WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
Protests, strikes continue against military junta in Egypt
எகிப்தில் இராணுவக் குழுவிற்கு எதிரான எதிர்ப்புக்கள் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன
By
Jonathan Aswan
4 July 2011
Back to
screen version
வெள்ளியன்று
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் குறைந்த பட்சம் எகிப்தில் ஐந்து
மாநிலங்களில் தெருக்களுக்கு வந்து அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள இராணுவக் குழு மற்றும்
அதன் தலைவர் பீல்ட் மார்ஷல் மகம்மது ஹுசைன் தந்தவியின் அரசியலைக் கண்டித்தனர்.
செவ்வாய்
இரவும் புதன் காலையும் எதிர்ப்பாளர்கள் மற்றும் எகிப்தில் சமூகப்
போராட்டங்களின்போது கொல்லப்பட்ட குடும்பத்தினரின் மீது நடத்தப்பட்ட வன்முறைத்
தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில் எதிர்ப்புக்கள் நடைபெற்றன.
வன்முறைத்
தாக்குதலின்போது இராணுவ ஆட்சியும் பொலிசாரும் குண்டர்களுடன் இணைந்து மிருகத்தனமாக
ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல்,
ரப்பர்த் தோட்டாத்
தாக்குதல் ஆகியவற்றை நடத்தினர்.
1,100 பேருக்கு மேல்
காயமுற்றனர்;
நேரில்
பார்த்தவர்களின் சாட்சியப்படி,
பலர் மோதல்களில்
இறந்து போயினர்.
இந்த
எதிர்ப்பு தினத்திற்கு
“பழிக்குப்பழி
வாங்கும் வெள்ளி”
என்று
பெயரிடப்பட்டது.
ஆயிரக்கணக்கான
மக்கள் அலெக்சாந்திரியாவில் தெருக்களுக்குச் சென்று அல் குவெட் இப்ராஹிம் மசூதிக்கு
முன்னால் கூடி,
புரட்சி
தொடங்கியதில் இருந்து
1,000
எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ்
அதிகாரிகள் மீது உடனடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.
எதிர்ப்பாளர்களில்
சிலர் முக்கிய கார்னிஷ் சாலையையும் தடைக்கு உட்படுத்தி சமீபத்திய பொலிஸ்
மிருகத்தனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
புரட்சியின்
முக்கிய மையங்களில் ஒன்றான,
தொழில்துறை நகரமான
சூயஸில்,
நூற்றுக்கணக்கான
எதிர்ப்பாளர்கள் அர்பாயீன் சதுக்கத்திற்கு வந்து அகற்றப்பட்டுவிட்ட சர்வாதிகாரியான
ஹொஸ்னி முபாரக் குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரினர்.
நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்ப்புக்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் இஸ்மைலியா,
பெஹெரியா மற்றும்
க்வேனாவில் கூடினர்.
கெய்ரோவில்
ஆயிரக்கணக்கானவர்கள் தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கி முன்னேறினர்.
அங்கு ஒரு முடிவற்ற
உள்ளமர்வுப் போராட்டம் புதன்கிழமை மோதல்களில் இருந்து நடத்தப்படுகிறது.
நேரில்
பார்த்தவர்கள் இதைப்பற்றி
WSWS இடம்
பேசுகையில் அகற்றப்பட்ட சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் அவர்களுக்கு எதிராகப்
பயன்படுத்திய பெரும் வன்முறையுடன்தான் இப்பொழுது நடப்பதையும் ஒப்பிட்டுக் கூறினர்.
“ஜூலை
29 அன்று நாங்கள்
உண்மையிலேயே ஜனவரி
28ம் திகதி
உணர்ந்ததைப் போலவே உணர்ந்தோம்.
அப்பொழுது
“கோபமான
வெள்ளிக்கிழமை”
அன்று நாங்கள்
பொலிஸிற்கு எதிராகப் போராடினோம்”
என்று மகம்மத் என்ற
பெயர் கொண்ட ஒரு இளைஞர் கூறினார்.
