WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
எகிப்து
எகிப்திய இராணுவம் எதிர்ப்புக்கள் மீது ஒரு இரத்தக் களரி நடவடிக்கை எடுத்து
அடக்குகிறது
By
Joseph Kishore and Jonathan Aswan
30 June 2011
எகிப்திலுள்ள அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ அரசாங்கம் கெய்ரோவின் தஹ்ரிர்
சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மீது ஒரு இரத்தக் களரி நடவடிக்கை மூலம்
தாக்குதலை நடத்தியுள்ளது.
ஆயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளனர்.
பல டஜன்
கணக்கானவர்கள் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகளின் குப்பிகள்
செவ்வாயன்று
பொலிசார் நீண்டாகால சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை வீழ்த்திய பெப்ருவரிப் புரட்சிக்
காலத்தில் கொல்லப்பட்ட கிட்டத்தட்ட850
பேரின் உறவினர்களை
தாக்கியபோது மோதல்கள் தொடங்கின.
முதல்
நிகழ்வு கெய்ரோப் புறநகரான பலூன் தியேட்டருக்கு வெளியே நடைபெற்றது.
அங்கு ஒரு பெப்ருவரி
மாதம் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்காக ஒரு நினைவுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
எதிர்ப்புப்
புரட்சிகர தியாகிகள் குடும்ப உறுப்பினர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து
பின்னர் பொலிசாருடன் மோதல்கள் ஏற்பட்டன;
சில சாட்சியங்களின்
படி குண்டர்கள் பொலிசாருடன் ஒத்துழைத்தனர்.
Ahram
Online
எழுதியுள்ளபடி,
“சில நேரில்
பார்த்தவர்களுடைய தகவல்களின்படி ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்,
பலர் காயமுற்றனர்,
இதில் ஒரு வயதான
பெண்ணும் இருந்தார்,
அவர் ஒரு பொலிஸ்
அதிகாரியால் கன்னத்தில் அறையப்பட்டார்.”
எதிர்ப்பாளர்கள் நீண்டகாலமாக இராணுவ-பொலிஸ்
அடக்குமுறையுடன் தொடர்புடைய உள்துறை அமைச்சரகத்திற்கு நகர்ந்தனர்.
அங்கு இரு
உறவினர்கள் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வந்திருந்தன.
செவ்வாய்
இரவையொட்டி கிட்டத்தட்ட
6,000
ஆர்ப்பாட்டக்காரர்கள் இம்மோதல்களை எதிர்கொள்ளும் வகையில் பெப்ருவரி வெகுஜன
ஆர்ப்பாட்டங்களின்போது மையமாக இருந்த தஹ்ரிர் சதுக்கத்தில் கூடினர்.
இவர்கள்
1,000க்கும்
மேற்பட்ட கலகப்பிரிவுப் பொலிசாரால் எதிர்கொள்ளப்பட்டனர்.
பொலிசார்
கண்ணீர்ப்புகைக் குண்டுகள்,
ரப்பர் தோட்டாக்கள்
ஆகியவற்றைக் கொண்டிருந்தனர்.
(See, Video
of police officers throwing stones at protesters)
இராணுவத்
தலைவர் தந்தவியை ஒரு கொலைக்காரர் எனக்கூறும் சுவரொட்டி
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறை பயன்படுத்தப்பட்டது பழைய ஆட்சிக்கும் புதிய
ஆட்சிக்கும் இடையேயுள்ள தொடர்ச்சித் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆட்சி இப்பொழுதும்
முபாரக் அரசாங்கத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தியிருந்த அதே இராணுவ அதிகாரிகளின்
கட்டுப்பாட்டின் கீழ்த்தான் உள்ளது.
முபாரக்கின்
நெருக்கமான நண்பரும் அவருடைய முன்னாள் பாதுகாப்பு மந்திரியுமான பீல்ட் மார்ஷல்
மஹ்மத் ஹுசைன் தந்தவி இப்பொழுது ஆயுதப்படைகளின் தலைமைக் குழுவின் தலைவராக இருந்து
நாட்டின் தலைவராகவும் செயல்படுகிறார்.
