WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
New
York rape case against former IMF chief collapses
முன்னாள் தலைவருக்கு எதிரான நியூ யோர்க் கற்பழிப்புக் குற்ற வழக்கு சரிகிறது
Patrick Martin
2 July 2011
Back to
screen version
அவருக்கு
எதிரான கற்பழிப்பு வழக்கு சரிவது போல் தோன்றியுள்ள நிலையில்,
வெள்ளியன்று பிணை
எடுப்பு ஏதுமின்றி சர்வதேச நாணய நிதியின்
(IMF) முன்னாள்
தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான்
விடுவிக்கப்பட்டார்.
குற்றம் சாட்டிய
அரசாங்க வக்கீல்கள் புகார் கொடுத்த பெண்ணின் நம்பகத்தன்மை இப்பொழுது வினாவிற்கு
உட்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
விசாரணையின்
போது அரசாங்க வக்கீல்கள் விவரங்கள் எதையும் கொடுக்கவில்லை;
ஆனால் வெள்ளிக்கிழமை
காலை
நியூ
யோர்க்
டைம்ஸ்
வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்று இரு பெயரிடப்படாத
“சட்டத்தை
செயல்படுத்தும் அதிகாரிகளை”
மேற்கோளிட்டு
கற்பழிப்புப் பாதிப்பிற்கு உட்பட்டதாகக் கூறப்படுபவர் போதைக் கடத்தல் மற்றும் பணச்
சலவையில் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம்,
எப்படி ஸ்ட்ராஸ்-கான்
மீது குற்றங்களைச் சுமத்துவதின் மூலம் பண ஆதாயங்களைப் பெறமுடியும் என்பதைப் பற்றி
விவாதித்ததை மற்றவர்கள் கேட்டனர் எனத் தெரிகிறது எனக் கூறியுள்ளது.
நியூ யோர்க்
நகரத்திலிருந்து வெளிவரும் மூன்று நாளேடுகளும்—
அதாவது பரபரப்பு
Daily News,
மர்டோக்கின்
உடைமையான நியூ
யோர்க்
போஸ்ட்—ஆகியவை
அரசாங்க வக்கீல் அலுவலகம் மற்றும் பொலிஸ் வெளியிட்ட கருத்தைக்களை ஒட்டிச் செய்திகளை
அம்பலப்படுத்தியுள்ளன.
மூன்று
செய்தித்தாள்களிலும் ஒரே மாதிரியான உண்மைகள்தான் கூறப்பட்டுள்ளன.
இவற்றின்படி,
32 வயதான
கினியாவிலிருந்து குடியேறியுள்ள பெண்,
மே
14ம் தேதி தான்
ஸ்ட்ராஸ்-கானினால்
பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதாகக் குற்றம் சாட்டியவர்,
ஒரு நாளைக்கும்
பின்னதாக சிறையில் போதைக் கடத்தலுக்காக இருக்கும் நபரிடம் தொலைப்பேசி உரையாடல்
ஒன்றில் டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளபடி,
இந்த வழக்கில் தான்
எப்படி “பணம்
சம்பாதிக்க முடியும்”
என விவரித்ததாக
தெரிகிறது.
டைம்ஸ்
கட்டுரை கூறுகிறது:
“இப்பெண் சிறையில்
அடைக்கப்பட்டிருக்கும் ஒரு நபருடன்,
திரு.
ஸ்ட்ராஸ்-கானுடன்
மோதலுக்கு ஒரு நாளைக்குள்ளாக தொலைப்பேசியில் அவருக்கு எதிரான குற்றச் சாட்டுகளைத்
தொடர்வதின் மூலம் நலன்களை அடையமுடியும் என விவாதித்தார்.
இந்த உரையாடல் பதிவு
செய்யப்பட்டுள்ளது.”
