்தியுள்ளது.
அப்பொழுது
அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு
7 யூரோக்கள்
கொடுக்கப்படும்.
இத்தகைய வேலை
“சமூகத்திற்கான
பயன்பாடு”
என்று இக்கட்டத்தில்
குறிப்பிடப்படுகிறது.
இதைச் செய்யாவிடின்,
RSA கொடுப்பனவுகள்
இழக்கப்பட்டுவிடும்.
குறைவூதிய
கூலியைப் பெற சமூகநல உதவி பெறுவோரைக் கட்டாயப்படுத்தும் கொள்கையை
அறிமுகப்படுத்தியுள்ளதின் மூலம் அரசாங்கமானது ஜேர்மனியில் சமூக ஜனநாயகவாதிகளும்
பசுமைவாதிகளும்
2005ம் ஆண்டு
அறிமுகப்படுத்திய
1 யூரோவிற்கான
வேலைத் திட்டம் போன்றதை நோக்கி நகர்ந்துள்ளது.
சார்க்கோசியின் ஐரோப்பிய விவகாரங்கள் துறையின் மந்திரி
Laurent Wauquiez
னால் இந்த பிற்போக்குத்தன குரல் எழுப்பப்பட்டுள்ளது.
அவர் சமூகநல உதவித்
தொகையை பெறுவோர்
“பிரெஞ்சு
சமூகத்தில் புற்றுநோய் போன்றவர்கள்”
என்று கண்டித்தார்.
2012ல் மீண்டும்
தேர்ந்தெடுக்கப்படுவதற்காக சார்க்கோசியின் பிரச்சாரத்தில் இது ஒரு பகுதி ஆகும்—இதுவோ
பொதுச் சேவைகளில் கடுமையான வெட்டுக்கள் மற்றும் குடியேறுபவர்களுக்கு எதிரான
இனவெறிப் பிரச்சாரத்தை தூண்டிவிடுதல் ஆகியவற்றிற்கு இடையே வந்துள்ளது.
2010ம்
ஆண்டு வரவு-செலவுத்
திட்டத்திலுள்ள
148.8 பில்லியன்
யூரோப் பற்றாக்குறை,
மிகப் பெரிய அளவில்
வங்கிப் பிணை எடுப்புக்களால் ஊதிவிட்டது,
மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 7.7
சதவிகிதத்தை
கொண்டுள்ளது.
இதை
2013க்குள் ஐரோப்பிய
ஒன்றியம் வரையறை செய்துள்ள அதிகப்பட்ச வரம்பான
GDP க்குள்
3 சதவிகிதம்
என்பதற்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று சார்க்கோசி உறுதிமொழி கொடுத்துள்ளார்.
இதற்கு இன்னும் பல
பத்து பில்லியன்கள் கூடுதல் வெட்டுக்கள் நடத்தப்பட வேண்டும்.
உழைப்புச்
சந்தையில் சமூகநல கொடுப்பனவு உதவி பெறுவோரைச் சுரண்டும் திட்டத்திற்கு ஆதரவு
கொடுக்கையில் சார்க்கோசியின் சிறப்பு ஆலோசகர்
Brice Hortefeux
கூறினார்: “நாம்
என்னத்தைச் செய்யக்கூடாது,
அதாவது சமூக
நலன்களில் இருந்தும் சமூக வருவாயில் மறுபகிர்விலிருந்தும் நம்நாட்டில் பெறுவதைக்
காட்டிலும்,
வேலையில்
ஈடுபடுவதால் வரும் வருவாய்கள் கூடுதல் பணமாக இருக்க வேண்டும்..…மோசடிக்கு
எதிராக உடனடியாகப் போராடுவது தேவையாகும்…
இப்படிப் பணம்
பெறுவது திருடுவது போல் ஆகும்.”
