World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

ICC orders arrest of Gaddafi as NATO bombings reach 100th day

நேட்டோ குண்டுத்தாக்குதல்கள் 100வது நாளை அடைகையில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் கடாபியை கைதுசெய்ய உத்தரவிடுகிறது

By Bill Van Auken 
28 June 2011

Back to screen version

நேட்டோவின் லிபியா மீதான தொடர்ந்த குண்டுத்தாக்குதல்கள் 100வது நாளை அடையும் நிலையில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் திங்களன்று லிபியத் தலைவர் முயம்மர் கடாபிக்கு எதிராகக் கைதுப் பிடி ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இதைத்தவிர சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் லிபியத் தலைவரின் மகன் சயீப் அல்-இஸ்லாம் கடாபி மற்றும் லிபிய அரசின் உளவுத்துறைத் தலைவர் அப்ஜுல்லா அல்-சனௌசிக்கு எதிராகவும் பிடியாணைகளை பிறப்பித்துள்ளது.

மே மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வக்கீல் லூயிஸ் மொரேனோ-ஒகாம்போ நீதிமன்றத்தில் 74 பக்கக் குற்றச்சாட்டுக்களை கையளித்துள்ளதை எதிர்கொள்ளும் வகையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் மனிதகுலத்திற்கு எதிரான செயல்கள் என்ற அடித்தளத்தில் உள்ளன. இவை மேலைப் பாதுகாப்புபடை அமைப்புக்கள் மற்றும் நேட்டோவுடன் இணைந்துள்ள எழுச்சியாளர்கள் எனப்படுவோர் சாட்சியங்களை பெரும்பாலும் ஆதாரமாகக் கொண்டவையாகும்.

நிரூபிக்கப்படும் வரை கடாபியும் மற்ற இரு குற்றச் சாட்டப்படுபவர்களும் நிரபராதிகள் எனக்கருதப்படுவர் என்று கூறினாலும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பொட்ஸ்வானாவை சேர்ந்த சஞ்சி மோனாகெங் திங்களன்று கடாபியும் அவருடைய மகனும்மறைமுகமாகக் குற்றங்கள் இழைப்பதற்கும், குடிமக்களை அடக்குவதற்கும், கொல்லுவதற்கும் பொறுப்பானவர்கள் என நம்புவதற்குப் போதுமான காரணங்கள் உள்ளன”  என்று கூறினார். இதேபோன்ற அடித்தளத்தில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கு சன்னௌசியும் பொறுப்பு என நம்புவதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும், குறிப்பாக கடந்த பெப்ருவரி மாதம் கிழக்கு லிபிய நரான பெங்காசியில் அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கைகளை அடக்குவதில் இவை இருந்தன என்றும் இவ்வம்மையார் கூறியுள்ளார்.

 “2011 இன் ஆரம்ப மாதங்களில் அந்நாடுகளின் ஜனாதிபதிகள் அகற்ற வழிவகை செய்த துனிசியா மற்றும் எகிப்து நிகழ்வுகளைத் தொடர்ந்து, லிபிய அரசாங்க அமைப்பின் மிகஉயர்ந்த மட்டத்தில் அரசாங்கக் கொள்கை ஒன்று வகுக்கப்பட்டது. இது எந்தவிதத்திலும், உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வன்முறையைப் பயன்படுத்தியேனும் பெப்ருவரி 2011ல் தொடங்கிய கடாபி ஆட்சிக்கு எதிரான குடிமக்களுடைய ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கவும் நசுக்கவும் இலக்கு கொண்டிருந்ததுஎன்று கைது ஆணை கூறியுள்ளது.

தெளிவாகபெப்ருவரி 2011ல் இரு வாரங்களுக்குள் பாதுகாப்புப் படையினர் நூற்றுக்கணக்கான குடிமக்களைக் கைதுசெய்து, சிறையில் அடைத்துக் காயப்படுத்தினர்என்று அவ்வறிக்கை குற்றம்சாட்டுகின்றது.