சிறையிலுள்ள
நபர் இப்பெண்ணின் வங்கிக் கணக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரிசோனா,
ஜோர்ஜியா,
நியூ யோர்க் மற்றும்
பென்சில்வானியாவில்
100,000 டொலருக்கும்
மேலாக ரொக்கப் பணத்தைச் செலுத்தியுள்ளனர் என்று
டைம்ஸ்
தெரிவிக்கிறது.
ஸ்ட்ராஸ்-கானுடனான
மோதல் நடந்த மன்ஹாட்டன்
Sofitel ல் குறைந்த
ஊதியத்தைப் பெற்ற ஹோட்டல் பணிப்பெண் என்ற வேலை மூலம் இந்த அளவு பணத்தை அவரால்
ஈட்டியிருக்க முடியாது என்றும் அது கூறுகிறது.
பாதிக்கப்பட்டவர் எனக் கருதப்படும் பெண் ஒவ்வொரு மாதமும் ஐந்து வேறு
நிறுவனங்களுக்கு பேசியதால் ஏற்பட்ட தொலைப்பேசிக் கட்டணங்கள் நூற்றுக்கணக்கான
டாலர்கள் ஒவ்வொரு மாதமும் கொடுத்து வந்தார் என்றும் மற்றொரு கருத்து தெரிவிக்கிறது.
விசாரணை
நடத்தியவர்களிடம் இவர் ஒரு தொலைபேசிதான் வைத்திருந்ததாகக் கூறியுள்ளார்.
தன்னுடைய வங்கிக்
கணக்குகளில் ஏராளமான ரொக்கப் பணங்கள் கட்டப்பட்டது பற்றியும் தனக்கு ஏதும் தெரியாது
என்றும் அவர் கூறினார்.
பணம் அவரைத்
“திருமணம் செய்து
கொள்ள இருப்பவர்”
மற்றும் அவருடைய
“நண்பர்களால்”
கட்டப்பட்டவை
என்றும் கூறினார்.
இப்பெண்ணின்
முந்தைய பொய்களைப் பற்றியும் செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் அவர்
அமெரிக்காவில் நுழைந்த உடனே தஞ்சம் கோரி விண்ணப்பித்ததாகவும்,
அதில் அவர் பிறந்த
மேற்கு ஆபிரிக்க முன்னாள் பிரெஞ்சு காலனியான கினியாவில் ஒரு இழிந்த குழுவினால்
கற்பழிப்பிற்கு உட்பட்ட பாதிப்பை அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
NBC
News,
விசாரணையாளர்கள் அந்த
மனுவில் “பெண்
பரந்த அளவில் பொய்கூறியுள்ளார்,
பாலியல்
பலாத்காரத்திற்கு உட்பட்ட கூற்று பற்றிய தகவலும் அதில் அடங்கும்”
என்ற முடிவிற்கு
வந்தனர் என்று கூறுகிறது.
அரசாங்க வக்கீல்கள்
இணையத்திடம் பெண்
“நம்பத்தகுந்த
வகையில்”
கினியாவில் கற்பழிக்கப்பட்ட
கதையை விளக்கினார்,
பின்னர்
“அவர் வக்கீல்களிடம்
பொய் கூறியதை ஒப்புக் கொண்டார்
…. முழுக்
கற்பழிப்பு நிகழ்வும் விண்ணப்பத்தில் கூறப்பட்டவை பொய்”
என்றும்
தெரிவித்தனர்.
ஒரு
பெயரிடப்படாத
“சட்டத்தைச்
செயல்படுத்தும் அதிகாரி”
அசோசியேட்டட்
பிரஸ்ஸிடம் இப்பெண் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிகழ்விற்கு முன்னும் உடனடியாகப்
பின்னரும் அவருடைய செயல்கள் பற்றிப் பொய்கூறியதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வு
மன்ஹாட்டனில் ஸ்ட்ராஸ்-கான்
தங்கியிருந்த ஆடம்பர அறையில் நண்பகலை ஒட்டி நடந்தது எனக் கூறப்பட்டது.
