WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஓய்வூதியங்கள்
மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு தொழிற்சங்கங்கள் முன்னேற்றப்பாதை
எதையும் வழங்கவில்லை
Statement of the Socialist Equality Party (Britain)
30 June 2011
இன்றைய
வேலைநிறுத்தங்கள் மீது,
கன்சர்வேடிவ்-லிபரல்
ஜனநாயகக் கூட்டணி, தொழிற்
கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் செய்தி ஊடகம் ஆகிய கண்டனங்களைக்
குவித்துள்ளமையானது, ஒரு
அடிப்படை உண்மையான 1930களுக்கு
பின்னர் மிகப் பெரிய சிக்கன நடவடிக்கைகள் பொதியை எதிர்கொண்டுள்ள நிலையில்,
இத்தகைய வரையறையுடைய குறைந்த நடவடிக்கைகள்
தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தங்கள் உறுப்பினர்களையும் மற்றும் ஒவ்வொரு
தொழிலாளரையும்,
இளைஞரையும் கணக்கிடப்பட்ட காட்டிப் கொடுப்பு என்ற அடிப்படை
காரணத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பிவிடப்படக்கூடாது.
அரசாங்கம்
ஒருதலைப்பட்சமாக 5.5
மில்லியன் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வுதிய உரிமைகளை
நசுக்கியுள்ளது. இவர்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு குறைந்த ஊதியம் பெறுவதற்காக
அதிக கட்டணங்களை செலுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவர்.
செலவுக் குறைப்புக்கள் அனைத்துமே இருப்பதைப் போல் இது ஒரு
அப்பட்டமான பகற்கொள்ளை ஆகும்.
மிகப் பெரிய கொள்ளையைத்தான் இது தொடர்கிறது—அதாவது
வரி செலுத்துபவர்கள் நிதியில் இருந்து பிரிட்டனின் வங்கிகளையும் பெரும்
செல்வந்தர்களையும் 2008
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிணை எடுப்பதற்காக பில்லியன்களை திருடியதாகும்.
மேலும் எந்தவொரு தொழிலாளரின் சட்டப்படியான ஓய்வூதிய தொகையை
அகற்றுவதை நெறிப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது,
குறிப்பாக இளந்தலைமுறையினருடையதாகும்.
ஆயினும்கூட
இன்றைய வேலைநிறுத்தத்தில் நான்கு தொழிற்சங்கங்கள் பங்குபெறுகின்றன. அவை தேசிய
ஆசிரியர்கள் தொழிற்சங்கம்,
ஆசிரியர்கள்,
விரிவுரையாளர்கள் சங்கம்,
பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தொழிற்சங்கம் மற்றும் பொது மற்றும் வணிகப் பணிகள்
தொழிற்சங்கம் என்பவையாகும்.
பதிவேட்டின்படி இவைகளின் உறுப்பினர் எண்ணிக்கை 750,000
தான்.
அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்துவதை வழிநடத்திய தொழிற்சங்கங்களின் காங்கிரஸ்
(TUC) இந்தப் பெயரளவு எதிர்ப்பு
நடப்பதையும் தடுப்பதற்குத் தன்னால் இயன்றதைச் செய்தது.
மூன்று பெரிய பொதுத்துறைத் தொழிற்சங்கங்களான
Unison, Unite, GMB ஆகியவை மொத்தத்தில்
3.5 மில்லியன் உறுப்பினர்களை
கொண்டவைகள் வேலைநிறுத்தத்தில் பங்கு பெற மறுத்துவிட்டன.
கடந்த
13 மாதங்களில்
இத்தகைய வேலைநிறுத்தம் நடப்பது இதுதான் முதல் தடவை என்பது அரசாங்கத்தின் சிக்கன
நடவடிக்கைகளை பொறுத்தவரை TUC
உண்மையில் எங்கு உள்ளது என்பதைத்தான் உறுதி செய்கிறது.
உண்மையில்,
வேலைநிறுத்த நடவடிக்கை மூலம் இழக்கப்பட்ட நாட்கள் இரண்டாம் உலகப்
போருக்குப் பின் அதிகக்குறைவாக உள்ள 2010
இல் கூட்டணி அதிகாரத்தை எடுத்துக் கொண்ட ஆண்டிலாகும்.
