WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Arm Pakistani
workers with a revolutionary socialist program
Build the Pakistani
section of the International Committee of the Fourth International!
ஒரு
புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக
நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுக!
Statement of Marxist Voice
3 January 2011
பகுதி
1
உலக சோசலிச வலைத் தளம்
இங்கு மார்க்சிச குரல் அறிக்கையின் முதல் பகுதியை
வெளியிடுகிறது.
இந்த
அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகளுடன் அரசியல்
உடன்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்ற அத்துடன் நா.அ.அ.கு.வை
சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக கட்டியெழுப்புவதற்கு அதனுடன் இணைந்து
பணியாற்ற உறுதிபூண்டிருக்கின்ற ஒரு பாகிஸ்தானிய குழு ஆகும்.
மார்க்சிச குரல்
அறிக்கை பாகிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஒரு புரட்சிகர
முன்னோக்கிற்கு வடிவம் கொடுப்பதில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைப்
பிரதிநிதித்துவம் செய்கிறது.
தெற்கு
ஆசியாவில் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையான மூலோபாய அனுபவங்களின் மீதான ஒரு
திறனாய்வின் அடிப்படையில்,
பாகிஸ்தான் தொழிலாளர்கள் நிரந்தரப் புரட்சியின் மூலோபாயத்தை தங்களது போராட்டங்களின்
அடித்தளமாகக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இது விளங்கப்படுத்துகிறது.
மார்க்சிசக் குரல்
அறிக்கையை படிப்பதற்கும் மற்றும் விநியோகம் செய்வதற்கும்,
அத்துடன்
கருத்துகளையும் கேள்விகளையும் எங்களுக்கு அனுப்புவதன் மூலம் பாகிஸ்தானிய தொழிலாள
வர்க்கத்தின் ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சியை அபிவிருத்தி செய்வதற்கான
முன்னோக்குகள் மற்றும் வேலைத்திட்டத்திற்கு உருவம் கொடுப்பதில் பங்கேற்பதற்கும் உலக
சோசலிச வலைத் தளம் பாகிஸ்தானிய வாசகர்களிடம் விண்ணப்பம் செய்கிறது.
மார்க்சிசக் குரல்
அறிக்கையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகள் செவ்வாயன்றும் புதனன்றும்
வெளியிடப்பட இருக்கின்றன.
பாகிஸ்தான் ஒரு
கூர்மைப்பட்ட அரசியல்,
சமூக
மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
உலக அளவில்
துரிதமாய் கட்டவிழ்ந்து கொண்டிருக்கின்ற அத்துடன் பில்லியன்கணக்கான சாதாரண மக்களின்
வாழ்க்கைகளில் பேரழிவான தாக்கத்தைக் கொண்டிருக்கின்ற உலக முதலாளித்துவ
நெருக்கடியின் பகுதியாக அமைந்த ஒன்று தான் இந்த நெருக்கடி.
இரண்டு
உலகப் போர்கள்,
பாசிசம்
அத்துடன் ஏறக்குறைய முடிவில்லாத தொடர்ச்சியாக பிராந்திய இராணுவ மோதல்கள் மற்றும்
மிருகத்தனமான போலிஸ்-இராணுவ
சர்வாதிகாரங்கள் ஆகிய இருபதாம் நூற்றாண்டுப் பயங்கரங்களை உருவாக்கிய அதே தீராத
முரண்பாடுகளால் தான் உலக முதலாளித்துவ அமைப்புமுறை இப்போதும் சூழப்பட்டிருக்கிறது.
அடிப்படை
முரண்பாடுகள் உலகளாவிய உற்பத்திக்கும் தேசிய-அரசு
அமைப்புமுறைக்கும் இடையிலும் மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி
சாதனங்கள் தனியார் உடைமையாய் இருப்பதற்கும் இடையிலும் இருக்கின்றன.
இந்த
முரண்பாடுகளில் இருந்து எழுவது இன்னொரு பேரழிவான உலகப் போருக்கான அபாயம் மட்டுமல்ல,
மாறாக
முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான புற நிலைமைகளான
தொழிற்துறை மற்றும் நிதித்துறை சமூகமயமாதல்,
பொருளாதார
வாழ்க்கையின் உலகமயமாக்கம்,
அத்துடன்
உலகத் தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தி ஆகியவையும்
எழுகின்றது.
இந்த அறிக்கையின்
மூலம்,
(1917
ரஷ்யப் புரட்சியில் சக தலைவராய் இருந்தவரும் சோவியத் தொழிலாளர்களின் அதிகாரத்தை
தட்டிப் பறித்து இறுதியாக சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீட்சி செய்த
சலுகைபடைத்த அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தின்
கோட்காட்டாளராக இருந்தவருமான)
லியோன்
ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம்
அகிலத்தின் அனைத்துலக் குழுவின்
(ICFI)
பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுவதற்கான போராட்டத்திற்கு மார்க்சிச குரல் முன்முயற்சி
எடுக்கிறது
உலக முதலாளித்துவ
நெருக்கடியின் தாக்கத்தின் கீழ் தொழிலாள வர்க்கமானது போராட்டத்திற்குள் உந்தித்
தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது,
ஆனால்
அச்சமயத்தில் எங்குபார்த்தாலும் அதனது
பெயரால்
பேசுவதாய் ஒருசமயம் கூறிக் கொண்ட அமைப்புகளான
ஸ்ராலினிச கட்சிகளின் மிச்ச சொச்சங்கள்,
சமூக
ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை
முதலாளித்துவ இலாப அமைப்புமுறையை தாங்கிப் பிடிப்பதும் தொழிலாள வர்க்கத்தை தேசிய
கோடுகளில் பிரிக்க முனைவதுமான உண்மைக்கு நேரெதிரே உடனடியாய் வந்து நிற்கிறது
என்கின்ற உண்மையின் மூலமாக நா.அ.அ.கு.வைக்
கட்டுவதற்கான அவசர அவசியம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.