கற்பழிப்பினால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுபவரின் நம்பகத்தன்மை சரிந்துவிட்டது
என்பதை
டைம்ஸ்
கொடுத்துள்ள விவரங்கள் வலியுறுத்துகின்றன.
ஸ்ட்ராஸ் கானுடன்“பாலியல்
தொடர்பு பற்றிய குழப்பத்திற்கு இடமில்லாத சான்றுகளை தடயச் சோதனைகள் காட்டினாலும்,
சூழ்நிலையைப்
பற்றியோ தன்னைப் பற்றியோ குற்றம் சாட்டியவர் கூறியவை பலவற்றையும் இப்பொழுது குற்றம்
சாட்டும் வக்கீல்கள் நம்பவில்லை.
ஏனெனில் அவருடைய
முதல் மே 14
குற்றச்சாட்டிலேயே,
குற்றம்
சாட்டியுள்ளவர் பல முறை பொய்கூறியுள்ளார் என்று சட்டத்தைச் செயல்படுத்தும்
அதிகாரிகளில் ஒருவர் கூறினார்”
என்று
டைம்ஸ்
விவரித்துள்ளது.
வியாழனன்று
ஸ்ட்ராஸ்-கானின்
வக்கீல்களை அரசாங்க வக்கீல்கள் சந்தித்து தாங்கள் கண்டுபிடித்துள்ள சான்றுகளின்
பெரும் பகுதியைக் கொடுத்தனர்.
இந்த வழக்கு எப்படி
முடிக்கப்படலாம் என்பது பற்றிய விவாதங்களை அவர்கள் தொடங்கினர்.
இதில் முதலில்
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராஸ்-கான்
விடுவிக்கப்படுவது வந்துள்ளது.
இதற்கு
அடுத்த நாள் நீதிபதி மைக்கேல் ஒபஸ் நீதிமன்ற விசாரணையின்போது,
“இந்த வழக்கின்
பின்னணிச் சூழ்நிலை கணிசமாக மாறிவிட்டதாக நான் அறிகிறேன்.
இவர்
விடுவிக்கப்பட்டால் மீண்டும் இங்கு வரமாட்டார் என்ற இடர் குறைந்து விட்டது என்பதை
நான் ஒப்புக் கொள்ளுகிறேன்.
அவருடைய
உத்தரவாதத்தின் பேரிலேயே நான் திரு.
ஸ்ட்ராஸ்-கானை
விடுவிக்கிறேன்”
என்று அறிவித்தார்.
வழக்கு
விசாரணை முடிந்தபின்,
நியூ யோர்க் அரசாங்க
வக்கீல் அலுவலகத்திலிருந்து ஸ்ட்ராஸ் கானின் வக்கீல்கள் குழுவிற்கு
உத்தியோகப்பூர்வமாக அனுப்பப்பட்ட கடிதம் பகிரங்கமாகியது.
இக்கடிதம்
பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுபவரின் சாட்சியத்தில் நம்பகத்தன்மை இராது என்பது
பற்றிக் கூடுதல் விவரங்களை அளித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் பெண்மணி நடந்ததாகக் கூறப்படும் தாக்குதலின்
சூழல் பற்றியும் அதன்பின் அவர் நடந்து கொண்ட முறை பற்றியும் பலமுறையும் பொய்களைக்
கூறினார் என்பதை இது ஒப்புக் கொள்கிறது.
குறிப்பாக இப்பொழுது
சோபிடெல் மான்ஹாட்டன் அறை எண்
2806ல் அவருடைய
அறையில் ஸ்ட்ராஸ் கானுடன் பாலியல் மோதலை எதிர்கொண்டபின்,
அவர் அடுத்த அறையைச்
சுத்தப்படுத்தச் சென்றதாகவும் அதன் பின் ஸ்ட்ராஸ்-கானின்
அறைக்குத் திரும்பிச் சுத்தம் செய்த பின்னரே மேற்பார்வையாளரிடம் தான் பாலியல்
தாக்குதலுக்கு உட்பட்டதாகத் தெரிவித்தார்.