அமெரிக்கா மற்றும்
அமெரிக்க இராணுவத்துடன் அவர் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டவர்;
முபாரக்
கட்டாயப்படுத்தி அகற்றப்படுவதற்கு முன்பும்,
பின்பும்.
“இராணுவக்
குழு ஒழிக”, “மக்கள்
பீல்ட் மார்ஷலை அகற்ற விரும்புகின்றனர்”,
“தந்தவியும்
முபாரக்தான்”, “வெற்றி
அடையும் வரை புரட்சி”
என்பவை
ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பிய கோஷங்களுள் அடங்கியிருந்தன.
எதிர்ப்பாளர்கள்
வெகுஜனக் கொலைகள்,
கைதுகள்
ஆகியவற்றிற்கு பொறுப்பானவர்கள் விரைவில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும்
கோரினர்.
இதில் முன்னாள் உள்துறை
மந்திரி ஹபிப் எல் அட்லி மற்றும் முபாரக்கின் பெயர்களும் அடங்கும்.
இவ்வாரம் முன்னதாக
எல்-அட்லி
மீதான விசாரணை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இது பொலிசுக்கும்
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையே மோதலைத் தூண்டியது.
எதிர்ப்புக்களில் ஈடுபாடு கொண்ட ஒரு தொழிலாளர்
WSWS இடம் கூறினார்:
“இந்த அமைப்புமுறை
மற்றும் பொலிஸ் படைகள் இன்னமும் அப்படியேதான் உள்ளன.
எதுவும் மாறவில்லை.
முபாரக்கின்
தளபதிகளும் பொலிஸ் அதிகாரிகளும்தான் இன்னமும் அதிகாரத்தில் உள்ளனர்,
அதே மிருகத்தன
வழிவகைகளைத்தான் எங்களுக்கு எதிராகவும் பயன்படுத்துகின்றனர்.”
கண்ணீர்ப்புகை
குண்டுகள் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வீசப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர் இவை
அனைத்தும் அமெரிக்கா அல்லது இஸ்ரேலினால் தயாரிக்கப்பட்டவை என்றார்.
புதன்கிழமை
தந்தவிக்கு எதிராகக் கோஷமிட்டு,
ஓர் இரண்டாவது புரட்சிக்கு அழைப்புவிடும் தஹ்ரிர் சதுக்கத்தில்
கூடிய மக்கள்
இதற்கு
இராணுவம் உடனடியாக விடையிறுக்கும் வகையில் இன்னும் அடக்குமுறையைத் தூண்ட
அரங்கமைக்கும் வடிவமைப்பைக் கொண்ட தூண்டிவிடும் கருத்துக்களை வெளியிட்டது.
எதிர்ப்புக்கள்
“நாட்டை
உறுதிகுலைக்கும்”
வடிவமைப்பு கொண்டவை
என்று ஒரு அறிக்கை கூறியது.
புதன்கிழமை
நிகழ்வுகளைப் பொறுத்தவரை கைதுசெய்யப்பட்ட
44 பேர் மீது குற்ற
விசாரணை நடத்த ஏற்பாடு செய்தது.
ஏப்ரல்
6 இயக்கம் என
அழைக்கப்பட்ட ஒரு குழு உட்பட எதிர்ப்புக்களை அமைப்பவர்கள் ஜூலை
8ம் திகதி
ஆர்ப்பாட்டங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.
வன்முறையைத்
தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் உடனடியாகத் தொடங்கப்பட
வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எதிர்ப்பாளர்கள்
சதுக்கத்தில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உள்ளமர்ந்து போராட்டம் நடத்துவதற்கு
கூடாரங்களை அமைத்துள்ளனர்.
கடந்த
வாரத்தில் கெய்ரோ தெருக்களில் குறிப்பிடத்தக்க வகையில் இராணுவ-பொலிஸ்
நிலைப்பாட்டில் கூடுதல் விரிவாக்கம் இருந்தது.
பொலிசார் பல
இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இராணுவ டாங்குகளும்
வாகனங்களும் பல்கலைக்கழகம் மற்றும் நகரத்தின் மையப் பகுதிகளில்
குவிக்கப்பட்டிருந்தன.