63
ஆண்டு கால
“சுதந்திர”
முதலாளித்துவ ஆட்சி:
சமூகப்
பேரழிவு
பற்றிய
மதிப்பீடு
63
ஆண்டு கால சுதந்திர
முதலாளித்துவ ஆட்சிக்குப் பின்னர்,
பாகிஸ்தான்
படுபயங்கர இடர்ப்பாடு மற்றும் வறுமை,
விகாரமான
சமூக ஏற்றத்தாழ்வு நிலை,
சிதைந்துபோனதொரு உள்கட்டமைப்பு,
தேசிய-இன
மற்றும் பிரிவினைவாத மோதல் மற்றும் அமெரிக்க ஆதரவிலான இராணுவத்தின் தொடரும் அரசியல்
மேலாதிக்கம் ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில்
45
மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.
மக்கள்
தொகையில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கினர் ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும்
குறைவான வருமானத்திலேயே வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஐந்து
வயதுக்குக் குறைந்த பாகிஸ்தான் குழந்தைகளில்
60 சதவீதம்
பேர் ஓரளவுக்கோ அல்லது கடுமையாகவோ வளர்ச்சி குன்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள்
அமைப்பு கூறுகிறது.
இதனிடையே,
பெரும்
வணிகர்கள்,
நிலச்
சுவாந்தர்கள்,
உயர் அதிகார
மட்டத்தினர்,
அதிகாரிகள்
மற்றும் அவர்களது வணிகக் கூட்டாளிகள் ஆகியோர் கொண்ட ஒரு சிறிய கறைபடிந்த ஆளும்
வர்க்கம் தான் அந்நிய மூலதனத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாட்டின் செல்வத்தைக்
கொள்ளையிடுகின்றன.
வறுமையினாலும்,
ஒரு
அடிப்படைக் கட்டமைப்பை வழங்குவதற்கும் கூட அரசு தோல்வியுற்றுள்ளதாலும்,
பத்து
மில்லியன் கணக்கான மக்கள் பள்ளிகளுக்கு,
ஆரோக்கியப்
பராமரிப்புக்கு,
சுகாதாரத்துக்கு அல்லது மின்சாரத்துக்கு அணுகலற்று உள்ளனர்.
மின்வெட்டு
என்பது சமூகப் பொருளாதார வாழ்க்கைக்கு ஒரு நீடித்த இடராக மாறியிருக்கிறது.
குறிப்பாக
கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை புறக்கணிக்கப்படுவதால்,
ஏழைகளும்
கூட தனியார் ஸ்தாபனங்களையும் இஸ்லாமிய அடிப்படைவாத தொண்டு அமைப்புகளையும் மற்றும்
மதரசாக்களையும் நோக்கித் திரும்பத் தள்ளப்பட்டுள்ளனர்.
கல்வி
மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கென பாகிஸ்தான் அரசு மொத்தமாய் செலவிடும் தொகை
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்
4
சதவீதத்திற்கும் குறைவானதாகும்.
நாட்டுப்புறங்களில்
அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை காரணமாகவும் கிராமப்புற மக்களுக்கு
வாழ்வாதாரத்திற்கான துணை வேலைகளைத் தேடுவதில் உள்ள சிரமத்தினாலும் கிராமப்
பகுதிகளில் இருந்து நகரப் பகுதிகளுக்கு இடம்பெயர்வதென்பது அதிகரித்துள்ளது.
கிராமப்புற
மக்களில் எழுபது சதவீதம் பேருக்கு நிலம் கிடையாது.
இவர்கள்
விளைச்சல்பங்கு அடிப்படையிலான குத்தகைதாரர்களாகவோ,
அல்லது
வாடகைதாரர்களாகவோ விவசாயக் கூலிகளாகவோ தான் பிழைத்து வருகின்றனர்.
நகரங்களில்,
சிறந்த பொது
மற்றும் சமூக சேவைகள் மற்றும் வேலைகள் இல்லாத ஒரு நிலையுடன் தான் மக்கள் திருப்திக்
கொள்ள வேண்டியதான ஒரு நிலையும் உள்ளது.