முன்னதாக இப்பெண்
தான் அறை எண்
2806ல் இருந்து
விரைந்து வெளியேறி ஸ்ட்ராஸ் கான் ஹோட்டலை விட்டுச் செல்லும் வரை காத்திருந்து அதன்
பின் தாக்குதலைப் பற்றிப் புகார் செய்ததாகக் கூறியிருந்தார்.
ஸ்ட்ராஸ்
கானுக்கு எதிரான வழக்கு சரிந்துள்ளது போன்ற வெளிப்படையான தன்மை அவர் கைது
செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் அளவில் உந்துதல் பெற்ற செய்தி ஊடகத்தின் பெரும்
பரபரப்பைத்தான் பேரழிவு தரக்கூடிய வகையில் அம்பலப்படுத்தியுள்ளது.
இதை வழிநடத்தியது
நியூ
யோர்க்
டைம்ஸ்
ஆகும்.
அது மௌரீன் டௌட்,
ஸ்டீபன் கிளார்க்
மற்றும் ஜிம் ட்வைர் ஆகியோர் எழுதிய கட்டுரைகளை வெளியிட்டது.
இவை அனைத்துமே
“நிரூபிக்கப்படும்
வரை நிரபராதி”
என்னும் கருத்தை
இழிவுடன் ஒதுக்கித் தள்ளியிருந்தன.
இதன்பின்
பத்திரிகையிலிருந்து வெளியேற உள்ள நிர்வாக ஆசிரியரான பில் கெல்லர்
நியூ
யோர்க்
டைம்ஸ்
இதழில் எழுதிய நீண்ட
கட்டுரை ஒன்றில் அரசியல் அளவில் உந்துதல் பெற்று ஸ்ட்ராஸ்கான் இலக்கு
கொள்ளப்பட்டார் என்ற
“சதித் திட்டக்
கருத்தைக்”
கண்டித்து
எழுதியிருந்தார்.
இப்பொழுதும்
ஹோட்டல் பணிப்பெண்ணுடனான தொடர்பு,
பிரான்ஸிலுள்ள
ஸ்ட்ராஸ் கானின் நண்பர்கள் தெரிவித்துள்ளதுபோல்,
வேண்டுமென்றே
இயக்கப்பட்ட ஒரு செயலா என்பதை முடிவு செய்ய முடியாது.
ஆனால் அவர்
கைதுசெய்யப்பட்ட பின் நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியைக் காணும்போது,
அரசியல் இலக்குகளைச்
சாதிக்கும்போருட்டு வழக்கு திரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச உணர்வு
உள்ளது.
மே
14ம் தேதி ஸ்ட்ராஸ்
கான் கைதுசெய்யப்பட்டார்.
ஆனால் ஒரே
நாளைக்குள்,
அதாவது மே
15ல் பொலிசும்
அரசாங்க வக்கீல்களும் புகார் கூறும் சாட்சியம் சிறையில் போதைக் கடத்தலில்
ஈடுபட்டுள்ள ஒருவரிடம் தான் எப்படி பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள வழக்கில்
பெரும் இலாபத்தை அடையக்கூடும் என விவாதித்ததை அறிந்துள்ளனர்.
ஆயினும்கூட அவர்கள்
ஏதோ வழக்கு மிக உறுதியானது போல் அதைத் தொடர்ந்து நடத்தினர்.