வலதுசாரி
Le Figaro
பத்திரிகையானது
மற்றொரு சார்க்கோசியின் ஆலோசகர்
“பொருளாதார வளர்ச்சி
கட்டம் இணைந்த சமூகநல கொடுப்பனவுகளின்”
சமூகநலச் செலவுகள்
குறைக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளதை மேற்கோளிட்டுள்ளது.
இதன் பொருள்
தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில்,
வேலையில்லாதவர்களை
திவால் நிலைமைக்கு தள்ளுவதாகும்.
ஜனாதிபதி
சார்க்கோசியின் சமூகத் துறையின் துணைச் செயலரான
Jean Castex, RSA
யின் விளைவுகள் சில்லறைத் துறையில் இருப்பது பற்றி விளக்கியுள்ளார்,
அங்கு
“முதலாளிகளுடைய
நலன்கள் பகுதி நேரத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பதுதான்”.
இது மிகக் குறைந்த
ஊதியம் பெறும் தொழிலாளர்கள் என்ற நிலையை ஏற்படுத்துகிறது.
பெரும்
அங்காடிகளிலுள்ள தொழிலாளர்கள்,
பகுதி நேர
அடிப்படையில்தான் நியமிக்கப்படுகின்றனர்.
ஏனெனில் இவ்வகையில்
தங்கள் சமூகநல நலன்களின் ஒரு பகுதியை வைத்துக் கொள்ள முடியும்.
RSA
உதவி பெறுவோர்
சமூகத்திற்காக வேலைபுரிதல் ஊதியமின்றி எனக் கட்டாயப்படுத்தவேண்டும் என்று
Wauquiez முதலில்
கூறினார்.
ஆனால் தற்பொழுது அரசாங்கம்
வளைந்து கொடுத்து,
கொள்கையளவில் சமூகநல
உதவி பெறுபவர்கள் உழைக்க வேண்டும் என்பதை நிறுவுவது போதும் என்ற திருப்தியில்
உள்ளது.
RSA 2008ம்
ஆண்டு, Martin
Hirsch ஆல்
அறிமுகப்படுத்தப்பட்டது;
அவர்தான் வறுமைக்கு
எதிரான ஒருமைப்பாட்டுச் செயல் என்பதற்கு உயர் ஆணையாளராக இருந்தார்.
அவர் சார்க்கோசி
அரசாங்கத்தில் மத அறக்கட்டளையான
Emmäus
தலைவர் பதவியை விட்டு
விலகிச் சேர்ந்தார்.
அவர் கூறியுள்ள
இலக்கு சமூகநல உதவி பெறுவோர் தங்கள் சமூகநல உதவித் தொகையுடன் பகுதி நேர வேலையையும்
எடுத்துக் கொண்டால் வருமானத்தை அதிகரிக்கலாம் என்பதற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்
என்பதாகும்.
ஆனால்,
இது அரச செலவில்
முதலாளிகளுக்கு ஒரு குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பை அளிக்கும் நிலைக்குத்தான்
உதவியுள்ளது.
அதே நேரத்தில்
வேலையில்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்திவிட்டது.
கிட்டத்தட்ட
1.8
மில்லியன் குடும்பங்கள்
இப்பொழுது RSA
உதவித் தொகைகளை தனி
நபருக்கு 446
யூரோக்கள்
மாதத்திற்கு அல்லது ஒரு தம்பதிக்கு
700 யூரோக்கள் என்று
பெறுகின்றன.
சமூகத்திற்கு
வேலைசெய்ய மூன்றில் இரு பகுதியினர் உதவ வேண்டும் என்பது நோக்கம் ஆகும்.
இதையொட்டி பொது
ஊதியத் தரங்கள் குறைமதிப்பிற்கு உட்பட்டுவிடும்.
மேலும் சமூகப்
பணிகளில் ஊழியர்கள் பற்றாக்குறையை ஈடுசெய்யும் விளைவையும் இது ஏற்படுத்தும்.
அதுவோ இத்துறையில்
வேலை வெட்டுக்களால் விளைந்துள்ளது.