இதேபோன்ற குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க ஆதரவுடைய ஆட்சிகள் மற்றும் இப்பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கு எதிராகவும் சுமத்தப்படலாம் என்பது மறுக்க முடியாதது ஆகும்; அங்கும் தடையற்ற இரத்தம்தோய்ந்த அடக்குமுறை, துனிசிய எகிப்து நிகழ்வுகளுக்குப் பின்னர், கையாளப்பட்டது. இதில் பஹ்ரைனின் அல்-கலீபா அரச குடும்பம் (சவுதி முடியாட்சியில் இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் உட்பட), வாஷிங்டனின் நீண்ட கால நட்புநாடான யேமனின் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே ஆகியோரும் அடங்குவர். அப்படிப்பார்த்தால், அகற்றப்பட்ட அமெரிக்க ஆதரவைக் கொண்டிருந்த ஜனாதிபதி எகிப்தின் ஹொஸ்னி முபாரக் கூட மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என கொலைகள், சித்திரவதை, அவருடைய வீழ்ச்சிக்கு முந்தை வாரங்களில் ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள்மீது அடக்குமுறை கையாண்டது ஆகியவற்றிற்காக குற்றம் சாட்டப்பட வேண்டும்.

இக்கைது உத்தரவு அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் நேட்டோவினால் தங்கள் லிபியாவிற்கு எதிரான 100 நாள் ஆக்கிரோஷப் போரை நியாயப்படுத்த சாதகமாக எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது போர் நிறுத்தம் கொண்டுவரும் பல மத்தியஸ்தர்களின் முயற்சியைத் தகர்ப்பதற்கும் வட ஆபிரிக்க நாட்டில் பேச்சுவார்த்தைகளை மூலம் அரசியல் தீர்வு காண்பதைத் தகர்ப்பதற்கும் ஒரு வழிவகையாகிறது.

நேட்டோவின் தலைமைச் செயலர் அன்டயாஸ் போக் ரஸ்முசென் இக்கைது உத்தரவுகடாபியின் படைகளில் இருந்து லிபியக் குடிமக்களைக் பாதுகாக்கும் நேட்டோப் பணியின் காரணத்தை மறு உறுதி செய்கிறதுஎன்றார்; மேலும்குடிமக்கள் மீது அனைத்துத் தாக்குதல்களும் நிறுத்தப்படும் வரை நேட்டோ முன்னைக் காட்டிலும் அழுத்தங்களை அதிகரிக்கும் என்றார்.

ரஸ்முசென் இந்த அறிக்கையை ஏராளமான குடிமக்கள் இறப்பைக் கொடுத்த மற்றொரு நேட்டோ குண்டுத்தாக்குதலுக்குப் பின் உடனடியாக வெளியிட்டார். லிபிய அரசாங்கத்தின்படி, நேட்டோ போர்விமானங்கள் கிழக்கு எண்ணெய்த் துறைமுகமான பிரேகாவைத் தாக்கின; ஓரு உணவு விடுதி, பேக்கரி ஆகியவையும் தாக்கப்பட்டன. இவற்றில் தொழிலாளர்களும் வாடிக்கையாளர்களும் உட்பட 15 லிபியர்களும் மற்றும் ஒரு 20 பேரும் இறந்து போயினர்.

 “லிபிய மக்களைக் காப்பதற்குப் போர் நடத்தப்படுகிறதுஎன்னும் போலித்தனமான கூற்றுக்கள் லிபிய பொதுமக்களின் உள்கட்டுமானத்திற்கு எதிரான தொடர்ந்த தாக்குதல்களாலும் மற்றும் நூற்றுக்கணக்கான ஆண், பெண். குழந்தைகள் இறப்பினாலும் தவிடுபொடியாகின்றது. நேட்டோ போர்விமானங்கள் இதுவரை கிட்டத்தட்ட 5,000 “தாக்குதல் நடவடிக்கைகளைமேற்கொண்டு, நாள் ஒன்றிற்குச் சராசரியாக 50 தாக்குதல்களை நடத்தியுள்ளன.

நேட்டோவின் கூட்டுச் செயற்பாட்டுக் கட்டுப்பாட்டிற்கு தலைமைதாங்கும் அமெரிக்க அட்மைரலான சாமுவெல் லோக்லியர் சமீபத்தில் காங்கிரஸ் குழுவிசாரணையில் சாட்சியளிக்கையில் அமெரிக்க-நேட்டோ குண்டுத்தாக்குதல் நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக கடாபியை படுகொலை செய்வது என்பதை உறுதிப்படுத்தினார். Foreign Policy என்னும் வலைத்தள வெளியீடு, குடியரசுச் சட்டமன்ற உறுப்பினர் ஓகையோவைச் சேர்ந்த மைக் டர்னரை மேற்கோளிட்டு காங்கிரஸ் குழுவிடம் லோக்லியர் கடந்த மாதம்நேட்டப் படைகள் தீவிரமாக இலக்கு வைத்துக் கடாபியை கொல்ல முயற்சிக்கும்என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்குழுத் தீர்மானம் ஒரு பறக்கக் கூடாத பகுதியை நிறுவ உத்தரவு கொடுத்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு அல்ல குடிமக்களைக் பாதுகாக்க என்பதின் கீழ்தான் தான் நடந்து கொள்ளுவதாகக் கூறும் ஒபாமா நிர்வாகத்தின் கூற்றுக்களையும் மீறிய சொற்களாகும் இவை.

