World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா 

Pro-Thaksin party to form next Thai government after election win

தாக்சின்-சார்புக் கட்சி தேர்தலில் வெற்றிக்குப் பின் அடுத்த தாய்லாந்து அரசாங்கத்தை அமைக்கிறது

 By John Roberts and Peter Symonds 
5 July 2011

Back to screen version

எதிர்க்கட்சியான Puea Thai ஞாயிறு நடைபெற்ற தேர்தலில் தெளிவான பெரும்பான்மை வெற்றியடைந்ததை அடுத்து தாய்லாந்து அரசாங்கத்தை நான்கு சிறிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அமைக்க உள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வமற்ற தேர்தல் ஆணைய முடிவுகள், முன்னாள் பிரதம மந்திரி தாக்சின் ஷினவாத்ராவுடன் நெருக்கமாக தொடர்பைக் கொண்ட Puea Thai 500 இடங்கள் உள்ள பாராளுமன்றத்தில் 265 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறது.

இந்த முடிவு இராணுவம், முடியாட்சி, அரசாங்க அதிகாரத்துவம் தாய்லாந்தின் மரபார்ந்த உயரடுக்குகளுக்கு ஒரு முக்கிய அடியாகும். இவைதான் தாஸ்கினை 2006ல் அகற்றிய இராணுவ ஆட்சி முறையை ஆதரித்து, 2008ல் இரு தாக்சின் சார்புடைய அரசாங்கங்கள் அகற்றப்படத் துணை நின்றதுடன், பிரதம மந்திரி அபிசித் வெஜ்ஜஜீவா தலைமையில் ஒரு ஜனநாயகக் கட்சித் தலைமையில் அரசாங்கத்தை நிறுவவும் உதவின. ஞாயிறன்று ஜனநாயகக் கட்சியினர் 158 இடங்களில்தான் வெற்றி பெற்றனர்.

புயா தாய் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவருமே வெகுஜனங்களை திருப்திசெய்யும் பிரச்சாரங்களை மேற்கோண்டன. சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளுக்குப் பல சலுகைகளைக் கொடுப்பதாக உறுதியளித்தன. பதவிக்காலத்தில் 2001ல் முதல் 2006 வரை இருந்தபோது தாக்சின் குறிப்பாக நாட்டின் வடக்கு, வடகிழக்குக் கிராமப்புறப் பகுதிகளில் ஒரு ஆதரவுத்தளத்தை கட்டமைத்தார். அவருடைய பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஒரு தொடர் மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்கினார். புயான தாய் வடக்குப் பகுதிகளில் நல்ல வெற்றி பெற்று பாங்காக்கிலும் கணிசமான வெற்றிகளைக் கொண்டது.

2007ம் ஆண்டு இராணுவமும் இந்த ஆண்டு ஜனநாயகக் கட்சியும் தாய் ஆதரவு கொடுக்கும் கட்சிகள் வெற்றி பெறுவதை தடுக்கும் வகையில் அரசியலமைப்பில் மாற்றங்களை செய்தபோதிலும், இக்கட்சிகள் இப்பொழுது கடந்த தசாப்தம் முழுவதும் ஒவ்வொரு தேசியத் தேர்தலிலும் வெற்றி பெற்றன.

ஆனால், சுலாலோங்கார்ன் பல்கலைக்கழக உயர் கல்வியாளர் பொங்சுதீரக் செய்தி ஊடகத்திற்கு கூறியபடி, புயா தாய்க்கு அதிக வாக்குகள் என்பது ஒன்றும் “2006ல் இருந்து நாங்கள் காணும் திரித்தல்கள், அழுத்தம் கொடுத்தல், நசுக்குதல் ஆகியவற்றிற்கு எதிரான வாக்கு எனக் கருதப்படலாமே ஒழிய தாக்சினுக்கு ஆதரவு எனக் கூறுவதற்கில்லை.” நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளிடையே உள்ள அரசாங்கத்தின் மீதான கடுமையான எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு ஆகும். கடந்த ஆண்டு இவர்கள் பல மாதங்கள் அரசாங்க எதிர்ப்புக்களில் பங்கு பெற்றனர். அவை இராணுவத்தால் வன்முறையாக நசுக்கப்பட்டன. இவற்றில் குறைந்த பட்சம் 91 பேர் இறந்தனர், 1,800 பேர் காயமுற்றனர்.