பதவிக்கு
வந்ததிலிருந்து 143,000
பொதுத்துறை வேலைகள் குறைக்கப்பட்டு விட்டன.
மார்ச் மாதம் 100,000
த்திற்கும் மேற்பட்ட பொதுத்துறை ஊழியர்களுடனான ஒப்பந்தம்
கிழித்தெறியப்பட்டு அதற்குப் பதிலாக குறைந்த ஊதியம் மற்றும் பணிநிலைமைகள்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதைத்தவிர, அரசாங்கம் இரண்டு
ஆண்டு காலத்திற்கு செவிலியர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் நகரவைத் தொழிலாளர்களின் ஊதியங்களில் இரண்டு
ஆண்டுகளுக்கு உயர்வு இல்லை என்ற விதியை தொழிற்சங்கங்களின் உடன்பாட்டுடன்
சுமத்தியுள்ளது.
வேலைகளை
அகற்றுதல்,
ஊதியங்கள்,
பணிநிலைமைகள் அழிக்கப்படுதல்,
சமூகநலப் பணிகள் தகர்க்கப்படுதல் ஆகியவற்றை எப்படி தொழிற்சங்கங்கள் எதிர்க்க
முடியாதோ, அதேபோல்
தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய உரிமைகளுக்கு எதிரான தாக்குதலுக்கு எதிராக போராட்டத்தை
நடத்துவதற்கும் நம்பப்பட முடியாது.
தன் நிலைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்படாதது என்று கூட்டணி
வலியுறுத்தும் வகையிலேயே இவை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு வாதிடுகின்றன.
ஏப்ரல் மாதம்
அரசாங்கம் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வூதிய பணவீக்க விகித மதிப்பை ஒரு குறைந்த
கணக்கீட்டில் குறிப்பிட்ட முறையில் நிர்வாக அளவில் ஒரு பேனா அசைவில்
குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது.
தொழிற்சங்கங்கள் சுட்டுவிரலைக்கூட இதை எதிர்த்து
எழுப்பவில்லை. இப்பொழுது
அரசாங்கம் இன்றைய வேலைநிறுத்தங்களை எதிர்கொள்ளும் வகையில் தொழிற்சங்க விரோத
சட்டங்களை இறுக்கிப்பிடிக்க உள்ளதாக அச்சுறுத்தியுள்ளது.
ஆனால் இதுவும்கூட தொழிற்சங்கங்களை எப்படி
1983ம் ஆண்டில் முதல் முதலாவது
தொழிற்சங்க விரோதச் சட்டங்கள் இயற்றப்பட்டபோது நடவடிக்கைக்கு தூண்டவில்லையோ,
அல்லது அவை முந்தைய தொழிற்கட்சி ஆட்சி பதவியில்
இருக்கையிலும் நடவடிக்கைக்கு தூண்டவில்லையோ,
அப்படித்தான் இப்பொழுதும் விட்டுவிடும்.
மாறாக அவை இத்தகைய அச்சுறுத்தல்களை எந்த எதிர்ப்பும்
சாத்தியமில்லை என்று வாதிடுவதற்குத்தான் பயன்படுத்தும்.
தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தை போலவே பெரும் நிதிய நிறுவனங்கள் கோரும் சிக்கன
நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளன என்பதுதான்
உண்மை.
தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அவர்களின் ஒத்த அரசாங்கம் மற்றும் பெருநிறுவன
நிர்வாகத்தினருக்கும் இடையே அடிப்படையில் வேறுபாடுகள் ஏதும் இல்லை.
இவர்களும் அதே உயர் ஊதிய,
சமூகத்தின் உயர் அடுக்கில் இருந்து வருகின்றனர்.
தங்கள் சலுகைகளை தங்களுக்கு கீழுள்ள பரந்த வெகுஜனத்தின்
இழப்பில் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் உறுதி கொண்டுள்ளனர்.
இதே
நிலைப்பாடுதான் தொழிற் கட்சிக்கும் பொருந்தும்.
13 ஆண்டுகள் அது பதவியில் இருந்த காலத்தில்,
தொழிற்கட்சியானது லண்டன் நகரசபை கோரிய கொள்கைகள்
அனைத்தையும் விசுவாசத்துடன் செயல்படுத்தியது.