உதவி
அரசாங்க வக்கீல் ஆர்ட்டி மக்கோனெல்,
மே16ம்
தேதி குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ட்ராஸ் கான் மீது குற்றம் சாட்டிப் பேசுகையில்,
“பாதிக்கப்பட்டுள்ளவர்
குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் எப்படி வன்முறையான பாலியல் தாக்குதல் நடத்தினார் என்பது
பற்றி சக்திவாய்ந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
இவை அவர் மீது
குற்றம்சாட்டப்படலாம் என்பதற்கு தேவையான கூறுபாடுகள் அனைத்தையும் நிறுவுகிறது”
என்று அறிவித்தார்.
மே
19ம் தேதி மக்கோனல்
பிணை எடுப்பு விசாரணையின் போது,
“இந்த வழக்கில்
குற்றம் சாட்டியுள்ளவர் உறுதியான,
தடுமாற்றமில்லாத
நிகழ்வுத் தொகுப்பை,
குற்றம்
சாட்டப்பட்டுள்ளவரின் அறையில் என்ன நடந்தது என்று கூறியுள்ளார்”
என்று அறிவித்தார்.
குற்றவியல்
விசாரணை,
மற்றும் செய்தி ஊடக
அழுத்தம் ஆகியவற்றின் விளைவாக ஸ்ட்ராஸ் கான் மே
19ம் திகதி
IMF ன் நிர்வாக
இயக்குனர் என்ற பதியை இராஜிநாமா செய்தார்.
கோடையில்
பிரான்ஸுக்குத் திரும்புதல்,
ஜனாதிபதி பதவிக்கான
பிரச்சாரத்தைத் தொடங்குதல் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருடைய திட்டங்களை அவர் கைவிட
வேண்டியாதாயிற்று.
ஜனாதிபதி தேர்தல்
போட்டியில் அவர் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிற்பதற்கு பெரும் ஆதரவைக்
கொண்டிருந்தார்.
கருத்துக்
கணிப்புக்களில் தற்பொழுது ஜனாதிபதியாக இருக்கும் செல்வாக்கற்ற வலதுசாரி நிக்கோலா
சார்க்கோசியை விட முன்னணியில் இருந்தார்.
ஸ்ட்ராஸ்கான்
IMF ல் தன் பொறுப்பை
இராஜிநாமா செய்யும் வகையிலும் அதையொட்டி பிரான்ஸில் அவருடைய அரசியல் திட்டங்கள்
நாசம் அடையும் வகையிலும்,
நியூ யோர்க் நகர
அரசாங்க வக்கீல் இவ்வழக்கை ஆக்கிரோஷமாக தொடர்ந்திருக்கக் கூடும்—இது
அவருக்கு எதிரான ஒரே சாட்சியத்தின் நம்பகமற்ற தன்மை பற்றித் தெளிவான எச்சரிக்கை
வந்தபின்னும் நடைபெற்றுள்ளது.
முந்தைய மாதங்களில்
ஒபாமா நிர்வாகம்
IMF ன் தலைமைப்
பொறுப்பில் ஸ்ட்ராஸ் கானின் செயற்பாடுகள் குறித்து பெருந்திகைப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின்
கோரிக்கையான சீனா தன் நாணயத்தை மறுமதிப்பீட்டிற்கு உட்படுத்த வேண்டும் என்பதைச்
சீனா எதிர்த்ததால்,
வாஷங்டன் அதை
“நாணய முறையைத்
திரிக்கும் நாடு”
என்று ஒதுக்க
முற்பட்டு,
சீனாவைத்
தனிமைப்படுத்தும் வாஷிங்டனின் உந்துதலுக்கு ஆதரவு கொடுப்பதில் அவர் தயக்கம்
காட்டியதும் அடங்கியுள்ளது.
ஸ்ட்ராஸ்
கான் கைதுசெய்யப்பட்ட சில நாட்களிலேயே அமெரிக்க நிதி மந்திரி அவர் இராஜிநாமா செய்து
தற்காலிகமாக நிறுவனத்தின் பொறுப்பை அவருடைய அமெரிக்க உதவியாளர் ஜோன் லிப்ஸ்கியிடம்
ஒப்படைக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரினார். |