புயா தாயின் தலைவர், தாக்சினின் இளைய சகோதரி யிங்லக் ஷினவாத்ரா நேற்று சர்த்தாய்பட்டனா, சார்த் தாய் பட்டனா புயா பாண்டின், பாலங் சோன் மற்றும் மகாசோன் ஆகிய நான்கு சிறிய கட்சிகளுடன் சேர்ந்து ஐந்து-கட்சிக் கூட்டணியை அறிவித்தார். இடைக்கால முடிவுகள் உறுதிசெய்யப்பட்டவுடன் கூட்டணியில் மொத்தம் 299 பேர் இருப்பர்.

நாடு கடத்தப்பட்ட நிலையில் துபாயில் வாழும் தன்னுடைய சகோதரரையும் அவர் கலந்து ஆலோசித்தார் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், யிங்லக் இந்த அறிவிப்பை கட்சியின் நிர்வாகத்துடன் கலந்து ஆலோசிக்காமல்தான் வெளியிட்டுள்ளார். புயா தாயே ஒரு தெளிவான பாராளுமன்றப் பெரும்பான்மை கொண்டிருக்கையில், அவர் இராணுவம் அல்லது நீதிமன்றங்கள் மூலம் எவரும் புயா தாய் அரசாங்கம் அமைப்பதைத் தடுக்க வரக்கூடிய எந்த முயற்சியையும் முன்கூட்டியே தவிர்க்கும் வகையில் இதைச் செய்துள்ளார்.

புவா தாயை ஒருபயங்கரவாத அமைப்பு என்று பிரச்சாரத்தின்போது தூண்டிவிடும் தன்மையில் முத்திரையிட்டிருந்த அப்ஹிசித் தோல்வியை ஒப்புக்கொண்டு நேற்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் என்னும் தன் பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்தார். வெளியேறும் பாதுகாப்பு மந்திரியும் முன்னாள் இராணுவத் தலைவருமான பிரவிட் வோங்சுவான் மற்றொரு ஆட்சி மாற்றம் பற்றிய கவலைகளைச் சமாதானப்படுத்தும் வகையில் திங்களன்றுஇராணுவம் தேர்தல் முடிவுகளை ஏற்கிறது”, “தனக்குரிய பங்கில் இருந்து அசையும் விருப்பம் அதற்கு இல்லை என்று அறிவித்தார்.

ஏசியா டைம்ஸ் வலைத்தளம் மற்றும் வோல் ஸ்ட்ரீட் இரண்டுமே ப்ரூனேயில் தாக்சினுடைய பிரதிநிதிகள், முடியாட்சி மற்றும் இராணுவத்திற்கு இடையே தாய் ஆளும் உயரடுக்கின் மோதலிடும் பிரிவுகளுக்கு இடையே சமாதான உடன்பாடு ஒன்றைக் காண்பதற்காக இரகசியப் பேச்சு வார்த்தைகளை நடத்தியதைச் சுட்டிக் காட்டியுள்ளன. இந்த உடன்பாட்டில் ஒரு புவா தாய் அரசாங்கத்திற்கு இடையூறு செய்யவோ அல்லது அகற்றவோ எண்ணம் இல்லை என்று உத்தரவாதம் வழங்கும் ஒரு பிரிவு இருப்பதாகத் தெரிகிறது. இதற்குப் பதிலாக புவா தாய் 2006 ஆட்சிமாற்றம் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை, தற்போதைய இராணுவத் தலைவர் ஜெனரல் பிரயுத் சான்-ஓச்சாவை அகற்றுவதில்லை, இராணுவ விவகாரங்களில் தலையிடுவதில்லை அல்லது நாட்டிலுள்ள ஜனநாயக விரோத தேசத்துரோக சட்டங்களை மாற்றுவதில்லை என்று உறுதி அளிக்கிறது.