டர்னர் கூற்றுப்படி லோக்லியர் குழுவிடம் கடாபி படுகொலை அல்லது அகற்றப்படுவது சாதிக்கப்பட்ட உடன், “தரைத்துருப்புக்கள் ஸ்திரமற்ற உடனடிக்காலத்திற்கு தேவைப்படும்என்றும் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையும் அமெரிக்க வெளிவிவகாரத்ததுறையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் கைது பிடியாணைகளைப் பாராட்டின. “அவர் தன் சட்டபூர்வத்தன்மையை  இழந்துவிட்டார் என்பதற்கு இது மற்றொரு குறிப்பு ஆகும்என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே கடாபியைக் குறிப்பிட்டுக் கூறினார். “அவரைப் பொறுப்பாக்கும் வழிவகையில் இது மற்றொரு படியாகும்.”

வெளிவிவகாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் விக்ட்டோரியா நூலந்த்நீதிமன்றத்தின் முடிவு நாம் லிபியாவில் காணும் நிலைமையின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறதுஎன்றார். “விவகாரத்தை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் குறிப்பது என்பது சரியான முடிவு என அமெரிக்கா நம்புவதாகவும், அது இப்பொழுது நீதி, பொறுப்பேற்றல் பற்றிய தேவையைக் கூறியுள்ளது என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

என்ன பாசாங்குத்தனம்! சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அங்கீகரிக்க அமெரிக்கா மறுக்கிறது. மேலும்கையெழுத்திடப்படாதரோம் சட்டத்தையும் அங்கீகாரம் செய்யவில்லை. அந்த உடன்பாடுதான் இந்த அமைப்பையை தோற்றுவித்தது. நீதிமன்றத்தை அமெரிக்கா நிராகரிப்பதையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளும் காங்கிரஸ் உறுப்பினர்களும் வாடிக்கையாக அதை ஒரு கட்டைப் பஞ்சாயத்து நீதிமன்றம், அமெரிக்காவின் இறைமையை ஆபத்திற்கு உட்படுத்தும் எனக் கண்டித்துள்ளனர்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அமெரிக்கா நிராகரிக்கையிலும் அது அந்த அமைப்புடன் தீவிரமாக இணைந்து செயல்படுகிறது. லிபியாவில் நடப்பதைப் போல் தனது உலகளாவிய மூலோபாய நலன்களைத் தொடர்வதற்கு அதை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதுடன் மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தும் குற்றங்களை நீதிமன்றம் பரிசீலிக்க முற்பட்டால் அதைத் தடுத்தும் விடுகின்றது.

இவ்வகையில் ஒபாமா நிர்வாகம் கடந்த ஆண்டு கம்பாலாவில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றப் பரிசீலனை மாநாட்டிற்கு ஒரு பிரதிநிதிக் குழுவை அனுப்பி வைத்தது. இதில் ஒரு நோக்கம்தான் இருந்தது. ஆக்கிரமிப்புப் போர்களில் நடத்தப்படும் குற்றங்களும் நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விரிவாக்கப்படும் என்ற முயற்சியைத் தவிர்ப்பதற்குத்தான்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், வாஷிங்டன் முன்னாள் நாஜி ஜேர்மனித் தலைவர்கள் மீது நூரெம்பேர்க் வழக்குத் தொடுத்தவர்கள்ஆக்கிரோஷப் போர் என்பது மிக்குயர் சர்வதேசக் குற்றம், அதனுள் குவிப்பான முழுமையான தீமையையும் கொண்டிருப்பதால் மற்ற போர்க்குற்றங்களைவிட அது அவ்விதத்தில்தான் மாறுபட்டுள்ளதுஎன்று கண்டறிந்த கருத்திற்கு ஒப்புதல் கொடுத்தது.

