சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Military stalemate in Libya heightens US-NATO crisis

லிபியாவில் இராணுவத் தேக்கம் அமெரிக்க நேட்டோ நெருக்கடியை உயர்த்திக்காட்டுகிறது

By Patrick O’Connor 
5 July 2011

Use this version to print | Send feedback

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக அன்றாடம் அமெரிக்க-நேட்டோ குண்டுத் தாக்குதல்கள் லிபியா மீது நடத்தப்பட்டுள்ள போதிலும்கூட, எழுச்சிப் போராளிகள் என்று அழைக்கப்படுபவர்கள் மார்ச் மாதம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு அப்பால் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறுவதில் தோல்வி அடைந்துள்ளனர். வாஷிங்டன், லண்டன் மற்றும் பாரிசில் எதிர்பார்க்கப்பட்டது போல் கடாபி அரசாங்கமும் ஒன்றும் சிதைந்துவிடவில்லை. எண்ணெய் செழிப்புடைய இந்நாட்டிலுள்ள தேக்க நிலை சட்டவிரோத ஆட்சி மாற்றத்திற்கான செயலில் ஈடுபட்டுள்ள ஏகாதிபத்திய சக்திகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை உயர்த்திக்காட்டுகிறது.

மார்ச் 18ம் திகதி, வான்வழித் தாக்குதல்களை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, ஜனாதிபதி பராக் ஒபாமா இப்போரில் அமெரிக்காவின் பங்குபற்றல்சில நாட்களே, வாரங்கள் அல்லஇது இருக்கலாம் என்று அறிவித்தார். 15 வாரங்களுக்கு பின்னரும்கூட, ஒபாமாவும் அவருடைய ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்களும் போருக்கு உள்நாட்டில் கணிசமான எதிர்ப்பை எதிர்கொள்வதுடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு அழுத்தம் பெருகுவதையும் காண்கின்றனர். இன்டிபென்டென்ட்  சமீபத்தில் பெயரிடப்படாத மூத்த பிரெஞ்சு, பிரிட்டிஷ் இராணுவத் தலைவர்களை மேற்கோளிட்டுள்ளது; அவர்கள் கடந்த வாரம் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி போர் உரிய நேரத்தில்வெற்றிகரமாக முடியவேண்டும்அதையொட்டி வெற்றி அறிவிப்பை ஜூலை 14 பஸ்டில் தினத்தன்று அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரியதாக கூறினர்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் தலையீட்டிற்கு லிபியாவின் எதிர்ப்பை நசுக்குவதில் நேட்டோவின் இயலாமை குறித்து பீதி அடைந்துள்ளன. பைனான்சியல் டைம்ஸின் விமர்சகர் மைக்கல் பீல் நேற்று எச்சரித்தார்: “ஆட்சியை பலர் விட்டுச் செல்லுதல், பொருளாதாரத் தடைகள் மற்றும் நேட்டோ வான் தாக்குதல்கள் ஆகியவற்றால் வலுவிழக்கிறது என்பது தெளிவானாலும், பல லிபியப் பகுப்பாய்வாளர்கள் அது விரிசல் கண்டுவிடும் அல்லது விரைவில் தகர்ந்துவிடும் என்று கூறவில்லை. சில நோக்கர்கள் மிக மோசமாகப் போனால் வெளிப்படக்கூடியதிரிப்போலி கோட்டை”, இதில் கேணல் கடாபி தன்னுடைய படைகளை தலைநகருக்குத் திரும்பப் பெற்றுக் கொள்ளுகிறார், தன்னுடைய வலுவாக்கப்பட்ட வளாகத்தில் தங்குகிறார், அவரைச் சுற்றி தெருக்களில் Gotterdammerung வருவதைக் காண்கிறார்

பிரிட்டனின் பாதுகாப்பு மந்திரி லியம் பாக்ஸ் பாராளுமன்றத்தில் கடாபியை அகற்றுவதற்குஇன்னும் கணிசமான கால அவகாசம் பிடிக்கலாம்என்று எச்சரித்தார். “எதிர்ப்புச் சக்திகள் திரிப்போலியில் நுழைவதற்கான வாய்ப்பு அண்மையில் இல்லை என நான் நினைக்கிறேன்என்றும் அவர் கூறினார்.