இப்பேச்சுவார்த்தைகள் ஐந்து ஆண்டுகள் கடுமையாக நடைபெற்ற உட்பூசல்களுக்குப் பின் நடந்துள்ளன என்பது ஆளும் உயரடுக்கு முழுவதும் கொண்டிருக்கும் அச்சங்களான அரசாங்கமோ அல்லது எதிர்த்தரப்போ திருப்தியளிக்க முடியாத, சாதாரண தொழிலாள வர்க்கத்தின் சமூகக் கோரிக்கைகள் பற்றியும் அதையொட்டி எழுந்த கடந்த ஆண்டு எதிர்ப்புக்களைப் பற்றித்தான் பெரிதும் பிரதிபலிக்கின்றன. கடந்த ஆண்டு இராணுவம் செயல்பட்டபின், அபஹிசிட் அரசாங்கமும் சர்வாதிகாரத்திற்கு (UDD) எதிரானசிவப்புச் சட்டை ஐக்கிய முன்னணியின் எதிர்ப்புத் தலைவர்களும் கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் இன்னும் தீவிரமயமாவதை தடுத்து அழுத்தங்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன.

அப்ஹிசித்தின் முடிவான முன்கூட்டிய தேர்தல்களை நடத்துவது என்பது UDD மற்றும்  புயா தாயின் கோரிக்கைகளுக்கு சலுகையாகும். அப்ஹிசித் பொருளாதாரம் மந்தம் அடைந்துவருகின்ற நிலையில், ஒரு முன்கூட்டிய தேர்தல் ஜனநாயகக் கட்சியனருக்கு அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது என்றும் கணக்கிட்டார்.

யிங்லக் ஏற்கனவே ஒரு புவா தாய் அரசாங்கம், இராணுவத்திற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்காது என்றும் முடியாட்சியை மதிக்கும் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்துவரும் அரசியல் கொந்தளிப்பின் அடித்தளத்தில் உள்ள எந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. பாங்காக்கின் மரபார்ந்த உயரடுக்கினர் ஆரம்பத்தில் பில்லியனர் தாக்சினை 2001ல் அவர் அதிகாரத்தை அடைந்தபோது ஆதரித்தன. ஆனால் அவருடைய அரசாங்கம் தாய் வணிகங்களைக் பாதுகாக்கும் உறுதிக்கேற்ப நடந்து கொள்ளாததால் அவரைக் கைவிட்டன. மேலும் ஜனநாயகக் கட்சியினர் சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை சார்பு மறுகட்டமைப்புச் செயற்பட்டியலை செயல்படுத்தியதையும் அவர் மாற்றியிருந்தார். அவருடைய சர்வாதிகார ஆட்சிமுறை பாங்காக் மத்தியதர வர்க்கங்களின் பல பிரிவுகளை அந்நியப்படுத்தியதுடன், முன்னதாக இராணுவம், அரசாங்க அதிகாரத்துவம் மற்றும் முடியாட்சி ஆகியவை கொண்டிருந்த பாதுகாவலர் அமைப்பு முறைகளையும் பெரிதும் பாதித்தது.

அரசாங்கத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், எதுவும் நடக்காது என்றும் கூறிவிட முடியாது. யிங்லக்கிற்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கைகள் பொய்கூறல் குற்றச்சாட்டுக்கள் பற்றித் தொடக்கப்பட்டு விட்டன. தேர்தல் முடிவுகள் சவாலுக்கு உட்படுத்தப்படலாம், தேர்தல் மோசடிக் குற்றங்களும் சுமத்தப்படலாம்இந்த வழிவகைதான் 2008ம் ஆண்டு தாக்சின் சார்பு அரசாங்கத்தை அகற்றப் பயன்படுத்தப்பட்டது. இப்பின்னணியில், இராணுவம் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அதன் 2007 அரசியலமைப்பின்படி, அரசியல் நெருக்கடி இருப்பதாக உணர்ந்தால் தலையிடுவதற்கு இராணுவ ஜெனரல்கள் கணிசமான அதிகாரத்தை பெற்றுள்ளனர்.