ஆனால் 2010ல் ஐந்து வெவ்வேறு நாடுகளுக்குஆப்கானிஸ்தான், ஈராக், பாக்கிஸ்தான், லிபியா, யேமன் என-- எதிராகக் குறைந்தபட்சம் ஆக்கிரோஷப் போரில் கடந்த தசாப்தத்தில் ஈடுபட்டுள்ள இராணுவவாதச் சக்தி என்னும் நிலைப்பாட்டில் இருந்து இது வாதிடுகிறது. இறுதியில் இது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்கும் ஆக்கிரமிப்பு நாடுகளுடன் வரையறைக்கு உட்படுத்துகிறது, அல்லது வாஷிங்டனுக்கு தடுப்பதிகாரம் உள்ள ஐ.நா.பாதுப்புக் குழு குறிப்புக் காட்டும் வழக்குகளில் அதிகார வரம்பு உள்ளது என்று கூறுகிறது.

அமெரிக்காவைப் போலவே லிபியாவும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் கையெழுத்திட மறுத்தது. ஆனால் வாஷிங்டனைப் போல் இல்லாமல், லிபிய அரசாங்கத்திற்கு ஐ.நா.பாதுகாப்புக்குழுவில் தடுப்பதிகாரம் இல்லாததுடன், எனவே அதைப்பற்றி குழு நீதிமன்றத்திற்கு குறிப்புக் கொடுக்கலாம்; நிரந்தர உறுப்பு நாடுகள் ஐந்தில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்றும் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நிராகரித்துள்ளன.

கடாபி ஆட்சி பற்றி நீதிமன்றத்தில் குறிப்புக் கொடுக்க வேண்டும் என்று வாஷிங்டன் வாக்களிப்பதற்கு முன், அமெரிக்காவே அங்கீகாரம் செய்ய மறுக்கும் நீதிமன்றத்தின் முன் என்ற நிலையில், இது லிபிய அரசாங்கம் அல்லது அமெரிக்க இராணுவம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றிப் பரிசீலனை கூடாது என்று கோரிய ஒபாமா நிர்வாகத்தின் கருத்திற்கு உறுதியான விதிவிலக்கைப் பெற்றது.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை வக்கீலாக உள்ள ஆர்ஜேன்டினா நாட்டின் வக்கில் மோரெனோ-காம்போ தன்னுடைய பங்களிப்பைப் பற்றியும் வாஷிங்டனின் நலன்களுக்கு நீதிமன்றம் தாழ்ந்து நிற்கும் நிலையையும் தெளிவாக அறிந்துள்ளவர். விக்கிலீக்ஸ் பகிரங்கமாக்கியுள்ள இரகசிய தூதரகத் தகவல் தந்திகளில் ஒன்று 2003 தொடக்கத்தில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை வக்கீலாக மொரெனோ பதவியேற்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகாரத்துறையிடம்தனிப்பட்ட முறையில் ஒகம்போ ஈராக் பிரச்சினைகளைத் தள்ளுபடி செய்ய விரும்புகிறார்என்று குற்றம்சாட்டினர். வேறுவிதமாகக் கூறினால் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற வக்கீல் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க ஆக்கிரோஷப் போர் தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளதைத் தள்ளுபடி செய்யவேண்டிய தேவையை அறிந்திருந்தார்.

அதன்பின், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க போர்களும், பாக்கிஸ்தான், யேமனில் ட்ரோன் ஏவுகணைத்தாக்குதல்களும் இருக்கையில், லிபியா மீதான குண்டுத் தாக்குதல்கள் பற்றிக் கூறத் தேவையில்லை. அவை நூறாயிரக்கணக்கான குடிமக்களின் உயிர்களைக் குடித்துள்ளன; அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராகமனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்என்ற குற்றச்சாட்டுக்களைப் பிறப்பிக்கவோ, ஜோர்ஜ் டபுள்யூ புஷ், ரிச்சர்ட் ஷென்னி அல்லது பாரக் ஒபாமாவிற்கு எதிராகக் கைதுப் பிடி ஆணைகளைப் பிறப்பிக்கவோ சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்  தேவையான காரணத்தைக் காணவில்லை.

நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அங்கீகாரம் செய்ய மறுத்துள்ள இஸ்ரேலும், இதேபோல் லெபனான் மற்றும் காசாவில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த போர்களை தொடர்ந்தபோது குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாமல் தப்பியது. அதே நேரத்தில் அது சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலப்பகுதியில் உள்ள முழு மக்கள் பிரிவையும் அடக்குவதைத் தொடர்கிறது.