ஓய்வு பெறுகின்ற
பதவிக்கு இரண்டு பேருக்கு ஒரு புதிய நியமனம்தான் இப்பொழுது கொடுக்கப்படுகிறது.
Hirsch
ஆரம்பத்தில்
RSA மீது
கொண்டுவரப்பட்ட தாக்குதல்களை விமர்சித்தார்,
அதாவது மிக
வறியவர்களிடம் இருந்து பெரும் செல்வந்தர்கள் என்று சமூகத்தின் சொத்து மாற்றத்திற்கு
அவைகள் வழிவகை செய்யும் என்று கூறப்பட்டது.
அவர் அரசாங்கத்தை—தொழிலாளர்கள்
மற்றும் சமூக உரிமைகள் மீது பாரிய தாக்குதல்களை நடத்திய அரசாங்கத்தில் அவர் பங்கு
பெற்று அதை ஆதரித்திருந்தாலும்—
“சதாரணமான
தொழிலாளர்கள் பைகளுக்குச் சென்றிருக்க வேண்டிய பணம்”
இப்பொழுது இவ்வாறு
மற்றவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகிறது
(அதாவது
RSA க்கு நிதியைக்
கொடுக்கும் வரிகள்)
என்றார்.
சமீபத்தில்
அறிமுகப்படுத்தப்பட்ட செல்வங்கள் மீதான வரிச்சீர்திருத்தமான மிகை செல்வ வரி
(ISF-Tax on Fortunes)
மூலமாக செல்வந்தர்கள் மீதான
எதிர்பாராத பெரும் இலாபகர வரி விலக்கை
Hirsch
குறிப்பிட்டார்.
இதன் பொருள்
800,000
யூரோக்கள் வருமானம்
உடையவர்களுக்கு என்பதற்குப் பதிலாக மிக அதிக வருமானம் பெறும் குழுவினருக்கு
வரிவிலக்கு இப்பொழுது
1.3 மில்லியன்
யூரோக்கள் சம்பாதிப்பவருக்குத்தான்.
இதையொட்டி
அரசாங்கத்திற்கு இழக்கப்பட்ட வரி வருவாய்கள்
1.8 பில்லியன்
யூரோக்களாகும்.
RSA க்கான செலவு
பிரான்ஸிற்கு 1.3
பில்லியன் யூரோக்கள்
தான்.
சமூகத்திற்கு கட்டாயமாகப் பணி புரிய வேண்டும் என்னும்
UMP திட்டத்திற்குத்
தன் எதிர்ப்பை விரைவில்
Hirsch
கைவிட்டார்;
ஏனெனில்
UMP ஆனது அடிப்படைச்
சம்பள (SMIC)
விகிதத்தில் ஒரு மணி
நேரத்திற்கு 7
யூரோக்களைக் கொடுக்க
முன்வந்துள்ளது.
தொழிலாள
வர்க்கத்தை சூனிய வேட்டையாட முற்படும்
UMP யின்
உந்துதலுக்கு “சமூக
மோசடி”
என்னும் பாராளுமன்ற அறிக்கை
ஒன்றிலிருந்து கூட வெடிமருந்துகள் கிடைத்துள்ளன.
இது ஜூன்
22ம் திகதி
UMP பிரதிநிதி
Dominique Tian
ஆல் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை பெரும்
மோசடி முதலாளிகள் தொழிலாளர்கள் எண்ணிக்கை பற்றிச் சரியாகக் கூறாமல்,
அதையொட்டி சமூக
பங்களிப்பிற்கான நிதியளித்தலை தவிர்ப்பதைக் குறிக்கிறது.
ஆனால்
முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகளோ முற்றிலும் தனிப்பட்ட தொழிலாளர்களை மிரட்டும்
வகையில்தான் உள்ளன.
இந்த
அறிக்கை ஆண்டு ஒன்றிற்கு அரசிற்கு இந்த மோசடியால்
20 பில்லியன்
யூரோக்கள் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிட்டுள்ளது.