தாக்சின்-விரோத நேஷன் நாளேடு நேற்று புயா தாய்வெறும் எண்ணிக்கைப் பெரும்பான்மையை மட்டும் ஆதாரம் என்ற நெறித்தன்மையை நம்பியிராத ஒரு அரசாங்கத்தை தோற்றுவிக்கும் மகத்தான பொறுப்பை கொண்டுள்ளது என எச்சரித்துள்ளது. கட்சி முந்தைய தாஸ்கின் ஆதரவு அரசாங்கங்களின் விதியில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும், அவற்றின் நல்லெண்ணத்தில் அரிப்பு ஏற்பட்டது, “மேலும் தேவையற்ற தெரு அரசியல்கள் இராணுவக் குறுக்கீடு ஆகியவற்றிற்கு ஊக்கம் அளித்தன என்றும் அது கடுமையாக எச்சரித்துள்ளது.

புதிய அரசியல் கொந்தளிப்பை மிக வெளிப்படையாத் தூண்டக்கூடிய புயா தாய் தேர்தல் உறுதிமொழியான தாக்சினுக்கு பொதுமன்னிப்பு என்பதைச் செயல்படுத்தும் முயற்சியாகப் போகும். யிங்லக் மற்றும் தாக்சின் இருவருமே முன்னாள் பிரதம மந்திரி பாங்காக்கிற்குத் திரும்பி வருவது அல்லது அவருடைய ஊழலுக்கான தண்டனையாக அபகரிக்கப்பட்ட பணங்களை மீட்பது என்ற அவசர முடிவுகள் ஏதும் இருக்காது என்று கூறியுள்ளனர். அத்திசையில் எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது கடுமையான எதிர்ப்பை இராணுவத்தின் சில பிரிவுகள் மற்றும் PAD எனப்படும் ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணியில் இருந்து ஏற்படுத்தும். PAD 2006ல் தாக்சின் எதிர்ப்புக்களாக ஒருநீடித்த மஞ்சள் சட்டை இயக்கத்தை உருவாக்கியது. அதுதான் பின்னர் ஆட்சிமாற்றத்திற்கான அரசியல் சூழலை ஏற்படுத்தி 2008ல் இரு தாக்சின் அரசாங்கங்கள் அகற்றப்படவும் காரணமாயிற்று.

இன்னும் அடிப்படையில், கடந்த ஆண்டு எதிர்ப்புக்களில் வெளிப்பட்ட சமூக அழுத்தங்கள் மோசமாகத்தான் போயிருக்கின்றன. ஆசியாவின் மற்றப் பகுதிகளைப் போலவே, தாய்லாந்திலும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன; இது கடுமையான பாதிப்பை மக்களின் வறிய பிரிவுகளில் ஏற்படுத்தியுள்ளது. தாய் நாணயமும் பங்குகளும் உறுதியான தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் உறுதிப்பாட்டிற்கான நம்பிக்கை ஆகியவற்றால் ஏற்றம் பெற்றுள்ளன என்றாலும், பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டின் 8 %ல் இருந்து பாதியாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புவா தாய் அரசாங்கம் தொழிலாள வர்க்கம் மற்றும் அடக்கப்பட்ட மக்களின் சமூகத் தேவைகள் மற்றும் ஜனநாயக விழைவுகளை தீர்ப்பதில் இதன் முந்தைய அரசாங்கத்தைவிட ஒன்றும் திறன் வாய்ந்தது இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிக எதிர்பார்ப்புக்களை எழுப்பியுள்ளதால், இதற்கான ஆதரவு தேர்தல் உறுதிமொழிகளைச் செயல்படுத்த முடியவில்லை என்றால் இன்னும் விரைவில் சரியும்.