தனக்கு பதிலாகச் செயல்படும், இடைக்காலத் தேசியக் குழு என அழைக்கப்படுவதின் படைகளை நேட்டோ கடாபியை அகற்றி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரெஞ்சுப் பொருளாதார மூலோபாய நலன்களுக்கு நெருக்கமாகப் பிணைந்துள்ள கைப்பாவைஆட்சி ஒன்றை லிபியாவில் நிலைநிறுத்தும் இலக்கு கொண்டுள்ளது. கூட்டுச் சக்திகள் இப்பொழுது பெரிதும் ஐ.நா.பாதுகாப்புச் சபைத் தீர்மானம் எண் 1973 ஐச் செயல்படுத்துவதாகக் கூறும் போலித்தனத்தையும் அதன் தீர்மானக் கட்டளையான குடிமக்களைப் பாதுகாத்தல் என்பதையும் கைவிட்டு விட்டன.

சிறப்புப் படைகளும் உளவுத்துறை முகவர்களும் தரைப் பகுதியில் தீவிரமாகச் செயல்படுகின்றன. “எழுச்சிபோராளிகளின் நடவடிக்கைகளை இயக்குகின்றன. அதே நேரத்தில் நேட்டோ கடாபி எதிர்ப்புச் சக்திகளுக்காக தன் குண்டு பொழியும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது. பிரச்சாரத்தின் தெளிவான இராணுவத் தர்க்கம் இன்னும் கூடுதலான விரிவாக்கத்திற்கு என்று உள்ளது. இதில் திரிப்போலி மக்களை அச்சுறுத்தும் நோக்கம் கொண்ட வான் தாக்குதல்களின் அதிகரிப்பு, கடாபி மற்றும் அவருடைய குடும்பத்தை படுகொலை செய்யும் முயற்சிகள் மற்றும் ஒரு தரைப்படை மூலம் படையெடுப்பிற்கு தயாரிப்பு ஆகியவை உள்ளன.

கடந்த வாரம் பிரான்ஸ் தான் கடாபி எதிர்ப்புச் சக்திகளுக்கு மேற்கு நபுசா மலைப்பகுதிகளில், ராக்கட் ஏவுகணைகள், தாக்குதல் நடத்தும் ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் டாங்குகளை வீழ்த்தும் ஏவுகணைகள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டது. நேற்று லிபிய அரசாங்கம் அது இன்னும் ரைபிள்கள், வெடிமருந்துகள், வெடிகுண்டுகள் அடங்கிய இரு படகுகள், நவுசா மலைப்பகுதிகளிலுள்ள போராளிகளுக்கு கட்டார் அனுப்பியதாகக் கூறப்படுவதை வழிமறித்துள்ளதாகத் தெரிவித்தது. இச்செயற்பாடுகள் இப்பொழுது வெளிப்படையாக நேட்டோவால் ஆதரிக்கப்படுகின்றன. நேட்டோ அமைப்பின் தலைவர் Anders Fogh Rasmussen “ஆயுதங்களை அளித்தல் குடிமக்களைப் பாதுகாக்கும் செயலின் ஒரு பகுதியாக நடக்கிறதுஎன அறிவித்தார்.