அவருடை
நண்பர் சேர்த்துக் கொண்டதாவது:
“உண்மையில் நடப்பது
அனைத்தும் எதுவும் உண்மையாக மாறவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன.
எதிர்ப்பாளர்கள்
மீது எதற்காக இத்தகைய வன்முறை?
எல் அட்லி
[இழிந்த முன்னாள்
உள்துறை மந்திரி]
போன்ற கொலைகாரர்கள்
மீதான விசாரணை ஒவ்வொரு முறையும் ஏன் தள்ளிவைக்கப்படுகிறது?
ஏன் பலவும் சிறந்த
முறையில் மாற்றி அமைக்கப்படவில்லை?
முபாரக்கின்
ஆட்சிதான் இன்னமும் அதிகாரத்தில் இருப்பதாகத்தான் நாங்கள் உண்மையில் உணர்கிறோம்.”
இத்தகைய
உணர்வுகள் கிட்டத்தட்ட ஐந்து மாத கால இராணுவ ஆட்சிக்குப்பின் எகிப்திய தொழிலாளர்கள்
மற்றும் இளைஞர்களிடையே பொதுவாகக் காணப்படுகின்றன.
சதுக்கத்தின்
நடுவில் நிறுவப்பட்டுள்ள ஒரு கூடாரத்தில்,
கீழ்க்கண்ட சொற்களை
பார்க்கலாம்: “இராணுவக்
குழு என்பது முபாரக் ஆட்சியின் விரிவாக்கம்தான்.”
கூடாரத்திற்கு அருகே நின்றிருந்த ஒரு பெண் எதிர்ப்பாளர் விளக்கினார்:
“இராணுவக் குழு
முபாரக் போன்ற அதே அரசியல் முறையையே எகிப்திய மக்களுக்கு எதிராக செய்து
கொண்டிருக்கிறது.
நெருக்கடிச் சட்டம்
நடைமுறையில் உள்ளது,
இராணுவக் குழு
எதிர்ப்புக்களையும் வேலைநிறுத்தங்களையும் தடைசெய்து ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது,
அமெரிக்கா மற்றும்
இஸ்ரேலின் முகவர்போல்தான் செயல்படுகிறது.”
தஹ்ரிர்
சதுக்கத்தில் எதிர்ப்பாளர்களின் கோஷங்கள் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக
வெளிப்படையாக உள்ளன.
கோஷங்களில்
கீழ்க்கண்டவையும் அடங்கியுள்ளன:
“பீல்ட் மார்ஷலின்
வீழ்ச்சியை மக்கள் விரும்புகின்றனர்”,
“தந்தவிதான் முபாரக்”,
“இராணுவக்குழு,
போலிஸ் ஒழிக”.
எதிர்ப்பாளர்கள்
“ஒரு இரண்டாவது
புரட்சி”
அல்லது
“புதிய புரட்சி”
தேவை என்றும்
கூக்கூரலிட்டனர்.
மற்றவர்கள் முபாரக்,
எல் அட்லி,
தந்தவி போன்றார்
பகிரங்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கோரினர்.
பிற்பகல்
4 மணியளவிற்கு,
ஒரு அணிவகுப்பு
தஹ்ரீரிலிருந்து தியாகிகளின் குடும்பங்களுக்கு நீதிகோரி அமைச்சரக அலுவலகங்களை
நோக்கிச் சென்றது.
மற்றோர்
ஆர்ப்பாட்டம் உள்துறை அமைச்சரகத்திற்கு சென்றது.
அங்கு பொலிஸ்
அதிகாரிகள் எதிர்ப்பாளர்களை தூண்டிவிட முயன்ற வகையில் கற்களை வீசி,
ஆத்திரமூட்டும்
சைகைகளையும் காட்டினர்.
எதிர்ப்பாளர்கள்
கற்களை திருப்பி வீசி,
பொலிஸ்,
இராணுவத்திற்கு
எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இத்தகைய
சிறு நிகழ்வுகளைத் தவிர,
எதிர்ப்பாளர்களுக்கு
அருகில் பொலிஸ் அல்லது இராணுவப் படையினர் நிறுத்தப்படவில்லை.