வெகுஜன
மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு முற்போக்கான தீர்வினை வழங்க இயலாததாய் இருக்கும்
பாகிஸ்தானிய முதலாளித்துவம்,
பெருகும்
சமூகக் கோபத்தை பிற்போக்கான பாதைகளில் திசைதிருப்பி விடுவதற்கும் தொழிலாள
வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் இந்திய-விரோத
போட்டியாதிக்கவாதத்தையும்,
இஸ்லாமிய
அடிப்படைவாதத்தையும் மற்றும் இன தேசியவாதத்தையும் பெருகிய முறையில் ஊதிவளர்த்து
வந்திருக்கின்றன.
குறுங்குழுவாத விரோதங்களுக்கும் மதவாத இருட்டடிப்புகளுக்கும் ஒரு அடைகாக்கும்
சாதனமாக பாகிஸ்தான் ஆகியிருக்கிறது.
இஸ்லாமிய தேசியத்
தாயகம் தான் தெற்காசியாவின் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பையும் அரவணைப்பையும்
வழங்கும் என்று கூறி பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு முன்மொழிந்தவர்களின் கூற்று ஒரு
கொடூரப் புரளி என்பது நிரூபணமாகி உள்ளது.
பாகிஸ்தான்
அதன் இருப்பின் அநேக காலத்தில் போரிலேயோ அல்லது அதன் விளிம்பிலேயோ தான் இருந்து
வந்திருக்கிறது,
அத்துடன்
அதன் மக்களில் பெரும்பான்மையானோர் அதீத வறுமையாக இல்லாவிட்டாலும் கடும் பொருளாதார
பாதுகாப்பின்மையான சூழலில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில்
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் தடவாள உதவி செய்வதன் ஒரு
நேரடி விளைவாக,
வடமேற்கு
பாகிஸ்தானின் பகுதிகளில்
(இப்பகுதி
விரிந்து கொண்டே செல்கிறது)
பாகிஸ்தானின் இராணுவம் உள்நாட்டுப் போரை நிகழ்த்தி வந்துள்ளது.
அதில்
மொத்தமாய் அழிக்கும் விரிப்புக் குண்டுவீச்சு,
கூட்டுத்
தண்டனை,
காணாமல்
போகச் செய்வது மற்றும் கூட்டாய் தண்டனையளிப்பது ஆகிய ஜனநாயக விரோத வழிமுறைகளின்
மொத்தக் கிடங்கையும் அது பயன்படுத்துகிறது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களைக் கொல்வதற்கு ஆளில்லா
ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்துவதற்கும் இதில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களும்
கொல்லப்படுவதற்கும் அமெரிக்கா விரும்பிய எண்ணிக்கையை இட்டு நிரப்பிக் கொள்ளத்தக்க
கையெழுத்திட்ட வெற்றுக் காசோலையைக் கையளிக்கப் பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில்
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆளும் வர்க்கம் செய்து வந்திருக்கும் மூன்று தசாப்த
காலத் தலையீட்டில்
(இது
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இருமக்களுக்குமே ஒரேவிதமாய் அழிவார்ந்ததாய்
நிரூபணமாகி இருக்கிறது)
இது
சமீபத்திய கட்டமே அன்றி வேறில்லை.
முந்தைய
கட்டங்களில் போலவே,
நடப்புப்
போரும் பாகிஸ்தான் அரசியல் மற்றும் நிர்வாகத்தின் மீது இராணுவம் மற்றும் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் கழுத்துப் பிடியை வலுப்படுத்தியிருப்பதோடு இஸ்லாமிய
அடிப்படைவாதத்தையும் வளர்த்து வருகிறது.
பாகிஸ்தானிய
ஜனநாயகம் என்பது இறந்து பிறந்த குழந்தையாகும்.
அதன்
இருப்பின் பாதி காலத்திற்கு அமெரிக்க ஆதரவிலான இராணுவம் தான் நாட்டை நேரடியாக ஆட்சி
செய்து வந்திருக்கிறது.
மக்கள்
ஆட்சி என்பதாய்க் கூறப்படுகின்ற காலகட்டங்களிலும் கூட இராணுவம் பரந்த அதிகாரத்தைச்
செலுத்துகிறது.
நெருக்கடி
மிகுந்த பாகிஸ்தானிய முதலாளித்துவம் தனது சொத்துகளைப் பாதுகாப்பதற்கும் பாகிஸ்தானிய
அரசின் பிராந்திய ஒருங்கிணைப்பை தாங்கிப் பிடிப்பதற்கும் இராணுவத்தையே
நம்பியிருக்கிறது.
இந்த நிலை
இந்தியாவுடனான அதன் பிற்போக்குத்தனமான புவி அரசியல் போட்டிக்கும் அமெரிக்க
ஏகாதிபத்தியத்துடனான அதன் கூலிப்படை வகையான கூட்டணிக்கும் அச்சாணியாக இராணுவத்தை
ஆக்கியிருக்கிறது.
நடப்பு நெருக்கடி
வெகுகாலமாக ஆழமான
வர்க்க குரோதங்களாலும் மற்றும் தேசிய-இன
மற்றும் வகுப்புவாத உரசல்களாலும் நொருங்கிப் போய்க் கிடந்த பாகிஸ்தான் ஒரு தசாப்த
காலமாய் ஆப்கானிஸ்தானை அடிமைப்படுத்துவதற்கான அமெரிக்காவின் குற்றவியல்
செலுத்தத்திலும் பங்கேற்று மேலும் ஸ்திரம்குலைந்த நிலைக்குச் சென்றிருக்கிறது.