தாய்லாந்தின் மற்றும் சர்வதேச நிதிய விமர்சகர்களும் புவா தாயின் தேர்தல் உறுதிமொழிகள் பொருளாதார அளவில் செயல்படுத்தப்பட முடியாதவை என்று எச்சரித்துள்ளனர். பாங்காக் பல்கலைக்கழக உயர்கல்வியாளர் சுபோங் லிம்டனகூல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் புவா ஆகியோர் வாதிட்டிருந்த செயற்பட்டியலுக்கு இன்னும் கூடுதலாக அமெரிக்க $49 பில்லியனில் இருந்து $244 பில்லியன் வரை தேவைப்படும் என்று கணித்துள்ளனர்இது தற்போதைய தேசிய வரவுசெலவுத் திட்டத்தைப்போல் ஐந்து மடங்கு அதிகம் ஆகும்.

புவா தாய்க்கு வாக்களித்தவர்களின் நம்பிக்கை சிதறுகையில், அரசாங்கம் தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் சுமையைச் சுமத்துகையில், ஏமாற்றம்தான் தவிர்க்க முடியாமல் சீற்றமாகவும் அரசியல் எதிர்ப்பாகவும் மாறும். தொழிலாள வர்க்கத்திற்கு வெற்றி என்பதற்கு முற்றிலும் தொலைவான முறையில் ஒரு யிங்லக் அரசாங்கம் ஜனநாயகக் கட்சியைப் போலவே இரக்கமற்ற, ஜனநாயக விரோதச் செயல்களைத்தான் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் எதிர்ப்பை அடக்கக் கையாளும்

தாக்சினுடைய அதிகாரத்தில் இருந்தபோது காணப்பட்ட சர்வாதிகார ஆட்சி வழிவகைகள் தொழிலாள வர்க்கத்தினால் எச்சரிக்கையாக உணரப்பட வேண்டும். 2003ம் ஆண்டு, அவர்போதைப் பொருட்களின் மீதான போர் என்பதைக் கட்டவிழ்த்தார். அப்பொழுது பாதுகாப்புப் படையினர் நீதிமன்றத்திற்கு புறம்பான வகையில் போதைக் கடத்தல்காரர்கள் என்று கூறப்பட்ட 2,000 பேருக்கு மேற்பட்டவர்களை மூன்று மாதத்தில் கொன்றனர். அடுத்த ஆண்டு அவர் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்ட முறையில் நாட்டின் தெற்கே இருந்த முஸ்லிம்களில் பிரிவினைவாதிகள்மீது தாக்குதல்களை நடத்தி, அப்பகுதியில் அவசரகால ஆட்சியைச் சுமத்தி, இராணுவத்தை உள்ளூர் எதிர்ப்பை அடக்க உத்தரவிட்டது.

தன்னுடைய கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பு பெருகிய நிலையில், தாக்சின் செய்தி ஊடகத்தின்மீது ஏகபோக உரிமைக் கட்டுப்பாட்டை நிறுவும் வகையில் அரசாங்க மற்றும் தன் பரந்த வணிகப் பேரரசைப் பயன்படுத்தினார். அரசாங்கத்தைக் குறைகூறிய செய்தியாளர்கள் அச்சுறுத்தப்பட்டு மௌனத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

தல் நலன்களைக் காக்க, தொழிலாள வர்க்கம் அதன் படிப்பினைகளை கடந்த தசாப்தத்தில் இருந்து பற்றியெடுக்க வேண்டும். ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவுகளில் எதுவும் சாதாரண மக்களின் அழுத்தம் கொடுக்கும் சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் திறன் அற்றவை. இப்பொழுது தேவைப்படுவது தொழிலாள வர்க்கத்தினை அடித்தளமாக கொண்ட ஒரு சோசலிச மாற்றீடுதான். அது முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் சுயாதீனமாக இருப்பதுடன், தன் பக்கத்திற்கு கிராமப்புற மக்களை ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒரு பகுதியாக வென்றுகொள்ளப் போராட வேண்டும்.

அத்தகைய போராட்டத்திற்கு அடிப்படை முன் தேவை தாய்லாந்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவு ஒன்றைக் கட்டமைப்பது ஆகும். அது ஒன்றுதான் இந்த அரசியல் முன்னோக்கிற்காகப் போராடுகிறது.