ஒரு நேட்டோ-ரஷ்ய குழுக் கூட்டத்தில் ரஸ்முசென் இந்த அபத்தமான கூற்றை வெளியிட்டார். ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் துப்பாக்கிகள் அளிப்பதைச் சட்ட விரோதம் எனக் கண்டித்தார். “[மற்றொரு ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் கீழுள்ள] ஆயுதம் வழங்குதலின் மீதான தடை சிறிதும் குழப்பத்திற்கு இடமில்லாததுஎன நாங்கள் கருதுகிறோம் என்று அவர் அறிவித்தார். “ஆயுதங்கள் வழங்கப்படுதல் அத்தீர்மானத்தை மீறுவதாகும்…. நேட்டோ மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளதுஅதாவது அது மேற்கோளிடும் தீர்மானம் எதையும் செய்ய அனுமதிக்கிறதுஎன்றார் அவர்.

ரஷ்ய அரசாங்கம் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகப் ஜுமாவை நேட்டோவுடன் விவாதத்தில் சேருமாறு அழைத்தார். கடந்த வெள்ளியன்று ஆபிரிக்க ஒன்றியம் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு லிபியப் போர் நிறுத்தப்பட வேண்டும் எனக்கோரியது.

தென்னாபிரிக்கத் தலைமையிலான திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், நேட்டோத் தாக்குதல் நிறுத்தப்படுதல், கடாபி அரசாங்கத்திற்கும் இடைக்கால தேசியக் குழுவிற்கும் இடையே பிராந்திய ஆபிரிக்க சக்திகள் முனைப்பில் நடத்தும் பேச்சுவார்த்தைகள், .நா. தலைமையில் சர்வதேச சமாதானம் பாதுகாக்கும் படையின் தலையீடு ஆகியவை உள்ளன.

தன் உறுப்பு நாடுகள் அரசியல் உந்துதலில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கடாபி, அவருடைய உதவியாளர்களுக்கு எதிரான பிடி ஆணைகளை அங்கீகரிக்காது என்றும் ஆபிரிக்க ஒன்றியம் கூறியுள்ளது. அமைப்பின் தலைவரான ஜீன் பிங் ICC “பாகுபாடுகாட்டுகிறது, அது ஆபிரிக்காவில் இழைக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றங்களை இலக்கு வைக்கிறது, ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் பிற இடங்களில் அமெரிக்கா இழைத்த குற்றங்களை புறக்கணிக்கிறது என்று கூறினார்.

பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு வேண்டும் என்று ஆபிரிக்க சக்திகள், இத்தாலி அல்லது ரஷ்யா முன்வைக்கும் திட்டங்கள் புதிய அமெரிக்க-நேட்டோ ஆத்திரமூட்டல்களைத்தான் சந்திக்கின்றன. கூட்டுச் சக்திகள் தங்கள் செயற்பட்டியலில் குறுக்கிடும் எந்த இராஜதந்திர உத்திகளையும் சேதத்திற்கு உட்படுத்துவது என்று தெளிவாக உறுதி கொண்டுள்ளன.

ஆபிரிக்க ஒன்றியம் தன் திட்டத்தை வெளியிட்டதும் அமெரிக்க, ஐரோப்பியச் சக்திகள் குண்டுத் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. Agence France-Presse கூறியது: “நேட்டோத் தகவல்கள் திங்களன்று அதன் போர் விமானங்கள் மிக விரைவாக லிபியாவில் குண்டுத் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளதைக் காட்டுகின்றன. நேட்டோ 71 வான் பறப்புக்களை கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்டது, இது கடந்த சில வராங்களில் காணப்பட்ட அன்றாட வேகத்தைப் போல் இருமடங்கு ஆகும். ஞாயிறு இரவு கிழக்கு முன்னணியில் இருக்கும் பிரேகா, திரிப்போலியைச் சுற்றியுள்ள இலக்குகளைத் தாக்கியது. 17 தாக்குதல்கள் கவச வாகனங்கள், கட்டுப்பாட்டு மற்றும் ஆணையிடும் பகுதிகளைத் தாக்கின. பிரேகாவில் இராணுவச் சேமிப்புக் கிடங்கு, ஒரு டாங்கு ஆகியவை தாக்கப்பட்டன; இது எழுச்சியாளர் தலைநகரான பெங்காசியில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது.”