2008
இலையுதிர்காலத்தில் விளைந்த உலக முதலாளித்துவ நெருக்கடியின் வெடிப்பின் மூலம்,
அந்நிய
முதலீட்டை ஈர்ப்பதின் மூலமும் நாட்டின் வறுமைப்பட்ட தொழிலாளர்களை உலகச் சந்தைக்கான
மலிவு உழைப்பு உற்பத்தியாளர்களாக வழங்குவதன் மூலமும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு
பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம் கொண்டிருந்த திட்டங்களின் அடித்தளம் அகன்று போய்
விட்டது.
இரண்டரை
ஆண்டுகளுக்கு முன்பு முஷாரப்பின் சர்வாதிகாரம் அவிழ்ந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான்
மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த போது மக்கள்
கொண்டிருந்த உற்சாகம் எல்லாம் துரிதமாய் வடிந்து விட்டிருக்கிறது.
பாகிஸ்தான் மக்கள்
கட்சி தலைமையிலான அரசாங்கம் பரந்த மக்களின் விருப்பங்களையும் அபிலாசைகளையும்
மறுத்து,
முந்தைய
இராணுவ ஆட்சியின் அதே கொள்கைகளையே தொடரவும் தீவிரப்படுத்தவும் செய்திருக்கிறது.
இது ஆப்கான்
போருக்கு அச்சாணியான உதவியை வழங்கியிருக்கிறது,
தனியார்மயமாக்கங்களையும் மற்ற சந்தை ஆதரவு
“சீர்திருத்தங்களையும்”
முன்செலுத்தியிருக்கிறது,
சர்வதேச
நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளைத் திணித்திருக்கிறது,
அத்துடன்
இராணுவ நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகப்படுத்தி வந்திருக்கிறது.
ஜெனரல்
பர்வேஸ் முஷாராபிடம் முன்னாளில் இரண்டாம்நிலைத் தளபதியாக இருந்த ஜெனரல் கியானியால்
இப்போது தலைமை நடத்தப்படும் இராணுவம் அமெரிக்கா அளிக்கும் ஊக்கம் மற்றும் உதவியுடன்
தனது அரசியல் மேலாதிக்கத்தைப் பெருகிய முறையில் நிலைநிறுத்தியிருக்கிறது.
சமீப
வாரங்களில் ஜனாதிபதி சர்தாரியும் பிரதமர் கிலானியும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு
அரசியலமைப்புக்கு விரோதப்பட்ட சதிகள் நடப்பதாக தொடர்ந்து எச்சரிக்கைகளை
விநியோகித்தனர்.
அதேசமயத்தில்,
இராணுவத்திடம் இருந்தான நெருக்குதலின் கீழ்,
கியானிக்கு
அவரது இராணுவத் தலைமைப் பதவியை ஓய்வுக்குப் பின் மூன்று வருடங்களுக்கு
நீட்டிப்பதற்கு முன்காணாத வகையில் அவர்கள் ஒப்புதலளித்ததும் மற்றவையும் நிகழ்ந்தன.
ஆனாலும்
எல்லாம் செய்தும் வீண்.
பாகிஸ்தான்
அரசாங்கத்தின்
“மறுசீரமைப்பு”
கோருவதில்
இராணுவத்தையும் சேர்ப்பதற்கு அமெரிக்கா மும்முரமாய் சிந்தித்து வருவதாக
நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை தெரிவிக்கின்றன.
இந்தக் கோடையில்
சிந்துப் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளங்கள் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கத்தின்
ஊழல்,
அலட்சியம்,
மற்றும்
கையாலாகாத்தனத்தை திடுக்கிடச் செய்யும் வகையில் புரியவைத்தன.
வெள்ளம்
ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னரும் பாதிக்கப்பட்ட
20
மில்லியனுக்கும்
அதிகமான மக்களில் பெரும்பான்மையினருக்கு அரசாங்க நிவாரண நடவடிக்கையில் இருந்து எந்த
உதவியும் கிட்டவில்லை.
வெள்ள சேதாரப்
பேரழிவு என்பது பெருமளவில் மனிதனால் ஆக்கப்பட்டதாகும்.
வெள்ளக்
கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பு பரிதாபகரமான வகையில் பற்றாக்குறையானதாய் இருந்தது
மட்டும் இதன் காரணம் அல்ல,
ஆளும்
உயரடுக்கு பொருளாதாரத்தை ஒரு இயைந்துபட்ட பகுத்தறிவான வழியில் அபிவிருத்தி செய்யத்
தோற்று இராணுவச் செலவினங்களுக்கு முன்னுரிமையளித்ததின் பின்விளைவாகவும் இது
இருந்தது.