பொருளாதாரப் பேரழிவில் முடிவுற்ற குற்றம் சார்ந்த பொறுப்பற்ற ஊக
நடவடிக்கைக்கு எரியூட்டுவதில் அது நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளது.
அதே போல் பின்னர் வங்கிப் பிணையெடுப்பிற்கும் அதுதான்
பொறுப்பு ஆகும்--இப்பொழுது
தங்கள் வாழ்க்கைத்தர இழப்புக்கள் மூலம் தொழிலாளர்கள்தான் அதற்கு விலை கொடுத்துக்
கொண்டிருக்கின்றனர்.
சிக்கன
நடவடிக்கைகளை இயற்றுவதில் தொழிற் கட்சிதான் முதன்மையாக இருந்தது என்பது மட்டுமின்றி,
இப்பொழுது அது கூட்டணியின் சொந்த வெட்டுக்கள் திட்டத்தை
செயல்படுத்தவும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
பொதுத்துறை ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் வேலை மற்றும்
ஓய்வூதியங்கள் முன்னாள் மந்திரியாக தொழிற்கட்சி அரசாங்கத்தில் இருந்த ஹட்டன்
பிரபுவின் பரிந்துரைகளைத் தளமாகக் கொண்டது.
தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிராங்க் பீல்ட்
கூட்டாட்சியின் சார்பாக பொதுநலன்களின் மீதான தாக்குதல்களில் முன்னணியில்
இருக்கிறார்.
அதே நேரத்தில் முன்னாள் சுகாதார மந்திரியான ஆலன் மில்பர்ன்
இப்பொழுது அரசாங்கம் இன்னும் அதிகமாகவும் விரைவாகவும் தேசிய சுகாதாரப் பணியைத்
தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கோரியுள்ளார்.
தொழிற்கட்சியின் நிழல் நிதி மந்திரி எட் பால்ஸ் வேலைநிறுத்தங்களை
“அரசாங்கத்தின் பொறியில்
விழுவது” என்று தாக்கியுள்ளதில்
வியப்பு ஏதும் இல்லை; அதே
நேரத்தில் பொதுத்துறை ஓய்வூதியங்கள் முற்றிலும் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று
வலியுறுத்தியுள்ளார்.
ஒரு சில
தொழிற்சங்கங்கள் 24
மணி நேர எதிர்ப்பிற்கு அழைப்பு விடுக்க முடிவெடுத்துள்ளதால்
இச்சான்று கடுகளவும் மாறிவிடாது.
ஈடுபட்டுள்ளவர்கள் எவரும் ஓய்வூதிய உரிமைகள் மீதான தாக்குதலை
எதிர்த்த வகையில் நம்பிக்கைக்கு உகந்த சான்றுகளைக் கொண்டிருக்கவில்லை.
உண்மையில் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் கூறும் நியாயம்
கூட்டணித் திட்டங்கள் தேவையற்றவை,
ஏனெனில் அவை பொதுத்துறைத் தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமைகளை
குறைமதிப்பதற்கு சங்கங்கள் செய்துள்ள பணிகளை அங்கீகரிக்கவில்லை என்பதுதான்.
குறிப்பாக தொழிற்கட்சி அரசாங்கத்துடன்
2007ம் ஆண்டில் முதலாளிகளின் பங்களிப்பு
தொகை வரையறைக்கு அவர்கள் உடன்பட்டது,
ஊழியர் பங்களிப்பு தொகையை அதிகரித்தது,
ஓய்வூதிய வயதை புதிதாகச் சேருபவர்களுக்கு
65 என உயர்த்தியது ஆகியவற்றில் கொண்ட
பங்கும் சரியாக உணரப்படவில்லை.
பல்கலைக்கழகங்கள் ஓய்வூதியத் திட்டம் பற்றிய அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு
UCU ஏற்கனவே
உடன்பட்டுள்ளது.
இது 1992
க்கு முன்பிருந்த பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் பொருந்தும்.
UCU மாற்றுத் திட்டங்களை முன்வைத்துள்ளது;
அவற்றின்படி இறுதி ஊதியத் திட்டம் அகற்றப்படும் மற்றும்
பணவீக்கத்திற்கு CPI நடவடிக்கை
ஓய்வூதியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது என்பதும் ஏற்கப்பட்டுள்ளது.