புதிய வன்முறை மூலம்
எதிர்ப்பாளர்களை எதிர்கொள்வதற்கு இராணுவக்குழு வலுவற்றது என்பதை வெளிப்படையாக
உணர்கிறது.
ஆனால்
இராணுவம் வரவிருக்கும் நாட்களிலும் மாதங்களிலும் இன்னும் கூடுதலான வன்முறை
வழிவகைகளை பயன்படுத்த தயாரிப்புக்களை நடத்தி வருகிறது என்பதில் சிறிதளவும் சந்தேகம்
இல்லை.
புதன் நடைபெற்ற
மிருகத்தனமான வன்முறை பெருகி வரும் வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதற்கு எகிப்திய
ஆளும் உயரடுக்கு இன்னும் வெளிப்படையான அடக்குமுறையை நோக்கிச் செல்லும் மற்றொரு
நடவடிக்கை ஆகும்.
சூயஸ்
கால்வாயில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்திவரும் வேலைநிறுத்தம் சூயஷ் டபிக்
மாவட்டத்தில் முற்றிலும் மின்வசதியை நேற்று துண்டித்தது.
தங்கள் கோரிக்கைகள்
நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்ப்புக்களை விரிவாக்கம் செய்ய இருப்பதாகத் தொழிலாளர்கள்
அறிவித்துள்ளனர்.
அடிப்படை ஊதியத்தில்
40% அதிகரிப்பு,
7% போனஸ்
வழங்கப்படுதல்,
உணவுப் படியில்
உயர்வு ஆகியவற்றை அவர்கள் கோரியுள்ளனர்.
சூயஸ் கால்வாய்
அதிகாரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேனரல் அஹ்மத் படேல் பதவியில் இருந்து
அகற்றப்பட வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரியுள்ளனர்.
வேலைநிறுத்தக்காரர்கள் மீது ஒரு வன்முறைத் தாக்குதலுக்கு இராணுவம் தயாரிப்பு
நடத்துவது போல் தோன்றுகிறது.
சூயசில் சூயஸ்
கால்வாய் வழிகாட்டி இல்லத்திற்கு அருகேயுள்ள முக்கிய பாலத்தருகே இராணுவப் பொலிஸ்
மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன என்று தொழிலாளர்கள் கூறினர்.
ஜூன்
19ம் திகதி ஏற்கனவே
இராணுவம் உண்மையான தோட்டக்களை பயன்படுத்தி வேலைநிறுத்தம் செய்வோரின் உள்ளிருப்பு
போராட்டத்தை கலைக்க முயன்றுள்ளது.
போராட்டம் இப்பொழுது
நான்காவது வாரத்தில் உள்ளது.
மற்றொரு
தொடரும் உள்ளிருப்புப் போராட்டம் க்வெனா மாநிலத்தில் சுகாதார தொழிலாளர்களால்
சுகாதார இயக்குனரகத்திற்கு முன்பு நடத்தப்படுகிறது.
தொழிலாளர்கள்
நிரந்தர ஒப்பந்தம்,
உறுதியான,
அதிகப்படுத்தப்படும்
ஊதியங்களை கோருகின்றனர்.
பொருளாதார
நெருக்கடி ஆழ்ந்திருக்கையில்,
எகிப்திய நாணயமான
பவுண்டு ஆறு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு குறைந்த மதிப்பில் உள்ளது.
எகிப்திய
தொழிலாளர்கள் வரவிருக்கும் காலத்தில் பெரும் போராட்டங்களுக்கு தள்ளப்படுவர்.
வறிய எகிப்திய
மக்கள் ஏற்கனவே பெருகும் வேலையின்மை மற்றும் பெரிதும் உயர்ந்துள்ள உணவுப் பொருட்கள்
விலையை எதிர்கொண்டுள்ளனர்.