அமெரிக்க
மற்றும் பாகிஸ்தானிய இராணுவங்கள் மற்றும் அவர்களின் ஆப்கன்-பாகிஸ்தான்
போர் மற்றும் பல்வேறு பெரும் நிலச் சொந்தக்காரர்கள் மற்றும் அவர்களது அரசியல்
கூட்டாளிகள் ஆகியோரின் நலன்களுக்காக அணை வலைப்பின்னல்கள் இஷ்டம் போல் கைப்புரட்டு
செய்யப்பட்டதன் விளைவாக மில்லியன்கணக்கான மக்கள் இடம்பெயர்த்தப்பட்டனர்.
ஏற்கனவே
ஆழமடைந்திருந்த பொருளாதார நெருக்கடியை வெள்ளம் மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.
இதன் சுமையை
பாகிஸ்தானிய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்தி விடும்
தீர்மானத்துடன் முதலாளித்துவ வர்க்கம் இருக்கிறது.
உணவு
மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பால் சமீப வருடங்களில் வாழ்க்கைத் தரங்கள்
சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன.
ஆனால்,
அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறைச் சுமையைக் கட்டுப்படுத்துவதற்கு மின்சாரம்,
பெட்ரோல்
மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மானியங்களை அகற்றுவதற்கும்
மீண்டும் சமூகச் செலவினங்களை வெட்டுவதற்கும் அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும்
வலியுறுத்தி வருகின்றன.
ஜனவரி மாதத்தில்
ஹைத்தியில் நடந்த பேரழிவான பூகம்ப விஷயத்தில் நடந்தது போல,
சர்வதேச
மூலதனமானது,
சர்வதேச
நாணய நிதியம்,
உலக வங்கி
மற்றும் பாகிஸ்தானிய உயரடுக்கின் பிரகடனங்கள் சான்றளித்தவாறு,
வெள்ளங்களை
முதலாளித்துவ மறுசீரமைப்பை துரிதப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்த
நோக்கம் கொண்டுள்ளன.
வெள்ளத்தால்
சேதாரப்பட்டுள்ள உள்கட்டமைப்பு அரசு-தனியார்
கூட்டுமுயற்சிகளின் மூலம் மறுகட்டுமானம் செய்யப்படும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி
தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இது
பெருவணிகங்களுக்கு
அரசு நிதிகளைக் கைப்புரட்டு செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளைக் காவு கொடுத்து
அவற்றின் உத்தரவாதமான இலாபங்களை பாதுகாத்துக் கொள்வதற்குமான ஒரு வழியை வழங்குவதற்கு
உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு உத்தி ஆகும்.
சென்ற வருடத்தில்
பாகிஸ்தான் எங்கிலும் வெகுஜனப் போராட்டங்களும்,
ஆங்காங்கே
உணவுக்கான கலவரங்களும் வேலைநிறுத்தங்களும் நடந்தன.
இப்போது
வெள்ள நிவாரணப் பற்றாக்குறை,
மின் வெட்டு,
விலை
ஏற்றங்கள்,
மற்றும் பல
சமூகப்பொருளாதார மற்றும் அரசியல் துன்பங்களுக்காக தினந்தோறும் ஆர்ப்பாட்டங்கள்
நிகழ்ந்து வருகின்றன.
பைசலாபாத்தில் மின் வெட்டிற்கு எதிராக நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும்
PTCL (தொலைத்தொடர்பு)
தொழிலாளர்களின் தொடர்ந்த போர்க்குணமிக்க போராட்டங்கள் ஆகியவற்றால் வெளிப்பட்டவாறு,
பாகிஸ்தானிய
தொழிலாளர்கள் போராட்டத்திற்குள் நுழைந்ததென்பது அரசியல் சூழ்நிலையைத் தீர்மானகரமாக
உருமாற்ற நம்பிக்கையளிக்கிறது.
ஆளும்
வர்க்கம் தனது பங்கிற்கு அதிகரித்தளவில்
அச்சமுற்றுவருகின்றது.
ஒரு சமூக
வெடிப்பு நிகழக் கூடும் என்று முன்னணி செய்தித் தாள்களும் அரசியல்வாதிகளும்
தொடர்ந்து எச்சரிக்கைகளை விநியோகித்து வருகின்றனர்.
கீழிருந்தான
இந்த அபாயத்திற்கு அஞ்சி பாகிஸ்தான் முதலாளித்துவ வர்க்கம் இராணுவம் மற்றும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இன்னும் இறுக்கமாய்ப் பற்றிக் கொள்வதோடு இன மற்றும்
வகுப்புவாத பிளவுகளுக்கும் தூபம் போடுகிறது.
அடிப்படை மனித
சுதந்திரங்களை உறுதியளிப்பது மற்றும் பெண்களுக்கான சமத்துவம் ஆகியவை தொடங்கி,
கல்வி,
சுகாதாரம்,
மற்றும்
வேலையளிப்பது மற்றும் குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை
நீக்குவது ஆகியவை வரை பாகிஸ்தானிய மக்களின் அடிப்படையான ஜனநாயக மற்றும் சமூக
அபிலாசைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்றால்,
நிலப்
பிரபுத்துவத்தைக் கலைப்பது,
அமெரிக்க
ஆதரவிலான இராணுவப் பாதுகாப்பு அரசைப் பிரித்தெறிவது,
மற்றும்
வங்கிகள் மற்றும் அடிப்படை தொழிற்துறைகளை தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின்
ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பது ஆகியவை அவசியமாய் இருக்கின்றன.
முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின்
போராட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த உழைப்பாளிகளின் தலைவிதியை
நனவுடன் பிணைக்கிற ஒரு தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை
அதிகாரத்துக்குக் கொண்டுவருவதன் மூலமாக மட்டுமே இந்த நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட
முடியும்.
இந்த
போராட்டத்திற்கு தலைமையெடுக்க ஒரு புதிய புரட்சிகர தொழிலாள வர்க்கக் கட்சி
கட்டப்பட்டாக வேண்டும்.
இத்தகையதொரு
கட்சி தனது வேலைத்திட்டத்தையும் முன்னோக்குகளையும் பாகிஸ்தான் தொழிலாளர்கள் மற்றும்
அனைத்து தெற்காசியாவின் தொழிலாளர்கள் உட்பட்ட உலகத் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய
அனுபவங்களின் படிப்பினைகளை அடித்தளமாய்க் கொண்டு அமைக்க வேண்டும்.
பிரிவினையும்
ஜனநாயகப் புரட்சி மீதான அடக்குமுறையும்
1947ல்
இந்தியாவும் பாகிஸ்தானும் நிறுவப்பட்டதானது சுதந்திரத்தை ஏற்படுத்தவில்லை,
மாறாக இந்தியா மற்றும்
பாகிஸ்தானின் மதரீதியாக ஒழுங்கமைந்த முதலாளித்துவ வர்க்கங்கள் பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்து ஜனநாயக,
ஏகாதிபத்திய-எதிர்ப்பு
புரட்சியை ஒடுக்கியது தான் ஏற்பட்டது.
பிரிவினையின் உடனடி
விளைவாய் ஏற்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் சுமார்
2 மில்லியன் உயிரிழப்புகள்
நேர்ந்ததோடு 12-14
மில்லியன் மக்கள் அகதிகளாயினர்.
துணைக்கண்டத்தின் உயிர்வாழும்
உடல் பல துண்டங்களாக,
அதாவது பெங்காளிகள்,
பஞ்சாபிகள்,
காஷ்மீரிகள் மற்றும் பிற
இனங்களைப் பிரித்து,
துண்டு போடப்பட்டது.
அத்துடன் பொருளாதார,
வரலாற்று மற்றும் கலாச்சார
தர்க்கத்தை மறுத்த தொடர்ந்து மறுத்து வருகிற அரசு எல்லைகள் திணிக்கப்பட்டன.
”மதவாதப்
பிரச்சினை”யைத்
தீர்ப்பதில் இருந்து வெகு விலகி பிரிவினையானது தெற்காசியாவின் அரசுக் கட்டமைப்பில்
மதப் பிரிவினைகளை புனிதப்படுத்தியதன் மூலம் அதனை சிக்கலாக்கியிருக்கிறது.
பிரிவினையானது இந்தியாவிற்கும்
பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு பிற்போக்கான புவியரசியல் போராட்டம் எழுவதற்கு
வழிவகுத்திருக்கிறது.
இது மூன்று அறிவிக்கப்பட்ட போர்கள்
மற்றும் எண்ணற்ற போர் நெருக்கடிகளில் விளைந்துள்ளதோடு முக்கியமான பொருளாதார வளங்களை
விரயம் செய்துள்ளது.
அத்துடன் இன்று உலக நாகரிகத்திற்கே
பேரழிவான பின்விளைவுகளைக் கொண்ட ஒரு அணுஆயுதப் பதட்ட நிலையின் மூலம் தெற்காசிய
மக்களை அச்சுறுத்துகிறது.
பிரிவினையானது,
பகுத்தறிவுபட்ட பொருளாதார
அபிவிருத்திக்கு (நீர்
ஆதாரங்களைப் பயன்படுத்துவது உட்பட)
இடைஞ்சல் செய்ததன் மூலமும்,
ஒரு அரசையும் ஆளும்
உயரடுக்கையும் இன்னொன்றிற்கு எதிராக நிறுத்தி விளையாடுவதற்கு அமெரிக்கா மற்றும்
மற்ற பெரும் சக்திகளுக்கு ஒரு அரசியல் வகைமுறையை வழங்கியிருப்பதன் மூலமும்
தெற்காசியாவில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு வழிவகுத்திருக்கிறது.
இன்று தெற்காசியா தான் உலகில்
மிகக் குறைந்த அளவில் பொருளாதாரரீதியாக ஒருங்கிணைந்த பிராந்தியமாக உள்ளது.
பிரிட்டிஷ் காலனித்துவ
ஒழுங்கின் கீழ் தெற்காசியாவின்
“முஸ்லீம் பிரதிநிதிகளாக”
சேவை செய்ததின் மூலமும் பல்வேறு
இஸ்லாமியக் குழுக்களையும் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்திற்கான களப்பலிப் படையாகப்
(cannon fodder) (போர்வீர
மரபினர்)
பயன்படுத்த ஊக்குவித்ததன் மூலமும்
சிறப்புரிமைகளைப் பெற்றுத் திகழ்ந்திருந்த முஸ்லீம் ஜமீன்தார்கள் மற்றும்
முதலாளிகளின் பிரிவுகளின் விலைபோகத்தக்க வர்க்க நலன்களையே மதவாத பாகிஸ்தான் தேசியத்
திட்டம் பிரதிநிதித்துவப்படுத்தியது.