லிபிய அரசாங்கம் நேட்டோ சக்திகள் இடைக்கால தேசியக் குழுவுடன் நடத்தப்பட வேண்டிய பேச்சுவார்தைதகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. கடாபி அதிகாரிகளுடன் பேச்சுக்களில் பங்கு பெறுவதை TNC மறுத்துள்ளது; ஆனால் அரசாங்கம் அது அப்டெல் பட்டா யூனெஸ் அல் அபிடி, முன்னாள் பாதுகாப்பு மந்திரியைச் சந்தித்ததாகவும், அப்பொழுது இத்தாலிய அதிகாரிகள் உடனிருந்தனர் என்றும் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டனின் டெலிகிராப்  கருத்துப்படிசில எதிர்ப்பு பழங்குடித் தலைவர்களும் முஸ்லிம் பிரதர்ஹுட்டின் உறுப்பினர்களும் இதில் தொடர்புடையதாகத் தெரிகிறது.”

லிபியாவின் வெளியுறவுத் துணை மந்திரி கலீட் கைம் விவாதங்களில் முன்னேற்றம்சில பகுதிகளில்உள்ளது என்றார்; ஆனால்நேட்டோவின் சில உறுப்பு நாடுகள் அரசாங்கத்திற்கும் எழுச்சியாளர்களுக்கும் இடையே பேச்சுக்களுக்கு ஆதரவு தரவில்லை”, அதனால்தான்பேச்சுக்களின் விளைவு பற்றி தாமதம் உள்ளதுஎன்றார்.

இடைக்காலத் தேசியக் குழுவின் தலைவர் முஸ்தாபா அப்துல் ஜலீல் ஞாயிறன்று தான் கடாபியிடம் அவர் அதிகாரத்தைக் கைவிட்டால் லிபியாவில் இருக்கலாம் எனக் கூறியதாகத் தெரிவித்தார். நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது: “ஒரு மாதம் முன்பு ஐக்கிய நாடுகள் தூதர் மூலம் கொடுக்கப்பட்ட இந்த அளிப்பு உட்குறிப்பான அங்கீகாரமாக உள்ளது; இரு புறத்திலும் உரத்த மறுப்புக்கள் இருந்தாலும்கூட. கேணல் கடாபியோ அவருடைய எதிர்ப்பாளர்களோ இராணுவரீதியாக வெற்றி அடைய முடியாது.”

ஜலில் உடனடியாக அளிப்பை அது பகிரங்கமானவுடன் திரும்பப் பெற்றார்; “லிபியாவில் இப்பொழுது அல்லது வருங்காலத்தில் கடாபி இருக்கும் வாய்ப்பு முற்றிலும் இல்லைஎன்றும் அறிவித்தார். இந்த அறிக்கை ஆழ்ந்த பிளவிலுள்ள இடைக்கால தேசிய குழுவிற்குள் ஒற்றுமை உள்ளது என்ற போலித்தனத்தைக் காட்டும் முயற்சியாகத் தோன்றியது. இதில் பல முன்னாள் கடாபி உதவியாளர்கள், இஸ்லாமியவாத சக்திகள், அமெரிக்க உளவுத்துறை சொத்துக்கள் ஆகியோர் உள்ளனர். TNC யின் செய்தித் தொடர்பாளர் அப்டெல் ஹபிஸ் கோகா முன்னதாக ஜலீலை மறுத்துப் பேசி போருக்குப் பின் லிபியாவில் கடாபி இருப்பது பற்றி எவரும் விவாதிக்கவில்லை என்றார்.

கடாபிக்கு சலுகை அளிக்க ஜலில் முன்வந்தார் என்ற உண்மை குறைந்தபட்சம் TNC யின் ஒரு பிரிவில் இராணுவ நிலைமை தேக்கத்தை அடைந்துவிட்டது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேறு வழிவகைகள்தான் தேவை என்ற உணர்வு வந்துவிட்டதைத்தான் பிரதிபலிக்கிறது.