பெரும்பாலான
உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகள் வெள்ளியன்று நடைபெற்ற எதிர்ப்புக்களில்
பங்குபெறவில்லை என்பது அவற்றில் எவையும் தொழிலாளர்கள்,
வறியவர்கள் பக்கம்
நிலைப்பாடு கொள்ளவில்லை என்பதைத்தான் மீண்டும் காட்டுகிறது.
முதலாளித்துவக்
கட்சிகள் அனைத்தும்—அவை
தாராளவாதம்,
இஸ்லாமியவாதம்
அல்லது “இடது”
என்று எப்படி
இருந்தாலும்—இராணுவக்
குழுவிற்கு ஆதரவைக் கொடுக்கின்றன.
அதே நேரத்தில் பல
பயனற்ற குறைகூறல்களை வெளியிடுகின்றன.
அவைகள் அனைத்தும்
இதுதான் ஒரு “இரண்டாவது
புரட்சிக்கு”
சரியான தடுப்பு
என்று கருதுகின்றன.
தொழிலாள
வர்க்கத்தின் பெருகும் போராளித்தனத்திற்கு எதிராக இராணுவம்தான் பாதுகாப்புக்
கொடுக்கும் என்று நினைக்கின்றன.
எதிர்ப்புக்களில் பங்கு பெற்ற
“இடது”
கட்சிகள்—கரமாக்
கட்சி,
அல்-டகம்முக்
கட்சி,
சோசலிசக் கூட்டணிக் கட்சி
(SAP), ஜனநாயக
தொழிலாளர்கள் கட்சி
(DWP)
ஆகியவை—எதிர்ப்புக்களை
குழப்புவதற்குத்தான் பங்கு பெற்றன.
இந்த
“சோசலிச முன்னணியின்”
போலி இடது குழுக்கள்
வேண்டுமென்றே இராணுவக் குழுவிற்கு எதிரான
“இரண்டாவது
புரட்சிக்கு”
அழைப்புவிடுவதில்
இருந்து ஒதுங்கியுள்ளன.
இதற்குப் பதிலாக ஒரு
தொழிலாளர்கள் அரசாங்கம் வேண்டும் என்று கூறவும் முன்வரவில்லை.
எகிப்திய
இராணுவக் குழு புரட்சியை இரத்தக் களரியில் மூழ்கடிக்க முற்படுகையில்,
போலி இடது குழுக்கள்
இந்த ஆட்சி “இன்னும்
ஜனநாயக,
குறைந்த அடக்குமுறை”
அரசியல் நடத்த
அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற போலித் தோற்றத்தை வளர்க்கின்றன.
வெள்ளி
எதிர்ப்புக்களில் அவை கொடுத்த துண்டுப் பிரசுரங்களில் அவை பாதுகாப்பு அமைப்புக்கள்
“மறுகட்டமைக்கப்படலாம்”
என்று கூறியுள்ளன.
உடனடியாக உள்துறை
மந்திரி ஜெனரல் மன்சூர் எல்-எஸ்ஸவி
அகற்றப்ப வேண்டும் என்று
DWP அழைப்பு
விடுத்துள்ளது.
அவருக்குப் பதிலாக
ஒரு “சிவிலிய
உள்துறை மந்திரி”
நியமிக்கப்பட
வேண்டும் என்றும் கூறியுள்ளது.
SAP “பொலிஸ் அமைப்பு
மறுகட்டமைப்பதற்கு ஒரு தெளிவான திட்டம் வேண்டும்”
என்று கோரியுள்ளது.
சில
நாட்களுக்கு முன்பு இராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்களை தாக்குவதற்கு முன்பு,
ஹொசம் எல் ஹமலவி
என்னும் நன்கு அறியப்பட்ட வலைத்தள எழுத்தாளரும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களின்
உறுப்பினரும் (அது
சோசலிஸ்ட் முன்னணியின் ஒரு பகுதி),
ராய்ட்டர்ஸ் செய்தி
நிறுவனத்திடம் இராணுக் குழு
“சிவிலிய
அரசாங்கத்திற்கு அதிகாரத்தை ஒப்படைப்பதில் நேர்மையாக உள்ளது”
என்று தான்
நினைப்பதாகத் தெரிவித்தார். |