ஒரு உயரடுக்கிற்கான
அமைப்பாக இருந்த முஸ்லீம் லீக் கட்சி தொழிலாளர்கள்,
விவசாயிகள் மற்றும் கலைஞர்கள்
மீது அலட்சியம் காட்டும் அவப்பெயர் பெற்றதாய் இருந்தது.
அதில் இப்போது போலவே அப்போதும்
தெற்காசிய முஸ்லீம்களின் பரந்த பிரிவினர் பங்குபெற்றிருந்தனர்.
அது பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்தின் ஆதரவை பகிரங்கமாய் எதிர்நோக்கியது,
பெற்றது.
எப்படியிருப்பினும்,
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்
பிரித்து ஆளும் மூலோபாயத்திற்கான மற்றும் பிரிவினைக்கான வெற்றி என்பதற்கு இறுதிப்
பொறுப்பு முதலாகவும் முதன்மையாகவும்,
வளர்ந்து வந்த இந்திய
முதலாளித்துவத்தின் பிரதானக் கட்சியான இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்ததே.
அது இந்து-முஸ்லீம்
ஒற்றுமையை ஏற்றுக் கொண்டிருந்த அதேசமயத்தில்,
தான் கொண்டிருந்த வர்க்க
நிலைப்பாட்டின் காரணமாக,
தெற்காசிய மக்களை காலனித்துவ-ஜமீன்தார்-முதலாளித்துவ
ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது பொதுவான வர்க்க நலன்களுக்கு
அழைப்புவிட்டதன்
அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்திற்கு முழுவிரோதப்பட்டதாய் இருந்தது.
இரண்டாம் உலகப்
போருக்குப் பிந்தைய இந்தியாவில் தொழிலாளர்-விவசாயிகள்
போராட்டங்களின் அலையின் எழுச்சியையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின்
போர்க்குணம் பெற்ற தன்மையும் பெருகியதை கண்டு அஞ்சிய காங்கிரஸ்,
முதலாளித்துவ ஆட்சியை
ஸ்திரப்படுத்தும் பொருட்டு,
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால்
கட்டப்பட்ட அரசு எந்திரத்தில் தனது கரத்தைக் கொணர அவசரமுற்றது.
இதனால் ஒன்றுபட்ட வாக்கின்
அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு ஆட்சி அவைக்கான கோரிக்கை மற்றும் டொமினியன்
அந்தஸ்துக்கான அதன் எதிர்ப்பு ஆகிய தன் வேலைத்திட்டத்தின் முக்கியமான அம்சங்களை அது
துரிதமாகக் கைவிட்டு,
துணைக்கண்டத்தைப் பிரிப்பதில் முஸ்லீம்
லீக் மற்றும் பிரிட்டிஷாருடன் இணைவதற்குத் தெரிவு செய்தது.
இன்னும் சொன்னால்,
தெற்காசியாவை வகுப்புவாத
அடிப்படையில் பிரிப்பதற்கு வங்காளத்தையும் பஞ்சாபையும் வகுப்புவாத அடிப்படையில்
பிரிப்பதும் அவசியமாக இருக்கிறது என்று வலியுறுத்தி,
காங்கிரஸ் தான் பிரிவினையின்
மிக ஆவேசமான மற்றும் தொடர்ச்சி பேணிய நாயகனாகியது.
ஸ்ராலினிச இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி இந்த காட்டிக் கொடுப்பிற்கு பெரும் வழிவகை செய்து கொடுத்தது.
சோவியத் தொழிலாள வர்க்கத்திடம்
இருந்து அதிகாரத்தை தட்டிப் பறித்திருந்த அதிகாரத்துவக் குடியின்
(Bureaucratic caste)
செல்வாக்கின் கீழ்,
இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியானது,
சுதந்திரத்திற்கும் பிரிவினைக்கும்
முந்தைய இரண்டு தசாப்தங்களில்,
ஏகாதிபத்திய-எதிர்ப்பு
இயக்கத்தின் மீது காங்கிரஸ் கொண்டிருந்த பிடியை பெருமளவில் வலுப்படுத்துகிற ஒரு
சந்தர்ப்பவாதப் பாதையைப் பின்பற்றியது.
இரண்டு-கட்டப்
புரட்சி என்கின்ற மென்ஷிவிக்-ஸ்ராலினிச
தத்துவத்தின் அடிப்படையில்,
பிரிட்டிஷ் காலனியத்துவத்திற்கு
எதிரான போராட்டத்தில் காங்கிரசின் தலைமைக்கு எந்த சவாலையும் வைப்பதை
ஸ்ராலினிஸ்டுகள் எதிர்த்தனர்,
அத்துடன் பிரிட்டிஷ் ஆட்சியின்
இறுதி ஆண்டுகளில் முஸ்லீம் லீக் விடயத்திலும் இதேபோன்றதொரு பாதையையே அது
பின்பற்றியது.