இன்னும்
நேரடியான அடக்குமுறை நடவடிக்கைக்கான செயற்பாடுகள் பெருகிய வர்க்கப் மோதல்களுடன்
இணைந்துள்ளன.
இவற்றில் தொழிலாள
வர்க்கத்தின் பல பிரிவுகள் பொருளாதார நிலைமை,
வெகுஜன வேலையின்மை
மற்றும் முபாரக்கை அகற்றிய எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்ற
முடியாமல் இராணுவ ஆட்சி இருத்தல்,
ஆகியவற்றை எதிர்த்து
வேலைநிறுத்தங்கள் செய்வதும் அடங்கியுள்ளது.
பெய்ரோவில்
அரசாங்கக் கட்டிடங்களை நகர மையத்தில் பாதுகாக்கும் எகிப்திய இராணுவப் பிரிவினர்.
கடந்த
வெள்ளியன்று விவசாயிகள் கெய்ரோவின் பிரதான சாலைகளைத் தடுப்பிற்கு உட்படுத்தினர்.
சூயஸ் கால்வாய்
தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தமும் தொடர்கிறது.
கடந்த ஒரு மாதத்தில்
பெட்ரோலியப் பிரிவுத் தொழிலாளர்கள்,
இரயில் டிரைவர்கள்,
விமானத்துறைத்
தொழிலாளர்கள்,
ஆட்டோ தொழிலாளர்கள்,
மாணவர்கள் மற்றும்
விவசாயிகள் என்று பல தரப்பினரும் நடத்திய வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும்
நிகழ்ந்தன.
ஜூன்
8ம் தேதி எகிப்திய
அரசாங்கம் எதிர்ப்புக்களையும் குற்றங்களையும் குற்றம் என ஆக்கும் புதிய சட்டத்தை
செயல்படுத்த இருப்பதை உறுதிப்படுத்தியது.
SCAF எனப்படும்
இராணுவப் படைகளின் தலைமைக் குழு இச்சட்டம்
“உறுதிப்பாட்டை
அடையத் தேவை”
என்றும்,
குழு
“எந்த சட்டமும்
தடைக்குட்படுத்தப்படுவதையோ,
தேசியப்
பொருளாதாரத்திற்கு தீங்கு இழைக்கப்படும் செயற்பாடுகளையோ தக்க முறையில் எதிர்கொள்ளச்
சட்டம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது.
வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் எதிரப்பாளர்கள் கிட்டத்தட்ட
500,000 எகிப்திய
பவுண்டுகள் அபராதங்களை எதிர்கொள்ளக்கூடும்
($83,000) மற்றும்
ஓராண்டு அல்லது அதற்கும் கூடுதலான சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.
இந்த
அடக்குமுறை அமெரிக்காவுடைய நெருக்கமான ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.
அதுதான் வெகுஜன
ஆர்ப்பாட்டங்களின் தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவின் முக்கிய வாடிக்கை அரசான
எகிப்து மீது இராணுவத்தின் கட்டுப்பாடு நீடித்திருக்க உழைத்து வருகிறது.
புதன்கிழமை
தந்தவி அமெரிக்கத் துணை வெளிவிவகாரச் செயலர் வில்லியம் பர்ன்ஸை சந்தித்தார்.
அமெரிக்கா எகிப்தில்
“குறுகிய காலத்தில்
நிதிய உறுதிப்பாட்டை அடைவதற்கு”
உறுதி கொண்டுள்ளதாக
பர்ன்ஸ் குறிப்பிட்டார்.
ஆட்சியின்
கோரிக்கைக்கு இணையானது
“உறுதிப்பாட்டிற்கான”
கோரிக்கை ஆகும்.
அதாவது,
வேலைநிறுத்தங்கள்
மற்றும் எதிர்ப்புக்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற கருத்து
இராணுவத் தலைவர்களால் புரிந்து கொள்ள முடியாதது அல்ல.
ஆனால் மூடிய
கதவுகளுக்குப் பின் இன்னும் வெளிப்படையான ஆதரவுகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும்
என்பதில் சந்தேகம் இல்லை.