UCU வின் நடவடிக்கை ஆசிரியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின்
கீழ் வரும் ஊழியர்களை மட்டும்தான் ஈடுபடுத்தும்;
இது கல்லூரிகள்,
மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் தினத்தில் நடைமுறைக்கு
வருகிறது!
தன்னுடைய
பங்கிற்கு “இடது”
எனப்படும் PCS
ஏற்கனவே “அரசாங்கத்திடம்
இருந்து கணிசமான சலுகைகள்”
வருமேயானால் தானும் உடன்படும் என்ற குறிப்பைக் காட்டியுள்ளது.
மிகப் பெரிய
பொதுத்துறைத் தொழிற்சங்கமான
Unison ஐப் பொறுத்தவரை,
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதன் பொதுச் செயலாளர் டேவ் பிரென்டிஸ்—“சூடான
இலையுதிர்காலம்” வரும் என்ற
அச்சுறுத்தல்களைக் கொடுக்கும் வெகுஜனத் திருப்தி உரைகளை அளிப்பவர்—அரசாங்கத்துடன்
நடக்கும் பேச்சுக்களுக்குக் குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக வேலை
நிறுத்தத்திற்கு உறுப்பினர்கள் வாக்களிப்பதை மறுத்துவிட்டார்.
பிரிட்டனிலுள்ள தொழிலாளர்கள் ஸ்பெயின்,
கிரேக்கம்,
போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்தில் இருக்கும் நிலையைப் போல்தான்
எதிர்கொள்ளுகின்றனர் என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
அங்கெல்லாம் வாழ்க்கைத் தரங்கள் சிதைக்கப்படுகின்றன.
வாடிக்கையாகக் கூறப்படுவது போல் தொழிலாளர்கள் குறுகிய
காலத்தில் “மீட்பை”
கொண்டுவருவதற்காக தியாகங்கள் ஏற்க வேண்டும் என்பதல்ல இது.
மாறாக,
பொருளாதார நெருக்கடி இன்னும் பாரியளவு செல்வத்தை உழைக்கும் மக்களிடம் இருந்து
பெரும் செல்வந்தர்களுக்கு மாற்றுதல்,
இன்னும் பெரிய அளவு சுரண்டல் மூலம் சமூக உறவுகளை மறு கட்டமைத்தல்
ஆகியவற்றிற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது.
முதலாளித்துவ
இலாப முறையில் ஒரு அடிப்படை நெருக்கடியைத்தான் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
1930களைப் போலவே,
இது பெரும் வேலையின்மை,
வறுமை, போர்
என்ற அச்சறுத்தல்களைக் கொடுக்கிறது.
தொழிற்சங்கங்களோ,
தொழிற்கட்சியோ தொழிலாளர்களின் நலன்களுக்கு ஏற்ப செயல்புரியும் எனக்
கூறுவதற்கு இல்லை. மாறாக,
ஐரோப்பாவைப் போலவே இங்கும்,
அவை நிதியத் தன்னலக்குழுவின் சார்பில் வர்க்கப் போராட்டத்தை
நாசப்படுத்தி அடக்குவதில் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளன.
தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக சாதாரண தொழிலாளர்கள் அடங்கிய குழுக்களை
ஒவ்வொரு பணியிடத்திலும் சமூகத்திலும் ஸ்தாபிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி
அழைப்பு விடுகிறது.
இந்த பரந்துபட்ட குழுக்கள் தான் கூட்டணியை வீழ்த்தி
அதற்குப் பதிலாக சோசலிசக் கொள்கையில் உறுதிப்பாட்டைக் கொண்ட தொழிலாளர் அரசாங்கத்தை
நிறுவுவதற்கான வெகுஜன இயக்கத்தின் மையமாக இருக்க வேண்டும்.
தனியார்
இலாபத்திற்கு என்றும் இல்லாமல்,
சமூகத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் பொருளாதார
வாழ்வு மறுசீரமைக்கப்படுவது ஒன்றுதான் இராணுவவாதம்,
போர் ஆகியவற்றிற்கு முற்றுப் புள்ளி வைத்து,
வேலைகள்,
கௌரவமான வாழ்க்கைத் தரங்கள்,
கல்வி,
சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கும் முதியோர்களுக்கும் நல்ல வருங்காலம்
ஆகியவற்றைப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கும். |