வகுப்புவாத பாகிஸ்தான் கோரிக்கைக்கு
அங்கீகாரம் வழங்கியதும் முஸ்லீம் லீகைக் கட்டுவதற்கு இந்தியக் கம்யூனிஸ்டுக்
கட்சியின் காரியாளர்களை அதற்கு அனுப்பியதும் இதில் அடங்கியிருந்தன.
1945 மற்றும்
1947க்கு இடையில்,
காங்கிரசும் முஸ்லீம் லீக்கும்
வரிந்து கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் எதிராய் நின்ற சமயத்தில்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,
இரண்டு போட்டி முதலாளித்துவக்
கட்சிகளும் ஒன்றிணைந்து தேசியப் புரட்சியில் தலைமை கொடுப்பதில் தங்களது
“பொறுப்பை”
நிறைவேற்ற வேண்டும் என்று
கேட்டுக் கொண்டது.
முதலாளித்துவ இந்தியா
மற்றும் பாகிஸ்தானாக அவதாரமெடுத்த
“விடுதலை”
மற்றும்
“சுதந்திர”த்தை
பிரிவினை தான் வரையறை செய்தது,
தொடர்ந்தும் வரையறை செய்து
கொண்டிருக்கிறது.
ஒரு வழிவிலக்கம் என்பதற்கும் வெகு
அப்பாற்பட்டு,
இது ஏகாதிபத்திய-எதிர்ப்புப்
புரட்சியின் கருச்சிதைவால் விளைந்த இரத்தசகதியுற்ற உடனடியான வெளிப்படையான
பின்விளைவாகும்.
புதிய அரசானது
ஜமீன்தார்கள்,
இளவரசர்கள் மற்றும்
பெருவணிகர்களின் செல்வங்களையும் பிற பாதுகாக்கப்பட்ட சொத்து மற்றும்
சிறப்புரிமைகளையும் பாதுகாத்தது.
இது பிரிட்டிஷ் காலனித்துவ
அரசின் முக்கிய ஸ்தாபனங்களையும் சட்டங்களையும் தக்கவைத்துக் கொண்டதோடு,
அதிகபட்சமாக முதலாளித்துவ
அபிவிருத்திக்கு வழிவகை செய்யும் நோக்கத்துடனான ஒரு சில சில்லறை சீர்திருத்தங்களைத்
தழுவிக் கொண்டது.
ஆறு தசாப்தங்கள் ஆகி
விட்டன.
வெகுஜனங்களின் அதிமுக்கிய
ஜனநாயக மற்றும் சமூகப் பிரச்சினைகளில் எதுவும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.
அதற்கு நேர்மாறாய்,
நிலப்பிரபுத்துவம்,
சாதீய ஒடுக்குமுறை மற்றும் பிற
நிலப் பிரபுத்துவ சுவடுகள் எல்லாம் பெருகிய முறையில் முதலாளித்துவச் சுரண்டலுடன்
பின்னிப் பிணைந்ததாய் ஆகியிருப்பதால் மேற்கூறிய பிரச்சினைகள் முன்னெப்போதையும் விட
மிகப் பயங்கரமானதாய் வளர்ந்து விட்டிருக்கின்றன.
உலகின் ஏழைகளில் பாதிப்
பேர் இத்துணைக்கண்டத்தில் வாழ்கின்றனர்.
உலகின் வேறு எந்தப்
பிராந்தியத்திலும் மக்களில் இவ்வளவு விகிதாச்சாரத்தினர் பட்டினியில்
சிக்கியிருக்கவில்லை.
இந்திய அரசும் சரி பாகிஸ்தான் அரசும்
சரி தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
5 சதவீதத்திற்கு அதிகமாக கல்வி
மற்றும் ஆரோக்கிய பராமரிப்பிற்காகச் செலவிடுவதில்லை.
பிரிவினை மற்றும்
இந்தியா-பாகிஸ்தான்
போட்டி ஆகியவை குறித்த பிற்போக்குத்தனமான தர்க்கத்திற்கு இயைந்த வகையில்,
உலகின் வேறெந்த
பிராந்தியத்தையும் விட இத்துணைக்கண்டப் பகுதி மிகக் குறைந்த பொருளாதார
ஒருங்கிணைப்பு கொண்டதாய் உள்ளது.
தெற்காசியாவில்
பிரிவினை மற்றும் ஆறு தசாப்த கால
“சுதந்திர”
முதலாளித்துவ தேசிய ஆட்சியின்
அனுபவங்களில் இருந்து தொலைதூர நோக்கம் கொண்ட முடிவுகளை தொழிலாள வர்க்கம்
உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்திய ஒடுக்குமுறையும்
காலனித்துவ ஆட்சியின் மற்றும் தெற்கு ஆசியாவினது தாமதப்பட்ட முதலாளித்துவ
அபிவிருத்தியின் பாரம்பரியமும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு சோசலிசப்
புரட்சியின் மூலமாகவே வெல்லப்பட முடியும்.
அப்புரட்சி,
ஒரு அவசியமாகவே,
தெற்காசியாவின்
பிற்போக்குத்தனமான அரசுக் கட்டமைப்பை சவால் செய்ய வேண்டியிருக்கும்.
தொடரும்.... |