அவர் வருகைக்கு சில
மணி நேரம் முன்புதான் நடைபெற்ற இரத்தக் களரியிலான அடக்குமுறை பற்றி பர்ன்ஸ் ஏதும்
கூறவில்லை.
Al-Masry
Al-Youm
கருத்துப்படி
இருவரும் “எகிப்தின்
ஜனநாயக வழிவகைக்கு மாற்றம் குறித்தும் எகிப்தின் பொருளாதாரத்தில் அமெரிக்க
முதலீட்டின் முக்கியத்துவம் பற்றியும் விவாதித்தனர்”
என்று தெரிகிறது.
ஒபாமா நிர்வாகமும்
ஐரோப்பிய சக்திகளும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் நடைபெறும் புரட்சிகர
எழுச்சிகளை இப்பிராந்தியத்திலுள்ள நாடுகள் மேற்கத்தைய பெருநிறுவனங்களின்
ஆதிக்கத்திற்கு உட்பட வேண்டும் என்ற வகையில் பயன்படுத்தி வருகின்றன.
பர்ன்ஸின்
வருகையைத் தொடர்ந்து அமெரிக்க செனட்டர்கள் ஜோன் கெர்ரி
(ஜனநாயகக் கட்சி)
மற்றும் ஜோன்
மக்கெயின் (குடியரசுக்
கட்சி)
ஆகியோரின் தலைமையில் ஒரு
வணிகப் பிரதிநிதிக்குழு வந்தது.
இக்குழுவில்
General Electric
உடைய தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜப்ரி இம்மெல்ட்
(இவர் ஒபாமாவின்
வேலைகள் மற்றும் போட்டித் திறனுக்கான குழுவின் தலைவரும் ஆவார்)
மற்றும் கோகோ கோலா
மத்திய கிழக்கின் தலைவர் கர்ட் பெர்க்குசனும் இருந்தனர்.
இரு
செனட்டர்களும் எகிப்திய பங்குச் சந்தையின் தொடக்க மணியை அடித்தனர்.
பின் ஒரு கோகோ கோலா
ஆலையைச் சுற்றிப் பார்த்தனர்.
பின் தந்தவியைச்
சந்தித்தனர் என்று
Daily Egypt News
கூறியுள்ளது.
“அரபு உலகின்
இப்பகுதியில் புரட்சியின் வெற்றியும் தோல்வியும் எகிப்திய மக்களுக்கு வேலைகள்
அளித்தல் நாட்டிற்கு முதலீடுகள் அளிக்கும் திறன் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்பு
கொண்டவை”
என்று மெக்கெயின்
அறிவித்தார்.
எகிப்தி
ஆட்சிக்கு ஆதரவு மற்றும் அமெரிக்கத் தளமுடைய வணிகங்களுக்கு ஆதரவு ஆகியவற்றுடன்
மெக்கெயின் சிரியாவிற்கு எதிரான அச்சுறுத்தலையும் விடுத்தார்.
அந்நாட்டில் இருந்து
அமெரிக்கத் தூதர் திரும்பப் பெறப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு
எதிராகப் பொருளாதரத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு
முன்னதாக வெகுஜன எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தபோதிலும் எகிப்திய மக்களின் பொருளாதார,
அரசியல் கோரிக்கைகள்
எவையும் அடையப்படவில்லை என்ற அடிப்படை உண்மையைத்தான் இந்த நிலைமைகள்
அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இராணுவ ஆட்சி
செப்டம்பரில் நடக்க இருக்கும் தேர்தல்களுக்கு முன்னால் ஒரு வளைந்து கொடுக்கக்கூடிய
தன்மை கொண்ட அரசாங்கத்தை நிறுவும் சூழ்நிலையை உருவாக்க முயல்கிறது.
இதைச்
செயல்படுத்துவது கடினமாகப் போனால்,
தேர்தல்கள்
ஒத்திவைக்கப்படும் அல்லது காலவரையற்றுத் தள்ளிவைக்கப்படும்.
கட்டுரை
ஆசிரியர்கள் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கின்றனர்.
“Egypt’s
‘second revolution’” |