இந்த தொகை
கிட்டத்தட்ட சமூகப் பாதுகாப்பு முறையில் உள்ள பற்றாக்குறைக்கு சமம் ஆகும்.
முதலாளிகள் கொடுக்க
வேண்டிய பங்களிப்புக்கள் கொடுக்கப்படாமல் போவதால்
15.8 பில்லியன்
யூரோக்கள் இழப்புக்கள் ஏற்படுவதுடன்,
RSA யின் கீழ்
தொழிலாளர்கள் மோசடி நலன்களை அடைவது ஏற்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
குடும்ப நலன்கள்
தொடர்புடைய மோசடிகள் அல்லது நோய்விடுப்பின் மூலம் இழப்புக்கள்
2 முதல்
3 பில்லியன்
யூரோக்கள் ஆகும்.
“தேசிய
திட்டத்தில் மோசடிக்கு எதிரான போராட்டம் வேண்டும்.
… ஒரு
‘FBI’
சமூக மோசடிக்கு எதிராகத்
தேவை”
என்று அறிக்கை
பரிந்துரைக்கிறது.
உடல்ரீதியான ஆதாரம்
உடைய (biometric)
சமூகப் பாதுகாப்பு
அட்டைகள் தேவை என்ற கருத்தை இது முன்வைக்கிறது.
இதைத்தவிர
நோய்வாய்ப்பட்டுள்ள தொழிலாளர்களை எதிர்பாராமல் சென்று பார்வையிட வேண்டும்,
இது முதலாளிகளின்
முயற்சியில் நடக்க வேண்டும்;
ஊழியர்கள்
பட்டியலில் மோசடிகளை தவிர்ப்பதற்கு தொலைத்தொடர்பு முறையிலான வழிவகைகள் வரம்பிற்கு
உட்படுத்தப்படுதல் வேண்டும்.
முதலாளிகளில்
10 முதல்
12 சதவிகிதத்தினர்
தொழிலாளர்கள் பற்றி முழு விவரம் அளிக்காத வகையில் சட்டத்தை முறிக்கின்றனர் என்று
டியன் கூறுகிறார்.
அறிக்கை
மதிப்பிடப்பட்டுள்ள
400,000 ஆவணமற்ற
குடியேறிய தொழிலாளர்கள் பற்றி எக்குறிப்பையும் கூறவில்லை.
அவர்களுக்கு
சட்டபூர்வ அந்தஸ்து மறுக்கப்படுகிறது.
அவர்கள்
அரசாங்கத்தின் துன்புறுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.
மோசடியைக்
குறைப்பதற்காக அது நடத்தும் உந்துதல் எனக் கூறப்படுவதில் சார்க்கோசி அரசாங்கம்
பிழையுடன் நடந்து கொள்வது—அதையொட்டி
பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது இருத்துவது—ஐரோப்பிய
ஒன்றியத்தின் அறிக்கையானது பிரான்சின் ஐரோப்பிய ஒன்றியத்தின் வங்கிகள் போனஸ் பற்றிய
இயக்கு நெறிகளை மீறுகிறது என்ற கருத்தையும் கொண்டுள்ளதின் மூலம் வெளியாகியுள்ளது.
பிரெஞ்சு வணிகர்கள்
தங்கள் நிலைத்த வருமானம்
2010ல்
40 சதவிகிதம்
உயர்ந்தததைக் கண்டனர்.
இது
2009ல்
729 மில்லியன்
என்பதில் இருந்து இப்பொழுது
1 பில்லியன் யூரோ என
வளர்ந்துள்ளது.
நிலைத்த
மற்றும் மாறக்கூடிய ஊதியங்களின் பகுதிகள்
“சரியான முறையில்
சீர்படுத்தப்பட வேண்டும்”
என்று இயக்க நெறி
கூறியுள்ளது.
இந்த விதி ஐரோப்பிய
ஒன்றிய இயக்கு நெறியில் இருந்தாலும் பிரான்சின் நிலைப்பாட்டில் இருந்து
விலக்கப்பட்டுவிட்டது. |